சாயம் 8

This entry is part 7 of 9 in the series சாயம்

சாயம்

சாயம் 2

சாயம் 2

சாயம் 3

சாயம் 3

சாயம் 4

சாயம் 4

சாயம் 5

சாயம் 5

சாயம் 6

சாயம் 6

சாயம் 7

சாயம் 7

சாயம் 8

சாயம் 8

சாயம் 9

சாயம் 9

சாயம் 10

சாயம் 10

8

ரேச்சல் குட்டி நைட் தான் உசாரா இருப்பா.. பகலெல்லாம் உண்ணக் கூட சோம்பேறி பட்டு தூங்குபவள்.. இரவில் செம்ம பார்மில் ரித்து முகம் பார்த்துட்டு .
பேசுவதை கேட்டுட்டு.. தெரபி செய்வது போல கை கால் ஆட்டிக்கிட்டே இருப்பா…

அதுவும் லைட் இருந்தால் கண்ணு பிரஷ் யா இருக்கும்.. தூங்கவே மாட்டாள்..

இப்போ விஜய் பண்ணும் சேட்டையில் பாதிக்க படப்போவது ரித்து தான்…

“வா பார்ட்னர் படம் பார்ப்போம்..” பாகு பாடு இன்றி அழைப்பு கூட கொடுத்தான் மாஜி நல்லவன்.. eee

“என்ன சார் இப்படி? “தயங்கி ரித்து கேட்க..

“என்ன இப்படி?”

“ஏய் நான் அடிக்ட் லாம் இல்ல.. அப்படி பார்த்து சிரிப்பு மூட்டாதே… படம் பார்க்க இது இருந்தா ரசிக்க சூப்பரா இருக்கும்..
தினமும் இவ்ளோ தான்” கையில் அளவு காட்ட..

ஐய .. இவளுக்கு வெக்கமா போச்சு..
இவ்ளோ வெளிச்சம் இருந்தால் எப்படி தூங்குவது? மலைத்தாள் மாறா தூக்கம் தூங்கி ரெண்டு மாசம் ஆச்சு .. ரேச்சு பிறக்கும் முன்னிருந்தே பிரச்சனை தான்…

தாய் ஆன பின்னே தன் இல்லா தாய் மடி தேடியது மனசுக்கு .. முழு ஓய்வு வேணும்.. யார் தருவா? சொந்த தாய் அன்றி… ஏக்கம் வர..

வித்தியாசமான சூழல் என்றாலும் பார்ட்னர தப்பா நினைக்க முடில..

வெளியில் இருந்து விஜய்யை பார்த்ததை விட அவன் வீட்டில் … ரொம்ப நாள் பழகிய நெருக்கம்  இருந்தது.. பயமில்லை… ஆனால் ஆண்_ பெண் ஈர்ப்பு விதி மட்டும் சரியா வேலையும் செய்தது.. eee

ரொம்ப பிடிச்சது பேரோடு ஆளையும்.. ஆனால் முடியாது .. வேணாம் சைட் மட்டும் போதும்.. அவன் என்னை காலை பார்த்த ஒற்றை பார்வை போதும் என் குறைகள் தாண்டி ஜெயித்து விட்டேனே .. மகிழ்ச்சி..

ரேச்சலுடன்.. கட்டிலுக்கு கீழ் விரிக்கப்பட்ட படுக்கையில் முக்காடிட்டு பைபிள் வசனம் ஊணி படிச்சுட்டு இருந்தா.. மனம் அதில் இருக்க..
படத்தில் …
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் .. நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்.. ம்ம்ம் ம்ம்

பாடலோடு பாடியவன் ..

நல்லா இருக்குல்ல ரித்து .. இவளை திரும்பி பார்த்து .. சாரி சாரி என்று கிளாஸை பட்டுன்னு  கீழே வச்சு பிரார்த்தனைக்கு மரியாதை கொடுக்க..

முக்காட்டை இறக்கியவள்…

“அவ்ளோதான்.  முடிச்சிட்டேன் பார்ட்னர்.. நீங்க பாருங்க பாருங்க..”

ரித்து , தன் மேல் உதடு கருப்பு கீழ் ரோஸ் இரண்டே நிறம் கொண்ட கட்சி கொடியை ஸ்நேகமாய் விரிக்க..

வாவ்.. அதை பார்த்து அவன் கட்சிக்கொடி மடிந்தது.. சுருண்டது.

இவளிடம் மட்டும் என்ன இருக்கு?  ஈர்க்க..
சேலையா தான் உடுக்கிறாள்.. எதிலும் ஓர் ஆபாசம் இல்லை ..  இயல்பா இவனுக்கு பிடிச்ச மாதிரியே இருக்கா.. கோபம் கூட சுள்ளென்று அடிக்கும் வெயிலே தவிர வீரியம் இல்லாதது.. ரொம்ப நல்ல பெண்..

எங்கெங்கோ எண்ணங்கள் வேர் பிடித்து விரவி பரவ.. தலையை
உதறி சிந்தனை நிறுத்தி..

“ரித்து.. நான் ஒன்னு சொன்னேனே புரிஞ்சிச்சா? ”

“எஸ் பார்ட்னர்..”

ஒருக்களித்து படுத்து.. பாதி கண் மூடியும் திறந்தும் ஓர் மோன நிலையில்.. அவள்..

எனக்கு பழைய படம் பிரியமில்லை பார்ட்னர்.. அதான் ஒன்னும் சொல்லல.. விஜய்  விஜய் சேதுபதி தனுஷ் பிடிக்கும்.. லேட்டஸ்ட் மட்டுமே பாட்டு கூட.. கொட்டாவி விட்டு சொக்கினாள்.. பேசும் போதே..

அப்படியா? அவன் சோகம் ஆகி… சிப்பு சிப்பா குடிச்சு டீவியையே உத்து பார்த்துட்டு இருக்க.. பக்கத்தில் ஓர் அசைவு… அவன் அருகிலேயே ஆனால் கட்டிலின் முன் முகப்பில் நல்லா சாய்ந்து உக்கார்ந்து ..

“பார்க்கிறேன் பார்ட்னர்.. ஆனா உங்க மண்டை மறைக்குது…” மெல்லிய சிரிப்பு..

“தள்ளி உக்காரவா? ”

” ஆமாம்..ன்எதுக்கு கிட்டே உக்கார்ந்துட்டு கண்ணுக்கும் கேடு.. ஏற்கனவே நத்தையா கண்ணாடி போட்டு இருக்கீங்க.. டாக்டரே மோசம்.. ஒழுக்கம் இல்லை போங்க.. போங்க.. ”

புகழ்ச்சி போல வாய் விட்டு விஜய் சிரிக்க…

என்ன அங்கிள் ரொம்ப சிரிப்பு? முறைக்க..

தன் பண்ட பரிவாரத்தோடு இவளுக்கு ஒரு அடி தள்ளி அமர்ந்து ..

பாப்பாவை தொட்டிலில் போடுவது தானே.. ரித்து..

“இல்ல அவ முழிச்சு இருக்கும் நேரம் தான்.. நாம் தூங்கும் போது போடுறலாம் ..பார்ட்னர்..”

“படம் பிடிக்காது சொன்ன…”

“ஆமாம் பிடிக்காது தான்.. அது அப்படியே தான் இருக்கு…. ஆனா ஏசப்பா சொல்லி இருக்கார், ஒருவன் உன்னை ஒரு கல் தூரத்துக்கு நடக்க வலியுறுத்தினால் ரெண்டு கல் தூரத்துக்கு அவனோடு செல் .. என்று
அதனால் உங்களுக்காக படம் பார்க்க உக்கார்ந்தாச்சு.. ஆனா கவுண்டர் கொடுப்பேன்.. கோவப்படக்கூடாது.. சரியா? சினிமாவுக்குள் போகும் முன்.. ஏன் பார்ட்னர் கல்யாணம் பண்ணிக்கல.. எனக்கு சொல்வீங்களா?”

“கண்டிப்பா .. ஆனா ஒன்றா இரண்டா வகை படுத்த..”

புரில.. ரித்து ஆர்வமா கேட்டுக்கொண்டிருக்கும் போதே..

அந்நேரம் பாப்பாவிடம் அவள் செல் அடிக்க.. டயம் பார்த்தாள் 10 + .. அவன் தான்.. இம்சை.. பிள்ள பத்திரமா இருக்கா சொல்லியாச்சு.. திரும்ப ஏன்? ஆலிஸ் ஹார்லிக்ஸ் ன்னு..

“ஒரு நிமிஷம் பார்ட்னர்.. ”

எடுத்தவள் வக்கீல் நம்பர் பார்த்து புருவம் சுருக்கினாள்… என்ன தைரியம்? ஊர் பாஷை வாயில் வந்துச்சு… eee

பகலில் தான் சொன்னதையே திரும்ப சொல்லி பிளேடு போடுறான்.. நைட் என்ன ஹேர் க்கு ? விடக்கூடாது…

வணக்கம் சார்…

“வணக்கம் சிஸ்டர்.. உங்க சித்தப்பா கேஸ் பத்தி நம்ம ..”

“ஒரே ஒரு நிமிஷம் சார் என் கணவர் கிட்டே போன் கொடுக்கிறேன்.. என்கிட்டே சொல்ல வந்தது சொல்லுங்க.. இனி அவங்க கேஸ் லீட் பண்ணிக்கிறேன் சொன்னாங்க..கொடுக்கவா?”

“வேணாம் சிஸ்.. காலையில் பிரஷ்ஷா பேசுறேன்” பட்டுன்னு போனை அவனே கட் பண்ண..

“கை கொடுங்க .. பார்ட்னர் உங்களை வச்சு ஒரு கொசுவை ஓட ஓட விரட்டியாச்சு..” என்று அவன் கையை தானே கேட்டு வாங்கி குலுக்கி மகிழ…

ஏற்கனவே மெதுவா சிப் பண்ணி பண்ணி ஏறி கிடந்த மிதப்பு திடீர்னு ரெய்ஸ் ஆகி போதை லெவல் அதிகரித்து கிர் கிர் ன்னு சுற்ற கையை விடவே இல்லை… மூச்சு வாங்கினான்.. எங்கெங்கோ கொந்தளித்தது.. அவள் என் கணவர் சொன்னது ஊறுகாயா போச்சு..

“என்னாச்சு.. கை நடுங்குது.. பார்ட்னர் ..” அவனுள் நடந்த பிரளயம் அறியாது ரித்து..

“யார் அது ரித்து?”

“வக்கீல்..”

“எதுக்கு?”

“ஊரில் ஒரு பஞ்சாயத்து பார்ட்னர்..” கையை உருவி கிட்டு… பேச..

“அதெல்லாம் வேணாம் விடு.. யார் வேணுமோ எது தேவையோ வச்சிகட்டும்.. நீ இங்கேயே இரு காலம் முழுக்க.. எனக்கு நீ பாரமில்லை..”

வார்த்தைகள் இனித்தது..

மென் முறுவல் பூத்தவள்..

“டே ஒன் லேர்ந்து உங்களை பார்க்கிறேன்.. அது உங்கள் பெருந்தன்மை சார்.. ”

உசாரா அவன் வேறு லெவலில் இருக்கிறான் என்று வார்த்தையால் பிரித்தவள்..

“அப்பா சொத்து என்பது என் பிறப்புரிமை .. அவருக்கு பொறந்த மகள் ன்னு அடையாளம்.. இப்போ போராட்டம் அதுக்கு தான்.. பணத்துக்கு அல்ல வித்தியாசம் புரிஞ்சிக்கோங்க.. இதில் வள்ளல் தன்மை கூடாது.. எங்க ஊர் சைடு அப்படித்தான் ரோஷம் உள்ள மண்ணு சார்..”

“சார் சொல்ல்லாதே ரித்து..”

“முடிஞ்சுதா படுப்போமா?”

“இன்னும் ஒரு கால் மணி நேரம் கூட இருப்பியா முடியுமா?”

“தாராளமா…”

பேசவில்லை இருவரும் டீவி பார்த்துட்டே..

“ரேச்சல் அப்பா எப்படி இறந்தாங்க ரித்து?”

அவர் உயிரோடு இருக்கிறாரே? இதென்ன புதுசா? முதலில் குழம்பி..

ஓ.. என்னை விடோ ன்னு நினைச்சத சொல்லுறான்.. என்ன சொல்ல?

ஏமாற்றி தான் ஆவனுமா? எல்லா உண்மையும் சொல்லலாமா? புரிஞ்சிப்பானா? வேணாம் வேணாம் ..இன்னும் கொஞ்ச நாள்.. பாப்பா தேறியதும் ஓடிரலாம் நாள் கணக்கெல்லாம் கிடையாது…

டாபிக் மாற்றும் பொருட்டு..

“உங்க அம்மாகிட்ட என்ன சொன்னீங்க? அவங்க பதில் என்ன சொன்னாங்க.. கல்யாணம் வைக்கணும் உறுதியா நின்னாங்களே… ”

“அப்பா நாளைக்கு மதியம் வராங்க.. பேசிட்டு சொல்றேன் சொல்லி வச்சிருக்கேன்.. ஆமாம் . நீ என்ன சொல்ற?”

“இப்படியே மாடியிலேயே உண்ணு உறங்கி உங்க உத்தரவு வந்ததும் ஓடிருறேன்.. அவ்ளோதான்.. சிம்பிள்.. ஆனால் உங்க பேமிலி ஸ்வீட் ரொம்ப பிடிச்சிருக்கு”

“அச்சோ.. இப்ப எங்க வீட்டு சைடு .. பொண்டாட்டி சொல்லிட்டேனே..
அப்பறம் இனி கல்யாணம் பண்ணா ரெண்டாவது பொண்டாட்டி கணக்கு தானே வரும் ரித்து ”

விஜய் சீரிசாய் சொல்ல..

“இதோடா.. நான் எத்தனை தடவ இதை சொன்னேன்.. நான் உலக தியாகி என்னை எதுவும் பாதிக்காது.. சொல்லிட்டு இப்படி ஒணக்கம் பேசக்கூடாது… அவள் அவனிடம் கிட்டே பாய்ந்து புடுங்காத குறை தான்..” ரித்து எகிற..

நீ என்னை ஏமாத்திட்டே.. அழகை காட்டி.. நானும் மயங்கி புத்தி இல்லாமல் பின்னாடியே வந்துட்டேன்…போ ”

“ஹான். ம்ம்ம்.. சிணுங்கி.. இதோடா.. பொய்யாம் பொய்யி… எப்பப்பா.. இதோ பாருங்க இப்படிலாம் பேசினா கோச்சிப்பேன்… ஒரே மாதிரி இருக்கணும் எப்பவும்..”

“நான் இப்ப பேசுறது நீ கண்டுக்கக்கூடாது
கேர்ள் பிரன்ட்.. எனக்கு பொய்யா தான் வரும்… அது ஒரு ஹாப்பி.. கற்பனை உலகம்..”

“ஓ.. தினமுமா ட்ராப்ஸ் சாப்பிடுவீங்க?”

ட்ராப்ஸ்? ன்னா

விஜயின் கிளாஸ் ரித்து சுட்டி காட்ட..

அதுக்கும் குலுங்கி சிரித்தான்.. சந்தோசமா இருந்தது மனசு.. ஏதெற்கெடுத்தாலும் சிரிப்பு வந்தது…

“நல்லா இருக்கு.. ரித்து.. ”

செம்ம ன்னு சொல்லணும் பார்ட்னர்.. என் மாஸ் ட்ரண்ட் வார்த்தை அது..

“நான் யார் தெரியுமா? அப்படிலாம் கொச்சையா பேச முடியாது பார்ட்னர்..”

“யாராம்? ”

“ஒன் ஆப் தி பேமஸ் ENT சர்ஜன் இன் இந்தியா..”

“ஓ.. அப்படியா? சூப்பர் .. சூப்பர்.. ஆனா தெரில பார்ட்னர்… காட்சிக்கு எளியனா பழகுவதற்கு இனியனா இருக்கீங்க சார்…

“அதுவே எனக்கு கிரீடமாகவும் முள்ளாகவும் இருக்கு ரித்து.. என்ன செய்ய? பிரஷர் ஆகுது.. நினைச்ச மாதிரி பிரீயா இருக்க முடில.. சோ.. இப்படி தனியா எனக்கு நானே நண்பனா ஆகிருவேன்.. இன்னைக்கு நீ என்கூட இருக்க.. அதான் உனக்கு என் ஊழல் தெரிது.. உன் கிட்டே பழகவும் பிடிச்சிருக்கு.. உன்னிடம் என்ன வேணும்னாலும் பேசலாம் நம்பிக்கையும் தர நீ தேங்க்ஸ்..”

“அட நீங்க சொல்லிட்டு… நான் தான் உங்களுக்கு நிறய தேங்க்ஸ் கடன் இருக்கு அதை விடுங்க… கல்யாணம் கேட்டேனே? ஏன் பண்ணல..”

“கூட படிச்ச பெண் கூட லவ் . அம்மாகிட்ட கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டேன்..”

“ம்ம்ம்..”

“இந்த ஊர்க்காரி வேணாம் .. நம்ம இனத்தில் தேடுவோம் சொன்னாங்க.. அதோடு எனக்கு கல்யாண ஆசை போச்சு.. நீயே சொல்லு .. எங்கம்மா விசாரிக்கணும் பையன் மனசை புரிஞ்சிக்கணும் ல..” விஜய் பீலிங்ஸ் கொட்டி பேசிட்டு இருக்கும் போதே

“ம்ம்ம்.. ஐ லவ் யூ பார்ட்னர்.. ” ட்ராப்ஸ்க்கு ஸ்னாக்ஸ் எடுக்கும் கையை பிடிச்சு புறங்கையில் முத்தமிட.. விஜய் கிருஷ்ணா ஸ்டன்னிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *