சாயம் 4

This entry is part 3 of 9 in the series சாயம்

சாயம்

சாயம் 2

சாயம் 2

சாயம் 3

சாயம் 3

சாயம் 4

சாயம் 4

சாயம் 5

சாயம் 5

சாயம் 6

சாயம் 6

சாயம் 7

சாயம் 7

சாயம் 8

சாயம் 8

சாயம் 9

சாயம் 9

சாயம் 10

சாயம் 10

4

இதான் எங்க வீடு பார்த்துக்கோ பார்ட்னர்.. காரில் முன் கேட் தாண்டும் போதே தன் வீட்டு முகப்பை விஜய் காட்ட..

ஏற்கனவே அவன் உடம்பே செழிப்பை காட்டும் … வீடும் அப்படி இருக்காதா என்ன?.. அதனால் வியக்கல ரித்து.. காட்டியதுக்காக ஓர் பார்வை எட்டி பார்த்ததோடு சரி..

மனசு தான் இஷ்டத்துக்கு அலை பாய்ந்து கொண்டிருந்தது… சொல்ல முடியா நிறய பாரங்கள் அவளோடுது சேர்த்து இப்ப இவனுதும்.. இம்சை கொடுத்தான் ரொம்ப..

விஜய் தன் கையில் இவள் பொறுப்பை எடுத்தபின் இவளுக்கும் அவனுக்கும் இடையே தொடர்பு இழையாய் இருந்த நன்றி என்ற ஒத்தை சங்கிலி கொண்டு இவளை சீதாம்மா வீட்டிலேயே பிடிச்சுப்போட.. இவளுக்கோ நடை முறையில் நிரம்ப சங்கடம்.. சுதந்திரம் இல்லை.. எல்லாத்திலேயும் ஓர் தயக்கம்.. கூச்சம்.. அசௌகரியம்.. நலலவ ல்ல அந்த போபியா .. eee

விஜய்யிடமும் மலைப்பு லாம் மூணு நாளைக்குத்தான்.. அதற்கப்பறம் அவனிடம் ஊருக்கு போவதை பற்றி பேச ஆரம்பித்தால் இருவர் பேச்சும் முட்டிக்கும்… சண்டை தான் போட்டார்கள்.. பார்க்காமலேயே.. செல்லுலதான் eee

ஆனால் இருவரும் மரியாதை எல்லையில் அத்து மீறவில்லை..

அவன் கோபப்படட்டும்.. வெளில போ.. என்று எரிச்சலில் சொல்ல மாட்டானா? வேணும்னே கூட வாய் கொடுத்து கிட்னி பிடுங்கி பார்த்தாள் ரித்து.. அவன் நேர்மையாவே இருந்ததால் இவள் நன்மை ஒன்றே குறியா நிலையா நின்னுட்டான்..

இவளை போக விடாது தடை கல்லாய் விஜய்.. வசமா சிக்கிட்டா.. ரித்து அவன் உள்ளங்கையில்…

இருவருக்கும் தெரியவில்லை.. சண்டை உறவை வேகமா வளர்க்கும் காரணி என்று… உறவுக்குள் உள்ளே உள்ளே இழுக்கப்படுவது அறியாமல்.. அவளின் போனுக்கு டீன் பையன் போல காத்திருக்கக்கூட செஞ்சான் விஜய்…

சண்டைகள் பற்றிய ஓர் அதி முக்கிய.. eee உலகத்தில் யாரும் நோக்காத கோணத்தில் ரகசிய வெட்டி மட்டி ஆய்வு..

ப்ளீஸ் நோ லீக்..

1.முக்கியமா சண்டை போட ரெண்டு சோர்ஸ் வேணும்.. நான் _ நீ

2. வித விதமான கருத்து மோதல் ஒவ்வொரு சண்டைக்கும் அவசியம்..
ஒரு ஸ்வாரஸ்யத்துக்கு சொல்றேன்.. நீங்க லெஜ்ஜென்ட் என்றால் ஒன்னே போதும்.. வித விதமா கிழிச்சு தோரணமா தொங்க போட்டு சண்டை போடலாம்…

வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நீதி நேர்மை உண்மை தர்மக்கோடுகள் ஜீப்ரா கோடுகள் மாறி தனித்தனியா தெரியணும்.. அதான் மேட்டர்… போதும்.. நீங்க தான் மாஸ்.. பாஸ்

3. கணவன் மனைவிக்கு விதி விலக்கு உண்டு அவர்களுக்கு சத்தான காரணம் தேவையில்லை சண்டைக்கு… இஷ்டப்படும் போதெல்லாம் இருவரின் புகுந்த வீட்டு ஜனங்கள் பற்றி ஒரு நூல் நுனியை தொட்டால் போதும் சண்டை பீக் ல பிச்சுக்கும்… சுத்திக்கும்.. haha

4. இன்னொன்னு எதிரி சம பலமாக இருக்கணும்.. இல்லாட்டி உங்க சண்டை செத்த பாம்பை அடிச்ச மாறி சப் புன்னு இருக்கும்.. அதனால் வாயை திறக்கும் முன் ஒர்த் லெவல் செக்கிங் அவசியம்…

5. சண்டைக்கு திமிர் கொழுப்பு மதர்ப்பு உடம்பில் ஏறனும். சோ அது கூடிய நான் வெஜ் , கார சார உப்பு உரப்பு உணவுகள் மட்டுமே சாப்பிடணும்… எக்காரணம் கொண்டும் தயிர் சாதம் .. பருப்பு கூடாது..அது போலவே நமத்து போயிருவோம்… உணவில் கவனம் அவசியம்…

6. வீண் சண்டை என்று எடுத்த எடுப்பில் உங்கள் மனம் வார்ன் பண்ணால் .. பின் வாங்கிடனும்… அதுக்கு பேஸ் எதிராளியின் பொறாமையா கூட இருக்கலாம்…

தொட்டால் தொடர்ந்துகிட்டே இருக்கு.. அதனால் ஆராய்ச்சி முடிவு மட்டும் சொல்லிடுறேன்…

சண்டையின் எதிர் விளைவு
வீரம் என்று கொண்டாடப்பட்டாலும்…

பக்க விளைவு

அடிதடி வலிகள் காயங்கள் ஹாஸ்பி்டல்
வீண்செலவு .

இந்த ஆங்கிரி பேர்ட்ஸ்யை சமூகம், குடும்பம் ஒதுக்கும்..

ரத்தம், நரம்பு நோய்கள் பரிசாக கிடைக்கும்

சத்தமின்றி உயிர் வாழ தயிர் சாதமே சிறந்தது .. தீர்ப்பு… eee

ரித்துவின் ஏகிறலுக்கு முக்கிய காரணம்.. விஜய் வீட்டு ஊழல்லாம் பெரியம்மா சொல்லியாச்சு.. eee

பூனை வீட்டுக்கு வந்தாலும் ஒரு கிளாஸ் பால் கொடுத்து அனுப்பும் வள்ளல் விஜய் கிருஷ்ணா.. 31 வயசு கல்யாணம் வேணவே வேணாம் என்று உறுதியில் இரும்பவன். காரணம் லாம் சொல்லவே மாட்டான்.. அவங்க குடும்பமே இரும்புதிரை கொண்ட சைனா போல இறுக்கி மூடி செய்திகள் வெளியில் ஏதும் தெரியாவண்ணம் எந்த உறவுக்காரர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.. கல்யாணம் ன்னா வெளியாட்களுக்கு முதலில் அழைப்பு .. உறவுக்காரங்களுக்கு வேலை ஆட்களிடம் கொடுத்துவிடுவார்கள்.. அது வந்துராதே என்பதாய் தான் இருக்கும்… விஜய் அப்பா சீதாதேவியின் உடன் பிறந்த அண்ணன் தான்..

விஜய் ஒட்டும் அளவுக்கு கூட செல்வராஜ் ஒட்டுவதில்லை.. அபரிதமான செல்வ செழிப்பும்கூட இந்த உறவு இடைவெளிக்கு காரணமா இருக்கும்..

சீதாவின் கணிப்பு… ஆயிரம் உள் நாட்டு ஊழல்கள் இருந்தாலும் அத்த என்று வார இறுதியில் தேடி வந்து இவர்களோடு பொழுதை கழிக்கும் விஜய் குணம் கசப்புக்களை போக்கும் மருந்து…

இவர்களின் சண்டையில்… eee

அப்பக்கம் அவன்…

பல்லை கடித்து
“பிள்ளய பாரு” பாய்வான்

இப்பக்கம் இவள் …

“என் பிள்ள எனக்கு பார்த்துக்கத் தெரியாதா?” சீறுவாள்

“போயா” சொல்லமாட்டாள்.. ஆனால் பேச்சின் முரட்டுத்தனம் சொல்லிரும்..

யாராச்சும் இடையில் ஒட்டு கேட்டால்.. பிரிந்த கணவன் மனைவியின் பேச்சு என்றே எண்ணிக்கொள்வார்கள்..
அப்படி ஒரு டோனில் மோதல் eee

சூடு நீருக்கு பயந்து எண்ணை சட்டிக்குள் விழுந்த கதையா…

“பயமா இருக்கு சார்.. இப்படியே கூட பெரியம்மா வீட்டுக்கு போயிரலாம்… எவ்ளோ நாள்ன்னாலும் இருந்துகிறேன்… இனி உங்க கிட்ட ஊருக்கு போறேன் சொல்ல மாட்டேன.. ப்ளீஸ்..” இந்தம்மா கடைசியா ஒருமுறை கெஞ்சி பார்க்க…

சார் ன்னு கூப்பிடக்கூடாது சொல்லி இருக்கேன் ல.. தனியா பார்ட்னர் சொல்லணும் . பொதுவில் விஜ்ஜு கூப்பிடனும்.. இவள் கேட்டது என்ன? அவன் சொல்வது என்ன? ….

எப்பப்பாரு இப்படித்தான்… போயா பெருசு.. இவளுக்கு வயசு 21 மட்டுமே.. 10 வயது வித்தியாசம்…

சரிங்க பார்ட்னர் விஜூ.. முறைச்சு சொல்ல.. முகபூச்சு ஏதும் இல்லாத வழ வழ மதிமுகம்.. அதில் முறைத்ததால் முடிச்சிடும் புருவம்.. தனி சோபையை தர..

இவள் ஒரு மாதிரி அழகு.. இப்ப தான் விஜய் கண்கள் முதன் முதலா உற்று பார்த்தது.. வேலியில்லா வெண்ணிலா.. வாய் முணுமுணுத்தது.. பொடி செயின் கழுத்து பார்த்து… ம்ம்ம்

வீட்டின் அகன்ற.. வேலைப்பாடுகள் கொண்ட தலைவாசல் முன் தம்பதியா நிக்கும் போது.. அடிவயிற்றில் நிறய பந்துகள் ஓடி சப்தம் காதுவரை கேட்டது… டிரம்ஸ் ஒலிப்பது போல..

வலிய கைகள் பயத்தில் விஜயின் கையை பிடிக்க.. அம்சமான காட்சி

யாரேனும் அக்காட்சியை போட்டோ எடுத்து இருந்தால் தெரியும்.. இணையின் இயைபு..

திறந்திருக்கும் கதவுகள் வழி இவளை அழைத்து போனான்.. அம்மா.. அம்மா.. குரல் கொடுத்துட்டே…

நடுவில் படிக்கட்டு போட்டு கட்டியிருந்த அவ்வீட்டின் சுற்றி இருந்த அறைகளிலிருந்து
மனித தலைகள் எட்டி பார்க்க…

பயத்தில் முகமே கண்ணாய் இருக்கும் கண்ணம்மாவின் கண்கள் தன் விட்டங்களை ஆரங்களாய் விரிக்க.. சிரிப்பு வந்தது விஜய்க்கு..

முதலில் வந்த ராஜி அக்காவிடம்..

அக்கா இதுதான் என் மனைவி ரித்வியா கிறிஸ்டியன்.. இது பொண்ணு பேர் ரேச்சல்.. அறிமுகப்படுத்தினான்..

அந்தக்கா அதிர்ச்சி ஆக.. ரித்து முகம் உம் ன்னு… 60 நாள் ஒப்பந்தம் தான் இருவரும் பேசி போட்டாச்சே.. இப்போ குட்டிக்கு 40 நாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *