உன் முன்னே என் கெத்து நிக்காதடி
உன் முன்னே என் கெத்து நிக்காதடி ! – 11
sudden break – க்குக்கான காரணம் அங்கிருந்த அவள். கண்களை மூடி காதை பொத்தி தார் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்னே கீழே அமர்ந்திருந்தாள்.
காரை விட்டு இறங்கியவன் அவளிடம் என்னாச்சி என்றான். திடிரென்று ஒரு குரல் அவன் பின்னாலிருந்து கேட்டது.
குரல் : ஹலோ…
டக்கென குரல் வந்த திசை நோக்கி திரும்பினான் அங்கு யாருமில்லை. சுற்றி முற்றி பார்த்தவனுக்கு கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பித்தது.
தனுக்குத்தானே பேசிக் கொண்டான் பிரகாஷ்.
பிரகாஷ் : ஒரு வேளை, வாசு சொன்னது சரிதானோ. நாமதான் volunteer – ரா வந்து மாட்டிக்கிட்டோமா. இதுல காடிலர்ந்து வேற இறங்கிட்டோம். என்ன நடக்க போதோ. கருப்பா காப்பாத்துடா !
அவன் தோள்பட்டையை யாரோ தட்டினார்கள். திரும்பலமா வேண்டாமா என்ற பயம் வேறு. அதன் விளைவு குளிர் பனியிலும் வியர்த்து ஒரு சொட்டு வியர்வை அவன் தலையிலிருந்து கன்னம் வழி முகத்தில் இறங்கியது.
அதை கைகளில் துடைத்தவன். என்ன நடந்தாலும் சரி, திரும்பி பார்த்திடலாம் எனச் சொல்லி விருட்டென திரும்பினான். அவன் முன் அதே பெண், ஆம் முதலில் பார்த்த அதே பெண் நின்றிருந்தாள்.
அந்த பெண் : என்ன ?
அவள் கேட்க்கும் போதே டக்கென பிரகாஷ் கீழே குனிந்து பார்த்தான்.
அந்த பெண் : ஏய் ! என்ன பண்ற ?
பிரகாஷ் : எல்லா பேய்க்கும் வாய் இருக்கும். பேசும். ஆனா, கால் இருக்காது….
என இழுத்தான்.
அந்த பெண் : நீங்க காஞ்சனால பார்த்தது இல்லையா ? அதுல பேய், டான்ஸ்சே ஆடும் !
பிரகாஷ்கு அல்லு விட்டது. ஐயோ ! பேசுவது பேயா இல்லை பெண்ணா என்று.
அந்த பெண் : நானும் குனிஞ்சி பார்க்கவா ?
பிரகாஷ் : எத ?
அந்த பெண்: ஹ்ம்ம்.. உங்களுக்கு கால் இருக்கா இல்லையானு ?
பிரகாஷ் : கால் இல்லாட்டி எப்படி நிப்பேன் ?
அந்த பெண் அவளின் கை கடிகாரத்தை பார்த்தாள்.
அந்த பெண் : மணி விடியற்காலை ரெண்டு. இப்போ இந்த கேவலமான காமெடிக்கு நான் சிரிக்கணுமா ? by the way நான் ரீனா.
பிரகாஷ் : பேய்க்கு கூட பேர் நல்லாத்தான் வெச்சிருக்காங்க.
அவள் முறைத்தாள்.
பிரகாஷ் : ஓகே ! ஓகே ! காருக்கு என்னாச்சி ?
அந்த பெண் : எனக்கே தெரியலே. வந்துகிட்டு இருக்கும் போது அதுவே அப்படியே டக்குனு நின்றுச்சி. பெட்ரோல் கூட full tank இருக்கு. radiator – ல கூட தண்ணீ சரியாத்தான் இருக்கு. ஆனா, என்னான்னு தான் தெரியல.
பிரகாஷ் : ஆமா, நான் வரும் போது நீங்க அங்க தானே இருந்தீங்க ? அப்பறம் எப்படி என் பின்னாலர்ந்து வந்தீங்க ?
அந்த பெண் : ஹேய்… நான் இவ்ளோ நேரம் போன் சிக்னல் கிடைக்காம முன்னுக்கு வரைக்கும் நடந்து போய்ட்டு வரேன். அப்போதான் நீங்க என் கார் கிட்ட நின்னுகிட்டு இருக்கறத பார்த்துட்டு திருடன்னு நினைச்சி ஹோய்னு சொன்னேன்.
பிரகாஷ் : ஹோய்னு சொன்னீங்களா ? ஹலோ சொல்லல ? என்ன தட்டி கூப்பிடல ?
அவள் இல்லை என தலையாட்டிட இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்தனர். இருவருக்கும் ஏதோ புலப்பட; டக்கென பிரகாஷின் காரை நோக்கி வேகமாய் ஓடி சென்று அதில் ஏறி அமர்ந்தனர்.
பிரகாஷ் காரை மிக வேகமாய் அழுத்தினான்.
நிசப்தமான அமைதி. என்ன நினைத்தார்களோ மீண்டும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்தனர். பார்த்தவர்கள் டக்கென கீழே குனிந்து அவன் இவள் காலையும் அவள் இவன் காலையும் பார்த்தனர்.
ரீனா : ஏய் ! என்ன பண்ற நீ ! முன்னுக்கு பாரு !
அவள் கத்திய கத்தில் பிரகாஷ் அரண்டு போய் தலையை தூக்கி காரை சரியாக ஓட்ட ஆரம்பித்தான்.
ரீனா : லூசா நீங்க ? காடி ஓட்டிக்கிட்டு இருக்கீங்க இப்படி திடீர்னு கீழே பாக்றீங்க முன்னுக்கு ஏதாவது வந்துருந்தா ?
பிரகாஷ் : சேர்ந்தே சொர்கம் போயிருப்போம். என்னங்க, உங்க பேரு …
ரீனா : ரீனா …
பிரகாஷ் : ஆ.. ரீனா, இன்னோர் தடவ இப்படி காது கிழியற மாதிரி கத்தாதீங்க. காது கொய்யுன்னு இருக்கு ! அப்பறம், இது என் கார். நான் மேல பார்ப்பேன் கீழே பார்ப்பேன். நீங்க தான் Tumpang – ல வந்துருக்கீங்க. so , ஜோக்கா பேசுங்க !
ரீனா அவனை கொல்வதை போல் பார்த்தாள்.
பிரகாஷ் இதற்கு மேல் பேசாமல் இருப்பதே மேல் என எண்ணி அமைதியாகவே காரை ஓட்டினான். சொருகியிருந்த Pendrive – வை on செய்தான்.
ஒலித்தது பாடல் அவனுக்கு வசதியாகவே.
கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி
என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா
ஏதேதோ பண்ணி பண்ணி
என்ன கொஞ்சம் மிரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி
மனச நீயும் கெடுக்க பாக்குற
இறு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன் !
பாட்டோடு சேர்ந்து அவனும் பாட, ரீனா காரின் ஜன்னல் ஓரமாய் கை வைத்து அவனையே பார்த்தாள். அவளை பார்த்த பிரகாஷ்,
பிரகாஷ் : இல்ல… பாட்டு…..
அவன் சமாளிப்பதை பார்த்து அவளுக்கு சிரிப்பே வந்து விட்டது. சிரித்தும் விட்டாள்.
tumpang – காரில் ஒருவருக்கு இடமளிப்பது
உன் முன்னே என் கெத்து நிக்குமா நிக்காதா…
