காதல் மிகுத்துப்பெயின்
1
காதல் மிகுத்துப் பெயின்..!!!
Vijayasri padmanaban
பசங்க .. பார்க் என்றதும் சென்னையில் மிக முக்கிய பார்க்க வேண்டிய இடம் ன்னு ஆசையா வந்து… அங்கு ஜோடி ஜோடியா பார்த்து கெலிச்சு போய்.. பெண் பிள்ளைகளோடேயிருந்தவ கண்
அவளுக்கு தெரிந்தவனும் ஜோடியா போனதை பார்த்து… ம்ம்ம் ன்னு தலையாட்டி..
முத்திருச்சு… தனக்குள் சொல்லிக்கொண்டாள்….
அடிக்கடி அப்பூங்காவின்அகன்ற வாயிலை வாட்சிங்…
அந்த தெரிந்தவன் கூட வந்த பெண்ணின் முகம் பார்க்க அல்ப ஆசை …
இடையில் அந்த நெட்டை ஒல்லி பெண் மட்டும் வெளியேறியதை கண்டு பின்னே பார்க்க அவனைக்கானோம்..
பைட்டா? Eeee இவளே கற்பனை… !!!
விளையாடி களைத்து வீட்டுக்கு புறப்படும் போது…
நித்தியின் மோப்ப சக்தி மூக்கை நுணைக்க
இதோ வரேன் என்று ரெஸ்ட் ரூம் போவது போல ஒதுங்கி…
அவர்கள் தெருவின் விஜய் தேவரகொண்டா eeee வர்ஷித் நிகேதன் போன இடம் நோட்டமிட…
ஒரு மரத்தடியில் கவிழ்ந்து படுத்துக்கிடந்தான்…
அடி ஆத்தீ… நித்தியின் அகன்ற கண் மலர்கள் விரிந்து வியக்க…
சுறுசுறுப்பானவன்.. சுத்தக்காரன்… மெத்த படித்தவன் இப்படி ஒரு பொது பார்க்கின் தரையில் படுத்து கிடப்பது நம்ப முடியல…
அளவுக்கு மீறி குடிச்சிருப்பானோ? டவுட் வந்தது…
சுய நினைவு இல்லையென்றால் மட்டுமே இப்படி அவன் கிடக்கவே முடியும்…
கொஞ்ச நாளா இவனை பாலோ பண்ணுவதே இவள் டே அண்ட் நைட் பொலப்பாய் போனது மெய்… காரணம் அவன் காதல்…
இப்படி தீவிர ஆராய்ச்சி செய்யும் மாணவி நம் நாயகி நித்யஸ்ரீ
இவளுக்கான காரணம் இவளின் விடலை பருவத்தின் முதல் உள்ளம் கவர் கள்வன் நிகேன். அதாங்க கிரஷ் eee
நித்தி அவன் பக்கத்து வீட்டு பெண் .. அவன் தங்கை ஆர்த்தி ஸ்கூல் மேட் தான்..
எழுப்பலாமா?… எழுவானா? இந்தம்மாக்கு ஏகப்பட்ட சந்தேகம் வந்தது… எப்பவும் தயக்கம் சந்தேகம் தாழ்வு மனப்பான்மை இவளின் ரகசிய சொத்து… சோ இத்தனை தடுமாற்றம்… பலகீனம் பதட்டப்பட்டால் திக்கும் குமரி குழந்தை அவள்…
ஏற்கனவே இவளை பார்த்தால் எகதாளம் அவனுக்கு எப்பவும்.. ஒரு நாயா கூட எட்டி பார்க்க மாட்டான்… தன் சாதா மாநிற எந்த ஜிகினா பூச்சும் இல்லாத கிராமிய உருவம் அவனுக்கு அப்படித்தான் தெரியும்… உண்மையை இந்தம்மா ஏத்துகிட்டாங்க… தியாகி… eee
நிகேன்
