உன் முன்னே என் கெத்து நிக்காதடி
உன் முன்னே என் கெத்து ! – 12
ரீனா : உங்க பேர் நீங்க சொல்லவே இல்லையே ?
பிரகாஷ் : பிரகாஷ். தேவன் பிரகாஷ். neurosurgeon.
ரீனா : wow ! neurosurgeon. wait ! நீங்கதான் அந்த youngest neurosurgeon தேவன் பிரகாஷ், from hands full private hospital….
பிரகாஷ் ஆமாம் என்று தலையை ஆட்டவும். ரீனா குதூகலத்தில் குதித்தாள்.
பிரகாஷ் : oh ! oh ! cool ! cool ! என்ன இவ்ளோ ஒரு excitement ?
ரீனா : இருக்காதா பின்னே, worlds youngest neurosurgeon கூட இப்படி கார்ல ஒண்ணா; அதுவும் you rescue me from the hunted place.. wow… what a day….
அவள் பேசியதும். அவளின் தோரணையும் பிரகாஷுக்கு ஒரு மாதிரியான வெட்கத்தை கொடுத்தது. அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
பிரகாஷ் : டேய், பிரகாஷ் உனக்கு எங்கையோ மச்சம்டா வாசு சொன்ன மாறியே இங்க இந்த காராக்ல வந்துதான் உனக்கு பொண்ணு செட்டாகணும்னு இருக்குது போல. ஏதோ ஒரு track – ல போது நாமளும் போவோம். இப்போதான்டா youngest neurosurgeon ஆனதுக்கான பிரயோஜனம் கிடைச்சிருக்கு.
ரீனா : அப்போ, நீங்களும் அந்த conference – க்குத் தான் வந்துருக்கீங்களா ?
பிரகாஷ் : 2020 conference தானே சொல்றிங்க ?
ரீனா : ஆமா, அதேதான்…
பிரகாஷ் : நீங்க டாக்டரா ?
ரீனா : ஹ்ம்ம்… psychiatrist.
பிரகாஷ் : ஓ… எங்க ?
ரீனா : together private hospital… Port Klang – ல இருக்கற branch.
அவள் சொன்னதை கேட்டு பிரகாஷுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
ஸ்டேரிங்கை குத்திக் கொண்டே முனகினான்.
பிரகாஷ் : எங்கடா track நல்லா போதேன்னு பார்த்தேன். தோ ! ஆப்பு வெச்சிட்டியே கருப்பா. இனி எங்க… அப்படியே செட்டானாலும் அவனுங்க ரெண்டு பேரும் பிரிச்சிடுவானுங்களே.
சத்தமாக பேசிய ரீனா இப்போது husky voice – ல் அவனை அழைத்தாள்.
ரீனா : பிரகாஷ், நீங்க இதுக்கு முன்னாடி காராக் highway – ல மஞ்ச கலர் ஆமை காடி பார்த்திருக்கீங்களா ?
பிரகாஷ் : ஆமை காடியா ? இல்லையே, ஏன் ? ஆமா, திடிர்னு ஏன் husky voice – ல பேசறீங்க ?
ரீனா : side mirror பாருங்க பிரகாஷ்…
இருவருக்கும் ஈரக்குலை நடுங்கியது. அவர்களின் காருக்கு பின்னால் வழக்கமாக அனைவரும் சொல்லும் காராக் சம்பந்தமான பேய் கதையில் வரும் அதே மஞ்சள் வர்ண Volkswagen கார். அதுவும் ஆளில்லாமல்.
பிரகாஷுக்கு இது முற்றுலும் புதிய அனுபவம். பிணவறையில் கூட பேய்கள் பார்த்ததில்லை இவன். அதுவும் இங்கு ஆளில்லாமல் கார் ஓடுவது அவன் உயிரே தலைதெறிக்க ஓடுவதற்கு சமம்.
இவன் தனியாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை. ரீனா வேறு இருக்கிறாளே. என்னதான் செய்வது. பயத்தை வெளிக் காட்டாமலும் இருக்க முடியாது. பயப்படாமல் இருக்கவும் முடியாது.
காராக் பற்றி சொல்லியே ஆக வேண்டும். மலேசியாவின், பதினான்கு மாநிலங்களில் ஒரு மாநிலமான பஹாங்கிற்கு செல்லும் வழியிலே இருக்கிறது காராக் எனும் இடம். 1970 – இல் காராக் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு 1977 இல் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
காட்டு பாதையை சுற்றிலும் விளக்கில்லாத நீள் சாலை. பலர் உயிரை கொன்று குவித்திருக்கும் சம்பவங்களும் நிறையவே அங்கு நடந்திருப்பதாக வரலாறு கூறுகின்றன. அதனாலேயே, பலர் அந்த சாலையில் இரவில் பயணிப்பதை தவிர்ப்பர்.
அந்த மஞ்சள் Volkswagen கார் பிரகாஷின் காரை தாண்டியும் செல்லாமல் அவனையும் முன்னுக்கு போக விடாமல் அலைக்கழித்து கொண்டிருந்தது. ஆத்திரமடைந்த பிரகாஷ் காரை எதிர் ரோட்டுக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது தடுத்தாள் ரீனா.
ரீனா : பிரகாஷ், வேணா. நாமளும் போக கூடாது. அந்த காரும் போகாது. நாம அமைதியாதான் இருக்கனும். எதுவும் பண்ணாம cool – லா drive பண்ணனும்.
பிரகாஷ் : என்ன பேசறீங்க ரீனா ? ஒன்னு வெட்டி போனும் இல்லாட்டி எனக்காவது வழிவிடணும்லே..
ரீனா : உள்ளுக்கு ஆள் இருந்தா தானே வெட்டி போக முடியும் பிரகாஷ்….
அவள் சொன்னதை கேட்டு பிரகாஷுக்கு மண்டையில் உரைத்தது. இருந்தும் அதிக கடவுள் பக்தி கொண்ட பிரகாஷுக்கு இதில் துளியும் நம்பிக்கை இல்லை.
பிரகாஷ் : ரீனா, நீங்க ஒரு டாக்டர். அதுவும் psychiatrist. நீங்க போய் எப்படி இதெல்லாம் நம்பறீங்க ?
ரீனா : கடவுள் இருக்காருன்னு நம்பறீங்க தானே. அதே மாறி ஆத்மாக்களும் இருக்குனு நம்புங்க. நம்ப கூட வேண்டாம். மதிங்க அது போதும்.
பிரகாஷ் : ஓகே ! மரியாதை தானே குடுத்துட்டா போச்சி. என் policy ஒன்னு தான். நான் உன்னே disturb பண்ணல நீ என்ன disturb பண்ணாத. so, இப்போ ரீனா நீங்க உங்க seat belt போட்டுக்கோங்க. நான் meter – ரை full – லா எறக்க போறேன்.
சொல்லியவன் ரீனாவின் பதிலுக்கு காத்திராமல், காரை இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு கொண்டுச் சென்று மிக வேகமாக முன்னே சென்ற இரண்டு லாரிகளை தாண்டி மீண்டும் வலது பக்கத்திலேயே அவனின் காரை கொண்டு வந்தான்.
கார் காற்றாய் பறக்க, எதிர் சாலையில் கார் ஒன்றின் மீது உருவமொன்று அமர்ந்து பிண்டமொன்றை கடித்து குதறிக் கொண்டு இருந்தது. காரின் side mirror வழியாக அந்த கொடூரத்தை பார்த்தவன் கொஞ்சமும் மிரளவில்லை. கண்டுங் காணாததை போலவே இருந்தான்.
அவனின் எண்ணம் முழுக்க இங்கிருந்த எப்படியாவது தப்பித்து சென்றிட வேண்டும். ஆபத்தை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் மனம் அவனை பற்றி மட்டும் நினைக்காமல் அவளையும் சேர்த்து நினைத்தது. இப்போது ரீனா அவன் பொறுப்பு. அப்படித்தான் அவன் மூளையில் ஏற்றிக் கொண்டான்.
ஆர்வக் கோளாறு ரீனா தான் பயம் இருந்தாலும் கொஞ்சங் கூட அடங்காமல் தலையை திருப்பி, திரும்ப திரும்ப அக்காட்சியை பார்த்துக் கொண்டே வந்தாள். இதில் மூச்சுக்கு முன்னூறு தடவை பிரகாஷ் அங்க, பிரகாஷ் அங்க என்று வேறு சொல்லிக் கொண்டாள் பயத்தில்.
உன் முன்னே என் கெத்து நிக்குமா நிக்காதா…
