உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

 அத்தியாயம் 23

“சார்.. நான் உள்ளே வரலாமா?”

சிவாங்கியின் குரலை கேட்டதும் அவளை பார்க்காதவாறு சட்டேன்று திரும்பி நின்று கொண்டான் சித்தார்த் அதிரூபன்.

“ம்ம்ம்..” என அவன் குரல் கொடுக்க அவனது அறைக்குள் நுழைந்தாள் சிவாங்கி. தான் முன்பிருந்த அறையை ஒருமுறை கண்களை சுற்றி பார்த்தாள். ஆங்காங்கே குழந்தைகளின் துணிகள் இறைந்து கிடந்தன. குனிந்து அவற்றையெல்லாம் பொறுக்கி எடுத்தவள், அங்கிருந்த சோஃபாவில் போட்டாள். தன் கையில் இருந்து வலுக்கிக் கொண்டு சென்ற முந்தானையை கொத்தாக அள்ளி தோளில் இட்டு தன் இடுப்பை சுற்றிக் கொண்டு வந்து சொருகினாள். 

“அப்புறம்.. குழந்தைங்களுக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க? நானும் கண்ணா, லட்டு, பட்டுனே கூப்பிட்டுட்டு இருக்கேன்.. பெயர் வைக்குற பங்ஷன் எப்போ ஏற்பாடு பண்ண போறீங்க?”

“ம்ம்ம்.. வைக்கனும்.. அதெல்லாம் இருக்கட்டும்.. நீ எப்போ கிளம்புற?”

“எங்க?”

குழந்தைகளின் துணிகளை மடித்து அலமாரியில் வைத்தவள், அங்கிருந்த சேரை இழுத்துப் போட்டு அதன்மேல் ஏறி அலமாரியில் வைத்திருந்த தனது பெட்டியை எக்கி எடுத்துக் கொண்டிருந்தாள். அப்படி எடுக்கும் போது அவளது புடவை விலகி அவளது பிள்ளைப் பெற்ற வயிற்றின் இடுப்பு மடிப்பை கண்டு வேர்த்துக் போனான். 

‘ஆஹா.. இப்போ எதுக்கு இவ சேர் மேல ஏறி சர்க்கஸ் கட்டிட்டுருக்கா?’ என அவன் நினைத்து முடிப்பதற்குள் சேரில் இருந்து கால் வலுக்கி கீழே விழப் போனவளின் இடுப்பைப் பிடித்துக் கொண்டான். 

“ஏய்.. பார்த்து எந்த வேலையும் செய்ய மாட்டியா? இப்போ எதுக்குடி இது மேல ஏறி சர்க்கஸ் காட்டுற?”

“இல்ல.. நீங்க வேற என்னை எப்போ கிளம்புறன்னு கேட்டுட்டே இருக்கீங்க.. அதான் எப்படியும் போகத்தானே போறோம்.. எதுக்கு இந்த பெட்டியை மட்டும் விட்டுட்டு போகனும்.. அதை எடுக்க தான் மேல ஏறுனேன்.. நான் ஒன்னும் சர்க்கஸ் காட்டுறதுக்கு ஏறல..”

“ஓ.. கீழ விழுந்திருந்தேனா கைல கால்ல அடிபட்டுருக்கும்.. கொஞ்சங்கூட அறிவேயில்ல..”

“குடும்பத்துல யாராவது ஒருத்தருக்கு அறிவிருந்தா போதும்.. அதுதான் உங்களுக்கு இருக்கே.. டன் கணக்கா..”

“என்னடி சொல்ற? இப்போ நீ போறேங்குறியா? போலேங்குறியா?”

“இன்னுமா உங்களுக்கு புரியல?”

“புரியல.. போறேன்னா.. கிளம்பி போயிட்டே இரு.. இப்படி போறேன்.. போறேன்னு சீன் போடாத..”

“அதுசரி.. இப்படி என் இடுப்பை நீங்க பிடிச்சிட்டு இருந்தீங்கன்னா.. நான் எப்படி கிளம்புறது?”

அப்போது தான் கவனித்தான். அவளது இடையை சுற்றி வளைத்து இறுக்கி அணைத்து கொண்டிருப்பதை உணர்ந்தான். சட்டென்று அவளை தூக்கி நிறுத்தியவன்,

“சாரி.. “

“இந்த சாரிய எப்போ கேட்கனுமோ அப்போ கேட்கமாட்டீங்களா?”

“வாட் யூ மீன்?”

“ம்ம்ம்.. ஐ மீன்.. வாட் ஐ சே..”

“இப்போ என்னதான் டி சொல்ல வர்ற?”

“ம்ம்ம்.. நான் போகமாட்டேன்.. என்ன பண்ணுவீங்க?”

“சிவாங்கி!”

“ஏன் இப்படி வாயத் துறக்குறீங்க? தள்ளுங்க.. இனிமே நானும் நம்ம குழந்தைங்களோடு சேர்ந்து இந்த ரூம்ல தான் தங்க போறேன்.. என்னோட திங்கஸை எல்லாம் இங்க கொண்டு வந்து வைக்க சொல்லிருக்கேன்.. நான் அதையெல்லாம் கப்போர்ட்ல அரேன்ஜ் பண்ணனும்.. அம்மாவும் அப்பாத்தாவும் உங்க குழந்தைங்ககிட்ட படாதபாடு படுறாங்க.. போயி அவுங்கள காப்பாத்துங்க..”

அவனிடம் இயல்பாக பேசியவாறே தனது பொருட்களை அவனது அறையில் அடுக்கிக் கொண்டிருந்தாள். அவளை ஆச்சர்யமாக பார்த்தவாறே கீழிறங்கி சென்றவன், தன் குழந்தைகளை தூக்கிக் கொண்டு மாடிக்கு வந்தான். 

இரவில் பெண்ணரசி இயல்பாக தன் தந்தையின் மார்பில் படுத்து உறங்கியிருக்க, அருந்த வால்களான ஆண்குழந்தைகள் இருவரும் தன் தாயை உண்டில்லை என்றாக்கிக் கொண்டு இருந்தனர். 

வெகு நேரம் விளையாடிய குழந்தைகள் நள்ளிரவில் தான் உறங்கத் தொடங்கினர். அவர்கள் உறங்கியதும் மூவரையும் தொட்டிலில் இட்டவள், இயல்பாக சித்தார்த் அதிரூபனின் அருகில் வந்து படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்திற்கு முன்பு தன் தங்கமகள் படுத்திருந்த இடத்தில் தானும் தலை வைத்து தூங்க ஆசை கொண்டாள். மெல்ல அவளை நோக்கி நகர்த்தவள், அவனது மார்பில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். உறங்கும் அவனது முகத்தை பார்த்தவாறு தனது தாடையை அவனுடைய நெஞ்சில் வைத்தாள். 

“நான் போகமாட்டேன்னு சொன்னதும் உங்களுக்கு எவ்ளோ சந்தோஷம் வருது.. அதையெல்லாம் முகத்துல காண்பிச்சா குறைஞ்சா போயிடுவீங்க.. ரொம்ப தான் ஸ்ரிக்ட் ஆபிஸர் மாதிரி சீன் வேற.. இடுப்புலருந்து கைய எடுக்க மறந்துட்டீங்க.. இதை நான் நம்பனும்.. அழகா..”

கொஞ்சிக்கொண்டே மெல்ல எம்பி அவனது தாடையில் முத்தமிட்டாள். 

“கன்னத்துல பாரு.. சேவ் பண்ணாம முள்ளம் பன்றி கணக்கா குச்சி குச்சியாய் நிற்குது.. குத்துது..”

அவனது இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டவள், சற்று மேலே எம்பி அவனது நெற்றியோடு தன் நெற்றியை வைத்து மூக்கோடு மூக்கை வைத்து அவனது சுவாசத்தை தன்னுள் நிரப்பிக் கொண்டிருந்தாள். 

திடீரென அவளை இடையோடு சேர்த்தணைத்தவன், இதழோடு இதழ் பொருத்தினான். அதிர்ச்சியில் கண்கள் விரிய அவனை பார்த்தவளின் தலையை வாகாக தனக்கேற்போல் சாய்த்து பிடித்துக் கொண்டான். நீண்ட நெடிய முத்தத்தை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு அவனிடம் இருந்து உதட்டை பிடுங்கியவளைப் பார்த்து கண்சிமிட்டினான். 

“பிராடு.. பிராடு.. தூங்குற மாதிரி நடிக்காவா செஞ்சீங்க?” 

அவன் மீதெறி படுத்தவள், அவனை தனது பஞ்சு போன்ற கைகளால் தாக்கத் தொடங்கினாள். சட்டென அவளை கீழே கொண்டு வந்து அவளது கையை சிறைப்பிடித்து கால்களோடு கால்களை பின்னிக் கொண்டான். 

“யாருடி பிராடு? ம்ம்.. விட்டுட்டு போறேன்னு சொல்லி.. என்னோட உதட்டை கடிச்சு வைச்சியே.. நீ தான் பிராடு..”

“ச்சீ.. போ.. பொறுக்கி.. நானா உதட்டை கடிச்சேன்.. ஏன் பொய் சொல்றீங்க?”

“யார் முதல்ல முத்தங்கொடுத்தது?”

“நான்.. சும்மா கன்னத்துல தானே கொடுத்தேன்..”

“அப்புறம் சொரசொரப்பா இருக்குதுன்னு கம்ப்ளைன்ட் வேற பண்ற..”

“அப்போ முதல்ல இருந்தே தூங்கலையா?”

“தூங்கிட்டு தான் இருந்தேன்.. நீ என் மேல வந்து படுத்ததும் தூக்கம் தூரமாய் போயிடுச்சு..”

அவளது இதழ்களை மீண்டும்  கவ்வி சுவைத்தான். மூச்சு விடுவதற்காக திணறியவளுக்கு சிறிது நேரம் ஓய்வளித்து விலகினான். அவளை அள்ளி தன் மீது போட்டு கொண்டான். 

“சொல்லு.. திடீர்னு ஏன் இந்த மனமாற்றம்? அதுக்கான காரணத்தை சொல்லிட்டீனா.. ஐ ஃபீல் பெட்டர்..”

“ஏன் போலைனா.. பர்ஸ்ட் ரீஸன் குழந்தைங்களுக்காக..”

அவ்வாறு கூறியதும் அவனது முகம் இறுகியது. 

“பார்த்தீங்களா? கோபப்படுறீங்க..”

“பின்ன.. குழந்தைகளுக்காக தான் இங்கே இருக்கேன்னு‌ சொல்றவ, ஏன்டி என்கூட இப்படி இருக்கனும்?”

“பொறுமையே உங்களுக்கு கிடையாதா? குழந்தைகளும் ஒரு காரணம்.. ஆனா உண்மையான காரணம்.. நீங்க என் மேல வைச்சுருக்குற லவ் தான்.. நானும் உங்களை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்.. அதனால தான் ராகினிகூட நீங்க பேசும் போதோ.. அவகூட வெளிய போகும் போதோ.. என்னால் தாங்கிக்கவே முடியாம இருந்துச்சு.. அன்னைக்கு நீங்க என்னைய பலவந்தம் படுத்துனப்போக்கூட  எப்படி நடக்க வேண்டியதை இப்படி நடத்திட்டாறேன்ற கோபமும் வருத்தமும் தான் வந்துச்சே தவிர.. நமக்குள் நடந்ததை நினைச்சு அருவருப்பு பட்டதே கிடையாது.. அப்புறம் நீங்க என்னைய எல்லாம் எங்க தேடி வரப் போறீங்க? அப்படின்னு தான் நினைச்சுட்டுருந்தேன்.. ஆனா என்னைய தேடி வந்தப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அப்பவே என்கிட்ட ஒரு சாரி சொல்லிருந்தீங்கன்னா நமக்குள்ள இவ்வளோ கருத்து வேறுபாடு வந்துருக்காது..”

“நிஜமா சொல்லனும்னா.. உன்னைய என்னைக்கு பார்த்தேனோ அன்னைக்கே உன்கிட்ட நான் விழுந்துட்டேன் டி.‌. உன்னை நான் முதல் முதல்ல எப்பப் பார்த்தேன்னு தெரியுமா? தாவணி உடுத்திக்கிட்டு ஒரு சின்ன குழந்தைய இடுப்புல வைச்சுகிட்டு ரயில்வே ஸ்டேஷன்ல ஆடு மேய்ச்சுட்டுருந்த.. அப்போ அந்த சின்னப் பையனுக்கு பசினு அழுதப்போ ஆட்டோட மடுல.. அந்த குழந்தையோட வாய வைச்சு பாலூட்டுன.. அப்போ உன் முகத்துல தெரிஞ்ச சந்தோஷம்.. ப்பா.. வேற லெவல் அழகிடி நீ..”

“ஓ.. அன்னைக்கு காவேரிக்கா மகனை இடுப்புல தூக்கி வைச்சுருந்ததை பார்த்தீங்களா?”

“ம்ம்.. அப்புறம் உன்னோட இந்த முகம், பேசும் விழிகள் அத்தனையையும் இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்த மாதிரி.. அது கூட ரொம்ப நாள் பழகின மாதிரி இருந்துச்சு..”

“ஆஹா.. இந்த கதை தான் வேணாம்கிறது.. அதெப்படி என்ன மாதிரியே இன்னொருத்தர் இருக்க முடியும்?”

“பர்ஸ்ட் நானும் அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா உன்னை பார்க்கும் போதெல்லாம் இதுக்கு முன்னாடி உன்கூட நான் பழகிருந்துருக்குறேன்ற.. ஃபீல் வந்துச்சு.. அதனால் தானோ என்னவோ என்னால் உன்னை ரொம்ப காயப்படுத்த முடியலை.. ராகினியோட ப்ரெண்ட்ஸ்கிட்டருந்து உன்னை காப்பாத்த உனக்கே தெரியாம உன்னை கண்காணிக்க ஆட்கள் செட் பண்ணேன்.. உன்னோட பாதுகாப்பை உறுதி செஞ்சதுக்கப்புறம் தான் நான் அவகூட சேர்ந்து வெளியே போனேன்.. அப்பவே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்..”

“அப்புறம் எதுக்கு ராகினிய கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சீங்க?”

“அது தாதிமாக்காக..”

“ஆமா பாட்டிய ஏன் கொன்னீங்க?”

“ஏன்னா.. உன் அப்பாவையும் மாமாவையும் தன்னோட கைக்குள்ள போட்டுகிட்டு எங்க குடும்பத்தையே அழிச்சது.. தாதிமா தான்..”

“என்ன சொல்றீங்க?”

தாதிமா எதுக்காக? ஏன்? இப்படியெல்லாம் செய்தார் என்பதை ஆரம்பத்தில் இருந்து சிவாங்கியிடம் கூறினான். முழுவதையும் கேட்ட சிவாங்கி அதிர்ச்சியுற்றாள். 

“சாரி.. சிவாங்கி.. நித்யாவை ராஜபாண்டியும் அவரது மனைவியும் தான் காப்பாத்திருக்காங்க.. ஆனா அங்கிருந்த டீ கடைக்காரன் அவர்கள் தான் அவளை கொன்னுட்டதா சொன்னான். அவர் சொன்ன மாதிரி ட்ராயிங் வரைஞ்சு பார்த்தப் போ.. உன்னோட உருவமும் ராஜபாண்டியோட உருவமும் கிடைச்சது.. எப்படி என் தங்கச்சிய பிரிஞ்சி நான் கஷ்டப்படுறேனோ.. அதே மாதிரி நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு கஷ்டப்படனும்னு நினைச்சேன்.. உண்மையெது? பொய்யெதுன்னு தெரியாம.. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேன்.. ஐம் சாரி..”

“இட்ஸ் ஓகே.. அப்போ அன்னைக்கு ராஜபாண்டி அத்தானைக்கூட இதுக்காக தான் கட்டி வைச்சுருந்தீங்களா?”

“அதுக்காக மட்டுமில்ல..நீ அவனை அத்தான்னு கூப்பிடுறது எனக்கு சுத்தமா பிடிக்கல.. உனக்கு நெருக்கமானவனா நான் மட்டும் தான் இருக்கனும்னு நினைச்சேன்.. ஒருவேளை நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களோ? அப்படின்னு கூட நினைச்சுருக்கேன்.. இப்படி ரெண்டு பேர் கிட்டயும் டபுள் கேம் ஆடுறியோன்னு தோணுச்சு.. அந்த பொறாமையும் கோபமும் சேர்ந்து தான் அன்னைக்கு உன்கிட்ட மிருகம் மாதிரி நடந்துகிட்டேன்..”

நடந்து முடிந்த ஒன்றிற்காக  அவன் வருந்துவது பிடிக்காதவள் தானே வழிய சென்று அவனது இதழ்களை சிறைபிடித்தாள். தொடக்கம் அவளாக இருந்தாலும் அதனை தொடர்ந்தது சித்தார்த் அதிரூபன் தான். அவளது முகத்தை நிமிர்த்தி பார்த்தவன்,

“அன்னைக்கு உன்கிட்ட அப்படி நடந்துகிட்டது.. எவ்ளோ பெரிய தப்புன்னு புரிஞ்சுகிட்டு உன்னை வந்து பார்க்கும் போது நீ வீட்டில் இல்லை. அப்போ தான் உன்னை எவ்ளோ தூரம் நேசிக்கின்றேன்னு புரிஞ்சது.. உடனே நீ இருக்கும் இடத்தை டிடெக்டிவ் மூலமா தெரிஞ்சுகிட்டேன்.. உன்னைய பார்க்கவோ என்னை விட்டு போகாதேன்னு கெஞ்சவோ என்னுடைய ஈகோவும் குற்றவுணர்வும் தடுத்தது. அதனால் தான் அக்ரிமெண்டை காண்பிச்சு உன்னை என்கூடவே வைச்சுகிட்டேன்.. தாதியால உன் மனசு காயப்பட்டுடுமோன்னு அவங்ககிட்டருந்து  உன்னை விலக்கியே வைச்சேன்..”

“அன்னைக்கு உங்க மேல  அந்த லைட் விழுற மாதிரி இருந்தப்போ எனக்கு அப்படி இருந்துச்சு.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால் தாங்கவே முடியாதுன்னு தோணுச்சு.. அந்த சர்வர் நீங்க குடிக்குறதுல ஏதோ கலந்ததை பார்த்தேன்.. எங்க நீங்க அதை குடிச்சுடுவீங்களோன்னு தான் அதை கீழே கொட்டிட்டேன்.. ஆனா அன்னைக்கு எப்படி சரக்கடிச்சேன்னு எனக்கே தெரியல.. உங்க ரூம்ல மஞ்சள் கலர்ல பாட்டில் இருந்துச்சா.. அதை ஜூஸுன்னு நினைச்சு தான் குடிச்சேன்.. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல..”

“அது ஒயின்.. பிரான்ஸ்ல இருந்து வந்தது..”

“ஓ.. அதான் வித்தியாசமான டேஸ்ட்ல இருந்துச்சா.. நான் அதை நம்ம ஊரு மாஷான்னு நினைச்சு குடிச்சுட்டேன்.. அப்புறம் காலைல எழுந்ததும் தான் தெரியும்.. அந்த ராட்சசன் இறந்துட்டான்னு.. ஆனா அதை நீங்க எனக்கு சொன்ன விதம் கொஞ்சங்கூட பிடிக்கல..”

“ஆமாண்டி.. என் குடும்பத்தை அழிச்சவே செத்துட்டான்னு சந்தோஷப்படுவேனா.. மாட்டேனா.. உனக்காக வருத்தப்படுற மாதிரி நடிக்கவெல்லாம் முடியாது.. ஆனா  நான் அபியோட வீட்டுக்கு  திரும்பி வந்ததும்.. பெட்ல நீ மயக்கமா இருந்ததை  பார்த்தேன்டி.. எனக்கு உயிரே போயிடுச்சு.. நானும் உன்னை எப்படியெல்லாமோ எழுப்பி பார்த்தேன்.. ம்ஹூம்.. நீ எந்திரிச்சா தானே..”

“அதுக்கு நீங்க தூக்க மருந்து கொடுத்தவங்களைத் தான் கேட்கும்.. தூக்கம் வந்தா தூங்க மாட்டாங்களா.. கண்ணு முழிச்சு பார்த்தா.. பாட்டியையும் இன்னொருத்தனையும் கட்டி வைச்சுருக்கீங்க.. பாட்டிம்மா என்னன்னா என் அப்பா கொன்னது நீங்க தானும், என்னைய பழிவாங்கத் தான் கல்யாணம் பண்ணிங்கனும் சொன்னப்போ அது உண்மையா இருக்கக்கூடாதுன்னு என் மனசு துடிச்ச துடிப்பு எனக்கு தான் தெரியும்.. ஆனா என் தலைல கை வைச்சு அதான் உண்மைன்னு நீங்க சொன்னப்போ அங்கேயே உங்க மேல நான் வைச்சுருந்த நம்பிக்கையும் செத்துடுச்சு.. அதனால தான் அதுக்கப்புறம் நீங்க எனக்காக பண்ண எல்லாமே நடிப்பா தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது.. என்னால உங்களை நம்பவும் முடியாம.. உங்கக்கூட சேர்ந்து வாழ்வும் முடியாம.. என்ன முடிவெடுக்குறதுன்னு எனக்கே தெரியாமத் தான் உங்களை விட்டு போகனும்னு கேட்டேன்..”

“சரி ஒன்னு கேட்குறேன்.. பதில் சொல்லு..”

“கேளுங்க..”

“நான் உன்னை கல்யாணம் பண்ணித் தான் பழிவாங்கனுமா?”

“என்ன?”

“உன் அப்பனோட ஜாதகமே என் கைல இருந்துச்சு.. என்கூட உன்னை அனுப்புன்னு நான் கட்டளையிட்டுருந்தா.. உன் அப்பனால அதை மறுத்து சொல்லிருக்க முடியுமா?”

“ம்ம்..”

“முடியாதுல்ல.. அப்புறம் ஏன் நான்  உன்னை கல்யாணம் பண்ணேன்?”

“ஏன்?”

“ஏன்னா.. உருவத்துல நீ என்னோட அம்மா மாதிரியே இருக்க.. அதனால் தான் உன்னை கல்யாணம் பண்ணி என்கூடவே வைச்சுக்கனும்னு நினைச்சேன்.. தாதிமாகிட்ட கூட உன்னை கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்லவேயில்லை.. அதுவே அவங்களுக்கு பயங்கரமா ஷாக்கா இருந்துருக்கும்..”

“சாரி.. ஆரம்பத்துலருந்து உங்களை நான் நம்பாமலேயே இருந்துக்கேன்ல..”

“நான் அப்படி நடந்துகிட்டா நீ என்ன பண்ணுவ? சில ஆண்கள் தங்களுடைய அன்பை வார்த்தையால் வெளிப்படுத்துவாங்க.. சிலர் செயலால் வெளிப்படுத்துவாங்க.. எனக்கு அதெல்லாம் தெரியாது.. எனக்கு இப்படி தான் இருக்கத் தெரியும்.. அன்பே ஆருயிரேன்னு கொஞ்சவெல்லாம் தெரியாது..”

“கொஞ்ச தெரியாது.. ஆனா மத்ததுயெல்லாம் நல்லா பண்ணத் தெரியும்.. அப்படித்தானே..”

“என்ன பண்ணத் தெரியும்?”

“ம்ம்ம்.. மூணு பிள்ள பெத்துருக்கீங்க.. இதுகூட தெரியாதா?..”

“தெரியாதுன்னு நான் சொன்னேனா?”

அவனது கைகள் மெல்ல அவளது தோளை வளைத்து அணைத்தபோது இருமகன்களும் பசியால் மீண்டும் அழுக தொடங்கினர். ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டே குழந்தைகளை தூக்கிக் கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *