ஆளை அசத்தும் அசுரா

This entry is part 26 of 39 in the series ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2



அசுரன் – 24 

இரவு நேர நிசப்தத்தை இடையூறு செய்யும் வகையில் வண்டுகளுடைய இரைச்சல் அந்த வீதியெங்கும் ஒலிக்க, அந்த வண்டுகளின் ஒலியையும் விஞ்சும் வகையில் காற்று பேரோசையோடு வீசியது.

உதித்தனாவோ ஓர் உயிரைக் காப்பதே முக்கியம் எனக் கருதியவள் அதனால் வரப் போகும் பின் விளைவுகளைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் ராவணனை விட்டு தன்னந்தனியாக நள்ளிரவில் வந்திருந்தாள். 

“அம்மாடி இந்த நடுராத்திரில ஏன்மா தனியா வந்தே…..?????” எனக் கேட்டார் அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த முதியவர்.

“நான் இந்த ஊர் இல்ல தாத்தா….. வழி மாறிப் போயிட்டேன்….. என்னோட கணவர் லோட்டஸ் ஹோட்டல்லதான் இருக்காரு…. என்னை அங்கேயே ட்ராப் பண்ணிருங்க தாத்தா……” என்றவளைக் கனிவாகப் பார்த்தவர் “சரிம்மா பயப்படாத…. உன் குரல்ல படபடப்புத் தெரியுது….  உன்னை நான் பத்திரமா கொண்டு போய் விட்டுர்றேன்…….” என்றவர் வீதியைப் பார்த்து வண்டியை ஓட்டினார்.

அவளது அமைதியும் வாடிய தோற்றமும் அவரைத் தாக்க அவளை இலகுவாக்க முயன்றார்.
“அம்மாடி… என்னோட பேத்தியும் உன்னை மாதிரிதான் அழகா இருப்பா….. இப்போ ஊருக்குப் போய் அவளைப் பார்த்துட்டுதான் வர்றேன்….”

அவரைப் பார்த்து புன்னகைத்தவள் “உங்க பேத்தியோட பேரு என்ன தாத்தா……?????” எனக் கேட்டாள்.

“சுதா நித்தியானந்தம்…… என் பேத்தியோட பேரு சுதா…. அவளோட வீட்டுக்காரர் பேரு நித்யானந்தம்……”

“ஓக்கே தாத்தா…. நைஸ் நேம்…….” 

அவரோ காரை ஹோட்டலின் முன் நிறுத்தியவர் “அம்மாடி..  நீ சொன்ன ஹோட்டல் வந்திருச்சுமா….” எனக் கனிவோடு கூறினார்.

“ரொம்ப நன்றி தாத்தா…..” என்றவாறு  இறங்கியவள் அவரிடம் தலையசைத்து விடை பெற்றுக் கொண்டு அந்த ஹோட்டலினுள் நுழைந்தாள். 

அந்த ஹோட்டலோ மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்க அதனுள் ஒளிர்ந்த மின்விளக்குகள் இருளைக் கிழித்து ஒளி வெள்ளத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தன. 

மனதில் சற்றே அச்சம் பிறக்க தடுமாறியவாறு எந்தப் பக்கம் செல்வது என குழம்பி நின்றவளின் காதை அங்கே ஒலித்த ஆங்கிலப் பாடல் அதிர வைத்தது. 

I’m in love with the shape of you…
We push and pull like a magnet do….
Although my heart is falling too….
I’m in love with your body….. 

எட்செரீனின் பிரசித்தி பெற்றப் பாடலை நின்று கேட்டு ரசிக்க இது உகந்த நேரம் இல்லையே…… 

சட்டென தன் தொலைபேசியை எடுத்து ஷர்வித்தின் எண்ணிற்கு அழைத்தாள். 

“ஹலோ… ஷர்வித் நான் வந்துட்டேன்…… வெளியே வாங்க…. நான் உடனே என்னோட வீட்டுக்குப் போயாகனும்… என்னோட அண்ணனை கால் பண்ணி வரச் சொல்லவா….???? அவன் வந்து என்னைக் கூட்டிட்டுப் போகட்டும்……”

“வாவ் பேபி வந்துட்டியா???? மேலே இருபதாம் நம்பர் ரூமுக்கு வா…… நானே அவனை கால் பண்ணி இங்கே வரச் சொல்லிட்டேன்….. சோ… நீ மேல வா……” 

“ம்ம் சரி…..” என்றவாறு அழைப்பைத் துண்டித்தவளோ சற்று நேரம் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள். அவளது கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டதைப் போல நகர மறுத்தன.

மூச்சை நன்கு இழுத்து விட்டவள் இருபதாவது நம்பர் அறையைத் தேடிச் சென்றாள். அறையை அடைந்தவள் “ஷர்வித்……..” என அழைத்ததும் அந்தக் கதவு திறந்து கொள்ள மெல்ல அடியெடுத்து வைத்து  உள்ளே நுழைந்தாள். 

அவள் உள்ளே நுழைந்த அடுத்த நொடி அந்த அறைக்கதவு சாற்றப்பட்டு சாவியால் லாக் செய்யப்பட்டது. 

அவள் அதிர்ந்து “ஏன் ஷர்வித் கதவைப் பூட்டுறீங்க……??????” என்றவாறு அவனை நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள். அவளது மனதை பயம் கௌவிக் கொள்ள அவளது உடலோ நடுங்கத் தொடங்கியது. 

‘ஷர்வித்  கட்டுடல் கொண்ட கம்பீரமான தோற்றத்துடன் அல்லவா இருப்பான்…. இவனது கறுப்பான மேனியும் குண்டான உடல்வாகும் இவன் ஷர்வித் இல்லை…..’ என்பதை அறிவிக்க,

“ஹேய் யார் நீ…… ஷர்வித் எங்க…..????” என அதட்டியவளைப் பார்த்து கோணலாகச் சிரித்தவன் “நான் யாரா இருந்தா என்ன பேபி….. அதான் இவ்வளவு தூரம் வந்துட்டேல்ல…… கொஞ்ச நேரம் அமைதியா அடம்பிடிக்காம இருந்தீன்னா என்னோட ஆச தீர உன்னை அனுபவிச்சுட்டு சத்தமே இல்லாம போயிருவேன்…… இல்ல கற்பு முக்கியம் கணவன் முக்கியம்னு சீன் போட்டா சேதாரமாகிருவ…………” என்றான் அந்தக் காமுகன். 

அவனது கூற்றில் அவளது இதயமோ தொண்டைக்குள் வந்து துடிக்கத் தொடங்கி பயத்தில் எகிறி குதித்தது.

“அப்போ இவ்வளவு நேரமும் என்கூட பேசியது நீயா ??????”

“ஆமா நானேதான்…. சரி சரி டைம் வேஸ்ட் பண்ணியது போதும்…… ட்ரெஸ்ஸ கழட்டிட்டு என் பக்கத்துல வா……..” என சாதாரணம் போல அவளை அழைத்தான். 

அவளுக்கோ சர்வமும் அடங்கி ஒடுங்க மயக்கம் வருவது போல இருந்தது. சிரமப்பட்டு தன் தலையை குலுக்கி தன்னை நிலைப் படுத்தியவள் அந்த அறைக் கதவைப் பாய்ந்து சென்று திறக்க முயன்று தோற்றவள் அதனைப் பலமாகத் தட்டினாள்.

“யாராவது இருக்கீங்களா…..???? ஹெல்ப்…… ஹெல்ப் மீ ப்ளீஸ்……..”என்றவாறு அவள் கதறித் துடித்து உதவிக்காகப் போராட அந்த மலைமாடு போல் இருந்தவனோ அவளைத் தூக்கினான்.

“ச்சீ…. விடுடா….. வ்விடு ராஸ்கல்……….” எனக் கத்தியவாறு அவனது தோளில் தன் நகங்களால் கீறினாள்……

அவனோ அவளைத் தூக்கி வந்து படுக்கையில் போட்டவன் தன்னுடைய ஆடையை அவளைப் பார்த்தவாறே அகற்றத் தொடங்கினான். 

அவனது பெரிய டீஷேர்ட்டை கழற்றி எறிந்தவன் அவளை ரசித்தபடியே நெருங்க தன் இழி நிலையை எண்ணி அவளது மனம் சுக்கு நூறாக நொறுங்கிப் போனது. 

“ப்ளீஸ்… ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாதீங்க… உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்… ப்ளீஸ்…..” அவளோ தன் சுயம் இழந்து தன் கற்புக்காக மன்றாடத் தொடங்கினாள். 

அதே நேரம் அந்த அறைக் கதவின் சாவியோ அவனது டீஷேர்ட்டோடு கீழே கிடப்பதைப் பார்த்தவள் சட்டென அந்தப் படுக்கையில் இருந்து துள்ளி எழுந்து அந்தச் சாவியை எடுக்கப் பாய்ந்தோடினாள். 

அவனோ அவளது செயலின் எண்ணம் புரிந்து அவளது ஆடையைப் பற்றி இழுக்க உதித்தனாவின் மெல்லிய டாப் முதுகுப் பக்கமாகக் கிழிந்து அவன் கரத்தோடு சென்றது. 

ஓர் நொடி உறைந்தவள் சட்டென திரும்பி நின்று தன் முதுகை அந்த ஆடவனின் பார்வையில் இருந்து மறைத்தாள். 

இனம் மதம் பாராது எல்லாக் கடவுளையும் தன்னைக் காக்கும்படி வேண்டிக் கொண்டவளோ அச்சத்தில் அந்த சுவரோடு ஒட்டிக் கொண்டாள்.

அவளால் அந்த சூழ்நிலையை சற்றும் எதிர் கொள்ளவே முடியவில்லை…. கால்களோ உடைந்து விழுந்து விடுவோம் என்ற அளவுக்கு கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தன.

அவனோ “அதான் ட்ரெஸ் கிழிஞ்சிருச்சில்ல….. மொத்தமா கிழிச்சிருவோமா……????” என்றவாறு அவள் பக்கத்தில் வந்தவன் அவளை இறுக அணைத்தான். 

அடுத்த நொடி அருகில் இருந்த வெண்கலச் சிலையை தன் கரத்தில் எடுத்தவள் அவனது தலையிலே ஓங்கி அடித்து விட்டு அந்தச் சாவி மூலம் கதவை வேக வேகமாகத் திறந்தாள்.

பதற்றத்தில் தடுமாறியபடி அவள் கதவைத் திறக்கவும் மீண்டும் அந்தக் காமுகன் வந்து அவளைப் பற்றிப் பிடித்து அறைக்குள் இழுக்கவும் சரியாக இருந்தது. 

அவனோ அவளது கன்னத்திலே பளாரென அறைய அவன் அறைந்த வேகத்தில் கீழே விழுந்தாள் உதித்தனா.

கீழே விழுந்தவளை தரதரவென இழுத்தவன் கதவை மீண்டும் பூட்ட முயல சடாரென்ற சத்தத்துடன் கதவு விரியத் திறந்தது. 

அந்த காமுகனோ கதவை அதிர்ந்து பார்க்க அங்கே ருத்ர மூர்த்தியாய் நின்றிருந்தான் ராவணன். 

ராவணனைக் கண்டதும் உதித்தனாவோ வலியைச் சுமந்த குரலில் “ராவணாஆஆஆ…..” என அழைத்தாள். அடுத்த நொடி புயல் போல உள்ளே நுழைந்தவன் அந்த காமுகனை அடித்து நொறுக்கினான். 

உதித்தனாவோ சுவற்றில் சாய்ந்தவாறு மடிந்தமர்ந்து அழத்  தொடங்க, சட்டென அவளை எழுப்பியவன் தன்னுடைய ஷேர்ட்டைக் கழற்றி அவளுக்கு அணிவித்து விட்டான். 

அவளோ ராவணனைப் பார்க்கவே பயந்து போய் விழிகளைத் தாழ்த்திக் கொண்டவள் தனக்கு நடக்க இருந்த கோர சம்பவத்தை நினைத்து மேலும் நடுங்கினாள். 

அவளை அழுத்தமான பார்வை பார்த்தவன் அந்த காமுகனை நெருங்கி அவனது தலை முடியை வலிக்கப் பற்றியவன் “யார்டா நீ……..??????” எனக் கேட்டான். 

“நா…. நான் ஷர்வித் சார்…… அவளோட புருஷன்……” என்றதும் அந்த மேசையில் இருந்து பழம் வெட்டும் கத்தியை எடுத்தவன் அவனது பெரு விரலை துண்டித்தான்.. 

“ஆஆஆஆஆ…. ஐயோ….. என்னை விட்ருங்க சார்….. மன்னிச்சிடுங்க……” என அவன் தொடர்ந்து  அலற, 

“நீ ஷர்வித்னா  அப்போ நான் யாருடாஆஆ……..???????” என்றவனது கர்ஜனையில் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் உதித்தனா.

ராவணனது காலுக்கு அடியில் நசுங்கியவாறு கிடந்தவனோ பயத்தில் நடுங்க, அவனது நடுக்கத்தை இகழ்ச்சியாகப் பார்த்தவாறே உதியைத் தொட்ட அவனது கரத்தை கத்தியால் கிழித்தவன் “ஐ அம் ஷர்வித் ராவண்……” என்றான். 

உதித்தனாவுக்கோ எதுவும் புரியாது குழம்பிப் போக தன் தலையைப் பற்றியவாறே நிலத்தில் மயங்கிச் சரிந்தவளை சட்டெனத் தன் கரத்தில் தாங்கியவன் வெளியே நின்ற அவனுடைய அடியாட்களை அழைத்தான்.

“இவனைக் கொண்டு போய் நம்ம ஃபார்ம் ஹவுஸ்ல அடைங்க…… நான் வந்து கவனிச்சிக்கிறேன்….” என்றவாறு உதியைத் தூக்கியவன் கீழே விழுந்து கிடந்த அவளுடைய போனையும் எடுத்துக் கொண்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி அவளைத் தன் காரில் அமர வைத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

அவனது கரங்களோ நடுங்க ஆரம்பிக்க காரின் ஸ்டேரிங்கை  அழுத்தமாகப் பற்றியவன் அதில் தன் தலையைக் கவிழ்த்தான். 

அதே நேரம் அந்தக் கார்க் கண்ணாடியைத் தட்டினார் உதித்தனாவை ட்ராப் செய்த அந்த முதியவர். 

சட்டென காரில் இருந்து இறங்கி வந்தவன் அவரை நன்றிப் பெருக்குடன் அணைத்துக் கொண்டான். தன்னவளை பெரிய இக்கட்டில் இருந்து காப்பதற்கு சரியான நேரத்தில் உதவி செய்தவர் அவர் அல்லவா…..??? அதனால் அவரை ஆரத் தழுவியவன் “ரொம்ப நன்றி அங்கிள்….. உங்களோட உதவியாலதான் இவளைக் காப்பாற்ற முடிஞ்சுது…..” என்றவனது தோளில் தட்டியவர் “சின்னப் பொண்ணுபா பத்திரமா பார்த்துக்கோ……” என்றவாறு விடை பெற்றார். 

ஆம் ராவணன் உதி இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க உதவியது இவர்தான்…. 

உதி வீட்டில் இருந்து தப்பிச் சென்றதும் ராவணனனோ பால்கனிக் கதவை எட்டி உதைத்து உடைத்தவன் சினத்துடன் அவளைத் தேடி வெளியே வந்தான். அவளைப் பிடித்து விடலாம் என எண்ணி வெளியே வந்தவனுக்கோ அவளைக் கண்டு பிடிக்க முடியாது போக அச்ச மேகம் சூழத் தொடங்கியது. 

தன்னுடைய ஆட்களை காரில் மூன்று பக்கமும் தேட அனுப்பியவன் அந்த நள்ளிரவு நேரத்தில் அவளைக் காணாது துடித்து தலையில் கை வைத்தபடி நடு வீதியிலே மடங்கி அமர்ந்தான். 

உதியை இழந்து விட்டோமோ என்ற பயம் அவனைத் தாக்க சிந்திக்க மறந்து செயலாற்ற மறந்து நடுவீதியில் சிலை போல அமர்ந்திருந்தான் அந்த அசுரன்.

அதே நேரம் உதித்தனாவை ட்ராப் செய்துவிட்டு வந்த முதியவரோ நடுத்தெருவில் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டு உற்று நோக்கியவர் அது ராவணன் என அறிந்ததும் அவசரமாக காரை விட்டு இறங்கி அவனிடம் சென்றார்.

“ராசா.. நீ என்னப்பா… இங்கன இருக்க… எழுந்திருப்பா…. நீ இருக்க வேண்டிய இடமா இது…..???” என்றவாறு அவனை எழுப்ப,

அவரைப் பார்த்தவன் “கணேஷ் அங்கிள் இப்போ உங்க கூட பேச எனக்கு நேரம் இல்லை.. அப்புறமா வீட்டுக்கே வர்றேன்….” என்றவாறு எழுந்தவன் தன் இல்லம் நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

திடீரென மீண்டும் திரும்பி வந்தவன் “அங்கிள் இந்த வழியா பொண்ணு  ஏதும் போனதைப் பார்த்தீங்களா….???”

“ஆமாப்பா…” என்றவரின் பதிலில் அவசர அவசரமாக தன் பர்சை எடுத்து அதனுள் இருந்த உதித்தனாவின் புகைப்படத்தைக் காட்டி “இவளையா பார்த்தீங்க…..????” எனக் கேட்டான். 

“அட ஆமாப்பா… இந்தப் பொண்ணுதான்… லோட்டஸ் ஹோட்டலுக்கு போறதுக்கு என்கிட்டதான் ஹெல்ப் கேட்டா… அவளோட கணவன் அங்க இருக்காராம்……..” என்ற பதிலில் “ஓ மை காட்… அவ என்னோட மனைவி… சின்ன சண்டை அதனால கோபப்பட்டுகிட்டு போய்ட்டா….. உங்களோட காரை யூஸ் பண்ணிக்கவா அங்கிள்…….???” எனக் கேட்டவன் அவரது அனுமதி கிடைக்கும் முன்னரே அவரது காரில் ஏறி அமர்ந்தான்.

கணேஷும் காரில் ஏறியதும் காரை ஸ்டார்ட் செய்தவன் காற்றையும் விஞ்சும் வேகத்தில் அந்த ஹோட்டலை அடைந்தான். உடனேயே தன் ஆட்களுக்கு அழைப்பெடுத்து தன் காரைக் கொண்டு வரும்படி பணித்தவன் மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்து அந்தக் கொடூரனை அடித்துத் துவைத்திருந்தான். 

ராவணனது ஆட்களும் உடனேயே அங்கு வந்து விட உதித்தனாவை தூக்கிக் கொண்டு தன் காரில் அமர்ந்தவன்  கணேஷ் அங்கிளை மறந்தே போனான். அவரே வந்து கார்க் கண்ணாடியைத் தட்டியதும் ஒருவாறாக அவருக்கு நன்றி கூறி மீண்டும் காரில் வந்து அமர்ந்தான்.

அவனால் நடந்து முடிந்த விடயத்தை சற்றும் ஜீரணிக்க முடியவில்லை. 

இன்றோடு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தவன் அந்த நள்ளிரவில் உதித்தனாவின் வீட்டிற்கு காரைச் செலுத்தினான்.


💜💙உதிக்கும்💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *