ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

This entry is part 34 of 39 in the series ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2



அசுரன் – 2 



சாலையோரத்தில் தன் ஸ்கூட்டியை நிறுத்திய மங்கையவளோ பதற்றத்துடன் வண்டியை விட்டு கீழிறங்கி அந்த மரத்தின் அருகில் நின்ற ஆண்மகனிடம் விரைந்தாள். 


உடல் எங்கும் பதற்றம் வியாபித்து இருக்க, அவளது மெல்லிய உடலும் சற்றே நடுங்கத் தொடங்கியது. கண்ணீர் சுரப்பிகளோ தினமும் பசு பால் கறப்பதைப் போலத்தான் அவளுக்கு சுரந்து கொண்டே இருக்கும். 


நான்கு வருடங்களின் முன்போ தன்னை எதிர்ப்பவர்களையே அழ வைத்து பழகிய ஓவியா தற்போது அனைத்துக்குமே அழுது கரைந்தாள். 


வாழ்வில் இழக்கக் கூடாத ஒன்றை இழந்தவளுக்கு வாழ்வே வெறுமையாகித்தான் போனது. தன் உயிரானவன் கொடுத்து விட்டுச் சென்ற உயிர் முத்துக்காக தன் வாழ்க்கையினை புதிதாக ஆரம்பித்தாள். 


தர்ஷனின் இறப்பு கிரியைகள் அனைத்தும் செய்து முடிக்கும் வரைக்கும் அவள் உயிரோடு இருந்ததே வியக்கத்தக்கது. 


ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுது கரைந்தவளுக்கோ குற்ற உணர்வு நிதமும் தாக்க, அதைத் தாங்க முடியாது அனைவரிடமும் நடந்த அத்தனை உண்மைகளையும் கூறி தர்ஷனின் மீது சுமத்திய வீண் பழியை நீக்கினாள்.


தர்ஷனின் வீட்டிலோ உண்மை அறிந்து அனைவரும் துடித்து போயினர். தவறே செய்யாத மாணிக்கத்தை அல்லவா எல்லோரும் சேர்ந்து அடித்துத் துன்புறுத்தி விட்டார்கள்… மூர்த்தி கூட ஓர் நொடி அதிர்ந்து கதறி விட்டார். 


கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல காலம் கடந்து வருந்தி பயன் இல்லையே… 


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில்….???? இவர்கள் யாசிக்கும் மன்னிப்பை காது கொடுத்துக் கேட்க அவன் மீண்டு வரப்போவது இல்லையே….


உண்மை அறிந்த குடும்பத்தினரின் சீற்றம் எல்லையைத் தாண்டிவிட ஓவியாவை திட்டித் தீர்த்தனர். ஈட்டி குத்துவதைப் போன்ற அவர்களது வார்த்தைகள் யாவும் அவளை வதைக்க மன அழுத்தம் தாங்காது வீட்டை விட்டு வெளியேறியவள்தான். நான்கு வருடம் கடந்த பின்பும் கூட அவள் தன் இல்லம் செல்லத் துணியவே இல்லை.


இலங்கையில் இருந்து சென்னை வந்தவள் தன் படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக் கொண்டாள். 


முன்பு மாபெரும் ஐடி நிறுவனத்தை திறம்பட நடத்திய மங்கையின் நிலையோ தற்போது முன்னேற்றம் அடைந்தது. ஆம் முன்னேற்றம்தான்  ஆனால் தலைகீழ் முன்னேற்றம்.


சென்னை ஐடி கம்பனி ஒன்றில் சேர்ந்தவள் அந்த கம்பனிக்குச் சற்றுத் தொலைவில் இருந்த   பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் மகனோடு வசிக்கின்றாள். 


இன்றும் வேலை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தவளுக்கோ சாலையோர மரத்தின் அருகே நின்ற ஆண்மகன் தர்ஷனைப் போல இருக்க சட்டென தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஆவலோடும் பதற்றத்தோடும் அந்த ஆணை நெருங்கினாள். 


“தர்ஷும்மா……” அவளது குரல் தேன் குழைத்து அமிழ்தம் தடவி காதலாய் கரைந்து பாகாய் அந்த ஆண்மகனின் காதல் விழ ஓவியாவைப் பார்த்து திரும்பினான் அந்த ஆடவன். 


வழக்கம் போல மீண்டும் ஏமாந்து போனாள் அந்தக் காரிகை. திரும்பிய வேற்று ஆடவனது அறியாத பார்வையில் தன்னை நொந்து கொண்டவள் “சாரி… சாரி பிரதர்….” என மன்னிப்பை யாசித்தவாறு அவ்விடம் விட்டு விரைந்து நகர்ந்தாள். 


காணும் யாவிலும் அவன் முகமே…….
சிந்தை எங்கிலும் அவன் சிந்தனையே….
அவளுக்கு முப்பொழுதும் அவன் கற்பனையே….


அவனது இறப்பை ஏற்றுக் கொள்ளாத இதயம் அவனை காணும் இடம் யாவிலும் தேடித் தவித்தது. காதல் ஓர் சுகவதை போல தேடலும் ஒரு வித சுகவதைதான். 


கானல் நீரைத் தேடிக் களைத்தவள் போல தன் ல்கூட்டியில் ஏறியவள் தன் இல்லம் நோக்கி விரைந்தாள். கண்களில் நின்றும் வழிந்த கண்ணீர் அவள் கழுத்து தாண்டி பயணித்தது.


தூசி எனும் துரும்பு கூட தன் மீது படாது ஏசி காரில் வந்து போன மங்கையோ இப்போது வீதி முழுதும் பைத்தியம் போல தர்ஷனைத் தேடி அலைகிறாள். 


மனதை திடப்படுத்தியவள் தன் பிளாட்டின் கதவினைத் திறந்தாள். பலர் வசிக்கும் அந்தக் கட்டடத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள அறையே ஓவியாவின் தற்போதைய இல்லமாகும். 


வீட்டின் கதவை திறந்தவளை புன்னகை முகம் மாறாத தர்ஷனின் ஆள் உயர புகை படமே வரவேற்றது.


அந்த படத்தை பார்க்கும்போது எல்லாம் அவன் நேரில் நிற்பது போன்ற பிம்பம் அவளுக்கு எப்போதுமே தோன்றும். 


அவனே நேரில் நின்று தன்னை அணைத்து வரவேற்பது போல அகம் மகிழ்ந்து போனாள். வீட்டினுள் நுழைந்து கதவைத் தாழ் இட்டவள் தர்ஷுமா என்று ஓடிவந்து படத்தை தொட போன சமயம் “மேடம்……” என்ற குரல் அவளை தடுத்து நிறுத்தியது.


கதவுக்கு வெளியே கேட்ட புதிய ஆண் குரலில் திகைத்தவள் “யாரு…..???” என பதில் கேள்வி கேட்டாள். 


“பால் கொண்டு வந்துருக்கேன் மேடம்…..” என்றதும் இலகுவான மூச்சை வெளியேற்றியவாறு கதவினைத் திறந்து பாலை வாங்க அவரது கையோ தவறுதலாக இடறி பால் முழுவதும் அவள் மேல் கொட்டியது.


“ம்ப்ச்…. என்ன அண்ணா இப்படி பண்ணிட்டீங்களே…..” என சினந்தவளைப் பார்த்து அசட்டுப் புன்னகையை வெளியேற்றியவர் “சாரிமா…..” என்றார்.


“ஹூம்ம் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க வந்துர்றேன்….” என்றவாறு ஓவியா அருகே இருந்த அறையின் பாத்ரூமிற்குள் நுழைந்து தன் ஆடையில் கொட்டியுள்ள பாலை கழுவத் தொடங்கினாள்.


அதே நேரம் சத்தமின்றி அந்த அறைக்குள் நுழைந்த பால்காரனோ மனம் முழுவதும் நிறைந்த தவறான எண்ணத்துடன் ஓவியாவின் அருகே வந்து அவள் பின் உடலோடு ஒட்டி நிற்க ஓவியாவுக்கோ உடல் மின்சாரத்தால் தாக்கியதைப் போல தூக்கிவாரி போட்டது. 


அதிர்ந்து சட்டென விலகியவள் அவனை வெறித்துப் பார்த்தாள். அவள் கரங்களோ நடுங்கத் தொடங்கின.


“வ்வெளியே போங்க……” என அழுத்தமாகக் கூறியவளுக்கோ உடல் விதிர்த்துப் போனது.


அவனோ அவளை கோணல் பார்வையுடன் எதிர் நோக்கியவன் “என்ன மேடம் நீங்களும் எத்தனையோ வருஷமா புருஷன் இல்லாம தனியா தானே இருக்கீங்க… உடம்பு தவிச்சுப் போயிருக்கும்…. அதனால கொஞ்ச நேரம் நான் தொட்டுப் பார்க்கவா….??? சுகம்மாஆஆ இருக்கும்…..” என்றவாறு அவளது தோளில் கரம் பதித்தான். 


அடுத்த நொடியே எங்கிருந்துதான் ஓவியாவுக்கு அத்தனை வேகம் வந்ததோ அருகில் இருந்த வெண்கலச் சிலையை எடுத்து அவனது நடு மண்டையிலேயே அடித்து விட்டிருந்தாள். 


அவனோ வலியில் “ஆஆஆஆஆ……” என அலறியவன் அவளை அடிக்கக் கை ஓங்க வெளியே கதவு திறக்கும் சத்தம் கேட்டது.


யாரோ வருகிறார்கள் என்பதனை அறிந்த பால்காரனோ தலையைத் தன் கையால் பற்றிக் கொண்டவன் “என்னையவே அடிச்சிட்டேல்ல…. இருடி உன்னை கதற விடுறேன்… இந்த வீட்ல தனியாத்தானே இருக்க…..” என அவளிடம் அவசர அவசரமாக பேசியவன் சட்டென அந்த அறையில் இருந்து வெளியேறினான். 


ஓவியாவோ துடிதுடித்துப் போனாள்… அந்தக் காமுகன் கூறிய வார்த்தைகள் யாவும் கொடிய நஞ்சுடைய பாம்பு விஷத்தைக் கக்கியது போல இருந்தது. 


சட்டென தரையில் மடிந்து அமர்ந்தவள் தன் இழி நிலை எண்ணி கதறத் தொடங்கினாள். இரவு அவன் மீண்டும் வந்து விடுவானோ என எண்ணியவள் நடுங்கிப் போனாள்.


இது போல அவள் எத்தனையோ ஆண்களை சந்தித்து விட்டாளே…. ஒரு பெண் தனியாக வாழ்ந்தால் இப்படிப்பட்ட அசிங்கத்தை எதிர் நோக்கித்தான் ஆக வேண்டுமா….??? அவள் உடல் அச்சத்தால் அசைவற்றுப் போனது.


இந்தக் காமுகர்களிடம் இருந்து அவள் எப்படித் தப்பிப்பாள்….??? இவர்களுக்குப் பயந்து எத்தனை வீடுதான் மாறுவது…?? கண்களில் நின்றும் வழிந்த கண்ணீரை அழுந்தத் துடைத்தவள் அவன் கரம்பட்ட தன் தோளை தேய்த்துக் கழுவினாள்.

இது ஒன்றும் அவளுக்குப் புதிதல்லவே…. கசந்த புன்னகையை சிந்தியவாறு வெளியே வந்தவளை எதிர் கொண்டான் அவளது செல்ல மகன். 


“ம்மாஆஆ. நீ இங்க இதுக்கியா….??” எனக் கேள்வி கேட்டவனை தூக்கி உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டாள் ஓவியா.


“ஆமாடா கண்ணா…. மலர் அக்கா கூடவா வந்தீங்க….???”


“ம்ம்…..”


“அவங்க எங்கேப்பா….”


“வேலை இருக்குன்னு என்னை விட்டுட்டுப் போய்த்தாங்க மா….” என்றவாறு ஆடைகளை கழற்றி எல்லா பக்கமும் வீசி எறிந்தான் ரித்தீஷ்…


தர்ஷனுக்கும் ஓவியாவுக்கும் பிறந்த அழகான அரும் பெரும் பொக்கிஷம்…


“மா…. ஏன் பால்… கொட்டிட்டா….” என்ற தன் மகனது பேச்சில் மீண்டும் அவளது சிந்தனை சற்று முன் நடந்த அசம்பாவிதத்தை எண்ணியது.


தன் ஆருயிர்க் கணவன் இருந்திருந்தால் தனக்கு இந்த இழி நிலை வந்திருக்காதே என எண்ணி எண்ணி வருந்தித் துடித்தாள்.


அழகினைச் சிந்தும் அவள் மை விழிகளோ தற்போது சோர்ந்து போய் இலக்கின்றி எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தன… 


அந்த அழகியின் சில அவசரத் தவறுகள் அவள் வாழ்வினையே தடம் புரட்டிப் போட்டுவிட, அவள் வாழ்வே இருளால் சூழ்ந்து போனது. 


காலம் பல கடந்த பின்பும் அவனை நினைத்ததும் சரேலென அவளது கண்களின் நின்றும் கண்ணீர் வடிந்தோடியது. 


“ம்மாஆ…… ம்மாஆ…. காத்தூன் (கார்டூன்) போத்து விதுங்க…….” என்றவாறு தவழ்ந்தும் நடந்தும் விழுந்தும் வந்தான் தர்ஷனின் தவப்புதல்வன். 


சட்டென கண்களைத் துடைத்துக் கொண்ட ஓவியா தன் மகனுக்காக தொலைக்காட்சியை ஆன் செய்தாள். 


அதே நேரம் ஸ்டார் சேனலில் ஒளி பரப்பாகிக் கொண்டிருந்த ராக்ஸ்டார் மியூஸிக் நிகழ்ச்சியில் கூடி இருந்த மக்களின் மத்தியில் ஒளி வெள்ளம் பாய மேடை ஏறியவனைப் பார்த்து நெஞ்சில் கைவைத்தபடி சிலையாகிப் போனாள் ஓவியா. 



“வெல்கம் மிஸ்டர் வருண் ராகவ்….” என அவனை பலத்த கரகோஷங்களுடனும் கைதட்டல்களுடனும் மக்கள் வரவேற்க, 


ஆண் மாடல்களும் தோற்றுவிடும் விதத்தில் ஸ்டைலாக மேடை ஏறியவன் தன் கையில் இருந்த மைக்கை உயர்த்திக் காட்டி “ஹாய் மை லவ்லி ஏஞ்சல்ஸ் அன்ட் ஹேண்ட்ஸம் படீஸ்…..” எனக் கத்தினான். 


அவனது குரலுக்கு கட்டுப்பட்ட ரசிகர்கள் அந்த அரங்கமே அதிரும் வகையில் கத்திக் கூச்சலிட்டனர். 


ஓவியாவோ தொப்பென தரையில் மடிந்தமர்ந்தவள் தான் கனவு காண்கிறோமோ என எண்ணி தன் கன்னங்களில் பலமாக அடித்தாள்…. தன் உடலை தன் கையால் வதைத்தாள்… வலி சுலீரென அவளைத் தாக்க, அவளது விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.


 ‘என்னோட தர்ஷுவா இது……?????” என்றவள் ஓடி வந்து தொலைக்காட்சியில் தெரிந்த அவன் உருவத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள்.


திரையில் ஜொலித்துக் கொண்டிருந்தவனோ தன் கையில் இருந்த மைக்கை உதட்டருகே கொண்டு சென்று முத்தம் பதித்தவன் வசீகரமான குரலில் பாடத் தொடங்கினான்.


“”” யார் கையில் வந்து
யார் சேர்ந்திருப்போம் யார்
சொல்வதில்லை காட் டிசைட்ஸ்
சம்திங்……

லட்சம் பேரை
பார்த்திருப்போம் சும்மா
பேசி சென்றிருப்போம்
யாரோ ஒருவர் மீது மட்டும்
ஏதோ வந்தால் சம்திங்….

தகிட ததுமி தகிட
ததுமி ஆட்டம் போடும்
நெஞ்சம் தயங்கி தயங்கி
மயங்கி போகுமே……..

சடாரென்று என்னை
சாய்த்து விட்ட பெண்ணை
கொண்டு செல்ல வந்து
விட்டேன் ஆஆ

ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க
பாக்க நேரம் இல்லையா……”””


என காந்தக் குரலில் பாடலைப் பாடி முடித்த வருண் “ஐ லவ் யு பேபி…….”என்க, அவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் ஒரு அழகி.


திரையில் கண்ட காட்சியில் ஐம்புலன்களும் செயல் இழந்துவிட உறைந்து போயிருந்தவளது கண்கள் மாத்திரம் கண்ணீரைப் பொழிந்து கொண்டே இருந்தன.


“இது…. இது   என்னோட தர்ஷுமாதான்….. அவனேதான்….” என அவள் உள்ளம் உரத்துக் கூற மங்கையவளோ அசைவற்று தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்தாள்.


அதே நேரம் டீவியில் வேறு நிகழ்ச்சி ஒலி பரப்பாக பதறி எழுந்தவள் திரையில் அவனைக் காணாது தவித்துப் போனாள். 


‘என்னோட தர்ஷுவை இனி நான் கண்டு பிடிச்சிருவேன்…’ என அவளது காதல் கொண்ட மனம் அவனைத் தேடி கண்டுபிடிக்க சித்தம் கொண்டது.


காதல் காரிகையின் கணவனோ மீண்டு வருவானா…???

பெண்ணவளின் மெய் தேடல் தொடரும்……..


💜💙அசுரன் வருவான்💙💜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *