சாயம் 2

This entry is part 1 of 9 in the series சாயம்

சாயம்

சாயம் 2

சாயம் 2

சாயம் 3

சாயம் 3

சாயம் 4

சாயம் 4

சாயம் 5

சாயம் 5

சாயம் 6

சாயம் 6

சாயம் 7

சாயம் 7

சாயம் 8

சாயம் 8

சாயம் 9

சாயம் 9

சாயம் 10

சாயம் 10

2

கேள்விக்கு ஏத்த பதில் சொல்லிட்டு.. தன் பேர் ஊர் தந்தை பேர் மட்டும் உசாரா சொல்லிட்டு.. சீதாவிற்கு நம்பிக்கை விதைத்தவள்…

லால் பயணப்பைகள் எடுத்து தந்துவிட்டு விடை பெற முயல… தன் வேறு தோள் பையிலிருந்து பணம் எடுத்து… ரித்து ஆக்டோக்கு காசு கொடுக்க…

வேணாம்.. சார் கோச்சிப்பார்.. சீதா அம்மாவுக்கும் ஒரு வணக்கம் வச்சுட்டு போய்ட்டான்..

இங்கு டயனிங் ரூமில் அவள் .. இளம் குருத்தின் தேவையை.. சீதாவிடம் கேட்டு தயங்கி எடுத்து முடிச்சு.. தோளிலேயே போட்டு தூங்கவும் வைத்து… கீழே போட்டால் வீல் ன்னு கத்தும் குட்டியை.. சுவற்றில் சாஞ்சு அப்படியே.. கண் மூடினாள்.. ரித்து

தானாய் இமைக்கு உள்ளே கண்ணீர் சுரந்தது… ஏன் இப்படி ஓர் நிலைமை?.. தகப்பன் பாதுகாப்பு வேணும் மனம் அவரை தேடியது… ஏசப்பா கிட்டே எனக்காக பேசுங்கப்பா.. இமை தாண்ட முயன்ற நீரை.. முந்தி கொண்டு முந்தி துடைத்துக்கொண்டாள்… உதவி செய்தவர்கள் ஏதாச்சும் நினைச்சிக்க போறாங்க.. என்ற நல் எண்ணத்தில்..

தீமையிலும் நன்மை கை செலவுக்கு மேலே வச்சிருந்தது கொஞ்சம் ரூபாய்கள்.. சில்லறை காசு தான் பர்சோடு போச்சு..
,
மும்பை வீட்டு காசு.. நகைகள்.. இவளின் பண சேமிப்புக்கள் .. பத்திரமா இருந்தன.. அது போயிருந்தால் நிஜ இழப்பா இருந்திருக்கும்…

இழப்பு என்று வார்த்தை தோணியதும்..
அலட்சியமா உதட்டை சுழிச்சா ரித்து..
நமக்கு இஷ்டமான பிடிச்ச உயிர்களை விட இழப்பை விட இப்பொருள்கள் இழப்பு ஒன்னுமேயில்ல…

அப்பாவின் எதிர்பாராத மரணம் கற்று தந்த பாடங்கள் ஏராளம்.. பெற்றோர் இருக்கும் பிள்ளைகளை விட இல்லாத பிள்ளைகள் சீக்கிரமே மன பக்குவம் பெற்றுவிடுவார்கள்.. ரித்துவே சாட்சி..

எதை கண்டாலும் சந்தேகப்பட்டாள்.. பயந்தாள்.. பண மன கணக்குகள் தானா ஸ்கிரோலிங்ல ஓடும்… பாதுகாப்பின்மை தந்த பக்குவம்…

கூப்பிட தயங்கி .. ங்க.. போட்டு தடுமாறியவளை..

பெரியம்மா என்று கூப்பிடு ரித்து… கொஞ்ச நேரத்திலேயே புதியவளை ஏற்றுக்கொண்டார் சீதா..

இரவு 8 மணி ஆகியும் யாரும் வீட்டிற்கு வராததால்.. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? லேசா பேசணும் ன்னே அவரிடம் ரித்து கேக்க…

ஒரு பையன்.. போட்டோ காட்டினார்.. அமெரிக்கால இருக்கான் நான் தான் பார்த்து கட்டி வச்சேன்.. ரெண்டும் பசங்க.. அடுத்து பொண்ணு ஆஸ்திரேலியா .. மாப்பிள்ளை சயின்டிஸ்ட்.. இவ பாங்கிங் செக்டார் ல ஏதோ பதவில இருக்கா..அவளுக்கு ஒரே
பொண்ணு டாக்டருக்கு படிக்கிறா.. பெருமையா செல்லில் அவர்கள் போடும் வீடியோலாம் காட்டி .. முகம் மகிழ்ச்சியில் வெளிச்சமா இருக்க..

சூப்பர்.. சூப்பர்…. பெரியப்பா?

அவர் எங்கேயாச்சும் சுத்திட்டு… நைட்டு தான் வீட்டுக்கு வருவார்… ஆனந்த பூங்காற்று அவர்.. வீட்டுக்குள் போட்டு அடைக்க முடியாது… சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. காலிங் பெல் அடிக்க….

100 வயசு ஆர் சி வந்துட்டார்…

கதவு திறக்க சிறு பெண்ணா அவ்வயதான பெண்மணி ஓட…
இவளும் அவரை பார்க்கும் ஆசையில் மெதுவா பின்னே போக..

ஹாய் டார்லி.. என்ன பண்ணீங்க.. வீட்டில் போனிலேயே பிள்ளைங்க கூட குடித்தனமா? சீதாவின் கன்னம் கிள்ளியவர்…
பின் நின்றவளைகண்டு… கொஞ்சம் கூட அந்நிய பார்வை பாராது…

அடடா யார் இந்த சுத்த தமிழ் பொண்ணு..
ஏண்டி உன் சொந்தமா?.. அதுக இவ்ளோ லட்சணமா இருக்காதே.. என்று கேலி பண்ணி… சீதாவையே மையமா அவர் பார்வை இருக்க…

ஹெலோ பிளாக் தாத்தா பெரியம்மாவையே பார்க்காமல் என்னையும் கொஞ்சம் பாருங்க…

ரித்து தன்னுள் எப்பவும் அலையாய் முகிழ்க்கும் குறும்பு வெளியில் கொப்பளிக்க

ஆ.. பேஜாராயிட்டார்.. சிதம்பரம்..

நான் தாத்தா.. என் பொண்டாட்டி பெரியம்மாவா? இந்த கேடி பொண்ணு
எந்த ஊரு?.. சிறிது நேரத்திலேயே..

அவர்கள் உறவு ஜோதியில் இவளும் ஒன்றி.. பேசி பழகி… இரவில் மூவரும் குடும்பமாய் சாப்பிட்டு… ரேச்சுக்கு உத்திரத்தில் தூளி கட்டி தர..

ஒரு பெட் ரூம் அவர்கள் இவளுக்கு தர.. மாட்டேன் சொல்லிட்டாள் இதே தாராளம் நாளை மதியம் வண்டி… போயிருவேன் .. அவரவர் படுத்துவிட…

குழந்தை தொடர் அழுகுரல்… சீதா எழுந்து ரித்து இருந்த இடம் போக… பிள்ளைக்காரி தூங்கி கிடக்க.. குட்டி மட்டும் கைகால் உதறி சிவந்து அழுகை…

என்ன தாய் இவள் ? திட்டிட்டே. பிள்ளையை தூக்க… ஜுரம்…

ரித்து… அவளை தட்டி எழுப்ப.. அவளுக்கும் ஜுரம்… எப்படி? இது..

தூங்க போவும் போது நல்லா தானே இருந்தா?. மலைத்தார் சீதா..!

போடு விஜய் கிருஷ்ணா க்கு போன்…

“ரித்துக்கும் குழந்தைக்கும் ஜுரமா இருக்கு உடனே வீட்டுக்கு வா விஜய்…”

பாதி தூக்கத்தில் புரியாது யார் அத்த ரித்து? குழந்தை என்றதும்.. விளங்கிடுச்சு

என்னாச்சு… தெரிலப்பா.. உதவி செஞ்சான் கூட தொல்லை வரும் போல…
ரித்துக்கு தான் ரொம்ப மோசம்… சீக்கிரம் வா… பயமா இருக்கு…

இதோ வந்துட்டேன்… தன் இரவு உடை மாற்றி காசுவல் உடை அணிந்தவன்… போன் பண்ணி அத்த வீட்டு அட்ரஸ் கொடுத்து போகச் சொன்னவன்.. அவர்களுக்கு முன்னே சென்றுவிட்டான்..

முதலில் குழந்தையை வாங்கி செக் பண்ணவன்… தடுப்பூசி போட்ருக்காங்க..

ஏதாவது மருந்து வச்சுருக்காங்களா பாருங்க அத்த…

அவள் சிறு பாகில் தேடி பார்த்து எடுத்து கொடுக்க….

இதுவே போதும்.. அவனே அழகாய் அதன் தேன் சிட்டு குட்டி வாயில் விட்டு… தன் நெஞ்சோடு வைக்க… குட்டி விக்கி விக்கி.. ஏங்கி இழுத்தது… அழுகை மட்டு பட்டு பெரிய குதிரை என்பதால்..

அதற்குள் சீதாவும் பால் அடித்து ரேச்சுவின் பாட்டிலிலேயே எடுத்து வர … நீங்க பால் கொடுங்க ..

சித்து.. என் மகளை முதலில் பாருப்பா.. கண் திறக்காமல் கிடக்கு… அவசரப்பட..

அடர் கூந்தல் முகம் மூடி… எறாவாய் சுருண்டு வாடி கிடந்தவளை…

ரித்து… கன்னம் தட்டி விஜய் அழைக்க

அப்பா.. உங்களுக்கு ரித்து இல்லப்பா ஆலிஸ் … தொட்ட கைகளை வாகாய் பற்றி தன் சூடான கன்னத்தில் வச்சு அதன் மீதே படுத்து மயக்கம்…

பாவமா இருந்தது மூவருக்கும்…

இந்த பொண்ணு விடோ மாமா.. அதான் அப்பாவை தேடுது போல…

கையை மெதுவா விலக்கிக்கொண்டவன்..
ஒரு கன்னம் வீங்கி கிடக்க… லேசாய் விரல் அச்சும் தெரிந்தது… அச்சோ… வருத்தப்பட்டான்.. அந்த மயிலிறகு மனசுக்காரன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *