9
அதிசயம் ஆனால் உண்மை என விஜய் திகைத்து ரெக்கை விரித்து நிற்கும் போதே.. விளக்கம் தர ஆரம்பித்தாள் ரித்து.. கேட்டு நின்னுட்டு இருந்தது சப்புன்னு படுத்துருச்சு .. eee
ஒரே மீனிங்கில் படிக்குமாறு பக்த கோடிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.. haha
“எனக்கு ஒரு ஆப் லேர்ந்து தினமும் காலையில் செல் திறக்கும் போது
“ஐ லவ் யூ” எனும் வாசகம் ஹார்டின் போட்டு வரும்.. பார்த்தா பிரஷா இருக்கும் .. அதான் உங்களுக்கும் செக் பண்ணி பார்தேன் .. ஒர்க் ஆகுது.. கிரேட்
அப்புறம் புறங்கையில் முத்தம்.. புனிதமானவர்களை இப்படி முத்தமிடுவது வழக்கம்.. என்னை பொறுத்த வரை நீங்க மரியாதைக்கு உரியவர்கள்.. சோ கொடுத்தேன்.. தப்பா நினைக்க கூடாது பார்ட்னர்.. அது பீல் பிரஷ் மந்திரவார்த்தை.. இது புனித முத்தம்.. இதான் விளக்கம்… ”
அடுத்த நொடி..
“ஐ லவ் யூ ரித்து.. ” நேரடியா இவளை பார்த்தே சொல்ல… பட்டென்று மூச்சுவிட மறந்து ரெத்தம் ரங்க ராட்டினமா சுத்த ..கீழ் உதட்டை கடிச்சி.. கவிழ்ந்த வெக்கத்தை மறைத்து.. ரித்து அவ்விடத்திலிருந்து எழ முயல..
பிடிச்சு போட்டு உக்கார வைத்தான்..
“நைட் ஆனா நான் பொய் மட்டுமே சொல்லுவேன்.. இது எப்படி இருக்கு?” ரஜினி போல ஸ்டைலா சொல்லிட்டு தன் ட்ராப்ஸ் முடிச்சுட்டு ஜாலியா இவளை கலாய்க்க…
“போங்க .. போங்க.. உங்க பேச்சு கா..” சிணுங்கினாள் ரித்து.. நிம்மதியும் ஏமாற்றமும் ஒரே நேரத்தில் உணர்ந்து… அதையும் சுவைத்து..
“படுக்கப்போகவா? “இவனிடம் அனுமதி கேட்டு இதயத்தை இளக்கி.. அவன் தலை அசைக்க.. “குட் நைட் பார்ட்னர்.. போய்ட்டா..”
இவர்களின் பேச்சு ஆண்டாண்டு காலம் குடித்தனம் பண்ணும் தம்பதியர்???!!!!
போல இணக்கயாய் இருந்தது அதிசயம்.
VP ????!!!!!! கிண்டல் ஆகாது… புருசமார் பொண்டாட்டிஸ் கிட்டே பேசுறாங்க ன்னு மட்டும் வதந்தி பரப்பாதீங்க .. ரொம்ப தப்பு… eeee
வஜ்ரவேலு தான் வீட்டின் முழு பராமரிப்புக்கு பொறுப்பு.. மிச்ச ரெண்டு மருமகன்களும் மாமனார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார்கள்.. குடும்பத்தில் பிக்கு பிடுங்கு சமாளித்து அனைவரிடமும் பந்தாடப்பட விடப்பட்ட ஜீவராசி அவர்..
ராதிகாவின் ஒன்று விட்ட தம்பி என்பதால்
வசதியா போச்சு.. திங்க தூங்க.. பெண்கள் சொல்லும் வேலையை செய்ய .. மிச்ச நேரமெல்லாம் ராஜி .. ராஜி பச்சைக்கிளி முத்துச்சரம் ன்னு வெட்கமே இல்லாமல் பின்னே சுற்றுவார்..
அதனால் தான் பணியாளர்கள் அவரை சுத்தலில் விட்டு குளிர் காய்ந்தர்கள்.. ரித்து மேலே கொஞ்சம் சுத்தமா துடைக்கும் படி கேட்க… அவர்கள் இவளை அலட்சியமா பார்த்துட்டு செல்ல..
நாமே விருந்தாளி… எதுக்கு அவங்ககிட்ட வேலை வாங்கிட்டு… என்று உண்ணும் உணவுக்கு வேலை பார்ப்போம் என்று.. அவள் மாடிப்பகுதி அவர்கள் அறை கண்ணாடியா மினுங்கியது… கைக் குழந்தை இருக்கு என்று யாரும் சொல்ல முடியாது..
விஜய் வரும் வரை வாசல் திறந்தே இருக்கும்.. யார் வேணும்னாலும் எப்போ வேண்டுமானாலும் வரலாம் என்பதாய்.. ஆதனால் கீழேயே சுற்றும் குட்டிகள் பொழுது போக்குக்கு ரேச்சலுக்காய் மேலேயே கிடந்தனர்..
கத்தி கூச்சல் போட்டால் இடை இடையில் ரித்துவும் கத்திட்டு நான் இல்ல முகத்தை மூடி வெக்கம் கொள்வது..
குட்டிஸ் க்கு மிக மகிழ்வு சம்பவம்..
ஆடாதே பாடாதே சொல்லவே மாட்டாள்.. அவர்களின் குழந்தை தன்மையை ரசிப்பாள்…
ஹோம் ஒர்க் எல்லோரும் ஒன்னா எழுத மேலே வந்தால் படிப்பைப் பற்றி ஆரோக்கிய உரையாடல்கள், அவரவர் ஆசிரியர் ஸ்கூல் அனுபவங்கள்.. குறும்புகள்… அவர்களுக்குள்ளாகவே நடக்கும் போதில் வார்த்தைகள் வித்தியாசம் வந்தால் மட்டும் இது தவறு .. யாவரையும் மரியாதை கொடுத்து பேசணும் பழகனும்.. அது அவர்களுக்கானது அல்ல .. உனக்கே திரும்ப வரும் .. சரியா? என்றால் எட்டும் தலை ஆட்டும்…
அவங்கவங்க வேலை சரியா செஞ்சுட்டா.. பெட் டயம் ஸ்டோரிஸ் டெய்லி உண்டு… வரவங்க இங்க படுக்க வரலாம்… இன்னிக்கு தங்கக்கை மாயாவி கதை… ஆசை காட்ட… கதையா? மாமனை போலவே மருமக்களும் ஜொள்ளு…
அன்றிலிருந்து 8 பேர் படுக்கும் அளவிலான விஜய் கட்டில் அதன் முழு பண்பாடு பெற்றது… கட்டிலில் 9 பேர் அவனோடு சேர்த்து….. ட்ராப்ஸ் இனி எப்படி?.. eeee
விஜயின் அப்பா செல்வராஜ் வந்த பிறகு வீடு ஏதோ இருள் நிறைந்த மாதிரி.. பெரியவர்கள் அவரவர் ரூமிலேயே இருந்தனர்..
அவரிடம் இவளை அறிமுகம் பண்ணிட்டு .. விஜய் பேச, அவர் பார்வையின் தீவிரம் தாங்காது.. தனியா கழன்றுட்டா ரித்து.. ஆகிருதி ஆனவர் பேரரசனின் கம்பீரம் தெரிந்தது… ஆனா ஏன்? ராதிகாம்மா இப்படி தள்ளி வச்சிங்..
அப்படி புருஷன் கூட பேசமா பழகாம ஒரே வீட்டில் எப்படி சாத்தியம்? ஆச்சரியப்பட்டாள்… இதோ விஜய் இடம் இவளுக்கு மரியாதை கலந்த பிரியம் உண்டு… தள்ளியே நின்றாலும் எவ்ளோ ரெண்டு பேரும் பேசுறோம்… இவர்கள் உரிமைகாரர்கள் y?
அதானே.. இருக்கவே முடியாது ..
சோறு போடு.. தண்ணி தா.. ரெண்டு கண்டிப்பா உண்டு… eeee
ஒவ்வொருவரையும் பற்றி நினைத்து ஏன்? ஏன்? ன்னு தின்க் பண்ணி பண்ணி நாளுக்கு நாள் இந்த வீட்டோடு உறவு நிலையில் உள்ளே உள்ளே போவதாய் பீல் வர கவலைப்பட்டாள்..
தானும் எட்டி நிக்கனும் நினைச்சா முடில…
முகம் முறித்தோ ஒட்டாமல் இருப்பதோ வரல…இக்குணத்தாலே SSR பேலஸ் மனிதர்களோடு நல்லெண்ண தூதராக கலந்துவிட்டாள் ரித்து தன் மைனா குஞ்சோடு..
ரேச்சலுக்குத்தான் அங்கு பான்ஸ் ஜாஸ்தி. ரித்துவின் புதுநிறமே அவளும்.. அதே பெரிய அழகிய கண்ணுக… பெண்களுக்கு கண்ணு பெருசா இருந்தா பேரழகு.. கண் பட வைக்கும்..
இந்த ரெண்டு கண்ணம்மாக்களும் கண்ணால கவர்ந்தனர் பழகும் யாவரையும் காந்தமாய்…
ரேச்சுக்கு இப்போ தாயுடன் விஜய்யையும்
அடையாளம் தெரிஞ்சது.. சிரிக்க ஆரம்பித்தாள்.. கூப்பிடவும் கத்துகிச்சு.. செய்கையில் உடல் மொழி பரபரப்பில் ..
ரித்துவும் விஜய்யும்
இவர்கள் இப்படி ஆண்டாண்டு காலம் குடித்தனம் பண்ணும் தம்பதியர்?????!!!!!!!
போல அவ்வீட்டில் இருக்க ரித்து வந்த நாளிலிருந்து் சரியா ராதிகா சொன்ன தேதியில் … விஜய் முட்டு போட்ட
அத்தனை தடைகளையும் ஏற்று வெற்றிகரமாய் வீட்டிலேயே சொந்தகார்கள்… அக்கம் பக்கம் நெருங்கிய குடும்ப நண்பர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி சிறப்பாக நடைபெற்றது…
சீதாம்மா _ சிதம்பரம் தம்பதியர் தான் முக்கியமா வந்திருந்தார்கள்.. ராதிகா நேரிலேயே போய் அழைத்து இருந்தார் பல வருடங்கள் கழித்து…
எப்பவும் ஓர் ஒளியில் இருக்கும் ரித்து முகம் அன்று களையிழந்து உம்முன்னு இருந்தாள்.. சடங்குகள் பிடிக்கவே இல்ல..
இவரை நம்பி தானே நாம் இருந்தோம் ஏன் இப்படி பண்ணினார்? வருத்தப்பட்டாள்..
விஜய்க்கோ முகம் பூரிப்பில்.. கற்கண்டை
வாய்க்குள் அதக்கியவன் போன்ற இனிமை உணர்வு.. அவன் நேசிக்கும் உறவினர்கள்.. சுற்றம் நட்பு..
இதோ கல்யாணம் என்ற மங்கள நிகழ்வு அனைவரையும் பிணைக்க போலி ன்னாலும் பிடிச்சமானதே.. ரித்து கூட இருந்தா போதும்.. என்னென்னவோ மனம் அலை பாய்ந்தது..
வஜ்ர வேலு, எக்கா முதலிரவு அறை ரெடி பண்ணவா? கேட்டு ராதிகாவிடம் முறைப்பு வாங்கினார்..
உங்களுக்கு அறிவே கிடையாதா? ஏற்கனவே எல்லாம் ஆச்சு.. அவ பிள்ளைக்காரி எப்படி? தனியா கூப்பிட்டு ராஜி திட்ட…
நாம அப்படி இல்லையே? பிள்ள இருந்தா ரூம் அலங்காரம் பண்ணக்கூடாதா? கேட்டு
ஒரு கிள்ளு வாங்கி… பூ வீணா போவும் நம்ம ரூமில் அலங்காரம் பண்ணிடுறேன்..
கல்யாண ட்ரஸில் வா ராஜிமா..
ராஜி.. என்னவோ வேண்டாதவள் போலவே முறைத்து நடிக்க..
என் பட்டு தங்கம் .. இந்த மாமாக்கு கிடைச்ச லட்டுடா நீ.. யார்கிட்டே கேட்பேன் இதை.. நீதாண்டி தரணும்… உருகி வழிஞ்சி கன்னம் கிள்ள ..
சரி.. பால் லாம் பக்காவா இருக்கணும்.. மாமா.. பிள்ளைகளை அக்கா ரூமில் விட ஏற்பாடு பண்ணுறேன்.. ராஜி கேடி யும் கூட்டு திட்டம்.. எதுக்கு ஒர்த் யோ இல்லையோ இதில் வேலுவின் பெர்பார்மென்ஸ் அட்டகாசமா இருக்கும்..
அடை மொழிகளில் கெஞ்சி கொஞ்சி கால் அமுக்கி கை அமுக்கி.. தடவி மனைவியை
மகிழ்வித்து தானும் பெற்று தூங்கிட்டு.. முழிப்பு வரும் போதெல்லாம் உண்டு..
ஒரு வேளை அவருக்கு தூக்க மாத்திரையோ? Eee
இங்கு தம்பதியராய் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளபட்டவர்கள்…
இரவின் தனிமையில் ..
எப்பவும் விஜய்யிடம் நன்றாக பேசுபவள்.. இன்று யாரோ போல… பிள்ளையை நெஞ்சில் போட்டு உச்சி முடி தடவி.. அதன் அசைவுகளை வெறித்து பார்த்து கண்ணீர் வழிய தன் படுக்கையில் கிடக்க..
மழலையர் அறை போல இருக்கும் தன்னறையில் இன்ற யாரும் வராததால்
கையில் ட்ராப்ஸ் யோடு நடமாடியவன் இன்று டீவி போடவில்லை ..
பார்ட்னர் யை எட்டி பார்த்து…
ரித்து வென அழைக்க .. அமைதியான அறையில் அவள் பேர் மட்டும் நிறய..
“ம்ம்ம்…” கர கரத்த குரலில்.. கண்ணீர் இன்னும் முட்டியது அவன் குரலில் கேட்டு..
“என் மேல் கோபமா?”
தொண்டை செருமியவள்…
“இல்ல என் மேல்..”
“இப்படி யாரோ போல பேசாதே பார்ட்னர்.. நல்லாவே இல்லை.. நான் நானா இருப்பது உன் கிட்டே மட்டும்தான் ”
அவள் கிட்டேயே தரையில் அமர…
ஏன் இப்படி? அவள் குட்டி பெட்டை விட்டு எழும்பி.. அதில் இருக்க சொல்விட்டு..
“நீங்க நைட் பேசுவதெல்லாம் பொய் பார்ட்னர் .. சும்மா இருங்க..” சுள்ளுங்க
“ஹிந்து சடங்கு தாலிலாம் பிடிக்கலியா?”
“கல்யாணமே பிடிக்கல.. எதுக்கு? ” முகம் சுளித்து உச்சு கொட்ட…
“உன் மரியாதைக்கு தான் ரித்து… இந்த வீட்டில் இருந்து நீ வெளியில் போகும் போது என்னுடன் அறையில் ரெண்டு மாசம் இருந்ததின் தப்பர்த்தம் வராமல் இருக்கத்தான்.. அதான் பல யோசிச்சு விட்டுட்டேன் அம்மா போக்குக்கே.. என் பேச்சை இந்த விஷயத்தில் தான் அவங்க கேட்டுருக்காங்க நான் இன்னிக்கு ரொம்ப ஹாப்பி… ரித்து…
எனக்கும் நன்மை இருக்கு…
கல்யாணம் ஏன் பண்ணிக்கல? கேள்வி போய் பொண்டாட்டி இருந்தா கோச்சுக்கிட்டு போய்ட்டா தான் ஹிஸ்ட்ரி
குழந்தை கூட இருக்கு என்பது போனஸ்ல..”
“ச்சு.. எப்படியோ போங்கோ.. நிறய செலவு.. ஏகப்பட்ட சேலை நகைகள் லாம் எடுத்து தந்திருக்காங்க.. அவ்ளோ வேணாம்.. அளவா வசிக்கிறேன்.. அதுக்கு பாப்பாக்கு வாங்குவது தினமும் எனக்கு உணவுக்கு ன்னு கணக்கு எழுதிட்டே இருக்கேன்.. அத நீங்க வாங்கினா தான் குற்றவுணர்ச்சி இல்லாமல் உங்க வீட்டில் இருக்க முடியும்.. இல்லாட்டி..”
ம்ம்ம் .. “முதல் தர பெண்” விஜய் மதிப்பீட்டை மகிமை செய்தாள் ரித்து..
“இல்லாட்டி… சொல்லாமல் போயிருவியா?” ரித்துவை ஊடுருவி பார்த்து.. கணவன்…
“போலீஸ்க்கு போவேன்.. இந்த ant டாக்டர் என்னை பிடிச்சு வச்சுருக்கார்.. விடச்சொல்ல சொல்லுங்க.. முடில இவர் அன்பு தொல்லை ன்னு கம்ளைன்ட் கொடுப்பேன்..”
Ant டாக்டரா?.. ஹாஹா.. ன்னு வாய்விட்டு சிரிச்சு…ரசிச்சு
“ஒ ஓ.. நீங்க அவ்ளோ பெரிய ஆளோ?”
“எஸ்..” படுத்திருக்கும் அவன் முன்
குத்துகாலிட்டு அமர்ந்து பதிலுக்கு பதில் பேசியவள் இன்று ரொம்ப ஈர்த்தாள்..
தாலி பற்றி அவள் அறியாது பேச… இவனின் ரத்த சொந்தங்கள் முன் என் மனைவி ன்னு பிரகடன படுத்தி இருக்கான் பிடிச்சி போய்தான்.. லட்சம் பெண்களை கடந்தவன் இவன்.. எவளும் இப்படி இவனை வேட்டையாடல. .
என்ன பெண்கள்? எதுக்கு எல்லாம் பின்னாடி அலையறதும்.. கவிதைகள் எழுதி தள்ளுவதும்… பிடிச்ச பொண்ணு போட்டோ பார்த்து கிறங்குவதும்.. கடன் வாங்கியாச்சும் செலவு பண்ணுவதும்… கிடைக்கலேன்னா கை அறுத்து அழுவதும் .. சோகம் முத்தினா தற்கொலை பண்ணிப்பதும் முட்டாள்கள் அலட்சியப்படுத்தினான்.. ஆனால் இப்போ அவனுக்கே இதெல்லாம் வருது.. பயந்தான் டீன் காதலனாய்… முடில.. வெளில தெரிஞ்சிடுமோ?
முத்தமிட ஏற்ற இடம் தேடி
அலைவதைவிட கிடைக்கும்
இடத்திலெல்லாம் முத்தமிடுபவன் புத்திசாலி… eee
கண்ட மேனிக்கு விஜய்க்கு கவிதை வந்தது…
“இது கவிதையா? ” U
“இல்லையா ? ” EEee
Ant டாக்டர் ப்பா இப்படித்தான் வரும் கூட குறைச்சு இருந்தா மன்னிச்சி…
கண்மணி முதலில்
புனித முத்தம் மட்டும்
போட்டு தொடங்கி விடு
அசுர முத்தங்கள் இட்டு
தொடர்கிறேன் மோதலை..
தேவனாகிய நான்…
இது ஓகே வா? Eee
தேவலை.. ant டாக்டர் ரொம்ப கடிக்கிறார்… ஒழுக்கம் இல்லை… haha
மனைவி ரித்து… பொட்டு வச்சுருந்தா.. பூவும் சூடி இருந்தா.. மணத்துக்கிடந்தாள்.. இருவருக்கும் உறவு புனித நிலையில் அடுத்த கோடு தொடாது கிடக்க…
நல்ல பெண் கொடுமை பண்ணுறா… முடில… நீயே தொடேன் ஆணுக்கு ஆசை வந்தது…
“ஹாங்.. கேக்க மறந்துட்டேன்… உங்க அண்ணன் மட்டும்தான் வந்தாங்க… பேமிலி இல்லையா?”
“இருக்கு.. எங்க அண்ணி ஒரு மாறி.. தொடர்பு இல்லை”
“அப்ப நான் கூட கொடுமைக்காரியா இருந்தா பிடிக்காதா?”
“சும்மா இரு ரித்து … நீ வேற..” எரிச்சலானான்.. விஜய்
கணவன் தான் விஜ்ஜு.. கோவப்பட ஆரம்பிச்சுட்டான்.. eee
“உங்கண்ணன் முகம் வாடி இருக்காரே.. அவருக்காக அவர் குடும்பத்தை நேசிக்க மாட்டீங்களா?”
“இதோ பாரு அன்பு அன்பு.. நீ படிக்கிற பைபிள் சொல்லுறதை ஒப்பிக்காதே .. எங்களுக்கு அவங்க வேணும் எங்குற மாதிரி அவங்களும் வேணும் நினைக்கா
ணும் . புரிதா.. ஆமாம் நீ ஏன் எங்க குடும்ப விஷயத்தில் தலையிடுற.. ”
சுருக்கென கேட்க… உண்மை தைத்தது…
சரிதான்… தள்ளி நிறுத்துற பார்ட்னர்…
கண்ணில் சட்டுன்னு நீர் படலம்.. உதடு கடிச்சி “நான் உங்க பொண்டாட்டி.. கேட்பேன் பதில் சொல்லித்தான் ஆகணும் அத்தான்.. ஓகே…”
பதிலாய் விடப்பட்ட அம்புகளில் ரெண்டு அவனை குத்திருச்சு செம்மையா.. ஒன்னு பொண்டாட்டி eee ரெண்டு அத்தான்.. இன்ப வலியில் துடித்தான்… eee
VP கடைசி வேர்ட்ஸ் முடில.. ஓவர் … கண்ண மூடிட்டேன்.. U
ஒன்னுமே செய்யல எதுக்குயா நீ மூடுற.. ஓவர்… எனக்கு முடில உன் சேட்டை.. eee
“சரி பொண்டாட்டி யாரை வேணும்னாலும் திட்டிக்கோ…” eee
லைசென்ஸ் டூ ஸ்கோல்டு eee
“பார்ட்னர் உங்க வேலு மாமா இருக்காரே…”
“அத்தான் சொல்லு பார்ட்னர் .. நல்லா இருக்கு… கொஞ்சம் நெத்தி கிட்டே அமுக்கேன் தலை வலிக்குது..”
சும்மா சும்மா..
தொட பயம் அதான் இந்த உபாயம் விஜய்
“உங்க கிட் ல மாத்திரை வச்சுருக்கீங்களே”
“ம்ம்ம்.. மடி வேணும்?”
“புரில..”
“படுக்க மடி வேணும்…”
கண்ணு பார்த்தாள் .. அது ஏதோ யாசித்தது
“வேணுமா?” கூர்மையா விஜயை பார்த்து…
“என்ன வேணும்? ”
ரித்துவின் நேரடி கேள்வி.. விஜய் க்கு… புரில
“அது”
“எது?”
“இப்ப மடி வேணும் கேக்குற விஷயம்”
எஸ்.. எஸ் எஸ்.. எஸ்.. ஒவொரு தடவை எஸ் சொல்லும் போதும் ரெத்தம் குதித்தது… கொதித்தது ..
