உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

உயிரோடு கலந்து விட்டாய்!

அத்தியாயம் 17

“மஹாராணி.. அவையில் அனைவரும் தங்களின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்…” எனப் பணிவுடன் பணிப்பெண்ணொருத்தி வந்து நிற்க, 

தங்கத்தினால் இழைக்கப்பட்ட அலங்காரங்கள் நிறைந்த கண்ணாடியில் தன் அழகை நேர்ப்படுத்திக் கொண்டிருந்தவளோ, “ம்ம்ம்.. அந்த ரணதேவ் பில்லாவை அழைத்து வந்தாயிற்றா?” எனத் தன் கூந்தலை சரிசெய்தவாறு திரும்பி நின்று வினவினாள் அவன்யா.

“ஆம் அரசி.. அவரும் தங்களுக்காக காத்திருக்கிறார்..” என குரல் தாழ்த்திக் கூறியவளிடம், “ஆகட்டும். வருகிறேன்..” என மெல்லிடையானத் தன் தேகத்தைத் தழுவிய பட்டுத் துணியை அள்ளித் தன் கைகளில் போட்டவாறு கம்பீரமாக நடந்து அவையை நோக்கி நடந்து சென்றாள்.

அவளது நேர்கொண்ட நடையைக் கண்டு காவலாளிகள் அனைவரும் பணிந்து வணங்க, அனைவருக்கும் மரியாதை நிமித்தமாக மெல்லியத் தலையசைப்பொன்றை வழங்கியபடி வந்தவளின் பார்வை சங்கிலியால் பிணைக்கப்பட்டு இரத்தக்காயத்துடன் தொங்கிக் கொண்டிருந்த ரணதேவ் பில்லா (அதாவது நமது கதாநாயகன் ராகவ் ஐயாவே தான்) மீது ஏளனத்துடன் பதிந்து மீண்டது.

பிறகு தன் அரியணை நோக்கி வேகமாக நடந்து சென்று அமர்ந்தவள், “இழுத்து வாருங்கள்..” எனக் கட்டளையிடவும், நான்கு காவலாளிகள் சேர்ந்து ராகவ்வை இழுத்து வந்து அவையின் நடுவில் நிறுத்தினர்.

“வா… மனோகரா.. வா.. எப்படி இருக்கிறீர்கள்?” என எகத்தாளத்துடன் அவன்யா ராகவ்வைப் பார்த்துக கேட்க, “ம்ம்ம்.. என் பேரு ரணதேவ் பில்லா.. முதல்ல பேர ஒழுங்கா சொல்லுங்க.. மஹாராங்கி அவர்களே…” என நக்கலாக பதில் சொல்லியவனை உதட்டைக் கடித்தபடி ருத்ரத்துடன் பார்த்து,

“இத்தனை அடிகள் வாங்கியும் உன் ஆணவம் அடங்கவில்லை அல்லவா..?! ம்ம்..” எனத் தன் கையை நீட்ட, அவளது கைக்கு முட்கள் நிறைந்த சாட்டை ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தாள் ஒருப் பணிப்பெண்.

“உன்னை எல்லாம் தோளை உரித்து உப்புக்கண்டம் போட வேண்டும்.” எனக் கூறியபடியே அரியணையில் இருந்து இறங்கி வந்தவளிடம், “அதுசரி.. அதாவது உருப்படியா போடத் தெரியுமா..?! இல்ல.. அதுவும் அரைகுறை தானா?!” என அவளை ஏறயிறங்கப் பார்த்தவாறு ராகவ் கூறுவதைக் கேட்டு கொதித்துப் போனாள் அவன்யா.

“உன்னை… என்ன செய்கிறேன் பார்..” என தன் கையிலிருந்த சாட்டையை சுழற்றி சுழற்றி வீசி அவனை அடித்துக் கொண்டிருக்க, அவனோ, “போதாது.. போதாது.. இன்னும் பயிற்சி வேண்டும்..” என நக்கலடித்துக் கொண்டிருப்பதைக் கண்டவள் இன்னும் வேகமாக சாட்டையை சுழற்றினாள்.

“இன்னும் ஒரு வார்த்தைப் பேசினாயென்றால் உன்னைக் கொன்று புதைத்து விடுவேன்.” எனக் கனவு கண்டு கத்தியபடி மெத்தையில் உருண்டவள் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவனின் மூக்கைக் குறிபார்த்து ஒருக் குத்து விட்டாள் அவன்யா.

தன் மூக்கைப் பொத்தியபடி வலி தாங்கமுடியாமல் பதறிக் கொண்டு எழுந்து ‘மினி லாம்ப்’பின் ஸ்விட்ச்சை போட்டு, என்னவென்று பார்த்தவனிடம் மீண்டும் உருண்டு வந்து மேலே ஏறியவள் கண்திறவாமலேயே, 

தன் கைவிரல்களால் ராகவ்வின் கழுத்துப் பிடித்து நெறித்தவாறு, “உனக்கு என்ன தைரியம் இருந்தால் என்னிடமே இவ்வாறு நடந்து கொள்வாய்?! உன்னை…” என வீரவசனம் பேசியவளை,

“எ..ஏய்ய்…. அவன்..யா.. விடு.. விடு அவன்யா.. அப்புறம் நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ.. விடுன்னு சொல்றேன்ல..” என அவளது விரல்களை தன் கழுத்தில் இருந்து எடுக்க முயன்று கொண்டிருந்தான் ராகவ்.

“என்னை மணப்பேன் என்று என்னிடமே வந்து சவாலா விடுகிறாய்.. சவால்..?? உன்னை என்ன செய்கிறேன் பார்..” என பளார் பளாரென ராகவ்வின் கன்னத்தில் அறையத் துவங்கியவளின் அராஜகம் தாங்காமல் அவளை படுக்கையின் பக்கவாட்டில் கீழேத் தள்ளி அவள்மீது தன்னை முழுவதுமாக ஏற்றிக் கொண்டு சற்று நொடிகள் ஆசுவாசமாக முயற்சித்தான்.

கண்களை இறுக்க மூடியிருந்தவளின் கருவிழிகள் அலைபாய, “மஹாராணி மீதே ஏறியமர்கிறாயா?! இறங்கடா கீழே.. உன்னைக் கடித்தேத் தின்று விடுகிறேன்..” எனக் கத்தியவாறு எழ முயன்றவளின் இருக்கைகளையும் அவளுக்கு இருபக்கமும் அழுந்தப் பிடித்து அடக்கியபடி,

“சோத்துமூட்ட.. கனவுலயும் பாரு.. திங்குறதுலயே தான் குறியா இருக்கா..” என முணங்கியவாறு சலித்துக் கொண்டு, “அவன்யா.. அவன்யா..” என எழுப்ப முயன்றவனின் முதுகில் கால் முஷ்டியைத் தூக்கி இடித்து நிலைகுலையச் செய்தாள் அவன்யா.

அவளது அதிரடி தாக்குதலை எதிர்பாராத ராகவ் தடுமாறி படுக்கையில் விழுந்த நொடியில் அவன்மீது இவள் ஏறியமர்ந்தாள். “இதோ வாங்கிக் கொள்..” என குனிந்து அவனது தோள்பட்டையை அழுந்தக் கடித்தாள் அவன்யா.

“ஆ…. அஅம்மா.. ஏய்ய் பிசாசே.. இறங்குடி முதல்ல..” என வலி தாங்கமுடியாமல் கத்தியவனின் பொறுமைக் காற்றோடு காற்றாக பறந்திருக்க, “அடிங்க.. நானும் போனாப் போகுது.. போனாப் போகுதுன்னு பாத்தா ஓவரா ஆடுறியா நீ..?! ” எனக் கூறியபடி அவன்யாவைக் கீழேத் தள்ளி அவள்மீது ஏறி, முரட்டுத்தனமாக திமிறியவளை அடக்கி சற்று நொடி அவளையேக் கூர்ந்து பார்த்தான் ராகவ்.

பின் அவளை நிறுத்த தனக்கு வேறு வழியில்லையென நினைத்ததும் சட்டெனக் குனிந்து அவன்யாவின் தேனூரும் இதழ்களை அழுந்தக் கவ்வி சுவைத்தான் ராகவ். தன்னிடமிருந்து அவனைப் பிரிப்பதற்காக துடித்த அவன்யாவின் கைகள் அவனது இதழ் அழுத்தத்தின் தாபம் புரிந்து மெல்ல மெல்ல அடங்கிப் போனது.

 முதலில் அவளது இம்சை தாங்காமல் அவளது உதடுகளை சிறைசெய்தவனுக்கு நேரம் செல்ல செல்ல அவளிடமிருந்து தன்னைப் பிரித்தெடுக்கும் எண்ணத்தை மெதுமெதுவாக மறக்கத் தொடங்கினான்.

ஒருக்கட்டத்தில் இருவருமே மூச்சுக்கு போராட, அவளிடமிருந்து சட்டென விலகி படுக்கையில் விழுந்தவாறு மூச்சை விட்டான் ராகவ். மூச்சுக்கு போராடியவளோ, தன்மீது மிகுந்த பாரமொன்று அழுந்திக் கொண்டிருப்பது போலத் தோன்ற, 

படக்கென எழுந்தமர்ந்து மூச்சை ஆழ எடுத்து விட்டாள் அவன்யா. முகமெல்லாம் வியர்த்து விறுவிறுவித்திருக்க ஏதோ கெட்டக் கனவொன்றைக் கண்ட தினுசில் இதயத்துடிப்பு தாறுமாறாக இருப்பதை உணர்ந்தாள்.

அவளிடமிருந்து விலகி ஆசுவாசமானவனுக்கு அப்போது தான் முழுமையாகப் புரிந்தது. ‘ஓ..மைகாட்.. நான் இவள இவ்ளோ லவ் பண்றேனா?!’ என பிரம்மித்தவன் அசையாமல் விழிகளை மட்டும் நகர்த்தி அவளைப் பார்த்தான். 

‘என்னாச்சு எனக்கு..‌ ஏன் இப்டி முகமெல்லாம் வேர்த்துருக்கு..?!’ எனக் குழம்பியவள் சட்டென ஏதோ தோன்ற ராகவ்வைத் திரும்பிப் பார்த்தாள். ‘எங்கே தான் முத்தமிட்டதைக் கண்டு கொண்டாளோ?!’ என்றப் பதட்டத்தில் பட்டென கண்களை மூடி உறங்குவது போல பாவலா செய்தான்.

ராகவ் ஆழ்ந்து உறங்குவதைப் பார்த்ததும், “இதுக்கு தான் அவரோட ஒன்னாப் படுக்க மாட்டேன்னு சொன்னேன்.. ச்செச்சேச்செச்சே.. எப்டியெல்லாம் கனவு வருது பாரு..?! கண்ராவி.. ம்ஹீம்.. இது ஆவரதில்லை. அடியே அவுலு.. வா.. ஓடிரலாம்..” என முணங்கிக் கொண்டே தலையணையையும் போர்வையையும் எடுத்துக் கொண்டு சோஃபாவிற்கு போய் படுத்து உறங்கி விட்டாள் அவன்யா.

அவள் உறங்கும் வரை அசையாமல் இருந்தவனுக்கு சற்று நேரத்திற்கு முன் நடந்த சம்பவத்தால் உறக்கம் என்பது பல மலை தாண்டி சென்றிருந்தது. ‘ஹீம்.. கொடுத்து வச்சவ.. படுத்ததும் தூங்கிட்டாய்யா.. அய்யோ.. என்னாலக் கன்ட்ரோல் பண்ண முடியலியே..ஆண்டவா..’ எனப் படுக்கையில் புரண்டபடி புலம்பிக் கொண்டிருந்தான் ராகவ்.

மறுநாள் காலை எழுந்து சோம்பல் முறித்தவள் பால்கனியில் அமர்ந்து காஃபிக் குடித்துக் கொண்டிருந்த ராகவ்வின் முகத்தைப் பார்த்ததும் ஏதோ நினைவுக்கு வர, சட்டென சிரித்து விட்டாள் அவன்யா.

அவள் சிரிப்பதைக் கண்டவனோ முகம் இறுக நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்தான். அவனது வெறித்தப் பார்வையில் கப்பென வாயை மூடியவள் பின் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்து குளித்து தாயாராகி வந்தாள்.

பால்கனிக்கு அவன்யா வந்தமர்ந்தபோது ராகவ்விடம், “என்னாச்சு சார்.. மூக்குல இவ்ளோ பெரிய ப்ளாஸ்த்திரி?” என சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டதும், “ம்ம்ம்.. நீ நேத்து கனவுல ஆடுனக் கதக்கழிக்கு அடையாளமா விட்டுட்டு போனது இதுதான்..” என எரிச்சலுடன் அவன் கூறுவதைக் கேட்டவளோ,

‘அதுசரி.. நான் அடிச்சு போட்டதுல தான் மயங்கிக் கிடந்தாரா?! நான் கூட தூங்குறாருன்னுல தப்பா நெனச்சுட்டேன்.. பரவால்ல அவுலு.. இவ்ளோ டார்ச்சர் அனுபவிச்சதுல இப்போ கொஞ்சம் குளுகுளுன்னு இருக்கு..’ என மனதினுள் நினைத்து மகிழ்ந்தவள்,

“இதுக்கு தான் நான்‌ உங்கக்கூட படுத்து தூங்க மாட்டேன்னு சொன்னேன். எங்கக் கேட்டீங்க?! இனிமேலாவது இப்டியெல்லாம் ரிஸ்க் எடுக்காதீங்க..” என ஆனந்தமாய் அறிவுரை கூறியவளை பார்த்து,

“நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் இனிமே எப்பவும் நீ சோஃபால தான் படுக்கப் போற.. அப்புறம் யாரு நைட்டு ஃபுல்லா தூங்காம உருளுறது..?!” என முதலில் சத்தமாகக் கூறிவிட்டு இறுதியில் இரவுநேர இன்ப அவஸ்தையை நினைவுகூர்ந்து முணங்கிக் கொண்டேக் கூறினான்.

ஆனால் ராகவ் கூறியதை வேறுவிதமாக எடுத்துக் கொண்டவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘அப்டின்னா நேத்து நைட்டு ஒருக்காட்டு காட்டிருக்கோம். அதான் பயபுல்ல பயந்துட்டு இப்டி சொல்லுது.. ஆனா… எனக்கும் தானே போட்டு அமுக்குச்சு.. எப்டியோ ரொம்ப நேரமா நான் ஆசைபட்டது நடந்துருச்சு.. தேங்க்ஸ் பாஸ்..’ என மேலே பார்த்து இரு விரல்களால் முத்தமிட்டு கூறியவளை,

“சந்தோஷப்பட்டதெல்லாம் போதும். அங்க செல்ஃப்ல உனக்கு சேலை வாங்கி வச்சுருக்கேன். அதைக் கட்டிட்டு ரெடியாகு. ரிஜிஸ்ட்டர் ஆபிஸ் போகணும். டைம்மாச்சு..” என தினசரி செய்தித்தாளைப் புரட்டியபடி ராகவ் கூற, அதுவரை அவன்யாவின் முகத்தில் இருந்த புன்னகை துடைத்தெடுத்தாற் போல மறைந்து போனது.

‘அடப்பாவி..கிராதகா.. இப்போ தானடா சிரிச்சேன். அது உனக்கு பொறுக்கலியா?! உடனே மூட ஸ்பாயில் பண்ணணுமா? சரியான எடக்குநாட்டான்..’ என முகத்தை சுழித்தவாறே எழுந்து சென்றாள் அவன்யா.

அவள் அவ்வாறு எழுந்து சென்றதும் பேப்பரை டேபிளில் வைத்து விட்டு, தன் மொபைலில், “நான் சொல்ற மாதிரி அக்ரிமென்ட் ஒன்னு ரெடி பண்ணுங்க..” எனக் கூறிவிட்டு மர்மப்புன்னகையுடன் எழுந்து சென்று தயாராகத் தொடங்கினான் ராகவ்.

ஷெல்ஃப்பைத் திறந்ததும் அவளது கண்ணில் பட்ட பட்டுப்புடவையைப் பார்த்து அசந்து போனாள் அவன்யா. கண்ணைப் பறிக்கும் அழகில் அகண்ட தங்கநிற பார்டருடன் தங்கயிழையினால் நெய்யப்பட்டு நேர்த்தியாக இருந்தது அப்புடவை. 

அப்பட்டுப்புடவையில் சிறிய நூல் பேப்பரில் அச்சிடப்பட்டிருந்த விலையைக் கண்டதுமே, நன்றாகவே மிரண்டு போனாள். ‘ஆத்தி.. இது என்னோட ஒரு வருட சம்பளமாச்சே.. நடக்கப் போற பொய்யான மேரேஜ்க்கு எதுக்கு இவ்ளோ ஆடம்பரமெல்லாம்..?!’ என உடனே எரிச்சலடைந்தவள்,

புடவைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய பாக்ஸ்ஸை எடுத்து திறந்து பார்த்தாள். அதில் அப்புடவைக்கு ஏற்ற நகைகள் இருந்தன. ஆனால் அவன்யாவின் கண்கள் அந்நகைகளில் அலையாமல் ஒரே ஒரு அணிகலனில் நிலைத்து நின்றது.

உலகில் எத்தனை நகையலங்காரமிருந்தாலும் இந்த ஒரு அணிகலனை மட்டும் எந்தப் பெணணாலும் வாங்குவதற்கு முன்னே நகைக்கடையில் அணிந்து பார்த்து வாங்க முடியாத பொக்கிஷமல்லவா!

அழகான டிசைனில் அவளது கழுத்தை உறுத்தாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்த செயினில் பிணைக்கப்பட்டிருந்த மங்கள நாண்!!! அதைக் காணும்போது அவன்யாவிற்கு அடிவயிற்றில் ஏதோ செய்வது போன்ற பயம் வந்து தொற்றிக் கொண்டது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *