சாயம் 3

This entry is part 2 of 9 in the series சாயம்

சாயம்

சாயம் 2

சாயம் 2

சாயம் 3

சாயம் 3

சாயம் 4

சாயம் 4

சாயம் 5

சாயம் 5

சாயம் 6

சாயம் 6

சாயம் 7

சாயம் 7

சாயம் 8

சாயம் 8

சாயம் 9

சாயம் 9

சாயம் 10

சாயம் 10

3

கண்ணோடு காண்பதெல்லாம் நடக்காது… விளம்பரங்கள் போலத்தான் வாழ்க்கை.. எல்லாம் மாயை.. கற்பனை..
வலிய புகுத்தப்படுபவை… ஏங்க வைப்பவை…

ரித்துவுக்கு.. எட்டு வைக்க ஆவியில்லாது சோர்வு இருந்தாலும்.. கடமைகள் தன் பல கைகளால் பிடிச்சி இழுக்க… முகம் கழுவி பல் விளக்கி… ஆடை திருத்தி… சிலுப்பிக்கிடந்த முடிகள் கோதி.. பின்ன நேரமில்லாது கொண்டை இட்டு… தான் முதலில் சரியாகி…

நேற்று அவசரத்துக்கு எடுக்கப்பட்ட பொருள்கள் சிதறி கிடக்க… அதை அதனதன் இடத்தில் அடுக்கி பொருள்களை ஒதுக்கி நீட்டா வச்சுட்டு…
ரேச்சுவ சுத்தம் பண்ண உடைகள் மாற்ற எடுத்து மேலாப்பில் வச்சவள்..

ஹாலுக்கு வர.. பெரியவர்கள் இன்னும் எந்திரிக்கல

மரியாதை தூரம் தள்ளி இருந்து..

சார் .. சார்” ன்னு அழைக்க..”

இப்போ அவன் வயிற்றில் படுத்துக்ககிடந்த பெரிய சைஸ் புழு நெளிந்தது… eee

அது நெளிந்த அசைவில்.. பிடிச்சி… இரு கரங்களையும் பொத்தி தட்டி கொடுத்து…

ச்சூ ச்சூ.. முகுகு தட்ட…

அடர் கரு மீசை ஒருபக்கம் அடுத்தடுத்து பார்டர் கட்டப்பட்ட சிவந்த தடித்த இதழ்கள்.. கருப்பு சிவப்பு சிவப்பு கட்சி்கொடி… அசைய… லாலி eee

எப்படியெல்லாம் வளைச்சு நெளிச்சு பூந்து நுழைஞ்சு உவமை சொல்றேன்.. கண்டுக்க மாட்டுறீங்க பார்த்தீங்களா? EEe
உங்க பேச்சு.. கா.. கா.. தூ… க்கா… haha
சும்மா.. சும்மா…

“சார்.. ” கொஞ்சம் வன்மையா விளிக்க

பாப்பா முகம் சுளித்தது.. அதுக்கு இடைஞ்சல் பண்ணுறாளாம்… தாய்

இப்போ கண்ணு விழிச்சுட்டான் நாயகன்

தன் கண் கண்ணாடி மேல் தள்ளி கண்ணை கசக்கிட்டு.. ஸ்டைலா விரல்கள் மறைத்து ஒரு கொட்டாவி விட்டு.. அதே கை கொண்டு… உச்சி முடி கோதி…

“உனக்கு எப்படி இருக்கு ரித்து..” ஜென்ம ஜென்மமாய் பேர் சொல்லி அழைத்தவன் போலவே அதில் ஓர் நெருக்கம் மனம் உணர உடல் சிலிர்த்தது..

இது உடம்புக்கு ஆகாது.. போலாம் ரைட்..
உடனே அறிவு எச்சரிக்க… விட்டுட்டாள்

“நல்லார்க்கேன் .. நைட்.. எப்படி இப்படி பொறுப்பில்லாமல் இருந்துருக்கிறேன். சாரி வெரி சாரி சார்… பாப்பா தாங்க..”
சங்கடப்பட்டு…

இடுப்பில் வெறும் ஹகீஸ் மட்டும் போட்டு படுத்து கிடந்த குட்டியின் வெற்று
முதுகில் தொட்டு டெம்ப்ரேச்சர் சரி பார்த்தவன்…

“என்னைக்கு தடுப்பூசி போட்டீங்க?”

“முந்தா நேத்து சார்… ஜுரம் வரும் ன்னு தான் சொல்லி சிரப்லாம் தந்தாங்க..”

“நேத்து குளிக்க வச்சீங்களா?”

அப்படி இல்லை… ஆனால் நேத்து காலை ஞாஸ்தான சடங்கு பாப்பாக்கு கொடுத்தோம்.. அது தண்ணீரில் தான் முக்குவாங்க.. உடனே தொடைச்சிருவோம்”

“அப்படிலாம் செய்யக்கூடாது… தப்பு.. சரி இப்பாயாச்சும் சுடுதண்ணீர்ல துடைச்சு பத்திரமா வச்சுக்கோங்க… ஏன் எல்லாம் இப்படி ஒன்னுக்குள் ஒன்னா? ”

“ஊருக்கு போகும் அவசரம் சார்…”

“குழந்தைகள் அனுபூதி .. தெய்வமா பார்க்கனும் நம் உடல் போல அதுகளை நடத்தக்கூடாது… உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் .. சும்மாவா சொல்றாங்க பிளேடு போட்டுட்டு… eee
உங்களுக்கு ஏன் கன்னம் வீங்கி இருக்கு?

“நேத்து அங்கு… “தலை குனிந்து நிற்க…

“ஓகே.. ஓகே.. இன்னைக்கும் எப்படி பேபியை வச்சுக்கிட்டு ஊருக்கு போவீங்க?”

“போய்தான் ஆகணும் சார்… இங்கு யாருமில்ல.. அங்கே ஊரே சொந்தம்.. என் மகளை அங்கே பத்திரமா வச்சு வளத்துப்பேன்..”

“எல்லாம் சரிதான்.. ரெண்டுநாள் பயணம் அந்த பச்சை குட்டி எப்படி தாங்கும்? முட்டாள் போல பேசக்கூடாது ரித்து….” கொஞ்சம் காரமாவே சொல்லி … அவளிடம் கொடுக்க பிள்ளையை பூவாய் அள்ள.. அது திரும்ப இவனிடமே ஒட்டியது.. பிஞ்சு விரல் கொண்டு பனியன் பிடிச்சு..

கட்சி கொடி விரிந்தது புன்னகையில்..

கொஞ்சமா இழுத்து வயிற்றுக்கு மேல இருந்து நெஞ்சுக்கு வச்சு…

“ஒரு காபி தர முடியுமா? ரித்து.. பிரிட்ஜ் ல பால் இருக்கும்..”

“இதோ தரேன் சார்… “-மேலும் விவாதிக்காது தெரிந்த அளவில் போட்டு கொண்டு வர…

தொட்டிலில் பாப்பா சுகமாய் தூங்கிகொண்டிருந்தாள்…

காலி படுக்கையறையில் தண்ணீர் சப்தம்..

“சார்.. காபி…” குரல் கொடுக்க..

“இதோ வந்துட்டேன்…”

யப்பா கண்ணை பறிக்கும் வெண் நிறம்..
வெயில்லேயே போவமாட்டார் போல..

பொறந்தா இப்படி ஓர் பிறவி எடுக்கணும்..
சும்மா கஷ்டம் கவலையெல்லாம் பட்டு பட்டு, பட்டு போகும் வாழ்வு வையகத்தில் எதுக்கு…

10 ஆம் வகுப்பில் பேச்சு போட்டிக்கு போன சத்து லாம் இப்ப ரித்துக்கு வந்துச்சு…

“என்ன சொல்ற? போறியா.. நான் சாதாவா சொல்ல டாக்டர் தான் ம்மா.. நம்பு”

ஓ.. அதான் இவ்ளோ மென்மை…

“எப்ப போக சார்? ” கவலையா..

“ரெண்டு மாசம் முழுசா முடியட்டும்.. பேபி எடை வேறு கம்மியா இருக்கா.. தேறட்டும்”

அடன்கொக்கா மக்கா.. இன்னும் 4 வாரமா? மலைப்பு தட்டியது..

“இது நீ இருந்த ஊர் தானே?”

“ஆமாம்..” ஒரு மார்க்கமாய் விழித்து தலை ஆட்ட..

“பிழைப்புக்கு தானே இப்ப உங்க ஊர் போகபோற?”

இப்பவும் ஓர் புரியா ரியாக்சன் யோடே .. ரித்து யோசனையோடு தலை ஆட்ட..

“என் கிட்டே வேலை பாரு கொஞ்ச நாளுக்கு. .. அப்புறம் போ..”

வாய்ப்பே இல்லை.. போயா.. மனசில் திட்டிட்டு..

“அதெல்லம் சரி வராது சார்.. ப்ளீஸ் இப்பவே கூட வெளியேறிக்கிறேன்..
யாரஎங்கேயோ? வேலை பார்க்க இஷ்டம் இல்லை.. பழக்கமும் இல்லை… எங்களுக்கு ஊரில் உரக்கடை இருக்கு.. அது போதும்.. ஊர் மட்டும் போதும் பிழைப்பு பொருளாதாரம் பாதுகாப்பு பற்றிலாம் கவலை இல்லை
சார்… தன் கருத்தை சொல்லிக்கொண்டிருக்கும் போதே..

சித்து முதலில் குளித்து முடித்து நீட்டா வெளியே வந்துட்டார்…

“ரித்தும்மா.. உடம்பு எப்படி இருக்கு?”

“நல்லாருக்கு தாத்தா.. ”

“ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு போ.. நானே கொண்டு விடுறேன் .. உன் வீடு வரை சரியா…” பெருந்தன்மையா சொல்லி

நன்றி சொல்வேன் தெய்வமே.. ரித்து பீல்

“தாத்தாவே சொல்லிட்டாங்க… அவங்க கூடவே போகிறேனே சார்…” பச்ச பிள்ளயா.. பிள்ளைக்காரி…

“ஒரு மாசம் ஆகணும் பிள்ளை தாங்காது பயணம்.. அவ்ளோதான்.. இனி உன் இஷ்டம்… அத்த கிட்டே சொல்லிருங்க மாமா.. கிளம்பி போய்ட்டான்..

இவளை விட நல்லவனா இருந்தான் அவன்.. மோசம் eee

இந்த நல்லவர்கள் தொல்லை நமக்கு முடில… haha

ஒரு மாசம்… எப்படி? இதென்னடா கொடுமை அவசரத்துக்கு ஹெல்ப் பண்ணினார் ன்னு மரியாதை கொடுக்க அட்வான்டேஜ் யா எடுத்துக்கிறாரே..
கடுப்பானாள்.. இதான் யார் கண்ட்ரோலிலும் இருக்கக்கூடாது..
முன்பு ன்னா அந்த அவன் உயிரை வாங்கினான்.. பொறுமையை சோதித்தான்.. இவனுமா? முடில..

பிள்ளை தாங்காது என்பது டாக்டராய் அவன் கருத்து… இவள் அலட்சியம் பண்ண முடியாது… ஏற்கனவே கண்ணெதிரே இழப்புகள் பார்த்தவள்..
பயம் தானா வந்தது…

கேஸ் போடணும் வக்கீல் பிடிக்கணும் செல் பர்ஸ் யோடவே போச்சு.. ம்ம்.. புதுசு வாங்கணும்… மனம் சோர்ந்தாள்.. முடில ஓட.. நாக்கு வரண்டது.. ஒரு சிக்கல் முடிச்சா நாலு நிக்குது எதிரில்… மிரண்டாள்…

வேலை கொடுப்பதே கொடுக்கிறார்.. இப்பவே கேட்டுட்டு போயிரலாம்..பெரியம்மாக்கு எதுக்கு பாரம்?

அமேசான்ல ஒரு 4g செல் ஆர்டர் போட்டுட்டு.. சித்து தாத்தா விடம் சிம் வாங்கி தர கேட்க.. அன்றே வாங்கி வந்துட்டார்.. பெரியவர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக்கவே இல்லை..
கஷ்டமா இருந்துச்சு அவர்கள் செய்யும் உபகாரங்களுக்கு பதில் செய்ய முடியாது..
நல்லவர்கள் இதயம் இப்படித்தான் கலங்கும்… our like eee

இடையில் சீதா செல்லிலேயே போட்டு ரித்து வேலை குறித்து பேச..

“அங்கு ஒரு வாரம் இரு ..” சொல்றேன்.. பட்டுன்னு வச்சுட்டான் .. புருஷன் மாதிரியே.. ஓவர்..

என்னதிது? ஹாங் அதிர்ச்சியில் ரித்து.. eee

தொடர்ந்து மாத்திரைகள் போட இவளுக்கு ஜுரம் சரி ஆகிடுச்சு…

இரவெல்லாம் ரேச்சலோடு மல்லு..
தூக்கமே கிடையாது ரித்துக்கு…

இதை கண்ட சீதா…

“நீ நல்லாத்தானே இருக்க… எதுக்கு பிள்ளைக்கு டப்பா பால் அடைச்சு கொடுக்கிற… என்னத்த போ… அழகு அழகு ன்னு அதை பராமரிச்சு என்ன பண்ண போறீங்க நீங்களாம்…” கோச்சிக்க..

“யார் எப்படியோ? இன்னும் பத்து மடி இருந்தாலும் கொடுப்பேன்.. பால் இல்லை பெரியம்மா..” கண் கலங்கி…

“அது ஏன் ? எவ்ளவோ முன்னேறிடுச்சு சயின்ஸ்.. மருந்து கண்டுபிடிச்சி இருப்பாங்க .. கேட்டு பார்ப்போம்..”

எதிரில் பதில் வரல ..

அவ்ளோதான் கண்ணு சொக்கிட்டா ரித்து.. பகலில் பேசி பேசி இந்தம்மா அவளை தூங்க விடுவதில்லை… இரவில் அவள் மகள்.. கொடுமைகள் பலவிதம்..eee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *