ஆளை அசத்தும் அசுரா
அசுரன் – 22
லிப்டினுள் மாட்டிக் கொண்ட இருவரும் அடுத்து என்ன செய்வதென தெரியாது தவித்துக் கொண்டிருந்தனர். அந்த இருளினை நீக்குவதற்காக போன் டார்ச்சை ஆன் செய்தவன் அதில் இருந்து கசிந்த ஒளி வெள்ளத்தில் தன்னவளது அழகு வதனத்தை ரசித்தான்.
அவள் தன்னை ஒதுக்குவது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. இருந்தும் தன் மனம் ஓவியாவை நாடுவதை அறிந்து கொண்டவன் அவள் மேல் உள்ள காதலை சிறுக சிறுக உணர்ந்து கொண்டான்.
அவளது வதனத்தை ரசித்தவாறே அவன் எண்ணம் மின்னல் வேகத்தில் அவளைச் சுற்றி வலம் வந்தது. ஓவியாவோ மெல்ல அவனது மடியில் இருந்து எழுந்தவள் அவனை விட்டுத் தள்ளி அமர்ந்தாள்.
‘நான் எப்போ எல்லாம் இவனை விட்டு விலகிப் போகனும்னு நினைக்கிறேனோ அப்போதெல்லாம் இவன்கூடவே இருக்கிற மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்துருது சே……….’ என மனதினுள் நினைத்தவள் தர்ஷனை முறைத்தாள்.
அவன் தனக்கு மிக அருகில் இருப்பதைப் பார்த்து குழம்பியவள் ‘இப்போதானே தள்ளி வந்தேன்…. இவன் எப்படி பக்கத்துல வந்தான்…..???’ என நினைத்தவாறு மீண்டும் நகர்ந்து அமர, தர்ஷனோ நத்தை போல ஊர்ந்து மீண்டும் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
“இப்போ எதுக்கு என் பக்கத்துல வந்துட்டே இருக்கீங்க…..”
“சாரி மேடாஆஆம் எனக்கு இருட்டுன்னா ரொம்ப ரொம்ப பயம் அதனாலதான் உங்க பக்கத்துல வந்தேன். நீங்க என்கூடவே இருந்தா கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும்ல….” என்றவனைப் பார்த்து வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டாள்.
நேரம் செல்லச் செல்ல ஓவியாவுக்கோ சற்றே பயம் பிடித்துக் கொண்டது. அவளோ எழுந்து லிப்டினுள் உள்ள பட்டன்களைத் தாறுமாறாக அழுத்தத் தொடங்கினாள்.
“ஹேய் என்னடி பண்ற….. ஆல்ரெடி அதுவே ஸ்டக் ஆகிப் போய் நிற்குது… இதுல நீ வேற என்ன பண்ற……???”
“ஷட் அப் தர்ஷன்…. உங்களால முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க இல்லைன்னா பேசாம இருங்க….. அப்புறம் என்னை வாடிப் போடின்னு மரியாதை இல்லாம பேசுற வேலை வெச்சுக்காதீங்க….. நான்தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளி சோ மரியாதையா நடந்துக்க பழகுங்க… ” என்றவள் அந்த லிப்டின் கதவைத் தட்டியவாறு “ஹெல்ப்….. ஹெல்ப்…. யாராவது இருக்கீங்களா…..??? கேன் யு ஹியர் மீ…” என உரத்த குரலில் கத்தினாள்.
தர்ஷனோ வாகாக சாய்ந்து அமர்ந்தவன் தன் போனை எடுத்து டெம்பிள் ரன் கேம் விளையாடத் தொடங்கினான்.
“ஹேய் நீ என்ன லூசா….??? இவ்வளவு பிரச்சனையிலும் கேம் விளையாடிட்டு இருக்க…..” எனத் திட்டியவளை முறைத்துப் பார்த்தான் தர்ஷன்.
“மேடம் மைன்ட் யுவர் வேர்ட்ஸ்… லூசுன்னு மட்டும் சொல்லாதீங்க…”
“ஓ… சாருக்கு ரோசம் வருதோ…..???? உண்மைய சொல்லு…. இதுவும் உன்னோட பிளான்தானே…” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவன் “வாட்……..?????” என்றான்.
“வாவ் வாவ் ரொம்ப ஸ்மார்ட்டா நடிக்கிறீங்க தர்ஷன்…. நீங்கதான் என்னவோ பண்ணி லிப்டை இடைல நிற்க வெச்சுட்டீங்க…..???”
“ஹேய் நான் எதுவுமே பண்ணலை…….”
“எதுவுமே பண்ணலைன்னா எப்படி நான் வர்ற நேரமே சரியா நீங்களும் வந்தீங்க…. உங்களுக்குத் தான் வேலை அப்பவே முடிஞ்சு போச்சே… ஏன் இவ்வளவு நேரம் வீட்டுக்குப் போகாம இருந்தீங்க….. சோ இது எல்லாமே உங்களோட பிளான்தானே தர்ஷன் சே……..”
“ஹேய் நான் ஏன்டி லிப்டை நிறுத்தனும்….??? உன்னோட நானும்தானே மாட்டிருக்கேன்….”
“இதுக்குத்தான் ஆசைப் பட்டீங்க போல……” என்றவளின் கூற்றில் உடல் விறைத்தவன் “இப்போ நீ என்ன சொல்ல வர்ற…..???” எனக் கேட்டான்.
“அன்னைக்கு என்னைத் தப்பா யூஸ் பண்ணிக்கிட்டீங்க… அதே மாதிரி இப்போவும் என்னோட உடம்பை யூஸ் பண்ணுறதுக்காகத்தான் இப்படி எல்லாம் ட்ரை பண்றீங்க…..” என்றவளுடைய கன்னம் தீயாய் எரிந்தது.
ஆம் அவளை ஓங்கி அறைந்திருந்தான் தர்ஷன். என்ன வார்த்தை சொல்லி விட்டாள் அவன் மனம் கொதிக்கத் தொடங்கியது. அவளைத் தன் மனைவியாகவே எண்ணிக் கொண்டிருந்த தர்ஷனுக்கு அவளுடைய வார்த்தைகள் பேரிடியாய் இருந்தது.
அவளோ கன்னத்தில் கை வைத்தவாறு அதிர்ந்து போய் நின்றுவிட “இனி ஒரு வார்த்தை உன் வாய்ல இருந்து வந்தாலும் உன்னை இந்த இடத்துலயே கொன்னு புதைச்சுருவேன்டி….” என்றவன் சீற்றத்துடன் அவளைப் பார்த்தான்.
ஒரு நொடி அதிர்ந்து நின்றவள் அடுத்த நொடியே “ஹௌ டேர் யு ராஸ்கல்….. என்ன தைரியம் இருந்தா என்னையவே கை நீட்டி அடிச்சிருப்ப…..” என்றவாறு தன்னை அடிக்க கை ஓங்கியவளின் கரத்தை இறுகப் பற்றி பின்னால் வளைத்துப் பிடித்தான்.
அவனது அழுத்தமான பிடியில் “ஸ்ஸ்ஆஆ……” என வலியில் முணுமுணுத்தவளின் கண்களோ கலங்கிப் போக அவளைப் பிடித்திருந்த பிடியை விலக்கியவன் மீண்டும் தரையில் அமர்ந்து கொண்டான்.
ஓவியாவோ மீண்டும் சினத்தில் அவனைத் திட்டுவதற்காக வாயைத் திறந்தவள் லிப்டினுள் ஏதோ படீர் என வெடித்த சத்தத்தில் அதிர்ந்து போனாள்.
சர்ரென லிப்ட் ஒரு குலுக்கலோடு கீழே அதிவேகத்தில் இறங்கிக் கொண்டே போக ஓவியாவோ அதன் வேகத்தில் தொப்பென கீழே விழுந்தாள்.
லிப்டோ தரையோடு மோதி நின்ற வேகத்திலே லிப்டின் கதவில் அழகுக்காக பதித்திருந்த கண்ணாடி சுக்கு நூறாக சிதறி அந்த இடமெங்கும் பறக்க,
சட்டென தன்னவளை லிப்டோடு சாய்த்தவன் தன் உடலால் அவள் உடலை மறைத்துக் கொண்டான். சிதறிய கண்ணாடித் துண்டுகள் யாவும் தர்ஷனின் முதுகைப் பதம் பார்க்க அவனது உடலிலே ஆங்காங்கே இரத்தப் போக்கும் காயங்களும் ஏற்பட்டன.
ஓவியாவோ அச்சத்தில் அலறியவள் தர்ஷனது அணைப்பில் பூனைக்குட்டி போல அடங்கிப் போனாள். லிப்ட் கீழ் தரையோடு மோதி நின்றதும் அந்த லிப்டின் கதவு தானாகவே திறந்து கொண்டது.
அவனோ இனி ஆபத்து இல்லை என்பதை அறிந்து அவளை விட்டு விலகியவன் அவளைத் திரும்பியும் பாராது தடுமாறியபடி வெளியே நடக்கத் தொடங்கினான்.
கீழே உடைந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளிலே இரத்தம் சிந்தியிருப்பதைப் பார்த்தவள் ஓர் நொடி உறைந்து மீண்டாள். அவளது பார்வையோ அவசர அவசரமாக தர்ஷனிடம் சென்றது.
அவனது முதுகோ இரத்தத்தில் குளித்திருக்க… ஆங்காங்கே கண்ணாடித் துண்டுகள் முதுகில் குத்தியவாறு இருப்பதைக் கண்டவள் துடித்துப் போனாள்.
அவளை அறியாமலேயே “தர்ஷு……..” என உரக்க அழைத்தவள் அவனது நடையை தடுத்து நிறுத்தினாள். அவளது கலங்கிய குரலை உணர்ந்து கொண்டவன் அசையாது நின்றான். கண்கள் கலங்க உதடு துடிக்க நடுங்கிய உடலை சிரமத்துடன் செயற்படுத்தி அவன் அருகில் சென்றவள் “ஹாஸ்பிட்டல் போகலாம் வாங்க……” என்றவாறு அவன் கரம் பற்ற,
அவனோ அவளது கரத்தை உதறி விடுவித்தவன் “நோ தேங்க்ஸ் மேடம்…..” என இறுகிய குரலில் கூறியவாறு அவளைத் தாண்டிச் செல்லத் தொடங்க, ஓவியாவோ தன் மென்மையான கரத்தால் மீண்டும் அவன் கரம் பற்றி நிறுத்தினாள்.
ராவணனோ தன் மேல் பூப் பந்து விழுந்ததைப் போல மயங்கி விழுந்தவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவன் அவளைத் தன் கரங்களில் ஏந்தினான்.
“உதிம்மா…. என்னால உன்னோட உணர்வுகளை புரிஞ்சிக்க முடியுது…… நான்தான் ஷர்வித்… நானேதான் ராவணன்…. பட் ரெண்டுமே நானா இருந்தாலும் இதுல யார் வேணும்னு நீதான் பேபி முடிவெடுக்கனும்…… சீக்கிரமா எடுத்திரு கண்ணம்மா….. அதுக்குள்ள உன்னோட பைலட் கனவை நான் நிறைவேற்றி வெச்சிடுறேன்…..” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
மீண்டும் அவள் மதி முகம் நோக்கியவன் “ஏர் ரைட்டிங் பார்த்ததும் உன்னோட கண்ல தெரிஞ்ச காதலைப் பார்த்தேன்டி…. உனக்கு இந்த ராவணனை ரொம்ப பிடிச்சிருக்கு போல…… பட் காதலிச்சு நேர்மையா கல்யாணம் பண்ணிய நல்லவன் ஷர்வித்தை விட கடத்திட்டு வந்து காதல் சொன்ன இந்த அசுரன் ராவணனைத்தானே உனக்குப் பிடிக்குது….. ஏன் பேபி நல்லவனுக்கு இந்த உலகத்துல இவ்ளோதான் மதிப்பா……??????” எனக் கேட்டவன் சீற்றத்துடன் பெரு மூச்சு விட்டான்.
“இந்த ராவணன் உன்னை எப்போவுமே காதலிப்பான்டி…… மூவுலகுத்துல இருக்கிற காதலையும் விஞ்சும் வகையில என்னோட காதல் இருக்கும் உதிம்மா….. காதல்னா என்னன்னு நான் புது இலக்கணம் படைப்பேன்டி…… ஐ லவ் யு உதிம்மா……. இந்த ராவணன் எப்பவுமே உன்னைக் காதலிச்சுட்டே இருப்பான்………. பட் எனக்குள்ள இருக்கிற ஷர்வித் உன்னை அணு அணுவா வெறுத்திட்டே இருப்பான் உதித்தனா…. ஐ ஹேட் யு டி….. காதலோட ஆழத்தை காண்பிக்கத் தெரிஞ்ச எனக்கு வெறுப்போட உச்சத்தையும் காண்பிக்கத் தெரியும்…….” என்றவனது முகம் இறுகிப் போனது.
ராவணனாக உருகி ஐ லவ் யு என்றவன் ஷர்வித்தாக மாறி ஐ ஹேட் யு என முடித்தான். விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே நூல் அளவுதான் வித்தியாசம் என்பதை அந்நொடி அந்த ஆளுமையான ஆண்மகன் கூட மறந்து போனதுதான் விந்தை.
மயங்கிய மாதுவை தன் காருக்கு தூக்கி வந்தவன் அவளுக்கு சீல்ட் பெல்டினை அணிவித்து விட்டான். காரில் இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து தன் கைக்குட்டையை நனைத்தவன் அவள் முகத்திலே அந்த கைக் குட்டையால் துடைத்து விட அவளது மயக்கம் சற்றே தெளிந்தது.
கண்களைச் சிமிட்டியவாறு விழித்தவளுக்கு நடந்த அத்தனையும் நினைவுவர அவள் முகமோ அச்சத்தில் மருண்டது. சட்டெனக் குனிந்து தன் கரத்தால் அந்தத் தாலியைத் தூக்கிப் பார்த்தவள் முகத்தை மூடிக் கொண்டு விசும்பினாள்.
ராவணனோ ‘இனி ஏன் இப்படி பண்ணீங்க சார்……’ எனக் கேட்பாள் என எதிர்பார்த்துக் காத்திருக்க அவளோ எந்த வித கேள்வியும் அவனைக் கேட்கவும் இல்லை… அவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை….. தன் கால்களைத் தூக்கி சீட்டில் வைத்தவள் அதில் தன் மலர் முகத்தைப் புதைத்து விசும்பியவாறே வந்தாள்.
“உதி…. கம்……” என அவளை அழைத்தவாறு அவன் முன்னே நடக்க தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவள் அவன் பின்னே சென்றாள்.
அவளது வாடிய முகம் அவனது மனதைப் பிசைந்தது. தன் மனதை கல்லாக்கிக் கொண்டவன் அவளின் நெற்றியில் திலகம் இட்டான். அந்நொடி அவளது கண்களோ பொல பொலவென கண்ணீரைச் சிந்தின.
அவளது மனமோ உடைந்து போனது. ‘கடவுளே இந்தத் தாலி சரியா…????? அப்போ ஷர்வித்……..???? நான் என்ன பண்ணுவேன்…… என்னால இந்த வேதனையைத் தாங்க முடியலையே…. ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கே…… ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் ஆகுது.. தாலி கட்டிய கணவன் இருக்கும் போதே அடுத்த தாலி என்னோட கழுத்துல ஏறுவது ரொம்ப தப்புதானே…. அப்போ நானும் தப்பான பொண்ணுதானா……?????? நோ…… நோ….. இது என் சம்மதம் இல்லாம நடந்தது…. ரெண்டு பேருமே என் சம்மதம் கேட்காமலே தாலி கட்டிட்டாங்களே இந்த ஆண்களே இப்படித்தானா……..???? ஐயோஓஓஓஓஓ என்னால தாங்க முடியலையே அம்மா…… சாரிமா…. எனக்கு இப்போ உங்களைப் பார்க்கனும் போல இருக்கும்மா….. உங்களை விட்டு வந்து ரொம்ப பெரியத் தப்பு பண்ணிட்டேன்மா….. உங்களைப் பார்க்கனும்….. உங்க மடில படுத்து எல்லாம் சொல்லி அழனும் போல இருக்கும்மா……’ என தன் மனதினுள்ளே தனியே உரையாடியவள் ஒரு கட்டத்தில் முடியாது நடு ஹாலில் மடிந்து அமர்ந்து கதறத் தொடங்கினாள்.
அங்கே கூடிய வேலையாட்கள் அனைவரது கண்களும் அவளைப் பரிதாபத்துடன் நோக்க, தன் சீற்றப் பார்வையால் அனைவரையும் அங்கிருந்து அனுப்பியவன் தரையில் விழுந்து கதறும் தன்னவளை நெருங்கினான்.
அவன் தன்னை நெருங்கவும் அச்சத்தில் அந்த நிலத்தோடு ஒன்றியவளை அதிர்ந்த பார்வை பார்த்தான் ராவணன்.
எல்லா சந்தர்ப்பத்திலும் எதிர்த்து வாயாடுபவள் புதிதாக தன்னைப் பார்த்து அச்சம் காட்டவும் அவன் மனம் காயப்பட்டுப் போனது.
சட்டென அவளைத் தன் கரங்களில் தூக்க அவளோ நடுங்கிப் போனாள்…. “உதி இட்ஸ் ஓக்கே…. இட்ஸ் ஓக்கே… ரிலாக்ஸ்… ஏன்டி என்னைப் பார்த்து பயப்படுற…..” என்றவனின் கேள்வி செவிடன் காதிலே ஒலித்த சங்காகிப் போனது.
அவனுக்கோ சென்ற சினம் மீண்டும் திரும்ப வந்துவிடும் போலத் தோன்ற பெருமூச்சை இழுத்து வெளியேற்றியவன் அவளைக் கையில் ஏந்திக் கொண்டு தன் அறைக்குச் சென்றான்.
அவளது திடீர் அமைதி அவனைக் கொல்லாமல் கொன்று புதைத்தது. அவளைப் படுக்கையில் கிடத்தியவன் அவள் அருகே அமர்ந்து அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான்.
“இதை நீ கடந்துதான் ஆகனும் உதித்தனா….. உன்னோட அச்சம் தேவையில்லாதது. என்னைப் பார்த்து நீ பயப்பட தேவையில்ல…. ஏய் வாயைத் திறந்து பேசுடி….. இப்படி எதுவுமே பேசாம இருந்தா என்ன அர்த்தம்…..?????” எனச் சீறினான் ராவணன்.
படுத்திருந்தவளோ அசையவும் இல்லை….. அவனுக்குப் பதில் பேசவும் இல்லை… அவள் தன் மனதோடு போராடிக் கொண்டிருப்பதை ராவணன் அறிய வாய்ப்பில்லையே…….
அவனது பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக இல்லாது போக பற்றிய அவளது கரத்தின் ஒற்றை விரலை தன் கரங்களுக்குள் வைத்து நசித்தான் ராவணன்.
சுள்ளென ஓர் வலி அவளது சுண்டு விரலைத் தாக்க தன் கரத்தை உதறி விடுவிக்க முயன்றாள் அந்த மங்கை.
அவனோ அவள் விரலை இன்னும் இன்னும் பலமாக நசுக்க “ஆம்மாஆஆஆ………” என அலறித் துடித்தவள் அவன் விழிகளை வெறித்துப் பார்த்தாள்.
“நான் கேள்வி கேட்டா பதில் சொல்லனும்னு தெரியாதா உதித்தனா…..?????” என்றவனின் ருத்ர தாண்டவத்தில் அதிர்ந்து போனவள் பதறியடித்து படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.
அவள் விரல் இன்னும் அவனது கரத்தினுள்ளேயே இருக்க அச்சத்தில் வாயைத் திறந்தவளுக்கோ பேச்சு வராமல் சொற்கள் தடுமாறியது…
“தெ….. த்தெ… தெரியும் சாஆஆர்…….. ஸ்ஸ் ஆஆஆஆ வலிக்………குது ப்ளீஸ் வ்விடுங்க……..” என திக்கித் திணறி கூறியவளை ஆழ்ந்து பார்த்தான்..
அடுத்த நொடியே அவளது விரலை விடுவித்தவன் அவள் விரலை மென்மையாக வருடி விட்டான். அவளது வெறித்த பார்வையை சந்திக்க விரும்பாதவன் அவளுடைய விரலுக்கு சிறிய முத்தம் ஒன்று பதித்தான்.
“என்னால சாரி கேட்க முடியாது உதி…” என்றவன் அவள் கண் முன்னே தன்னுடைய சுண்டு விரலைத் திருப்பி மறுபக்கம் முறித்து உடைத்துக் கொண்டான்.
அவனது செயலை உணர்ந்தவள் பதறி எழுந்து அவனைத் தடுக்க முதலே தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டான் அந்த அசுரன்…
அவனது செயலில் அதிர்ந்து துடித்தவள் “ராவணாஆஆஆ……….” என அலறினாள்.
“உன்னைக் காயப் படுத்தினதுக்கு என்னால சாரி கேட்க முடியாது உதி. இந்த ராவணன் யார்கிட்டேயும் சாரி கேட்கவே மாட்டான்… பட் என்னால உன்னோட வலியை உணர முடியும்….. உன்னோட வலியை நானும் அனுபவிச்சுட்டுப் போறேன்டி…….” என்றவனது கரத்தைப் பற்றி அதில் முகம் புதைத்தவள் அழுது கரைந்தாள்.
“இப்படி பண்ணாதீங்க ப்ளீஸ்… ப்ளீஸ்…… உங்களை கெஞ்சிக் கேட்கிறேன் ப்ளீஸ்….. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ராவணா…. உங்களே நீங்களே காயப்படுத்துறது சைக்கோத் தனமா இருக்கு ப்ளீஸ்…. இதெல்லாம் பார்த்து தாங்குற சக்தி எனக்கு இல்ல…. என்னை இப்படி வதைக்காதீங்க…… என்னால தாங்க முடியலை பயமா இருக்கு……” என அழுது துடித்தவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்..
அவளது உடல் தொடர் அதிர்ச்சிகளால் தூக்கி வாரிப் போட அவளைத் தன்னுள் புதைத்தவன் அவளைத் தன் வருடல்களால் சமாதானப் படுத்தினான்.
“உங்க விரலை சரி பண்ணிடலாம்தானே….. உங்களுக்கு வலிக்கவே இல்லையா…..?????” என்றவளுக்கு வரண்ட புன்னகையை உதிர்த்தவன் தன் விரலைப் திருப்ப டக் என்ற சத்தத்துடன் விரல் பழைய நிலையை அடைந்தது.
அவனது வெண்ணிற முகம் வலியில் சிவந்து போனது. அவனோ வழமை போலவே தன் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாது தன் வலியை இலகுவாக மறைத்துக் கொண்டான்.
அவளது மனதை மாற்ற எண்ணியவன் “உதிம்மா நீ வீட்ல இருக்கும் போது உனக்கொரு கிப்ட் அன்ட் பொக்கே வந்திச்சே அது உனக்கு ஞாபகம் இருக்கா……..??????” எனக் கேட்டான்.
“ம்ம் ஆமா…. ஞாபகம் இருக்கு ரொம்ப அருமையான கிப்ட்….. மெழுகு விமான……….” எனச் சொல்லிக் கொண்டிருந்தவள் அதிர்வுடன் அவன் முகம் பார்த்தாள்.
“எனக்கு கிப்ட் வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்…..???? ஓ மை காட் அப்போ அந்த ராவணன் நீங்கதானா…….??????? நீங்க அனுப்பின கிப்டா அது…?????” என விழி விரித்தவளைப் பார்த்து ஆம் எனத் தலையசைத்தான் ராவணன்.
“என்னோட ஆசை கனவு எல்லாத்தையும் முதல் முதலா ஒரு மெழுகு பொம்மைல பார்த்து நான் எவ்வளவு சந்தோஷப் பட்டேன் தெரியுமா…….. தேங்க்யூ தேங்க்யூ சோ மச் ராவணா…….” என்றவள் ஆர்வ மிகுதியில் சட்டென அவனது தாடியடர்ந்த கன்னம் பற்றி அழுந்த முத்தம் இட்டாள்.
தன் உயிர் காதல் மனைவியிடம் இருந்து பெறும் முதல் காதல் முத்தம்………………. அவன் தலை கிறுகிறுக்க உறைந்து போய் விடலைப் பையன் போல விழிக்கத் தொடங்கினான்.
அந்த பிரபஞ்ச அழகி தொட்டால்… யானைக்கு மட்டுமல்ல ராவணனுக்கும் அடி சறுக்கும்………….
💜💙உதிக்கும்💙💜
