ஆளை அசத்தும் அசுரா

This entry is part 27 of 39 in the series ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2



அசுரன் – 25
 
ராவணனது மனமோ தறிகெட்டு ஓடியது. உதித்தனாவின் அவசரத்தால் ஏற்பட இருந்த இன்னலை எண்ணி வருந்தியவன் தன் தலை முடியை அழுந்தக் கோதினான். 

சட்டென தன் காரை நிறுத்தியவன் உதியின் போனை எடுத்துப் பார்த்தான். அதில் ஷர்வித்னு சொல்லி வந்துள்ள குறுஞ்செய்திகளைப் படித்தவனது குருதி கொதித்தது. 

‘ஷர்வித்னு பொய் சொல்லி என்னோட மனைவியோட விளையாடிப் பார்த்திருக்கியா…. நான் தரப் போற தண்டனைல  தினமும் உன்னை செத்துப் பிழைக்க வைக்கிறேன்டா……’  என சபதமெடுத்தவனின் ஒற்றைப் புருவம் மேல் உயர்ந்து தாழ்ந்தது.

அதே நேரம் உதித்தனாவிடம் இருந்து முனகல் சத்தம் வெளிப்பட, அவனது உடலோ இரும்பாக மாறி விறைத்துப் போனது…

“நீ.. நீ.. யாரு….??? நீ ஷர்வித் இல்ல……”

“நோ……… நோ…. ப்ளீஸ் என்னை விட்ருங்க….. என்னை ஒன்னும் பண்ணிராதீங்க…”

“அம்மாஆஆஆஆ…… வ்விடு வ்விடுடாஆ……”

“ம்மாஆ…. ம்மாஆ என்னோட ட்ரெஸ்… நோ….. ப்ளீஸ்……” என ஏதேதோ புலம்பியவளது உடல் கிடுகிடுவென நடுங்கத் தொடங்க சட்டென காரை நிறுத்தி அவளது மயக்கத்தை தெளிய வைத்தான்..

அவளோ கண்களைத் திறந்த பின்பும் “அவன்… தப்பா தொடுறான்….. நோ…” என்றவாறு அதிர்ச்சியில் மூச்செடுக்க முடியாது சிரமப்பட அவளது கரத்தைப் பற்றியவன் “ரிலாக்ஸ்…. ரிலாக்ஸ் உதி…..  உனக்கு ஒன்னும் ஆகலை… உன்கூட நான் இருக்கேன்…” என்றவாறு அவளைத் திடப் படுத்த முயன்றான். 

நடந்ததையே நினைத்து அச்சத்தில் இருந்தவள் ராவணனை அருகே பார்த்ததும் “ராவணா…….” என அழைத்தாள். 

அவளது அழைப்பில் அவனது உடல் இன்னும் இறுகிப் போனது. தன் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது என்ன என்பது போல அவளைப் பார்த்தான் ராவணன். 

சட்டென சீட்டில் இருந்து எழுந்தவள் தடுமாற்றத்தோடு அவனது முகம் பார்த்தவாறு அவனுடைய மடியிலே அமர்ந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்…. 

தன்னுடைய சில்லிட்ட முகத்தை அவனது கழுத்து வளைவில் புதைத்தவள் “எனக்கு ரொம்ப பயமா இருக்கு……..” என மெல்ல முணுமுணுத்தாள். 

அவளது செயலில் அவனுடைய காதல் கொண்ட மனமோ தீயாய் தகிக்கத் தொடங்கியது.. தன் மேல் அட்டை போல உடல் முழுவதும் அழுந்தும் வகையில் அணைத்தவாறு கிடந்தவளின் உடல் தூக்கிப் போடுவதை உணர்ந்தவன் அவளைச் சுற்றி தன் வலிமையான கரங்களைச் செலுத்தி அணைத்துக் கொண்டான். 

சற்று நேரத்திலே முழு சுய நினைவும் வரப் பெற்றவள் தாரை தாரையாக கண்ணீர் சிந்தத் தொடங்கினாள். 

“எனக்கு அவன் தொட்ட இடமெல்லாம் நெருப்புப் பட்டது போல எரியுது…. என்னால தாங்கிக்க முடியலை…… உங்களைத் தவிர வேற யார் தொட்டாலும் எனக்கு இப்படித்தான் இருக்கும்…. ஏன்னா நான் உங்களை கா…………….”

“ஷட் அப் உதித்தனா…. ஜஸ்ட் ஷட் அப்…….” அவனது திடீர் கர்ஜனையில்  பெண்ணவளோ ஆடிப் போனாள்.

பெருமூச்சுடன் அவளைத் தூக்கி பக்கத்து இருக்கையில் அமர வைத்தவன் தன் காரை மீண்டும் ஓட்டத் தொடங்கினான். அவன் உடலோ கோபத்தில் எதையாவது உடைத்து நொறுக்க வேண்டுமெனத் துடித்தது. 

உதித்தனாவோ ராவணனது கோபத்திற்கு காரணம் தான் வீட்டை விட்டுச் சென்றதுதான் என நினைத்தவள் அவனைக் கெஞ்சுதலாகப் பார்த்தாள். “சாரி…. சார்… அவன் ஷர்வித்னு சொன்னான்… சூசைட் பண்ணப் போறதா சொன்னான் சார்…. அதனாலதான் போனேன்…….” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவன் காரை நிறுத்தினான். 

அவளோ அவனை புரியாமல் பார்க்க, அடுத்த நொடி அவளது கன்னத்தில் பளாரென ஓங்கி அறைந்தான் ராவணன். 

அவனுடைய பலம் பொருந்திய கைத் தசைகளின் வீரியத்தில் அவளது கன்னம் சிவந்து உதட்டோரம் ரத்தம் கசியத் தொடங்கியது. 

“யார் ஷர்வித்…????? யாருடி ஷர்வித்….???? அவன் ஷர்வித்னா அபாபோ நான் யாரு ஆங்…….???? எவன் வந்து உன்னோட புருஷன்னாலும் நம்பிருவியா நீ…….????? நீ படிச்ச பொண்ணு தானே அறிவு இல்லையா சே….. உன்னோட களிமண் மூளைல நல்லா ஏத்திக்கோ நான்தான் உன்னோட புருஷன்…. நான் மட்டும்தான் உன்னோட புருஷன் புரிஞ்சுதா…..??? ஏய் புரிஞ்சுதாடி……????? எனக் கர்ஜித்தான்.

அவளோ தன் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டவள் “நோ…… நோ…. இது நிஜம் இல்ல… நீங்க பொய் சொல்றீங்க……. நான் நம்ப மாட்டேன்…. நீங்க ராவணன்தான் ஷர்வித் கிடையாது……” என்றவாறு அழுதவளின் தலை முடியை இறுகப் பற்றியவன் “விடிஞ்சதும் உனக்கே எல்லா உண்மையும் புரியும்…. நான் ஷர்வித்தா  ராவணனான்னு உன்னோட குடும்பமே சொல்லும் ஜஸ்ட் வெயிட்…..” என முகம் இறுக கூறியவன் காரை மின்னல் வேகத்தில் செலுத்தத் தொடங்கினான்.

அதே நேரம் தன் போனில் யாருக்கோ அழைப்பெடுத்தவன் ஸ்பீக்கரை அவுட் மோடில் போட்டவாறு பேசத் தொடங்கினான். அவனது பேச்சைக் கேட்ட பெண்ணோ விக்கித்துப் போனாள். 

“ஹாய்டா…. மிட் நைட்ல டிஸ்டர்ப்  பண்ணிட்டேனா…….?????”

“நோ…. நோ…. மச்சான். நீங்க கால் பண்ணதே ரொம்ப சந்தோஷமா இருக்கு…… ஆஸ்திரேலியால இருந்து ஸ்ரீலங்கா வந்துட்டீங்க…. வந்ததுக்கு ஒரே ஒரு தடவை தானே எங்க வீட்டுக்கு வந்தீங்க…. அதுக்கப்புறமா இன்னும் எங்க வீட்டுக்கு வரலை…” எனக் குறைபட்டுக் கொண்டான் நம் சாக்லேட் பாய் தர்ஷன்.

“ஹா… ஹா… போன மாசம் தானே வந்துட்டுப் போனேன்…. இப்போ ரொம்ப பிஸிடா…… அதனாலதான் வர முடியலை…”

“இட்ஸ் ஓக்கே ….. உதியைத் தேடிகிட்டுத்தான் இருக்கேன்…. எங்கே இருக்கான்னே தெரியலை…. அவளால நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டீங்கன்னு தெரியும்…. இருந்தாலும் அவளுக்காக நான் உங்க கிட்ட சாரி கேட்கிறேன் மச்சான்…” 

“நோ நீட் தர்ஷன்….. நான் ஏன் கால் பண்ணினேன்னா இன்னும் நாலு மணி நேரத்துல நானும் உன்னோட தங்கச்சியும் உங்க வீட்ல இருப்போம்……”

“என்னது…..!!” என ஒரு கணம் அதிர்ந்தவன் பேச மறந்து போனான். அடுத்த நொடியே கலங்கிய குரலில் “மச்சான் நீங்க சொல்றது நிஜமா???? உதி உங்க கூடவா இருக்கா……????”

“ம்ம்   ஆமா….. இப்போ கார்ல வந்துட்டு இருக்கோம்…. மூர்த்தி அங்கிளுக்குச் சொல்லிடு….. நேர்ல பேசிக்கலாம்… பை….” என்றவாறு அழைப்பைத் துண்டித்தவன் உதித்தனாவை அர்த்தத்துடன் பார்த்தான். 

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கோ கண்கள் மங்கின………….
காதுகள் அடைத்தன…….
அதிர்ச்சியில் பிரிந்த உதடுகள் இணைய மறந்தன…..
உடலோ சாபம் பெற்ற அகலிகை சிலை போல் மாறியது….. 
ஐம்புலன்களும் செயலற்றுப் போக அவள் இதயம் மாத்திரமே துடித்து அவள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாள் என்பதை உணர்த்திக் கொண்டிருந்தது. 

அவளது அசைவற்ற உடலைப் பார்த்து ஒரு கணம் ராவணனே அதிர்ந்து போனான். 
“உதி…….”
“உதி………….”
“உதீஈஈஈஈஈ………” 
அவனது தொடர் அழைப்புக்கோ அவள் எந்தவித துலங்கலையும் காட்டாது இருக்க சட்டென காரை நிறுத்தியவன் அவளது இரு தோள்களையும் பற்றி “உதித்தனாஆஆஆ……….” என உரத்த குரலில் அழைத்தான்.

அவனது அதட்டலில் சுயம் அடைந்தவள் ஹாஆஆஆ….. ஹாஆஆஆ…… என வேக வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டாள். 

அடுத்த நொடியே விம்மி வெடித்து வெளிக் கிளம்பியது அழுகை.

தாலி கட்டிய கணவனையே அடையாளம் தெரியாத தன்னை நொந்து கொள்வதா……??????
ராவணன்தான் கணவன் என அறியாது அவனிடமே தான் திருமணமானவள் எனக் கூற வைத்த விதியை நொந்து கொள்வதா…????
அனைத்து உண்மையும் தெரிந்தும் கைகட்டி யாரோ போல நின்ற ராவணனை நொந்து கொள்வதா…..???

யாரையும் நொந்து கொள்ள பிரியப்படாத பூஞ்சை மனம் கொண்ட பெண்ணவளோ தன் நெற்றியில் அடித்துக் கொண்டு கதறத் தொடங்கினாள். 

இத்தனை நேரமும் அவளது அதிர்ச்சியையும் போராட்டத்தையும் வெறித்துப் பார்த்தவன் அவளது அழுகையைக் காணப் பிடிக்காது முகம் திருப்பிக் கொண்டான்.

அவளது அழுகையோடு மெல்ல மெல்ல பொழுதும் விடிந்தது. அழுதழுது உடல் சோர்ந்து விசும்பியவாறே உறங்கிப் போனவளை தட்டி எழுப்பினான் ராவணன். 

முகம் வீங்கி கண்கள் சிவந்து இருந்தவளைப் பார்த்தவனின் மனமும் வேதனை கொண்டது. 

“கம் வித் மீ……” என்றவாறு அவன் இறங்கி ஹோட்டலுக்குள் நுழைய முகத்தைத் துடைத்தவாறு அவன் பின்னே அமைதியாகச் சென்றாள்.

அவன் தன்னைக் கடத்தி வைத்திருந்த போதே அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனால் தன் கற்புக்கு எந்த ஆபத்தும் வராது என எண்ணி ஒரே படுக்கையில் அவனோடு இரவைப் பகிர்ந்தவளுக்கு அவன்தான் தன் கணவன் என அறிந்ததும் அவன் மீது கொண்ட நம்பிக்கை வானளவு உயர்ந்தது. 

அவளுடைய ஊர் வந்தும் அவளுடைய வீட்டிற்குப் போகாது ஹோட்டலுக்கு அழைத்து வந்தவனை யோசனையுடன் பார்த்தவள் ஏதும் கூறாது அவன் சென்ற இடத்திற்கெல்லாம் அவன் பின்னேயே சென்றாள். 

அவளது மனமோ சற்று நிம்மதி அடைந்தது. இத்தனை நாட்களாக ஷர்வித்திற்கு துரோகம் செய்கிறோமோ என எண்ணி தவித்தவள் தற்போதே நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். 

அவளது மனதில் புகுந்து காதல் எனும் கள்ளம் விதைத்த கள்வனே தன் மணாளன் என அறிந்ததும் அவளது முகம் மகிழ்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக மலரத் தொடங்கியது. 

ஆம் ராவணனிடம் தன் மனதை எப்போதோ பறி கொடுத்தவள் அது ஷர்வித்திற்கு செய்யும் துரோகம் என்பதை எண்ணி அவள் மனதை மறைத்தாள். முளைத்த காதலை முளையிலேயே கிள்ள முயன்றவள் முடியாது தவித்து தடுமாறியதை அவள் மனம் நன்கு அறியுமே. 

அவளது சிந்தனையை தடை செய்தவன் “உள்ளே வா…….” என்றவாறு அவளை அழைக்க அந்த பெரிய அறையினுள் நுழைந்தவள் அவனைக் கேள்வியுடன் பார்த்தாள். 

அவளது ஏன் என்ற கேள்வியைப் புரிந்து கொண்டவன் அவளை அழைத்து வந்து கண்ணாடியின் முன் நிறுத்தினான்.

“இப்படியே உன்னோட வீட்டிற்கு உன்னைக் கூட்டிப் போக எனக்கு விருப்பமில்லை…..” என்றவனது பதிலில் தனது விம்பத்தைக் கண்ணாடியில் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

கூந்தல் கலைந்து முகம் வீங்கி ராவணனது டீஷேர்ட்டை அணிந்தவாறு நின்ற தன்னை அவள் வெறித்துக் கொண்டிருக்க, அவளைப் படுக்கையில் அமர்த்தியவன் அவளது உதட்டோரம் காய்ந்திருந்த உதிரத்தை பஞ்சினால் துடைத்தான். 

அவள் தடுப்பதற்கு முன்னரே அவள் அணிந்திருந்த டீஷேர்ட்டைக் கழற்றி எடுத்தவன் அவளது ஆடையற்ற முதுகைப் பார்த்தான். 

அவள் சட்டென நகர்ந்து தன்னை மறைத்துக் கொள்ள “முதுகுல அந்த நாயோட நகம் பட்டுருக்கு… திரும்பு மருந்து போட்டு விடுறேன்……” என்றவனது உணர்ச்சியற்றக் குரலில் அவளோ அசையாது நின்றாள். 

பஞ்சை எடுத்து மருந்தில் நனைத்தவன் அவளது கரம் பற்றி அந்த முதுகிலே மருந்திடத் தொடங்க உதித்தனாவின் உடலோ கூசிச் சிலிர்த்தது. 

வெண்மையான பட்டுப் போன்ற மெல்லிய அவள் தேகத்திலே அந்தக் காமுகனின் நகம் பட்டு ஆங்காங்கே கண்டிச் சிவந்திருந்தது. ராவணனின் முகமோ சட்டென இறுகிப் போக அவளை விட்டு விலகியவன் தன் கரத்தை ஓங்கிச் சுவற்றில் அடித்தான். 

அவனது செயலில் பதறியவள் அவனது கரத்தைப் பற்றி தடுத்து நிறுத்த அவனோ தன் கரத்தை மீண்டும் சுவற்றில் ஓங்கிக் குத்தினான். 

“ஐயோ ப்ளீஸ்…… நிறுத்துங்க….. ஏன் இப்படி பண்றீங்க…” என அழுதவாறு அவனைத் தடுக்க முயன்று முடியாது போக அவனுக்கும் சுவற்றுக்கும் இடையே புகுந்து கொண்டாள். 

அவனோ சினம் தாங்காது கையை ஓங்கியவன் அவள் இடையே நுழைந்ததும் ஓங்கிய தன் கரத்தை கீழே இறக்கினான். 

“தள்ளிப் போ…….” என்ற கர்ஜனையில் அச்சம் பிறந்தாலும் அவன் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதை சகியாதவள் நடுக்கதுதுடனே அவன் கரம் பற்றி வருடி விட்டாள். 

அவளது மென்மையான வருடலில் அவனது சினம் சிறுக சிறுக குறைந்து கொண்டே போனது……

அவளது கிழிந்த ஆடையோ அவளது தோளில் இருந்து நழுவத் தொடங்க சட்டென விலகத் தொடங்கியவளை தடுத்து நிறுத்தியவன் அவளது இடையில் கரம் பதித்து அவளைத் தன் உயரத்திற்கு தூக்கி அணைத்தான். 

முதல் முறை இவன் என் கணவன் என்ற உரிமை உணர்வு அவளைத் தாக்க, அவனது கழுத்திலே கரம் கோர்த்தவள் கண் மூடி அவனது தோளில் சாய்ந்தாள்.

அவளது திடீர் நெருக்கம் அவனைப் பித்தம் கொள்ளச் செய்தது. ஆசைக் காதல் மனைவியின் நெருக்கம் எந்த ஆண்மகனுக்குத்தான் கசக்கும்….?????

“உதிம்மாஆஆஆஆ……” என்றவனது கரகரப்பான குரலில் நிமிர்ந்து பார்த்தவளின் இதழ்களை ஆசையாய் அளவிட்டவன் அதன் சுவையை சுவைக்க எண்ணி முன்னேறினான். 

அவனது கரங்களோ ஒரு வித அவசரத்துடன் அவள் உடல் எங்கும் எல்லை மீறி அலைபாய மங்கையவளோ நடுக்கத்துடன் அவன் உடலோடு ஒட்டிக் கொண்டாள். 

காதலைத் தாண்டி கணவன் மனைவி என்ற உரிமைப் பந்தம் அங்கே மெல்ல மெல்ல மலரத் தொடங்கியது. அவளது முகம் நிமிர்த்தியவன் அவள் இதழ்களை சிறைப்படுத்தினான். 

அவளது முதுகிலே தன் கரத்தைப் படர விட்டவன் “ஸ்ஸ் ஆஆ…..” என்றவளின் வேதனைக் குரலில் சட்டென விலகினான். 

அவளது முதுகில் இருந்த நகக் கீறல்கள் மீண்டும் நினைவு வர அவளது கழுத்தை இறுகப் பற்றியவன் “என்னை ஏமாத்திட்டு ஓடிப் போறது உனக்கு பழகிடிச்சில்ல……” எனக் கர்ஜித்தான்.

அவளோ ஏன் நெருங்கினான்?? எதற்கு முத்தமிட்டான்…..??? எதற்காக விலகினான் எனத் தெரியாது விழித்தவாறு நின்றாள். 

“அன்னைக்கும் தாலி கட்டிய அன்னைக்கே விட்டுட்டு ஓடிப்போன…. இரவும் எவனோ போன்ல புருஷன்னு சொன்னதும் ஓடிப் போற… நீ உன்னோட மனசுல என்னைப் பத்தி என்னதான் நினைச்சுகிட்டு இருக்க…… ஆங்?????? என்னைப் பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா……????” என்றவன் அவளது கலங்கிய விழிகளைப் பார்த்து “சே……” என அவளை விட்டு விலகியவன் அவளுக்காக வாங்கி வைத்திருந்த புதிய ஆடையைக் கொடுத்தான். 

“பத்து நிமிஷத்துல ட்ரெஸ் மாத்தி ரெடியாகிரு…….உங்க வீட்ல எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிகிட்டு இருக்காங்க….” என்றவாறு அந்த அறையை விட்டே வெளியேறினான்.  

அந்த ஹோட்டலின் தோட்டத்திற்கு சென்றவனோ அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.

எதைப் பற்றியும் சிந்திக்காது அவசரப் புத்தியோடு செயற்படும் உதித்தனாவோடு வாழும் வாழ்க்கை அவசியம்தானா…..? என்ற கேள்வி முதன் முறையாக அவன் மனதில் தோன்ற, அவளை அவள் வீட்டில் ஒப்படைத்துவிட்டு ஆஸ்திரேலியா செல்லும் கசப்பான முடிவை எடுத்தான்.

💜💙உதிக்கும்💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *