உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

உண்மையெது? பொய்யெது? சொல்லிடு அன்பே!

அத்தியாயம் – 20

“கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” என ஐயரின் குரல் ஒலிக்க தன் கையில் இருந்த தாலியை எடுத்து நித்யகல்யாணியின் கழுத்தில் கட்டினான் அர்ஜுன். 

“யப்பா.. ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சது.. அப்புறோ மச்சி.. உங்களையெல்லாம் ஒரு மூணு மாசங் கழிச்சு வந்து பார்க்குறேன்..”

“ஹலோ மாப்ள சார்.. எங்க கிளம்பிட்டீங்க?”

“எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு மச்சி.. நவ்  ஐம்  குடும்பஸ்தன்..”

“அதுக்கு..”

“டேய் நல்லவனுங்களா.. என் பொண்டாட்டிய என்கூட அனுப்பி வைங்கடா.. உங்களுக்கு புண்ணியமா போகும்..”

“உன்னப் பார்த்தாலும் பாவமா தான் இருக்கு.. ஓகே இந்தா ஹனிமூன் கொண்டாட சுவிட்சர்லாந்துக்கு ஒன் மன்ந்த் ட்ரிப் அரேன்ஜ் பண்ணிருக்கோம்.. என்ஜாய்டா மாப்ள..”

“ஆஹா! ஆஹா! இதுவல்லவோ நட்பு.. சரக்கையும் கையில கொடுத்து கடிச்சுக்க  சைடிஷையும் கொடுக்கிற பார்த்தியா.. உன்னை மாதிரி நண்பன்  உலகத்தில எங்கே தேடுனாலும் கிடைக்க மாட்டான் மச்சி..”

“ஆனா.. உங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பு அரேன்ஜ் மெண்ட்ஸும் பண்ணிருக்கோம்.. சோ அதை தாண்டி எங்கேயும் போயிடாதீங்க..”

“ஓகே மச்சி.. நீ சொல்றது புரியுது.. உனக்காக நாங்க ரூமை விட்டு வேற எங்கேயும் போக மாட்டோம்டா.. நான் வரும் போது உங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வாரேன்.. ஓகே..”

“நீ போற ஸ்பீடப் பார்த்தா.. குச்சி மிட்டாய், குருவி ரொட்டி வாங்கிட்டு வர்ற மாதிரி தெரியல.. எங்க பிள்ளைக்களுக்கு விளையாட தங்கச்சி பாப்பா கூட்டிட்டு வரப் போற.. அது மட்டும் நல்லா புரியுது..”

“என்ன அபி.. கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லக்கூடாதுன்னு கூடவா தெரியாது.. என்ன காயூ? இப்படியா மாப்ளய வளர்த்து வைக்குறது.. அங்கப்பாரு.. சிவாங்கி எப்படி சித்தார்த்தை வளர்த்துருக்கான்னு.. அவகிட்டருந்து கத்துக்க..”

“நித்யா.. சிவாங்கிட்டருந்து நல்லா கத்துக்கோம்மா.. நாளப்பின்ன தேவப்படும்..”

“யூ டூ காயூ.. மை இமேஜ்.. டோட்டல் டாமேஜ்..”

“என்னடா அர்ஜுன்.. என்னைக்கு உனக்கு இமேஜ்னு ஒன்னு இருந்துருக்கு.. அது டாமேஜ் ஆகுறதுக்கு..”

“மச்சி.. விட்டுடுங்க டா.. புது மாப்ள டா.. இப்படி மொக்க போட்டு கொன்னுடாதீங்கடா..” என கலகலப்பாக இனிதே நடந்து முடிந்தது அர்ஜுன் – நித்யகல்யாணியின் திருமணம். 

திருமணம் முடிந்த கையோடு இருவரையும் ஹனிமூனுக்காக சுவிட்சர்லாந்து அனுப்பி வைத்தனர். இருவரும் காதல் கிளிகளாக சுற்றிவிட்டு காயத்ரி மற்றும் சிவாங்கியின் ஒன்பதாம் மாத வளைகாப்பிற்காக இந்தியா வந்தனர். 

அவர்கள்  சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வரும் போது தான் அவர்கள் இருவரும் அடையாளம் தெரியாத கூலிப்படையினர் மூலம் தாக்கப் பட்டனர். அவர்களிடமிருந்து தப்பித்து நித்யாவுடன் காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அவர்களுக்கு பாதுகாப்பிற்காக வந்தவர் தொடர்ந்து கூலிப்படையினருடன் சண்டையிட்டவாறு வந்தனர். தனது கைப்பேசியை எடுத்து சித்தார்த்தின் நம்பருக்கு அழைத்தான் அர்ஜுன். ஆனால் கைப்பேசி எடுக்கப்படவில்லை. சித்தார்த் அதிரூபன் மாத பரிசோதனைக்காக சிவாங்கியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான். 

“ச்சே.. சித்து பிக்கப் தி ஃபோன் டாமிட்..” என காரில் சென்று கொண்டிருந்த போது தங்களை பின் தொடர்ந்து வரும் கார்களை கவனித்த அர்ஜுன், சட்டென சுதாரித்து தன் அருகில் அமர்ந்திருந்த நித்யாவை காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டான். அவன் தள்ளிய வேகத்தில் வெளியே இருந்த புதருக்குள் விழுந்து அதிர்ச்சியில் மயக்கமடைந்தாள். தொடர்ந்து காரை செலுத்தியவனை  பின்னால் இருந்து காரினால் ஒருவன்  தாக்கினான். அதன் காரணமாக முன்னால் இருந்த கன்டைனர் லாரியில் மோதிய வேகத்தில் அர்ஜுனின் கார் தூக்கி வீசப்பட்டது. 

காயத்ரியை பரிசோதித்த மருத்துவர் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். சிவாங்கியை பரிசோதித்த மருத்துவர் அவரது வயிற்றில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் வலி வருவதற்கு முன்பாகவே ஆப்ரேஷன் மூலம் குழந்தைகளை வெளியே எடுக்க வேண்டும் என்றும் கூற, சித்தார்த் அதிரூபனிற்கு சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் தன் மனைவியின் உடல்நிலையை நினைத்து பதட்டம் ஒருபக்கம் இருந்தது. 

ஏனெனில் அவளோடு பலநாட்கள் மருத்துவமனைக்கு வந்தாலும் அவனிடம் இது குறித்து ஒருநாளும் மருத்துவர்  கூறவில்லை. சிவாங்கியின் தாயாருக்கும் அர்ஜுனுக்கும் மட்டுமே இதை பற்றி தெரிவிக்கப்பட்டது. சும்மாவே குழந்தைபேறால் பயந்து கொண்டிருக்கும் சிவாங்கியை மேலும் பயமுறுத்த விரும்பவில்லை. மேலும் சித்தார்த் அதிரூபனிடம் சொல்ல வேண்டாம் என அர்ஜுன் கேட்டுக் கொண்ட காரணத்தால் அவனிடமும் கூறவில்லை. இப்போது ஒன்பதாம் மாதம் நடப்பதாலேயே சித்தார்த்திடம்  தெரிவிக்கும்படியாகிற்று.

“மிஸ்டர். சித்தார்த் அதிரூபன்.. முதலிலேயே உங்கக்கிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன். பட் டாக்டர். அர்ஜுன் தான் இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டார். இதைப் பற்றி தெரிஞ்சா நீங்களும் உங்க மிஸஸும் பதட்டபடுவீங்கன்னு.. ம்ம்ம்.. இவங்க கூட ஒருத்தவங்க வருவாங்களே..”

“அவங்க இவளோட அம்மா..”

“ஆ.. அவங்ககிட்ட மட்டும் சொல்ல சொன்னார்.. உங்கக்கிட்ட சொன்னா பயந்துடுவீங்கன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டார்..”

‘டேய் அச்சு.. நானு பயந்துடுவேனா.. இருடா வந்து உன்னை கவனிச்சுக்குறேன்..’ என மனதுக்குள் நினைத்தாலும் வெளியில்,

“ஓகே டாக்டர்.. அவளை பத்திரமா பார்த்துக்குறேன்..” எனக் கூறினான்.

“கவனம் மிஸ்டர். சித்தார்த் அதிரூபன்.. அவங்களுக்கு வலி வர்றதுக்கு முன்னாடியே கூட்டிட்டு வரனும்..” என மருத்துவர் கூற சரியெனும் விதமாக தலையாட்டியவன், அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்த சிவாங்கியை  அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான்.

“டாக்டர் என்ன சொன்னாங்க?”

“டெலிவரிக்கு இன்னும் இரண்டு வாரம் தான் இருக்காம்.. வளைகாப்பு நடத்தி பீபி, சுகரையெல்லாம் ஏத்திவிட்டுடாதீங்க.. அவங்கள டையட் மெயிண்டெயின் பண்ண சொல்லுங்க.. அப்படினு சொன்னாங்க..”

“ஆமா.. அவங்க உப்பு சப்பு இல்லாத சாப்பாட்டை சாப்பிடுவாங்களா? அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?”

“ம்ம்ம்.. தெரியும்..”

“முதல்ல உங்களுக்கு தெரியுமா?”

“ஏய் நிறுத்துடி.. என்ன வாய் நீளுது? உனக்காக மாப்ளயும் பத்தியம் இருக்காரு.. தெரிஞ்சுக்கோ..”

“ஆ.. ஊன்னா உன் மாப்ளைக்கு சப்போர்ட் பண்ண வந்துருவியே..”

“பின்ன உன்ன பார்த்து பார்த்து கவனிச்சுக்குறாரு.. ஆனா அவரை கவனிச்சுக்கத் தான் ஆளில்லை..”

“வலி எனக்கு தானே வரும்? இல்ல அதில பாதிய இவர் வாங்கிப் பாரா?”

“அப்படி உனக்கு பதிலா இந்த வலிய கடவுள் எனக்கு கொடுத்தா? சந்தோஷமா தாங்கிப்பேன்..”

“அப்போ.. நான் இந்த குழந்தையை சந்தோஷமா சுமக்கலைன்னு சொல்றீங்களா?”

“அம்மா தாயே! போதும்.. இந்த காய் சூப்பை குடிச்சுட்டு தெம்பா சண்ட போடு..” என சிவாங்கியின் தாய் கொடுக்க, சூப்பை குடிக்க ஆரம்பித்தாள். அப்போது தான் அவளுக்கு தெரிந்தது, தான் எவ்வளவு பசியாய் இருக்கின்றோம் என்று.

அவளை வாஞ்சையோடு பார்த்து கொண்டிருந்தவனின் கைப்பேசி ஒலிக்க அதனை எடுத்து காதில் வைத்தவன் அதிர்ந்து போனான்.

“வாட்? அர்ர்ர்ர்ஜுஜுஜுன்ன்ன்.. என்ன சொல்றீங்க? மை காட்..” என பதறினான் சித்தார்த் அதிரூபன்.

“என்னாச்சு.. ஏன் டென்சனா இருக்கீங்கத்தான்..” காயத்ரி.

“ஒன்னுமில்ல.. ஒன்னுமில்ல.. பட்டு..” என காயத்ரியை சமாதானப்படுத்தியவன் அபிமன்யுவை தொடர்பு கொண்டான். அபிமன்யு அதிரூபன் கைப்பேசியை எடுக்கவில்லை. கோபத்தில் கத்தினான் சித்தார்த் அதிரூபன்.

“அபி.. அபி..”


சித்தார்த் அதிரூபன் கோபத்தில் கத்திக் கொண்டிருக்க அவனது கைப்பேசி அழைத்தது. அதனை எடுத்து காதில் வைத்தான்.

“ச்சு.. ச்சு.. தம்பி மேல எவ்ளோ பாசம்.. நீ துடிக்கிறதை நான் கேட்டா மட்டும் போதுமா? பார்க்கனுமே.. இப்போ சாயங்காலம் மணி அஞ்சு.. இன்னும் பத்தே நிமிஷத்துல ஹார்பர் வந்தேனா.. சாகப்போற உன் உடன்பிறப்போட முகத்தை கடைசியா ஒரு தடவை பார்த்துக்கலாம்.. உன் கவுன்டவுன் ஸ்டார்ட் நவ்..” அசோக்ராஜ்.

அசோக்ராஜ் பேசியதை வைத்து பார்க்கும் போது அபிமன்யு அதிரூபன் அவர்கள் கையில் இருப்பதை தெளிவாக அறிந்து கொண்டான் சித்தார்த் அதிரூபன். இப்போது அவன் மருத்துவமனையில் இருக்கும் அர்ஜுன் – நித்யாவை பார்ப்பானா? இல்லை வீட்டில் இருக்கும் கர்ப்பவதிகளை காப்பானா? தன் உடன்பிறப்பை மீட்பானா? திக்திக்கென நேரம் நிற்காது ஓடியது. 

“மிஸ்டர். கோபால்..”

“சார்..”

“வண்டிய.. ம்ஹும்.. வேண்டாம் நம்ம வீட்டுக்கு பின்னால் இருக்குற ரகசியபாதைல காயத்ரியை சாந்தியோட அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. ஃபாஸ்ட்..”

கோபாலுக்கு உத்தரவிட்டவன், மூர்த்தியின் மூலமாக சாந்தியின் அக்காவை தொடர்பு கொண்டு யாரும் அறிய வண்ணம் காயத்ரியை அவர்கள் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்தான். 

பிறகு கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்தான். தங்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் எப்படி அசோக்ராஜிற்கு போகின்றது என சிந்தித்தவனுக்கு சோனு விடையாக கிடைத்தான். சோனுவை வேலைக்கு சேர்த்தது தாதிமா. பல வருடங்களாக இங்கு வேலை பார்த்து வருகிறான். தன் நெற்றியில் தானே அறைந்து கொண்டான். ‘இதை எப்படி கவனிக்காம விட்டேன்..’ என யோசித்தவன் அவனை வீட்டைச் சுற்றிலும் தேடினான். அப்போது மீண்டும் அவனது கைப்பேசி அழைத்தது. 

“என்னப்பா சித்தார்த்? நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீ இன்னும் கிளம்பாம அங்கேயே இருக்குற? உனக்கொன்னு தெரியுமா? தம்பி உடையான் படைக்கஞ்சான்.. ஆனா பொண்டாட்டி போனா சகலமும் போயிருமாமே.. புரியலையா? இப்போ உன் பொண்டாட்டி எங்க இருக்கான்னு தேடி பாரு.. தம்பி பொண்டாட்டிய காப்பாத்த தெரிஞ்ச உனக்கு.. உன் பொண்டாட்டிய காப்பாத்த தெரியலையே.. வா.. வா.. சீக்ரம் ஓடி வா..”

அசோக் ராஜ் கூறிய  இடத்தை ஐந்தே நொடிகளில் அடைந்தவனை நோக்கி ஓடிவந்தனர் கூலிப்படையினர். ஓடி வந்தவர்களை பந்தாடினான் சித்தார்த் அதிரூபன். அங்கிருந்த கன்டெய்னரில் சிவாங்கியையும் அவளுடைய தாய் மற்றும் அப்பத்தாவையும் அடைத்து வைத்திருந்தனர்.  எந்த கன்டெய்னரில் யாரை அடைத்து வைத்திருக்கின்றனர் என தெரியாது குழப்பமடைந்த சித்தார்த் அதிரூபன், 

“அபி.. அபி.. சிவாங்கி..” என கத்தினான்.

 அவனுக்கு மிக அருகில் இருந்த கன்டெய்னரில் தான்  கண்ணாடி தொட்டிக்குள் சிவாங்கியின் கை கால்களை கட்டிய நிலையில் நிறுத்தியிருந்தனர். அங்கிருந்து அவள் கத்தினால் வெளியே இருப்பவருக்கு கேட்காத வண்ணம் அத்தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. தனது பெரிய வயிற்றை அசைக்கவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் இருந்தவளை கண்ட சிவாங்கியின் அப்பத்தா  சித்தார்த் அதிரூபனின் குரலை கேட்ட மறுநிமிடம் அவனிருக்கும் திசையை  நோக்கி சத்தமிட்டார்.

“மாப்ளஅஅஅஅஅ…” 

“மாப்ள அஅஅஅஅ..” 

அடுத்த முறை அவர் கத்துவதற்குள் அவரது கழுத்தில் கத்தியை வைத்தான் சோனு.

“கிழவி.. கத்துன.. சங்கருத்துருவேன்..” என அவன் மிரட்டியதையடுத்து கப்பென்று தன் வாயை மூடிக் கொண்டார் அப்பத்தா. சிவாங்கி இருந்த தொட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக கடல்நீர் நிரப்பப்பட்டது. அவளால் அசையக்கூட முடியவில்லை. அப்போது அவளது முதுகு தண்டில் விண்ணென்று ஒரு வலி வந்தது. முதல் சிறிது சிறிதாக வந்த வலி நேரமாக நேரமாக அதிகரிக்கத் தொடங்கியது. பிரசவ வலியால் துடித்தாள் சிவாங்கி. ஒருபக்கம் தண்ணீர் கொட்டிக் கொண்டுருக்க மறுபக்கம் பிரசவவலியால் உயிர் போனது. 

அப்பத்தாவின் குரலை கேட்ட சித்தார்த் அதிரூபன், அந்த கன்டெய்னரின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது சிவாங்கியின் மார்பளவில் தண்ணீர் ஏறியிருந்தது. 

“சிவாங்கி..” என சித்தார்த் அதிரூபன் ஒரு எட்டு வைப்பதற்குள் அவனது பின்னந்தலை தாக்கப்பட்டது. தன் மனைவியை அந்நிலையில் பார்த்ததும் சற்று நிதானமிழந்த சமயத்தில் அவனை தாக்கியிருந்தனர். தலையில் அடிப்பட்டதால் மயக்கமடைந்தான். தனது கை கால்களை கட்டிய நிலையில் அசோக் ராஜ் முன்னிலையில் மண்டியிட வைக்கப்பட்டுருந்தான் சித்தார்த் அதிரூபன். 

“ஏன்டா.. சித்து.. உன் தம்பியை பிடிச்சு வைச்சுருக்கேன்னு சின்ன பொய் தான் சொன்னேன்.. மொத்த குடும்பமும் என் காலடியில் இருக்கீங்க.. அதைவிடு.. இப்போ எதுக்கு உன்னை கூட்டிட்டு வந்துருக்கேன்னு தெரியுமா?”

அரை மயக்க நிலையில் அசோக்ராஜ்ஜை அரைகண் திறந்து பார்த்தான் சித்தார்த் அதிரூபன்.

“நீ.. என்னோட அம்மாவ கொன்ன.. என்னோட மகனையும் கொன்ன.. அந்த கணக்கை தீர்க்க வேண்டாம்.. அதான் உன் பொண்டாட்டி, அத்தை , பாட்டியோட, குடும்பம் மொத்தமா போய் சேருங்க.. என்னப் பார்க்குற? ம்ம்ம்.. அடடே.. ஒன்னை மிச்சம் வச்சுட்டேன்ல.. அபிமன்யு அதிரூபன்.. அவன் பொண்டாட்டி எங்கன்னு கரெக்டா சொன்னேனா? ரொம்ப நல்லது.. யாரையாவது ஒருத்தரை காப்பாத்தலாம்.. இல்லேனா தேடி கண்டுபிடிச்சு கடல்ல இறக்கி, அவனையும் போடுவேன்.. உன் தங்கச்சியையும் தங்கச்சி மாப்ளயையும் உயிருக்கு போராடுறாங்களாம்.. நம்ம பசங்க சொன்னாங்க.. கவலைப்படாத அவங்களையும் உன் பின்னாடியே அனுப்பி வைக்குறேன்.. அங்கப்பாரு உன் பொண்டாட்டி மூச்சு விட முடியாம திணறுறா.. அவளையும் கொல்லுவேன்.. நான் நினைச்சா.. இப்ப இந்த நிமிஷமே உன்னை கொல்ல முடியும்.. ஆனா மாட்டேன்.. உன் குழந்தைங்க உன் கண் முன்னாடியே சாகனும்.. வேணும்னா உனக்கு ஒரு ஆஃபர் தரவா? வேற ஒன்னும் இல்ல.. உன் தம்பியையோ..அவன் பொண்டாட்டியையோ எங்க இருக்காங்கன்னு மட்டும் சொல்லிடு.. உன்னையும் உன் குடும்பத்தையும் விட்டுறேன்.. என்ன சொல்ற?”

“ஹாஹாஹா.. ஹாஹாஹா.. நீ என்னை கட்டி வச்சுருக்கேன்னு நினைப்பா? கைகட்டு அவிழ்ந்து ரொம்ப நேரமாச்சு.. முடிஞ்சா உன்னை காப்பாத்திக்க..” என கூறிய சித்தார்த் அதிரூபன், தன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினான். 

சித்தார்த் அதிரூபன் சண்டையிடுவதை பார்த்த அப்பத்தா, தனக்கு பின்னே இருந்த சோனுவின் உயிர்நாடியில் படுமாறு தனது பின்னங்காலை தூக்கி பேக்சாட் அடிக்க நிலை குலைந்தான் சோனு. அவன் கையில் இருந்த கத்தியை ஒரே தட்டில் கீழே விழ வைத்தார். அவனது வலது கையை முறுக்கி திருப்பி, வலது காலில் ஓங்கி மிதித்தார். அவனது இடது கையை தனது பற்களால் கடித்து அதில் அவன் வைத்திருந்த ரிமோட்டைப் பிடிங்கி விழுந்து கொண்டிருந்த தண்ணீரை நிறுத்தினார். சிவாங்கியின் தாயாரை கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார் அப்பத்தா.

சிவாங்கியின் தாயாரும் அப்பத்தாவும் சேர்ந்து நீர்த்தொட்டியில் இருந்து அவளை வெளியே  தூக்கினர். வெளியே வந்ததும் கைகால்களில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தனர். பிரசவ வலி அதிகமான காரணத்தினால் கத்த தொடங்கினாள் சிவாங்கி. அவளை மறைவாக ஓரிடத்திற்கு கூட்டிச் சென்றனர்.

அங்கிருந்த அத்தனை பேரையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த சித்தார்த் அதிரூபனின் முன்னிலையில் பெரிய திரை தொலைகாட்சி ஒன்று தெரிந்தது. அதில் அர்ஜுனும் அவன் அருகில் கத்தியோடு இருவரும் தெரிந்தனர். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சித்தார்த் அதிரூபன் தன்னையும் அறியாமல்,

“நோஓஓஓஓஓ..” என கத்தினான். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவனை இருபுறமும் அங்கிருந்த அனைவரும் பிடித்துக் கொண்டு அசையவிடாமல் செய்தனர். 

“உன் குழந்தையைத் தான் முதல்ல கொல்லனும்னு நினைச்சேன்.. ஆனா வான்டட்டா நீயே உன் தலையை கொடுக்குறியே..” என அசோக்ராஜ் கூற, அவரின் அருகில் இருந்தவன் பெரிய ராடு போன்ற இரும்பு கம்பியை எடுத்து அவனின் முகத்தில் தாக்க ஓங்கினான். 

ஓங்கியது மட்டும் தான் அவனுக்கு தெரியும். அடுத்த நொடி அந்த ராடை வைத்திருந்தவர் சுருண்டு விழுந்தான். தன் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு சித்தார்த் அதிரூபனை தாக்க வந்தவனின் நெற்றியில் சுட்டான்.   சித்தார்த் அதிரூபனை தாக்க வந்தவன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான். 

சித்தார்த் அதிரூபனை விட்டு விட்டு தன்னை நோக்கி ஓடிவருபவர்களை சரமாரியாக சுட்டான் அபிமன்யு அதிரூபன். எந்த ராடால் சித்தார்த் அதிரூபனை தாக்க வந்தனரோ அதை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினான். 

“ஏய்.. நீ.. நீ.. நீ.. எப்படி?”

“என்னடா கடலுக்குள்ள மூட்டையா அனுப்பியவன்.. எப்படி கண்ணு முன்னாடி வந்தான்னு ஆச்சர்யமாயிருக்கா?” என பேசிக் கொண்டே அங்கிருந்தவர்களை பந்தாடினான் அபிமன்யு அதிரூபன். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார் அசோக் ராஜ். ஏனெனில் அவனை மூட்டையாக கட்டி கடலில் வீசுமாறு உத்தரவிட்டவரே அவர்தான்.

“தெரியல?” அபிமன்யு அதிரூபன்.

“ம்ஹும்.. தெரியல.. வேண்டாம்.. என்னை விட்டுடு.. நான் சென்ரல் மினிஸ்டர்..” அசோக் ராஜ்.

“அது நேத்து வரைக்கும்.. இப்போ.. இந்த நிமிஷம்  நியூஸ் பார்த்தியா? ஆட்கடத்தல், சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர். அசோக் ராஜை அவரது பதவியில் இருந்து நீக்கியது கட்சி மேலிடம்.. ச்சு.. ச்சு.. பாவம் பல்லு போன பாம்பாகிட்டியே அசோக்கு.. அத நினைச்சாத் தான் நாங்க முடியல.. ஆமா நீ பதவியிறங்க யார் காரணம்னு நினைக்குற? சஸ்பென்ஸா இருக்கா?” அபிமன்யு அதிரூபன்.

“டேய் உன்னை..” அசோக் ராஜ்.

“ஒன்னும் பண்ண முடியாது.. ம்ம்.. பரவால்ல சஸ்பென்ஸோடவே செத்துப் போ..” எனக் கூறிய அபிமன்யு அதிரூபன், அசோக்ராஜின் நடுநெற்றியில் குறி வைத்து சுட அவ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடலை கல்லில் கட்டி நடுக்கடலில் தூக்கி வீசினான் அபிமன்யு அதிரூபன். அவரைப் பற்றிய சின்ன தடயம் கூட அங்கில்லாமல் அழித்தான். 

சிவாங்கியின் அலறல் சத்தம் கேட்ட சித்தார்த் அதிரூபன், அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு காரை நோக்கி விரைந்து சென்றான். காரினை மின்னல் வேகத்தில் இயக்கி, மருத்துவமனைக்கு சென்றான். 

சிவாங்கி ஐசியூவிற்கு கொண்டு செல்லப்பட்டாள். பிழைப்பதற்கு அம்பது சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாக மருத்துவர் கூறிச் சென்றார். வாழ்வில் முதல் முறையாக என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணில் நீரோடு நின்றிருந்தான் சித்தார்த் அதிரூபன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *