உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

அத்தியாயம் – 6

“ச்சே.. கடைசி நேரத்துல போச்சே.. அவனை?”

“என்னாச்சுங்க?”

“தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போற? உன் அப்பன் கிட்ட இருக்குற மீதி காட்டை எழுதி வாங்கிட்டு வரப் போறியா? ஒழுங்கா போயிரு.. சும்மா குறுக்கால வந்துகிட்டு..”

“அண்ணே.!”

“வா சிந்தாமணி..”

“அண்னே நான் பார்த்தது?”

“நம்ம பூங்கோதை பையனைத் தான்..”

“அவ குடும்பமே அழிஞ்சுடுச்சுன்னு நினைச்சேனே.. இன்னுமா உயிரோடு இருக்காங்க?”

“அவளும் அவபுருஷனும் தான் செத்துட்டாங்களே.. இப்ப வந்துருக்குறது மிச்ச சொச்சம்.. பகைல ஏதும் மிச்சம் வைக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க.. இவனையும் முடிச்சுட்டோம்னா.. எல்லாம் சரியா வரும்..”

“என்னங்க.. அவரு பார்க்க நம்ம மாப்ள மாதிரியே இருக்காருங்க..”

“எனக்கும் அது தான் சந்தேகமாயிருக்கு.. லெட்சுமி நம்ம மாப்ள சென்னைல இஞ்சினியரா வேலை பார்க்குறதாதே சொன்னா? ஆனா இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது அதுவும் பொய்யாத் தான் இருக்கும்னு தோணுது..”

“இதுக்கு தான் நான் தலப்பாடா அடிச்சு கிட்டேன்.. தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசு எவ்வளவோ மேல்.. தெரியாதவனுக்கு பொண்ணை கொடுத்ததுக்கு பதிலா தெரிஞ்ச ராஜபாண்டிக்கு கொடுத்திருக்கலாம்..”

“அடிப்போடி.. நானே ராஜபாண்டிகிட்ட கேட்டுட்டேன்.. அவன் தான் இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னான்.. அதுவுமில்லாம சிவாங்கியோட ஜாதகத்துல மாமியார் மாமனார் இல்லாத குடும்பமா பார்த்து கொடுக்கனுனு இருந்துச்சு.. அதான் லெட்சுமி கொண்டு வந்த சம்பந்தத்தையே முடிச்சிட்டேன்..”

“இல்ல.. இதை நான் நம்ப மாட்டேன்.. என் பையன் அப்படியெல்லாம் சொல்லிருக்கமாட்டான்.. நானே அவன்கிட்ட கேட்குறேன்..”

“கேளு.. கேளு.. ஆனா அவனெல்லாம் வேண்டாம்னு சொல்றளவுக்கு என் பொண்ணு ஒன்னும் தரமிறங்கல..”

“இப்போ வந்துருக்குறது நம்ம மாப்ளயா இருந்தா நம்ம பொண்ணோட நிலைமை?”

“எவடி இவ? எப்பப் பார்த்தாலும் எதிர்மறையாவே பேசிட்டிருக்குறவ.. அவே ஒன்னும் நம்ம மாப்ள இல்ல.. நம்ம பொண்ணு ராணி மாதிரி இருந்துட்டுருப்பா.. நீயா கற்பனை பண்ணிக்காத..”

“என்னமோ நம்ம பொண்ணு நல்லாயிருந்தா? எனக்கு அதுவே போதும்..”

“சரி.. சரி.. மதினி.. கோழிகொலம்பா வச்சுருக்க.. வாசனை தெருக்கோடி வரைக்கும் மணக்குது‌..”

“இரு.. நான் உனக்கு எடுத்து வைக்குறேன்.. நீ சாப்பிட வா..”

“அண்ணே.. மதினி உள்ளாறப் போயிருச்சு.. இப்ப சொல்லு என்ன பண்ணப் போற?”

“என்ன பண்ணுவேன்? எப்படி பூங்கோதையை நம்ப வைச்சு கருவருத்தோமோ? அதே மாதிரி தான் இவனையும் ஆள் அடையாளம் தெரியாம பண்ணனும்.. அதை நான் பார்த்துக்குறேன்..”

“பூங்கோதையோட பங்கு தான் உனக்கு எழுதி கொடுத்துட்டாளே.. அப்புறம் எப்படி அதோட பத்திரம் அவே கைக்கு போச்சு..?”

“எனக்கும் அதான் யோசனையாயிருக்கு சிந்தா.. எப்படி தாய்ப்பத்திரம் அவன் கைக்கு போச்சு?”

வீட்டின் உள்ளே ஈஸ்வரும் சிந்தாமணியும் சேர்ந்து  எப்படி அபிமன்யு அதிரூபனை அழிக்கலாம் என்று திட்டமிட்டு கொண்டிருக்க வீட்டிற்கு வெளியே அவனோடு உரையாடிக் கொண்டிருந்தார் கமலம். 

“அபிகண்ணா.. நீ சொன்ன மாதிரியே.. எனக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமேயில்லாத மாதிரி நடிச்சிட்டுருக்கேன்.. ஆனா எப்போ அந்த கொம்பேரி மூக்கன்கிட்ட மாட்டிப்பேனோன்னு பயமாயிருக்கு.. அந்த தாய்பத்திரத்தை நான் தான் உனக்கு எடுத்து கொடுத்தேன்னு தெரிஞ்சுது.. என்னை உசுரோடு புதைச்சுருவான்..”

“அத்தை நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க.. உங்களை சுத்தி எப்பவும் என்னோட ஆளுங்க இருப்பாங்க.. பயப்படாதீங்க.. நான் சொல்றதை மட்டும் செய்யுங்க போதும்..”

“உன்னை பெத்தவங்களை என் கண்ணு முன்னாடியே கொன்னுட்டாங்க.. அப்போ என்னால் ஒண்ணுமே பண்ண முடியல.. அதுக்கு தண்டனையா கடவுள் எனக்கு கொடுத்தது ரொம்ப அதிகம்.. அந்தால மலை போல் நம்பியிருந்தேன்.. எனக்கு துரோகம் பண்ண எப்படித்தான் அந்தாளுக்கு மனசு வந்துச்சோ..”

“கூல்.. அத்தை.. ஜஸ்ட் கூல்.. உங்க எமோஷன்ஸை அவர் முன்னாடி காண்பிச்சுக்காதீங்க.. இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி காண்பிச்சீங்கன்னா.. அந்த சுந்தரியை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சுருவாரு..”

“இல்ல.. இல்ல.. நான் காண்பிச்சுக்க மாட்டேன்.. என்னை நம்ப வைச்சு ஏமாத்துனவருக்கு நான் யாருன்னு காண்பிக்குறேன்..”

“இது.. இதை தான் எதிர்பார்த்தேன்.. உங்களுக்கு எதுவும் ஆகாம நான் பார்த்துக்குறேன்..”

இருவரும் பேசியவுடன் இணைப்பை தூண்டித்துக் கொண்டனர். கமலம் திருமணம் செய்து கொண்டு ஈஸ்வரின் குடும்பத்துக்கு வரும் போது சிந்தாமணியை விட  பூங்கோதை தான் தோழி போல் பழகினார். பூங்கோதையை தனது தோழிக்கும் மேலாக நினைத்திருந்தார் கமலம். 

பூங்கோதையை ராஜதுரை தூக்கிச் சென்றது அறியாமல் அவர் யாரோடோ ஓடிவிட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். பூங்கோதையை தனது தாய்மாமன் மகனான பெரியசாமிக்கு மணமுடிக்க இருந்த நிலையில் அவர் காணாமல் போனது.. ஈஸ்வரின் முகத்தில் கரியைப் பூசிய எண்ணத்தை அவர் மனதில் விதைத்தது. பிறகு குறித்த நேரத்தில் பெரியசாமிக்கும் சிந்தாமணிக்கும் திருமணம் நடைபெற்றது. 

என்னதான் சிந்தாமணியை திருமணம் செய்திருந்தாலும் பூங்கோதையை பெரியசாமியால் மறக்க முடியவில்லை. அவரது அழகின் மீது ஆசை என்பதை விட ஒருவிதமான வெளியே பெரியசாமியிடத்தில் இருந்தது. இந்நிலையில் தான் சில வருடங்கள் கழித்து பூங்கோதை ஊருக்கு வரயிருப்பதாக ஈஸ்வருக்கு தகவல் கிடைத்தது. முதலில் பணக்கார சம்பந்தத்தை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தவரின் மனதில் சூழ்ச்சியை விதைத்தார் பெரியசாமி. 

ஓடிப் போனவளுக்கு சொத்தில் பங்கெதற்கு என்றும் அவளை கௌரவ கொலை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் இனத்தில் இருக்கும் சில தலக்கட்டுகளின் வழியாக ஈஸ்வரின் மனதில் நஞ்சை விதைத்தார் பெரியசாமி. 

கௌரவக் கொலை என்பது பல நாட்டில் இன்றளவும் நடைபெறும் கொடூரமாகும். தங்கள் குடும்பத்திற்கு மானமிழப்பு வகையில் நடந்து கொண்ட பெண்ணை கொலை செய்யும் வழக்கம் தான் கௌரவ கொலை. 

சுதந்திர இந்தியாவில் எது எதற்கோ நமக்கு சுதந்திரமும் உரிமையும் வழங்கப்பட்டாலும் பெண்களுக்கு மட்டும் அந்த சுதந்திரம் ஒரு எல்லைகோட்டுக்குள்ளாகவே இன்றும்‌ இருக்கிறது. என்று ஒரு பெண் தன் மனதுக்கு பிடித்தவனுடான வாழ்க்கையை சுதந்திரமாக வாழ இந்த சமூகத்திடம் இருந்து அங்கீகாரம் கிடைக்கின்றதோ அன்று தான் நாட்டில் பெண்களுக்கு உண்மையிலேயே சுதந்திரம் வழங்கப்பட்ட நாளாக கருதப்பட வேண்டும். 

இன்றும்  பல பெண்களின் தலைவிதியை நிர்ணயிப்பது பெண்களேயாகும். ஒருபெண் வீட்டிற்கு வர சற்று தாமதமாயிருப்பின் அவளது கற்பை ஏலம் போட்டு விற்பதுவும் அவளை போன்ற பெண்ணேயன்றி வேறு யாருமில்லை.

அதுபோல கடத்திச் செல்லப்பட்ட வளை ஓடிச்சென்றவளாக சித்தரித்ததும் பெண்களேயன்றி ஆண்களில்லை. ஈஸ்வரின் சுயநலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எண்ணிய பெரியசாமி. அவளை அடைய திட்டம் ஒன்றை தீட்டினான். 

இவர்களது குணம் தெரிந்ததனாலோ இல்லை தாய்மையுணர்வினாலோ தான் பெற்ற செல்வங்களை தன்னோடு அவர் அழைத்து வரவில்லை. தாய்மையின் பூரிப்பு மேலும் அவரை மெருகேற்றியிருந்தது. பூங்கோதை ராணியின் மிடுக்குடன் வந்திறங்கினார். 

அவர் ஊருக்குள் வந்ததும் தந்திரமாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து நயமாக பேசி பூங்கோதையின் பெயரில் இருந்த சொத்துக்களை தன் பெயரில் மாற்றிக் கொண்ட ஈஸ்வர் சாப்பிடும் சாப்பாட்டில் விஷத்தை வைத்தார். பாசத்தோடு உறவாட வந்தவருக்கு விஷத்தை பரிசாக கொடுத்தார் ஈஸ்வர். 

எங்கே விஷத்தை முறித்து காப்பாற்ற பட்டுவிடுவார்களோ என்ற ஐயத்தினால் அவர்கள் சென்ற காரின் மீது லாரியை மோத செய்து  விபத்தை ஏற்படுத்தினார். அரை உயிராய் இருந்த பூங்கோதையை தன் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தினான் பெரியசாமி. 

தான் உயிர் பிழைத்து இழிவான வாழ்க்கை வாழ்வதை விட தன் கணவருடன் சேர்ந்து உயிர் நீப்பதையே பெருமையாக நினைத்த பூங்கோதை,  தனது கணவர் ராஜதுரையுடன் தன் உயிரை துறந்தார். 

ராணி பத்மாவதிக்கு முதலில் இருந்தே பூங்கோதையை பிடிக்கவில்லை. ராஜவம்சத்தை சேர்ந்தவரை தான் தன் மகனுக்கு மணமுடிக்க எண்ணினார். ஆனால் ராஜதுரையின் பிடிவாதத்தினால் பூங்கோதையை தன் வீட்டில் சேர்த்து கொண்டார். பேரக்குழந்தைகள் பிறந்த பிறகு தான் அவரை மருமகளாக ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் தன் மகனின் மரணத்திற்கு காரணமான ஈஸ்வரை அப்போது அவரால் ஏதும் செய்ய முடியாதநிலை. ஏனெனில் அரசியல்வாதிகளின் ஆதரவும் அவருக்கு இருந்தது. 

தன் பேரன்களுக்கு உண்மை தெரியாமல் வளர்த்து வந்தவர் உரிய வயது வந்ததும் அனைத்து உண்மைகளையும் தெரியப்படுத்தினார். சித்தார்த் அதிரூபன் சிவாங்கியை திருமணம் செய்ததும் மீண்டும் தன் மகனின் ஞாபகம் தான் அவருக்கு  வந்தது. ஆனால் ஒரு கல்லில் இரு மாங்காய் கணக்காக தான் சித்தார்த் அதிரூபன் சிவாங்கியை திருமணம் செய்தது. அதனை அவர் அறிய வாய்ப்பில்லை. 

“யோவ்.. பெரியசாமி.. என்னைய உன் மச்சானை நம்பி பலகோடி கணக்கான ரூபாயை தொழிற்சாலையில் இறக்கினால் இப்படி ஏமாத்திட்டான்.. நீ என்ன செய்வியோ.. ஏது செய்வியோ.. எனக்கு தெரியாது.. நம்ம கைய விட்டுப் போன தொழிற்சாலை அமைக்கும் திட்டம் திரும்ப நம்ம கைக்கு வந்தாகனும்.. அப்படியில்ல மாமனையும் மச்சானையும் புதைச்ச இடம் கூட தெரியாமல் செஞ்சுடுவேன்..”

“வேண்டா தலைவரே.. அப்படி எதுவும் பண்ணிறாதீங்க.. அந்த அபிமன்யுவை நான் பார்த்துக்குறேன்.. பொடி பையன் உங்க பவர் தெரியாம விளையாடுறான்.. நீங்க இதுக்காக டென்ஷன் ஆகாதீங்க.. அதான் நம்ம ஆளுங்க இருக்காங்களே..”

“முதல்ல அந்த விவசாயிங்ககிட்ட இருந்து நிலத்தை வாங்குற வழிப்பாரு.. சும்மா வாய்சவடால் விடாத.. அப்புறம் அந்த பொடியனோட பொணம் நம்ம ஊரு ஆத்துல மிதக்கனும்.. என்னைய எதிர்த்தா என்ன ஆகனும்னு காட்டனும்..”

“சரிங்க தலைவரே.. அடியாளுங்களுக்கு கொஞ்சம் பணம் செலவாகும்..”

“எல்லாத்தையும் நம்ம பிஏகிட்ட வாங்கிக்கோயா.. வேலை சரியா நடக்கனும்..”

“நாங்க பார்த்துக்குறோம் தலைவரே..”

அபிமன்யு அதிரூபனை கொலை செய்வதற்கான திட்டத்தை எம்எல்ஏ உடன் செய்தனர் பெரியசாமியும் ஈஸ்வரும். 

“பேபி..”

“சொல்லு அம்மு..”

“இந்த ஊரு காத்துல அவ்ளோ சுத்தமான ஆக்ஸிஜன் இருக்கு பேபி.. ஐ லைக் திஸ் வில்லேஜ்..”

“உனக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும் அம்மு..”

“பேபி..”

“சொல்லு அம்மு..”

“எனக்கு எப்போ பேபி வரும்?”

“நடக்க வேண்டியது நடந்தா.. பேபி வரும்..”

“நடக்க வேண்டியது எப்போ நடக்கும்?”

“ம்ம்ம்.. தாதி எப்போ சொல்றாங்களோ.. அப்போ நடக்கும்..”

“ஏன் பேபி? நமக்கு மேரேஜ் ஆகி என் இயர் ஆகுது பேபி.. இதுவரைக்கும் ஒரு கிஸ் கூட கொடுத்ததில்ல.. நிஜமாவே உனக்கு என்னைய பிடிக்குமா?”

“ஹேய்.. அம்மு.. என்ன ஸ்டுபிட் கொஸ்டின் இது? அஃப்கோர்ஸ் பேபி.. ஐ லவ் யூ சோ மச் டியர்..”

“அப்போ ப்ரூஃப்  பண்ணு..”

“கொஞ்சம் பக்கத்துல வா..”

“ம்ம்ம்.. போதுமா.?”

“இன்னும் பக்கத்துல வாடி..”

“இப்போ..”

“பத்தல..”

அவளை ஒரு சின்ன சென்டிமீட்டர் இடைவேளி கூட இல்லாத நிலையில் இடுப்பை வளைத்து இறுக்கி அணைத்தவன் தனது விரல்களை அவளது நெற்றியில் வைத்து அலைந்தவன் மெதுவாக கண்கள், மூக்கு, நாசி என வருடியவன் இதழ்களை அழுத்தி வருடினான். 

“ஏய்.. குளிக்கும் போது வெண்ணெய் தேய்ச்சு குளிப்பியா?”

“ஏன்?”

“வழுவழுன்னு.. சும்மா வெண்ணெய்ல ஊற வச்ச மாதிரி.. செமையா இருக்குடி..”

விரல்களில் பயணித்ததை உதட்டால் பயணித்தான். அவளது நெற்றியில் முத்தமிட ஆரம்பித்தவன் மெதுவாக கண்கள், கன்னகதுப்புகள், காதுமடல் என பயணித்து இறுதியில் இதழ்களில் வந்து இழைப்பாறினான். ஆரஞ்சு சுளைப்போன்ற இதழ்களை உயிரோடு சேர்த்து உறிஞ்சுபவன் போல் அவளது இதழ் தேனை அருந்தினான். 

தன்னிடம் மயங்கி கிறங்கி இருந்தவளை ஆசை பொங்க பார்த்தவன் அவளது எலும்புகள் போக அணைத்துக் கொண்டான். 

“என்னால் இப்போதைக்கு இது மட்டும் தான்டா முடியும்.. இன்னும் கொஞ்சம் உன் உடம்பு தேறுனதுக்கு அப்புறம் பார்டி மாமனோட திறமையை..”என தன் மனத்துக்குள் எண்ணிக் கொண்டான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *