உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

அத்தியாயம் 22

“நல்லாத் தெரியுமா?” என சிகரெட்டை உதட்டில் வைத்து பற்ற வைத்தவாறு, ராகவ் கோபத்துடன் கேட்க, “சார்.. அவுங்க தான் சார் பண்ண சொல்லிருக்காங்க. அவனோட சூழ்நிலைய பயன்படுத்தி ஃபோர்ஸ் பண்ணி செய்ய வச்சுருக்காங்க சார். எவிடன்ஸ் ரெக்கார்டு இதோ…” என பணிவாக ஒருவன் வந்து ராகவ்வின் முன் சிப் டிவைஸ் ஒன்றை வைத்து விட்டு பின்வாங்கினான்.

சிகரெட்டை ஆழ உள்ளிழுத்து மூக்கின் துவாரம் வழியாக வெளியிட்டவனின் இதழ்கள் வன்மத்துடன் சிரித்தன. “அவ்ளோ தூரத்துக்கு போயிட்டியா நீ?! அப்போ மொத்தமா ஆட்டைய முடிச்சுற வேண்டியது தான்.” என சிகரெட்டின்‌ எரிந்து முடிந்த துகள்களை லேசாக இருவிரல்களால் தட்டிவிட்டு தூக்கியெறிந்தான்.

வேகமாக கோர்ட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பும் போது நள்ளிரவு தாண்டியிருந்தது. வீட்டிற்கு செல்லும் வழியில் அவன்யாவிற்கு மொபைலில் அழைத்தவனுக்கு அவள் அழைப்பை ஏற்காமல் இருப்பது எரிச்சலைத் தந்தது.

‘இவ வேற என் நிலைமை தெரியாம சீண்டிக்கிட்டிருக்கா..’ என யோசித்து விட்டு, என்னத் தோன்றியதோ உடனே தன் பாட்டிக்கு அழைப்பு விடுத்தான். ‘போன இடத்தில் என்ன பிரச்சனையோ?’ என பயந்தவர் ராகவ்வின் அழைப்புக்காக வெகுநேரம் காத்திருந்த ராஜேஸ்வரி பாட்டியினால் ஒரு நிலைக்கு மேல் கண்விழித்திருக்க முடியவில்லை.

ஆகையால் அவனுக்காக காத்திருந்தபடி ஹாலில் அமர்ந்திருந்தவரை ஏளனப்பார்வை பார்த்து விட்டு மெர்லின் வெற்றிப் புன்னகையுடன் ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸைக் காற்றில் பறக்க விட்டபடி நிம்மதியாக வீட்டிற்கு சென்று விட்டாள்.

பகலவனும் சாவித்திரியும், “ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணாதீங்க அம்மா. ராகவ்வோட மைன்ட் செட்டுக்கு அவ எல்லாம் நியாபகத்துலயே இருக்க மாட்டா. போங்க.. போய் ஒழுங்கா தூங்குங்க..” என அறிவுரை வழங்கியதை ஏற்காமல் முகத்தைத் திருப்பியபடி ராஜேஸ்வரி பாட்டி அமர்ந்திருக்க,

“சொல்றத சொல்லிட்டோம். அப்புறம் உங்க இஷ்டம். நீ போய் படும்மா. சிலருக்கெல்லாம் சொன்னாப் புரியாது. அவஸ்தைபட்டா தான் புரியும்..” என நக்கலாகக் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார் பகலவராஜன்.

கவலை தோய்ந்த தன் தாயின் முகத்தைக் கண்ட சாவித்திரிக்கு சற்று வாட்டமாக இருந்தாலும், தற்போது என்ன சொன்னாலும் ராஜேஸ்வரி கேட்கும் நிலையில் இல்லை என அறிந்து மெல்ல எழுந்து சென்று விட்டார்.

“படுபாவிங்க.. வீட்டுக்கு வாழ வந்தப் பொண்ண வந்த அன்னிக்கே துரத்திட்டாங்களே.. இவங்களப் பெத்த வயித்துல பிரண்டையத் தான் கட்டணும்.. ச்சே..” என வெளிப்படையாக புலம்பியவர் நேரம் செல்ல செல்ல, அப்படியே சோஃபாவில் சாய்ந்து கொண்டு உறங்கி விட்டார்.

தனது அழைப்பை எடுக்காமல் பாட்டி இருப்பதை உணர்ந்தவனுக்கு புரிந்தது அவர் உறங்கியிருப்பாரென. நேராக வீட்டிற்கு சென்று அவன்யாவை சமாதானப்படுத்தி விடலாமென இயல்பான கணவனைப் போன்ற உற்சாகத்துடன் வீடு நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தான்.

கடும்களைப்புடன் இரவில் வீடு திரும்பிய ராகவ்விற்கு அவன்யாவின் குறும்பு மின்னும் முகத்தைக் கண்டால் தன் சோர்வனைத்தும் நீங்கி விடும் என ஆசையாக இருந்தது. வேகமாகக் காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்தபோது அப்போதும் விளக்குகள் எதுவும் அணைக்கப்படாமல் இருப்பதைக் கண்டவனுக்கு ஏதோ ஒன்று தவறாக பட்டது.

அங்கே ஹாலில் சோஃபாவில் அமர்ந்தவாக்கில் ராஜேஸ்வரி பாட்டி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் நிச்சயமாக பிரச்சனை உள்ளது என புரிந்தது. அவரினருகில் அமர்ந்து அன்றைய தினம் வீட்டில் நடந்த நிகழ்வுகளை கேமிராக்களின் உதவியுடன் பார்க்கலானான்.

ராகவ் நினைத்ததோ, அவன்யா தான் வழக்கம் போல ஏதோ ஒரு பிரச்சனையை உருவாக்கி அனைவரையும் கஷ்டப்படுத்தியிருக்கிறாள் என்று. ஆனால் அதற்கு அப்படியே நேர்மாறாக நடந்திருப்பதைக் கண்டவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

‘அவன்யா… அவன்யா நீயா சமைச்ச.. ஓகாட்..’ என கிச்சனில் அவள் சமைப்பதைக் கண்டவனுக்கு முதலில் சிரிப்பு வந்தாலும் அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ராகவ்விற்கு ரௌத்திரத்தை வரவழைக்க போதுமானதாக இருந்தது.

சாவித்திரி மற்றும் மெர்லினின் நடவடிக்கைகளைக் கண்டவன், மெர்லின் தனியாக சென்று யாருடனோ பேசுவதைக் கூர்மையாக கவனித்தான். அதன்பிறகே தனக்கு அழைப்பு வந்ததை நினைவுகூர்ந்தவன்,

“அவ்ளோ ஈஸியா உன்னை விட்டுட மாட்டேன் ஹனி…” என வெறுப்புடன் வார்த்தைகளை உதிர்த்தவன், அதன்பிறகு அவன்யாவை அவமானப்படுத்தி வீட்டை விட்டு விரட்டியக் காட்சி அவனது கண்ணில் முதன்முறையாக கண்ணீரை வரவழைத்தது.

“மைகாட். முன்னாடில்லாம் சந்தோஷமா எஸ்கேப் ஆவா. ஈஸியா மாட்டிக்குவா. இப்போ அழுதுக்கிட்டேல்ல போயிருக்கா. இப்ப எப்டி அவளத் தேடி கண்டுபிடிப்பேன்..?!” என அதுவரையிருந்த ஆத்திரமனைத்தும் வடிந்து வேதனை மனதினை கார்மேகமாக சூழ்ந்து கொண்டது.

அதன் விளைவாக அவனது கண்களில் கண்ணீர் சொட்டு சொட்டாக வடிய ஆரம்பித்தது. “ஹௌவ் டேர் யூ டு டூ திஸ்.. உன்னை…” என அப்போதும் அவளைத் திட்டிவிட்டு,

 உடனே ‘லூசு.. லூசு.. என்கிட்ட மட்டும் தான் இந்த ஜம்பமெல்லாம். மத்தபடி சரியான பயந்தாங்கோளி.. ம்ப்ச்.. அவளும் பாவம் தானே..?! எவ்ளோ நேரம் தான் திட்டு வாங்குவா?’ என அவனது மனம் அவளைத் திட்டினாலும் பரிந்து கொண்டு வந்ததை வினோதமாக உணர்ந்தான் ராகவ்.

“ஹூம்.. பாவம் பாட்டி.. எனக்காக ரொம்ப சிரமப்பட்டுருக்காங்க..” என எண்ணியவாறு அவர் மேனி நோகாமல் மெதுவாக தன் கைகளால் அள்ளியபடி அவரது அறைக்கு அழைத்து சென்றான்.

அவனது கைகளில் குழந்தை போல துயின்றவரின் இதழ்கள் மட்டும் மென்மையாக விரிந்தன. உறக்கத்தில் ஏதோ கனவு கண்டு புன்னகைக்கிறாரென நினைத்தவன் அதைப் பெரிதாக எண்ணவில்லை.

படுக்கையில் பாட்டியை வாகாகப் படுக்க வைத்து விட்டு, போர்வையை எடுத்து போர்த்தியவனின் கைவிரல்களை மெல்ல அழுத்தியபடி பிடித்து நிறுத்திய ராஜேஸ்வரி பாட்டி, 

“உன்னை முதன்முதலா எந்த இடத்துல இருந்து சந்திச்சாலோ அங்க உனக்காக காத்துட்டிருப்பேன்னு அவன்யா சொன்னாப்பா.. இத சொன்னா உனக்கு புரியும்ன்னு சொல்லிட்டு போயிட்டா. பாத்துக்கடா கண்ணா..” எனக் கண்களைத் திறவாமல் கூறிவிட்டு வாகாகப் போர்வையை மார்பு வரை இழுத்து போர்த்தி திரும்பிப் படுத்துக் கொண்டார்.

அவரது கூற்றைக் கேட்டவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அதன்பிறகே அவர்கள் இருவரும் முதன்முதலில் பார்த்த இடமென்றால், “கெஸ்ட் அவுஸ்ஸா…?!” என முணங்கியபடி வேகமாக அறையை விட்டு வெளியேற முனைந்தபோது,

“ராகவா… அவ எங்க இருந்தாலும் கைக்கால கட்டியாவது இங்க கூட்டிட்டு வா..” என்ற தன் பாட்டியின் குரலில் தெரிந்த அன்பு கலந்த கட்டளையைத் திரும்பி பாராமல் நின்று கேட்டவனின் இதழ்கள் குறும்புடன் விரிந்தன.

அவளைத் தோளில் தூக்கிப் போட்ட நினைவுகள் நொடிநேரத்தில் மனத்திரையில் வந்து போக, தன்னையறியாமல் புன்னகைத்தபடி, “கண்டிப்பா..‌ குட்நைட் பாட்டி..” எனக் கூறிவிட்டு வேகமாக வெளியேறினான்.

விரைந்து சென்று காரில் ஏற முற்பட்ட போது, அவனது அலுவலகக் காரிற்கு அருகில் இருந்தக் காரின் பின்பக்கம் மட்டும் ஆடிக் கொண்டேயிருந்தது. அதைக் கண்டவனின் கண்கள் உடனே பளிச்சிட்டது.

‘ஒருவேளை….’ என நினைத்தபடி எதிர்பார்ப்பு நிறைந்த விழிகளுடன் அரும்பிய புன்னகையை வெளிப்படுத்தியவாறு, வேகமாக சென்று காரின் பின்பக்கக் கதவைத் திறந்து பார்த்தான் ராகவ். அவனது எண்ணத்தின் நாயகியோ தன் கண்களை ஒருக் கைக்குட்டாயால் கட்டிவிட்டு, 

“ச்சே.. இந்த எரும எப்ப தான் வருவானோ?! புரண்டு புரண்டு படுத்து கைகாலெல்லாம் வலிக்குது..” என முணங்கியவள் திடீரென வலது முழங்கையை பட்டென அடித்தாள்.

“ஆ… இந்தக் கொசுத்தொல்ல வேற.. என்ன… திடீர்ன்னு காத்து நல்லா வருதே…” என யோசித்தபடி வெளிப்படையாக புலம்பியவளுக்கு சட்டென நிதர்சன சூழல் புரிய தன் கண்கட்டுகளை அவிழ்க்க முனைந்த போது, அவளை அப்படியே அள்ளியெடுத்து இறுக்க நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ராகவ்.

“ஆ… அய்யய்யோ… யார்றா நீ.. விடுறா.. யூ இடியட் ஆஃப் த ஸ்டுப்பிட் ஆஃப் த நான்சென்ஸ்.. எவன்டா அவன்?! கீழ இறக்கி விடுறா பாவி.. என்ன தைரியம் உனக்கு..?! அய்யய்யோ யாராவது காப்பாத்துங்களேன். கைய விடுறா பொரம்போக்கு..” என தன்னைத் தொடுவது ராகவ்வென அறிந்தும் இது தான் சமயமென யாரையோ திட்டுவது போல கண்டபடி கத்தி திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் அவன்யா.

‘எங்கே தன் உயிருக்குயிரானவளை இழந்துவிட்டோமோ?’ என்றப் பயத்தில் இருந்தவனுக்கு, அவளது வழக்கமான பிதற்றல் பேச்சுகள் அனைத்தும் தேன் போல இனித்தது. அவளை இன்னும் சீண்டிப் பார்க்கும் எண்ணம் கொண்டவனுக்கு உடனே ஒரு யோசனைத் தோன்ற,

குரலைக் கட்டையாக மாற்றி, “டேய்… காரை சீக்கிரம் இங்க கொண்டு வாங்கடா.. அதுக்குள்ள பாப்பா எகிறி குதிச்சு ஓடிடப் போகுது..” என ராகவ் கத்திப் பேச, அவன்யாவிற்கு சர்வமும் ஆடிப் போனது.

“அய்யய்யோ.. வேற எவனோ நம்மளத் தூக்குனதுமில்லாம கட்டி வேறப் புடிச்சிட்டான். ஏய்ய்ய்ய்….” என விளாங்கு மீன் போலத் துள்ளியபடி ராகவ்விடமிருந்து எகிறி குதித்தாள் அவன்யா.

அவளது அடுத்த செயல் என்னவென்று யூகித்தவனோ புன்னகையுடன் வேகமாக சென்று தன் டையை அவிழ்த்து அவளது கையை பின்பக்கமாக இழுத்துக் கட்டினான்.

அவனது வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியவள், “அய்யய்யோ… யாராவது காப்பாத்துங்களேன்..” எனக் கத்தத் தொடங்கியபோது சட்டென வார்த்தைகளும் உள்வாங்கியது. அவளது நெஞ்சம் விரிந்து வயிற்றுப்பகுதியோடு சேர்ந்து உந்துசுழியும் உள்பக்கமாக அடங்கி “ஹ்ஹ்ஹஆ….” என்றப் பெருமூச்சுடன் சிலையானாள் அவன்யா.

ஏனெனில் எப்போதும் தன்னைத் தென்றலென தீண்டும் ராகவ்வின் தேகவாசனை, அவளை கட்டியணைத்தாற் போல நின்று அவளுக்கு பின்பக்கமாக ராகவ் கைகளைக் கட்டியபோது அவளது நாசியை நெருடி உணர வைத்ததும் பெண்மை விழித்துக் கொண்டதைப் புரிந்து கொண்டு தன் காலின் பெருவிரல்களை பூமி நோக்கி அழுத்தியபடி தன்னை சமாளித்து முறுவலித்தாள்.

அவளது கைகளைப் பின்பக்கமாக கட்டியபோது தன்னை மீறி அவன்யாவின் கூந்தலில் சூடப்பட்டிருந்த மல்லிகையின் வாசம் முழுமையாக அவளிடம் ஈர்த்து ஒருவிதக் கிறக்கத்தை ஏற்படுத்தியக் காரணத்தால் தன் செதுக்கிய உதடுகளால் அவன்யாவின் கழுத்தோரம் அழுத்தமாக முத்தத்தை பதித்தான் ராகவ்.

அவனது செயல்களில் மூச்சு விட மறந்தவளாய், எச்சிலை மெல்ல முழுங்கியபடி அசையாத சிலையாக நின்று விட்டதை உணர்ந்தவனோ, “என்னை விட்டு எங்கடி ஓடிருவ நீ?! அவ்ளோ ஈஸியா உன்னை விட்ருவேனாக்கும். யு ஆர் ஒன்லி மைன்..” என அவன்யாவின் காதினோரம் இரகசியம் பாடியவனின் இதழ்கள் பட்டக் குறுகுறுப்பில் மென்மையாக சிணுங்கியபடி நெளிந்தாள் அவன்யா.

தன்னை உணர்ந்து கொண்டாளென அறிந்தவனோ அவளை அப்படியே தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான் ராகவ். “உனக்கு ஓடிப்போய் ஒளிஞ்சுக்க வேற இடமே கிடைக்கலியா?!” என முறுவலுடன் கேட்டவனை,

“நீங்கள்லாம் மனுஷனா?! அந்தரத்துல அம்போன்னு விட்டுட்டு போன மாதிரி போயிட்டீங்க.. இங்க நான்…” என கிழவி போல புலம்ப ஆரம்பித்தவளிடம், “ம்ம்ம்.. சொல்லு.. என்னோடு வயலுக்கு வந்தாயா.. ஏற்றம் இறைத்தாயா.. நாற்று நட்டாயான்னு இன்னும் நாலஞ்சு பிட்ட சேர்த்து போடு..” என நக்கலாக ராகவ் கூறவும், 

சட்டென உண்மையில் என்ன கூற வந்தோமென மறந்து போய் பேந்த பேந்த கட்டியிருந்த துணிக்குள் கருவிழிகள் அலைபாய யோசித்தவளாய் அவனது கைகளில் மிதந்து கொண்டு வந்தாள் அவன்யா.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *