மையல் கொண்டேன் மாதீரா….

This entry is part 2 of 41 in the series மையல் கொண்டேன் மாதீரா

மையல் கொண்டேன் மாதீரா

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா….

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

மையல் கொண்டேன் மாதீரா!! பாகம் 2

6

மையல் கொண்டேன் மாதீரா….

ஜியா ஜானவி ❤️

“அம்மா… ஏன் ஒரு மாதிரியா இருக்க? எப்ப பாத்தாலும் ஏதோ யோசிச்சிக்கிட்டே இருக்க? ஏன் மா?” என்று வலது கையில் ஹேண்ட் சில்லிங் இருந்ததனால் இடது கையால் சந்திரமதி கொடுத்த ஜூஸை குடித்துக்கொண்டே கேட்ட மகளை ஆதுரமாக பார்த்தார் சந்திரமதி.

“என்னம்மா? பாசம் ஓவர் ஃப்லோவா இருக்கு!” என்றவள் வாகாக அவர் மடியில் படுத்துக்கொள்ள.. மகளின் தலையை கோதிவிட்டவர், “நீ இந்த வேலைய விட்டுடிரியா டி?” என்று கேட்டார்.

“ஏன்மா?” என்று படுத்திருந்தவள் எழுந்து  அமர்ந்துவிட்டு கலக்கமாக அன்னையின் முகத்தைப் பார்த்தாள்.

“இல்லடா.. இப்படி காயமா இருக்கோனோ? எப்படியும் ஒரு மாசம் ஆகும் ஆற.. ரெஸ்ட் எடுக்கணுமே அதுக்குதான் சொல்றேன்!” என்றார்.

“ஏற்கனவே பிஃப்டின் டேஸா போகல மா.. ஓரளவுக்கு இப்போ நன்னா இருக்கேன். இன்னும் ஒரு மூணு நாள் ரெஸ்ட் எடுத்துண்டு அதுக்கப்புறம் வழக்கம்போல ஆபீஸ் பஸ்ல போலாம்னு இருக்கேன் மா. எங்கே இப்போ போனாலும் பெருசா வேலை இருக்காது. ஜஸ்ட் கிளாஸ் எடுக்கிறது தானே? டெமோவுக்கு வேற யாராவது நான் கூப்பிட்டுண்டுகிறேன்” என்று விளக்கம் சொன்னாலும் அம்மாவின் முகம் தெளியாததை பார்த்தவள் “ப்ளீஸ்மா அதற்கு அப்புறம் கல்யாணம் பண்ணி கொடுத்தா.. உன்னாட்டம் ஆத்துல இருந்துண்டு இந்த மாதிரி சீரியல்.. டிகிரி டபரா காஃபி.. ஆத்துக்காரர் அவா மனுஷா.. அப்புறம் நண்டு சிண்டுனு தான் லைஃப் போக போறது? அப்படியே டிபிக்கல் சந்திரமதி!!” என்றதும் மகள் தன்னை கிண்டல் செய்வதை பார்த்து லேசாக சிரித்து விட்டார்.

“சீரியலா? அப்படி என்ன நான் பெருசா சீரியல் பார்க்கிறேன்? ஏதோ ஃப்ரீ டைம்ல வீட்டு வேலை பார்த்த கேப்ல பார்க்கிறேன்.. இது ஒரு குத்தமா டி?” என்று கொஞ்சம் மீண்டு இருந்தார்.

“என்னது கேப் கிடைக்கிற நேரத்துலயா? பொய் சொல்லாத சந்திரா? கிடைக்குற கேப்புல தான் எங்களுக்கு நீ ஆக்கி போடுற! ஞாபகம் இருக்கட்டும்!!”  என்றவாறு சந்திரசேகரனும் வந்து அமர..

“என்னது?” என்று அபாண்ட பழி போடும் கணவனை முறைத்தார் சந்திரமதி.

“அப்பா.. போச்சு போச்சு அம்மாவுக்கு உள்ள இருந்த சந்திரமுகியை எழுப்பி விட்டுட்டேள்… இனி வீடே லகலகலக தான்!!” என்றவாறு காலேஜ் விட்டு வந்து கோதையும் இவர்கள் ஜோதியில் ஐக்கியமாகி கொண்டாள்.

பிள்ளைகளோடும் கணவனோடும் பேசிக் கொண்டிருந்தாலும் சந்திரமதி உள்ளுக்குள் சீக்கிரமே மகளுக்கு திருமணம் செய்து இவ்வூரிலிருந்து அனுப்பிவிடவேண்டும். எந்த பிரச்சினைக்குள்ளும் அவளின் பெயர் வந்து விடக்கூடாது என்று மகளைப் பெற்ற அன்னையாய், சுருக்கமாக சொன்னால் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு என்பார்களே அதுபோல மருகிக் கொண்டிருந்தார்.

அவர் இப்படி சதா யோசித்துக் கொண்டிருப்பதற்கு அவரது உள்ளுணர்வு காரணம். ஏதோ சரியில்லை!! ஏதோ தவறுதலாக நடக்க போகிறது!! என்று அடிக்கடி அவருக்கு தோன்ற.. அதனாலேயே கணவனிடம் சீக்கிரம் மகளுக்கு வரன் பார்க்கச் சொல்லியிருந்தார். அதன்படி சந்திரசேகரனும் தனக்கு தெரிந்தவர்களிடமும் சொந்தக்காரர்களிடமும் சொல்லி வைத்திருந்தார். கூடவே தெரிந்த கல்யாண தரகரிடம் மகளின் ஃபோட்டோவையும் மகளின் ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தமாக இருந்தால் கூறுமாறு கூறியிருந்தார்.

ஒரு வார காலம் ஆகியும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் அதில்லை. சில சமயம் மனைவி கேள்வியாக பார்க்கும்போது “வரும் சந்திர கவலைப்படாதே!!” என்று மனைவியை தேற்றுவார்.

தஷா குடும்பம் அவளுக்கு இங்கே  மணமகனை தேடிக்கொண்டிருக்க..

அங்கே ஒருத்தன் அவளுக்கு திருமணத்தையே முடிவு செய்துவிட்டான்!! அதுவும் அவளுக்கு சற்றும் பொருத்தமில்லாதவனோடு!!

அவன்…. சிங்காரவேலன்!! சுருக்கமாக சிங்காரம்.

அதே திருநெல்வேலியின் மற்றொரு அடையாளமாக மாற பிரயத்தனம் பார்த்துக்கொண்டிருக்கிறார். சிங்காரம். ஆனால் மலையளவு வேலை செய்தால் கூட முடி அளவுக்கு கூட அவருக்கு பேரும் புகழும் கிடைப்பதில்லை.

சிங்காரமும் ஆரம்பத்தில் ஆத்மநாதன் கட்சியில் இருந்தவர் தான்.  ஆத்மநாதன் சிவஞான ஆதித்தனின் மகளை மணந்து கட்சியில் மட்டுமல்ல.. மக்கள் மனதிலும் அந்த திருநெல்வேலியிலும் அவரது பேரும் புகழும் பரவ, வெறும் அல்லக்கையாக அங்கே இருக்கப் பிடிக்காமல் வேறு ஒரு தேசிய கட்சியில் சேர்ந்து கொண்டார் சிங்காரம்.

அந்த தேசியக் கட்சியும் திருநெல்வேலியில் தங்கள் கட்சியை வளர்க்க சிங்காரத்தை பணத்தால் குளிப்பாட்டி எவ்வளவு நாசுக்கு வேலை செய்தாலும்… நம்ம ஆளுங்க கண்டுகொண்டால் தானே?

தமிழர் என்றோர் இனமுண்டு!!

தனியே அவனுக்கொரு குணமுண்டு!!

என்று தான் இன்று வரையிலும் எந்த கட்சி வந்தாலும்,

இவர்கள் மனதை வென்றால் தான் அங்கே ஆட்சி!! 

இல்லையென்றால் வீழ்ச்சி!!

சில சமயம் என்னதான் இறங்கி வேலை பார்த்தாலும், பணத்தால் விளையாண்டாலும் ஏற்கனவே மக்கள் மனதில் உள்ள அந்த நேசம்.. கொண்ட அன்பு.. வைத்த பற்று மாறுமா என்ன? 

அப்படித்தான் சிங்காரமும் எப்படியாவது ஆத்மநாதனை வீழ்த்த திட்டம் தீட்டி கட்டம் காட்டினாலும், அந்த கட்டத்தை எல்லாம் அலேக்காக தாண்டி இன்னமும் புகழின் உச்சத்தில் தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார் ஆத்மநாதன். அதற்கு பல காரணங்கள்! அவருக்கு இரு பக்க தூண்களாக இருக்கும் இரு மகன்கள்!! கூடவே இராவுத்தர் போன்ற எதையும் செய்யும் உண்மைவாசிகள்!! அதற்கும் மேல் நெல்லையாரின் விசுவாசிகள்!!

இப்படி ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து அவரை கட்டம் கட்டி தூக்க முடியாமல் தவித்தவன்… அன்று ஆத்மநாதன் ஒரு விழாவிற்கு செல்வதை பார்த்து அங்கே கலகம் செய்து மக்கள் மனதில் அவர் பெயரை கீழிறக்க ஜார்ஜை அனுப்பி வைத்தான். 

சிறுபான்மை மக்களை தன் கையில் வைத்துக்கொண்டு அவ்வப்போது ஆட்டம் காட்டுவான் சிங்காரம். வேறு யாரும் ஏதேனும் சொன்னால் உடனே அது ஜாதிப் பிரச்சினையாகவும் மத பிரச்சனையாக தூண்டிவிடுவது அவனது பிரத்தியேக பாணி!! அதனாலதான் ஜார்ஜை அனுப்பி வைத்தான். ஆனால் அதே நேரம் ஆரோன் போன்ற உண்மைவாசிகளும் ஆத்மநாதன் பக்கம் உண்டு.

தன் அல்லக்கைகள் கோஷ கைகள் புடைசூழ கிளம்பிவிட்டார் ஆத்மநாதன் அண்ணாச்சி வீட்டுவசதி வாரியங்களுக்கான கட்டிய வீடுகளை திறப்பதற்கு…

முன்னே சைரன் வைத்த வண்டி செல்ல பின்னே சென்றது அவரது வண்டி, அதன் பின்னே அவரின் விருதுகளின் ஊர்வலம்!! ஏனோ பெரிய மகன் பிரபஞ்சன் ஞாபகம் அன்று!! பிரபஞ்சன் பெரும்பாலும் தந்தையுடன் வரமாட்டான். அதே போல மற்றவர்களிடம் குறிப்பிடும்போது ஐயா என்றுதான் குறிப்பிடுவான். கேட்டால் “நானும் மற்றவர்கள் போல் தான் அய்யாவின் விழுது கட்சியின் தொண்டன்!’ என்பான். இந்த பழக்கத்தை ஆத்மநாத அண்ணாச்சி எவ்வளவோ முயன்றும் மாற்ற முடியதில்லை இந்நாள் வரை!! 

“எல்லாம் சரிலே..  எனக்கு பின் அவன் தாம்ல.. அந்த கெத்தோட இருக்கவேண்டாமா ராவுத்தரே??  எப்ப பாரு இப்படி தொண்டன் விழுது என்று புராணம் பாடுதான்” என்று அலுத்து கொள்வார் அவரது வலது கையிடம்.

இப்ராஹிம் ராவுத்தர்.. கிட்டத்தட்ட இருப்பதைந்து வருடங்களாக அண்ணாச்சியோடு இருக்கிறார். அவர் கீழ்மட்ட தொண்டராய் இருந்ததிலிருந்து நெல்லையாரின் மருமகனாகி இன்று அண்ணாச்சி ஆக வளர்ந்து வரும் வரை அவரது வலது கை ராவுத்தர் தான்!!

எப்பொழுதும் தனக்கு துணையாக வரும் பெரிய மகன் ட்ரெய்னிங் என்று அன்று சென்று விட்டதால் அதையும் ராவுத்தரிடமே புலம்பிக் கொண்டே வந்தார் ஆத்மநாதன். “இவனுக்கு இங்கே என்னாலே கஷ்டம்? எதுக்கு இப்போ ட்ரைனிங்னு அங்கன போய் உட்கார்ந்து இருக்குதியான். எனக்கு அப்புறம் அவன் தாம்ல பார்க்கணும் இந்த கட்சிய!! பொறுப்பா இருக்க வேணாமாம்லே.. ரெண்டு பயல்வோலும் ரெண்டு மூலையில இருக்கானுவோல” என்று புலம்பிக் கொண்டே வந்தார்.

இவ்வாறாக விழுதுகள் புடைசூழ வெற்றிகரமாக வீடுகளை திறந்து வைத்தார் அண்ணாச்சி. அன்றைய விருந்தும் அவரது செலவில் தான்… 

ஏற்கனவே அவரது ஆட்சியில் வீடு கட்டிக் கொடுத்ததற்கே அம்மக்கள் அவரை தெய்வமாக போற்ற…  கூடவே விருந்து வைத்தால் கேட்கவும் வேண்டுமா???

போற்றுவர் உண்டெனில் தூற்றுவோரும் உண்டல்லவா??!!

அப்படிதான் அம்மக்களின் ரட்சகனாக… ஆபத்பாந்தவனாக இருக்கும் ஆத்மநாத அண்ணாச்சியை… அப்பகுதிலேயே கழுவி கழுவி ஊத்தினான் ஒருவன். அவன் ஜார்ஜ்!! 

“ஏம்ல.. உங்க அறிவ தூக்கிபோட்டு புதைச்சுப்புட்டியலோ?? இவனே தாம்ல நம்ம வீட்டெல்லாம் இடிச்சுதியான். இப்போ இவனே கட்டி கொடுத்திட்டானு சந்தோஷ படாதிக மக்கா.. எல்லாம் நடிப்பு!! இதுல எம்புட்டு பணம் சொரண்டினானோ.. எல்லாம் கோட்டிபய மாதிரி அவனுக்கு கொடிபிடிச்சிட்டு திரியுதிய… என்னைக்கு இருக்குற இந்த இடத்தையும் புடிச்சிட்டு உங்கள விரட்டிவானோ!! நம்பாதிய இவன…” என்று எல்லோரும் அண்ணாச்சி என்று வாய் நிறைய கூப்பிடும் ஆத்மநாதனை கோட்டிப் பயல் என்று குறிப்பிட…  உடனே அவரது அல்லக்கைகளும் பிரியாணிக்கும் குவாட்டருக்கும் காசு வாங்கிய விழுதுகளும் அவனை நையப் புடைக்க சூழ.. அதற்குள் ஜார்ஜின் ஆட்களும் வந்து சேர, அங்கே ஒரு சிறு கைகலப்பு!!

ஆனால் அண்ணாச்சி தான் இரு கோஷ்டிகளையும் தடுத்து நிறுத்தி “விடுங்கலே.. சொன்னா சொல்லிட்டு போறியான். நீங்க உங்க சோலிய பாருங்கலே!” என்று தன் ஆட்களை கட்டிப்போட, அவர்களோ “எப்படி அண்ணாச்சி விட? உங்கள அந்த படுக்காலி பய இப்படி பேசிபுட்டானே அண்ணாச்சி!! அந்த இரப்பாளி பயல எப்படி விட சொல்லிதிய அண்ணாச்சி? அவனை பொலிப்போடனும்” என்று அவர்களோ எகுற… “அண்ணாச்சி சொன்னா கேட்பிலா மாட்டியால லே?” என்று ஒரே போடில் தன் கூட்டத்தை அடக்கி அழைத்து சென்று விட்டார்.

அவரது அல்லக்கைகள் முதல் யாருக்கு வீடு கட்டித் தந்தாரோ அந்த மக்கள் வரை அண்ணாச்சி புகழ் பாட..  இன்னும் ஓங்கியது அவரது புகழ்.. ஜார்ஜ் அவ்வளவு ஏசியும் அண்ணாச்சி பெருந்தன்மையாக அவனுக்கு மன்னிப்பு வழங்கி விட்டார் என்று.. ஒமிக்கிரான் வைரஸை விட அதி வேகமாகப் பரவியது.

கட்சி அலுவலகத்தில் தான் இங்கும் அங்கும் வேகமாக நடைபயின்றுக் கொண்டிருந்தார் ஆத்மநாதன். உள்ளே யாரையும் விடவில்லை அவரது வலது கை ராவுத்தரை தவிர!!

“என்ன பேசிபுட்டான் அந்த கோட்டி பய… நாமலே ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தா அதுல பாதி பணத்தை சுரண்டிடேன்னு சொல்லி போட்டானே? கண்டிப்பா இவன அனுப்புனது அந்த சிங்காரமா தான் இருக்கும்லே.. அந்த கோட்டிபய இவனுக்கு சாவியை கொடுத்து ஆட விட்டுயிருக்கான்லே.. கண்டிப்பா அவனே தாம்ல!!” என்று கொதித்தார்.

ராவுத்தரோ “என்ன அண்ணாச்சி?? அவனே சல்லிப்பய!  ஏதோ உங்களுக்கு எதிராக கோஷம் போட்டு நானும் இருக்குதியேன்… நானும் இருக்குதியேன்னு காமிச்சுக்கிட்டு இருக்குதியான். அவேன் பேசுறத எல்லாம் பெருசா எடுக்குதியலே? அதுவுமில்லாம அவேன் போட்டு வாங்குதியான் அண்ணாச்சி உங்க வாய்ல இருந்து? எதுவும் வார்த்தய விட்டுடாதீக!!” என்று எச்சரித்தார்.

ராவுத்தர் சொல்வதும் சரிதான் என்று யோசித்தவர் “எதுக்கும் நம்ம சின்னவன் கிட்ட சொல்லி அவனை ஒரு தட்டு தட்டி வைக்க சொல்லுக ராவுத்தரே..  எதுவும் பெருசா செஞ்சுராம. அப்புறம் நம்ம பேரு மாட்டிக்கிச்சுன்னா இன்னும் வம்பாக கூடும்” என்றவரிடம் ராவுத்தர் “சின்னவருக்கு நான் சொல்லித்தான்  செய்தி தெரியனுமா என்ன?” என்று ராவுத்தர் சிரித்த சிரிப்பிலேயே இந்நேரம் இந்த விஷயம் அவனுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைத்தவர் முகத்தில் ஒரு பெரும் கர்வம் வந்து உட்கார்ந்தது.

தான் சொல்லாமலேயே தனக்காக செய்யும் மகன் கிடைப்பது ஒரு 

வரம் தானே!! அதில் கர்வம் கொள்வதில் ஒன்றும் தப்பில்லையே?

“ஆனாலும் ராவுத்தரே.. கொஞ்சம் ஜாக்கிரதை!! அந்த சிங்கார பய அப்படி ஒன்னும் லேசுல விடமாட்டான். ஜார்ஜ் அவனுக்கு வலது கை மாதிரி!! இதுல ஏதாவது குள்ளநரித்தனம் பண்ணுவாம்ல அவேன்!!  பிள்ளைகள ஜாக்கிரதையா இருக்க சொல்லுக!” என்று உத்தரவிட்டு பின் தான் அவர் வீட்டுக்கு வந்தது. ஆனால் வரும் வழியிலேயே ஜார்ஜை மகன் பிரித்து மேய்ந்து விட்டான் என்று தெரிந்ததும், ஒரு சந்தோசம் மின்னல் கீற்றாக அவர் முகத்தில். 

கூடவே ராவுத்தரை விட்டு அவனுக்கு போன் செய்ய சொல்லி இருந்தார் வீட்டுக்கு வர சொல்லி… உமையாளுக்கும் தகவல் அனுப்பி ராசுவுக்கு போன் செய்ய வைத்திருந்தார். பின் தான் கூப்பிட்டா வராத மகன் அன்னை கூப்பிட்டால் கண்டிப்பாக வந்து விடுவான் என்று தெரிந்தது தானே?

இதை எல்லாம் விட இப்பொழுது இந்த பெண் யார்? அதுதான் அவருக்கு முக்கியமாக தெரிய வேண்டி இருந்தது. மகனிடம் அதைப்பற்றி கேட்க.. குறுக்க வந்து வெட்டுப்பட்ட பெண்ணை தூக்கி சென்று முதலுதவி கொடுத்து, பின் மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறி நழுவி விட்டான். ராசுவிடமும் குறுக்கு விசாரணை செய்ததிலும் அவனும் அந்த பொண்ணுக்காக வேண்டிய மொத்த செலவையும் அண்ணன் என்னை தான் பார்த்து சொன்னார் அண்ணாச்சிஎன்று அவனும் அதையே கூற… அதற்கு மேல் தோண்டித் துருவ இல்லை அவர். 

எம்எல்ஏவுக்கு இதை விட முக்கியமாக அரசியல் வேலைகளும்.. அரசியல் செய்யும் வேலைகளும் இருக்கவே இதை மறந்து விட்டார்.

ஈசா தஷாவை மறந்து விட்டானா என்று கேட்டால், பதில் என்னவோ பெரிய கேள்விக்குறிதான்!!

 மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த போது சென்று பார்க்கவில்லை… நலம் விசாரிக்கவில்லை.. ஆனாலும் அவள் உடல்நிலை பற்றிய அனைத்தும் அவனுக்கு அப்டேட் ஆகிக் கொண்டுதான் இருந்தது. ராசு மட்டுமல்ல மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மூலமும்!!

அன்று அவள் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது இவனும் மருத்துவமனை வளாகத்தில் தான் இருந்தான். அவள் காரில் ஏறி செல்லும் வரை பார்த்துக் கொண்டே இருந்தவன், ராசுவிடம் ஒரு கூடை ஆப்பிள் வாங்கிக் கொடுத்து அனுப்பினான்.

‘பின் என்ன தான் வாங்கி கொடுப்பது அந்தப் பெண்ணுக்கு? உடலுக்கு சத்து என்று‌ வகை வகையாக கவுச்சி வாங்கிக் கொடுத்தால் தான் மூக்கைப் பொத்திக் கொள்கிறாளே!! நாள பின்ன இந்த பொண்ணை கல்யாணம் பண்ணினா ஒரு கிஸ் கூட கொடுக்க முடியாது போலவே? கிட்ட நெருங்கினால் வாயை பொத்திக் கொள்ளுமோ?’ என்று அவன் எண்ணங்கள் எல்லை இல்லாமல் பயணிக்க… சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டவன் வதனத்தில் அழகிய புன்னகை.. அவனின் அசட்டு மாமியை நினைத்து!!

வண்டியை ராசுவிடம் ஒப்படைத்து விட்டு சுகமாய் கனவுக்குள் மூழ்கி விட்டான் ஈசா!! முதலில் அவள் உடல் நலத்தில் மட்டுமே கவனம் கொண்டிருந்தவன் அடுத்தே

அவளைப் பற்றி முழுதாக விசாரிக்க சொன்னான். அவள் அகத்தியாவில் தான் வேலை செய்கிறாள் என்று அறிந்து. ஏக சந்தோஷம்!! ஏனியிருக்காது அவர்களது தானே அக்குழுமம்!!

அன்னையை தவிர்த்து மற்ற பெண்களிடம் இவ்வளவு அக்கறையை யாரிடமும் அவன் காட்டியது இல்லை…  அதுவே ராசுவுக்கு உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு!! அதிலும் அவள் டிஸ்சார்ஜ் ஆகும் சமயம் அவனே வந்து மருத்துவரை பார்த்து மருத்துவ அறிக்கைகளைப் படித்து பல கேள்விகளை கேட்டு அதன் பின்னே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தான். அருகிலிருந்து பார்த்தவன் ஊர்ஜிதமே செய்து விட்டான் தஷா தான் அண்ணி என்று!!

“அண்ணே…. அண்ணே…..!!” சுகமான கனவை களைக்க ராசுவின் கட்டை குரல் கட்டை போட… அவனின் முதுகில் இரண்டு போட்ட ஈசா… “ஏம்ல… ஏன்… ஒருத்தன் கனவுகூட காணப்புடாத லே? ஊடாலே வருவீகளோ?” என்று சீறியவனை பார்த்து பயமெல்லாம் வரவில்லை. உள்ளுக்குள் சிரிப்புதான் வந்தது ராசுவுக்கு.

அப்படி மட்டும் ராசு சிரித்திருந்தால்.. அவனும் அன்று கேஸாகி இருப்பான்!!

“ஒன்னுமில்ல ணே… அவுக தான் மதனியா?” என்று தயங்கி தயங்கி கேட்டாலும் கேட்டே விட…

“ம்ம்ம்ஹூம்!!” என்று பெரு பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்ட ஈசா அருகில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ராசுவின் முதுகில் கை போட்டு தன் பக்கம் இழுக்க..  வண்டியை தாறுமாறாக ரோட்டில் ஓட… “வண்டி.. வண்டி…. அண்ணே…  வண்டிணே!!” என்று அவன் அலற….

“அடேய் இருடே… வண்டி எங்கன போக போகுது. அதபாட்டுக்கும் ஓடும்

டே.. நீ வெசனப்படாதலே!!” என்று அவனை இறுக்கி அணைக்க… 

அவன் புஜத்தின் வலிமையும்…   மார்பின் திண்மையும்… 

உள்ளே கொண்டிருந்த நேயத்தின் வெளிபாடும்…

பாவம் ராசு மூச்சு விடவே முடியாமல் திணறினான். இதில் எங்கிருந்து வண்டியை ஓட்ட?

‘அய்ய்ய்யோ எங்க அண்ணே காதலிலும் ரவுடி தான் போலவே… எனக்கே இப்படி மூச்சு முட்டுதே அப்போ அந்த பொண்ணோட நிலைமை!’ என்று மனசுக்குள் அவனுக்கு திகிலடிக்க…

“ஐயையோ அண்ணே…  என்னைய விட்டுடு ணே..  நான் அண்ணி இல்ல!!” என்று கத்தியவாறு வண்டியை தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தவனை இன்னும் சைடு வாக்கிலேயே இறுக்க அணைத்தவன் “அது அண்ணி இல்லடே மன்னி!!” என்றான் சிரிப்போடு…

அடேய் வண்டிக்கு ப்ரேக்க போடுங்கடே… ம்ஹூம் இவனுக கேக்க மாட்டானுவோ மக்கா!!

கோக்குமாக்கா கூட்டி ஒரு வழியாக வண்டியை ஒரு இடத்தில் ஓரங்கட்டி நிறுத்தினான் ராசு. வண்டி அதுவாக நின்றதா இல்லை இது ஈசா தான் நிற்க வைத்தானா என்று அவனுக்கு தெரியவில்லை. கதி கலங்கிப் போய் அமர்ந்து இருந்தான்.

திரும்பவும் கனவுலகத்தில் சஞ்சரித்த ஈசா “மாமீஈஈஈஈ….” என்று ராசுவை கட்டியணைக்க, 

“அண்ணே… விட்டுடுணே என்னைய..!!” என்று கதறியவன் ஈசன் காலில் விழ, “அடச்சீ… நீயாலே!!” ஒரு உதை விட கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து விழுந்தான் ராசு.

அப்புறம் தான் அவர்கள் வந்து நின்ற‌ இடத்தைப் பார்த்தான். அது அகத்தியா பள்ளிக் குழுமத்தின் பார்க்கிங் ஏரியா!!

“வண்டி கூட சரியா தாம்லே வந்திருக்கு!!” என்று இரு கைகளை உயர்த்தி நெட்டி முறித்தவனை கண்டவர்கள் வந்து வணங்கிவிட்டு செல்ல.. எல்லோருக்கும் தலையை ஆட்டியபடி இரு கைகளையும் காரின் மீது படர விட்டு புன்னகை தவழ காத்திருந்தான் மாமிக்காக..

அவனை ஏமாற்றாமல் அடுத்த பத்தாவது நிமிடம் அங்கு வந்து சேர்ந்தது, வீட்டு வழிவரும் குழும பேரூந்து…

பிங்க் நிற காட்டன் புடவையில் நீள பின்னலில் ஜாதி மல்லி வழிய.. அம்சமாய் வந்திறங்கியவளை கண்கள் கிறங்க பார்த்தான் மாயவன்!!

20 நாள் கழித்து திரும்பவும் வேலைக்கு வருவதில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்தவள் அவனை கவனிக்கவில்லை. அப்படி கவனித்து இருந்தால் 

அதே பேரூந்தில் ஏறி மீண்டும் வீட்டிற்கு சென்றிருப்பாள்.

வழக்கமாக அவளுடைய கேபினில் அமர்ந்து அன்றைய டைம்டேபிளை பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அழைப்பு வர.. 

“யாரு கூப்பிட்டா அண்ணே?” என்ற ப்யூனிடம் கேட்டப்படி வந்தவளிடம், “நம்ம குழும சேர்மேன் பையன் மா!!” என்று அவர் விலகி சென்றார்.

“எக்ஸ்கியூஸ் மீ சார்!!” என்று கதவைத் திறந்தவளுக்கு அதிர்ச்சியா? பேரதிர்ச்சியா? என்று தெரியவில்லை ஈசாவை கண்டு!!

எங்கே திரும்பவும் மயங்கி விழுந்து விடுவாளோ என்று அவன் அவசரமாக அவளை நெருங்க..

அவனை நெருக்கத்தில் கண்டவளின் கண்கள் மயக்கத்தில் சொருக… வெளிரிய இதழ்களை பற்றினான் தன் முரட்டு இதழ்களால் ஈசா!!

அவள் இன்னும் பயத்தில் அதிர்ந்து விழி விரிக்க..

“டோண்ட் பேனிக்!! ஜஸ்ட் ஃபார் ட்ரீட்மென்ட். பேரு லிப்போகிஸ்ஸாலஜி!!” என்றான் ஈசா!!

என்ன???!!!

ஏலேய்.. வருவோம்ல….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *