உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

அத்தியாயம் – 2

“அய்யோ இந்த கொடுமைய கேட்க ஆளில்லயா? சின்ன வயசுலருந்து இவனுக்கு அவ.. அவளுக்கு இவன்னு சொல்லி சொல்லி வளர்த்துட்டு.. நாங்க வெளியூரு போன நேரத்துல சத்தமில்லாம பணக்காரனுக்கு பொண்ணை கொடுத்துட்டியே.. ஒரு நிமிஷம் இந்த தங்கச்சியையும் உன் மருமவனையும் நீ நினைச்சே பார்க்கலயா? இனம் இனத்தோடு தான் சேரனும்.. நம்ம ரத்தம் நம்ம இனரத்தத்தோட தான் கலக்கனும்னு வீரவசனமெல்லாம் பேசுனியா? அத்தனையும் நடிப்பா? ஊருக்கொரு நியாயம்.. உனக்கொரு நியாயமா? ஏத்தா.. நீயாவது சொல்லிருக்க கூடாதா?”

“நான் சொல்லலைன்னு நீங்க கேட்டீங்களா மதினி? எம்புட்டு தடவை இந்த சம்பந்தம் வேண்டாம்னு தலப்பாடா அடிச்சுக்கிட்டேன்னு.. உங்க அண்ணனையே கேளுங்க.. நிச்சயம் முடிஞ்ச அடுத்த நிமிஷமே எங்க கண்ணுல முன்னமே என் பொண்ணுக்கு முத்தம் கொடுத்தவனை நம்பி கல்யாணம் பண்ணி வச்சுடாதீங்கன்னு எம்புட்டு கெஞ்சுனேன் தெரியுமா? உங்க அண்ணே தான் யார் பேச்சையும் கேட்க மாட்டாகளே.. பொட்டச்சி நான் மட்டும் தனியா நின்னு எப்படி நிறுத்துவேன்? கேள்வி கேட்டா பொட்டக்கோழி கூவ பொழுது விடியாது.. போய் மூலைல உட்காருன்னு என் வாயை அடைச்சுட்டாரு.. இப்படி ஊர் பேர் தெரியாத ஒருத்தனுக்கு யாரை நம்பி நம்ம பொண்ணை கூட அனுப்பி வச்சாருன்னு தெரிலயே.. பெத்த வயிறு பத்தி எரியுதே..”

“ஏய்.. ச்சீ.. வாயமூடு.. இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்புடி ஒப்பாரி வைக்குறவ? அந்த புள்ளயும் நம்ம இனம்தே.. அதேன் கூட நம்ம லெட்சுமி வந்துச்சுல்ல?”

“ஆமா.. லெட்சுமி கூட வந்தா தான்.. கூட வந்ததுனால அவ ஒன்னும் அம்மாயில்லையே.. அவ உங்களுக்கு தங்கச்சி முறையாயிருக்கலாம்.. ஆனா அவ சொன்னதுக்காக நம்ம ஒரே பொண்ணை இப்புடியா தூக்கிக் கொடுக்கனும்.. ஏதோ வேண்டா வெறுப்பா பிள்ளை பெத்து கண்டாமிருகம்னு பேரு வைச்ச மாதிரி.. வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ணி வச்சுருக்கீங்க.. பேருக்குதே காலேஜ் போய் படிச்ச பிள்ள.. ஆனா ஒரு குறுவாடும் தெரியாது.. காலேஜ்கே என்னைய துணைக்கு கூப்புடுவா.. அவப் போய் பாஷை தெரியாத ஊருக்கு அனுப்பி வைச்சுருக்கீங்க..”

“இந்தாடி கமலம்.. உனக்கு வர வர வாய் ரொம்ப அதிகமாகுது.. அவளை என்ன யாரோ ஒருத்தேங் கூடவா அனுப்பி வைச்சேன்? அவள கட்டிகிட்டவன் கூடத்தானே அனுப்பி வைச்சுருக்கேன்.. வாழப் போறப் புள்ள நல்லா வாழட்டும்னு வாழ்த்துவியா.. அது விட்டுட்டு இப்புடியா ஒப்பாரி வைப்ப?”

“நிறுத்துண்ணே.. எனக்கொரு நியாயத்தை சொல்லிட்டு நீயும் மதினியும் எப்படி வேணா சண்டை போட்டுக்கோங்க..”

“என்ன நியாயம்?”

“என்ன நியாயம்னா கேட்குற? இதோ நிக்குதானே ஏ மவே ராஜபாண்டி.. இவனுக்குதே ஓ மவள கொடுக்கப் போறேன்னு வாக்கு கொடுத்த.. அப்படியிருக்குறப்ப எப்படி வேத்தாளுக்கு உன் மவள கட்டிக்கொடுப்ப? எனக்கு நீ நியாயஞ் சொல்லல நாளைக்கு பஞ்சாயத்தைக் கூட்டி ஓ மானத்தை சந்தி சிரிக்க வைச்சுப்புடுவேன் பார்த்துக்க..”

“ஏய்.. என்ன வாய் நீளுது..” என கத்தியவாறே எழுந்து வந்த ஈஸ்வர் தனது தங்கை சிந்தாமணி கன்னத்தில் பளீரென்று ஒரு அறைவிட்டார். 

“என்ன என்னவே கேள்வி கேட்குற அளவுக்கு பெரிய மனுஷியாகிட்டியா? நாயே! நா குடிச்ச எச்சிப் பாலை குடிச்சு வளர்ந்த கழுதை.. எனக்கெதிரா பஞ்சாயத்தை கூட்டுவேன்னு சொல்ற.. செத்துப் போடி.. செத்துப் போடி..” 

கீழே விழுந்திருந்த சிந்தாமணியில் காலிலும் வயிற்றிலும் எட்டி உதைத்தார் ஈஸ்வர். 

“அய்யோ.. விடுங்க.. விடுங்க.. உங்களுக்கென்ன வெறிப்பிடிச்சுருக்கா.. இப்புடி அடிக்கிறீங்க?” என்றவாறே ஓடி வந்து தடுத்தார் கமலம், ஈஸ்வரின் மனைவி.

“தட்டி கேட்க ஆளில்லாத தைரியத்துல தானே இப்புடி என்னைய அடிக்குற.. என் புருஷன் வேணா என்னைய விட்டுட்டு ஓடிப் போயிருக்கலாம்.. என் பையன் வருவான்.. அவேங்கிட்ட உன்னோட ஜம்பம் எல்லாம் பழிக்காது.. அவனே வந்ததும் உன்னையும் உன் குடும்பத்தையும் பஞ்சாயத்துக்கு இழுத்து நாறடிக்கல.. நான் ராஜபாண்டிக்கு ஆத்தாயில்ல.. மதினி இப்பவே உன் புருஷன் நல்லாப் பார்த்துக்க.. என் புள்ள வந்தான்? என்னைய அடிச்சு உதைச்ச கையையும் காலையும் ஒடிக்காம போக மாட்டான்..” என்று புலம்பியவாறே சென்றார் சிந்தாமணி. ஈஸ்வரின் தங்கையான இவரின் கணவன் பத்து வருடங்களுக்கு முன்பாக காணாமல் போகவே தனது மகன் ராஜபாண்டியை மிகவும் கஷ்டப்பட்டு மருத்துவம் படிக்க வைத்தார். சிவாங்கி பிறந்தது முதல் ராஜபாண்டிக்கும் அவளுக்கும் தான் மணமுடிக்க வேண்டும் என வாய் வார்த்தையாக பேசியிருக்க அதனை நம்பி தனது மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டார் சிந்தாமணி. தனது அண்ணனின் ஒரே மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் அவரது சொத்துக்கள் அனைத்தையும் தனது மகனுக்கு எளிதில் எழுதி வாங்கிவிடலாம் என கணக்கிட்டவரின் தலையில் இடியென விழுந்தது சிவாங்கியின் திருமண செய்தி. 

தனது மகனைக் காண அவர் சென்றிருந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் நடந்திருந்தது. 

‘அம்மாடி எவ்ளோ பெரிய பேலஸ்.. இதுலயா இருக்காங்க?’ என மனதுக்குள் பிரமித்தபடியே அந்த மாளிகைக்குள் நுழைந்தாள் சிவாங்கி. 

“அத்தான்..” என்றவாறே பூப்பந்தை போன்ற பெண்ணொருத்தி அவன் மீது வந்து மோதினாள். 

“காயூ.. பட்டு.. வாட்ட சர்ப்ரைஸ்.?” என்றவாறே சித்தார்த் அதிரூபனும் அவளைத் தூக்கி சுத்தினான். 

“போங்க அத்தான்.. ஜெர்மனில இருந்து உங்களுக்காக ஆசை ஆசையா வந்தேன்.. இப்படி என்னை ஏமாத்திட்டீங்களே.. அப்படி எங்க தான் போனீங்க? நானும் பேபியும் எவ்ளோ மிஸ் பண்ணோம் தெரியுமா?”

“ஓ சாரிடா பட்டு.. ஒரு வேலையா தமிழ்நாடு வரைக்கும் போக வேண்டி இருந்துச்சு.. ம்ம்ம்.. பேபி எங்க?”

“க்கும்.. ஒரு இடத்துலே இருக்குமா உங்க பேபி? திரும்ப கிளம்பி போயிடுச்சு.. நான் சொன்ன கேட்குதே இல்ல..”

“ஓகே.. ஓகே.. பேபிகிட்ட நானே பேசிக்குறேன்.. உன்னைய விட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு சொல்றேன்.. தாதி எங்க?”

“தாதி கோவில் வரைக்கும் போயிருக்காங்க.. நீங்க வந்தா ப்ரெஸ் ஆகி வெயிட் பண்ண சொன்னாங்க.. ஏதோ முக்கியமான விஷயம் உங்கக்கிட்ட பேசனுமாம்..”

“ஓகே நான் போய் ப்ரெஸ் ஆகிட்டு வர்றேன்..”

“ஓகே.. அத்தான் இது யாரு? பொண்ணு ரொம்ப அழகாயிருக்கா..”

“யாருன்னு தெரியல பட்டு.. ரோட்டுல பாஷை தெரியாம முழிச்சுட்டு இருந்தா.. அதான் வேலைக்காரியா இங்கயே ஒரு ஓரமா இருந்துட்டு போட்டுள்ளது கூட்டிட்டு வந்தேன்.. நீயே அவளுக்கு ஏதாவது வேலை போட்டு கொடு..” எனக் கூறியவன் சிவாங்கியின் கண் எதிரேயே அந்த பெண்ணிற்கு நெற்றியில் முத்தமிட்டுச் சென்றான். 

தன் கணவன் மற்றொரு பெண்ணை முத்தமிடுவதை எந்த மனைவியால் தாங்கிக் கொள்ள இயலும். அவன் அவளை அணைக்கும் போது அதிர்ச்சி அடைந்தாள், அவன் தன்னை வேலைக்காரியென கூறும் போது கண்ணில் கண்ணீராக உருமாறியது. சிவாங்கியின் கண்ணீரை கண்டு இரக்கம் கொண்ட அந்த பெண் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள். 

“ஹேய்.. டோண்ட் க்ரை.. அதான் இங்க வந்துட்டேல்ல.. இனி எந்தப் பிரச்சனை வந்தாலும் அத்தான் பார்த்துப் பாரு.. நீ வா.. ஆமா உனக்கு என்னென்ன வேலையெல்லாம் செய்யத் தெரியும்?” 

சிவாங்கியுடன் பேசிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றாள். ஆனால் சிவாங்கியின் மனமோ வேறு நிலையில் இருந்தது. தன் மீது அவள் போட்டிருந்த கையை எடுத்துவிட்டு அவளை நறுக்கென நாலு கேள்வி கேட்க வேண்டும் என  அவளது நா துருதுருத்தது. ஆனால் அவளால் இயலவில்லை. தெரியாத ஊர், புரியாத பாஷை அவளை பயமுறுத்தியது. தனக்கு ஏன் இந்த தண்டனை? என குமுறியது சிவாங்கியின் உள்ளம். 

“ம்ம்ம்.. என் பேர் காயத்ரி. உன் பேர் என்ன?”

“சி.. சிவாங்கி..”

“ஓ சிவாங்கி.. பயப்படாத.. நாங்கல்லாம் இருக்கோம்ல.. முத்தச்சி.. முத்தச்சி..”

“சொல்லு பாப்பா..”

“முத்தச்சி இவ பேரு சிவாங்கி.. பாவம் அனாதையாம்.. கழுத்துல தாலியிருக்குறதை பார்க்கும் போது இவ புருஷன் தான் இவளை வேணும்னே தொலைச்சுட்டு போயிட்டான் போல.. இவளுக்கு என்ன வேலை தெரியும்னு பார்த்து அதுக்கு ஏத்தப்புல வேலை கொடுங்க.. சரியா?”

“சரி பாப்பா.. வாம்மா..”

“சிவாங்கி இவங்ககூட அவுட்டவுஸ்ல தங்கிக்கோ.. அத்தான் கிட்ட சொல்லி உன் புருஷனை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க ஏற்பாடு பண்றேன்..”

“வேணாங்க.. அவர் என்னைய வேணும்னு தொலைக்கல.. நான் வேணாம்னு தான் தொலைச்சிட்டார்.. வேண்டாதவ வேண்டாதவளாகவே இருந்துட்டுப் போறேன்.. என்னைய என்னோட ஊருக்கே அனுப்பி வைக்குறீங்களா?”

“சரி.. நான் அத்தான் கிட்ட பேசிட்டு உன்னை உன் ஊருக்கே அனுப்பி வச்சுர்றேன்.. நீ உன் மனசை போட்டு குழப்பிக்காதே.. முத்தச்சி கூட்டிட்டு போங்க..”

முத்தச்சி அவர்களின் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வரும் பெண்மணி. கணவனை இழந்து பெற்ற பிள்ளைகளினால் நிராகரிக்கப்பட்டவர். ஆதலால் சித்தார்த் அதிரூபன் மற்றும் காயத்ரியை தனது பிள்ளைகளாக எண்ணியே வாழ்ந்து வருபவர். சிவாங்கியை தனது அறையில் தன்னோடு தங்க வைத்துக் கொண்டார். 

“இந்தா குட்டி.. இவ்வடே  வரு.. நீ இவ்வடே நில்க.. யான் இப்போ வரு..” எனக் கூறி சென்றார் முத்தச்சி. 

அவர் சென்ற மறுநிமிடம் தனது அறைக்கதவை சாத்திய சிவாங்கி கதறி அழுக தொடங்கினாள். இவ்வளவு நேரம் தனக்குள் குமைந்து கொண்டிருந்த வேதனை அனைத்தையும் அழுது கண்ணீராக வெளியேற்றினாள். 

“அத்தான் தாதி வந்துட்டாங்க.. உங்களை பார்க்கனும்னு சொன்னாங்க..”

“ஓகே டா.. நான் போய் பார்த்துக்குறேன்.. நீ பேசிகிட்டே பேசுனியா? அப்புறம் பேபிக்கு கோபம் வந்துடப் போகுது..”

“போங்க அத்தான்.. நான் பேசாமலா இருப்பேன்.?”

“ஓகே.. அப்போ ரூம்ல போய் ரெஸ்ட் எடு.. நான் இப்போ வந்துடுறேன்..”

தனக்கே உரிய வேக நடையில் கம்பீரமாக நடந்து வந்தவன் எழுபது வயது மதிக்கத்தக்க பெண்மணியைப் பார்த்ததும் அணைத்துக் கொண்டான். 

“தாதி..” அவரது காலில் விழுந்தவனை தானும் அணைத்துக் கொண்டார். 

“ஜீத்தீ ரஹோ.. குஷ் ரஹோ அதி.. கொஞ்சம் கார்டன் போலாமா? உன்கிட்ட பேசனும்..”

“வாங்க தாதி..”

இருவரும் வீட்டிற்கு பின்னே பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பூந்தோட்டத்திற்கு சென்றனர். 

“சொல்லுங்க தாதி..”

“நான் எதைப் பத்தி பேசப் போறேன்னு உனக்கே நல்லாத் தெரியும்.. அந்த குடும்பத்தோட சகவாசமே வேண்டாம்னு தானே இத்தனை நாள் தள்ளியிருந்தோம்.. இப்போ அந்த வீட்டுப் பொண்ணை இங்கேயே கூட்டிட்டு வந்துருக்க.. என்னால் இதை ஜீரணிக்கவே முடியல அதி.. எவ்ளோ சீக்ரம் முடியுமோ அவ்ளோ சீக்ரம் அவளை வெளியே துரத்திடு.. அப்புறம் அவளைப் பத்தி காயத்ரிக்கும் பேபிக்கும் தெரிய வேண்டாம்.. அவ மூஞ்சியக்கூட நான் பார்க்க விரும்பல.. நான் சொல்றது புரியுதா?”

“அவளால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு தாதி.. அது முடிஞ்சதும் நானே அனுப்பிடுவேன்.. யூ டோண்ட் ஒர்ரி தாதி.. அவ உங்க கண் முன்னாடி எப்பவும் வர மாட்டா..”

“பார்த்து நடந்துக்கோ.. இந்த ராஜவம்சத்தோட கௌரவம் உன் கையில் தான் இருக்கு..”

அவனிடம் பேசிய ராணி பத்மாவதி அதிரூபன் மனதில் பல நிகழ்வுகள் வந்து போயின. 

மறுநாள் காலையில் எழுந்ததும் தான் எங்கேயிருக்கிறோம் என பயந்து போய் பார்த்தவள் பிறகு நடந்தவை அனைத்தும் அவளது கண்முன்னே வந்தது. 

“மோளே.. சிவாங்கி.. இவ்வடே வரு.. யான் கிச்சன்ல வேலை செய்யும்.. நீ அதை அவ்வட போய் வைக்கும்.. சரி தானே..”

அவர் பேசிய மலையாளம் கலந்த தமிழ்மொழி அவளுக்கு பழக்கப்பட்டிருந்தது. ஆதலால் அவர் சமைத்ததை அங்கிருந்த உணவு மேஜையில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் போது அங்கே வந்தான் சித்தார்த் அதிரூபன். 

உடம்பில் எந்த ஒரு தங்க நகையுமில்லாமல் கழுத்தில் தாலிக் கொடியுடன் நெற்றியின் உச்சியில் குங்குமமும் வைத்து பளீச்சென்ற அழகோடு மிளிர்ந்தவளை பார்த்ததும் முத்தமிடும் ஆசை வந்தது.  அவனது ஆசைக்கு தடைபோடுபவர் யார் இருக்கிறார்கள்? நினைத்ததை நடத்தி முடிக்க கூடியவன் அவளது இடையை வளைத்துப் பிடித்தான். திடீரென அவன் அணைத்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனவள் மறுநிமிடமே அவனை எதிர்க்க ஆரம்பித்தாள். அவனிடமிருந்து திமிறி தன்னை விடுவித்துக் கொள்ள போராடினாள். ஆனால் எஃகென இறுகியிருந்த அவனது பிடியில் இருந்து அவளால் வெளிவர முடியவில்லை. 

அவளது முகத்தை தன்னை நோக்கி தூக்கிப் பிடித்தவன் ஆரஞ்சு சுளையென இயற்கையாகவே பளபளத்த இதழ்களை சட்டென்று  வன்மையாக சிறைப்பிடித்தான். இதழ் தேனை கவ்வி உறிஞ்சினான். அவளை விடும்போது கலங்கிய கண்களுடன் தன்னையும் அறியாமல் அவனின் கன்னத்தில் அறைந்திருந்தாள்.

கூண்டுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த சிங்கத்தை தனது பூங்கரங்களினால் வெளியே வர வைத்துவிட்டாள் சிவாங்கி. 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *