உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி

உன் முன்னே என் கெத்து நிக்காதடி ! –

உன் முன்னே என் கெத்து நிக்காதடி ! –

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி !

உன் முன்னே என் கெத்து நிக்காதடி ! – 17


ரேம், பியார் பிரேமா காதல் படத்தின் பாடலானான் high on love – ஏ பெண்ணே, பாடலை பாடாமல் அதன் இசை மட்டும் humming செய்தான் பாப்புவை பார்த்துக் கொண்டு, அவளின் கலைந்திருந்த கூந்தலை சரி செய்தவாறே.


மிட்டாய் மாத்தரையை போட்டிருந்த பாப்புவின் கண்கள் சொருக, அவளறியாமல் உடல் என்னவோ செய்ய. பாப்புவிற்கு அவனின் தொடுதல் நிறுத்தப்படாமல் தொடர வேண்டும் என்றிருந்தது. அவளின் பெண்மை ரேமின் ஸ்பரிசத்தால் ஆட்க்கொள்ளப்பட்டது.

கலவியின்றியே கற்பு களவாடபடுவது இப்படித்தானோ என்னவோ. கண்களை முழுதாய் மூடிக் கொண்ட பாப்பு அவளின் கையை தமிழின் button கழன்றியிருந்த நெஞ்சில் படர விட்டாள். அவனின் நெஞ்சின் ஒவ்வொரு கட்டும் அவளின் விரல் தீண்ட தமிழுக்கு உடல் சிலிர்த்தது.

பெண் தீண்டல் இல்லாமல் இருந்த ரேம்க்கு பாப்புவின் தீண்டல் என்னவோ மிகவும் பரிட்சியமான ஒன்றாகவே இருந்தது. பாப்புவின் முனகல்கள் அவள் ஒரு நிலையில் இல்லை என்பதை உறுதி செய்தது. 

கனலாய் கொதித்திருந்த அவள், தமிழின் கழுத்திலிருந்த crystal -லோடு சேர்த்திருந்த ருத்ராட்ச்ச மாலையை அவளின் விரல்களால் சுற்றிக் கொண்டு மிக கெட்டியாக பிடித்து இறுக்கி இழுத்தாள்.

அது அறுந்து நாலாபக்கமும் சிதறி ஓடியது. ரேம்மிற்கு அவளின் செயல்களின் காரணம் புரிந்தும் புரியாமல் இருந்தது. 

மருந்தின் தாக்கத்தில் உளறலாம். அது தெரிந்த கதை. ஆனால், இந்த முனகல்களும் செயல்களும் மருந்தினால் ஏற்பட்டது போலவே இல்லையே.

யோசித்தவனுக்கு எதோ புரிந்தாலும். அதை பற்றி மேற்கொண்டு யோசிக்க அவன் விரும்பவில்லை. மிட்டாய் மருந்து வேலையை காட்டிட, மயக்கமாகி தூங்கி போனாள் பாப்பு. தூங்கியவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ரேம்.

ரேம் : என்னால, உன்ன விட முடியலடி ! தினம் தினம் உன்ன நெனச்சி நெனச்சி… என்ன கல்யாணம் பண்ணிக்கோடி ! உன் கண்ணு.. உன் கண்ணு அப்பவும் சரி இப்பவும் சரி என்ன அன்னைக்கி மாதிரி இன்னிக்கும் அப்படியே…..

சொல்ல வந்ததைக் கூட முழுமையாய் முடிக்க முடியாமல் தலையில் அடித்து புலம்பி தள்ளியவன் அவளின் நெற்றியில் முத்தமொன்று வைத்து மீண்டும் அவளை அவளறைக்கே கொண்டு வந்து சேர்த்தான்.

காலையில் கண் விழித்த பாப்பு, நேற்றைய கிரகத்திலேயே இருந்தாள். தானாகவே சிரித்துக் கொண்டு கைகளைக் கொண்டு துழாவினாள் அவள் நேற்றைய கட்டிலிலேயே இருப்பதாய் நினைத்து. வேறு மாதிரியான மேற்பரப்பாக இருக்கிறதே என்று உடனே கண் விழித்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவள் நேற்றைய இடத்திலும் இல்லை. பக்கத்தில் ரேம்மும் இல்லை. முகம் கழுவி, பல் துலக்கி, உணவு ஊட்டி விட சீனியர் தாதி புஸ்பா அங்கு வந்தார்.

அவளுக்கான அத்தனை பணிவிடைகளும் செய்த பிறகு, பாப்பு கேட்டாள்.

பாப்பு : அக்கா, ரேம் எங்க ?

புஸ்பா : தெரியலையே பாப்பு. நான் பார்க்கல. பார்த்தா சொல்றேன். சரி நீ ஏன் ரேம் தேடற ?

பாப்பு என்னதான் அங்கு பணிபுரியும் மருத்துவராக இருந்தாலும் அனைவரிடத்திலும் சகஜமாகி பழகுவதால் முக்கால்வாசி எல்லோரும் அவளை பாப்பு என்றே செல்லமாக அழைப்பர். 

அவளும் அதையே விரும்புவாள். இருந்த போதும் மற்றவர்கள் முன்னிலையில் அவளுக்கான மரியாதையை யாரும் தர மறக்க மாட்டார்கள்.

புஸ்பா அக்காவின் கேள்விக்கு பாப்புவிடம் பதில்லை. ஏன் தேடுகிறாள் என்பதையே அவள் இப்போதுதான் யோசிக்கிறாள். அதற்குள் புஸ்பா அக்கா பேச தொடங்கி விட்டாள் .

புஸ்பா : பாப்பு, சத்தியமா சொல்றேன். நாங்க எல்லாம் நினைச்சோம் நீ spot out-னு .

பாப்பு, புஸ்பா சொல்வது புரியாமல் விழிக்க.

புஸ்பா : அதான், அடிப்பட்ட அன்னைக்கி அவ்ளோ பயங்கரமா இருந்தே. எல்லாம் நினைச்சோம் உன் கதை முடிஞ்சதுனு. ஆனா, ரேம் தம்பி தான் விடவே இல்லையே. நீ மட்டும் சுயநினைவோட இருந்திருந்தே அவன் அழுதத பார்த்து நீ கண்டிப்பா அழுதிருப்பே. துடிச்சிட்டான் பையன் போ !

புஸ்பா அக்கா கையில் திருநீறு. பாப்புவின் நெற்றியில் வைத்து விட்டாள். இப்போது மீண்டும் தொடர்ந்தாள்.

புஸ்பா : பாப்பு, உங்க ரெண்டு பேருக்கும் என்ன லவ்வா ? வெளிய சொல்ல வேணான்னு தம்பி சொல்லுச்சா…

சிரித்துக் கொண்ட ரகசியமாக கேட்டவளிடம் பாப்புவிடம் பதில் இல்லை.

பாப்பு : எத்தனை நாள் ஆச்சிக்கா எனக்கு அடிபட்டு ?

புஸ்பா : கண் விழிக்க நாலு நாள் ஆச்சி பாப்பு.

பாப்பு : நாலு நாலா… யாருக்கா என்ன பார்த்துகிட்டா ?

அவளின் கன்னத்தை தட்டி சொல்லி சிரித்தார் புஸ்பா.

புஸ்பா : வேறே யாரு கோவக்கார ராசாதான். என்னத்த கண்டு மயங்கனானோ உன்னையே சுத்தி சுத்தி வாரான் போ !

சிரித்துக் கொண்டு புஸ்பா சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப. பாப்பு மீண்டும் தலையை பிடித்துக் கொண்டு நன்றாக யோசித்தாள். அன்றைக்கு அடிபட்டு ரோட்டில் கிடந்தது வரைதான் அவளுக்கு ஞாபகம் வந்தது.

யோசித்து கலைத்தவள், கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தாள். கண்ணயர்ந்தவளுக்கு நடந்ததெல்லாம் கனவாய் ஞாபகத்திற்கு வந்தது.

அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர். accident case ஒன்று வருகிறது என்று தெரியும் ஆனால் அது பாப்பு தான் என்று அங்கிருந்தவர்கள் யாருக்கும் தெரியாது. ரேம் உட்பட.

ஆம்புலன்ஸிலிருந்து stretcher – ரை கீழே இறக்கிய பின்பே மற்றவர்களுக்கு அது பாப்பு என்று அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. 

செய்தி கேட்டு ரேம் பதறியடித்து ஓடி வந்த காட்சி பாப்புவின் ரத்தம் சொட்ட சொட்ட பாதி மூடி திறந்திருந்த கண்களின் பார்வையில் தெரிந்தது.

அவனின் ஓட்டம். அவள் கண்களிலேயே நின்றது. வந்தவன் சறுக்கி விழாத குறைதான். அவனின் குரல். மற்றவர்களுக்காக அவனின் கட்டளையையும் கணீர் என்றது.

ரேம் : operation theater ரெடி பண்ணுங்க ! on call doctors வர சொல்லுங்க ! x – ray mobile பண்ண சொல்லுங்க ! B + blood ரெடி பண்ணுங்க ! faster !

அவனின் அந்த அக்கறை, பதற்றம். ஏன்…

பாப்புவின் stretcher – ரோடு சென்றவன் ; அவளின் கன்னங்களை தட்டி தட்டி,

ரேம் : பாப்பு, பாப்பு, என்ன பாரு பாப்பு ! பாருடி என்ன !

முழுதாய் மயங்கி விழும் முன், பாப்புவின் அந்த கண்கள் அவனைய பார்த்தது. ரத்தத்தால் குழுப்பாட்டபட்டிருந்த பாப்பு ரேம்மின் சட்டை காலரை பிடித்து சொன்ன கடைசி வார்த்தைகள்,

பாப்பு : விட்றாத ரேம்….

கண்களை முழுதாய் மூடி கைகளை வலுவின்றி தொங்கவிட்டாள் பாப்பு.

ரேம் : பாப்பு !

ரோமின் அலறல் மட்டுமே அவளின் காதுகளில் கேட்டது.

பட்டென விழித்தவளுக்கு ஒரே ஆச்சரியம் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. புரிந்துக் கொண்டாள்.

அவள் தெரிந்துக் கொள்ளவும் புரிந்துக் கொள்ளவும் இன்னும் நிறைய ரகசியங்கள் ரேம்மிடம் புதைந்துள்ளது என.

அவனை காண வேண்டும் என அவள் மனம் தவியாய் தவித்தது. காதலிக்க காரணம் தேவையில்லை. பாப்புவிற்கு இப்போது அப்படித்தான் தோன்றியது. 

அவளுக்கும் அவனுக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்மத்து காதல் போல. அவனின் தொடுதல் இவளின் ஏக்கம். அவனின் முத்தம் இவளின் சாபம். அவனின் கோபம் இவளின் வரம்.

அவன் சொல்லாவிட்டாலும் தான் சொல்லிட வேண்டும் என முடிவு செய்தாள். நடக்க கஷ்டமாக இருந்தாலும் முயற்சி செய்து நொண்டி நொண்டி அவனை மருத்துவமனை முழுதும் தேடினாள். அவனைக் காணவில்லை. யாரிடம் கேட்டும் தெரியவில்லை.

சரி வேலையாக வெளியில் சென்றிருப்பான் என்று பாப்புவும் அதன் பிறகு அவனை தேடவில்லை.

உன் முன்னே என் கெத்து நிக்குமா நிக்காதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *