உன் முன்னே என் கெத்து நிக்காதடி
உன் முன்னே என் கெத்து நிக்காதடி ! – 16
அந்த அழகிய நிலாவினை ரசித்திருந்த பாப்பு திரும்பி பார்த்தாள் ரேம்மை. அவன் தூங்கிப் போயிருந்தான்.
பாப்பு : அடப்பாவி ! என்ன ஜென்மம்டா நீ ? என்ன மாதிரியான இடம் ! என்ன feel ! பாறேன் எப்படி தூங்கறான்னு ! எழுப்பலாமா வேணாவா ? என்ன மூட்ல தூங்கறானோ ! எழுப்பி வாலு வாலுனு கத்தனா என்ன பண்றது ? அப்போ, எழுப்பாம நாம escape ஆயிடனும். ஐயோ ! எப்படி போறது ? வாசல் எதுன்னே தெரியலையே. வரும் போது ஜம்முனு வந்தாச்சி. இவன் தூக்கிட்டு வந்தனால…
இப்படி தனக்குத் தானே கேட்டுக் கொண்டு அங்கிருந்து மெல்லமாய் நகர ஆரம்பித்தவள் கையை பற்றினான் ரேம். பக்கென்றது அவளுக்கு. கண்களை திறக்காமலேயே கேட்டான்,
ரேம் : எங்க போறே ?
பாப்பு : எங்கையும் இல்லையே. சும்மா இப்படியே, திரும்பி உட்கார்ந்தேன். கால் வலிக்குது. அதான்…
படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்தான்.
ரேம் : லொங்கு லொங்குனு தூக்கிட்டு வந்தது நானு. ஆனா, காலு உனக்கு வலிக்குதா ? சரி, எங்க காட்டு ?
கையை நீட்டியவனை ஒரு கேவலமான பார்வை பார்த்தாள் பாப்பு.
ரேம் : காட்டு…
பாப்பு : இல்ல, பரவால்ல. நான்…
ரேம் : ஏன்.. நான் உன்ன rape பண்ணிருவேன்னு பயமா ? கால பார்த்தெல்லாம் எனக்கு மூட் வராது. நான் shahruk khan இல்லே. தமிழ் செல்வன்.
பாப்பு சத்தமாக சிரித்தாள் கைதட்டி. ரேம் அவளை பார்த்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து, எதிரே இருந்த குட்டி மேஜையின் மீதிருந்த தண்ணீர் போத்தலை கையில் எடுத்தான்.
மூடியை திறந்து மூடியில் இருக்கும் தண்ணீரை அவள் மீது தெரித்தான் வேண்டுமென்றே சிரித்துக் கொண்டு.
பாப்பு விடுவதாய் இல்லை. முகத்தில் தெரித்திருந்த தண்ணீர் துளிகளை கைகளால் துடைத்து விட்டு சொன்னாள்,
பாப்பு : நீங்க அந்த வேலைக்கி செட்டாக மாட்டீங்க !
ரேம் போத்தல் நீரை பருகிக் கொண்டே சொன்னான்.
ரேம் : ஆமா ! ஆமா ! எனக்கு ரொம்ப நல்ல taste இருக்கு. உன்ன மாதிரி சப்ப figure – லாம் எனக்கு செட்டாகாதுதான்.
கடுப்பாகிய பாப்பு முட்டி போட்டு அந்த கட்டிலில் நின்றவாறு இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு கேட்டாள்.
பாப்பு : சப்.. சப்ப.. figure – ரா ? நானா ? ஹேலோ, இந்த சப்ப figure – ர தான் அன்னிக்கி மூச்சு முற்ற வரை kiss பண்ணீங்க ! ஞாபகம் இருக்க மிஸ்டர் ரேம்.
ரேம் : அது ஏதோ, ஒரு மயக்கத்துல பண்ணிட்டேன் ! இப்போ, திடிர்னு வீட்டு சாப்பாடு bored அடிச்சா கடையில சாப்பிடற மாதிரி. அதுக்காக தினமும் கடையிலையா சாப்பிடறோம்.
ரேம் சொன்னதை கேட்டு கோவம் வந்துவிட்டது பாப்புவிற்கு. நிஜமாகவே.
பாப்பு : அப்போ, நான் என்ன ஊறுகாவா ?
ஏனோ, தெரியலை அவள் கண்கள் கலங்கி விட்டன. அவளறியாது. மனம் கூட கனத்தது. மெத்தையிலிருந்து கீழிறங்கி நிற்க முயற்சித்தவளுக்கு அப்போதுதான் புரிந்தது அவளுக்கு காலிலும் அடிபட்டு இருக்கிறது என்று. நிலையில்லாமல் தடுமாறி விழ போனவளை பற்றி பிடித்தான் ரேம்.
வாய் திறக்காமல் பாப்பு அவன் கையை உதற, பலனில்லை. ரேம்மின் பிடி மிக அழுத்தமாக இருந்தது. அவளின் மீது அவனின் பார்வையும் கூட. அதுவரை அவனை பார்த்திராத பாப்பு, அப்போது பார்த்தாள். ரேம்மின் கண்களை பார்த்தாள். இருவரின் கண்களும் பார்த்துக் கொண்டன.
ரேம் முகம் கலவரமாக இருந்தது. கோவம் போல. உதட்டை கடித்துக் கொண்டவன்,
ரேம் : என்ன சாகடிக்காம விடாது இந்த கண்ணு. இந்த கண்ண பார்த்தாலே… sorry என்னால என்ன control பண்ண முடியல !
சொன்னவன், அவளின் முகத்தை பற்றி அவளிதழில் அவன் இதழ் பதித்தான். பாப்புவிற்கு அவனை தள்ளி விட தோன்றவில்லை. அவனின் நெஞ்சில் குத்தவோ, அடிக்கவோ தோன்றவில்லை. அவனின் முதுகினை இவளின் கைகளை கொண்டு கட்டி கொண்டாள். அவள் அறிந்து.
அவள் வாழ்வின் மூர்க்கத்தனமான முதல் முத்தம் தமிழ் செல்வனோடுதான். ஐந்து நிமிடத்திற்கும் மேற்போன இந்த இரண்டாவது முத்தமும் அவனோடுதான்.
ரேம், அவளின் உதட்டிலிருந்து அவன் உதட்டை பிரித்தெடுத்துக் கொண்டு பின்னோக்கி சென்றான். பாப்பு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நிலைகுத்தி நின்றாள்.
பாப்பு : are you kissing me ?
கைகள் இரண்டும் அந்த சாம்பல் நிற சிலுவாரின் பாக்கெட்டில் இருக்க, அவளை பார்க்காமலேயே வெட்ட வெளியை பார்த்து பதில் சொன்னான் ரேம்.
ரேம் : no i bite !
பாப்புவிடமிருந்து பதில் ஏதும் வராததால் திரும்பியவன், அங்கிருக்கும் தளவாட பொருட்களை பிடித்து கொஞ்சம் கொஞ்சமாய் முன்னுக்கு சென்று கொண்டிருந்த பாப்புவிடம் ஓடிச் சென்றான். அவளின் இடுப்பை பிடித்து தூக்கினான் மீண்டும் கட்டிலுக்கே கொண்டு வர அவளை. பாப்பு திமிறிக் கொண்டு,
பாப்பு : விட்றா..
ரேம் : டா… ஹ்ம்ம்ம்.. நல்ல முன்னேற்றம் தான். இதுக்காகவே உன்ன கீழ விட கூடாது.
அவளை கொண்டு போய் கட்டிலில் போட்டான் ரேம். அவள் அங்கிருந்தும் தப்பிக்க வழி பார்க்க, மறுபடியும் ரேம்மின் பார்வையில் விழுந்தாள் பாப்பு. என்ன ஒரு புரியாத மயக்கம், கிரக்கம் அவளுக்கு சத்தியமாக புரியவில்லை.
என்னதான் இருக்கிறது இவனிடத்தில். இவனை கண்டாலே பல நாள் இவனுடன் வாழ்ந்த எண்ணம் தோன்றுகிறதே. இவனுடனான இது போன்ற நெருக்கங்களை மனம் விரும்பி ஏற்கின்றதே. அதற்காய் ஏங்குகிறதே.
அவளின் கேள்வி ஞானத்தினை கலைத்தான் ரேம்.
அவள் தப்பி ஓடிடாமல் ரேம் கட்டிலிலேயே படுத்திருந்த அவளின்,மீது கைகள் படாமல் ஓரத்தில் இருந்த தலையணைகளில் கைகளை ஊனி வைத்திருந்தான். பாப்பு ரேம்மின் கட்டுக்குள் இருந்தாள் எனலாம்.
ரேம் : வாய் திற..
பாப்பு : ஏன்…
ரேம் : டின்னர் முடிஞ்சி இந்த மாத்திரை சாப்பிடணும். இது, ஸ்வீட் மாதிரி. தண்ணீலாம் தேவை இல்ல.
பாப்பு அவனின் பேச்சுக்கு மாரு பேச்சு பேசாமல் வாய் திறந்து அந்த மிட்டாய் மாத்திரையை வாங்கி கொண்டாள்.
உன் முன்னே என் கெத்து நிக்குமா நிக்காதா…
