காதல் மிகுத்துப்பெயின்-22

காதல் மிகுத்துப்பெயின்

காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்…!!!

2. காதல் மிகுத்துப் பெயின்…!!!

2. காதல் மிகுத்துப் பெயின்…!!!

3 காதல் மிகுத்துப் பெயின்…!!!

3 காதல் மிகுத்துப் பெயின்…!!!

4. காதல் மிகுத்துப் பெயின்…!!!

4. காதல் மிகுத்துப் பெயின்…!!!

5.காதல் மிகுத்துப் பெயின்…!!!

5.காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்…6

காதல் மிகுத்துப் பெயின்…6

7 காதல் மிகுத்துப் பெயின்…!!!

7 காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்..8

காதல் மிகுத்துப் பெயின்..8

காதல் மிகுத்துப் பெயின்..9

காதல் மிகுத்துப் பெயின்..9

காதல் மிகுத்துப் பெயின்…10

காதல் மிகுத்துப் பெயின்…10

காதல் மிகுத்துப் பெயின்… 11

காதல் மிகுத்துப் பெயின்… 11

காதல் மிகுத்துப் பெயின்…12

காதல் மிகுத்துப் பெயின்…12

காதல் மிகுத்துப் பெயின்…13

காதல் மிகுத்துப் பெயின்…13

காதல் மிகுத்துப் பெயின்… 14

காதல் மிகுத்துப் பெயின்… 14

காதல் மிகுத்துப் பெயின்…14.1

காதல் மிகுத்துப் பெயின்…14.1

காதல் மிகுத்துப் பெயின்…15

காதல் மிகுத்துப் பெயின்…15

காதல் மிகுத்துப் பெயின்…16

காதல் மிகுத்துப் பெயின்…16

காதல் மிகுத்துப் பெயின்…16.1

காதல் மிகுத்துப் பெயின்…16.1

காதல் மிகுத்துப் பெயின்… 18

காதல் மிகுத்துப் பெயின்… 18

காதல் மிகுத்துப் பெயின்…19

காதல் மிகுத்துப் பெயின்…19

காதல் மிகுத்துப் பெயின்… 20

காதல் மிகுத்துப் பெயின்… 20

காதல் மிகுத்துப் பெயின்.. 21

காதல் மிகுத்துப் பெயின்.. 21

காதல் மிகுத்துப்பெயின்-22

காதல் மிகுத்துப்பெயின்-22

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 23

காதல் மிகுத்துப்பெயின் 23

காதல் மிகுத்துப்பெயின் 25

காதல் மிகுத்துப்பெயின் 25

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 27

காதல் மிகுத்துப்பெயின் 27

காதல் மிகுத்துப்பெயின் 28

காதல் மிகுத்துப்பெயின் 28

காதல் மிகுத்துப்பெயின்.29

காதல் மிகுத்துப்பெயின்.29

காதல் மிகுத்துப் பெயின் 30

காதல் மிகுத்துப் பெயின் 30

காதல் மிகுத்துப்பெயின் 31

காதல் மிகுத்துப்பெயின் 31

காதல் மிகுத்துப்பெயின் 32.1

காதல் மிகுத்துப்பெயின் 32.1

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 34

காதல் மிகுத்துப்பெயின் 34

காதல் மிகுத்துப்பெயின் 35

காதல் மிகுத்துப்பெயின் 35

காதல் மிகுத்துப்பெயின் 36

காதல் மிகுத்துப்பெயின் 36

காதல் மிகுத்துப்பெயின் 37

காதல் மிகுத்துப்பெயின் 37

காதல் மிகுத்துப்பெயின் 40

காதல் மிகுத்துப்பெயின் 40

காதல் மிகுத்துப்பெயின் 41 நிறைவு பகுதி

காதல் மிகுத்துப்பெயின் 41 நிறைவு பகுதி

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின்  38

காதல் மிகுத்துப்பெயின் 38

காதல் மிகுத்துப்பெயின் 39

காதல் மிகுத்துப்பெயின் 39

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

22

காதல் மிகுத்துப்பெயின்

நிகேன்…

காரை எட்டி பார்த்து…

“வா நிதி ” என அழைக்க…

அழைக்கப்பட்டவள்… பிள்ளை மறந்தாள்… தாய் உடன் பிறப்பு சொந்தம் மறந்தாள்… தாவி குதித்து ஓட்டமா ஓட்டம் தலைவனிடத்தில்…

வலிக்க அவள் பின்னந்தலை முடி முடியை அழுத்தி பிடித்து காதலன் அணைப்பு..

மென்மைகள் இப்போதைக்கு இல்லை அவளிடம்.. சாவடிகனும் கட்டிப்பிடித்தே வேகத்தில் இருந்தான்… படகு அனைய வலிய உடல் அதிகாலை குளிருக்கு கத கத ப்பாய்.. சொகுசாய் மார்பில் தஞ்சம் நிதி..

லண்டனில் பிறந்திருந்தால் முத்தத்தால் மூழ்கடித்து தன் காதல் சொல்லியிருப்பான் நிகேன்.. தங்க தமிழ் நாடு என்பதால் வன் அணைப்பில் சொல்லி.. சட்டுன்னு எட்டி நிறுத்தி..

“வா போலாம் அவங்க நம் பின்னால் வரட்டும்…”

ஹாங் ஓவர் அவனுக்கு முடில.. சமாளித்து தான் நின்றிருந்தான்.. இப்ப ஓடி வந்தது நிதியை பார்க்கும் ஆசையில் தான்.. வண்டி எப்ப எடுத்தான்? எப்படி ஓட்டி வந்தான்? இப்ப தன் சகியின் எதிரில் நிற்பதெல்லாம் கனவா? நினவா? தோற்றமயக்கத்தில் நிகேன்..

இவள் தயங்கி காரையே பார்க்க…

“என்னடி அப்டியே திரும்பி போக உத்தேசமா?…” இரைய..

நி..வி.. அவன் கண் பார்த்து பேச வெட்கி..

“அது யாரு?.. புதுசா.. ” புருவம் சுளிக்க

திரு திரு வென விழித்து.. காருக்குள் போய்.. சரோவின் கைகளில் தூங்கி கொண்டிருந்த குட்டியை மெல்ல அள்ள..

அது முழிச்சு பார்த்து.. தன் தாய் என்றதும் கம்முன்னு கண்ண மூடி தன் தூக்கத்தை தொடர…

“பனி சேராது… கவனமா காதை பொத்து நித்தி… ” சரோ…

ம்ம்ம்.. டவலை இழுத்து பொத்தி நிதி

தேவி அசோக் டிரைவர் எல்லாம் ரெஸ்ட்டுக்காய் வெளியில் தம்பதிகளுக்கு தனிமை தந்து தள்ளி நிற்க…

சரோ, காருக்குள்ளேயே இருந்துகொண்டார்…

மகள் இத்தனை நாள் வாழல.. கவலை போய்… பேரன் அவர்கள் சொத்து அல்லவா? இனி தங்கள் கையில் விடுவார்களா? புது கவலை.. நிவி இல்லன்னா…???? முகம் வாடியது..

பாசம் வச்சுட்டார் திரும்ப எடுக்கத்தெரியல… நிவி மேல் அப்படி ஓர் பிரேமை…

குங்குமத்தோடு பால் சேர்த்த நிறத்தில் இப்பத்தான் நடக்க தொடங்கியிருக்கும் கொழு கொழு ஹெல்தி குழந்தையா வட்ட களையான முகம்.. காது குத்தி குட்டி ஒத்தை சிவப்பு கல் கம்மல் + புதிதாய் வளர்ந்த குட்டி முடிகள்யோடு..

மேல் பனியன் , இடுப்பில் ஹகிஸ் மாட்டி… சுத்தமாய் நிவியை… கணவனுக்கு காட்ட கொண்டு போக…

நிதியின் நடவடிக்கையை புரியாது பார்த்து கொண்டிருந்தவனுக்கு… ஜீபூம்பா வா குழந்தையை பார்த்ததும்..

வைரஸ் ஆன கணிணி போல பல லிங்க்ஸ் ஒரே நேரத்தில் தொடப்பட்டு பல தந்திகள் சம்பந்தமே இல்லாமல் மூளையில் பதிவுகள்.. அவனால் ஒருநிலைபடுத்தவே முடில..
பிள்ளை தெரிஞ்சது… நிதி வச்சுருந்தா நம்மது தான்…

ஆனால் சொல்லல? ஏன்? ஏன்? ஏன்? அதிர்ச்சி… இன்றும் தான் போன் பண்ணலேன்னா தெரியாது? போன ரெண்டுவருடங்கள் போல எண்ணிக்கை கூடியிருக்கும்… சொல்லவே மாட்டா.. ம்ம்

அசுரனாய் மாறிட்டான்… ஏற்கனவே சொல்லாமல் கொள்ளாமல் போனதை பெருங்குற்றமாய் கருதி இருக்க… சிறிய கோடு பக்கத்தில் பெரிய கோடு போட்டு அதெல்லாம் ஒன்னும் இல்லை போடா டேய்… என்பதாய் குழந்தை இருப்பதை மறைத்தது…

நிதி மீதான காதல், நேற்றைய குடி என்று எல்லா மயக்கங்களும் நொடியில் நீங்க… விரைத்து நின்றான்.. தானாய் வாய் மேல் கை போனது.. பிள்ளையை ஏற்றுக்கொள்ளமுடியல.. அதிர்ச்சி

நிகேனின் கோபங்கள் மிக நேர்மையானது… மனைவி தாங்கித்தான் ஆகணும்… ம்ம்ம்

தன் நடையை விட மெதுவா நிகேனிடம் வந்தவள்.. பிள்ளையை அவனிடம் கொடுக்க முயல…

வாங்காது தூர போனான்… விடாது நெருங்கியவளிடம்

உங்க வெளிநாட்டு புருஷனுடைய பிள்ளையா மேடம்? வலிக்க கேட்க..

அது ஊருக்காக சொன்னது மாமா… நம்ம பிள்ளை.. .. மாமா

ம்ம்ம்… நான் உங்க கார்டியன் மட்டும் தானே பிள்ளைலாம் எப்படி பிறகும்? எள்ளியவன்…

பெண்ணா? ஆணா? கூட மேடம் இன்னும் சொல்லவே இல்லை…

நிவேதன் சுந்தர் …

ம்ம்ம்… பதிருவாய் மலர்ந்து சொல்லிட்டீங்க.. சந்தோசம்… பார்த்துட்டேன்… நம்பிட்டேன்.. தெரிஞ்சிகிட்டேன்…

போய்டு… உங்க ஊருக்கே திரும்பி போய்டு.. இனி என் கண்ணில் படாதே நித்யா… நீ வேணாம் .. உன்னோடு சார்ந்த எதுவும் வேணாம்… காணாமல் போனவள் எனக்கு வேணாம் போ..
அவனின் ஆதாம் ஆப்பிள் வலியோடு இந்த வார்த்தைகள் சொன்னது…

துரோகங்களிலேயே பல ஷேட்ஸ் காட்டிய ஆசை மனைவியை உடனே வெறுத்தான்.. முகம் பாறையா இறுக.. வேகத்தில் வண்டியில் ஏறப்போக…
நிதி.. அவனை தடுக்க முயல… அவன் தள்ள… இந்த அசைவில்… நிவி முழித்து சத்தம் கொடுக்க.. போராட்டம்

சாரி மாமா… எல்லாத்துக்கும் சாரி மாமா… உங்களை ஹர்ட் பண்ணிட்டேன் மாமா ரொம்ப… உங்க நிதிக்கு புத்தி இல்ல மாமா… இன்னும் கூட என்னை நல்லா திட்டுங்க… என்னை விட்டு போகாதீங்க… நிதி அவன் கையை விடாது கண்ணீர் கண்கள் தானாய் உகுக்க… வாய் இதயத்தின் எண்ண பிரதிகளை தானாய் மொழியாய் ஒலிக்க….

போகவும் முடியாமல் இருக்கவும் ஒப்பாமல் இருப்பிரிவில் நிகேன்…

மௌன படமாய் தூர இருந்து பார்த்த தேவிக்கு… நிகேனின் கோபம் நன்றாக புரிய…

தங்கையிடம் செல்ல முனைந்த அசோக்கை.

நீங்க இருங்க… சைகை காட்டிட்டு… இளம் அனுபவமில்லா ஜோடிகளின் இடையில் சென்றாள்…

சரோவும் இப்ப காரில் இருந்து இறங்கி மகளின் போராட்டத்தை வேதனையோடு பார்த்தார்… சரியா? தவறா? பேசமுடியாத விடயம்..

தேவி இடையில் போனது ஓர் ஆறுதல்..

நிதியின் கைகளிலில் இருந்து நிவியை வாங்கியவர்…

நித்தி அவர் கையை விடு… இது நடுரோடு புரிஞ்சிக்க….

நிகேனின் கைகளின் மீதிருந்த நிதியின் கையை எடுக்க முயற்சிக்க…

அண்ணி.. எனக்கு அவர் வேணும்… என்னை வெறுத்தாலும் சரி… என்னை விட்டுட்டு போக வேணாம் சொல்லுங்க … ப்ளீஸ்.. ப்ளீஸ் அண்ணி… எனக்கு மாமா வேணும்… மாமா வேணும்

ம்ம்ம் .. இரண்டு கைகளாலும் முகம் பொத்தி அழுது தேங்க

மிட்டாய் வேணும் அடம் பண்ணும் மகளாய்.. நிதி.. இதும் கூட கவிதை அழகே…

நிகேன் ரசிச்சான் . வறண்ட இதயம் குளிர…அவளோ ரண களத்திலும்.. ஆனால் வெளியில் முகம் மாறல..

சின்ன பிள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராது .. சொல்வாங்க.. அப்படித்தான் இருக்கே நித்தி நீ எப்பவும்… நீ மட்டும் இல்ல உன்னோடு அன்பா இருப்பவங்க மொத்த பேரையும் கஷ்டப்படுத்துற..

அவர் கோபம் நியாமானது.. நம்ம ஊர்க்கார பய ன்னா இந்நேரம் வாய் பேசிட்டுலாம் இருக்க மாட்டான்.. கை தான் வைப்பான்… அவ்ளோ பெரிய தவறு செஞ்சிருக்க… இப்பவாச்சும் பொறுமை எடு… நாங்க சொல்ரதுக்கு காது கொடு..

நாத்தனாரை கடிந்து கொண்டு…

தம்பி எதுக்கு ரோட்டில் நின்று பேசிட்டு.. நீங்களும் பொறுங்க பேசிக்கலாம்

தூக்கம் போட வசதி குறைவால் நிவிக்குட்டி கை தங்காது பாட்டு வைக்க…

ஜோ..ஜோ.. தேவி லேசாய் தாலாட்டி…

ராஜாக்குட்டி… அப்பா பாருங்க… உன்னை பார்க்க ஓடி வந்துருக்காங்க… சொல்ல

அதுவும் …. அப்பா அப்பா அப்பா என்று விளிக்கப்படும் உறவை பெருங்கருணை கொண்டு குவளைமலர் அணைய கண்கள் மலர்த்தி முறைத்து பார்க்க… அக்கணம் மகனை பார்த்த தகப்பனுக்கு தனக்கு ரொம்ப பிடிச்ச நிதியின் கண்களை மகனின் அகன்ற விழிகளில் கண்டான்..

நொடியில் வெள்ளை கருப்பு வலையினால் உள்ளிழுக்கப்பட்டான்…

என்னே ஒரு இயற்கையின் படைப்பு.. !!!

ஆணும் பெண்ணும் கூடி அவர்களின் பொதுவான உடலமைப்பில் … ஓவியமாக.. குழந்தை

மறு ஜென்மா என்றால் நாமே இதே உடலா மனமா இன்னொரு பிறவி எடுப்பது இல்லை… நிதர்சனம்… நம் ஜீன் இன்னொரு உயிரில் பொதிவது… தன் குழந்தையின் உடலில் தாயும் தகப்பன் இருவர் பிறக்கிறார்கள் கூடுதலா முன்னோர்கள் மசாலா சிறிதளவு…..

மரபு சங்கிலிகள் சமயங்கள் சொல்வது ஜென்மம் .. சயின்ஸ் சொல்வது கிரோமசம் பங்கீடு ஆண் 24 + பெண் 24 = 48 .. சேர்ந்தால் உயிரி மரபியல்..

அப்ப நாம் அழிவில்லாதவர்கள் அல்லவா?.. புதிது புதிதாய் பிறந்துட்டே இருப்பதால்…

பாவமோ? புண்ணியமோ? நம் தலைமுறைகள் பெறும்.. என்று… எளிமையா பெரியவர்கள் நல்ல பழக்கவழக்கங்கள் எண்ணங்களோடு வாழச்சொல்லும் ரகசியங்கள்…

திருமணம் மற்றும் குடும்ப வாழ்யியல் என்பது பார்க்க எளிதா தெரிஞ்சாலும் அடிப்படை சிக்கலானது.. அஸ்திவாரம் … வெளித்தெரியும் அனைத்து அரண்மனைகளுக்கும். ம்ம்ம்..

அப்பாகிட்ட போறியா?

மாட்டேன்… மண்டைய ஆட்டியது.. நிவி..

நிறய சாக்கி வாங்கித் தருவாங்க… தேவி ஆசை காட்டும் போதே… கண்ணு கலங்கிட்டான் நிகேன்…

நடு வீதியில் இப்படி ஓர் அறிமுகம்.. எந்த தகப்பனுக்கும் பிள்ளைக்கும் நடக்கக்கூடாது..

பார்த்தியா டி… அடுத்த அனல் பார்வை மாஜி eeee (இப்போதைக்கு கோபம் அதான் அப்டிலாம் நினைக்கிறான் he eee ro) மனைவிக்கு அனுப்ப… அவள் எங்கு இதெல்லாம் கவனிச்சா?.. அது ஒரு பிள்ளையா நிகேன் சாக்கிதான் வேணும் ன்னு ஒற்றே அடம்…

சாக்கி டீல் பிடிச்சு போக… நிவி, நிகேனிடம் தாவ…
ஒய்யார குதிரை உயர தகப்பன் அணைப்பும் அதுக்கு ரொம்ப பிடிச்சு போக… நல்லா அவனோடு ஒட்டிக்கொண்டு.. கடைக்கு அழைத்தது…

சரோ முனகிக்கொண்டார்.. அது ரெத்தம் தெரிது பாரு.. ன்னு..

மகனின் வாசம் தாழம்பூவாய் மணக்க… குட்டி பிள்ளைகளோடு பழக்கமே இல்லாத நிகேன்.. உருகி நின்றான்… கனமே இல்லை பூச்செண்டாய்
எந்தினான்.. மகனை.. சொல்லமுடியா உணர்வு நிலை.. கொஞ்சத்தெரில.. பேசத்தெரில… ஆதிவாசி மொழியாய்.. தன் விரல் மூலம் தொட்டு தொட்டு தடவி வியக்க.. அதுவும்.. அவன் தாடி மீசை கூர் மூக்கு நெற்றி என்று தடவி பார்க்க… பார்த்தவர்களுக்கு கண்ணு வேர்த்தது…

நித்தி தான் பிரிந்து எடுத்து பெருந்தவறு செய்ததும் விளங்கிவிட்டது.. இருந்தாலும் எப்படி அவளை விட்டு கொடுக்க?

எங்கு போகலாம் தம்பி.. சொல்லுங்க…

என் வீட்டுக்கு… அந்த வார்த்தையில் இனி பொண்டாட்டியே இல்லன்னாலும் சரிதான்… பிள்ளை வேணும்.. கர்வம் இருந்தது… பிழைகளினால் சரிந்து கிடந்த மனசை நிமிர்த்திட்டான் நிகேன்…

புயல் காற்றாய் வண்டியில் பறப்பவன் அவன்… குட்டி பிள்ளைய வச்சி ஓட்ட கை நடுக்கம் கொடுத்தது…

இருந்தாலும்… வண்டிக்கு பிள்ளைய கொண்டு போக… அசோக்கின் வண்டியில் ரௌண்ட் அடிச்ச கேடி நிவியும் ஒன்னும் பெருசா அலட்டிக்காம சைலேண்ட் வில்லனா இருக்க… தேவி தான் இப்ப உதவினாள்…

வண்டி சாவி கொடுங்க… நானும் அவரும் கார் பின்னாடியே வரோம்.. நீங்க காரில் பிள்ளையோட வாங்க… பனி காத்து பிள்ளைக்கு சேராது.. தடுமம் பிடிக்கும்ங்க தம்பி…

சாவிக்கு கையும் நீட்ட.. தயங்கி பின் தந்துவிட்டான் நிகேன்…

அவன் கார்கிட்டே வரும் போதே… முன் சென்று .. சரோவை ட்ரைவர் அருகில் அமரவச்சு.. பின்னோடு பரப்பிக்கிடந்த பிள்ளை துணி பொருள் எல்லாம் ஒதுங்கவச்சி.. நிதியையும் நிகேனையும் குடும்பமா உக்கார்த்தி வச்சுட்டு.. ட்ரைவர் அண்ணா போலாம்…. இனி தம்பி வழி சொல்வாங்க … காரை அனுப்பி தன் கணவனோடு நிறைவாய் பின் தொடர…

தங்கைக்காய் மனைவியின் இத்தனை அன்பு செயல்களையும் பேச்சின்றி கவனித்துக்கொண்டிருந்த அசோக் ..

நான் தான் மோசமானவன் பாவி… உனக்காகவாச்சும் கடவுள் நமக்கு குழந்தை தந்திருக்கலாம் தேவி… இந்த வீணா போனவன் தான் வேணும் ன்னு என் பின்னாடி வந்து நிம்மதியான வாழ்க்கைகூட கிடைக்கல ல்ல உனக்கு… குரல் இறங்கி… தன் முரட்டு இதயத்தின் அடி ஆழத்திலிருந்து கணவன் வருத்தப்பட…

அட.. மாமா .. என்னாதிது… குழந்தை ஒன்னுதான் உலகத்தில் மகிழ்ச்சியா போங்க.. போங்க… எல்லோர் கிட்டேயும் பாசமும் நேசமுமா வாழ்ந்துட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருப்பது தான் நிஜ சந்தோசம்… என் மேல நிஜமா அன்பிருந்தா எனக்கு ஒரே ஒரு சந்தோசம் கொடுக்கணும்… வருசா வருஷம் ஐயப்பசாமிக்கு மாலை போட்டு 48 நாள் விரதம் இருந்து தரிசனம் பண்ணிட்டு வரணும்… எனக்கு அந்த கோவில் போகனும்ன்னு ரொம்ப ஆசைங்க… 50 வயசுக்கு மேலதான் போகமுடியுமாம்… எனக்கு பதில் நீங்க போனா உங்களுக்கு செய்யும் சேவையே அவருக்கே செஞ்சதா பூரிச்சுடுவேன்ங்க…

அவ்ளோதானே செய்யிறேன் … தேவி

உங்களுக்கு கோவில் சாமிலாம் பிடிக்காதே… நிஜமா போவீங்களா?

சத்தம் வர சிரித்த அசோக்…

இப்பவும் யாரையும் தெரியாது… பிடிக்காது… என் தேவிக்காய் போறேன் அவ்ளோதான்…

வயிற்றில் இருந்த மனைவியின் குளிர்ந்த விரல்களை தன் விரலோடு கோர்த்து உறுதி தந்தான் .. கணவன்

பாறைகளும் ஓர் நாள் உருகலாம் தேயலாம் அன்புகொள்ளும் இதயத்தின் முன் சாத்தியமே..!!!

ஓடும் காரில் அமர்ந்திருந்த இளம் ஜோடிக்குள் சத்தமில்லாமல் தள்ளு முள்ளு…

கணவன் கைதேடி தன் கை கோர்க்க… பிடிச்சு தள்ளினான்.. வேகமா நிகேன்..

அவள் கண்ணீர் கண்கள் இவனுக்கு இரக்கம் தரவில்லை… போடி…

பிள்ளையை அணைக்க… அதுக்கு சாக்கி இப்போதைக்கு இல்ல புரிய…அதனால் தாயிடம் உருட்ட .. நிதியிடம் தாவ அதன் மொழியில் அழைத்து தவ்வ… நிகேன் விடாமல் என் பிள்ளை என் உரிமை அழுத்திப்பிடிக்க…. குழந்தைகளின் காதை குத்தும் ஒரே கூர் ஆயுதம் அழுகை வைக்க… ப்போ ப்போ.. முறைச்சுட்டே நிதி கையில் கொடுத்துட்டு .. வேறு பக்கம் திரும்பி கொண்டான்..

முந்தானை மறைவில் பிள்ளையை அமர்த்தியவள்… சூழ்நிலை அமைதியானதும்.. நிகேனின் தொடையில் பேட் டச்… தள்ளி விட்டான்.. ஊடல்

தள்ளிய கையின் நடு விரலை சட்டுன்னு வாய்க்குள் வைத்து நிதி சுவைக்க.. .. உஸ்ஸ்ஸ்.. ஹா.. உணர்ச்சிகளின் கூட்டுநரம்பின் முடிச்சில் நச்சுன்னு நட்டு குத்தலா குத்தி அது அதிர்வை உடலெங்கும் கிளப்ப.. நிகேன்… அவள் பக்கம் சரிந்து.. காதில் ஆங்கிலத்தில்… கீழ்த்தரமா நடந்துக்காதே.. எச்சரிக்க..

இப்போதைக்கு கீழ் மேல் தரம் பிரிக்கும் நிலையில் நிதி இல்லை… வேணும் வேணும் அவள் நிகேன் வேணும்… அவ்ளோதான்… போயா

வாய் விரலை விட்டு… விரல் மீதிருந்த எச்சிலை அவன் பனியனிலேயே துடைச்சுட்டு… eee.. அவன் கையை பத்திரமா அவன் கிட்டயே ஒப்படைச்சுட்டு… இவள் கையை பக்க இடுப்பில் சரிவா இறக்கி வயிற்றை தொட்டு.. அடுத்து நேர்ப்பாதையில் அவள் விரல்கள் நண்டாய் செல்ல… அபாய பகுதிக்கு செல்லும் முன் நிகேனின் கைகளால் ஓர் சுகவிபத்து தடுத்து நிறுத்தப்பட்டது… முயற்சி கைவிட்டு, நல்லா ஒய்யாரமா திமிரா நிதி கணவனின் மார்பில் சாய்ஞ்சுகிட்டு.. நல்ல பிள்ளையா இருக்க.. அதுக்கு இது பரவாயில்ல … விட்டுக்கொடுத்தான்… இது காரில் ஓர் நீதிக்கு நேர்மைக்கு கட்டுப்பட்டு சிங்கம் சும்மா இருன்ஞ்சு
வீட்டிலோ? .. ரெண்டுக தொல்லை கூட இருந்தவங்களுக்கு முடில….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *