உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே
அத்தியாயம் – 21
“டாக்டர்.. அவக்கூட நானும் இருக்கலாமா?”
“ஓ.. எஸ்.. தாராளமா..”
மருத்துவரிடம் அனுமதி பெற்று பிரசவ அறைக்குள் வந்தான் சித்தார்த் அதிரூபன்.
“ஆஆஆஆஆ.. அம்மா.. வலிக்குது.. வலிக்குதும்மா..”
“சிவாங்கி.. அழாதடி.. கொஞ்சம் பொறுத்துக்கோ..”
“டேய்.. எருமை.. தடிமாடு.. உன்னால தான்டா எனக்கிந்த நிலைமை.. போ டா.. என் கண்ணு முன்னால நிக்காத போ..”
“அழாதடி.. நா.. நான் போயிறேன்.. உன் வாழ்க்கைய விட்டு மொத்தமா போயிறேன்.. நீ.. நீ.. அமைதியா.. டென்ஷன் ஆகாம இருடி.. ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பசங்க வெளிய வந்துடுவாங்க..”
“உஉஉஉன்னோட ஆசைக்காக எனக்கிந்த வேதனையை கொடுத்த.. உன்கூட இருந்து இப்படி வேதனை அனுபவிக்குறதுக்கு செத்து போறேன்.. அய்யோ அம்மா ஆஆஆஆ.. ரொம்ப வலிக்குதே..”
“ஸாரி.. ஸாரி.. வெரி ஸாரி.. இப்படி நீ கஷ்டப்படுவேன்னு தெரிஞ்சுருந்தா.. நா.. நான்..”
“போடா.. வேலைய பார்த்துகிட்டு.. எனக்கு நாக்கு வறளுது.. தண்ணி வேணும்..”
“டாக்டர் அவளுக்கு தண்ணி கொடுங்களேன்..”
“நோ சார்.. அனஸ்தீசியா கொடுக்கப்போறோம்.. சோ எதுவும் கொடுக்கக்கூடாது..”
“யோவ்.. நீயெல்லாம் பெரிய பிஸ்தான்னு சொல்லிக்காத.. பொண்டாட்டிக்கு ஒரு சொட்டு தண்ணி வாங்கி கொடுக்க முடியலை.. வாய் பேசுற.. ஆஆஆஆஅம்மா..”
“டாக்டர் அனஸ்தீசியா கொடுக்குறதெல்லாம் இருக்கட்டும்.. அவ வாய மூடுற மருந்துருக்கா?”
“ஸாரி.. அப்படி ஒன்னு இனிமே தான் கண்டுபிடிக்கனும்..”
“டாக்டர் எப்போ ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணுவீங்க.. அவ கதறுரதை என்னால் பார்க்க முடியலை..”
“பிரசவம்னா அப்படித்தான் இருக்கும்.. குழந்தைங்க தலை திரும்பியிருக்கு.. இன்னும் கொஞ்சம் அவங்க புஸ் பண்ணா குழந்தைங்க வெளியே வந்துருவாங்க.. அப்படி அவங்களால முடியாத பட்சத்தில நாம ஆப்ரேஷன் பண்ணலாம்.. ஆனா அதைக்கூட ஏத்துக்குற நிலைமைல அவங்க உடல்நிலை இப்போ இல்ல..”
“ஆஆஆஆஆ அம்மா.. அம்மா..”
“சிவாங்கி.. புஸ்.. புஸ்.. புஸ் பண்ணுமா..”
“என்னால முடியல.. ரொம்ப.. ரொம்ப வலிக்குது..”
அவளது கையைப் பிடித்திருந்த சித்தார்த் அதிரூபனின் கையில் அவள் கொடுத்த அழுத்தத்தில் இருந்து அவளுக்கு எவ்வளவு வலிக்கும் என்பதை உணர்ந்து கொண்டான்.
வலியில் தனது நெஞ்சை தூக்கி தூக்கிப்போட்டு தலையை இங்கும் அங்கும் அசைத்தவளின் உடலில் வேர்வை ஆறாக ஓடியது.
“அம்மாஆஆஆஆஆ சத்தியமா முடியல..”
“டாக்டர்.. அவ கத்துறதை பார்க்க முடியல.. ஆப்ரேஷன் பண்ணிடுங்க ப்ளீஸ்..”
“மிஸ்டர். சித்தார்த் அதிரூபன்.. அவங்க இங்க வரும் போது அம்பது பர்ஸண்ட் தான் பிழைக்க சான்ஸ் இருந்துச்சு.. பட் இப்போ உங்க குழந்தைங்க அவங்களாவே இந்த உலகத்தை பார்க்க வழி உண்டாக்கிருக்காங்க.. நீங்க உங்க வொய்பை கொஞ்சம் ஒத்துழைக்க சொன்னீங்கன்னா.. தாயும் சேயும் சேஃவா இருப்பாங்க.. ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் தி சிட்டுவேஷன்..”
“இங்கப்பாரு.. பப்பு.. குழந்தைங்க பிறக்கட்டும்.. அதுக்கு அப்புறம் நீ என்னை என்ன வேணா பண்ணு.. நாலு அடிகூட அடிச்சுக்கோ.. இப்போ நம்ம குழந்தைங்கள மட்டும் நினைச்சுக்கோடி.. பனிக்குடம் உடைஞ்சுடுச்சாம்.. இன்னும் கொஞ்ச நேரம் பசங்க உள்ள இருந்தாலும் அவங்களுக்கு மூச்சு முட்டும் டி.. அவங்களுக்கு ஏதாவது ஆகுறதுக்குள்ள வெளியக் கொண்டு வரனும்.. ஆப்ரேஷன் பண்றளவுக்கு உன் உடம்புல தெம்பில்லன்னு சொல்றாங்க.. எனக்கு என்னப் பண்றதுன்னு தெரியல டி.. பதினொரு வயசுல அம்மா, அப்பாவை இழந்தேன்.. அப்போக் கூட நான் அழுததில்ல.. இப்போ அழுகவருதுடி.. நீ என்னை விட்டு பிரிஞ்சு போயிடுவன்னு சொல்லுறாங்க.. ரொம்ப ரொம்ப பயமாயிருக்கு.. திரும்பி வந்துருடி.. பெத்தவங்க இல்லாம வாழுற சாபம் என்னோட போகட்டும்.. நம்ம குழந்தைங்களுக்கு வேண்டாம் டி.. ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுடி.. உன்னால முடியும்..”
அந்த வலியிலும் அவனது முகத்தை உற்று பார்த்தவளுக்கு அவனது முகத்தில் இருந்த கண்ணீரோ அன்போ தெரியவில்லை. மாறாக அவன் தன் தந்தையை ஏமாற்றி பழிவாங்கிய கொலைகாரனாக தான் தெரிந்தான்.
“எங்கப்பாவை நீ கொன்னுருக்கக்கூடாது.. ஆஆஆஆஆ அம்மா.. அவர்.. உனக்கு என்னப் பண்ணார்.. ஆஆஆஆஆ அம்மா.. ம்ம்ம்..மா.. உங்க அம்மா லவ் பண்ணி கல்யாணம் பண்ணதுனால தானே வீட்டுல சேர்த்துக்க மாட்டேன்னு.. சொன்னாரு.. ஆஆஆஆஆ ம்ம்ம்..மா.. அவங்க ஆக்ஸிடென்ட்ல செத்துப் போனா.. அதுக்கு இவர் என்ன பண்ணுவாரு? நீ செஞ்சது பாவம்.. ஆஆஆஆஆ அம்மா.. நீ செஞ்ச பாவத்துக்கு யார் தண்டனை கொடுக்குறது..”
“நீ.. நீ.. என்ன தண்டனை கொடுத்தாலும் நான்.. நான்.. அதை ஏத்துக்குறேன் டி.. நீ மட்டும் என்ன விட்டுட்டு போயிடாதடி..”
“அது தான் உனக்கு தண்டனை.. ஆஆஆஆஆ அம்மா.. நான் நம்ம குழந்தைய பெத்ததுக்கப்புறம் நீ என்னை விட்டு போயிடனும்.. உன் மூஞ்சில முழிக்கவே பிபிபி பிடிக்கல.. ஆஆஆஆஆ அம்மா..”
“கண்டிப்பா குழந்தை பிறந்ததும் உன் கண்ணு முன்னாடி வந்து நிற்க மாட்டேன் டி..”
“சசசசத்தியமாஆஆஆஆ..”
“சத்தியமா.. உன் முன்னாடி வரமாட்டேன்.. இன்னும் கொஞ்சம்தான்.. அப்படித்தான் புஸ்.. புஸ்..”
தனக்குள் இருக்கும் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி மூச்சை உள்ளே இழுத்து வயிற்றில் கீழ் நோக்கி அவள் அழுத்தம் கொடுக்க வீல்லென்ற சத்தத்துடன் தேவதை வந்து பிறந்தாள். ரத்தம் தோய்ந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி அவன் கையில் கொடுத்தனர். உலகையே ஆளும் வல்லமை படைத்த அஞ்சா நெஞ்சனுக்கு அச்சிறு பிச்சை தூக்க கை நடுங்கியது. பூவை விட மென்மையான தனது பூமகளை கையில் ஏந்தி நெஞ்சோடு அணைக்கையில் மீண்டும் சிவாங்கியின் அலறல் சத்தம் கேட்டது.
“ஆஆஆஆஆ அம்மா.. திரும்பவும் வலிக்குதே.. ஏன் டாக்டர் குழந்தை பிறந்ததுக்கப்புறமும் வலிக்குமா? ஆஆஆஆஆ ம்ம்ம் மா.. வலிக்குதே..” என அலறியவளின் குரல் கேட்ட சித்தார்த் அதிரூபன் தனதருகில் இருந்த நர்ஸிடம் தனது ராஜகுமாரியை சுத்தப்படுத்துவதற்காக கொடுத்தான்.
“ஆஆஆஆஆ.. என்ன என்னடா பண்ணி தொலைச்ச.. ரொம்ப வலிக்குதே..”
“இன்னும் கொஞ்சம் புஸ்.. பண்ணுடி..”
“எத்தனை தடவ டா புஸ் பண்ண சொல்லுவ?”
“இன்னும் கொஞ்சம் டி ப்ளீஸ்.. ப்ளீஸ்..”
அவன் கூறிய மாதிரியே மீண்டும் மீண்டும் மூச்சை அடக்கி கீழ் நோக்கி அழுத்தம் கொடுத்தாள். அவளது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தைரியமளித்தான் சித்தார்த் அதிரூபன். அடுத்த பதினைந்து நிமிடத்தில் வீல்லென்ற சத்தத்துடன் சிங்கக்குட்டியாய் அப்படியே சித்தார்த் அதிரூபனை உரித்து வைத்து பிறந்தான் சித்தார்த்தின் ராஜகுமாரன். தனது சாம்ராஜ்யத்தை கட்டியாளப் பிறந்த ராஜகுமாரனை கையில் ஏந்திய நொடி அவனது மேனி சிலிர்த்தடங்கியது. பிறந்ததும் துருதுருவென இங்கும் அங்கும் கண்ணை உருட்டிப் பார்த்த அந்த குறும்புக்காரனை மிகவும் பிடித்தது. குழந்தையின் அழகில் லயித்திருந்தவனின் கவனத்தை கலைத்தது சிவாங்கியின் அலறல் சத்தம்.
“அய்யோ அம்மா.. என்னால முடியல.. எத்தனை பிள்ளடா கொடுத்த? எருமை.. எருமை.. கொடுத்த நீ கல்லு மாதிரி நிற்குற.. இதுல கொஞ்சங்கூட சம்பந்தமில்லாத எனக்கு உயிர் போயி உயிர் வருது.. ஆஆஆஆஆ அம்மா.. திரும்பவும் வலிக்குதே.. அடேய்.. இந்த கொடுமைக்கு என் அப்பாவோட சேர்த்து என்னையும் கொன்னுருக்கலாம்.. ஆஆஆஆஆ வலிக்குதே..”
“பப்பு.. ப்ளீஸ்.. இன்னும்..”
“தயவு செய்து வாய துறக்காத.. அதே டயலாக்கை தானே சொல்லப்போற.. இன்னும் கொஞ்சம் தான்.. புஸ்.. புஸ்.. அதானே.. எனக்கு கண்ணை இருட்டிட்டு வருது.. முடியல..” எனக் கூறியவாறே மயக்கமடைந்தாள் சிவாங்கி.
“பப்பு.. பப்பு.. சிவாங்கி.. சிவாங்கி.. டாக்டர்.. இவ.. மயங்கிட்டா..”
“ஓ.. காட்.. நர்ஸ்.. ” என செவிலியரை அழைத்த மருத்துவர் சிவாங்கியின் வயிற்றில் கை வைத்து கீழ் பக்கமாக குழந்தையை வெளியேற்ற அழுத்தினார். அப்போது குழந்தையை வெளியே எடுக்க ஃபோர்செப்ஸ் ஆயுதம் பயன்படுத்தி சித்தார்த் அதிரூபனின் ஆண்மகவை வெளியே எடுத்தனர். வெளியே வந்த அச்சிறு தேவமகன் அச்சு அசல் சித்தார்த் அதிரூபனை உரித்து வைத்து பிறந்திருந்தான். இளைய ராஜகுமாரர்கள் இருவரும் அச்சு அசல் சித்தார்த் அதிரூபனின் ஜாடையில் ஒரே மாதிரியாக இருந்தனர்.
தனது மகன்களையும் மகளையும் சுத்தப்படுத்துவதற்காக செவிலியரிடம் கொடுத்தவன், மயக்க நிலையில் கண்மூடிக் கிடந்த சிவாங்கியின் அருகே வந்தான். உலர்ந்து காய்ந்து போன அவளது மெல்லிய அதரங்களின் மீது மென்மையாக தன் இதழை பொருத்தி முத்தமிட்டான்.
“தாங்க்ஸ் டி.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.. எனக்காக.. எனக்கே எனக்காக மூணு உயிர்களை கொடுத்துருக்க.. உன்னை பலவந்தம் படுத்துனது மட்டும் தான் நான் செய்த தப்பு .. எந்த பொண்ணாலும் மன்னிக்க முடியாத தப்பு தான்.. அதுக்காக என்னை மன்னிச்சுரு.. ஆனா உன் அப்பாவை கொன்னதுக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன்.. நீ என்னை விட்டு விலகிப் போகனும்னு தானே ஆசப்பட்ட.. நானே உன்னை விட்டு விலகிப் போறேன்.. என்னோட குழந்தைகள என்கூட எடுத்துட்டுப் போறேன்.. இனிமேலாவது உனக்கு பிடிச்ச மாதிரி நீ வாழு.. உன் வாழ்க்கையில இனிமே நான் குறுக்கே வரமாட்டேன்.. ”
அவளது நெற்றியில் முத்தமிட்டவன் ஆசையாக அவளது முகத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
சிவாங்கியின் தாயையும் அப்பத்தாவையும் அழைத்து பேசினான். தன் குழந்தைகளுக்கு இன்னும் மூன்று மாதங்கள் தாய்பால் கொடுத்தப் பிறகு அவள் எங்கு செல்ல விருப்பப்படுகிறாளோ அங்கு அனுப்பி வைப்பதாகவும், அவளது பாதுகாப்பிற்காக அவர்களும் அவளுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான்.
இதற்காக சிவாங்கியை திட்டவோ அடிக்கவோ கூடாதென்று அவர்களுக்கு கட்டளையிட்டான். அதே சமயம் சாந்தியின் அக்கா வீட்டில் பத்திரமாக இருந்த காயத்ரியும் பெண்மகவை பெற்றெடுத்தாள். ஆகையால் அவளைக் காண அபிமன்யு அதிரூபன் அங்கு சென்றிருந்தான். கார் விபத்தினால் அர்ஜுனிற்கு கை கால்களிலும், கழுத்திலும் அடிபட்டு சில எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தது. அதிர்ச்சியில் மயங்கியிருந்த நித்யாவிற்கு முழிப்பு வந்ததும் அர்ஜுனின் நிலையைப் பற்றி கூறினான் சித்தார்த் அதிரூபன். அவனது கண்திறப்பிற்காக மருத்துவமனையே இருப்பிடமாக அங்கேயே இருந்துவிட்டாள்.
அலுவலகம், வீடு மற்றும் மருத்துவமனை என சலிக்காமல் அலைந்தான் சித்தார்த் அதிரூபன். கண்விழித்ததும் தன் குழந்தைகளைப் பற்றி கேட்டவளிடம் சித்தார்த் அதிரூபன் கூறியதாக தாய்பாலுக்காக மட்டுமே குழந்தைகள் வழங்கப்பட்டன. தன் மார்பை முட்டி பால் அருந்தும் சிசுக்களின் பிஞ்சு மேனியை வருடிக் கொடுத்து தன் ஆற்றாமையை மனத்திற்குள் புதைத்துக் கொள்வாள்.
ஒரு வாரம் கழித்து அவளையும் குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர். சிவாங்கியின் தாயும் அப்பத்தாவும் அவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டனர். அவள் கேள்வி கேட்டால் அதற்கு மட்டுமே பதில் அளித்தனர். பால் அருந்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகள் சித்தார்த் அதிரூபனின் அறையில் அவனுடனேயே இருந்தனர்.
குழந்தைகளே அவனது உலகமாயிற்று. அன்று பிரசவத்தின் போது கடைசியாக அவனை பார்த்தவள் தான். அதன்பிறகு அவனது முகத்தை அவள் பார்க்கவில்லை என்பதைவிட அவள் பார்க்கவென அவன் தனது முகத்தை காட்டவில்லை. அவள் அவனை பார்க்கவில்லையே தவிர அவன் அவளை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
தோட்டத்தில் நடை பயிலும் போதும், கோயிலுக்கு செல்லும் போதும் அவனது கண்கள் அவள் அறியாது வருடிவிட்டு செல்லும். இன்னும் அவளது மனதில் குழப்பமே மிஞ்சி இருந்தது. குழந்தை பிறந்த மூன்றாவது மாதம் சிவாங்கியின் பெட்டிகள் அடுக்கப்பட்டன.
கோயிலுக்கு சென்று வீட்டிற்கு வந்தவளிடம் அவள் எங்கு செல்ல விருப்பம் என்று அவள் தாய் கேட்க அடுத்த நிமிடம் வெடிக்கத் தொடங்கினாள் சிவாங்கி.
“யாரை கேட்டு இதையெல்லாம் எடுத்து வைச்சீங்க? என் பிள்ளைங்க இல்லாம நான் இங்கிருந்து போகமாட்டேன்.. ஏம்மா அந்த மனுஷனுக்கு தான் அறிவில்ல.. உனக்குமா அறிவில்ல.. பெத்த தாயை விட்டு பிள்ளைங்கள பிரிக்கலாமா? நீயும் ஒரு பிள்ளைய பெத்து வளத்தவ தானே.. ஒரு தாயோட தவிப்பு உனக்கு தெரியாது? ஓ.. பணம் காசை பார்த்த உடனே உனக்கும் பாசம் மறந்து போச்சோ.. நீயெல்லாம் தாயா? பெத்தப் பொண்ணு இப்படி கதறுறேன்.. சிலை மாதிரி நிற்குறியே..” என சிவாங்கி கத்திய அடுத்த நொடி அவளது கன்னத்தில் அறைந்திருந்தார் அவளது அன்னை.
