உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

அத்தியாயம் – 14

“ஏய்.. அதை அங்க வைக்காதீங்க.. இங்க வைங்க.. இதை ஏன் இப்படி போட்டு வச்சுருக்கீங்க.. கடவுளே..” 

அங்கிருந்த அலங்காரங்களை சரிபடுத்திக் கொண்டிருந்தாள் சிவாங்கி. அவள் செல்லும் இடமெல்லாம் சித்தார்த் அதிரூபனின் கண்கள் வண்டென வட்டமடித்தன.

“மூஞ்சப்பாரு.. எங்கப் போனாலும் பே..ன்னு பார்க்குறாரு.. பட்டிக்காட்டான் மிட்டாயை பார்த்த மாதிரி.. ச்சே.. உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்கு..” என முணுமுணுத்துக் கொண்டே திரும்பி பார்த்தவள் அதிர்ந்ததும் ஒரு நிமிடம் தான் மறுநிமிடம் ஓடி வந்தவள், அங்கே நடு ஹாலில் நின்று கொண்டிருந்த சித்தார்த் அதிரூபனை பலம் கொண்ட மட்டும் தள்ளினாள். அவனோடு சேர்ந்து தரையில் உருண்டாள். 

அவர்கள் உருண்டு கொண்டிருந்த நேரம் மேலே மாட்டிக் கொண்டிருந்த அலங்காரவிளக்கு கீழே விழுந்து சில்லென்ற சத்தத்துடன் உடைந்து சிதறியது. கோழி தனது குஞ்சுகளை றெக்கைக்குள் பொதிந்து வைத்திருப்பது போல் தன்னுடைய நெஞ்சோடு இறுக அணைத்திருந்தான். 

விழுந்த சத்தம் கேட்டு அனைவரும் கூடியிருக்க சித்தார்த் அதிரூபனை தன் மேலிருந்து  கீழே தள்ளியவள் எழுந்ததும் கண்களால் அவனது உடலைத் தான் ஆராய்ந்தாள். அவனுக்கு எதுவும் ஆகவில்லை அறிந்த பின்னரே நிம்மதியுற்றாள். 

“விடுங்க.. விடுங்க சார்..” 

இருவரும் எழுந்ததும் விளக்கை அங்கே மாட்டிக் கொண்டிருந்த எலக்ட்ரிஷனை அழைத்து பளார் என அறைந்தாள். அவள் அறைந்ததை பார்த்ததும் சித்தார்த் அதிரூபனின் புருவங்கள் இரண்டும் ஆச்சார்யத்தில் உயர்ந்தன.

“பார்க்குற வேலைய சரியா பார்க்க மாட்ட.. அந்த லைட் இப்போ இவர் தலைல விழுந்திருந்தா? இல்ல வேற யார் தலைலயாவது விழுந்திருந்தா? மூர்த்தி சார் இவனுக்கு உடனே செட்டில் பண்ணி அனுப்புங்க..”

” என்னைய கை நீட்டி அடிக்க நீ யாரு? ஓனர் அவரே எதுவும் சொல்லாம இருக்குறாரு.. உனக்கென்ன வந்தது? வெளியப் போன்னு அவர் சொல்லட்டும்.. நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை..” என அந்த எலக்ரிஷன் கூறவும் திரும்பி சித்தார்த் அதிரூபனை முறைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டாள். 

“மிஸ்டர். மூர்த்தி..”

“சார்..”

“செட்டில் ஹிம் இமீடியட்லி..” எனக் கூறி அவனும் உள்ளே சென்றான். உள்ளே சமையல் அறையில் நின்று அழுது கொண்டிருந்தவளை சட்டென்று பின்னால் இருந்து அணைத்தான். அவளது காதோரமாக முத்தமிட்டு ” ஐ மிஸ் யூ..” எனக் கூறிவிட்டு நிமிடத்துக்குள் வெளியேறினான்.

“இப்போ அவர் வந்தாரா?” 

தனக்குள்ளேயே யோசித்து குழம்பியவள் காதோரமாக தொட்டுப் பார்த்தாள். அவன் முத்தமிட்ட ஈரம் காயாமல் இருந்தது. 

“டேய்.. என்னடா அனுப்புற.. நீ அனுப்புற ஆளுங்க எல்லாம் இப்படி சொதப்புறாங்க.. இனிமே வைக்குற குறி தப்பக்கூடாது..” 

ஃபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார் பத்மாவதி. நிச்சயதார்த்த புடவையை நித்யாவிற்கு அழகாக கட்டிவிட்டிருந்தாள் சிவாங்கி. இயற்கையிலேயே அழகியான நித்யாவிற்கு எந்தவொரு செயற்கை பூச்சும் வேண்டாம் என்று கூறிவிட்டான் அர்ஜுன். 

நித்யாவை அழகாக தயார் செய்து அழைத்து வந்த சிவாங்கியின் மீதே சித்தார்த் அதிரூபனின் கண்கள் பதிந்து மீண்டன. அனைவரின் முன்னிலையிலும் மோதிரங்களை மாற்றிக் கொண்டனர். 

“ஹேய் பொண்டாட்டி.. இன்னைல இருந்து நீ என்னோட பாதி பொண்டாட்டி..”

“பாதி தான்.. மீதியும் ஆகட்டும்.. அதுவரைக்கும் பொறுமையா இருங்க..”

“ஏன்டி.. பீதியாகுற மாதிரி பேசுற?”

“பின்ன உங்கக்கிட்ட வேற எப்படி பேசுறது?”

“அங்கப்பாரு டி உன் அண்ணன்.. அந்த பொண்ணை எப்படி லவ் பண்ணுறான்னு?”

“யாரு.. என்னோட அண்ணா லவ் பண்றானா? அதுக்கு அபியண்ணனை சொல்லுங்க நியாயம்.. அவன் காதல் மன்னன்.. இவன் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்..”

“யாரு.. எதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டா?”

“அய்யோ.. அண்ணா..”

“மாட்னியா?”

“இவ.. இவ தான் மச்சி.. சொன்னா.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல.. நீ ஒரு சாமியாராம்.. வெட்டி முட்டமாம்.. உன் மொகறைக்கு ரொமான்ஸே வராதாம்.. கடைசில நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டியாம்.. உன் ஆருயிர் தங்கையோட ஸ்டேட்மெண்ட்..”

“அய்யோ.. அண்ணா இது எதுவும் நான் சொல்லவேயில்ல.. கடைசியாக சொன்ன அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்ங்குறது மட்டும் தான் நான் சொன்னது.. மத்ததுயெல்லாம் அவனே ஃபீல் பண்ணி சொன்னது..”

“பயபுள்ள போட்டா கொடுக்குற? சாப்பாட்டுல கை வைடி.. எரும புடிங்கி திங்குறேன்..”

“நானாவது எரும.. நீ குரங்குன்னு உன் வாயலயே ஒத்துக்கிட்டப் பாரு..”

“குரங்கு என்னப் பண்ணும் தெரியுமா?”

“இதோ நீ பண்ணுறதெல்லாம் பண்ணும்..”

“போடி.. குள்ளச்சி..”

“அண்ணா.. பாருண்ணா..”

நித்யா சிணுங்கவும் யோசனையில் இருந்த சித்தார்த் அதிரூபன் என்னவென்று அவளைப் பார்த்தான். 

“ஏன் சித்து ஒரு மாதிரி இருக்க? எனி ப்ராப்ளம்?”

“இல்ல.. ஏதோ நடக்கக் கூடாத ஒன்னு நடந்த மாதிரி அனர்த்தமாவே படுது.. என்னன்னு தெரியல.. மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு..”

“நானே கேட்கனும்னு இருந்தேன்.. அபியும் காயுவும் ஏன் வரல?”

“அதான் எனக்கும் புரியல.. இந்நேரம் அவன் வந்திருக்கனும்.. காயுக்கு போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்குறா.. அபிக்கு போன் போட்டா நாட் ரீச்சபிள்னு வருது.. நம்ம ஆளுங்களை கான்டக்ட் பண்ண முடியல.. அங்க என்ன நடக்குதுனே தெரியலடா..”

“டோண்ட் ஒர்ரி.. நம்ம லெட்சுமியம்மாவை அங்க போய் பார்க்க சொல்வோம்.. ரிலாக்ஸ்டா.. ஏன் சித்து.. திடீர்னு லைட் விழுந்துச்சா? இல்ல யாராவது வேணும்னு பண்ணாங்களா?”

“ம்ம்ம்.. கை தவறி தான் கீழே போட்டிருக்காங்க..”

“ஆனா.. இதை சும்மா விடாத மச்சி..”

“ஏற்கனவே செக்யூரிட்டிய டையிட் பண்ணிட்டேன்..”

“மச்சி.. பேச்சுலர் பார்ட்டி எப்ப வைச்சுக்கலாம்னு கேட்குறாங்க.. ப்ரெண்ட்ஸ் எல்லோரும் ஆவலா வெயிட்டிங் டா..”

“அதோ அந்த சைடு அரேன்ஜ் பண்ணிருக்கோம் டா..”

“இதை முன்னாடியே சொல்ல மாட்டியா?”

“நான் முன்னாடி சொல்றது இருக்கட்டும்.. நீ உன்னோட பின்னாடி பாரு..”

“யாரை?” என்றவாறு திரும்பிய அர்ஜுன், தன் முன்னே காளியாக முறைத்துக் கொண்டிருந்த நித்யாவைப் பார்த்து கப்பென்று வாயை மூடிக் கொண்டான். 

பார்ட்டி முடிந்ததும் தனதறைக்குள் வந்தவன் அதிர்ந்து போனான். அவனது அறைக்குள் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தாள் சிவாங்கி.

“ஏய்.. வாட் ஹேப்பென் டி? ஏன் இப்படி நடக்குற?”

“அது.. நான்.. குடிக்க ஜுஸு கேட்டேனா.. கொய்யால குடிக்க ஜூஸு தானே கொடுக்கனும்.. எதையோ பிக்ஸ்.. ச்சீ மிக்ஸ்.. பண்ணி கொடுத்துட்டான்.. தலையெல்லாம் சும்மா கிர்னு சுத்துது.. இங்கப்பாரு.. இந்த பாட்டில் தான்.. கைல வைச்சுருந்தான்.. அவனை தேடி பின்னாடியே வந்தேனா.. இந்த ரூம்க்கு வந்துட்டேன்..”

“அடிப்பாவி.. தள்ளாடுற அளவுக்கா குடிச்ச?”

“இல்ல.. முமுமு..தல்ல்ல்ல.. ம்ம்ம்.. அஞ்சு.. இல்ல.. ஆஆஆஆறு க்ளாஸ்ஸ்ஸ் தான் குடிச்சேன்.. அப்புறம் சுருசுருன்னு டேஸ்டா இருந்துச்சா.. பாட்டிலையே தூக்கிட்டு வந்துட்டேன்.. நீயும் க்க்க்குட்ட்டிச்சுப் பாரு மாமே.. செம கிக்காயிக்கும்..”

அவள் அருகில் வந்தவன் மேலே தடுமாறி விழுந்தவளை பூமாலையாக கையில் ஏந்திக் கொண்டான். 

“எங்க மாமு தூக்கிட்டுப் போற?”

“ம்ம்ம்.. வெளில வீசுறதுக்கு..”

“அதைத்தான் நீ ஏற்கனவே செஞ்சுட்டியே.. என்னை கசக்கி தூக்கி எறிஞ்சுட்ட.. அன்னைக்கு எப்படி வலிச்சது தெரியுமா? அதை விட நீ என்ன வேசின்னு சொன்னல.. அது தான் ரொம்ப வலிச்சது.. எனக்கொன்னு புரியல மாமு.. பொண்ணுங்க கிட்ட மோதி ஜெயிக்க முடியலைன்ன உடனே அவளோட கேரக்டரப் பத்தி தப்பா சொல்றது தப்பில்லையா மாமு..” என கேள்வி கேட்டவள் தன் தாடையில் விரல் வைத்து யோசித்துப் பார்த்துவிட்டு மீண்டும் பேசினாள்.


“ஆஆஆ.. நான் கண்டுபிடிச்சுட்டேன்.. ஏன்னா அது சொன்னாத்தானே பொண்ணுங்க உடைஞ்சு போவாங்க.. அவங்க வீக்னெஸ்ஸ யூஸ் பண்ணிக்குறீங்க.. நான் என்ன தப்பு பண்ணேன்? காலேஜ்கு போகக் கூட எங்கம்மா துணைக்கு வருவாங்க.. ஆனா உன்ன கட்டுனதுக்கு அப்புறம் மூணாறு வரைக்கும் தனியா வந்துருக்கேன்.. சாதனையில்ல.. சிவாங்கி யூ ஆர் க்ரேட் டி..”

“ஓகே.. ஓகே.. சிவாங்கி.. தூங்கு..”

“ஆனா ஒன்னு மாமே.. என்ன தான் உன்னைய விட்டு ரொம்ப தூரமா போகனும்னு நினைச்சாலும்.. உனக்கேதாவதுன்னா உள்ள ஏதோ பதறுது..”

“டூ யு லவ் மீ?”

“ம்ம்ம்.. தெரியல மாமே.. தெரியலையே.. நீ சிரிக்க மாட்டேங்குற.. கொஞ்ச மாட்டேங்குற.. பாசமாயிருக்க மாட்டேங்குற.. இப்படி கட்டிப்புடிச்சுக்க மாட்டேங்குற.. ஆனா உன்னை தான் எனக்கு புடிச்சுருக்கு.. ஏன்?”

“நீ என்னைய லவ் பண்றதால..”

“நோ.. நோ.. இதோ இருக்குப்பாரு.. இந்த மஞ்சக்கயிறு.. இதை நீ என்னோட கழுத்துல கட்டுனதால.. மேஜிக்.. மாமே.. மேஜிக்.. மஞ்சக்கயிறு மேஜிக்..”

“எனக்குள்ள அந்த மேஜிக் வேலை செய்யலேயே..”

“இங்கப்பாருடா.. மனுஷனா இருந்தா வேலை செய்யும்.. ரோபோக்கெல்லாமா வேலை செய்யும்.. நீயெல்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்ட..”

“எதுக்கெல்லாம்.. இதுக்கா?”

“ஏய்.. ச்சீ.. எச்சி பண்ணாத.. கன்னம் அழுக்காகிரும்.. இன்னைக்கு முத்தா கொடுக்குற.. அன்னைக்கு ஏன்டா கடிச்சு வைச்ச.. கிழவி உனக்கு கறியே வாங்கி போடாதா?”

“நாய்னு சொல்லாம சொல்ற..”

“ச்சீ.. ச்சீ.. நீ நாயெல்லாம் இல்ல.. கழுகு.. என்னை கொத்தி கொத்தி தின்ன கழுகு.. உனக்கு என்னோட உடம்பு மட்டுந்தானே தேவை பட்டுச்சு.. உள்ளுக்குள்ள இருக்குற மனசை நீ பார்க்கவேயில்ல..”

“மறைச்சு வைச்சுருந்தா எப்படி பார்க்குறது?  கண்ணுக்கு தெரியாத பொருள் இருக்குதா? இல்லையான்னு எப்படி தெரியும்?”

“டேய்.. விடு பேட் டச் பண்ணாத..”

“ஏன்டி தலையை பிடிச்சு சரியா படுக்க வைச்சா.. அது உங்க ஊர்ல பேட் டாச்சாடி? பேட் டச்சுன்னா என்னன்னு தெரியுமா?”

போதையில் இன்னும் மெருகேறியிருந்தவளின் மீது அவனது விரல்கள் சுதந்திரமாக விளையாடியது. முதல் முறை வன்மத்தை அவளிடம் நிலைநாட்டியதற்கு தன்னையே நொந்தவன்,  இம்முறை அவளை பூவை விட மென்மையாக கையாண்டான். அவளது உடல்மொழியறிந்து அவளை ஆண்டுமுடித்தான். 

இருவரும் கண்ணயர்ந்த போது நடுசாமம் ஆகியிருந்தது. விடியற்காலையில் சித்தார்த் அதிரூபனின் போனிற்கு வந்த அழைப்பை எடுத்து காதில் வைத்தவன், அதில் வந்த செய்தியை கேட்டு முதல் முறையாக என்ன செய்வதென்று அறியாது கலங்கி நின்றான். 

***************************************************

“என்னயிது? இந்த அத்தான் ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறாரு.. அப்படி எங்க தான் போயிருக்காரோ?”

அபிமன்யு அதிரூபனின் கைப்பேசிக்கு நூறாவது முறையாக அழைத்துப் பார்த்தவள் அவன் அதனை எடுக்காததால் சோர்ந்து போனாள். 

திடீரென ஊருக்குள் சலசலப்பு ஏற்படவே என்னவென்று வெளியே சென்று எட்டிப் பார்த்தாள். அதில் இருந்த ஒருவன்

“நம்ம காட்டுல கிழக்கே இருக்குற திசைல காட்டுத்தீ பத்திகிச்சு.. அங்க வந்த வெளிநாட்டுக்காரவ அப்புறம் நம்ம பெரியசாமி, ஈஸ்வர் அப்புறம் அபிமன்யு தம்பி எல்லோரும் அதுல மாட்டிக்கிட்டாங்க.. யாரும் உசுரோட திரும்பி வர வாய்ப்பேயில்ல..” 

அதை கேட்டதும் பதறிப்போன காயத்ரி அந்த காட்டை நோக்கி ஓடினாள். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அவ்விடமே புகைமண்டலமாக காட்சியளித்தது. 

“அபிபிஇஇஇஇஇ.. அபிபிஇஇஇஇஇ..”

சத்தமாக அந்த காட்டுப்பகுதியில் கத்தினாள். 

“பேபிபிஇஇஇஇ.. பேபிபிஇஇஇஇ.. திரும்ப வந்துடு பேபிபிஇஇஇ.. எனக்கு நீ வேணும்.. அய்யோ அம்மா.. அபிஇஇஇஇ.. அபிஇஇஇஇ..”

“உள்ள போகாதீங்கம்மா.. உள்ள எல்லாமே எரிஞ்சுடுச்சு.. யாருமே உயிர்பிழைக்கல.. சொன்னா கேளுங்க..”

“இல்ல.. இல்ல.. நீங்க பொய் சொல்றீங்க.. என்னோட அபிக்கு எதுவும் ஆகிருக்காது.. அபிஇஇஇ.. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு பேபி.. விளையாடாத பேபி.. வந்துரு.. ப்ளீஸ்..”

என கூறி கதறியவளை ஆற்றுவோரோ தேற்றுவோரோ எவருமில்லை. 

எரிந்த காட்டின் முன் தன் கால்களை மடக்கி அமர்ந்தவள் கதறியழுத காட்சி  கல்லையும் கரைக்கும் படியாக இருந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *