உன் முன்னே என் கெத்து நிக்காதடி
உன் முன்னே என் கெத்து நிக்காதடி ! – 19
பார்த்த மாத்திரத்திலேயே பிரமித்து நிற்கும் நீர்வீழ்ச்சி அது.
எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்று ஊகிக்கவே முடியாத
வேகத்தோடு பாய்ந்து ஓடி கொண்டிருந்தது.
பிரகாஷ் : wow… எவ்ளோ அழகா இருக்கு ! ரொம்ப நாளா
ஆச்சி இந்த மாதிரி waterfall – லாம் பார்த்து, அதுல குளிச்சி ஆட்டம்
போட்டு ! ஒரு நாள் கண்டிப்பா இங்க வரணும் அவனுங்கள
இழுத்துகிட்டு.
பிரகாஷ் இன்னமும் ரீனாவை அவன் கால் மீதுதான் நிற்க வைத்துக் கொண்டிருந்தான். அவளை தாங்கிய படியேதான் அந்த நீர்வீழ்ச்சியை
ரசித்துக் கொண்டிருந்தான்.
ஒய்யாரமாக அவன் கழுத்தில் கைபோட்டு நின்றுக் கொண்டிருந்தவள்
பிரகாஷ் பேசியதைக் கேட்டு உரிமையாக அவள் முகம் கொண்டு
அவன் முகத்தை திருப்பினாள்.
ரீனா : நாம சுத்தி பார்க்க வரல…. இங்கிருந்து தப்பிச்சி போக
வந்துருக்கோம் ! ஞாபகம் இருக்கா இல்லையா ?!
மெதுவாக ஆரம்பித்து கத்த தொடங்கியவளை,
பிரகாஷ் : சரி ! சரி ! வாங்க நம்ப நடையை கட்டுவோம்.
போய் வெளியாகற பாதையே தேடுவோம் !
சொல்லி நகர்ந்தவனை உலுக்கினாள். முறைத்தான் பிரகாஷ்.
பிரகாஷ் : என்னே ?!
ரீனா : நாம வேணும்னா கொஞ்ச நேரம் rest எடுத்துட்டு போவோமா ?
பிரகாஷ் : ஹ்ம்ம்…. இங்கையே இப்படியே உட்க்காந்து rest எடுங்க !
அவளின் இடுப்பிலிருந்து கையை எடுக்க போனவனை
நிறுத்தியவளாய்,
ரீனா : இங்க வேணா… நிறைய கொசு கடிக்குது ! வேறே எங்காச்சும்…
இழுத்தவளை பார்த்தவன் தலையை ஆட்டி புன்னகைத்தான்.
பிரகாஷ் : இப்போ, அங்க போனும்….
நீர்வீழ்ச்சியை கை காண்பித்தான்.
ரீனா : ஹ்ம்ம்ம்….
ரீனாவும் ஆர்வத்தோடு தலையை ஆம் என்று ஆட்டினாள். இருவரும்
நீர்விழ்ச்சி அருகில் செல்ல ஆயோத்தமாயினர். ஒத்தை அடி
பாதையில் இறங்கித்தான் கீழே உள்ள நீர் வீழ்ச்சிக்கு
செல்ல வேண்டிய கட்டாயம் என்பதால் வேறு வழியின்றி
பிரகாஷ் ரீனாவை அவன் காலிலிருந்து கீழே இறக்க வேண்டிய சூழ்நிலை.
தூக்கு சப்பாத்தியை அணிந்துக் கொண்டு ரீனாவாலும் அங்கு
இறங்கிட முடியாத பட்ச்சத்தில்,
பிரகாஷ் : வேற வழியே இல்லிங்க… நான் உங்கள உப்பு மூட்ட தான்
தூக்கியாகணும்.
ரீனா : அத மெதல்லையே தூக்கிர்க்கலாமே ? இப்போ மட்டும் ஏன் ? அப்போ, இதெல்லாம் பிளான் பண்ணி தானே பண்றீங்க ?
பிரகாஷ் : அப்பறம் வேற ? plan – னா , plan – ன்னு ! மூஞ்சிய பாரு !
ரீனா : ஹலோ…. ஒழுங்கா பேசுங்க ! இந்த கழி சட பாஷையெல்லாம்
பேசாதீங்க !
பிரகாஷ் : ஆமாவா ? சரி ! சரி ! நீங்க இப்படியே வியாக்கியானம்
பேசிக்கிட்டு இங்கியே இருங்க ! நான் போறேன் ! வந்தா வாங்க ! இல்லாட்டி போங்க !
பிரகாஷ் அங்கிருந்த நகர ஆரம்பிக்க காட்டின் பூச்சிகளின்
சத்தமும் அதிகரிக்க பயந்த ரீனா பிரகாஷின் கையையே பற்றினாள்.
ரீனா : நானும் வரேன்… இப்படி பாதியில விட்டு போனா எப்படி ?
பிரகாஷ் : ஒரு வழிதான் இருக்கு.
ரீனா : உப்பு மூட்டத்தானே ? எனக்கு ஓகே !
பிரகாஷ் : அது அப்போ !
ரீனா : அப்போ இப்போ ?
பிரகாஷ் :
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கணக்கவில்லையே !
பிரகாஷ் அவளை கைகளில் ஏந்தப் போவதை கிண்டலின் ஊடே பாடலாய் பாடி கைகளால் சைகை செய்தான்.
ரீனா : no way !
பிரகாஷ் : ஹ்ம்ம்… அப்போ சரி ! உங்கள யாராலையும்
காப்பாத்த முடியாது போங்க ! நான் போறேன் ! இங்க வந்து
கொஞ்சம் எட்டி பாருங்க. எப்படி இருக்குன்னு. கரணம் தப்பனா
மரணம் தான் !
ரீனா நின்ற இடத்திலிருந்து புருவம் சுருக்கி கண்ணை உருட்டி கீழே
பார்த்தாள்.
பிரகாஷ் சொன்னது என்னவோ உண்மைதான் வேறு வழியில்லை
என கடவுளின் மேல் பாரத்தை போட்டு அவன் தூக்க பிரகாஷின்
கைகளில் அடங்கிப் போனாள் ரீனா.
உன் முன்னே என் கெத்து நிக்குமா நிக்காதா…..
