உன் முன்னே என் கெத்து நிக்காதடி
உன் முன்னே என் கெத்து நிக்காதடி ! – 13
முன்னே செல்ல செல்ல ஒரே புகை மண்டலமாய் இருந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை. சத்தமில்லாத இரவு சாலையில் பனியாக இருந்தாலும் இப்படி இருக்க வாய்ப்பே இல்லை. நிச்சயமாக பிரகாஷுக்கு தெரிந்து இது புகை தான்.
அதிர்ந்து போனான் பிரகாஷ் கண்ட காட்சியில். ரீனாவும் தான். கண் முன் பேருந்து ஒன்று குழுமியிருந்த புதரில் விழுந்து கிடந்தது. அதன் எதிர் முனையில் நான்கைந்து கார்கள் தடம் புரண்டிருந்தன.
அவைகளையும் தாண்டி container லாரி ஒன்றும் சரிந்திருந்தது.
காரை slow செய்தான் பிரகாஷ்.
ரீனா : என்ன, பிரகாஷ் இது ? நம்ப முன்னுக்கு போன express bus , container லாரி, cars…. எனக்கு ஒண்ணுமே புரியல. எப்படி ? இப்படி ?
பிரகாஷ் : holy shit !
அவனின் கைத்தொலைபேசியை எடுத்து பார்த்தான். சிக்னல் கம்மியாக தான் இருந்தது. இருந்தும், முயற்சி செய்து எப்படியோ பொது மருத்துவமனைக்கு கால் செய்து தகவல் சொல்லி அவர்களை விரைந்து தேவையான பொருட்களோடு வருமாறு கேட்டுக் கொண்டான்.
ரீனாவும் அவள் பங்கிற்கு அவளுக்கு தெரிந்த சுற்று வட்டாரா தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து தகவல் சொன்னாள்.
அதற்குள், பிரகாஷ் காரின் சிக்னலை தட்டி விட்டு ரத்த வெள்ளத்தில் சிதரி கிடப்பவர்களுக்கு முதலுதவி செய்ய சென்று விட்டான். அவன் கையில் medical kit box இருப்பதை ரீனா பார்த்தாள்.
பிரகாஷ் எப்போதும் காரில் இதனை வைத்திருப்பான். ஏதாவது, ஆபத்து அவசரம் என்றால் தேவைப்படும் என்பதற்காக. மற்றவர்கள் கிண்டலடித்தாலும் அதனை எப்போதும் காரிலிருந்து வெளியெடுக்கவே மாட்டான். என்றைக்கும் உதவாது என்றிருந்தது இன்றைக்கு உதவி விட்டது, பலரின் உயிரை காப்பாற்ற.
ரீனா, காரிலிருந்து இறங்கி பிரகாஷை நோக்கிய நடக்கையில் அவளுக்கு என்னவோ தட்டு பட்டது. அங்கேயே அப்படியே நின்றாள். யோசித்தாள். புதரில் விழுந்திருந்த அந்த பேருந்தை பார்த்தாள். எதிரே இருக்கின்ற கார்களையும், தூரமாய் தெரியும் அந்த container லாரியையும் பார்த்தாள்.
காரினுள்ளிலிருந்து சென்று தனது hand bag – கை திறந்து அதிலிருந்த இன்னோர் கைத்தொலைப்பேசியில் google – லை தட்டி காராக் bus accident என்று search செய்தாள். அவளின் சந்தேகம் உறுதியானது. வேகமாய் பிரகாஷை நோக்கி ஓடினாள். அவனின் கையை பிடித்து இழுக்க,
பிரகாஷ் : ரீனா, என்ன பண்றீங்க ?
கத்திய பிரகாஷின் வாயை பொத்தினாள் ரீனா. அவள் முகம் கலவரத்தில் சிவந்து போய் கண்களில் கண்ணீரோடு,
ரீனா : பிரகாஷ், இது எதுமே உண்மை இல்ல. இந்த பஸ், இந்த கார்ஸ்….
கையிலிருந்த போனை அவனிடம் காட்டினாள். அதனை வாங்கி பார்த்தவன் முகத்திலும் கலவரம். உன்னிப்பாக பார்த்தவன் கண்களில் கோவம், பதற்றம், சூழ்நிலை கைதியாக நிற்கின்ற அவலம் ஏன் என்ற வெறி வேறு.
கையில் போனுடன் முன்னும் பின்னும் சுற்றி பார்த்தான். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியலை. சற்றும் முன் கண்ட எதுவுமே இப்போது அவன் கண் முன் இல்லை. வெற்று சாலை பல்லிளித்துக் கொண்டிருந்தது.
காரில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான். கார் ஸ்டார்ட் ஆகவில்லை. தலையில் இடி விழுந்த கதைதான். அவளை உள்ளேயே அமர சொல்லி இவன் வெளியில் வந்து காரின் முன் பகுதியை திறந்து என்ன பிரச்சனை என பார்க்கையில் எல்லாம் சரியாகவே இருந்தது.
இருந்தும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை ஏன் என்று யோசிக்கையில் ரீனாவின் கார் சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
ஆத்திரம் தலைக்கேறி காரின் டயர்களை சரமாரியாக எத்தினான். இதில் இன்னோர் ஆச்சரியம் வேறு, அவன் அணிந்திருந்த சட்டை மீது ரத்த கறைகள் என்னவோ இப்போதுதான் பட்டது போல பிசு பிசுபிசுத்தது.
அதையும் அவன் கவனிக்கவில்லை காரிலிருந்து இறங்கிய ரீனாதான் பார்த்து சொன்னாள். ஏற்கனவே, கடுப்பில் இருந்தவன் கழட்டி வீசினான் அவனின் சட்டையை நடு ரோட்டில். பனி வேறு. நடுங்கினாள் ரீனா. கைகளை தேய்த்துக் கொண்டாள்.
மனோதத்துவம் படித்தவள் என்பதால் பேய் பயம் எல்லாம் இல்லை எனச் சொல்லிட முடியாது. சூழ்நிலை அறிந்து எப்படி நடந்திட வேண்டும் என்பதனை நன்கு அறிந்திருப்பவள் என்பதால் கோபத்தில் இருக்கும் பிரகாஷிடம் ஏதும் பேசவில்லை. கொஞ்ச நேரம் அவனை அப்படியே விட்டு விட்டாள்.
இருட்டிய சாலையில் பெயருக்கு கூட விளக்கொன்று இல்லை. ஒரு பொட்டு வெளிச்சமும் இல்லை. மண்டை காய்ந்தது அவனுக்கு.வெறி பிடித்தவன் போல நடு ரோட்டில் அலறினான். அலறியவனை காரின் முன் விளக்கின் மஞ்சள் வர்ணத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள் ரீனா. தவறு. ரசித்துக் கொண்டிருந்தாள்.
காரில் பயணிக்கும் போது அவனை சரியாக பார்க்க முடியவில்லை. இப்போதுதான், அவனை நன்றாக பார்க்கிறாள். அவனின் கட்டான உடல். குளிரவே இல்லையா இவனுக்கு. மன்னிக்கவும் அவன் முதலில் சட்டையை கழற்றி வீசினான் அல்லவா, அது அவனின் முழுக்கை ஆபிஸ் சட்டை. இப்போது அவன் அணிந்திருப்பது men sleeveless t-shirt.
பிரகாஷ், ரேம் மற்றும் வாசு ஆகிய மூவேந்தர்களுக்கும் மூன்று ஒற்றுமை. முதலாவது, கடவுள் வழிபாடு. இவ்விசியத்தில் இவர்களை அடித்துக் கொள்ளவே முடியாது. இரண்டாவது, பச்சை குத்தி கொண்டிருப்பது. மூன்றாவது, ஜிம். அங்கே இங்கே சுத்தினாலும் இறுதியில் மூவரும் இணைவது இம்மூன்றில் தான்.
என்ன செய்வேன் நான். கருப்பா நீதான் துணை என்று கருப்பரை மனதில் நினைத்துக் கொண்டு ரீனாவை பார்த்தான். அவள் நிற்குமிடம் சென்றான். அப்படி என்ன தைரியம் எங்கிருந்து வந்தது என்றுக் கூட தெரியவில்லை அவனுக்கு. கேட்டான் அவளிடம்,
பிரகாஷ் : என்ன நம்பறீங்களா ?
பேய் பயத்தோடு கலந்திருந்த கிரக்கம் வேறு. ரீனா பதில் சொல்லும் நிலையிலில்லை. அவனை விட்டால் அங்கு அவளுக்கு வேறு துணையுமில்லை. தலையாட்டினாள் ஆமாம் என்று.
பிரகாஷ் அவனின் வலது கையை அவளின் முன் நீட்டினான். ரீனா அவளின் கரத்தை அவன் கை மீது வைத்தாள். இறுக பற்றினான் அவள் கரம். அந்த அடர்ந்த காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தான் அவனின் ரீனாவோடு.
உன் முன்னே என் கெத்து நிக்குமா நிக்காதா…
