5
“எதுக்கு இப்படி அதிர்ச்சி ஆகுற ராஜி..
அம்மா தான் கூட்டிட்டு வரச்சொன்னாங்க..”
நக்கலாய்… விஜய்
“இருக்காது நீ பொய்தானே சொல்லுற தம்பி”
“இல்ல உண்மைக்கா பிள்ளை இருக்கு பாரு” இப்பவும் விளையாட்டு இலகு முகம்..
“போடா உன் கிட்டே பேசி ஜெயிக்க முடியாது..”
பின் வந்த குடும்ப உறுப்பினர்களை யார் யார் நிக்கிறாங்க ன்னு ராஜி பார்க்க ..
அக் குடும்பத்தின் சர்வாதிகாரி முதுகெலும்பு ராதிகா செல்வராஜ் ..
முகத்தில் ஈயாடாது நின்றிருந்தார்..
அம்மா.. என்று அதிர்ந்து அழைத்த ராஜியை பேசாதே என்பது போல கை சைகை காட்டி..
ரித்துவை புல் சிடி ஸ்கேன் எடுக்க.. அம்மம்மா .. எலும்பு வரை சில்லெங்க… வீரியம் தாளாது குழந்தையோடு விஜய் முதுகில் பம்ம…
“முழுக்க நனைஞ்சுட்ட எதுக்கு முக்காடு.. முன்னாடி வாம்மா..” கணீர் குரல் தெளிவான அழுத்தமான வார்த்தை பிரயோயகம்..
இப்படி ஓர் பெண்மணியை ரித்து வாழ்நாளில் சந்திக்கவில்லை.. செம்ம கெத்து.. அவர் மாஜி அழகி என்பதை வெள்ளை முடிகள் தாண்டி அறிய முடிய… விளங்கிக்கொண்டாள் ரித்து..
முன்னாடி பள்ளி மாணவி போல வந்து நின்னு யாரையும் பாராது கண்ணை தரையில் வைத்து நிக்க…
“எப்படி?” புருவம் உயர்த்தி
எப்படி? புரியல.. அவர் கேள்வி இவளுக்கு.. மக்காய் விஜயை நோக்க
“லவ்” என்றான் அவன். முகம் கொள்ளா சிரிப்போடு.. பொய் சொன்னா சிரிப்பு வரும்.. அதுவும் லவ் பற்றி தெரியாதவங்க
லவ் வேர்ட் யூஸ் பண்ணும் போது சிரிப்பு இப்படித்தான் பிச்சுக்கும்..
ஆ… ரித்து..
இது ஒப்பந்தத்தில் சொல்லவே இல்லை.. விஜய் ஒரு பிராடு பார்ட்னர்..
“எப்படி குழந்தை?”
“சென்னைக்கு அடிக்கடி போவேன்ல அப்ப ரித்துவை பார்த்தேன்.
பிடிச்சது.. லவ் .. அவங்க பேமிலுக்கு தெரிஞ்சி கல்யாணமும் பண்ணிட்டு அவங்க வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன்.. இத்தனை நாள் இங்கு வாழ வரமாட்டேன் சென்னைக்கு வாங்க என்றே சொல்லிட்டு இருந்தா.. பிள்ளை பிறந்ததும் வந்தே ஆகணும் ன்னு கூட்டிட்டு வந்தேன்.. அதுவும் ஒன்னு ரெண்டு மாசம் இரு பிடிக்கலேன்னா சென்னைக்கே நான் வந்துடுறேன்… வாக்கு கொடுத்திருக்கேன்… நீங்க இனி வச்சுருக்கிறத பொறுத்து தான் அவ இருப்பா..”
அடப்பாவி.. என்னா லாஜிக் ஆன கதை.. இவளே ஹிஸ்ட்ரி ஸ்டுடெண்ட் .. ஒரு கதை படிச்சா அதுக்கு மேலே கற்பனை ரெக்கைய தட்டிவிட்டு மேலே மேலே அப்டியே பற பற ன்னு பறப்பவள்..
அவளையும் விட கெட்டிக்காரனை பார்த்து அசந்து.. தன்னை பற்றித்தான் விசாரணை ஓடிட்டு இருக்கு ன்னு கொஞ்சம் கூட உஷார் இல்லாது வாய் பார்த்துட்டு இருந்தா… eee
அடுத்து அவன் அம்மா என்ன சொல்லுவார்? ன்னு
“நீ இப்படி ஒழுக்க கோட்டை தாண்டுவ ன்னு நம்ப முடில விஜய்..”
முகம் இறுகி ராதிகா வருத்தக்குரலில்..
“சரி இப்பத்தான் எல்லாம் தாண்டுவேன் தெரிதுல்ல.. விடுங்க.. எங்க ரூமுக்கு போகணும் .. வா.. ரித்து..”
“இரு ரித்து.. எங்கே தாலி? ”
திரும்ப தவளை முழி.. ரித்து
“ரிஜிஸ்டர் மட்டும் பண்ணி மோதிரம் மாத்தினோம்மா.. அடடடா நானே இவ என் மனைவி சொல்லுறேன் ஆயிரம் கேள்வி கேட்டுட்டு…” ஒரு அதட்டு போட்டுட்டு..
வீட்டு உதவியாளரிடம்..
“கவுரி, போய் கார்ல கொஞ்சம் திங்ஸ் இருக்கு என் ரூமுக்கு எடுத்துட்டு வாங்க ..” என்று மாடியேற….
“இரு விஜய்.. விசாரிக்கும் போது எதுக்கு பாதியில் போற… சினிமா ட்ராமா போல நாடகம் இல்லையே?”
“உங்க குடும்பத்துல ஒரு நாய் கூட வாழாது.. எதுக்கு நாடகம் நடத் தனும்?எப்படியும் இவ ரெண்டு மாசத்துல ஓடப்போறா… நானும் அவ பின்னாடி போகபோறேன்.. உங்க சொத்து பணம் வெட்டி ஆடம்பரம் வறட்டு கவுரவம் ..எல்லாம் நீங்களே வச்சுக்கோங்க… உங்க பேச்சை கேட்டு பின்னாடியே ஆட்டுக்குட்டி மாதிரி வர அக்காமாரை உங்க கையாலேயே பலி கொடுக்க போறீங்க .. இதெல்லாம் பார்த்துட்டு என்னால் இங்கு இருக்க முடில.. கண்டிப்பா போயிருவேன்… இந்த வீட்டை விட்டு… குரல் உயர்த்தியவன்..
பின் தாழ்ந்து.. சலித்து…
“விடுங்க… என் லைப் முடிஞ்சிருச்சு.. அப்பா வை தள்ளி வச்சு இருக்க மாதிரி.. என்னையும் தள்ளி வைங்க.. போங்க..”
பேரதிர்ச்சி.. ரித்துவுக்கு.. அவங்க வீட்டு அரசியலில் இவளும் நடுவில் மாட்டிக்கிட்டு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நின்னுகிட்டு..
கொடுமை கொடுமை ன்னு ஆலயத்துக்கு போனா அங்கே ரெண்டு கொடுமை ஜலபுல ஜங்குன்னு குத்தாட்டம் போட்டுச்சாம்.. ஓவர்.. முடில
அடுத்தவீட்டு கோள் கூட கேக்க பிரயாசப்படாத பிறவி அவள்..
தலை வலித்தது.. முகம் சுளித்து.. பிள்ளையை தோள் மாற்றி தன் பிடித்தமின்மையை வெளியிட.. கண்டு கொண்டான் அந்த மாயவன்..
“ரித்து பேபி ஏன்டா நீ பீல் ஆகுற?”
பேபியா? சலித்த மனம் பிரஷ் ஆகி என்ன? என்ன? அலைய..
காண்டானாள்.. வெளியில் பார்க்கத்தான் பக்கா .. அவன் வீட்டுக்குள் வந்ததும் பண்ணும் சேட்டைய பாரு..
பொட்டில்லா இடத்தில் புருவம் முடிச்சிட்டு முறைக்க… தர தர ன்னு இழுத்துட்டு போய்ட்டான் .. மாடி அறைக்கு..
மேலே 4 கீழே 5 பெட் ரூம்கள்++++ என்று கட்டப்பட்ட மாளிகை… அதில் விஜய் யின் அண்ணன் சென்னையில் செட்டில்டு.. இங்கே அவ்ளொவா வரவே மாட்டான்.. வருஷ திதி கொடுக்கும் போது அவன் மட்டும் வந்துட்டு ஹோமம் பண்ணிட்டு யாரோ மாறி போய்டுவான்.. அவனுடைய மாடி அறை அன்று திறந்திருக்கும்.. இவர்களுக்கு பக்கத்து அறையில் அப்பா தனி அம்மா தனி
அண்ணன் எதிர் அறை விஜய்து.. மூடியே கிடக்கும் அண்ணன் காணும் போதெல்லாம் ஓர் தீ அம்மாக்கு எதிராய் மூளும்.. அதில் எழுந்த வீம்பு தான் பிரம்மச்சரிய விரதம்..
இந்த வீட்டில் ஒரு முள் தாய் இருந்தாலும் ரோஜாப்பூ தாய்க்களாய் அக்காமார்கள் மூன்று பேருக்கும் கடைசியில் தம்பியா பிறந்தததால் விஜய் என்றால் உருகுவர்கள்.. ஓர் சின்ன காயம் உடம்பில் பார்த்தாலும் கண்ணீர் விடும் இளகிய மனம் கொண்டவர்கள்…. அவரகளுக்கு ஆளுக்கு இரண்டு நாலு இரண்டு குழந்தைகள் என்று 8 பசங்கள் வீடு அல்லோல் படும்..
இது அல்லாது இலவச தொல்லையா நடு அக்கா ராஜியின் புருஷன் . .. வஜ்ரவேலு வடிவேலு வகையறா… அவர்தான் இந்த வீட்டின் கைப்பிள்ளை @ பாடி சோடா… eee
வெளியில் நிறய மாறுபாடுகள் இருந்தாலும் இந்த குடும்பம் உள்ளுக்குள் அவ்ளோ மகிழ்ச்சியா இருப்பார்கள்..
சொர்க்கம் எல்லாம் தோற்றே போகும்..
உறவுகளின் உன்னதம் பார்த்து..
பாசம்.. பாசம்.. ஒவ்வொரு உறவுகள் மேலும் விஜய்க்கு… மனக்குறைகள் இருந்தாலும் இங்கு வருவது.. இல்லாட்டி மனோஜ் அண்ணன் போல ஒட்டாமல் இருந்துக்கலாம்..
அப்பா செல்வராஜ் தொழில் உலகில் அரிமா.. வீட்டுக்குள்ளோ ஸிரோ.. அவருக்கும் உள்ளிருப்பு காரணம் விஜய் போல்தான்..
ஒருமாறி உருமாறி ஓடிக்கொண்டிருந்தது குடும்ப கனரக வாகனம்.. இதில் இப்ப சகா பயணியா ரித்துவும் ரேச்சலும்
விஜய் ரூமில்..
பிள்ளையை கிடத்த இடம் தேட..
“ஒரு ரெடிமேட் தொட்டில் வாங்கிடலாம்.. இன்னைக்கு ஒரு நாள் அடஜஸ்ட் பண்ணிக்கோ ரித்து”
“வேணாம்.. காசு வேஸ்ட் சார்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்..”
“என்ன தேவைக்கு? சொன்ன கேக்க பாரு பார்ட்னர்.. எப்ப பார்த்தாலும் இது வேணாம் அது வேணாம்.. இங்கே இருக்க முடில .. இந்த வேலை பிடிக்கல.. எதுக்கும் ஒத்து வர மாட்டுற.. உனக்கு ஒரு இடம் வேணும் ன்னு பாதுகாப்புக்கு ஒரு சிங்கத்தோடே குகையிலேயே வைக்கிறேன்… இப்பவும் ஏதாச்சும் சொல்லு.. பார்ட்னர் நீ ரொம்ப சென்சிட்டிவ் டா.. என்னை பாடா படுத்துற முடியலடா…” அவன் இவளின் தொட்டா சிணுங்கி குணத்தை மாற்ற கேலியா பேச…
“யார் சென்சிட்டிவ்? ஹாங்.. சண்டை கோழியா சிலிர்த்துகிட்டு கிட்டே போனவள்..
“என்னை ஊருக்கு அனுப்புங்க ப்ளீஸ் ன்னு எத்தனை முறை கேட்டேன்.. அனுப்பினாத்தான் என்ன? எனக்குத்தான் முடில உங்க கிட்டே … படா இம்சை பிடிச்ச பார்ட்னர் நீங்க..
உங்க கூட ஈஈஸியா பழகணுமா? போங்க காமெடி பண்ணாதீங்க.. உங்களுக்கு 31 வயசு எனக்கு 21 ..என்னத்த பிரண்டு.. அங்கிள் ன்னு வேணும்னா மகிழ்ச்சியா கூப்பிடுறேன்…” பட படன்னு தெறிக்க..
கட்டிலில் குறுக்கில் படுத்து.. செம்மயா சிரிச்சான்.. இப்படி கொச்சை வார்த்தையில் காய்வது பிடிச்சது… யாரும் இப்படி வெடுக்குன்னு பேச மாட்டார்கள்.. இவள் கலந்து கட்டி அடிச்சாள்.. இவன் பாவம் பார்த்தால் பதிலுக்கு எதிரியா முறைத்தது வித்தியாசமா இருந்தது..
அங்கிள் யோட மாமா சொல்லு பார்ட்னர்..
இன்னும் வம்பு பண்ண…
சர்தான் போயா… விட்டவள்..
“பார்ட்னர் இங்கு ரூமிலேயே எல்லாம் வந்துருமா? வெளில போ வேணாம் ல”
“இதென்ன ஹோட்டல் யா வெளியில் தான் போவனும்.. பார்ட்னர்”
ஓ.. இவள் முகம் தொங்கி போக..
“என் மனைவி சொல்லியிருக்கேன்.. உன்னையும் அன்பா பார்ப்பார்கள் .. நீ பாட்டுக்கு பிரீயா இரு… பேப்”
“பயமா இருக்கு பார்ட்னர்..” கண்ணை திருகினாள்… ரித்து.. இளமையின் லாவண்யங்கள் செழித்து கிடக்க அன்றே பூத்து மணந்த வெள்ளை துலிப் மலரணைய பொலிவுடன்…
புருஷன் இல்லன்னா இந்த அழகெல்லாம் காடுகளில் காயும் பால்நிலா ஒளி போல வீணாக போகுமே.. பிள்ளையை நல்லா வளர்க்கிறேன் ன்னு பார்ட்னர் வாழ்க்கை வீண் பண்ணிக்க போறா.. கவலைப்பட்டான் விஜய்..
பயப்படாதே நான் இருக்கேன் ல பார்த்துக்கலாம் அதெல்லாம் பின்னாடி.. இந்த அறையில் உனக்கு என்ன மாற்றம் வேணும் சொல்லு ஏற்பாடு பண்ணுறேன்..என்ன வேணும் னாலும் உன் இஷ்டம் தான் பண்ணிக்கோ.. பகலில் அவ்வளவா வர மாட்டேன்.. நைட் வீட்டுக்கு வந்த பிறகு எனக்கு இந்த அறையில் எப்பவும் போல நான் இருக்க சுதந்திரம் மட்டும் தந்தா போதும்..
என்ன சுதந்திரம் தெரில.. eeee
“அதுகென்ன பார்ட்னர்.. எனக்காக எவ்ளவோ உதவி பண்ணியிருக்கீங்க .. இது கூடவா நான் அடஜஸ்ட் பண்ண மாட்டேன்… எப்பவும் போல இருங்க… நாங்க உங்களுக்கு இடைஞ்சல் ன்னு நினைக்காம இருந்தா போதும்..”
நல்லவளா தெரியாத்தனமா சொல்லிட்டு.. அவன் காட்டிய செல்பில் இருந்து ரஜாய் எடுத்து படுக்கை தயாரித்து… பெரிய கட்டிலுக்கு கீழே கதவு மறைக்கும் கோணத்தில் போட்டுக்கொண்டாள்… சேப்..
விஜய் கீழே போய்விட..
அவள் செல்லுக்கு அறிமுகம் இல்லாத நம்பரில் இருந்து கால்கள்.. யோசித்து எடுக்க..
“ஆலிஸ், நான் அத்தான் பேசுறேன்..”
“சொல்லுங்க…” சுரத்தே இல்லாத குரலில்..
“என்ன ஊருக்கே போகலியாமே?” அத்தை சொன்னாவ…
” போவோம்… நீங்க எங்கே இருக்கீங்க அதை முதலில் சொல்லுங்க?”
“அவசர வேலை .. ராஜஸ்தானில் இருக்கேன்”
“ஓ ராஜஸ்தானில் ஜெயில் இருக்கோ?
எதுக்கு இந்த பொய் … பொய்யா பேசி என்ன சாதிக்க போறீங்க? உங்களைத்தான் போலீஸ் ஜீப்பில் கைகள் பின்னாடி கட்டி உக்கார வச்சிருந்ததை ஊருக்கு கிளம்பரதா இருந்த அன்னைக்கு பார்த்தேனே.. உங்களுக்கு மான அவமானம்
லாம் தெரியுமா தெரில.. அதெல்லாம் பற்றி நானும் பேசல.. நானும் உங்க பொண்ணும் நல்லா இருக்கோம் போதும்.. வச்சுடுறேன்…”
“திருந்த ஒரு வாய்ப்பு கொடு… ஆலிஸ்”
“அப்ப பைபிள் படிங்க.. ஏசப்பா கொடுக்கட்டும்.. என்கிட்டே எதுக்கு? அடுத்த மாசம் ஊருக்கு போயிருவேன்.. பை..” வைக்க முயற்சிக்க…
“ரேச்சல் .. ”
“நல்லா இருக்கா… அப்புறம்”
“ஆலிஸ்..”
“எனக்கு பேச நேரமில்லை வைங்க.. ப்ளீஸ்..”
போனை பிளைட் மோடில் போட்டாள்.. திரும்ப போடுவான் ன்னு..
ஏசி போட வசதியா வீடு.. ரெண்டு ஜன்னல் க்ரில் டிசைன் க்கு நடுவே கனத்த பைப் சொருகினா தொட்டில் கட்டிரலாம்.. யார் கிட்டே கேப்பது?
வெளியில போய் எட்டி பார்க்க முயன்ற நேரம் கரு கரு ன்னு கரடி மாதிரி ஒரு ஆளும் இவள் ரூமை எட்டி பார்க்க..
திக் குன்னு பயந்துட்டா ரித்து..
சுதாரிச்சு.. நீங்க யாருன்னு கேக்கும் முன்..
“நீ தான் என் தங்கச்சியா? அடடடா என்னா களையான முகம். .. மச்சான் உயர்த்துக்கும் உன் உயரத்துக்கும் என்னா பொருத்தம்? நான் கட்டிக்யிருக்க சீதேவி கண்ணீர் உட்டு அழுததை பார்த்துட்டு.. ரொம்ப மோசமோ? நினைச்சேன்”
உன் பேரு என்னம்மா? ஏதோ சொன்னாங்களே?… வயிறு இடுப்பு சட்டை என்று எதையோ தேட.. செல்லு… eeee
“ரித்து.. ஆலிஸ் கோல்டு ரித்வியா… ”
“கிறிஸ்டியன் பொண்ணா நீ… மாதா உன் கூட இருக்கட்டும்..”
“அண்ணா நாங்க வேற பிரிவு”
“பிரிவுன்னா?”
“ஏசப்பாவோட வார்த்தைகளை மட்டும் தான் தியானிப்போம்.. ”
“நாட்டிலேயே ஏகப்பட்ட பாலிட்டிக்ஸ் ஓடுது.. ஜாதில உள்பிரிவு மாறி இதிலேயும் உட்பிரிவுகளா? நாடு தாங்காது தங்கச்சி… அண்ணன் அந்த அளவு விவரம் கிடையாது..”
“எந்த அண்ணன் ண்ணா?”
“வேற யார் சொல்லுவேன்? என்னை தான்..”
“அதுக்கு நான் தான் சொல்லிட வேண்டியது தானே.. எதுக்கு அடை மொழிலாம்ணா”
“தெரியாம சொல்லிட்டேன்மா… சொல்லிட்டேன்.. எனக்குத்தான் நேரம் சரியில்லை அதான்.. அண்ணன் னொன்னேன் சொல்லிட்டேன் அதை விடு.. மேட்டர் க்கு வருவோம்.. இதோ பாரும்மா.. இந்த கொலை கார கூட்டத்தில் இருந்து அண்ணன் உன்னை எப்பவும் காத்து நிப்பேன்.. இதை மனசில் வச்சுக்கோ…”
இவ்ளவும் கேட்டவள்…
“அண்ணன் வர இடத்தில் நான் வரணும் ண்ணா…”
“உன் கூட பேச முடியாதும்மா.. புருஷனும் பொண்டாடியும் ஒரே மாறி இருக்கீங்க..” போங்க.. கரடி கோச்சுக்கிட்டு கீழே போக..
“அண்ணா… அண்ணா ..”
“என்னடா தங்கம்.. உன் அழைப்பு காதுல தேனா இனிக்குது… சொல்லுடா.. ”
“நீங்க யாரு?” பேஜாராகிட்டார் கரடி..
“இவ்ளோ நேரம் பேசினேனே?”
“பேசினா தெரியுமா?”
“ஹாங்.. சொன்னேனே?”
“என்ன சொன்னீங்க?”
“விஜய் என் மச்சான்.. என் சொந்த அக்கா பையன் ன்னு”
“சரி.. மச்சான் ன்னா…”
“அவன் அக்கா புருஷன்..,”
“அதுவும் தெரியும்…. எந்த அக்கா? அதை சொல்லுங்க அண்ணா”
“ஓ… புத்திசாலி தங்கச்சி.. முன்னாடியே சொல்லலியா?”
“இல்லை..” இரக்கமே இல்லாமல் ரித்து.. eee
“இல்லையா?… ஐய்யோ.. ஐய்யோ.. சரி அண்ணன் இப்ப சொல்றேன். செவப்பா சுருட்டை முடி வச்சுருக்காளே ராஜி அவ வீட்டுக்காரி…. அவ கன்னம் இருக்கே…” வர்ணிக்க தொடர..
“போதும்ண்ணா… புரிஞ்சிடுச்சு ” மேலே பேச விருப்பம் இல்லாது கவனம் முழுக்க விஜய் தான் ரித்துக்கு…
அதற்குள் ஒரு வாண்டு மேலே வந்து.. அப்பா மாமா கூப்பிடுராங்க… சொல்லிட்டு ரித்துவை வெட்கமா ஓரக்கண்ணால் பார்த்துட்டு ஓடிவிட..
“போறேன்.. போறேன்” ன்னு 10 தடவை விடை பெற்று … eee..வேலு கீழே போக…
இவள் கண்கள் விஜயை தேட.. இவள் பார்வைக்கு எதிர் சரி கோணத்தில் சோபாவில் அமர்ந்திருந்த விஜய்யும்.. எதேட்சையா ரித்துவை அண்ணார்ந்து பார்க்க.. அக்கணம் தெய்வீகம்..
என்னவோ நின்றது இருவருக்கும்…
அண்ணலும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்… கண்ணை கண் உண்ண..
உயிர் உயிரை உள்ளில் தேட…ஆத்மசங்கமம்
