உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

அத்தியாயம் – 1

“காட்டுப் பயலே கொஞ்சிப் போடா.. என்ன ஒருக்கா.. நீ..” 

“ஏ பிள்ள சிவாங்கி..”

“என்னக்கோய்?”

“என்ன புள்ள இங்க நிக்குறவ? இந்நேரோ உன்ன பொண்ணுப் பார்க்க மாப்ள வீட்டாளுக ஓ வீட்டுக்கு வந்துருப்பாக.. நீ என்னடான்னா இங்க நிக்குதவ.. வெள்ளனே வீடு போ.. அப்புறோ உன் அப்புச்சிக்கு யாரு பதில் சொல்றது?”

“செத்த நேரோ ரயிலப்பாக்க விடுதீகளா.? நா வரேன் காவேரிக்கா..”

தன் வீட்டை நோக்கி  ஓடிச் சென்றாள் சிவாங்கி. ‘இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்த? அப்பாருகிட்ட சொன்னா கொன்னுப்புடுவாக..’ என யோசனை செய்து கொண்டே வீடு வந்து சேர்ந்தாள். 

“ஏய் வெட்டிக் கழுத? எங்க ஊர் சுத்திட்டு வார? சீக்ரம் இந்த சீலைய கட்டிக்கிட்டு.. இந்த காப்பி தண்ணிய அவுககிட்ட கொண்டு போய் கொடு..”

“ஆத்தா..”

“என்ன சிணுங்குறவ? போ.. போய் கொடு..” 

கை கால்கள் நடுங்க காப்பித் தட்டை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு போனவள், அங்கிருந்த அனைவருக்கும் காப்பியை கொடுத்தாள். 

“இந்தாத்தா.. இவருதே மாப்ள.. நல்லாப் பார்த்துக்க..” 

அவளுக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தவனை பார்க்காமலேயே அங்கு கூடியிருந்த அனைவர் முன்னிலையிலும் ‘எனக்கு இந்த ஆளைப் பிடிக்கல’ எனக் கூற வாயெடுக்கும் முன் அங்கமர்ந்திருந்தவன்

“எனக்கு பொண்ணைப் பிடிச்சுருக்கு.. கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்?” எனக் கூற அதிர்ந்து போய் நின்றிருந்தாள் சிவாங்கி. 

“அதே மாப்ளயே சொல்லிட்டாகல.. அப்புறமென்ன ஈஸ்வரா? தட்டை மாத்தி பரிசம் போடலாம்னு?”

“அங்கிள்! ஒரு நிமிஷம்.. நான் சிவாங்கிட்ட பேசிக்கிறேன்..” 

“என்ன மாப்ள நீங்க? எங்க ஊர்ல இல்லாத பழக்கமெல்லா சொல்லிட்டுருக்கீங்க.. பரிசத்துக்கு முன்னாடி பொண்ணும் பையனும் ஒருத்தரையொருத்தர் பார்க்குறதே பெரிசு.. இதுல பேசனுங்குறீங்க..”

“ஏப்பா.. அந்த தம்பி தான்  பட்டணத்துலருந்து வந்துருக்குல்ல.. அதுக்கு எப்படி நம்ம ஊரு பழக்கவழக்கமெல்லாம் தெரியும்? இந்தா பாருங்க மாப்ள.. பரிசம் போட்டதுக்கப்புறம் நீங்க என்ன வேணாப் பேசிக்கோங்க.. அதுவும் எங்க முன்னாடிதே பேசுனும்.. லெட்சுமிம்மா தம்பிக்கிட்ட சொல்லுங்க..”

“தம்பி..”

“புரியுதுமா.. நீங்க பரிசம் போடுங்க.. அப்புறம் நான் பேசிக்குறேன்..” என தனது தாடை இறுகக் கூறினான். 

இலக்கப் பத்திரிகை வாசிக்கப்பட்டு நிச்சயமும் செய்யப்பட்டது. 

“இப்ப நான் பேசலாமா?”

“பேசுங்க மாப்ள”

“தனியாப் போலாமா? இல்ல இங்க தான் பேசனுமா?”

“தனியாப் பேசக்கூடாது.. அது ஊர் காட்டுப்பாடு.. அதனால இங்கயே எல்லார் முன்னாடியும் பேசுங்க..”

“அப்போ ஷ்யூயரா சொல்றீங்க.. இங்கயே எல்லார் முன்னாடியும் பேசலாம்.. அப்படித்தானே?”

“ஆமா மாப்ள..”

“இவ என் பொண்டாட்டி தானே?”

“மாப்ள?”

“அதான் மாமா.. பரிசம் போட்டா பாதி பொண்டாட்டின்னு சொல்வீங்களே!”

“ஆமா மாப்ள.. அவ இப்ப உங்க பொண்டாட்டி தான்..”

“அப்போ சரி..”

சிவாங்கி அருகே சென்றவன் அவளது கையைப் பற்றி இழுத்து அவளது இதழ்களை வன்மையாக சிறைப்பிடித்தான். நட்டநடு சபையில் அனைவரும் கூடி இருக்கும் போது அவர்களின் கண் முன்னேயே சிவாங்கியின் இதழ்களை கவ்வி சுவைத்தவன் அவளது கண்களை நேருக்கு நேராக சந்தித்து

“எங்கிட்டருந்து நீ தப்ப முடியாது.. என்னப் பார்க்குற? உன் அப்பாவையா? அவரால் என்னைய ஒன்னும் பண்ண முடியாது.. கல்யாணம் முடியும் வரைக்கும் எதுவும் எக்குத்தப்பா செய்யாம இருந்தேனா.. கல்யாணம் பண்ணி கசமுசா நடக்கும்.. அதுக்குள்ள எதாவது கிறுக்குதனம் பண்ண.. ஸ்ட்ரைட்டா கசமுசா தான்.. உடம்பை பத்திரமாப் பார்த்துக்கோ.. வர்ட்டா?”

“என்ன மாப்ள? இப்படி எல்லார் முன்னாடியும் போய்..”

“ஏன்‌ மாமா.? உங்கக்கிட்ட கேட்டு தானே பேசுனேன்..”

“நீங்க பேசவா செஞ்சீங்க.?”

“என்னோட பாஷைல இப்படித்தான் பேசுவேன்.. உங்களுக்கு பிடிக்கலேனா கண்ணை மூடிக்கோங்க.. ஓகே மாம்.. ப்ளைட்டுக்கு லேட்டாகுது.. நீங்க என்கூட வர்றீங்களா? இல்ல உங்க அண்ணே வீட்லயே இருக்கப் போறீங்களா?”

“இல்லப்பா.. உன்கூடவே வந்துர்றேன்..”

“ஓகே.. கிளம்புங்க.. அப்புறம் மாமா.. கல்யாணம் என்னோட செலவாயிருக்கனும்.. இந்தாங்க.. இதுல இருபது இலட்சம் இருக்கு.. அவ உடம்புல இருக்கப் போற உள்ளாடை முதற்கொண்டு நான் வாங்கிக் கொடுத்ததா தான் இருக்கனும்.. நாளை மறுநாளே கல்யாணம்..” 

அதுவரை சத்தமாகப் பேசியவன் இப்போது ஈஸ்வரனின் அருகில் சென்று அவர் காதருகில் மெதுவாக

“நான் சொன்னது நடக்குற வரை உங்க ரகசியம் ரகசியமாகவே பாதுகாக்கப்படும்.. சொல்றது புரியும்னு நினைக்குறேன்..” என கூறிவிட்டுச் சென்றான் சித்தார்த் அதிரூபன். 

தன்னைச் சேர்ந்தவருக்கு இனிய அதிரூபசுந்தரன். தன்னை ஏமாற்றுவோருக்கு கடுமையான சித்தார்த். அவனது இருவேறு முகத்தை அறிந்தவர் லெட்சுமியம்மா மட்டுமே. இருபத்தெட்டு வயது கட்டிளங்காளை. அவனை எதிர்த்தவர் யாருமிலர். அழிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டான் என்றால் ஆணிவேர் கூட இல்லாமல் அழித்து விடுவான். அப்படிப்பட்டவனையே திருப்பிப் போட்டது அந்த நிகழ்வு. அதிலிருந்து அவனது மனதிலும் தீ ஒன்று பற்றி எறிந்து கொண்டிருந்தது. 

“ஏ புள்ள.. குட்டி போட்ட பூனையாட்டு இங்கனவே சுத்துத.. உன் அப்புச்சி உன்னையத் தேடி ஊரையே கூட்டிட்டு வாராரு.. என்னைய வம்புல மாட்டிவிட்டுடாத.. உனக்கு புண்ணியமாப் போகும்..”

“ரொம்ப சலம்பாதலே.. எங்க அப்பாரு வந்தா நா பார்த்துகிடுதேன்..”

“எத பார்த்துக்குவ? நா உன் அப்புச்சி கையால் அடிவாங்குறதையா?”

“ஏன்டா? நீயும் பயந்து என்னையும் பயப்பட வைக்குத?”

“அய்யோ போச்சு போச்சு.. உன் அப்பாரு வந்துட்டாரு போல.. சத்தோ கேட்குது.. ஆளை விடு ஆத்தா.. நீ இருக்குற திசைக்கொரு கும்புடு..”

“ஏலே.. ஏலே.. பேச்சிமுத்து.. ஓடாதலே அப்புறோ நீ புகையிழுக்குறதை சித்திட்ட போட்டுக் கொடுத்துடுவேன்..”

“போத்தா.. எங்காத்தா கையால் அடிவாங்குனாளாவது உசுரு மிஞ்சும்.. பெரியப்பாட்ட.. அதே உன் அப்பாருட்ட மாட்டுனேன்.. தொலிய உறிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவாக.. நா வாரேன்.. என்னை விடு ஆத்தா..” 

அந்த ஒத்தையடி மலைப்பாதையில் சரசரவென இறங்கி ஓடினான் பேச்சிமுத்து. போடி வடக்குமலை கிராமம் ஊத்தாம்பாறை புலம், பூஞ்சோலை பகுதியில்  எங்கு நோக்கினும் கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சை நிறத்தில் காட்சியளித்தாள் பூமித்தாய். 

அங்கிருக்கும் மலை உச்சியில் தனது சித்தி மகன் பேச்சிமுத்துவோடு அமர்ந்திருந்தாள். சித்தார்த் அதிரூபன் தான் அவளது கணவனாக அறிந்து மேற்கொண்டு கல்யாண வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். அதனை தடுக்கும் பொருட்டு தற்கொலை நாடகத்தை நிறைவேற்ற இங்கு வந்து அமர்ந்து கொண்டாள். 

அந்தி மாலை நேரத்தில் அவளைத் தேடிக் கொண்டு வந்தவர்கள் வழியில் இருப்போரிடம் விசாரித்து இறுதியாக அவள்‌ இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். கோபத்தில் அவளை நெருங்கினார் ஈஸ்வர். 

“அப்பா.. கிட்ட வராதீங்க.. வந்தா குதிச்சு செத்துடுவேன்..”

“இங்கப்பாரு.. என் மானம் மரியாதையை கெடுக்காம என்கூட வீட்டுக்கு வா.. இல்ல நடக்குறதே வேற..”

“இல்ல.. நா வரமாட்டேன்.. வந்தா அந்த அர்னால்டை கல்யாணம் பண்ணி வச்சுருவீங்க.. எனக்கு அந்த ஆளை சுத்தமாப் பிடிக்கல.. ப்ளீஸ் ப்பா.. நீங்க வேற என்ன சொன்னாலும் கேட்குறேன்.. அவன்கூட கல்யாணம் மட்டும் வேணாம் ப்பா..”

“சின்னப்புள்ள மாதிரி அடம்பிடிக்காத இப்ப நீ கீழ வரல..?”

“அவளை கீழ குதிக்க சொல்லுங்க மாமா..”

“ஆ.. மாப்ள.. நீங்க..?”

“நான் தான் சொன்னேனே.. நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு நியூஸ் வந்துடும்னு..”

“அப்பா.. எனக்கு இவன் வேணாம்.. மீறி என்னை வற்புறுத்தினீங்க.. குதிச்சுடுவேன்..”

“குதிடி… குதின்னு சொல்லுறேன்ல.. எனக்கு ஃப்ளைட் லேட்டானதும் நல்லதுக்கு தான்.. இல்லைனா இப்படி லைவ்வா சூசைட் பண்றதை பார்க்குற பாக்கியம் கிடைச்சுருக்காது.. குதிடி.. டைம் வேஸ்ட் பண்ணாத.. சீக்ரம்.. ஆள்ரெடி டூ லேட்.. பாரு எப்படி இருட்டாகுதுன்னு.. உன் காலுக்கு அடியில பாம்புகூட போகுது.. அதுவா உன்னை கடிக்குறதுக்குள்ள நீயே குதிச்சுடு.. கமான்..”

“என்னது பாம்பா? அய்யோ ஆத்தா..”

துள்ளியவாறு தன் அருகில் வந்தவளை இறுக்கியணைத்தவன் 

“பாம்புக்கு பயந்து பருந்துகிட்ட மாட்டிக்கிட்டியே! சும்மா செத்துடுவேன்னு சீன் போடாம.. கல்யாணம் பொண்ணா லட்சனமா நடந்துக்கோ.. இன்னொரு தடவை இப்படி பண்ணேன்னா.. நானும் கைகட்டி வேடிக்கை பார்த்துட்டுருக்கமாட்டேன்.. மைன்ட் இட்.. ம்ம்.. இப்போ செஞ்சதுக்கு தண்டனை கொடுக்கனுமே என்ன பண்ணலாம்.? ஒரு லிப் டு லிப் கிஸ் கொடுத்துப் போ..”

“நா உனக்கு கொடுக்கனுமா? முடியாது.. என்னை பண்ணுவ?”

“ம்ம்ம்.. என்ன பண்ணுவேனா? இப்படி கீழே தள்ளிவிட்டுடுவேன்..”

தன் அருகில் நின்றிருந்த நளின் தோளைப் பற்றி மலையில் இருந்து கீழே தள்ளிவிட்டான். 

“அய்யோ.. ஆத்தா..”

“அம்மாடி சிவாங்கி..”

கத்திக் கொண்டே கீழே விழுந்தவள்  தரையில் எழுந்து நிற்க அதனை மேலிருந்து பார்த்தான் சித்தார்த் அதிரூபன். 

“என்ன மாப்ள இப்புடி அநியாயமா என் பொண்ணை கீழே தள்ளி கொன்னுட்டீங்களே? அய்யோ சிவாங்கி..”

“யோவ் மாமா.. நீ இப்ப தான் லூசானியா? இல்ல பிறந்ததிலிருந்தே லூசா? பாருயா.. உன் பொண்ணு சேஃப்பா தான் லேண்ட் ஆகிருக்கா.. இத்துணூன்டு ஹைட்லருந்து குதிச்சுருவேன்.. குதிச்சுருவேன்னு சீன் போட்ருக்கா.. நீயும் அதை நம்பி கதறுர.. ஆனா நீ இப்படி அழுகுறதைப் பார்க்க சந்தோஷமாயிக்குயா.. உன் பொண்ணு பண்ற சேட்டைக்கு.. நாளைக்கு காலைலயே கல்யாணம்.. உன் பொண்ணை என் பொண்டாட்டியாக்கி இங்கிருந்து கூட்டிட்டுப் போறேன்..”

“மாப்ள.?”

“நீ உன் வீட்டுல என்ன சொல்லி சமாளிப்பியோ.. எனக்கு தெரியாது.. நாளைக்கு காலைல உன் பொண்ணு எனக்கு பொண்டாட்டி ஆகலைனா? நீ சந்தி சிரிச்சுப் போயிருவ.. ஓகே மாமா.. எனக்கு டையர்டாயிருக்கு.. நா நம்ம பண்ணை வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு காலைல மாப்ளயா வர்றேன்..” 

சிலமணி துளிகள் ஈஸ்வரிடம் பேசியவன் தனக்கே உரிய வேக நடையில் கம்பீரமாக நடந்து சென்றான். அவன் சென்றதும் சிவாங்கியின் அருகில் வந்த ஈஸ்வர் பளீரென்று ஒரு அறைவிட்டார். இதுவரை தன்னை அறைந்திராத தந்தை இப்போது யாரோ ஒருவருக்குக் அறைந்ததும் அதிர்ந்து போய் பார்த்தாள். 

“அப்பா..”

“பொட்டக் கழுத.. உனக்கு எம்புட்டு தைரியமிருந்தா? இப்படி யாருமில்லாத இடத்துலே தனியா வந்து உட்கார்ந்துருப்ப.. தற்கொலை பண்ணிப்பேன்னு என்னையவே மிரட்டுதியோ? இப்ப சொல்லுதேன் கேட்டுக்கோ.. அவந்தே ஓ புருஷே.. இதுல எதாவது கோக்குமாக்குப் பண்ணப் பாத்த.. உன் அப்பனை அன்னைக்கு தான் கடைசியாகப் பார்ப்ப.. இது நா கும்புடுற அய்யனாரு மேல் சத்யம்.. ஒண்ணு உன் கழுத்துல தாலி ஏறனும்.. இல்ல உன் ஆத்தா கழுத்துல இருந்து தாலி இறங்கனும்.. எது நடக்கனும்னு நீயே முடிவு பண்ணிக்கோ.. நட வீட்டுக்கு..”

கதறியழுதவளை தரதரவென இழுத்துக் கொண்டு போய் அறையில் வைத்துப் சூட்டினான் ஈஸ்வரன். மறுநாள் விடியல் அவளுக்கு என்ன கொடுக்க காத்திருக்கின்றதோ? என்ன மிரட்சியுடன் உறங்காமல் இவள் தவிர்த்திருக்க வேட்டையாடும் புலியாக அங்கு உலாவிக் கொண்டிருந்தான் சித்தார்த் அதிரூபன். 

“உன்னை என்னப் பண்ணுறேன்னு பாருடி.? என்னக் கொன்னுடுன்னு என் காலைப் புடிச்சு உன்னை கதறவிடுறேன்டி.. யார்கிட்ட மோதுர? நா சித்தார்த் அதிரூபன் டி.. உன் பழி தீர்த்து என் வெறிய நா தீர்த்துக்கல.. என் அப்பா ராஜதுரைக்குப் பிறக்கலடி நா..” என ஆவேசமாக கூறினான் சித்தார்த் அதிரூபன். 

அடுத்த நாள் காலையில் கூடியிருக்கும் ஊரார் முன்னிலையில் குலதெய்வம் கோவிலில் சித்தார்த் அதிரூபனுடன்  சிவாங்கியை மனைவியாக  பிணைத்து அமைதியான முறையில் திருமணம் செய்து கொடுத்தார் ஈஸ்வர். 

திருமணம் செய்த சிறிது நேரத்திலேயே கட்டிடப் புடவையுடன் அவளை தன்னுடன் அழைத்துச் செல்ல தயாரானான். 

“மாப்ள.. அந்த ஃபோட்டோஸ்..”

“வெறும் கல்யாணம் பண்றதுக்காகவா.. அவ்ளோ பெரிய வேலை செஞ்சு வச்சுருக்கேன்.. உங்களால எனக்கு சில காரியம் ஆகனுமே.. அது முடிஞ்சதும்.. தன்னப்போல ஃபோட்டோஸ் உங்க கைக்கு வந்து சேரும்.. எனக்கு டைம் ஆகுது.. என் பொண்டாட்டிய சீக்ரெட் அனுப்பி வைக்குறீங்களா? நேரமாகுது..”

“இதோ.. மாப்ள..”

உள்ளே சென்ற ஈஸ்வர் தன் மனைவி ராசாமணி தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தவளைப் பிரித்து அவனுடன் அனுப்பி வைத்தார். செல்லும் அவளிடம் அந்த ஃபோட்டோஸ்களை எப்படியாவது எடுத்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். 

‘பெத்தப் பொண்ணை பனையம் வைக்குறளவுக்கு அப்படி என்றிருக்கும் அந்த ஃபோட்டோல.?” என யோசித்தவாறே மீள முடியாத சிறைக்கு செல்ல தயாரானாள் சிவாங்கி. சித்தார்த் அதிரூபனுடன் சேர்ந்து கொல்கத்தா வந்திறங்கினாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *