உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி

உன் முன்னே என் கெத்து நிக்காதடி ! –

உன் முன்னே என் கெத்து நிக்காதடி ! –

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி ! -18


அந்த இருட்டிய பயங்கரமான காட்டில் பிரகாஷுக்கு இருந்த ஒரே நம்பிக்கை நிலவொளிதான். ரீனாவின் நம்பிக்கையோ பிரகாஷ் மட்டும் தான்.


இருவரும் அடர்ந்த காட்டு பாதையில் நடந்து போகையில் பல பிராணிகளின் சத்தங்கள் ரீனாவை மிரள வைத்தன. மிகவும் பயந்து போனாள். 

முதலில் பிராகாஷின் கையை மட்டுமே பிடித்திருந்தவள், பயம் அதிகரிக்க, கையை மேல் நோக்கி தூக்கி காதலனை பிடித்துக் கொண்டு shopping செல்வதை போல் அவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

பிரகாஷும் ஏதும் சொல்லவில்லை. காரணம் அவன் எண்ணம் முழுக்க அங்கிருந்து வெளியாவதிலேயே இருந்தது. சின்ன சின்ன பாதைகளை கூட மிக நுணுக்கமாக கண்காணித்து நடந்தான்.

யார் கண்டது, இந்த அடர்ந்த காட்டில் காட்டுவாசிகள் இருந்தால் பிடித்து கொன்று தின்று விடுவார்களே. இல்லை, மிருகம் ஏதேனும் வேட்டையாடி விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் அவனுக்கு.

high heels அணிந்திருந்ததால் ரீனாவால் சரியாக நடக்க கூட முடியவில்லை. நிறைய தடுமாற்றங்கள். பலமுறை விழ போனாள்.

பிரகாஷ் கிண்டலாகவே கேட்டான்.

பிரகாஷ் : எத்தனை inch – மா ?

ரீனா : ஐஞ்சி…

பிரகாஷ் : போதுமா ?! 

ரீனா : எனக்கென்ன தெரியும் இப்படி வந்து மாட்டுவோம்னு..

பிரகாஷ் : தெரிஞ்சிருந்தா பத்து inch போட்டு வந்திருப்பிங்களோ ?!

ரீனா : எனக்கு கால் வலிக்குது. இந்த shoe போட்டு இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. பிளீஸ் எதாச்சம் பண்ணுங்க பிரகாஷ்…

பிரகாஷ் : நான் என்னம்மா பண்ணே ? நான் என்ன மகேந்திர பாகுபலியா உன்ன சிவலிங்கம் மாறி தோள்ல தூக்கி வெச்சி போக ! பேசாம போ மா ! நானே என் பொழப்ப நினைச்சி மண்டை காஞ்சி போயிருக்கேன் இதுல நீ வேற !

ரீனா : விளையாடாதீங்க பிரகாஷ் ! 

பிரகாஷ் : நான் ஏன் மா உன்கூட விளையாட போறேன். நாம என்ன புதுமண  தம்பதிகளா ?  honeymoon – கா வந்துருக்கோம். எப்போ எது எங்கிருந்து வந்து ஒரு காட்டு காட்டிட்டு போகுன்னே தெரியலே !

ரீனா : நான் வேணும்னா shoe கழட்டிட்டு வெறுங் காலுல நடந்து    வரட்டா ?

பிரகாஷ் : ஆண்டவா ! நாளைக்கி விடிஞ்சி காலே இருக்காது பரவாலையா ? pebble walking போறதா நினைப்போ ? இது காட்டு பாதமா !

ரீனா வேறு வழியின்றி அந்த காலணியோடே நடக்க முயற்சித்தாள். நிலைத் தடுமாறி விழப் போனவளை கைத்தாங்கலாக பற்றினான் பிரகாஷ். 

ஆ ! பிடித்தவனும் அலறினான். பிடியில் இருந்தவளும் அலறினாள். இருவரும் மாறி மாறி பார்க்க.

பிரகாஷ் இடது கையில் முள் செடி நன்றாக கீறி ரத்தம் வழிந்தது. கொத்தாக கீறி இருந்தது. அவளை பிடிக்கும் போது தான் முள் செடி நன்றாக பதம் பார்த்திருந்தது அவனை.

முள் கீறியதில் ரீனாவின் இடையில் அவனின் கை பிடி இருகியதால் அவள் அலறினாள்.

ரீனா : sorry – ங்க என்னால தான். நான் தான் சொன்னேன்ல நடக்க முடியலன்னு. பேசாமே நான் shoe கழட்டிட்டே நடந்திருப்பேன். உங்களுக்கும் இப்படி ஆயிருக்காது.  sorry – ங்க. இருங்க நானே முள்ளெல்லாம் எடுத்தறேன்.

ரீனா அவன் கையிலிருந்த முட்களை ஒவ்வொன்றாக எடுத்தாள். 

பிரகாஷ் : ஆ….. வலிக்குது ! மெதுவா….

ரீனா : sorry ! sorry !

பிரகாஷ் : ஆ !

ரீனா அவனை பார்த்தாள். ஒரு முள்ளுக்கு ஒரு அலறல். முதலில் பாவமாக பார்த்தவள் இப்போது முறைத்து பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

பிரகாஷ் : என்னங்க முறைக்கறீங்க ? உங்களாலதான்… தேவையா எனக்கு. விட்டுருக்கணும் அப்படியே விழட்டும்னு. அப்போ தெரிஞ்சிருக்கும்.

ரீனா : ஆண்டவா, நானே விழுந்திருக்கலாம் போல. கொஞ்ச நேரம் வாய மூடறீங்களா ? நீங்க அலறதுல்ல காட்டுல இருக்கற அத்தனை மிருகமும் நம்பல சுத்தி தான் நிக்கும் போல.

பிரகாஷ் : ஏன் சொல்ல மாட்டிங்க… எனக்கில்லை வலி உயிர் போது !

ரீனா : கடவுளே !

தலையில் அடித்துக் கொண்டாள் ரீனா. பொறுமையாய் முட்களை எடுத்து முடித்தவள், அவளின் hand bag – லிருந்து tissue – வை எடுத்து அவன் கைகளில் ஒற்றி எடுத்தாள். அவளின் சால்வையை அவன் கைகளில் கட்டி விட்டாள்.

பிரகாஷ் நடக்க ஆரம்பிக்க ரீனா சொன்னது போல் நகராமல் அங்கேயே நின்றாள். பிரகாஷ் இறுதியாக அவளை அவன் கால் மேல் கால் வைத்து நடக்க சொன்னான். முதலில் மறுத்தவள் வேறு வழியின்று ஒத்துக் கொண்டாள்.

ரீனா அவளின் காலணியை கைகளில் மாட்டிக் கொண்டாள். பிரகாஷின் கழுத்தை சுற்றி அவளின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டாள். ரீனா அவனையே பார்க்க,

பிரகாஷ் : என்னையே பார்க்காதீங்க மேடம். பின்னால பாருங்க. காட்டுவாசி எவனாவது வந்திட போறான். அப்பிறம் ரெண்டு போரையும் பிடிச்சி சூப் வெச்சிருவான். 

ரீனா அவன் சொன்னதை கேட்டு புன்னகைத்தாள். பிரகாஷுக்கும் ஒருபுறம் சிரிப்புதான், இருந்தாலும் அதனை மறைத்துக் கொண்டான். அவளை வம்பிழுக்கவே,

பிரகாஷ் :

அழகே… அழகே… 
நீ அசைந்தால் அசையும் உலகே !
அமுதே… அமுதே… 
உந்தன் இதழ்கள் தான் என் உணவே !

அவன் பாடிய பாடலை கேட்ட ரீனா, 

ரீனா : நிறுத்துங்க ! என்ன இறக்கி விடுங்க ! 

பிரகாஷ் : கை போடுங்க ! அதாங்க கை போட்டு நிறுத்துங்க ! அப்போதான் பஸ் நிக்க வேண்டிய இடத்துல நிக்கும்..

ரீனா : நான். .. சொல்லிட்…

ரீனா முடிக்கவில்லை. பிரகாஷ் இடைமறித்தான். 

பிரகாஷ் : உஷ்….

காதுகளை கூர்மையாக்கி கேட்கின்ற சத்தம் என்னவாக இருக்கும் என்பதனை உன்னிப்பாக கேட்டான். தெளிந்த நீரோடையின் சத்தம்.

பிரகாஷ் : பக்கமா ஏதோ waterfall இருக்கின்னு நினைக்கறேன்.

ரீனா : ஆமா, எனக்கும் அந்த தண்ணீ சத்தம் கேட்குது.

இருவரும் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி நடந்தனர்.

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *