உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

அத்தியாயம் 10

மூச்சு வாங்க ஓடிக் கொண்டிருந்த போது மீண்டும் ‘ராகவ் வருகிறானா?’ எனத் திரும்பி பார்த்த அவன்யா அதிர்ந்து போனாள். அவளைத் தொடுமளவு அருகில் ஓடிவந்தபடி நெருங்கியிருந்தான் ராகவ்.

சற்று தூரத்தில் தரையில் கொடியாகப் படர்ந்து வளர்ந்திருந்த செடியினால் அவன்யாவை நெருங்கியிருந்த ராகவ் அவளைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு அவளது தோளைப் பிடித்து இழுக்கையில் இருவரும் தடுமாறி விழுந்த வேகத்தில் வேகமாக ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்தவாறு கடகடவென உருண்டனர்.

உருண்ட வேகத்தில் அவர்களைச் சுற்றி கொடிகளனைத்தும் கயிறென சுற்றிக்கொள்ள, இருவருமே மூச்சு வாங்க ஒருவரையொருவர் இதழ் நெருங்கியத் தருணத்தை செய்வதறியாமல் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

சூரிய வெளிச்சத்தை மரத்தின் நிழல் மறைத்தக் காரணத்தால் அவ்விடம் முழுவதும் குளுமையாக இருந்து அவர்களின் மனநிலைகளை சாந்தப்படுத்தியிருந்தது. ராகவ்வின் மூச்சுக்காற்று தன் முகத்தில் பட, முதன்முதலாக அவன்யாவின் பெண்மை விழித்துக் கொண்டது.

அவன்யாவிடமிருந்து எழ முயன்றவனின் முயற்சித் தோல்வியுற மீண்டும் அவள்மீதே தடுமாறி விழுந்தான் ராகவ். ஆனால் விழுந்த வேகத்தில் அவன்யாவின் பூவிதழை மிக ஆழமாகப் பதம் பார்த்தது ராகவ்வின் வலிமையான இதழ்கள்.

சற்று நொடிகள் திணறிவிட்டு அவனிடமிருந்து தன் இதழைப் பிரித்து முகத்தை அசைத்தவாறு நகல முயன்றவளின் மேனி மீது படர்ந்த ராகவ்வின் உடல் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வெட்கத்தில் அவளது முகம் சிவந்ததை கண்கொட்டாமல் பார்த்திருந்தான் ராகவ். தன் வீராப்பு அனைத்தும் அடங்கிய சிங்கத்தைப் போல மிருதுவான பார்வையுடன் பார்த்தபடி,

 “ஒழுங்கா ஓடாம நின்னுருந்தா இந்த அவஸ்தைத் தேவையா?!” என அந்த சூழ்நிலையிலும் கிண்டலடித்தவனை முறைத்துப் பார்க்கக் கூட தோன்றாமல் கண்ணிமைகளை கீழ்நோக்கித் தாழ்த்தி, “இப்ப என்னப் பண்றது?!” என ஏதும் அறியாப்பிள்ளைப் போலக் கேட்டவளின் குரலில் தெரிந்த நளினத்தை உணர்ந்தவனுக்கு மெய்சிலிர்த்தது.

ஆனாலும் அதை சமாளித்துக் கொண்டு, “இப்பயாவது ஆடாம அசையாம இரு..” எனத் தன் பேன்ட்டிற்குள் விரல்களை விட்டு துலாவியவனின் கையில் பேனா ஒன்று கிடைத்தது. அதன் மூடியை அழுத்தித் திருப்பியதும் கூர்மையான ப்ளேடு ஒன்று வெளிவந்தது.

அதன் உதவி கொண்டு கொடியை வேகமாக அறுத்தவனின் உடல் அசைய அசைய பெண்ணவளின் மார்பில் அசைவை உணர்ந்தாலும் தன்னால் ஒன்றும் செய்ய இயலாமல் பெண்ணவள் மிகவும் திணறிப் போனாள். 

அவளது முகமாற்றங்களைக் கவனிக்காமல் தன் வேலையில் கவனமாக இருந்தவன் முழுமையாக அக்கொடியனைத்தையும் வெட்டிவிட்டு அவன்யாவைப் பார்த்ததும் ராகவ்வின் விழிகள் குறும்பில் மின்னியது.

செந்தாமரையாய் மலர்ந்து நாணி நிலம் நோக்கியிருந்தவளின் இருபுறமும் தரையில் கைகளை ஊன்றியபடி, “ஓய்.. எப்பப் பாரு.. ஏதாவது லொட லொடன்னு பேசுவியே.. இப்ப என்னாச்சு..?!” என தனது நெற்றியால் அவளது நெற்றி முட்டியவாறு கேட்க, நிமிர்ந்து பார்க்காமல் ஏதோ பேச முயன்று பின் “வெறும் காத்து தான் வருது..” என அவன்யா ஹஸ்கி வாய்ஸ்ஸில் கூறியதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான் ராகவ்.

‘அடேங்கப்பா.. இந்த ரணதேவ் பில்லாக்கு இவ்ளோ அழகா சிரிக்கத் தெரியுமா?!’ என வியந்தபடி அவனைப் பார்த்தவள், “சார்…” என இழுத்தாள் அவன்யா. ‘என்ன..’ என ஒற்றைப் புருவம் ஏற்றியிறக்கிய தினுசில் மீண்டும் அவன்யாவிற்கு தொண்டையில் அடைக்கத் தொடங்கியது.

கன்ணிமைகளை வேகமாக சிமிட்டி மிகவும் சிரமப்பட்டு, “கொஞ்சம் நீங்க என்மேலருந்து டேக்ஓவர் ஆனீங்கன்னா நான் கொஞ்சம் மூச்சு விடுவேன்..” எனப் பரிதாபமாக கூறியவளைக் கண்டதும் தான், தான் இன்னும் அவளின் மேல் வாகாக படர்ந்திருக்கிறோம் என்பதே ராகவ்விற்கு நினைவு வந்தது.

அவளது மேனி பட்ட இடங்களைக் குனிந்து பார்த்தவனுக்கு அதன்பிறகே தேகம் சூடாகத் தொடங்கியது. ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெல்ல அவளிடமிருந்து விலகினான் ஒரு சின்னச் சிரிப்புடன்.

 ஏதோ வேற்றுலகத்தில் சஞ்சரித்திருப்பது போன்ற உணர்வுடன் எழுந்தவளுக்கு தற்போது தப்பித்து ஓடத் தோன்றவே கால்கள் செல்ல மறுத்தது. ராகவ்வை மிக நெருக்கத்தில் பார்த்த நினைவிலிருந்து வெளிவர முடியாமல் கன்னியவள் தவித்துப் போனாள்.

அவளின் மனநிலை உணர்ந்து அதைக் கண்டுகொள்ளாமல் அவளது தலையில் ஓங்கி ஒருக் கொட்டு வைத்தான் ராகவ். “ஆ…” என்ற அலறலுடன் எதிர்பாராத இந்த செயலில் தற்போதைய சுயநினைவுக்கு திரும்பியவள் அப்போது தான் சுதாரித்தாள்.

மீண்டும் ராகவ்விடமிருந்து விலகி ஓட எத்தனித்தவளைப் பிடித்து அலேக்காகத் தன் தோளில் போட்டு, “உன்ன இப்டியே விட்டா சரிபட்டு வர மாட்ட. வா.. உன்னை என்ன பண்றேன் பாரு..” என அதட்டியபடி புன்னகையுடன் நடந்தான் ராகவ்.

“சார்..சார்.. சார்.. என்னைக் கீழ இறக்கி விடுங்க சார். யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க.. ப்ளீஸ் இறக்கி விடுங்க சார்..” எனக் கெஞ்சியவளை சிறிதும் சட்டை செய்யவில்லை ராகவ்.

உண்மையில் அவன்யாவிற்கு அவனிடமிருந்து சிறிது இடைவெளி தேவைப்பட்டது. தன்னை சமன் செய்துகெள்ளத் தான் இறக்கி விடச் சொல்லிக் கெஞ்சினாள். அவளுக்கு தற்போது நடக்கும் அனைத்தும் புதுவித உணர்வின் அலைக்கழிப்பாகத் தெரிந்தது.

பணியாளர்கள் அனைவரும் வாயைப் பிளந்து ‘ஆ…’ வெனப் பார்த்திருக்க, அவளை அள்ளிக் கொண்டு போனவன் காரினுள்ளே அமர வைத்து காரின் முன்பக்கத்தின் ஷெல்ப்பிலிருந்து பாக்ஸ் ஒட்டும் டேப் ஒன்றை எடுத்தான்.

என்ன ஏது என அவன்யா சுதாரிப்பதற்குள் அவளது கைகளிரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்து டேப்பின் உதவியுடன் ஒட்டியபடி கட்டினான். “சார்ர்ர்… என்னப் பண்றீங்க..?! எடுத்து விடுங்க சார்.. நான் எந்த சேட்டையும் பண்ண மாட்டேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என விடாது அனத்தியவளின் வாயையும் சேர்த்து டேப்பினால் ஒட்டினான்.

பிறகு எதையும் கண்டுகொள்ளாமல் காரில் ஏறிக் கிளம்பி விட்டான். ஆனால் அவன்யாவிற்குத் தான் அப்படியே அமர்ந்திருப்பது பெரும் அவஸ்தையாக இருந்தது. ‘ம்மம்…ம்ம்ம்…” என முணங்கியவளிடம் திரும்பி, “பொழுதன்னைக்கும் நீ எப்பத் தப்பிச்சு போவன்னு நான் வேவு பாத்துட்டிருக்க முடியாது. அதான் இந்த பனிஷ்மென்ட்.. எப்புடி…?!” என சிரித்தபடியேக் கூறியவனைக் கடுப்புடன் பார்த்து, ‘போடா உன் பனிஷ்மென்ட்ல தீய வைக்க..’ எனத் திட்டியவாறு அமர்ந்திருந்தவளை விட்டுக் காரோட்டுவதில் கவனமாய் இருந்தான்.

சற்று நேரத்தில் பின்னாலிருந்து சிரமப்பட்டு நகன்று வந்து ராகவ்வின் தோள்களை சுரண்டினாள் அவன்யா. என்னவென்று திரும்பி பார்த்தபோது தண்ணீர் குடிக்க வேன்டுமென சைகை செய்ய, ராகவ்விற்கு என்னத் தோன்றியதோ அவளைப் பிணைத்திருந்த டேப்பை உறுவி விட்டு தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்தான்.

மிக வேகமாக தண்ணீரை மடமடவெனக் குடித்தவள் சட்டெனப் புரையேறி, “ஹொக்கு..ஹொக்கு..” என இறுமியவள், ‘இப்ப நான் என்னப் பண்ணிட்டேன்னு எனக்கிந்த தண்டனை?! கொஞ்சமாவது நியாயம் வேணாமாடா?! போயி அவன் தம்பி சட்டையப் புடிச்சு ஏத்தி ஒரு அரை விட்டா அது நியாயமான காரியம். இப்டி என்னைப் போட்டு அக்கக்கா பிரிச்செடுத்துட்டிருக்கானே இம்சை..’ என உள்ளுக்குள்ளேயே பொருமித் தீர்த்து விட்டாள் அவன்யா.

அவளது முகபாவனைகளை பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு வந்தவனின் இதழோ புன்னகைத்த வண்ணமே இருந்ததை பாவையவள் கவனிக்கத் தவறினாள்.

சிறிது நேரம் சென்றதும், மெல்ல முன்பக்கம் எட்டிப் பார்த்து, “சார்.. இப்போ நாம எங்கப் போறோம்?” என கேள்வி எழுப்பியவளைப் பார்த்து, “அதுவா அவன்யா.. டெல்லி போறோம்.. ஆல்ரெடி ஃப்ளைட்டுக்கு லேட்டாகிடுச்சு..” என பதிலளித்ததும், ‘ஹப்பாடா..’ என இருந்தது அவன்யாவிற்கு. 

‘நல்லவேளை.. இவர் துர்கா-ரகுவத் தேடிப் போறோம்ன்னு சொல்லல.’ என நிம்மதிப் பெருமூச்சொன்றை விட்டபடி இருக்கையில் சாய்ந்தாலும் பசிக்கும் தன் வயிறை இறுக்க இருக்கைகளால் அணைத்தபடி கண்மூடினாள். சில நிமிடத்தில் கார் ஓரிடத்தில் நிற்பதைக் கண்டவள் கேள்வியுடன் ராகவ்வைப் பார்த்தாள்.

“வா.. சாப்பிட்டுட்டு போலாம்.” என அவளை அழைத்துக் கொண்டு பெரிய ஹோட்டல் ஒன்றில் நுழைந்தான் ராகவ். ஆனால் அங்கு அவனுக்கு கிடைத்த மரியாதையில், ‘ஓ.. சார் இங்க ரெகுலர் கஸ்டமர் போல.. ம்ம்ம்..’ என யூகித்தவளுக்கு தெரியவில்லை அந்த ஹோட்டலே அவனுடையது தானென.

“உனக்கென்ன வேணுமோ கூச்சப்படாம சாப்பிடு..” என ராகவ் கூறியதும், “நிஜமாவா சார்..?! எது வேண்ணாலும் ஆர்டர் போட்டுக்கவா?” என ஆர்வமாய் கேட்டவளை சீண்ட நினைத்து,

“ம்ம்ம்.. ஆனா அதெல்லாத்தையும் கணக்கு வச்சு உன் சம்பளத்துல கழிச்சுருவேன்.” என நிமிர்ந்து அவளைப் பாராமல் இயல்பாக கூறியபடி உணவருந்த அமர்ந்தவனை,

‘அதுசரி.. சரியான கஞ்சம்.. ஒரு சாப்பாடு வாங்கிக் கொடுக்க இவ்ளோ கணக்கு பாக்குறானே.. இவனல்லாம் கட்டிக்கிட்டு…’ என நினைத்து பெருமூச்சு விட்டவள், அதன்பின் விரக்தியாக சிரித்து,

‘ஒருபோதும் அப்டில்லாம் கனவு கண்டுறாதடி.. அவுங்க லெவல் வேற.. நம்ம லெவல் வேற..’ என மூளை எச்சரித்தாலும், ஆழ்மனதோ, ‘நான் அவனை மனமார நேசிக்கிறேன்..’ என்றே திரும்பத் திரும்ப கூறியது.

 தன் மனதை மாற்றும் முயற்சியாக சாப்பாட்டில் கவனம் செலுத்தி திசைதிருப்பினாள். அது அவளுக்கு கடினமாகவும் இல்லை. ‘மெனு கார்டு’ ஒன்றை எடுத்து மனப்பாடம் செய்தவள் பின் வேகமாக சர்வரிடம் ஒப்பிக்கத் தொடங்கினாள்.

அவளது உணவின் லிஸ்ட்டை கவனித்தவனின் விழிகள் பெரிதாக விரிந்தன. “ரெண்டு நெய் தோசை.. அப்புறம் ஒரு ஐஸ்க்ரீம்.. அ… இப்போதைக்கு இவ்ளோ தான். மத்ததெல்லாம் அப்புறம் சொல்றேன்.” எனக் கூறிக் கொண்டிருந்தவளிடம்,

“ஓய்..ஓய்..ஓய்.. என்ன லிஸ்ட் ட்ரைட் ட்ராக் மாதிரி போய்க்கிட்டே இருக்கு. இதுக்குல்லாம் உன் சம்பளம் மொத்தமும் காலியாகும்.. பரவால்லயா?” என வம்பிழுத்தவனை முறைத்துப் பார்த்தாள் அவன்யா.

“என் சம்பளம்ன்றனால தான் இவ்ளோ ஆர்டர் போட்டேன். என் சம்பளத்துல வாங்குறத வெடுக்குன்னு புடுங்கி இப்போ நீங்க சாப்பிட முடியாதுல்ல..” என கண்ணை சுருக்கி விரித்து சுழற்றியபடி அவள் கூறிய தினுசில் ராகவ்விற்கு சிரிப்பு வரத்தான் செய்தது.

சிரித்துக் கொண்டே, “உனக்கு சம்பளம்ன்னு ஒன்னு கொடுக்கலாம்ன்னு பாத்தேன். நீ இப்டியே பேசிட்டிருந்தன்னு வையி.. ஆயுசுக்கும் உனக்கு சம்பளம் கிடையாது.” என ராகவ் கூறியதும், அதுவரை இருந்த அறுந்தவால் சேட்டை அனைத்தையும் ஒடுக்கிக் கொண்டு நல்லபிள்ளை நாணயம் போல அமைதியாகி உட்கார்ந்திருந்தாள் அவன்யா.

ஆனால் அவளது இந்த மாற்றத்தைப் பார்த்தும் ராகவ்வால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ‘என்ன.. ரணதேவ்வுக்கு எப்பப் பாரு சிரிப்பா இருக்கே.. இந்நேரத்துக்கு சங்கிலிக் கருப்பு மாதிரி தீப்பந்தத்த தூக்கில்ல ஆடிருக்கணும்.. எங்கயோ இடிக்குதே..’ என யோசித்துக் கொண்டே அவள் அமர்ந்திருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தவளுக்கு  தூக்கிவாரிப் போட்டது.

“அய்யய்யோ.. அதே கேங்கு..” எனத் தனக்கு முன்னாலிருந்த சாப்பாட்டு தட்டையெடுத்து முகத்தை மறைத்தவாறு பதுங்கியவள், பின் மீண்டும் எட்டிப் பார்த்து எத்தனை பேரென எண்ணினாள்.

“ஒன்னு..ரெண்டு..ஆறு.. அதுசரி.. அன்னிக்கு இருந்த அதே குரூப்.. ஆ… அய்யோம்மா.. காலிங்கன் சாரும் இருக்காரே.. சுத்தம்.. அடப்பாவிங்களா! நிம்மதியா சோறு திங்க விட மாட்றீங்களேடா..” எனத் தட்டால் தனது முகத்தை நன்கு மறைத்தபடி புலம்பிக் கொண்டிருந்தவளின் செயல்களை வினோதமாகப் பார்த்தவன்,

அவன்யாவையும் பார்த்துவிட்டு அவள் பார்க்கும் திசையையும் பார்த்தவன், ஏதோ புரிந்தது போல மெல்ல புன்னகைத்தான். ஆனால் சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்ற மேஜைக்காரர்கள் அவளது செயலைப் பார்த்து கேலி செய்து சிரிக்கத் தொடங்கியதை சற்று தர்மசங்கடத்துடன் உணர்ந்தான் ராகவ்.

“அவன்யா.. ப்ம்ச்.. அவன்யா… என்ன பண்ற? எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க..” என அடிக்குரலில் சீரியவாறு அவன்யாவிடமிருந்து சாப்பாட்டுத் தட்டை வாங்குவதற்காக அதைப் பிடித்து இழுத்தபடி கேட்க,

அதற்கு இடம் கொடாமல் தன்னை மறைக்க முயன்றவாறே, “அடப்போங்க சார்.. அன்னிக்கு பாத்த அதே கேங்கு.. மறுபடியும் ஓடி ஒளிஞ்சு எலிப்பாஷனம்லாம் சாப்பிட முடியாது சார்..” என கவனம் முழுவதையும் ‘அவர்கள் தன்னைப் பார்த்துவிட்டனரா?!’ என்பதிலேயே வைத்துக்கொண்டு கூறியவளிடமிருந்து திகைப்புடன் ஒருகணம் கையை எடுத்துவிட்டு பின் வலுவுடன் தட்டைப் பிடுங்க முயற்சித்தான் ராகவ்.

ஆனால் அந்தோ பரிதாபம்!!! சாப்பாட்டுத் தட்டு அவளது கையிலிருந்து தவறி படாரெனக் கீழே விழுந்து நொறுங்கியது. அந்த சத்தத்தில் அங்குள்ள அத்தனை பேரும் அவள் இருக்குமிடத்தைத் திரும்பிப் பார்த்தனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *