காதல் மிகுத்துப்பெயின்
13. காதல் மிகுத்துப் பெயின்…
நித்தியின் அழுகை எப்படி நிறுத்த?… லேட்டஸ்ட் குட்டி பிள்ளைகளை எல்லாம் தூக்கி பழக்கப்பட்டவன் அல்ல… சமாதானம் அன்பு லாம் வார்த்தைகள் தான் தெரியுமே தவிர என்னது அது நிகேனுக்கு தெரியாது… eeee
கண் பொத்தி தேம்பியவளை… திட்டவும் முடில… யாரோ தானே இன்னும்… உரிமை வரல… ம்ம்
என் மேல நம்பிக்கை இல்லையா? நிதி
இல்லை… மண்டை ஆட்டி திரும்ப விசும்பல்
ஏய் உன்னை நல்லா தான் பார்த்துப்பேன் நிதி உங்கப்பாவை விட மேல… பரிதாபமா நிக்கி…
அமைதி … சம்மதம் போல…
எப்பா நிம்மதி டா சாமி… பெருமூச்சு விட்டவன்..
சரி கண்ணை தொட .. சாப்பிட போலாம்…
வேணாம்… தலையசைப்பு
என்ன பேச மாட்டியா? எரிச்சலாகி..
இப்படியே பண்ண … அறை வாங்குவ பார்த்துக்கோ … குரல் உயர்த்தி பேச…
இந்தம்மாக்கு ரோஷம் பிச்சுகிச்சு… eee
நீங்க அடிச்சா தப்பில்லயா?… எங்கண்ணன் அடிச்சா மட்டும் தப்பா?
சிரிப்பு வர பார்த்தது கார்டியனுக்கு… லா பேசுறா ன்னு…
அழுற… பார்க்க சகிக்கல… நீயா போறீயன்னா போ… அவன் வீம்புக்கு முகம் திருப்ப…
மூக்கை உறிஞ்சி… நீங்க மனசார அனுப்பினா போறேன்…
என் தங்காச்சிய நாய் கட்சிச்சிப்பா.. @
ஒரு பழம் இருக்கு இன்னொன்னு எங்கே? அதான் .. இது…
ஸ்டைலில் நிதி வெறுப்பேத்த… eee
உதடு பிதுக்கி அலுத்தவன்..
அப்போன எதுக்கு அலுற? சொல்லு
திரும்ப கண்ணில் ஈரம் ஊற… அப்பா வேணும்… ம்ம்ம்ம் ங்ங்ங்ங்க்.. நிதி அழுகை… haha
படா பேஜாரா போச்சு முரட்டு பீஸ் க்கு..
வருவாங்க … பார்ப்போம்..
அது இல்லை எங்க எப்படி எந்த சிரமத்தில் இருக்காங்களோன்னு அழுறேன் கார்டியன்… அழ விடுங்க கார்டியன்.. ன்னு ஓவர் பீல்…
நிகேனுக்கு … பாசமகள் சென்டிமென்ட் புரிஞ்சாலும் … அழவிட மனசே வரல.. சமாதானப்படுத்த ஆசைப்பட்டு..
எங்க பெரியப்பா வடநாட்டில ஐபிஎஸ் லெவலில் இருக்காங்க… அவர் செல்வாக்கு வச்சு அவர் இருக்கும் இடம் கண்டுபிடிச்சுடலாம் நிதி… ப்ளீஸ் அழ மட்டும் செய்யாதே… கெஞ்ச..
ம்ம்ம்… தேடித்தரணும்… கார்டியன் K
காலை கொட்டாவி விட்டது போலவே விரலை தோகையா விரிச்சி… புறங்கையால் கண்ணை கசக்கி… அப்படியே தொடைச்சி உதட்டை சுருக்கி வேக மூச்சு இழுத்து தன் சுடி டாப்பில் ஈரம் துடைத்தவளை… பார்த்துட்டே இருந்தான்… மழலையின் செயலை ரசிக்கும் தகப்பனாய்…
ஒவ்வொரு செயலிலும் ஓர் அழகு… பார்க்க பார்க்க தெவிட்டா ஒருங்கு… கொஞ்சம் கூட பாவனை சாயல் இல்லாதது…
தேஜூவை இப்ப ஒப்பீடா கொண்டு வந்தான்… வந்தது தானா…
எப்பவும் உதட்டை நாக்கால் ஈர படுத்திப்பதும்… நொடிக்கு நொடி தலை முடியை கோதி விடுவதும்… பேசிட்டே இருக்கும் போதே நாலா புறமும் கண்களை சூழற்றுவதும் … போலியா சிரிப்பதும்… செல்பி செல்பி செல்பி எடுத்துட்டே தன் அழகை போகஸ் பண்ணிட்டே இருப்பதும்… கொடுமையே… eee இவனுக்கு அனுப்பிட்டே வேற இருப்பா… முதலில் இனித்தது பின்பு ஏன் இப்படி? முகம் சுளிக்கச்செய்ய… இதெல்லாம் உனக்கு நல்லாவே இல்ல விட்டுருன்னா…
நான் இப்படித்தான் அவள் முகரடி தருவதும் இதனால் அவர்களுக்குள் ஓர் முள் வேலியே உண்டு…
நிகேன் சொல்வதும் ஓரளவு உண்மைதான்.. வித்தியாசமான நடத்தை…
ஆனால் தேஜுக்கு… தான் இப்படி அடுத்தவருக்காய் ஸ்டைலிஷ்யா ஹைகிளாசா நடிப்பதை பழக்கமாக்கி கொண்டு விட்டதால் அவளின் சுயம் மறந்துடுச்சு… பெண்ணுள் நான் கொஞ்சம் மாடர்ன் என்று நினைப்பு வைக்காமல்… ஆண்கள் மொத்தமும் அவளை பார்க்கோணும் அழகு .. அழகி சொல்லனணும்.. கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கணும்… தினத்துக்கு புதுத்துணி உடுக்கோணும்… இங்கிஷ் நுனி நாக்கில் பேசிட்டு கட்டாயம் மால்கள் பக்கம் சுத்தனும்… மயிலா… ஒயிலா…
முடிந்தது அவளின் தினசரி பொழுதுகள்… ஆசைகள்..
அவள் பார்க்கும் சாப்ட் வேர் ஜாப் எல்லாம் வீட்டில் இருந்து தப்ப ஓர் தந்திரம் மட்டுமே… சம்பளம் அவள் ஆடம்பரத்துக்கு எப்படி போதும்?
வேலையில் திறமை காட்டி முன்னேறனும் ஐடியா கிடையாது.. அழகு இருக்கும் போதே..
கொழுத்த பணக்கார அடிமையா தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகோணும்… பேராசை… பெற்றோர் மிட்டில் கிலாஸ் தான்.. அவள் மனசுக்குள் பெரும் கோடீஸ்வர பிறப்பு நினைப்பு..eee
வா சாப்பிடப்போலாம்… நிதி
வேணாம் கார்டியன்… பசிக்கல.. அப்பா சோகம்..
உனக்கு வேணாம்னா நானும் சாப்பிடல… விடு.. ஏற்கனவே வயிறு வாய்லாம் புண்ணாகி இருக்கு .. போ… முதன் முதல் உரிமையா பேசி
நேரம் பார்த்தான்… எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது…
நேரம் நிறய இருக்கே? வெளியே போய்ட்டு வரலாமா? யோசிக்கும் போதே…
வாசலில் அரவம் கேட்க… பிரஷாந்த்..
அவனோடு போக விரும்பி இறங்க போக…
கார்டியன்… பசிக்குது… அவன் பின்னோடு ஓடி வந்து நிதி
பதிலுக்கு புன்னகைத்து.. பெருவிரல் வெற்றி குறி காட்டி
வாங்கிட்டு வரேன்.. நிதி
அதற்குள் கேட்டிலிருந்தவன் அங்கேயே தயங்கி நிற்க..
மச்சி இதோ வரேன்… சொல்லி ஓடி..
இப்ப வந்துடுவேன் பூட்டிக்க நிதி.. சந்தோசமாவே போக…
நட்பு ஒரு கவரை தந்து… வீட்டை முறைச்சு பார்த்துட்டு.. கல்யாணம் ஆகிருச்சாமே நிக்கி.. ஆச்சரியமா பார்க்க…
ம்ம்ம்.. ஆனா அது வேற … என்னதிது? மச்சி
தேஜு கொடுத்தா ..
ஓ.. ????
லவ்கார்ட்ஸ் ரெண்டு சுடி டாப் ஒரு செல் .. என்று இவன் வாங்கித் தந்த உருப்படி பொருள்கள்… உண்டது உறிஞ்சியதுலாம் திருப்ப முடியாதுல…
அவ்ளோதானா நம் உறவு? ஓர் பள்ளம் மனதில் உழ…
உன் சொந்தக்கார பெண்தானே தேஜு ஏன் இப்படி பண்றா? இவளுக்காக நான் பைத்தியகாரனா விஷம்லாம் குடிச்சேன்டா… ஆனா அதுக்கெல்லாம் ஓர்த்தே இல்ல அவ..
மாமு ஹர்டிங் டா
ஆதங்கப்பட
போட்டும் மச்சி… அதுங்க என்ன நினைக்குது நடக்குதுன்னே கண்டு பிடிக்க முடில… முன்ன போனா முட்டுதுக பின்னே போனா எத்துதுக… எப்பா கல்யாணம் இல்லா ரிலசன் எப்பவும் டயம் பாஸ் மாறித்தான் இருக்கு… உனக்காவாவது தேஜு தான்… நல்ல பொண்ணு நினைச்சுக்கோ மாமு…. நீ வாங்கி தந்த பொருளை திருப்பியாச்சும் மன சாட்சியோட தந்துருச்சு… எனக்கெல்லாம் இந்த மாதிரியே 3 லட்சம் போச்சு … இப்ப 7 ஆள் போய்ட்டு இருக்கு… இதுகளை கல்யாணம் பண்ணிக்கலாம் சத்யமா முடியாது பட் யூஸ் பண்ற அளவு சிக்கனமா செலவு பண்ணிட்டு ஈஸியா கழண்டுக்க கத்துக்கிட்டேன்… இன்னொன்னு தேஜு பேமிலியோடவே ஹைதராபாத் போய்ட்டா மறந்துரு…வலிக்குதா? வா அமிர்தம் அருந்துவோம்… தோளில் கைப்போட்ட பிரசாந்த்… முகம் மாறி கிடந்த நிகேனை பல பல பேசி.. நிதானமாக்க… அளவில்லாமல் குடிக்க ஆரம்பிச்சான் நிகேன்… அவள் மொத்தமா போய்ட்டா என்பதை ஜீரணம் பண்ண முடில…
அவமானமா கருதினான்.. வயசு bros .. பாக்ட்
அவ புது நம்பர் கொடு மச்சி…
எதுக்கு வேணாம் டா.. அவ உன்னை அவாய்ட் பண்ணுறா.. விட்டுடு
இல்ல .. ஒரே வார்த்தை கேக்கணும் ப்ளீஸ்
சரி ஆன்ட்டி கிட்டே பேசி தான் கூப்பிடனும்.. குட் பை சொல்லிட்டு விட்டுரு… அவனும் மொடா குடியன்… மினி மதயானை சோ அமிர்தம் அண்டா கணக்கில் குடிச்சு மிதந்தான்…
அவன் கிட்டே நாலு வார்த்தை சொல்லிட்டு வா .. திரும்ப என்னை தொந்தரவு பண்ணாத மாதிரி… அவன் சென்டிமென்ட் இம்சை பிடிச்சவன்… பிரசாந்தை மிரட்டி அனுப்பி இருக்க…
இப்ப கையும் களவுமாக பிடிச்சி கொடுத்தான் நிகேன் கிட்டயே… தேஜுவை…
அம்மா செல் மூலம் வந்த நிகேனை அறவே வெறுத்தாள் அக்காதலி.
தனியா போய்… அடக்கமா
சொல்லு நிக்கி… கடுப்பை அடக்கி
ஒய் தேஜு? அவ்ளோதானா?
எஸ்
ஒய்
நீ அதுக்கு சரி படமாட்டே .. அவ்ளோதான்.. விடு
எதுக்கு சரி பட மாட்டேன்?
பெண் மனசை புரிஞ்சி லவ் பண்ண உனக்கு தெரியாது நிக்கி
நான் உன்னை எல்லோரையும் விட நெருக்கமா தான் வச்சுருந்தேன் இன்னும் இருக்கேன்
கூடவே இருந்தா லவ் இல்ல.. நம்பிக்கை அதான் லவ்…உனக்கு தெரில… விடு.. பேசி இனி ஆவப்போறது ஒன்னும் இல்ல… ப்ளீஸ் இனி தொல்லை பண்ணாதே… பை
என்னடி ரொம்ப பேசுற? நான் லவரா உன்னை கண்ணியமா தான் நடத்தினேன் … மதிச்சேன்.. நீ லாயக்கு இல்ல சொல்லும் போது… ecr ல ரூம் போட்டுருந்த ஒத்துப்ப போல… அதானே…
ஆமாம்… ஆமாம் போயா… ஒரு முத்தம் கூட இல்லை… குரங்கு குட்டி மாறி பைக் ல வச்சுட்டு சுத்தினா மட்டும் போதாது… கொஞ்சம் ஆண்மையும் முரட்டுத்தனமும் வேகமும் வேணும்… உனக்கு அதெல்லம் வராது… பொண்ணு கிட்டே இருக்க உனக்கு வராது… நீ ஒரு ஆணாதிக்க மன நிலை உள்ள சைக்கோ … திமிர் ஆணவம்… மண்டை கர்வம் .. நீ என்னவோ தேவாதி தேவன் மாறியும் நான் உன்னை ராஜாதிராஜ பள்ளு பாடனும் ன்னு எதிர்பார்க்குற… அதுக்கு முட்டா ____ இருப்பாளுக போ … ஆவேசமா ஆகிட்டா தேஜு… அவன் பிளேடு தாங்காது eeee
அப்பட்டமான பீப் கெட்ட வார்த்தை தேஜுவிடம் எதிர் பார்க்கல.. நிகேன்… அவளின் சகஜபாவம் .. அடிக்கடி பேசுவாள் தோண…
ஓகே.. எனக்கு உன் மேல கொஞ்சம் நஞ்சம் ஒட்டி இருந்ததும் போச்சு… பை தேஜூ…
என்னடா … பெரிய நொண்ணை யாட்டும் நடிக்குற… எப்படிலாம் எமோஷனல் பிளாக் மெயில் செஞ்சு என்னை மன நோயாளி ஆக்குன..
எழுதி வச்சுக்கோ நிகேன்.. நீ பார்க்கத்தான் அழகு… ஆனா அட்டர் வேஸ்ட் பீஸ்… உனக்கு ஆண்மையே கிடையாது… இருட்டில் உன் பக்கத்தில் இளகி நான் கிடைத்தபோது கூட யூஸ் பண்ண தெரியாத முட்டாள்டா..
தேஜு .. ஒழுங்கா பேசு… ஹீரோ பல்லை கடிக்க…
வெறியானாள் மாஜி காதலி.. அவளுடைய ஏமாற்றங்கள் சுனாமியா பொங்க…
உன் லைப் ஸ்டைலே பிடிச்சுட்டேன் நிக்கி…ஒரே வேலையில் கடைசி வரை வவ்வா கணக்கா தொங்கிட்டு.. அப்பன் ஆத்தா காசை பூதமா காத்துகிட்டு…உன்னை கல்யாணம் பண்ணுற பொண்ணை…
தேஜு வாய்விட்டு கேலியா இந்த இடத்தில சிரிச்சிட்டு
ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை போட்டு … விபத்தா ரெண்டு பிள்ளை பெத்து… அதிசயமா வளர்த்துட்டு … நான் பத்தினி பொம்பளைன்னா உன் குடும்பம் மொத்ததுக்கும் ஈன வேலை பார்த்துட்டு… சோறு திங்கணும் வருஷத்துக்கு ரெண்டு புடவை எடுத்து தருவ… அதையும் இப்படி மூடிட்டு இரு சொல்லுவ.. லேசா விலகினால் கூட… எவனோ பார்த்துட்டான்… கற்பு போச்சு ன்னு ஆடுவ.. ஹுக்கும்..!ஆர்டினரி மிடில் கிளாஸ் மாமா நீ… போடா போடா… லூசு என் கிட்டே பேசின இனி.. போலீஸ் க்கு போவேன் பார்த்துக்க… என்னை பொருத்தவரை நிகேன் ஒரு லூசர் லூசர் .. வச்சுட்டா…
சம் சம் சம்ஹாரம் பண்ணி அவளுக்கு பெருத்த நிம்மதி.. பல நாள் கடன் அடைஞ்சது
ஆனால் அதன் தாக்கம் நிகேனிடம் அதன் தொடங்கிவிட்டது …
வார்த்தைகளுக்கு சக்திகள் உண்டு …
செல்லை பிரசாந்திடம் கொடுத்து… கையில் வைத்திருந்த கிளாஸை கீழே வைத்து… கிளம்பறேன் மச்சி..
ஓய்.. எங்கடா போற… இந்த பொம்பலிங்களே இப்படித்தாண்டா… வாடா இன்னைக்கே சோகத்தை கொண்டாடி முடிச்சுடுவோம்.. மாமு.. கல்யாணம் தான் ஆச்சே .. என்ஜாய் பண்ணுடா.. என் சொந்தக்காரி ன்னாலும் உண்மையை சொல்லவா? தேஜுலாம் யூஸ் அண்ட் த்ரோ மாறிடா… குடும்பத்துக்கெல்லாம் உதவாதுக .. உனக்கு நல்ல நேரம் அவளா விலகியது… ஒரி பண்ணிக்காதே… வா உக்காரு மாமு…
இல்ல என் மனைவி தனியா காத்திருப்பா மச்சி.. நேரமாச்சு.. கார்ட் எடுத்தவன் பில்லுக்கு .. முத முறையா நீ பே பண்ணிடு மச்சி … அப்புறம் தரேன் … ஓசி குடி புகழ் பிரசாந்த் க்கு அதிர்ச்சி கொடுத்துட்டு கிடு கிடு ன்னு அவ்விடத்தை விட்டு
நகர்ந்துட்டான் நிகேன்..
வயிறு காந்தியது… தாங்க முடியா எரிச்சல்… ரண குடலுக்குள் தீர்த்தம் வேலையை காட்ட ஆரம்பித்தது…
சாப்பிடணும்… உணவு வாங்கிட்டு வீட்டுக்கு போகும் போதே.. நடை முறைக்கு வந்துட்டான்
கார்டில் உள்ள பணம் எத்தனை நாளைக்கு வரும்? பெரிய கேள்வி?
சம்பளம் போட்டாலும் கிரெடிட் கார்டில் நினைச்ச பொருள் வாங்கி இருக்கான்… அதுக்கு டீவ் போகும்… வீடு பார்த்தால்… அட்வான்ஸ்? வாடகை? இருப்பதை வழித்துக் கொடுத்தால் அது தொடர் செலவு… வாடகை உணவுக்கு.. இங்கு என்றால் வாடகை கிடையாது… EB மட்டும் கட்டினால் போதும்.. வந்தபோது அழுக்கும் தூசியும் ஓட்டடையும் இருக்க… இப்ப நிதியால் பார்க்கும் படி இருந்தது… ஏதோ ஓர் பாதுகாப்பான இடம் வேணும் வசதியே இல்லன்னாலும் இது போதும்.. பணம் சேப்… இனி எதுக்கும் தாராளமா செலவு செய்யலாம்.. இந்த முடிவோடு … இன்னோரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவும் எடுத்தான்…
தேஜு எபெக்ட் அவனை தள்ளி விட்டது என்பது தான் மெய்மை…
கார்டியன் கணவனாவது என்பது தான் அது…
இப்போ…
நிலா சூரியனை என்ன செய்யும்? ஒளியை பற்றி ஒன்னுமில்லை… இயல்பா கிடைச்சிரும்…
நிலா எப்படி பீல் பண்ணும்? அதுதான் புதுமை.. ம்ம்ம்
