16 -இதயம் இதயம் இடறியதே

This entry is part 6 of 25 in the series 16 -இதயம் இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

16   -இதயம்  இதயம் இடறியதே

16 -இதயம் இதயம் இடறியதே

              21 – இதயம்❤️
பாரதியை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்த பாலா முகம் இறுகிப் போய் இருந்தது. 
அங்கே மல்கோத்ராவுக்கோ  இவர்கள் இருவரும் ஜோடியாய் வரக்கண்டு உள்ளம்  புகைந்தார். 
ரீஃபிரஷ் ஆகிட்டு மேலே வா என்று சொல்லிவிட்டு மேலே அவன் தன் ரூமுக்கு போனான். 
தன் தந்தை
கேட்ட எந்த கேள்விக்கும்  நின்று எந்த பதிலும் சொல்லாமல் அவன் விருட்டென்று செல்ல மல்கோத்ராவிற்க்கு முகத்தில்  அடித்தது போல் இருந்தது.
இப்போதெல்லாம் தன் மகனிடம் சற்று வித்தியாசம் தெரிவதை உணர்ந்தார். எல்லாம் இவள் வந்தபிறகு தான் மயக்கி வச்சிருக்கா.
தான் நினைத்ததை எப்போதும் நடத்தி பழகியவர் முடியாமல் போகுமா??  சட்டுப்புட்டென்று வினோவுக்கும் பாலாவுக்கும் கல்யாணத்தை முடிக்கவேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார். 
குளித்து உடை மாற்றிக் கொண்டு பாரதி மேலே அவன் அறைக்குச் செல்ல.
மேலே  தன்மகன் அறைக்குச் செல்லும் அவளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்  மல்கோத்ரா.
மேல் வந்த பாரதியிடம்
நாலஞ்சு நாளுக்கு தங்கும் படியாக திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிக்கோ,  கோயமுத்தூர் சைடில் நாம் ஒரு  கேம்ப் நடத்துறோம் இன்று இரவு அங்கே போக வேண்டி இருக்கும் என்றான்.
இன்னைக்கேவா  சார்? ஆமாம் பாரதி   “மே  பேபி நைட்டே  கிளம்ப வேண்டியதா இருக்கும்?? 
இவர்கள்  அது சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கும் போது எப்போதும் தன் அறைக்கு வராத தன் தந்தை அங்கே வந்து நிற்க??? 
இவனோ பாரதியின் கையை பிடித்துக் கொண்டிருந்தான். வந்தவர் அதைத்தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பாலாவுக்கு முதல்முறையாக தந்தையின் மீது அதீத கோபம் வந்தது.
லுக்  டாட்….?  ஒரு வயசு பையன் ரூமில்  முன்னபின்ன இருப்பான். சோ  எப்ப வரதா  இருந்தாலும் கதவைத் தட்டிட்டு உள்ளே வாங்க என்றான்?? 
என் மகன் பாலாவா இப்படி பேசுவது அதுவும் அவள்முன் தன்னிடம்?? உண்மையிலேயே இவர்களுக்குள் ஏதாவது இருக்குமோ என்று?? அவர் மனம் பதறியது?? 
அதுக்கில்ல பாலா என்று ஏதோ சொல்ல வந்தவர்? அவன் அவரை  கண்டுகொள்ளாமல் பாரதியின் கையைப் பிடித்துக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருக்க அதற்கு மேல் அங்கே நின்றால் தனக்கு மரியாதை இல்லை என்று கருதி கீழே இறங்கி வந்து விட்டார்.
ஆனால் மனம் அடங்க வில்லை மகனை வளைத்து போட்டு விட்டாலே ஒரே ராத்திரியில் என்று உள்ளம் புகைந்தது.அவளை  எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று  திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.
பாலாவுக்கோ அவளை அங்கே தனியே விட விருப்பம் இல்லாமல் தான் போகும் போது ஹாஸ்பிடலுக்கு அவளையும் கூட்டிக்கொண்டு போனான்.
சிவகாமி தான் பதறியவளாய், அவள் இங்கேயே இருக்கட்டும் பாலா என்று சொல்லிப் பார்த்தால். 
இல்லம்மா? பாரதி இங்கே இருக்கிறத விட என் கூட இருக்காறது தான் சேஃப் என்று தன் அம்மாவை சமாளித்து அவளை மருத்துவமனைக்கு கூட்டி போனான் தன்னோடு.
தன் மகன் வீட்டிற்கு வந்தது தன்னை அலட்சியப்படுத்தியது  அனைத்தும் சேர்ந்து மல்ஹொத்ராவின் மனதை காயப்படுத்தி கொண்டிருந்தது. இவர்கள் இருவரையும் எப்படி பிரித்து வைப்பது அதே யோசனையில் இருந்தார்? 
இரவு வீட்டிற்கு வந்தவன் டைனிங் டேபிளில் உட்கார்ந்து குடும்பமாக சாப்பிட்டு கொண்டிருக்க.  
தன் மனைவியின்  மூலமாக விஷயத்தை கேள்விப்பட்டவரின் பிபி  கொதிக்க ஆரம்பித்திருந்தது.
ஒருநாள் அவளோடு இருந்தற்கு தன்னுடனான,  பேச்சுவார்த்தையை  நிறுத்திட்விட்டான். அவன் எப்படி நிறுத்துவான் இவள்  நிறுத்த வச்சிருப்பா?? 
இன்னும் நாலஞ்சு நாள் கேம்ப் என்கிற பேரில் இவனோட சேர்ந் து தங்கினா மொத்தமா எங்க  உறவையே கட் பண்ணி விட்டி டுவா போல இருக்கே??? 
சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்,  நீ சொன்னது கரெக்ட் தான் பாலா??? 
எதை இவர் சொல்கிறார் என்று புரியாமல் அவன்  விழிக்க???… 
இந்த மாதிரி   லோ கிளாஸில்  இருக்கிறவங்களுக்கு என்ன தான் நாம் வாரி வாரி  கோடிக்கணக்கில் வழங்கினாலும்?? அதனுடைய மதிப்பு தெரியாதுனு சொன்னே உண்மைதான்??  பிளாங்க் செக்  கொடுத்தும் இவளுக்கு  அதனுடைய மதிப்பு தெரியல?? 
நீ ஆசைப்பட்டபடி இவள் பேரில் சொத்து  வாங்கி கொடுத்துதி டலாம் என்ன சொல்ற பாலா என்றார் ?? 
சட்டநாதன் கண்ணில் இவள்
அகபடுவதற்கு முன் பாதுகாப்பா வேற எங்கேயாவது அனுப்பி வைக்கலாம் என்றார்.
இவருக்கு பாரதி  மேல் ஏன்  இப்படி ஒரு  கசப்பான எண்ணம்??  தன் மகனின் வாழ்க்கையையே காப்பாற்றிக் கொடுத்திருப்பவரின்  பேத்தி அல்லவா  அவள்?? 
தன் தந்தையின் இந்த பேச்சு அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை?? அதுவும்  தன் கண் முன்னே பாரதியை அவர் மட்டம் தட்டிப் பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை??? 
ஒரு காலத்தில் தானும் அப்படித்தான் அவளை அவமானப் படுத்தினோம் என்று நினைக்க நினைக்க அவனுக்கும் தன் மேலேயே வெறுப்பு வந்தது.
இதைகேட்டு பாரதியின் முகம் சுருங்கியது.
இதுதானே மல்கோத்ரா எதிர்பார்த்தது, அவர் இதைக்கண்டு மனநிறைவாய் உண்டு  எழுந்தார்?? 
அவளாகவே தன் மகனை விட்டு விலக வேண்டும். இல்லையென்றால் அவருக்கு விலக்கி வைக்கத் தெரியும்.
இவ்வளவு சாமர்த்தியம் கூட இல்லை என்றால்  இந்தியாவில் பல இடங்களில் வெற்றிகரமாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை  நடத்த முடியுமா??? 
உங்க அக்கறை என்ற ஆலோசனைக்கு நன்றி.
“பாரதிக்கு என்ன செய்யணும் எனக்கு தெரியும் என்றான் சற்றே அழுத்தம் கொடுத்து தன் தந்தையை நேராக பார்த்து.
சட்டநாதனை சீக்கிரமா பிடிக்கும்படி போலீஸ் போர்சை    முடக்கி விட்டு இருக்கேன். அதனால் இன்னும் இரண்டொரு நாளில் அவன் எப்படியும் ஜெயிலில் கலிசோறு திங்க போறது உறுதி.
அப்புறம் பாரதியை  கூட்டிட்டு நான் கேம்ப்  போறேன் அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
எப்படி  போட்டு வாங்கினாலும் தன் மகன் அசர மாட்டேன் என்கிறானே என்று கவலையாக இருந்தது மல்ஹோத்ராவிற்கு.
இதோ அவர் பிபி எகிறும் விதமாக இரவு உணவை முடித்துக்கொண்டு 
கேம்பிற்கு இருவருமாக காரில் கிளம்பி விட்டார்கள்.
காரில் போய்க் கொண்டிருக்கும்போது பாலா?? 
இதோ பார் பாரதி அப்பா சொன்னதை பெரிசா எடுத்துக்காதே?? 
அவருக்கு ஏன் உன்னை பிடிக்காமல் போச்சு என்று எனக்கு தெரியாது ஆனால்… 
நான் என்ன சொல்லணும்  எதிர்பார்க்கிறீங்க  பாலா சார்…??  உங்களுக்கு மட்டும் என்னை  பிடிக்குமா என்ன ஆரம்பத்திலிருந்து உங்க எல்லாருக்கும் என்னை பிடிக்காது தானே என்றால் எங்கோ  தன் கண் பார்வையை செலுத்தியபடி?? 
அவள் அப்படிப் பேசியது அவனுக்கு சற்று கஷ்டமாக இருந்தது ஆனாலும்  உண்மை அதுதானே.
அவளிடம் எப்படி தன் காதலை சொல்வது இந்த  மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையில்.
ஆனால் கேம்பிலிருந்து வருவதற்குள் அவளிடம் எப்படியும் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று அவன் தீர்மானமாக இருந்தான்.
அப்புறம் இன்னொன்றும்  நீ பண்ணனும் பாரதி.கேம்பிற்கு  மனிஷாவும்  வைஷாலியும்  
வறாங்க. அவங்க என்னை நெருங்காமல் நீ பார்த்துக்கனும் என்றான் சாடையாய்?? 
அப்படினா வைஷாலி மேட்டர் இவனுக்கு தெரிந்து விட்டதா?
உன்  மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது எனக்கு யாருமேலயும்  எதுவும் பெருசா ஈடுபாடு இல்லை என்றான். 
ஊர்ல உலகத்துல எல்லா பொண்ணும்  உன்னை சுத்தி  சுத்தி வரா உனக்கு அப்படி எந்த பொண்ண தான் பிடிக்குமோ தெரியலையே  என்று அவனை வறுத்து எடுத்தால் மனதில்?? 
ஷாலு  இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியவில்லையே?? இவன் மேல் காதலால் உருகி வழிகிறாளே அவள். 
இவர்கள் அங்கே செல்லும் போது நள்ளிரவைத் தாண்டி இருந்தது. 
மிகப் பெரிய ஒரு ஹோட்டலில் தான் ரூம் போட்டிருந்தான். 
தானும் வைஷு வும் ஒன்றாக தங்கிக் கொள்கிறோம் என்று பாரதி சொல்லிவிட மனிஷாவுக்கு தனியாகவும்  பாரதிக்கும்  ஷாலு வுக்கும் சேர்த்து ஒரு ரூம் புக் செய்தான்.
தன்னோடு பணியாற்ற வந்த ஆண் டாக்டர்களுக்கு எல்லாம் வேறு ஒரு ஹோட்டலில் ரூம் போட்டிருந்தான்.
பாரதியை  பத்திரமாக ஹோட்டலி ல்  இருக்கி விட்டவன்  தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து பயண களைப்பு தீர குளித்துவிட்டு  படுக்கையில்  
பொத்தென்று  விழுந்தான்.
அது ஒரு சிறப்பு இருதய மருத்துவ முகாம்.
கோயமுத்தூர் விட்டு  சற்று கிராமப் புறமான ஒரு ஏரியாவில் அவர்கள் முகாம் இருந்தது 
எல்லா ஃபெஸிலிடீஸ்வோடும்.. இலவச இருதய சோதனைகள் நடத்தப்பட்டு கொண்டிருந்தன. மனிஷா வைஷாலி,  நரேன் இன்னும் சில டாக்டர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டு இருக்க காலையிலிருந்து இரவு வரை இந்தப் பணி தொடர்ந்தது.
அவர்கள் அனைவரையும் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அனுப்பி வைத்துவிட்டு பாரதியோடு தனியே அவன் வந்து கொண்டிருந்தான். இன்று தன் காதலை எப்படியும் அவளிடம் சொல்லிவிடவேண்டும் என்ற ஒரு முடிவோடு
சற்று கரடு முரடான மலைப்பாதை என்பதால் இருவரும் நடந்து வந்தார்கள் அப்போது அவள் கால் தவறி கீழே விழுந்து விட
அவள் நடக்க சற்று சிரமப்பட அவளை தூக்கிக் கொண்டான் பாரதி எவ்வளவோ மறுத்தும் 
பாரதிக்கு தான் சங்கடமாக போச்சு??? 
ஏன் இப்படி தன்னை தூக்கிகொண்டான். 
விடுங்க சார் என்று நெளிந்தாள்.
அதை தன் காதலுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சரியாக பயன்படுத்திக் கொண்டான்.
காரை ஓரிடத்தில் பார்க் பண்ணிவிட்டு ஹோட்டல் இருக்கும் அறைக்கு வரும்போதுதான் இவ்வாறு  நடந்தது.
ஓட்டல் வரை அவளை அப்படியே தூக்கி கொண்டு வர அதை பார்த்த மனிஷாவுக்கும் ஷாலுவுக்கும் கண்ணிலும் காதிலும் புகைச்சல் வந்தது 
சரி சரி சீக்கிரமா போய் ரீஃபிரஷ் ஆகிட்டுவா…..? வெளியே சாப்பிடலாம் என்று அவன் பாரதியை  மட்டும் கூப்பிட கூடவே மனிஷாவும் ஷாலுவும் 
தொத்தி கொண்டார்கள். 
அவர்கள் இருவரும் உடன்வர அவன் பாரதியை எரித்து விடுவது போல் பார்த்தான் அவளால் என்ன செய்ய முடியும்?? 
மனிஷா வடநாட்டுகாரி இயல்பிலேயே ரோஜா வண்ணத்தில் இருந்தால்.
இப்படி மலைப்பாங்கான ஒரு ஏரியாவில் அவனை சந்திக்கப்போகும் மயக்கத்தில் தன் புருவங்களுக்கு மையிட்டு லிப்ஸ்டிக் போட்டு தன் சிகையை சற்றே  மாடலாக தலைப்பின்னி  போட்டு இருந்தாள் மனிஷா. 
எப்போதும் சுடிதாரின் மேலே ஒரு டாக்டர் கோட் போட்டு திரிபவள்  இப்போது காட்டன் டி-ஷர்ட்டும் பிளாக் ஜீன்சும் அணிந்துகொண்டாள்.
ஷாலு  எப்போதும்  சுடி தான். அவளும் ரீஃபிரஷ் ஆகி  பாலாவின் மனதில் இடம் பிடிக்க வேண்டும்  என்பதற்காக லைட் வண்ண மஞ்சள் நிறமும்  பச்சை வண்ணமும் கலந்த அந்த காட்டன் சுடிதார் அணிந்து கொண்டாள். 
அவர்கள் இப்படி தயார் ஆகி வர முறைப்பை  பாரதியிடம் காட்டினான்.     
பாரதி ஸ்கை ப்ளூ வண்ண காட்டன் சுடி அணிந்து கொண்டு வந்தாள்.
இதுதான் நீ என்னைப் பார்த்துக் கொள்ளும் லட்சணமா என்பது போல் இருந்தது அவன் கண் பார்வை.
எல்லோரும் இப்போது ஒரு  உயர்தர நட்சத்திர ஹோட்டலில் இருந்தார்கள்.
மனிஷாவும் ஷாலுவும் இமை கொட்டாமல் அவனை வெறித்து பார்க்க?? 
அவன்  உங்களை  காதலிக்கவே இல்லை ஏண்டி இப்படி படுத்தறீங்க?? புரிஞ்சுக்கோங்கடி?? லூசுங்களா  எப்ப தான் இதை புரிஞ்சுக்க போகுதுங்களோ ?? 
இவனோ அலட்டிக்கொள்ளாமல் ஆர்டர் செய்து கொண்டிருக்க?? 
இவனுக்கு ஆனாலும் கொழுப்பு ஜாஸ்தி. ரொம்ப அழகாய் இருக்கோம் ரொம்ப பெரிய ஸ்டேட்டஸில் இருக்கோம், மெத்த படிச்சி  இருக்கோம்… ம்ம்ம்ம்…. க்கும் என தனக்குள்ளே அவனை இடித்தால் பாரதி.
பாரதிக்கும்  ஒன்று தெரியவில்லை அவன் அவளிடம் மயங்கி பல நாட்கள் ஆகிறது என்று.
“யூவர்  ஆர்டர்  ப்ளீஸ் என்றான் எதிரே இருந்த மனிஷாவை பார்த்து? 
அவன் சொன்னது எங்கே அவள் காதில் விழுந்தது அவள் பார்வை முழுக்க அவன் மேல்  அல்லவா படிந்து  இருந்தது.
அவனிடம் பேசுவதற்கு  இதய ஆபரேஷன் சம்பந்தமாக நிறைய விஷயம் மனிஷாவுக்கு இருக்க அதை பற்றி அவள் பேச…
ஷாலுவின் மனதில் புகைச்சல்  உண்டாக்கியது. 
ஷாலுவோ  பரிதாபமாக பாரதியைப் பார்க்க…..?? 
பாரதியால்  எப்படி ஷாவுக்கு  உதவிட  முடியும்?? 
மறுநாளும் பாரதிக்கு அங்கு அப்படி ஒன்றும் பெரிய வேலை கிடையாது. ஆனால் அங்கு கூடியிருந்த மக்களுக்கு விழிப்புணர்வு கவுன்சிலிங்கை அவள் தான் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
பாரதியின் உடல்நிலை இப்போது தான் தேறி  வந்திருக்கிறது ஆனாலும் தன் தந்தையிடம் அவளை தனித்து விட்டு வர மனமில்லாமல் தான் அவளையும் கூட்டி வந்தான் பாலா.
நால்வரும்  ஹோட்டல் அறைக்கு வந்து கொண்டிருக்கும்போது தெரியாமல் ஏதோ ஒரு பாறையில் தடுக்கி ஷாலு விழுந்துவிட
அவள் எழுந்து நடக்கவே மிக சிரமப்பட்டாள்..
இப்போது பாரதி பாலாவை பார்க்க அவன் அவளை சட்டையே  செய்யவில்லை.
ஏன் தன்னை மட்டும் நேற்று தூக்கிக் கொண்டு வந்தான் என்ற கேள்வி அவள் மூளையை குடைந்தது.
இங்கே மல்ஹோத்ரா தன்னுடைய குள்ள நரி வேலையை ஆரம்பித்து இருந்தார்.
“எல்லாம் கரெக்டா இருக்குயில்ல  ஜோஷ்? 
“எஸ்  பாஸ் சாருக்கு இன்னைக்கு நைட்டு ஃப்லைட்டில் அமெரிக்கா போக  டிக்கெட் போட்டாச்சு?? 
கோயம்புத்தூரில் இப்ப நீ எங்க தங்கி இருக்க? ஹோட்டல் பேரடைசில்  பாஸ். 
“ஓகே, எல்லா வேலையையும் பக்காவா முடிச்சுட்டு எனக்கு கால் பண்ணு.
அவ்வளவு சீக்கிரம் என் பையன் உன்கிட்ட மயங்க நான் விடமாட்டேன் பாரதி?? 
அவனை இன்னைக்கு நான் வெளிநாட்டுக்கு பேக்கப் பண்றேன்? 
அவன் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் போது நீ அவன் கண்ணில் படவேமாட்ட ? 
விதி  எல்லோருக்குமான மாற்றுப்பாதையை வைத்துக் காத்திருந்தது.
நீ  ஏன் மாப்பிள்ளை இப்படி உம்முன்னு  இருக்கே? 
இன்னும் ஒரு வாரம் தான் இந்த ஹாஸ்பிடல் வாசம் முடிஞ்சதும் 
நாம்ப நம்ப ஊரைப் பார்க்க கிளம்பிடாலாம் சரிதானே  மாப்பிள்ளை?? 
முகிலன்  ஏதோ யோசனையாய் இருந்தான்.
இன்னையில்  இருந்து அந்த ராங்கிகாரி மறுபடியும் வேலைக்கு வந்துட்டா போல?? 
பேசாம அவளை கழட்டி விட்டிட  லாமா மாப்பிள்ளை?? 
அதெல்லாம் ஒன்னும்  வேண்டாம் அதை நான் பார்த்துக்கறேன்.
முகிலனின் முகத்தில் ஏதோ ஒன்று சரி இல்லை என தோன்றியது அவன்  மாமா சிங்காரத்திற்கு.
ஏன் இன்னைக்கு எல்லாம் இவன் ஒரு மாதிரியா இருக்கிறான். என்கிட்ட நம்ம மாப்பிள்ளை ஏதாவது மறைக்கிறானா 
என்று அவன் முகத்தையே  ஆராய்ந்தபடி இருக்க?? 
அப்போது அவர்கள் இருவருக்கு மான ஜூஸை கலக்கிக் கொண்டு வந்தால் பாரதி
முன்பிருந்த முகிலன் என்றால் அவளிடம் வம்பு இழுத்து  இருப்பான். ஆனால் இப்போது அவன் அமைதியாக இருக்கக் கண்டு அவளும் அவனை யோசனையாக தான் பார்த்தாள்.
இரவு உணவு உட்கொண்டு விட்டு  தன் மாமாவையும்  தன் அம்மாவையும் வீட்டுக்கு  அனுப்பிவிட்டான்.
அவர்கள் சென்ற பிறகு
நாம  கொஞ்சம் இன்னைக்கு  வெளியே போகணும் என்றான் முகிலன்.
“என்ன உனக்கு பைத்தியமா ?? நீ இப்போ இருக்கிறது ஹாஸ்பிடலில்  அதை மனசுல வச்சுக்கோ?? 
உன்னால எங்கேயும் வெளியே போக முடியாது. இன்னும் ஒரு பத்து நான் இங்க ஹாஸ்பிடலில் தான் இருக்கணும் அப்புறம் எங்க வேணா போய் சுத்து என்றால் அவளும் சற்று கடுமையாய்?? 
அவன் உதட்டைப் பிதிக்கியபடி மகாராணி அப்போ வர  மாட்டீங்க?  அப்ப நான் மட்டும் கிளம்புறேன் என்று அவன் நடையை கட்ட?
இவனுடன்  இதே வம்பா போச்சி   எழரையை இழுக்கறத்துக்குனே  வரான். 
நைட்ல அப்படி எங்கு தான் போகப்போறே?? 
அவளை கூட்டி கொண்டு காரில் பறந்தான்  மினிஸ்டர் பையன் என்பதால்  எல்லா ஓட்டை களையும் அடைத்திருந்தான்.
இவளை காரில்  கூட்டி வந்து ஓரிடத்தில் நிறுத்தினான்.  அப்போது  இரவு பதினொன்றை கடந்திருந்தது.
காரை விட்டு இருவரும் இறங்கினர்.
இப்போ எதுக்கு இந்த ஆளில்லாத அத்துவான காட்டில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கே  இதுக்கு தான் வரணும் சொன்னியா என்றாள். 
“நான் சாகப் போறேன்டி அதுக்கு  ஐ  விட்னஸ் வேண்டாம் அதான் உன்னையும் கூட்டி வந்தேன் என்றான் கூலாக..
இவள் முறைத்துப் பார்க்க? 
இவனுடைய லந்து  தாங்க முடியலையே??
நைட் டைமில் இப்படி காமெடி பண்ணிட்டு இருக்காதே??  மரியாதையா வந்து வண்டியில் ஏறு?? 
அவனோ அவள் பேச்சை காதில் வாங்காமல் ரயில்வே டிராக் நோக்கி  முன்னேற…
அப்போ இவன்  உண்மையா   தான்  சொன்னானா?? என்று இவள் உடல்  நடுநடுங்க உயிர்  சில்லிட்டவலாய் அவனருகில் வேகமாக ஓடி வந்தாள்??? 
அவன் மேலும் முன்னேறி செல்லாமல் அவன் முன் போய் நின்று 
இப்ப என்ன தாண்டா உன் பிரச்சனை ஏன் இப்படி படுத்தி எடுக்கிற என்று அவளும் கத்தினாள்??? 
“ஏய் விலகி போடி என்று அவளை ஒரு கையால் பிடித்து தள்ளி விட்டு அவன் முன்னேற.
கோபமாய் அவளோ அவன் முன்னேறாமல் அவன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
நீ பண்ண  இந்த பைத்தியக்காரத்தனத்தால் தான் இப்படி ஹாஸ்பிடலில்  வந்து ரெண்டு மாசமா கிடக்கிறே  இது பத்தாதா?? மறுபடியும் ஏன்டா முருங்கை மரம் ஏற?? 
“என்ன அந்த ரசகுல்லா  மேட்டரா ??? 
அவள் இப்படி சொல்லவும் அவள் கழுத்தைப் பிடித்து நெறித்தான்.
உங்கள மாதிரி  பொண்ணுங்களுக்கு பசங்க எப்படி போனா என்னடி….??? 
ஒழுங்கு மரியாதையா  என் கைய விட்டிடு?? 
எல்லாம் நல்லபடியா தானே போயிட்டு இருந்தது அதுக்குள்ள என்ன வந்தது நான் இல்லாத இந்த 20  நாளில் ஏதாவது பிரச்சனையா? 
உனக்கு அந்த ரசகுல்லா தான் வேணும்னா  அதைப் பேசி சால்வ் பண்ணிக்கலாம்… அடம் பிடிக்காம மரியாதையா  வந்து வண்டியில ஏறு?? 
தற்கொலை என்பதே மோசமான முடிவு.அதுவும் காதலுக்காக எல்லாம் தற்கொலை பண்ணிக்கிறது என்பது அதைவிட மோசமான முடிவு?? முதல அதை புரிஞ்சுக்கோ?? 
“யாரடி காதலுக்காக தற்கொலை பண்ணிக்கப் போறா….?? 
காதலாம்  காதல்?? 
உங்க  காதல் எல்லாமே வெளி வேஷம் தான் ?? எந்த பொண்ணும் ஒழுங்கு கிடையாது?? 
இப்படி அவன் சொல்லவும் அவள் கோபத்தில்  உதட்டைப் பிதுக்கினாள்.
“காதல் என்ற  பேரில் பைத்தியக்காரத்தனமா முதல அப்படி பண்ணிட்டேன்.
ஆனா இப்போ என் மேலேயே எனக்கு கோபம்?? 
நான் இப்படி  இருக்க போய் தானே என்னை வேண்டாம்னு ஒதுக்கினா அவ?? 
உங்களுக்கு எல்லாம்   பையன் பர்சனாலிட்டியா அழகா இருக்கணும் அப்ப தானே   திரும்பி பார்ப்பீங்க??? 
“உனக்கு என்னடா குறைச்சல்  நீ ஏன்டா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கே??? 
“இதோ பாரு ?? நான் ஏற்கனவே முடிவெடுத்துட்டேன்?  வீணா என் லைனில்  க்ராஸ் ஆகாதே?? 
“கிறுக்கா பிடிச்சிருக்கு உனக்கு?? 
கருப்பா இருந்தா  அழகு இல்லனு  யாருடா சொன்னா…?? உன்  முகத்தில் வெட்டு காயம் இருந்தால் என்ன?  
கூன் குருடு செவிடுனு  இங்க எத்தனையோ பேர்?  அதையெல்லாம் ஒரு குறையா எண்ணாமல் நல்லா வாழ்ந்துகிட்டு தானே  இருக்காங்க??  
இப்படி எதுவும் இல்லாமல் கை காலோடு நல்ல புத்தியோடு தானே பிறந்திருக்க பெருமைப்படு…. !! அதை விட்டுட்டு கோழை  மாதிரி தற்கொலை பண்ணிக்க கிளம்பி வந்துட்ட 
உன்னை  பேச்சில் அடிச்சிக்கவா  முடியும் நீ  தான் கவுன்சிலிங் பண்றவளாச்சே….??? 
“அவள் காலில் விழுந்தாவது உனக்கு அந்த ரசகுல்லாவை பேசி முடிக்கறேன்  உன் முடிவை மாத்திக்கோ ?? 
“எனக்கு யாரும் வேணாம் டி?  பொண்ணுங்களே வேண்டாம்டி….??  ஐ ஹேட்   மை  செல்ப்?? 
பாரதிக்கு  அயர்ச்சியாய் இருந்தது.இப்போது என்ன  பேசி அவனை தன் வழிக்கு கொண்டு வருவது என்று புரியாமல் தவித்தாள்? 
அவனுடைய முறுக்கேறிய தோள்களுக்கு  முன்னால் அவளின் மெல்லிய வாழைத் தண்டு கையால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
அவனோ அவள்  கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்டு வேகமாக ரயில்வே ட்ராக் நோக்கி நகர… 
பாரதியோ ஆவேசம் வந்தவள்  போல் அவன் முன் சென்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க. இவ்வளவு சொல்லியும் புத்தி வரலையே இவனுக்கு என
தன் கை கொண்டு வேகமாய் அவன் கன்னத்தில் அறைந்தாள் பளார் பளாரென….
அவள்  இப்படி செய்ய அவன் கோபம் பன்மடங்கு எகிறியது.
தன் நிழலைக் கூட தீண்ட  பயப்படுவபவர்களுக்கு முன் தன்னை அடித்து விட்டு 
அலட்சியமாய்  நோக்கும் அவளை?? 
ஏதாவது செய்ய வேண்டும் என்று அவன்  அவள் கையைப் பிடித்து முறுக்கினான். 
அவன்  எண்ணத்தை மடைமாற்றம் விதமாய் அவளும் அவனோடு போராடினால்.
இருந்தும் அவன் தன் இலக்கை விட்டு இம்மியும் விலகாமல் இருக்க?? 
இங்கே பாரதியோ துவண்டு போனாள்?? 
இந்த ராட்சசனை என்ன சொல்லி ஹாஸ்பிட்டலுக்கு மீண்டும் அழைத்துப் போவது என்று அவளுக்கு தெரியவில்லை.
கிராதகன் உயிரை எடுக்கிறான். 
“உன்ன இப்போ நான் நினைச்சா  என்ன வேணா பண்ண முடியும் டி….?? இதெல்லாம் நீ ஏன் பண்றேன்னு எனக்கும் தெரியும் என்று அவளை அப்படியே தள்ளி விட்டு அவன் ரயில்வே ட்ராக்கை  நெருங்கிவிட
இவ்வளோ  சுதாகரித்து எழுந்து கொண்டு…. வேகமாக ஓடி அவன் அருகில் வந்து அவனைக் கீழே தள்ளினாள்.
அவள் இப்படி தள்ளுவால்  என்று எதிர் பார்க்காத அவன் அப்படியே கீழே விழுந்தான்.
தன்னை  கீழே  தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அவள் கையை பிடித்து  இழுக்க அவளும் தடுமாறி  பொத்தென்று அவன் மேலே விழுந்தால். 
“இதோ பாரு முகிலா இப்போதாவது உன் எண்ணத்தை மாத்திக்கோ என்று  மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் அவனிடம்.
அவளைத் தன்னிலிருந்து விலக் கி விட்டவன்  தான்  நினைத்ததை நடத்தியே முடிக்க சித்தமாய்….?? ஏழு முற்பட அவன் எழா வண்ணம் அவனைக் இறுக்கிப் பிடித்திருந்தால் பாரதி.
“வெட்கம் கெட்டவளே  விலகுடி  ஏன்டி என்னை இப்படி படுத்தி  எடுக்கறே என்றான்.
“அவன் தன்னை என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளட்டும் அவள் நோக்கம் அவனை காப்பாற்ற வேண்டும் அது மட்டுமே.
கெஞ்சி பார்த்தாள்….இம்மம்ம்….. க்கும்.. அவனிடம் ஒன்றும் நடக்காமல் போக?? 
அவளோ  இப்போது ட்ரெயின் வந்து கொண்டிருந்த ரயில்வே ட்ராக் நோக்கி வேகமாக ஓடினாள்.
ரயில்வே ட்ராக்கை  அடைந்துவிட்டு சத்தமாக அவனிடம்?? 
உன்னை எப்படி தடுக்கிறது தெரியல  முகிலா?? இவ்வளவு பிடிவாதமா இருக்கே? நான் செத்த பிறகாவது தற்கொலை ரொம்ப மோசமான முடிவு  உனக்கு புரியும் நினைக்கிறேன் என்று சொல்லியபடி அவள் ரயில் வந்து கொண்டிருக்கும் ட்ரேக்கை நெருங்கிவிட
அவன் வேகமான பாய்ச்சலில் வந்து  அவளை அப்படியே தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டான்.
இருவரின் இதயமும் வேக வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
இதோ அந்த பாதையில் வரவேண்டிய ரயில்  இவர்களை கடந்து சென்றுகொண்டே இருந்தது.
தன் எண்ணத்தை தவிடுபொடியாக்கிய அவளை  பொசுக்கிவிடும் கோபம் வந்தது அவனுக்கு.
உண்மையிலேயே அவளுக்கு வெற்றி கிடைத்ததா??
இனி அந்த முகிலனின் கோபப் பார்வையில் சிக்கி தவிக்க போகிறாளா  பாரதி?
இதயம் இடறும்….
என்றும் அன்புடன் உங்கள்
 ஸ்ரீலதா

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *