2. காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப்பெயின்

காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்…!!!

2. காதல் மிகுத்துப் பெயின்…!!!

2. காதல் மிகுத்துப் பெயின்…!!!

3 காதல் மிகுத்துப் பெயின்…!!!

3 காதல் மிகுத்துப் பெயின்…!!!

4. காதல் மிகுத்துப் பெயின்…!!!

4. காதல் மிகுத்துப் பெயின்…!!!

5.காதல் மிகுத்துப் பெயின்…!!!

5.காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்…6

காதல் மிகுத்துப் பெயின்…6

7 காதல் மிகுத்துப் பெயின்…!!!

7 காதல் மிகுத்துப் பெயின்…!!!

காதல் மிகுத்துப் பெயின்..8

காதல் மிகுத்துப் பெயின்..8

காதல் மிகுத்துப் பெயின்..9

காதல் மிகுத்துப் பெயின்..9

காதல் மிகுத்துப் பெயின்…10

காதல் மிகுத்துப் பெயின்…10

காதல் மிகுத்துப் பெயின்… 11

காதல் மிகுத்துப் பெயின்… 11

காதல் மிகுத்துப் பெயின்…12

காதல் மிகுத்துப் பெயின்…12

காதல் மிகுத்துப் பெயின்…13

காதல் மிகுத்துப் பெயின்…13

காதல் மிகுத்துப் பெயின்… 14

காதல் மிகுத்துப் பெயின்… 14

காதல் மிகுத்துப் பெயின்…14.1

காதல் மிகுத்துப் பெயின்…14.1

காதல் மிகுத்துப் பெயின்…15

காதல் மிகுத்துப் பெயின்…15

காதல் மிகுத்துப் பெயின்…16

காதல் மிகுத்துப் பெயின்…16

காதல் மிகுத்துப் பெயின்…16.1

காதல் மிகுத்துப் பெயின்…16.1

காதல் மிகுத்துப் பெயின்… 18

காதல் மிகுத்துப் பெயின்… 18

காதல் மிகுத்துப் பெயின்…19

காதல் மிகுத்துப் பெயின்…19

காதல் மிகுத்துப் பெயின்… 20

காதல் மிகுத்துப் பெயின்… 20

காதல் மிகுத்துப் பெயின்.. 21

காதல் மிகுத்துப் பெயின்.. 21

காதல் மிகுத்துப்பெயின்-22

காதல் மிகுத்துப்பெயின்-22

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 23

காதல் மிகுத்துப்பெயின் 23

காதல் மிகுத்துப்பெயின் 25

காதல் மிகுத்துப்பெயின் 25

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 24

காதல் மிகுத்துப்பெயின் 27

காதல் மிகுத்துப்பெயின் 27

காதல் மிகுத்துப்பெயின் 28

காதல் மிகுத்துப்பெயின் 28

காதல் மிகுத்துப்பெயின்.29

காதல் மிகுத்துப்பெயின்.29

காதல் மிகுத்துப் பெயின் 30

காதல் மிகுத்துப் பெயின் 30

காதல் மிகுத்துப்பெயின் 31

காதல் மிகுத்துப்பெயின் 31

காதல் மிகுத்துப்பெயின் 32.1

காதல் மிகுத்துப்பெயின் 32.1

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 33

காதல் மிகுத்துப்பெயின் 34

காதல் மிகுத்துப்பெயின் 34

காதல் மிகுத்துப்பெயின் 35

காதல் மிகுத்துப்பெயின் 35

காதல் மிகுத்துப்பெயின் 36

காதல் மிகுத்துப்பெயின் 36

காதல் மிகுத்துப்பெயின் 37

காதல் மிகுத்துப்பெயின் 37

காதல் மிகுத்துப்பெயின் 40

காதல் மிகுத்துப்பெயின் 40

காதல் மிகுத்துப்பெயின் 41 நிறைவு பகுதி

காதல் மிகுத்துப்பெயின் 41 நிறைவு பகுதி

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின் 41 .1

காதல் மிகுத்துப்பெயின்  38

காதல் மிகுத்துப்பெயின் 38

காதல் மிகுத்துப்பெயின் 39

காதல் மிகுத்துப்பெயின் 39

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

காதல் மிகுத்துப்பெயின் 42

2 காதல் மிகுத்துப் பெயின்…

நித்யா..
மறுநாள் ஒரு பாசி மாலையை கழுத்தில் போட்டு எடுத்து தன் கேட்டெரிங் இன்ஸ்டிடியூட் கிளம்ப… அப்பா துணைக்கு வந்தார்…

எதுக்குப்பா? நான் போய்ப்பேன்..

இருக்கட்டும் பாப்பா… வாசல் வரை வரேன்…

மேல பேசல… அப்பா ஏதாச்சும் விசாரிச்சா.. உண்மை சொல்ல வேண்டி வரும்… குட்டி பம்மிங்

முத்தப்பன் மதியை வாசலில் விட்டு சில்லுண்டி செலவுக்கு பணம் தர..

அப்பா ஒரு 500 ரூபாய் இருந்தா தாங்க.. நேத்து செலவு பண்ணவங்களுக்கு கொடுக்கணும்…
கொடுத்தார் ..

செயின் கிடைக்கும் பா… நம்பிக்கையா சொல்லி இருக்காங்கப்பா

இவள் கணக்கு .. நிகேனின் வீட்டில் எப்படியும் ரசீது காட்டினால் திருப்பி தந்துவிடுவார்கள் என்பது…

போனா போனதுதான்… வராதுமா…நீ பத்திரமா இருந்தியே அத்தும்போதும்….. அப்பா வாங்கித்தாரேன் புதுசா.. என்னடா என் தங்கப்பிள்ளை… கவலை மட்டும் பட்டுறாதே…

சரிப்பா.. கண்ணில் நீரோடு தலையாட்ட…

கறி கடை வைத்திருக்கும் சாமானிய தகப்பன் தன் சாயம் மங்கிய சட்டையோடும் மகளுக்காய் கட்டிய சலவை வேட்டியோடு எதிர் திசை நடக்க…

மகளின் பாச பார்வை … அவர் கண்ணை விட்டு மறையும் வரை விடல…

தப்பு பண்ண குற்றவுணர்வோடு தன் வகுப்பு போக…. நேற்றைய கலாட்டாக்கள் அலராய் பின்னப்பட்டு.. லவரா? லவரா? தெரியாத பிள்ளைகள் கேட்க…

இல்லப்பா .. சொல்லியே சுகமாய் சலித்தாள் நித்தி.. கிசு கிசுவா? அதும் நிகேன் கூட என்றால் இவளே முத ஆளா ரசிப்பா… eee

அம்புட்டு தேற்ற மயக்கம்…

எவ்ளோ பசிச்சாலும் பக்கத்து வீட்டுக்காரன் ரொட்டி மட்டும் கூடாது… ஆங்கில பழமொழியை…
தப்பா அர்த்தம் சொல்லி…

வேணாம் நித்தி .. அடுத்த வீட்டு பையன் ஆபத்தானவன்… நினைச்ச நேரமெல்லாம் காதல் செய்ய உன் வீட்டுக்குள் வந்துடுவான்… அப்புறம் எப்பவும் ஜலபுல ஜங்ஸ் தான் கல்யாணம் தேவை படாது… என்று கிண்டலோ கிண்டல்… பெயர்த்து எடுத்துவிட்டார்கள் இளம் நெஞ்சங்கள்…

Mammmyyyy .. eeee

ஜல புளு ஜங் .. ன்னா? .. தெரில.. என்றாலும் ஏதோ கெட்ட கோட் வேர்ட் மட்டும் புரிந்தது…

சிரிச்சு மாளா முடில நித்திக்கு… இப்படி பொய் பொய்யா சொன்னா…

விக்கிக்கு நேற்று அவன் செய்த செலவுக்கு பணம் கொடுத்து .. ரசீது கேட்க ..
வண்டி சாவியோடு பெரியவர் கிட்ட கொடுத்துட்டோம் …

சரிதான்… நாம கொடுத்தா என்ன? விக்கி தந்தா என்ன? நித்தி சமாதானம் ஆகிட்டா..

இவர்கள் வகுப்பில் பெரிய வயதுக்காரன் அவன்.. தொழில் தெரிந்தவனும் கூட… சான்றிதழ்க்காக மட்டுமே வருபவன்…

போய் பார்த்தியா மதி ? என்று அவன் கேட்க..

போனால் குருமா வச்சுருவாங்க… போன் கூட ஆர்த்தி எடுக்க மாட்டுறா….. என் மேல கோபம் போல அவங்க பாமிலிக்கே உதட்டை பிதுக்க…

நம்ம அத்தனை பேர் ரிஸ்க் எடுத்து நேத்து காப்பாத்தியிருக்கோம்…… சரியில்ல ..
எங்களை விடு.. நீ போகணும் பார்க்கணும்.. உனக்குததான் முதல் உரிமை … பார்த்துட்டு வீட்டுக்கு போ…

அப்படியா? வட்ட முகமும் திருநீறு கீற்று பிறை நெற்றியும் அப்பாவியா குரலுமா நித்தி வினவ…

அதுவும் அந்த மாதிரி பெரிய ஹாஸ்பிட்டலாம் போனா மலர்கொத்து வாங்கிட்டு போவாங்க… சும்மா வெறுங்கையா போவாதே…

ஓகே.. போறேன்.. பூவோடு….. உனக்காக விக்கி… உனக்காக மட்டுமே… வெற்றி நமதே… பெருவிரல் காட்டி வெற்றி சைகை காட்டினாள்..

நேற்று மாதிரி இன்றும் மட்டம் போட்டு கிளம்பியாச்சு… டெல்லி பாய் ன்னு ஸ்கூட்டி ராணிய கூப்பிட்டு.

இன்றும் மாடி மாடியா படி ஏறி.. கிட்டே போனதும் தயக்கம் … மூடி இருந்த கதவு… திகில் தர… பூவை பாகில் பத்திரம் பண்ணி… சும்மாவே சுவரில் சாய்ந்து காத்திருந்தாள்.. கதவு திறக்க…..

போலாம் டி நித்தி

ப ..பயமா இருக்கு.. கொஞ்ச நேரம் பொறுப்போம்
நித்தி பயப்பட..

அட வா.. நான் தட்டுறேன்… டெல்லி சொன்னதை செய்ய…

புவனா கதவை திறந்தார்… அவர் பின்னே ஆர்த்தி..

இவளை கண்டதும் உம் மென்று இருந்தார்கள்…முகத்தை இறுக்கி…

நிஜத்தில் இவளை அம்மனாய் பூஜித்து இருக்கணும்… இவள் மேல் இளக்காரம்.. மதிக்கல

ஆனால் நித்தி சம்பிரதாயமா..

அத்தை… கூப்பிட்டதும் தான் தாமதம்…

புவனா… எட்டி நடை போட்டு அவள் காதை பிடித்துக்கொண்டார்…

ஏண்டி கழுத…அத்தை அத்தை கூப்பிடாதே எத்தனை முறை சொல்லியிருக்கேன்..

அத்தை விளி பழைய பஞ்சாயத்து….

எல்லாத்துக்கும் நீதான் காரணமா? ஆள் மயக்கி நீ அங்கும் இங்கும் அலையும் போதே தெரியும்டி.. என் பயம்.. உண்மை ஆகிருச்சு..
நான் அலைவதும் அவர்கள் பயத்துக்கும் என்ன தொடர்பு?..

நேத்து சொன்ன பொய்ய உண்மை நினைச்சிட்டாங்களோ? இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க? அவருடைய மகன் தான் தெளிவா சொல்லனும்… மருண்டாள்…

அவசரமா மறுத்து..

நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்லை அத்தை… நேத்து ஹாஸ்பிடல் சேர்த்தது தவிர வேற ஒன்னும் செய்யல .. ஆர்த்தி அண்ணா கிட்டே கூட விவரம் கேளுங்க… ப்ளீஸ்…

வா.. வா… ரெண்டு பேரையும் கட்டி வச்சு உதைக்கிறேன்… அவனும் வாய்
தொறக்காமத்தான் இருக்கான்…

ஏதாச்சும் காப்பாத்துவான் ன்னு நிகேனை
இவள் பார்க்க..

யாரோ போல முகம் சுளித்தான் அந்த நல்லவன்…. புதுசா…

ஹுக்கும்… தினமும் பழகனும் போலயே இவன் கிட்டே…

நிகில் .. இவ உன் லவரா? நேத்து இங்கேயும் போலீஸ்லேயும் சொல்லி அழுதுருக்கா… நீ சொல்லு..எனக்கு இப்ப உண்மை தெரியணும்…

அதே ஒரு லூசு… அது சொல்லுச்சுன்னு நீங்க வேறம்மா ..
ஒற்றே போடு போட்டுட்டான்…. மகன்..

பிஞ்சு இதயத்தில் ஓர் வெற்றிடம் விழுந்தது கேட்டவளுக்கு… .. லூசு? வார்த்தை ரசக்குறைவா பட்டது.. நிஜத்துக்கும் கனவுக்கும் இடையில் குழம்பி… நித்தி… சும்மாவே நிற்க..

என்ன வேணும்?

இந்த பூ மட்டும் கொடுத்துட்டு போய்டுறேன் அத்தை…

கள்ளமில்லா கண்கள் கண்டு கொஞ்சம் மனமிரங்கினார் புவனா…

இவளை பார்க்க பிரியம் இல்லாது… நிகேன் வேறு பக்கம் திரும்பிக்கொள்ள…

பேசாத ஆர்த்தியிடம் பூவை கொடுத்துட்டு… தன் புது தோழியோடு கிளம்பிட்டா நித்தி…

பெருத்த அவமானம் …

டெல்லிபாய் பொங்கி பொங்கி நியாயங்கள் கேட்க…

அவங்க பாதிக்கப்பட்டவங்க அப்படித்தான் இருப்பாங்க… நான் தான் வந்துருக்கக்கூடாது .. இப்ப படுது… அவங்க நன்றி வாங்க வந்த மாதிரி போச்சே… இதுதான் எனக்கு உறுத்துது… விடு விடு… பின்னாடி வச்சி செய்வோம் ok… கேலியா வீர வசனம் பேசிட்டு… அதெல்லாம் முடியாது என்பதால் தானா சிரிச்சிட்டு..

என்னை பஸ் ஸ்டாப்ல விட்ருபா… அப்புறம் என்னைக்கு 5 ஸ்டார் ஹோட்டெல்லாம் கூட்டிட்டு போய் பாடம் எடுப்பார்கள் டெல்லி… ஆசையா இருக்கு பேச்சின் திசை மாற்றிவிட்டாள்.. நித்தி

அம்மாவிடமிருந்து போன்… வீட்டுக்கு உடனே வா ன்னு… தோரணையே பயம் கொடுக்க…
செயினுக்கு நேத்தே திட்டிட்டாங்களே… இன்னைக்கு என்ன?

அடிவயிறு காலியான உணர்வு..

என்னவா இருக்கும்? யோசிச்சால் பிடிப்படல…

வீட்டுக்கு போனால்… தெருவே கூட்டம்… இவள் முனையில் வரும்போதே அத்தனை விழிகளும் மொய்க்க… நடக்க வரல…

சரசின் கீச்சு குரல்… அண்ணன் அசோக்யும் நிற்பது தெரிய… சோமசுந்தரம் எகிறிக்கொண்டிருந்தார்… இப்ப லேசா புரிஞ்சது..

எங்கம்மாவும் இவரும் ஒன்னு பிடுங்கு .. தோண்டி தோண்டி சின்னதை பெரிசாக்கி… ம்ம்ம்

இவளின் ஒரே பிரிய ஜீவன்…அப்பாவை பார்த்தாள்.. காணோம்.. அவ்ளோதான் நம்மை முடிச்சுடுவாங்க…

என்ன நடந்தாலும் வாய் மட்டும் திறக்கக்கூடாது…
நினைத்தாள்…
எங்கே திறக்கவிட்டார்கள்? சரசுவும் அஷோக்கும்.. சோமன் பழி பேச பேச.. இவளுக்கு கண்ணு மண்ணு தெரியாத அடி…

அவளின் அண்ணி தேவகி…இடையில் தடுத்து …

சின்ன பெண் அவளுக்கு என்ன தெரியும்? உங்க பையனை சாக விட்டுருக்கணும் போல… போங்க சார் முதலில் உங்க வீட்டுக்கு என்று… பொம்பளைங்க போல வாயடிக்காதீங்க… என்று சோமனை எதிர்க்க…

நல்லதுக்குதான் சொல்றேன்… இந்த பொண்ணு கண்டிப்பா ஓடித்தான் போகும் .. அவர் வீம்புக்கே பேச…

இரு தரப்பிலும் சுமத்தப்பட்ட குற்றங்களும் உண்மை தான்… ஏற்றுக்கொண்டாள்…

வசைகள் நெஞ்சறுத்தது… ஆமாம் எல்லாம் செஞ்சேன் .. நிகேனுக்கு.. இன்னும் கூட செய்வேன்..
அம்மா அப்பா அண்ணன் அக்கா உறவுக்கு பேர்கள் உண்டு… இந்த லஸ்ட் க்கு பேர் தெரியாது.. ஆனால் புனிதமானதுதான்…

நெஞ்சழுத்தகாரி ..யாரும் செய்ய துணியாதது.. மோசமான ஊர் சுற்றும் பொறுக்கி பெண்…நகை பொய் சொன்னது… அவரவர் ஆசைக்கு அடித்து துவைத்து…. இனி இங்கு வைக்கக்கூடாது…

மதி வீட்டில் வச்சு.. கட்டிக்கொடுத்துருவோம்

அஷோக்கும் சரசுவும் ..பேசி பேசி ஓய..

காது மந்தம் கொண்ட இவளின் வயதான அப்பத்தா..

ஏன்டி ராட்சசி… எந் தங்கத்தை இப்படி நாரா கிழிச்சு வச்சிருக்க? அரக்கி… இப்படி பண்ணதுக்கு மலடியா கூட நீ இருந்திருக்கலாம்டி… தன் போக்கில் பேத்தியை… கண்டு அழுது குமுற..

கணவன் .. படிக்காதவன் தான்… ஆனால் குழந்தை போன்ற கடைக்குட்டி நித்தியை.. பச்சை மண்ணை… யாருக்காகவோ? தெருவில் போட்டு அடித்ததை தேவியால் ஏத்துக்கவே முடில …

பால் காய்ச்சி ஆறவைத்து…

குடி மா..

வேணாம் அண்ணி… எழ முடியாமல் அப்பத்தா அறையில் தரையில் கிடந்தாள்.. எல்லாம் வலித்தாலும் மனம் மட்டும் விழித்துக்கிடந்தது…
இந்த காட்டுமிராண்டிகள் வீட்டில் இருந்துதான் ஆவணுமா?..

சாவு உண்மையில் விடுதலை… சர்வ துயரத்தில் இருந்து… யாருக்கும் விளக்கம் கொடுக்காமல் போயிரலாம்… நல்லவள் .. கெட்டவள் பட்டம் யாருக்கு வேணும்… தானாய் கண்ணீர் கொட்ட…

நகம் பட்டு ஒரு கண்ணு சிவந்து எரிந்தது… பட்டை பட்டையா தடம் வெளிதெரிந்த இடத்தில்… ரெத்ததுளிகள்… உடைகளில்… எங்கு பட்டு எங்கிருந்து வந்தது தெரில..

உன் பேத்திக்கு இப்பவே ஆம்பளை வேணுமாம்..

மாமியார் காதுக்கு சொல்றேன்னு சரசு ஆவேசமாய் கத்த… தெருவுக்கே கேட்டுருக்கும்….

உதடு சுழித்து வெதும்பினாள் நித்தி..

பிடிச்சா கட்டி வை … எதுக்கு என் தங்கத்தை அடிச்ச? பைத்தியக்காரி… என் மகன் வரட்டும் உன்ன பாண்டி மடத்தில் கட்டி போடச்சொல்றேன்…

ஹான்.. உன்னை இன்னும் உயிரோட வச்சிருக்கேன்ல பேசுவ.. பேசுவ.. போ போ.. ஒன்னுமத்த கிழவி .. உத படப்போற நீயும்…

சரசின் ஆட்டம்… நீதி நேர்மை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுங்கங்கள் நிலை நாட்டியே ஆகணும்… நேர்மை எனும் ஆவேசத்தில் இருந்தது… அதுக்கு தெரில அதன் கோரப்பற்களில் சிக்கி ரத்தமும் சதையுமாக சிதைக்கப்படுவது அவரின் பெண் என்று…

இப்படி தாய்களும் உண்டு… சரியா வளர்க்கிறேன் .. யாரும் ஏதும் என் குழந்தையை சொல்லக்கூடாது என்று… குழந்தைகளின் ஆன்மாவை கொல்லும் பைத்தியங்கள்…

வீட்டு வாசலில் வந்த … முத்தப்பனுக்கு தன் தாய்க்காக அவர் சொன்னது காதில் விழுந்து தாயும் சொன்னது கேட்டாலும் நம்ப முடியாது…

உள்ளே வர… அநேரம் உதை படப்போற… வார்த்தையும் விழ…

நித்தி கிடப்பதை பார்த்து…

யார் அடிச்சா?

நான் தான்? அசோக் முதலில் வர..

உன் பொண்ணுன்னா அடி நான் கேட்க மாட்டேன்.. என் பொண்ணை தொட நீ யாருடா?

சாது அப்பா கர்ஜிக்க… மகன் மிரண்டான்..

நான் தான் அடிக்க சொன்னேன்.. அவ என்ன செஞ்சா முதலில் கேளுங்க…

பொத்துடி… கொலையே செஞ்சிட்டு வந்திருந்தாலும் என் பொண்ண தான் நான் காப்பாதுவேன்… உனக்கு அவ்ளோ தான் மரியாதை… இனி ஒரு வார்த்தை உன் வாயில் வந்துச்சு இத்தனை நாள்.. ஆடு தான் வெட்டி கூறு போட்ருக்கேன்… உன்ன செய்ய வச்சுராதே…

அவர் … நித்தியின் செயினை காட்ட..

சீ போ… இதுகளை விட என் பொண்ணு பொக்கிஷம் டி…

தந்தை பேச பேச.. வெடித்து அழுத்துவிட்டாள்.. நித்தி… வெயில் தாங்கியவளால்… அன்பின் மழை தாங்க முடில…

வாம்மா .. டாக்டர் கிட்டே போலாம்… கை குழந்தையா மகளை ஏந்த முயல…

எங்கேயும் தொடாதீங்கப்பா.. ரொம்ப வலிக்குது..
நாளைக்கு போலாம்பா… வலியில் நித்தி அனத்த…

குழந்தைகளுக்காகவே ஓடி ஓடி உழைத்து.. மனைவியிடம் அடிமையா இருந்த தகப்பன் … நெஞ்சு வெடிக்க… கூக்குரலிட்டு அழ… அங்கு ஓர் சோக காவியமே நிகழ்ந்தது… காலங்கள் இயந்திரங்களால் நவீனமா போனாலும் மனித மனங்களும் உணர்வுகளும் அரத பழசு தான்…

முத்தப்பரின் பரிதவிப்பு அவரின் தாயையும்
தேவியையும் தாக்க… அவர்களுக்கும் அழுகை தாங்க முடில…

நித்தி .. ஏங்கி ஏங்கி அழுது.. விக்கல் மட்டும் மெதுவா கேட்க…

தேறி எந்திரிச்ச முத்தப்பன்… மனைவியிடம் கம்பீரமா நிமிர்வா வர… பயம் கொடுத்தது சரசுக்கு… முன் டேபிளில் சட்டையில் இருந்த கடைசி பணம் அட்டைகள் எல்லாம் வச்சுட்டு..

சரஸ்வதி அம்மா… நீங்க ரொம்ப நல்லவங்க.. நாங்க எல்லோரும் தப்பு… அதனால என்ன பண்றீங்க…எல்லோரையும் உயிரோடேவே புதைச்சிருங்க…. எதுக்கு சம்பாரிச்சு? எதுக்கு வாழ்ந்துகிட்டு?

இதை பேசும் போது அவர் கண்கள் மட்டும் சூனியமா …

அம்மா .. போய்ட்டு வரேன்… தாய் காலை தொட்டு கும்பிட்டு … தூங்கிய நித்தியை கன்னம் தொட ஆசைப்பட்டு… முடியாது கை விலக்கி… உடுத்த துணியோடு வாசல் நோக்கி நடக்க…

என்னங்க.. அவர் கையை சரசு பிடிக்க…

ஒரே தள்ளு தான்… சோபா அருகில் விழுந்தார்…

அசோக்கு.. அவரை போக வேணாம் சொல்லுடா.. அவரை நிறுத்துடா.. மகனை கத்த…

எப்ப பார்த்தாலும் ஆந்தை மாறி அலறிகிட்டே இருப்ப… வருவாரு… வேற எங்கே போவாரு..

பொண்டாட்டி ஏறெடுத்தும் பார்க்கவில்லை… எரிச்சலில் அவனிருக்க… தந்தையின் வேகம் அவன் பார்க்கல…

சரசுக்கு ஏதோ புரிந்தது… அவருக்கு தடுக்க முடில… உதவாத ஆண் பிள்ளையை விடுத்து..

தெருவில் வேக எட்டுக்களை போட்டு கொண்டிருந்த புருஷனை வர வைக்க…

நித்தியை.. உலுப்பி உங்கப்பாரு வீட்டை விட்டு போறாரு… நீ கூப்பிடு வந்துருவாரு…

காதில் கேட்டாலும் உடம்பு முடில

அப்பா அப்பா… அப்பா.. இவளை எழுப்பி தூக்கி போய் வாசலில் விட்ட போது.. அவர் போய்ட்டார்…

போ அசோக்கு எனக்காக அவரை கூட்டிட்டு வாடா.. கெஞ்சி அழுத பின் அவன் போய்ட்டு .. எங்கேயும் காணோம் .. ன்னு கவலையா சொல்ல

அந்தாளு பேசிட்டான் ன்னு… நாம நித்திய கண்டிச்சு இருக்கக்கூடாதுடா .. இவர் வந்தப்புறம்.. கேட்டு இருக்கணும்… தலையில் அடிச்சு அழ…

என்னவோ புருஷனை மதிக்கிற மாதிரிதான் .. முதலில் இப்படி வீட்டில் எந்நேரம் அழாதேம்மா.. குடும்பம் விளங்காது… காலையில் அப்பாவை கூட்டிட்டு வரேன் எங்கே போயிருந்தாலும்…

சோறு போடுடி.. தேவியை ஏவிட்டு… சாப்பிட போய்ட்டான்… அசோக்..

பேத்தியோடவே படுத்து கிடந்தார் பழனியம்மா…

காது கேட்காதது அவருக்கு வரம்…

அங்கு அத்தகைய பூகம்பம் நிகழ்ந்திருக்க…

இங்கு ஹாஸ்பிடலில் நம் கதையின் நாயகி நித்தி போனது தெரிஞ்சதும் ரிலாக்ஸ் ஆன நிகேன்…

தனிப்பட்ட கோவம்லாம் நித்தி மேல் அவனுக்கு கிடையாது…

இவ ஏன் வந்தா? அப்படித்தான் நினைச்சான்…

காரணம் அவளை பார்த்தால் நேற்றைய அவனின் அவமானம் காட்சி பட்டது.. ஹர்ட் பண்ணது… நானே உதவி கேட்டு இருக்கிறேன்… ச்சை.. நாணினான்..

தேஜு போடி… நீயெல்லாம் ஒரு ஆளுன்னு…
பல்லை கடித்தான்…

ஆஃப் பண்ணி வைத்திருந்த போனை அவளை திட்டவே ஆன் செய்தான்… விடக்கூடாது.. கறுவி..

அமணவும் ஆர்த்தியும்… ஏதோ பேசிக்கொண்டிருக்க…

நித்தியை போலவே தேடுவாரின்றி அவளின் பூக்களும்… இப்போதான் பார்த்த நிகேனின் கண்கள் வியந்தன…

ஐ லவ் யூ சொல்லும் த்ரீ ரோசஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *