காதலெனும் கவிதை சொல்லடி.

காதலெனும் கவிதை சொல்லடி

காதலெனும் கவிதை சொல்லடி.

காதலெனும் கவிதை சொல்லடி.

காதலெனும் கவிதை சொல்லடி.

காதலெனும் கவிதை சொல்லடி.

2. கவிதை…

முத்தத்தால் யுத்தம் செய்தாய்…
முத்தத்தால் மட்டுமே உயிர் கொள்ள செய்தாய்….

போனையே பார்த்தபடி நின்ற சிலையென நின்ற முகிலை “என்னங்க மாமாவா?” அவன் பதிலுக்கு தலையை மட்டுமே ஆட்டினான்….

“அவருக்கு தெரியாததா?. என்ன சொன்னாங்க?”
“பத்திரமா போய்ட்டு வர சொன்னாங்க”
“இதெல்லாம் அந்த கூட்டத்துக்கு தெரிந்தால் அவ்வளவு தான்”

“விஷேசம் முடிந்தால் போக வேண்டியது தானே?” அவனுக்கு கோபம் தான்..
“இது நல்ல கதையா இருக்கே” பேசியபடி வீட்டை விட்டு வெளியே வந்து கதவை பூட்டினர்….

எப்படியும் அந்த மனித கேமராக்கள் இவர்களின் செய்கைகளை படம் பிடித்து கொண்டு இருக்கும்…

வேண்டுமென்றே தனது கையால் அவளை தோளை சுற்றி போட்டு கொண்டு நடந்தான்…..

முகில் வேந்தன் முல்லை ரதி இருவரும் அவினாசி தான்டி புளியம்பட்டி சென்றனர்…

அவர்கள் போய் சேரும் போது மதியம் ஆகி இருந்தது… அவர்கள் இறங்கி அந்த தோப்பு வழியாக அவர்கள் வீட்டை அடையும் போது அவனுக்கு பல ஞாபகங்கள்…

தனது தந்தை வரும் போது எல்லாம் அவனுக்கு வாங்கி வரும் பொருட்கள், தீபாவளி பொங்கல் அப்போ அவனுக்காக வாங்கி வரும் டவுசர் சட்டை, அவர் இங்கு வந்தார் என்றால் அவரை விட்டு பிரியவே மாட்டான்….

பின் அவரது வருகை கொஞ்சம் கொஞ்சமாக நின்று தான் போனது…
முதலில் தந்தையின் வருகைக்கு ஏங்கியவன் தான் இனி அவர் வரவே போறது இல்லை என்று மனதில் பதிந்த போது அவருடைய வருகையின் நிழல்கள் மட்டும் மனதில் ஆசையாக பதிந்து போனது….

திருநாவுக்கரசு தெய்வானை தம்பதிகளின் ஒரே புத்திரன் தான் இந்த முகில் வேந்தன்…

வீட்டில் பார்த்து பெண்ணை கட்டினாலும் தெய்வானையோடு வாழ்ந்த அந்த ஒரு வருடமும் அவர்களுக்கு சொர்க்கமே…

முகில் பிறந்த போது தெய்வானை தெய்வத்திடம் சரணடைந்தார்…

ஆனால் அவனின் தந்தையோ மனைவியின் இழப்பில் தன்னை இழந்தவர் மகனை எப்படி வளர்த்து ஆளாக்க போகிறோம் என்ற கவலையில் பிறந்த சிசுவை தூக்க கூட தெரியாமல் தத்தளித்தார்….

தெய்வானை தாய் மருதாயி தான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்…
“மாப்பிள்ளை பச்சை பிள்ளைய வைச்சுட்டு நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க?”

“எனக்கு அதெல்லாம் கஷ்டமா தெரியல அத்தை. உங்க மக கூட வாழ கொடுத்து வைக்கலையே?” அவரது கவலை மனைவி போனது தான்… மகனை எப்படியும் வளர்த்து விடலாம் என்று நம்பிக்கை…

“அந்த புண்ணியவதிக்கு அப்படி என்ன அவசரமோ…. பிறந்த சிசுவை கூட பார்க்காமல் கண்ணை மூடிட்டு போய்ட்டாளே” போன மகளை நினைத்து அழுவதா??? வாழும் வயதில் துணையை இழந்து நிற்கும் மனிதனை நினைத்து வருத்தம் கொள்ளுவதா??? பிறந்து தாய் பால் கூட குடிக்காத பேரனை நினைத்து
மருகுவதா??? அந்த வயதில் அவருக்கு தான் எத்தனை வலிகள்….

ஆனாலும் மாமியாரும் மருமகனும் அவனை நன்றாக தான் வளர்த்தனர்…

ரதி வீட்டை திறந்து உள்ளே சென்றவள், அங்கு உள்ள சாமி படத்துக்கு விளக்கை ஏற்றினாள்… முகிலனோ அந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டான்…

அவனுடைய அம்மமாவும், முல்லை ரதியும் இல்லை என்றால் அவனுடைய வாழ்க்கை நினைத்து கூட பார்க்க முடியவில்லை….

அந்த திண்ணையிலே படுத்து விட்டான்…
அவனது கண்கள் கண்ணீரை வடித்தது…

விளக்கை ஏற்றியவள் வெளியே வந்தாள்..
மனைவி வரவும் கண்ணீரை மறைத்தவன் “காற்று நல்லா அடிக்குதுல”
“ஆமாங்க”
“இங்கு தான் சின்ன வயசுல நல்லா விளையாடினேன்”
“ம் நானும் தானே வருவேன்”
“ஆமா எப்பவுமே என்ற சட்டைய பிடிச்சுட்டே வருவ”
“அதுல ரொம்ப வருத்தமா ஐயாக்கு”
அவளும் கணவனுக்கு எதிராக அமர்ந்தாள்…

“கொஞ்சம் யோசிச்சு இருந்து இருக்கலாம்னு இப்போ தோணுது”
“இப்பவும் ஒன்றும் பிரச்சினை இல்லை” முகத்தை திருப்பி கொண்டாள்…

இது அவர்களுக்குள் அடிக்கடி நடக்கும் பேச்சு வார்த்தை தான்..
ஆனால் இதில் துளி அளவு கோபமோ வெறுப்போ சலிப்போ எதுவுமே கிடையாது…

“சாப்பிடலாமா?”
“வா காலையிலே சாப்பிடல” இருவரும் சாப்பிட உள்ளே சென்றனர்….

திருநாவுக்கரசு முகில் பிறந்த நேரம் மிகவும் கஷ்டபட்ட தொழிலாளி தான்…
அன்றாடம் கூலிக்கு தான் வேலைக்கு சென்றவர்…

தெய்வானையோடு வாழ்ந்த போது ஆடம்பர வாழ்க்கை இல்லை என்றாலும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு வருமானம் வந்தது…

இழந்த மனைவியின் துக்கத்தை நினைத்து வாழ்க்கையை இழக்காமல் அந்த வெறியை தொழிலில் காட்டினார்…

தினமும் திருப்பூருக்கு காலையில் செல்பவர் இரவில் தான் வருவார்…
துங்கும் மகனை பார்த்தபடி உறங்கி போவார்…

மருமகனின் அலைச்சலை பார்த்த மருதாயி தான் “மாப்பிள்ளை உங்களுக்கு தான் தினமும் போக வர அலைச்சல் அங்கனயே ஒரு வீடு பார்த்து இருங்க” என்றார்…

“அத்தை பையனையும் வைச்சுட்டு என்னால் தனியா அங்க இருக்க முடியாதே” அவர் அங்கே தங்கினால் தனது மகனும் தானே வர வேண்டும் அந்த எண்ணம் தான்… எங்கேயும் மகனை விடுவதாக இல்லை…

“நான் என்ற பேரை பார்த்துக்கிறேன். நீங்க லீவு நாட்களில் வந்து பாருங்க” மருமகனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்…

வார நாட்களில் உழைக்கும் திருநாவுக்கரசு வார இறுதியில் பொக்கை வாய் காட்டி சிரிக்கும் முகிலை காண ஓடி வந்தார்….

இது அவனின் ஐந்து வயது வரை நடந்தது… உழைப்பு கை கொடுத்து சிறு தொழிலாக அவரே தொடங்கினார்…

அவரும் கொஞ்சம் தெளிந்து வந்தார் தெய்வானையின் இழப்பில் இருந்து…

சிறு வயதிலேயே மருமகன் துணையை இழந்து தவிப்பது மருதாயிக்கு கஷ்டமாக இருந்தது… அவரிடமே நிறைய பேர் மருமகனை மாப்பிள்ளை கேட்க ஆரம்பித்தனர்….

பின் அவருக்கும் மருமகனை நினைத்து கவலை தானே.. அதனால் அவர் தான் மாப்பிள்ளையிடம் பேசினார்…

“மாப்பிள்ளை நீங்க இன்னொரு கல்யாணம் செய்துக்கோங்க”
“உங்களுக்கு பையனை பார்க்க சிரமமாக இருக்கா?” அதுக்காக தான் அப்படி சொல்லுறாங்கனு இவராகவே நினைத்து கொண்டார்….

“என் பேரனை பார்க்கிறதுல எனக்கு என்ன கஷ்டம் வர போகுது”
“பிறகு ஏன் அத்தை” மகனை தனது தோளில் வைத்து விளையாட்டு காட்டியபடி பேசினார்….

“இல்லை மாப்பிள்ளை நீங்களும் சின்ன வயசு தானே. உங்களுக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு மாப்பிள்ளை” திருநாவுக்கரசு சாமனியமாக ஒத்து கொள்ளவில்லை…

ஆனால் மருதாயி தான் பேசியே அவரை சரி செய்தார்… அப்படி திருமணம் ஆகி வந்தவள் தான் ஜானகி… தரகர் மூலமாக வந்த பெண் தான்… அவளின் குடும்ப கஷ்டத்திற்கு கல்யாணம் ஆகுமானு இருந்த நிலையில் தான் இந்த திருமணம் ஆனது….

திருமணம் கோவிலில் தான் நடந்தது..
மருதாயிக்கு மருமகன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று தான் நினைத்தார்… அதனால் அவர் பேரனை மருமகன் என்ன சொல்லுகிறார் என்று தெரிந்து அதன் பிறகு முடிவு எடுக்கலாம் என அமைதியாக இருந்து கொண்டார்…

திருமணம் முடிந்ததும் முகிலை அவர் அப்பா தூக்கி வைத்து கொண்டார்…
அப்போது ஆரம்பித்தது தான் ஜானகியின் பிடித்தமின்மை….

ஆனால் ஜானகியின் பொற்றோர் நல்லவர்களாக இருந்தனர்… முகிலை தனது பேரனாக தான் நினைத்தனர்…

ஜானகியோடு கூட பிறந்த மற்ற மூன்று பெண்களுமே இந்த சிறு வயதிலே தாய் இல்லையே? என்ற கவலையும் இனி தங்களது தங்கையாவது அவனை நன்றாக வளர்ப்பாள் என்ற நம்பிக்கையில் தான் இருந்தனர்….

“அத்தை இனி நானே முகிலை வைச்சுக்கிறேன்” திருமணம் முடிந்ததும் திருநாவுக்கரசு கேட்டது இது தான்…

“மாப்பிள்ளை உங்க பையனை உங்க கிட்ட தான் கொடுக்க வேண்டும்… ஆனால்”
“என்ன அத்தை யோசனை”
“இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு. நீங்க புது வீடு பார்த்து எல்லாம் சரி பண்ணுங்க. பிறகு பார்க்கலாம்”
அதாவது புதிதாக திருமணம் ஆனவர்கள் உடனே பையனை அனுப்பினால் அவர்களுக்கு தனிமை வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் மருதாயி அப்படி சொன்னது….

“அத்தை நான் நல்லாவே வளர்ப்பேன்” அவனுக்கு இனியும் மகனை பிரிய இஷ்டமில்லை….

“ஒரு மாதம் ஆனதும் வந்து கூட்டிட்டு போங்க” அத்தோடு முடித்து கொண்டார்..
என்னைக்கு இருந்தாலும் அவர்கள் சொத்து தானே மனதை கல்லாகி கொண்டு கூறினார் மருதாயி….

திருநாவுக்கரசு ஜானகி இல்லறம் இனிதாக தொடங்கியது… மூன்று வேலை சாப்பாட்டு கஷ்டம் இல்லாத ஜீவனாக இருந்த ஜானகிக்கு தனி வீட்டில் வசதிகளோடு கணவனோடு தனி ராஜ்ஜியம் அமைந்ததில் தானாக கொம்பு முளைத்து தான் போனது….

“ஜானு நான் போய் முகிலை கூட்டிட்டு வரேன்” மனைவியிடம் ஒரு வார்த்தை சொன்னார்…

“ஏங்க நான் ஒன்று சொல்லவா”
“என்ன ஜானு” கணவனின் நெஞ்சில் படுத்து, ஏகாந்த இரவில் மதி மயக்க செய்யும் வார்த்தையில் கொஞ்சி பேசினாள்….

“நீங்க காலையிலே வேலைக்கு போறீங்க”
“ஆமா”
“நமக்கு இது தான் காலம் சம்பாதிக்க”
“அது தான் நான் சம்பாதிக்கிறேனே”
“அது இனி பத்தாதே”
“இருக்கிறதுல தான் குடும்பம் நடத்தனும்”
“இல்லைங்க நீங்க ஒத்தை ஆளாக கஷ்டபட வேண்டாம். நானும் உங்க கூட வேலைக்கு வரேன்” அவளுக்கு எப்படியாவது இன்னும் பணக்காரராக வர வேண்டும் என்ற ஆசை தான் அவளை கணவரோடு சேர்ந்து உழைக்க வேண்டும் என்று தூண்டியது….

இப்படி மனைவி தன் கூட வேலைக்கு வருகிறேன். உழைக்க நானும் ரெடி தான் என்று சொல்லும் மனைவியை எந்த கணவனுக்கு தான் பிடிக்காமல் போனது….

“அப்போ முகிலு”
“நாம இரண்டு பேருமே வேலைக்கு போனால் அவனை பார்க்க முடியாதுல” பேச்சோடு பேச்சாக அவருக்கு முத்தமிட்டு அவரை வேறு உலகத்துக்கு இழுத்து சென்றாள்….

“அப்போ என்ன செய்யலாம்?”
“அந்த அம்மாவே வளர்க்கட்டும். அவுங்க பேரன் தானே”
“அவுங்களும் தனியா தான் இருக்காங்க”
இப்படியாக முகில் வளர்ப்பு மருதாயி வசமே இருக்குமாறு ஜானகி தந்திரமாக செய்து விட்டாள்….

பின் அவள் கருவுற்றது தொழில் விரிவாக்கம் திருநாவுக்கரசு வாழ்வு செழிப்பு நிலையை அடைந்த நேரம் மற்றொரு குழந்தை இவ்வாறு முகிலே அவர்களது வாழ்வில் வரவிடாமல் ஜானகி தனது சில செயல்களால் பார்த்து கொண்டாள்…

முதலில் எதையும் தவறாக நினைக்காத திருநா பின்பு மனைவியின் குணம் தெரிய ஆரம்பிக்கும் போது மகன் மனதில் இனி தந்தை நமக்கு இல்லையோ என்று பதிந்து போனது அவருடைய துரதிஷ்டவசமாக போனது…

ஆனால் இதை முன்பே கனித்த மருதாயி தனது ஒத்து மொத்த அன்பையும் பேரனுக்கு ஊட்டி தான் வளர்த்தார்…

ஆனால் திருநாவுக்கு மகனின் பாசத்தை யாருக்கும் தெரியாமல் மனதிலே தான் வளர்த்து வந்தார்… சிறு வயதிலேயே அடிக்கடி சென்றவர் பின் மாதங்கள் இடைவெளியில் சென்று பார்த்து வந்தார்…

எந்த சொத்தையும் கணவன் தங்களது பேரிலே வாங்குவது போல் அமைத்தும் கொண்டார்… ஆனால் முகிலோ தனது தந்தை வந்தால் இரண்டு வார்த்தை பதில் சொல்லுவானே தவிர பேசியதில்லை….

பாசம் இல்லாமல் இல்லை.. அளவுக்கு அதிகமாக பாசமே அவனை மெளனம் கொள்ள வைத்தது… தந்தையிடம் பாசத்தை வெளிப்படையாக காட்டியதில்லையே தவிர அவருக்காக உயிரையும் கொடுக்க கூட தயாராக தான் இருந்தான்….

அப்படி திருநாவுக்கரசு உயிருக்கு போராடிய நேரத்தில் அவர் கொடுத்த உயிரால் தனது இரத்தத்தை கொடுத்து அவரை மறுபடியும் உயிர்பிக்க செய்து தனது கடமையை செய்வனே செய்தான்….

இப்படி தான் தந்தை மகனது உறவு மறுபடியும் உயிர்பெற்று “இனி நீ என் கூடவே இருக்கனும்” மகனிடம் சத்தியம் வாங்கி தங்களோடு தங்க வைத்து கொண்டார்….

அதன் பிறகு தான் முகில் வேந்தன் முல்லை ரதி இருப்பிடம் திருப்பூரானது…
ஆனால் திருப்தியாக இல்லாமல் போனது….

(டார்லிங்ஸ் எனக்கு முகிலை ரொம்ப பெஸ்ட்டா கொடுக்கனும் ரொம்ப யோசிக்கிறேன். ஆனால் எனக்கு அது ரொம்ப டைம் எடுக்குது. இனி ஆழ்ந்து யோசிக்காமல் என் மனதில் உள்ளதை வைத்து அவனுக்கு உயிர் கொடுத்து விடுகிறேன். அவனையும் உங்களுக்கு பிடிக்கும்)

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *