16 -இதயம் இதயம் இடறியதே
35 : இதயம் ❤️
பாரதி முகிலன் உடைய பிறந்த நாளுக்காக மதுரைக்கு வந்தபோது அவளுக்கு தடபுடலான மரியாதை வழங்கப்பட்டது.
போனமுறை பாட்டியும் தேனுவும் அவளிடம் எள்ளும் கொள்ளுமாய் வெடிக்க இப்போது இன்முகத்தோடு வரவேற்றார்கள்.
காரணம் பாரதி பாலாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்ற செய்தியால்.
மாமாவை அவள் விரும்பவில்லை என்பது தேனு விற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது.
யாருடைய பிறந்தநாளுக்காக வந்தாலோ அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
வள்ளிக்கண்ணுவிற்கு பாரதிக்கும் முகிலனுக்கும் ஏதோ பிரச்சனை என்று தெரிந்தது ஆனால் என்னவென்று தெரியாது அவள் இங்கே வந்து இருக்கிறாள், முகிலன் மேல் அவளுக்கு கோபம் இருந்தாலும் தனக்காக வந்து இருக்கிறாள் என்று அவள் மேல் மேலும் அன்பு பூத்தது.
அவன் இடத்தில் அவளுக்கு பேசுவதற்கு என்று நிறைய விஷயங்கள் இருந்தன அதையெல்லாம் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவும் தான் அவள் இங்கே வந்திருக்கிறாள்.
ஆனால் முகிலனோ அவள் கண்ணில் சிக்கவே இல்லை.
போனமுறை இந்த வீட்டில் இருந்தபோது இருந்த மகிழ்ச்சி அவளுக்கு இப்போது இல்லாதது போல் இருந்தது காரணம் முகிலன் அங்கே இல்லை.
அவனிடத்தில் இவள் வம்பு இழுத்துக்கொண்டு நின்றது அவன் இவளிடத்தில் வம்பு
இழுத்துக் கொண்டு சண்டையும் சச்சரவுமாய் கழிந்தநாட்கள் அவள் நெஞ்சில் வந்து நிழலாடியது.
முகிலனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆடு வெட்டி கோழி வெட்டி தடபுடலாக விருந்து விழா என்று கொண்டாடுவார்கள் ஆனால் இந்த முறை எதுவுமே வேண்டாம் என்று முகிலன் சொல்லிவிட அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது அந்த நாள்.
வீட்டுக்கு மதியம் அவன் வந்தபோது, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து செல்ல முற்பட்டான், அவள் தான் அவன் எதிரே போய் நின்றாள்.
நட்பில் கூட சிறு விலகல் வேதனையானது.
உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் ஊருக்கு வந்தற்கு என்ன அவமானப்படுத்தறீயா என்றாள்.
பாரதி வழிய விடு என்றான்.
விட முடியாது என்ன பண்ணுவ ஏன் இப்படி சிடுமூஞ்சி மாதிரி
முகத்தை தொங்க போட்டுட்டு திரிகிற என்றாள்.
அப்புறம் அமெரிக்காவில் வேலைக்கு ஜாயின் பண்ண போறியாமே?? உண்மையாவா என்றாள்.
அப்போது அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க…
அவன் அருகில் வந்து அவன் தோளை பிடித்து குலுக்கி என்னடா நான் கேட்கிறேன் பதில் சொல்றதுக்கு என்ன என்றால்?
நான் எங்க போனா உனக்கு என்னடி ? உண்மையிலேயே நான் வெளிநாடு போனா உனக்கு சந்தோஷமாக தானே இருக்கணும் என்றான்.உன்னை பிடிச்ச தொல்லை விட்டுது பாரு.
எனக்கு என்ன வந்தது நீ
போயேன் என்றால் அவளும் திமிராய்.
அவள் அப்படி சொல்லவும் அவன் இதயம் வாடினான்.
அவன் கையை பிடித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, அவன் கையில் ஒரு கிப்ட் கொடுக்க?
அப்போ நான் எங்க போனாலும் இவளுக்கு ஒரு துளி வருத்தம் கூட இல்லை.
அவன் கண்ணில் ஏதோ அடிபட்ட வலி தெரிய
பாரதி என்றவன் அவள் கையைப் பற்றினான். இங்க வலிக்குதடி எல்லாத்தையும் விட்டு உதறிட்டு போகணும்னா கூட
முடியலையேடி…
என் மனசு பூரா நீ இருக்கியே டி..
அவளை மிக மிக நெருங்கி அவளை சுவற்றோடு சுவராய் சாய்த்து தன் கை கொண்டு அவளை சிறை பிடித்து.
என் மேல சிறு அன்பு கூட இல்லையா உனக்கு? என் மாமா சொல்லித்தான் உன்கிட்ட முத்தம் கேட்டேன் , உன்னை கடத்தினேனு சொன்னே இல்ல
எனக்கு உன்ன கட்டிக்கணும் முத்தம் கொடுக்கணும் சின்ன சின்னதா உன் கிட்ட சில்மிஷம் பண்ணனும் தோணுச்சு அதனால்தான் கேட்டேன் என் மாமா சொல்லி இல்ல புரிஞ்சுதா என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
இப்போ எதுக்கு மூச்சுமுட்டற அளவுக்கு இப்படி பக்கத்துல வந்து நிற்கிற என்றால்.
தெரியலடி உன்ன விட்டுப் போகனும்னு நினைக்க நினைக்க என் உயிர் என்கிட்ட இல்ல?
உனக்கு எதுவுமே தோணலையா பாரதி?
முகிலன் இப்படி சொல்ல பாரதி
புருவம் முடிச்சிட கேள்வியாய் அவனை நோக்கினாள். எதுவுமே தோணலைனா? இப்போ
நீ என்ன சொல்ல வர முகிலா..
அவனோ இன்னும் அவளை நெருங்கி அவனுக்கும் அவளுக்கும் நூலளவு இடைவெளி இருக்க அவளை இன்ச் பை இன்ச்சாக பார்த்தபடி ரசித்தபடி இருந்தான்.
என்னமோ ஆயிடுச்சு கிறுக்கு பிடிச்சிருச்சு இவனுக்கு, என பாரதி எண்ணிக்கொண்டாள்.
தன்னிடம் அவன் முத்தம் கேட்டதற்கே அவள் அவனை ஒரு வழி பண்ணி இருக்க வேண்டும்.. அது அவன் மாமா சொல்லித்தான் அவன் அப்படி செய்திருப்பான் என்று எண்ணி கொண்டு அதை அத்தோடு விட்டு விட்டாள்.
முன்ன மாதிரி அவன் பேசறது இல்ல எப்பப் பார்த்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கான், என்னமோ அவனுக்குள் ஒரு மாற்றம் இருக்கு அது என்னவென்று புரியாமல் தவித்தாள் பாரதி.
அந்த மாற்றத்திற்கு தான் தான் காரணம் என்று தெரிய வரும் போது அவள் நிலை…
முகிலனின் பிறந்த நாளின் மறுநாள், அவள் அன்று கிளம்புவதாக இருந்தது ஆனால் வள்ளிக்கண்ணு நாளை போகலாம் பாரதிமா என்று அவளை தடுத்து அன்று அவர்களோடு தங்கும்படி செய்துவிட்டார்கள்.
இதோ இப்போது பாரதி முகிலனுக்கு சொந்தமான மாந்தோப்பில் தான் சுற்றிக் கொண்டிருந்தால்.
இயற்கை சூழ்ந்த அந்த வயல் வெளியை ரசித்தபடி தென்னை மரங்களும் பனை மரங்களும்
அசோக மரங்களும் அடர்ந்திருந்த அந்த சோலை வனத்தில் மெல்ல தன் மென்பட்டு பாதங்களை பதித்தவாறு நடந்து கொண்டிருந்தால்.
அப்போது அவள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சட்டநாதன் அங்கே வந்தான்.
பாரதியின் கண்ணில் அவனைக் கண்டு அதிர்ச்சி உடல்
ஸ்தம்ப்பித்து நின்றாள்.
சென்னையிலேயே உன் உயிர் போய் இருக்கணும் பாரு இங்கே இந்த ஆள் இல்லாத காட்டில் உன்னை பலி கொடுக்கணும் இருக்கு. யாரும் இல்லாத இந்த பொட்டல் வெளியில் உன்னை அப்படியே கொன்று புதைச்சி டறேன்.
அவன் மோசமான வார்த்தைகளை உதிர்த்தபடி அவளருகே நெருங்கி நெருங்கி வர, கூரான கத்தி கொண்டு அவள் வயிற்றில் குத்த அவன் நெருங்கிவிட்ட சமயம் முகிலன் அங்கே வந்தான்.
உனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கும் போல எவனாவது ஒருத்தன் வந்து காப்பாற்றுகிறான்.
அன்னைக்கு நீ தான்டா இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த இவளை காப்பாற்றினே அன்னைக்கே இவள் உயிர் போயிருக்கணும் உன்னால கெட்டுப் போச்சு இன்னைக்கு இவளோடு உன்னையும் சேர்த்து போடறேன் என்று சொல்ல
சட்ட நாதனுக்கு அவனுக்கும் இடையே மிகப் பெரிய வாக்குவாதம் சண்டை நடந்து கொண்டிருந்தது.
உன்னைத்தாண்டா தேடிக்கிட்டு இருந்தேன் பாரதிக்கு குழி பறிக்க நினைத்த உன்னை, அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவேனு நினைச்சியா?
அந்த முரட்டு வாலிபனுக்கு முன்னால் சட்டநாதனால் பாரதி யை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் கையை போட்டு முறுக்கினான் முகிலன். இந்தக் கை கொண்டு தானே அன்னைக்கு பாரதியை கத்தியால் குத்தினே என்றான்.
அப்படியே அந்த கையை உடைத்தான் சட்டநாதன் வலி பொறுக்க முடியாமல் அலறி னான்.
தன் கை உடைந்த நிலையிலும் இருவரையும் போட்டுத் தள்ளும் வேகத்தில் ஓடி வந்தான்.
பாரதியை அவன் நெருங்கா வண்ணம் அவர்களுக்குள் மிகப்பெரிய சண்டை போய்க்கொண்டிருந்தது.
முகிலனின் முரட்டு தனமான தாக்குதலில் அவன் முகமெங்கும் ரத்தக்கறை படிந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது, இருந்தும் சட்டநாதன் உடைய கொலைவெறி அடங்கவில்லை.
அவன் பாரதியை ஒரே பாய்ச்சலில் போட்டுத்தள்ள ஓடி வர அப்போது முகிலன் தடுக்க,அப்போது கத்தியில் முகிலன் கை பட்டு அவன் கை முழுவதும் ரத்தம்.
இதை பார்த்துவிட்டு பாரதி முகிலனை சட்டநாதன் இடமிருந்து காப்பாற்ற முற்பட்டாள்.
“பாரதி…. தள்ளிப்போ இங்கே வராதே என்று அந்த நிலையிலும் கத்தினான் முகிலன்…?
கையில் இருந்து ரத்தம் ஒழுக ஒழுக அவன் சட்டநாதனை பாரதியிடம் நெருங்க விடாமல் தடுத்தான்.
முகிலா என்று அவளும்
அழுதபடியே கதற?
இப்போது சட்டநாதனோ பாரதியை விட்டுவிட்டு முகிலனை ஒரேடியாக போட்டு தள்ளும் முயற்சியில் இறங்கி கொண்டிருந்தான்.
முகிலனின் வயிற்றை குறி பார்த்து அவன் கத்தியால் குத்த வர, பாரதி தடுக்க அவள் கையில் காயம் ஏற்படாத வண்ணம் முகிலன் தடுத்தான்.
கத்தியில் இருந்து கையை எடு பாரதி…. உன் கையில் இருந்து ரத்தம் கொட்டுது பார், அவன் என்னை என்ன வேணா பண்ணிக்கிடட்டும் நீ முதல கைய எடு என்று சத்தமாக கத்தினான்
பாரதியை சட்டநாதன் நெருங்காத வண்ணம் அவன் தன் கை கொண்டு கத்தியை தடுக்க உன் கையிலிருந்து தான் ரத்தம் கொட்டிக் கொண்டிருக்கு, நீ கையை எடு என்று இவள் கதறினாள், கத்தினாள்.
முகிலா ப்ளீஸ்டா எடுடா கையை ரத்தம் வந்துக்கிட்டே இருக்கு பாரு உனக்கு என்று கத்தினாள்.
அந்த முரடனிடம் அதெல்லாம் எடுபடுமா? முகிலனின் அசுர தாக்குதலில் சட்டநாதன் சுருண்டு போய் விழுந்தான்.
அப்படியே அவனை ஒரு மரத்தில் தப்பித்துச் செல்லா வண்ணம் கயிறு கொண்டு கட்டினான் முகிலன்
அவன என்னடா பண்ற அவனை விட்டு தொலைடா முதல்ல உன் கையை பாருடா என்று இவள் கத்த….
யாருக்கோ கால் பண்ணி வரச்சொன்னான், அவசரமாக
சிறிது நேரத்துக்கெல்லாம் கருப்பனும் முனியாண்டியும் அங்கே வர அவர்களிடத்தில் அவனை ஒப்படைத்து விட்டு,
அவளை அந்த மாஞ்சோலைகள் நிறைந்த இடத்திற்கு கூட்டி வந்தான்.வந்தது தான் தாமதம் அவளை அப்படியே இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தான்.
முகிலன் இப்படி செய்வான் என்று சற்றும் எதிர்பார்க்காத பாரதி திணறினாள்.
அவன் நெஞ்சில் அவள் முகம் சாய்ந்து இருக்க அவன் இதயம் தாறுமாறாய் துடிப்பதை அவளால் கேட்க முடிந்தது
அவன் தன் ரத்தம் தோய்ந்த கைகளால் அவளை அணைத்து இருக்க இவளுக்கு உடம்பு சில்லிட ஆரம்பித்தது.
அத்தோடு இதயம் படபடக்க கண்கள் படபடக்க அவள் நிமிர்ந்து அவனை பார்க்க அவளை மேலும் அப்படியே தன் கூட்டுக்குள் இறுக்கி அணைத்து இருந்தான்.
தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் தான் முகிலன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்று நினைத்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அவன் அணைப்பு இறுக இறுக அவளுக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது.
முகிலா வா ஹாஸ்பிடல் போகலாம் என்று அவள் சொல்ல சொல்ல அவன் எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை.
அவன் அணைப்பு கூடிக்கொண்டே இருந்தது
உன்னை யாருடி இங்கே தனியா வர சொன்னது உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என்று படபடப்பாய் அவன் குரல் வெளிப்பட?
தனக்காக துடிக்கிறானா தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று தவி க்கிறானா ஏன் ஏன் என்ற அந்த கேள்வி நீண்டது
முரட்டுத்தனமான
அவன் அணைப்பில் இருந்து நீங்க முடியாமல் தவித்தாள்.
அவள் இடுப்பில் அவன் ரத்தம் தோய்ந்த கை… அதிலிருந்து ரத்தம் அவள் இடுப்பில் சொட்டிக் கொண்டிருக்க…
என்னவென்றே தெரியாத ஒரு உணர்வு அவள் உயிருக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.
அவன் தவிப்பில் அவன் அணைப்பில் எதையோ பார்த்தால்??
இப்போது அவன் தன் அணைப்பில் இருந்து வெளிப்பட மாட்டான் என்று உணர்ந்தவளாய் அவன் அணைப்பிலிருந்து பிடிவாதமாய் நீங்கியவள்.
தன் சேலையை கிழித்து அவன் கைக்கு கட்டு போட்டாள்.
அவன் முகம் இப்போதும் படபடப்பாய் இருந்தது.
அப்படியும் ரத்தம் நிற்காமல் வந்து கொண்டே இருக்க, அந்தக் காரில் அவனை ஏற்றி உட்கார வைத்து அவள் தான் காரை ஒட்டிக்கொண்டு வந்தாள்.
மருத்துவமனைக்கு வந்து அவனுக்கு முதலுதவி செய்த பிறகு, இந்தமுறை டிரைவரை போட்டு வண்டியை எடுக்க செய்திருந்தான்.
வீட்டிற்கு தான் போகிறோம் என்று பார்த்தால் மீண்டும் ஏதோ ஒரு பண்ணை வீட்டிற்கு வந்தான், டிரைவரை போகச் சொல்லிவிட்டு அவளை அப்படியே தன் இதய கூட்டுக்குள் அணைத்துக்கொண்டான்.
இத்தனை நாள் புரியாது கேள்விக்கு விடை கிடைத்தது போல் இருந்தது அவளுக்கு?
அவளைக் இழந்துவிடுவோமோ என்ற வலியில் தான் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பது புரியாமல் முகிலன் காதல் வலியோடு நிற்க.
முகிலா என்னை விடு என்று அவள் சொல்ல சொல்ல அவன் எதையும் காதில் வாங்கவில்லை..அவள் உயிரை காப்பாற்றி விட்டாலும் அந்த நொடியில் அவனுக்குள் ஏற்பட்ட தாக்கத்தை, வேதனையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமோ?
தன் எலும்பெல்லாம் நொறுங்கும் படியான அவனுடைய முரட்டுத்தனமான அணைப்பு அவன் சொல்லாத பலவற்றை அவளுக்குள் சொல்லிச் சென்றது.
இதயம் இடறும்…..
என்றும் அன்புடன் உங்கள்
ஸ்ரீலதா
