ஆளை அசத்தும் அசுரா

This entry is part 22 of 39 in the series ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2

ஆளை அசத்தும் அசுரா – பாகம் 2



அசுரன் – 20 

ஓவியாவோ தான் அரேன்ஜ் செய்த மீட்டிங்கிற்காக தயாராகியவள் தர்ஷனது டேபிளில் அவன் டைப் செய்து வைத்தவற்றை எடுத்துக் கொண்டு மீட்டிங் நடக்க இருந்த ஹாலிற்குச் சென்றாள். 


அவளது நேர்த்தியான ஆடையும் அளவான ஒப்பனையும் அலட்டளற்ற பேச்சுமே அவளது வெற்றியின் ரகசியம்.


 அனைத்திலுமே தன் அண்ணனை பின்பற்றி நடப்பவளுக்கு இதுவரை வெற்றி மாத்திரமே கிடைத்தது.  


அவளுடைய திட்டங்கள் முழுவது‌ம் தர்ஷன் எனும் குறும்புக்காரனிடம் மாத்திரமே பலிக்காது போனது. அவளது முதல் தோல்வியும் முதல் பிழையும் தர்ஷனாகிப் போனான். 


அந்த அலுவலகத்தின் பிரம்மாண்டமான ஹாலில் இருபதுக்கும் மேற்பட்ட டீம் மெம்பர்ஸ் அவளுக்காக காத்திருக்க ஸ்டைலாக உள்ளே நுழைந்தாள் ஓவியா. 


புது புராஜெக்ட் பற்றி டீல் பேச மற்றொரு கம்பனியின் எம்டியான இளம் தொழிலதிபன் ரகுவரனும் அங்கே வந்திருந்தான். 


அவளுடைய லேசர் பார்வை ஒரு நிமிடத்தில் அனைவரது முகத்தையும் அளவெடுத்து முடித்தது. அனைவரும் குறித்த நேரத்தில் வந்திருப்பதைப் பார்த்து மெச்சுதலாக நோக்கியவளின் புருவம் திடீரென சுருங்கியது.


‘தர்ஷன் எங்கே……..???? இடியட் எங்கே போய்த் தொலைஞ்சானோ……???? எவ்வளவு முக்கியமான மீட்டிங்னு சொல்லியும் வரலை….’ என மனதிலே அவனை வறுத்தெடுத்துக்  கொண்டிருந்தாள். 


அந்த மீட்டிங் ஹாலின் அமைதியைக் கிழிக்கும் வண்ணம் வெளியே தர்ஷனின் சிரிப்பொலி பெரிதாக கேட்க அனைவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் மாறி மாறிப் பார்த்தனர். 


“எக்ஸ்க்யூஸ் மீ….” என அவர்களிடம் கூறியவள் சீற்றத்துடன் அந்த ஹாலை விட்டு வெளியே வந்தாள். 


அங்கே தர்ஷனோ அழகான பெண் ஒருத்தியுடன் சிரித்தவாறு பேசிக் கொண்டிருக்க ஓவியாவுக்கோ சுடு நீரினுள் குளித்தது போல உடல் முழுவதும் சீற்றத்தில் கொதிக்கத் தொடங்கியது. 


அந்தப் பெண்ணோ திடீரென தர்ஷனின் கரம் பற்றிக் குலுக்கியவள் அவனை நட்பாக அணைத்துக் கொண்டாள். 


அந்தக் காட்சியைப் பார்த்ததும் அவளது உலகமே இருண்டு போனது போன்ற ஒரு மாயை அவளை ஆட்கொள்ள தன் மனதின் நிலை அறியாது குழம்பி நின்றாள் மாது. 


“பாய் மது…….. மீட்டிங் முடிய வர்றேன்…. உன்னோட கேபின் பர்ஸ்ட் ப்ளோர்ல தானே இருக்கு…. ஐ வில் கம் ஃபார் யு……..” என்றவாறு திரும்பியவன் தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஓவியாவைக் கண்டதும் பாய் காட்ட உயர்த்திய தன் கரத்தை கொசுவை விரட்டுவது போல அசைத்தவன் அவளைப் பார்த்து அசட்டுப் புன்னகை புரிந்தான். 


“யார் அவ……..???????”


“அதானே எவடா அவ…? நம்ம மேடமே கேக்குறாங்க…”


“ஹலோ என்ன நக்கலா….????? நீங்க இவ்ளோ நேரம் பேசிகிட்டு இருந்தீங்களே அந்தப் பொண்ணைத் தான் யாருன்னு கேட்டேன்……” 


“ஓ…. அவளைக் கேக்குறீங்களா……???? நம்ம எம்ப்ளாயிதான் மேடம்………”


“ஓ காட்….  அது எனக்கும் தெரியும்… அவ உங்களுக்கு யாருன்னு கேட்டேன்…….” என்றவளைக் கூர்ந்து பார்த்தவன் தன் இதழில் தோன்றிய சிரிப்பை உடனே மறைத்தான்.


“ஓ….. அதைக் கேட்டீங்களா அவ என்னோட நியூ பிரண்ட் மதுக்குட்டி……” என்றவனை எரிப்பது போலப் பார்த்தவள்  “வாட் இஸ் திஸ்  தர்ஷன்??? அதென்ன மதுக்குட்டி???? நீங்க செல்லப் பேர் வெச்சு விளையாடித் திரிய இது ஒன்னும் ப்ளே க்ரௌண்ட் இல்ல… இது என்னோட ஆபிஸ்…. இங்க எல்லாமே எனக்கு பெர்பெக்ட்டா இருக்கனும்……” என மூச்சு வாங்க அவனைத் திட்டி முடித்தவள் அவனது புன்னகையைப் பார்த்து திகைத்து மீண்டும் அவனை முறைத்தாள். 


“மேடம் டைம் ஆகிருச்சு…. நீங்க இன்னும் மீட்டிங் ஸ்டார்ட் பண்ணலையா…..????? ஒரு டெடிகேஷன் இல்லாம இருக்கீங்களே……” என்றவனை “ஷட் அப் இடியட்…. நீ ஒன்னும் எனக்கு டெடிகேஷன் பத்தி க்ளாஸ் எடுக்க வேணாம்… முதல்ல மீட்டிங் முடியட்டும் அப்புறம் உங்ககிட்ட பேசிக்கிறேன்…..” என்றவாறு அவள் உள்ளே நுழைய அவளுக்கு முதல் உள்ளே நுழைந்து கொண்டான் தர்ஷன். 


“குட் ஆஃப்டர்நூன்… உங்க எல்லாரையும் வெயிட் பண்ண வெச்சதுக்கு சாரி…….” என்றவள் தன்னுடைய புது புராஜெக்ட் பற்றி நுனி நாக்கு ஆங்கிலத்தில் அழகாக எக்ஸ்பிளேன் பண்ணத் தொடங்கினாள். 


“விமல் இந்த மல்டி மீடியாவை ஆன் பண்ணி இதை டிஸ்பிளே பண்ணுங்க…..  அப்புறம் இந்தப் பேப்பர்ஸை எல்லார்கிட்டேயும் கொடுத்துருங்க……” என்றவள் மல்டி மீடியாவின் முன்னே வந்து தன் பிரஷன்டேஷனை செய்தாள். 


“ஐ ஹோப் யு அன்டர்ஸ்டான்ட்…. இப்போ உங்க கைல இருக்கிறதுதான் இந்த புராஜெக்டோட பேஸிக் ரூல்ஸ்…. எல்லாரும் ஒரு தடவை அதை படிச்சுருங்க….. ஏதாவது டவுட் இருந்தா தாராளமா இப்போவே கேட்கலாம்…” 


தர்ஷனோ தன்னிடம் கொடுத்த பேப்பரை வாங்கியவன் “அப்படி என்ன ரூல்ஸ்ஸா இருக்கும்….” என முணுமுணுத்தவாறு வாங்கிப் படித்தவன் அதிர்ந்து போனான். 


‘ஷிட்…… ஷிட்……. ஓ மை காட் நான் டைப் பண்ணி வெச்சதை யார் பிரிண்ட் எடுத்தது… இத எல்லாரும் பார்த்தா என் கதை இன்னையோட க்ளோஸ்……’ என நினைத்தவன் சடாரென அந்த இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான். 


அவன் எழுந்த வேகத்தில் அனைவரும் அவனை விசித்திரமாகப் பார்க்க “ஹாய் ப்ரண்ட்ஸ்  ஐ அம் தர்ஷன்…..” என்றவாறு எழுந்தவன் ஏதேதோ சம்பந்தமே இல்லாமல் உளறியவாறு அந்த பெரிய டேபிளைச் சுற்றி நடந்தவன் ஒவ்வொருத்தருடைய கரத்தில் இருந்த பேப்பரையும் வாங்கிக் கொண்டான்.


அவனது அநாகரீகமான செயலில் “கெட் அவுட் தர்ஷன்…..” எனக் கத்தியவளைப் பார்த்து சரி என தலையசைத்தவன் மல்டி மீடியாவில் தெரிந்ததைப் பார்த்து உறைந்து போனான். 


அந்த மீட்டிங் ஹாலில் இருந்த அனைவரும் ஓவியாவைப் பார்த்து அடக்கமாட்டாது சிரிக்கத் தொடங்க திடீரென அங்கே இருந்த அமைதியான சூழல் மாறியதில் குழம்பிப் போனாள் ஓவியா.


அனைவரது பார்வை சென்ற இடத்தை தானும் பார்த்தவள் ஓர் நிமிடம் உறைந்து போனாள். அளவற்ற கோபம் தன் கட்டுப்பாட்டை மீறி வெளிவரத் தொடங்க தன் கரங்களை இறுக மூடி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள் மல்டி மீடியாவை ஆஃப் செய்தாள். 


இவ்வளவு நேரமும் கம்பீரமான குரலில் தெளிவாக பேசியவள் தற்போது கலங்கிய குரலில் அனைத்தையும் பேசி முடித்தாள். அவளது குரலின் மாற்றத்தை கண்டு கொண்ட தர்ஷனோ குற்ற உணர்வில் தவித்துப் போனான். 


அவள் பேசி முடிந்ததும் “வாவ் வாவ் எக்ஸலென்ட் மிஸ் ஓவியா… இந்தப் புராஜெக்ட்டில் உங்களோட இணைந்து வர்க் பண்ண எனக்கு டபுள் ஓகே…..” என்றான் ரகு. 


“தேங்க்யூ மிஸ்டர் ரகுவரன்….. இது பத்தின எல்லா டீடெய்ல்ஸையும் நான் உங்களுக்கு மெயில் பண்ணிடுறேன்……” என்றவள் மீட்டிங்கை முடித்து விட்டு தன்னுடைய அறைக்கு விரைந்தாள். 


தர்ஷனோ தன் கரத்திலிருந்த தாள்களை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டவன் ஓவியாவைத் தேடி அவள் அறைக்குச் சென்றான். 


தர்ஷன் உள்ளே நுழைந்தவன் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவள் அந்த அறையினுள் உள்ள இன்னொரு அறையில் இருப்பதை உணர்ந்து கொண்டவன் அவளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.


ஒரு மணி நேரம் கடந்தும் அவள் வெளியே வராமல் இருக்க யோசனையுடன் எழுந்தவன் அவளைப் பார்ப்பதற்காக அந்த அறையினுள் சென்றான். 


கதவைத் தட்டுவதற்காக கதவில் கை வைத்ததும் அந்தக் கதவு விரியத் திறந்து கொண்டது. அங்கிருந்த சோபாவில் தலை கவிழ்ந்து கிடந்தவளை குற்ற உணர்வுடன் நோக்கியவன் அவள் அருகில் சென்று “ஓவி……” என அழைத்தான்.


அவளது அழைப்பில் சடாரென நிமிர்ந்து பார்த்தவள் அடுத்த நொடி அவனது கன்னத்திலே அறைந்தாள். “ஹௌ டேர் யு…… ஹௌ டேர் யு தர்ஷன்…..????? எதுக்குப் இப்படி பண்ணின.?? உனக்கும் எனக்கும் இடைல பிரச்சனை இருக்குத்தான் நான் இல்லைன்னு சொல்லலை பட் அடுத்தவங்களுக்கு முன்னுக்கு எதுக்கு என்னை அசிங்கப் படுத்தின….?” என்றவள் அழுகுரலில் அவனிடம் கேள்விகளை எழுப்பினாள். 


அவள் தன்னை அடிப்பாள் என சிறிதும் எதிர்பாராதவன் அவள் முன்னே இறுகிப் போய் நின்றான். 


“எனக்கு முன்னுக்கு நின்னு பேசக் கூட பயப்படுறவங்க எல்லாம் இன்னைக்கு என்னைப் பார்த்து கேவலமா சிரிச்சாங்க தர்ஷன்….. உன்னால என்னோட மானம் மரியாதை எல்லாமே போச்சு…” என்றவளின் கண்ணீர் அவளது கன்னத்தில் இறங்கியது. 


“எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு……….” என்றவளின் கன்னத்தைப் பற்றியவன் தன் பெரு விரலால் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான். 


“நான் சும்மா விளையாட்டுக்கு டைப் பண்ணினேன்டி…. அதை ஏன் நீ என்கிட்ட கேட்காம எடுத்துட்டுப் போன…..???? ம்ம்????? நான் வேணும்னே பண்ணலை பேபி சாரிடி…….” என்றவாறு அவளது விழி நீர் துடைத்தான். 


பிறர் முன் அழவே கூடாது என சுய கௌரவம் பார்க்கும் பெண்ணவளோ தர்ஷனின் ஆறுதல் வார்த்தைகளில் இன்னும் இன்னும் தன் அழுகையை அதிகரிக்கத் தொடங்கினாள். 


“ம்ப்ச்….. நோ பேபிமா.  சாரி சாரி சாரி…. சாரி சாரி சாரி சாரி…….. அழாதடி ப்ளீஸ்……” என்றவன் அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். 


சிறுது நேரத்தில் தானாகவே அவனை விட்டு விலகியவள் அவன் முகம் பாராது அங்கிருந்த சோபாவைப் பார்த்தாள். தர்ஷனுக்கோ அவளின் அருகாமை வேண்டும் என உடலின் ஒவ்வொரு அணுக்களும் போராட்டம் செய்ய மெல்ல அவள் கரம் பற்றி வருடினான்.


சட்டென அவன் கரத்தை தள்ளி விட்டவள் “உங்களை அடிச்சதுக்கு சாரி.. இனி என்னோட பெர்மிஷன் இல்லாம இந்த ரூம்குள்ள வராதீங்க தர்ஷன்…” என உறுதியான குரலில் கூறினாள்.


‘சுத்தம்டா அதுக்குள்ள முழுசா பேயா மாறிட்டாளே……’ என மனதினுள் நினைத்தவன் “ஓகே மேடம்…..” என்றவாறு எழுந்து அந்த அறையை விட்டு வெளியேறினான். 


அவனது சிறு தொடுகையும் தன்னைப் பலவீனமாக்குவதை நினைத்து அதிர்ந்தவள் அவனை விட்டு விலகி இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டாள். அவள் எடுத்த முடிவுக்கு எதிரான சம்பவம் அன்றே நடக்கப் போவதை பாவம் அவள் அறியவே இல்லை.


உதித்தனாவின் பதற்றத்தைப் பார்த்தவன் “போன்ல யாரு…..?????” எனக் கேட்டான். 


“அது… அது ராங் நம்பர்…..” எனக் கூறிச் சமாளித்தாள் உதி.


“ரைட்…… பைலட் ட்ரெஸ் மட்டும் போட்டா போதாது… நிஜமாவே பைலட் ஆகனும்… நாளைல இருந்து உனக்கான ட்ரெயினிங் ஸ்டார்ட் ஆகுது…. ரெடியா இரு…. அப்புறம் இன்னும் த்ரீ  டேய்ஸ்ல உனக்கொரு எக்ஸாம் நடக்கும்… அதுல நீ பாஸ் பண்ணினா மட்டும் தான் இந்த ட்ரெயினிங்கை உன்னால தொடர முடியும்… “ என்றவன் அவளது மென்மையான கரத்தை அழுந்தப் பற்றினான். 


“ஸ்ஆஆஆஆ…… வ்விடுங்க வலிக்குது சார்…….” எனக் கத்தியவளின் இதழில் தன் ஒற்றை விரலை வைத்து அவள் பேச்சைத் தடை செய்தவன் “உனக்கு இந்த ராவணன் வேணுமா???? இல்ல அந்த  ஷர்வித் வேணுமான்னு முடிவு பண்ணிக்கோ…….” என்றவாறு அவளை விடுவித்தான். 


“எனக்கு யாருமே வேணாம் சார்….. நீங்களும் வேணாம்… என்னோட சம்மதம் இல்லாம தாலி கட்டிய ஷர்வித்தும் வேணாம்… காதல் என்ற பேர்ல என்னால யார்கிட்டேயும் அடைபட்டு இருக்க முடியாது சார்….. நான் ஒரு காட்டுப் பறவை மாதிரி… என்னோட ஆசைகளையும் என்னோட கனவுகளையும் என்னோட லைஃப்ல நான் போக வேண்டிய தூரத்தையும் நான்தான் டிசைட் பண்ணுவேன்…. எனக்கு சுதந்திரமா பறக்கனும் சார்…. நான் பறக்கிறதுக்காகவே படைக்கப்பட்டதுதான் இந்த விமானம் என்னோட டெடிபியர்…… நிச்சயமா ஒரு நாள் நான் பறப்பேன்.. இந்தக் காட்டுப் பறவைக்கு எந்த எல்லையுமே கிடையாது…. எந்தத் தடையுமே வராது……” என்றாள் உறுதியுடன். 


அவளது பேச்சில் ஒரு நிமிடம் அசந்து போனான் ராவணன். சுட்டிப் பெண், அவசரக்காரி, குறும்புக்காரி என தான் நினைத்துக் கொண்டிருந்த பெண் தன் இலட்சியத்துக்காக போராடும் விதத்தைக் கண்டு பிரம்மித்தான். 


அவள் தன்னைத் தானே காட்டுப் பறவை என்றதும் அவளுக்காக மாத்திரமே இந்த விமானங்கள் யாவும் படைக்கப்பட்டதாகவும் கூறியதைக் கேட்டு அவன் கண்கள் வியப்பில் விரிந்தன.


“உதி Do or die கேள்விப் பட்டுருக்கியா……???? செய் அல்லது செத்துமடி…. அந்த கேரக்டர்தான் நான்…. நான் நினைத்ததை செய்து முடித்தே தீருவேன்……” என்றவனைப் பார்த்து அழகாக இதழ் பிரித்துச் சிரித்தவள் “ஐ லைக் இட் சார்…….” என்றாள்.


“உன்னோட சிரிப்பு ரொம்ப அழகா இருக்குடி என்னோட காட்டுப் பறவையே……..” என்றவனைப் பார்த்து விழி விரித்தவள் “நான் ஒன்னும் உங்களோட காட்டுப் பறவை இல்லை… ஐ அம் எ ப்ரீ பேர்ட்…..” எனக் கூறிச் சிரித்தாள். 


“ஹா…. ஹா… அதையும் பார்க்கலாம்….. இந்தக் காட்டுப் பறவை இந்த வேடன்கிட்ட வரப் போற நாளுக்காகத்தான் நான் வெயிட்டிங்…..”


“வேடனா  ஹா ஹா உண்மைதான் சார்…” என்றவள் தன் கைகளை இறக்கை போல விரித்து அந்த அறையை சுற்றி வந்தவள் “மிஸ்டர் வேடன் என்னைப் பிடிங்க பார்க்கலாம்……..” என்றவாறு ஓடிச் செல்ல அவளைத் துரத்திச்  சென்றான் ராவணன். 


ஒரு கட்டத்தில் அவளைப் பிடித்து தன் கரங்களில் ஏந்தியவன் அவளது காதில் மென் முத்தம் பதித்து தன் அதரங்களை அவள் காதோடு காதலாய் உறவாட விட்டான். 


அவனது ஒற்றை மென்பனி போன்ற குளிர்மையான முத்தத்தில் சிலிர்த்து திகைத்து உறைந்து மீண்டவள் அவன் கரங்களில் இருந்து துள்ளி கீழே இறங்கினாள். 


அவனது இதழ்களோ “ ஐ லவ் யு உதி…….. பட் ஐ ஹேட் யு ………” என முணுமுணுத்தன.


💜💙உதிக்கும்💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *