16 -இதயம் இதயம் இடறியதே
ஸ்ரீலதா
17- இதயம் இதயம் இடறியதே
காதல் சில நேரம் மரண வலியை தரும்….. அந்த வலி உடம்பின் ஒவ்வொரு அணுவினுள்ளும் ஊசி போல் குத்தும்… நம்
கண்களில் காரணமே இல்லாமல் கண்ணீர் அரும்பும். உண்ணும் உணவில் கூட இன்னாருக்கு இன்னார் என்ற பெயர் எழுதி இருக்குமாம் . அது உண்மையோ பொய்யோ ஆனால் இவனுக்கு இவள் என்பது 100/100 உண்மை…. அது கோடியில் ஒரு சில பேருக்கு மட்டுமே நடக்கும்….. ஜென்ம ஜென்மமாய் இவனுக்கு இவள் என்ற பந்தம் போல்…
“விழியில் விழி மோதி இதயம் உறைந்த காதல் சிலருக்கு ஒளியாகும் சிலருக்கு சருகாகும் “
காதல் சிலரை பைத்தியமாக்கும் சிலரை தெளிய வைக்கும். சிலருக்கு வாழ்க்கையே கொடுக்கும்.
யாருக்கு எப்போது இது நிகழும் என்று எதுவும் தெரியாது. காதலித்த இருவரில் ஒருவரை இழப்பது என்பது….. வார்த்தைகளில் சொல்ல முடியாத வலி. தேவதாஸ் போல் திரிகின்ற காதலனுக்குத்தான் தெரியும் காதலியை இழந்த வலி….. அன்பு கொண்ட இருவரில் ஒருவரை
இழப்பது என்பது ஆயுள் தண்டனை. அப்படிப்பட்ட மரண வாசலில் தான் நின்றுகொண்டிருந்தான் பாலா…….????
தன் கண்முன்னே நிதர்சனமாய் எத்தனையோ மரணம் பார்த்தவன் தான்….அவன். தன் இதயம் தறிகெட்டு துடிப்பது அவளுக்கு கேட்க வேண்டுமென்று மிகுந்த பிரயாசை பட்டான்…….. அவள் இல்லாத வாழ்க்கை இனி சூனியம் என்று அவன் கண்டுகொண்டான். நேற்றுவரை ஆராய்ச்சி மெடிக்கல் என்று ஓடிக் கொண்டிருந்தவன்
உலகத்தில் பாரதிவந்து உட்கார்ந்து கொண்டாள். தன்னையும் அவளையும் ஏதோ ஒன்று பிணைத்து இருக்கிறது அது காதல் என்று கண்டுகொண்டான். இன்னும் பாரதி கண் விழிக்கவில்லை மயங்கித்தான் கிடந்தாள்… இவனும் காதலில் மயங்கித்தான் கிடந்தான்.
அவளின் நெற்றி முடியை கோதியபடி… அந்த மலர் முகத்தை தன் மார்பில் ஏந்திக் கொண்டான். பேசேன் டி என அவளிடம் பைத்தியம் போல் பேசிக் கொண்டிருந்தான். ஆப்பரேஷன் செய்ய ஆயுதம் பழகியவனுக்கு கவிதை வந்தது. அவளை அப்படியே உயிர் உருக கட்டிக்கொள்ள வேண்டும் என்று தான் அவன் நினைத்தான் ஆனால் அவள் உணர்வற்று கிடக்கும் இந்த வேளையில்
எப்படி…… சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் அந்த அன்பின் அதிர்வலையில் அவன் ஆட்கொண்டு கிடந்தான. அவளை அப்படியே கட்டிக்கொண்டு
ஏதேஏதோ சொல்ல வேண்டுமென்று நெஞ்சாம் கூட்டுக்குள் ஒருவித இம்சை.
மெல்ல கண்விழித்த பாரதி ஒன்றும் புரியாமல் தவித்தபடி அவனை பார்க்க அவளின்.. நேசப் பார்வையில் தன் பலம் இழந்து போனான் அவன்.
பாரதி ரோஜா வண்ண இதழால் டாக்டர் சார் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன்…..அவள் . செவ்விதழில் தன் தடம் பதித்து இருந்தான் அன்பின் வெளிப்பாடாய். பாரதி இதை எதிர்பார்க்கவில்லை மூச்சுமுட்ட முட்ட அங்கே ஒரு காதல்….. சத்தமில்லாமல் அரங்கேறிக்கொண்டிருந்தது..
அவன் அவள் இடுப்பில் கை போட்டு அவள் இதழில் தன் கவி எழுதிக் கொண்டிருந்தான். மயக்கமும்
கிறக்கமுமாய் ஆயிரம் கோடி மின்னல் அவள் கண்ணில் தெரிய…… அங்கே ஒருஅழகான ஒரு காதல் கவிதை அரங்கேறிக்கொண்டிருந்தது….
தேன் சுவையோ தெவிட்டாத மாதுவின் இதழ் சுவையோ….. இருவரும் ஒரு புது உலகத்தில் காதல் உலகத்தில் ஜனித்து கொண்டிருந்தார்கள். இமயமலை பனி உருகி தன் இதயம் வழியே இறங்குவது போல் உணர்ந்தான் பாலா.
இந்தக் காதல் கிறக்கத்தில் மயக்கத்தில் மெல்ல கண் விழித்தான். ஒன்றும் புரியவில்லை அவனுக்கு ஏகாந்தத்தில் திளைத்திருந்த அவன் கண்ணுக்கு…. தான் காதல் கொண்ட பெண்ணவள் எங்கே என்று தேடினான்… இதழ் முத்தமும் இல்லை இதழுக்கு சொந்த காரியும் அங்கு இல்லை…… அன்று போல் இன்றும் இது கனவா….??? திடுக்கிட்டு விழித்து எழுந்தான் திசை தெரியாத படகில்…. தனித்து விடப்பட்ட மாலுமியாய்.
எல்லாம் கனவா ??? இன்னும் அவனால் நம்ப முடியவில்லை…..??? தான் துடித்தது அழுதது காதல்கொண்டு திளைத்தது…. எல்லாம் கனவா….??? !!! காதலை கொடுத்துவிட்டு என்னை வேற்றுகிரகத்தில்… வேரோடு பிடுங்கி தூர போட்டாளா…….??? பாதகத்தி..
அவள் காதலும் இல்லை அவளும் இங்கு இல்லை என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை….
எப்போதும் கனவில் வந்தே என்னை ஆட்கொள்கிறாலே….. இப்போதுதான் அவன் உண்மையிலேயே பித்துப் பிடித்தபடி நின்றான் காதல் பித்து. பாரதி என சத்தம்போட்டு கத்தினான் காதல் மிகுதியால்….. “காதல்” மொத்தமாய் அவனை ஆட்கொண்டிருந்தது.
மாயா ஒரு நிமிஷம் நில்லு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்
அன்னைக்கு நீ முகிலன் கூட ஹாஸ்பிடலில் இருந்தவயில்ல….என பாரதியை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தாள்
நீ என்ன என்கிட்ட பேசணும்…..
எல்லாம் முகிலன் விஷயமா தான். முகிலன் இப்போ இருக்கிற நிலைமைக்கு காரணம் நீ தான்…..?
மாயா, பாரதியை கோபமாய் முறைத்தவாறு “என்ன என்னை பிளேம் பண்ண வந்திருக்கியா ?…. அவன்தான் என் பின்னாடி காதல் கீதலுனு பைத்தியக்காரத்தனமாக சுத்திட்டு இருக்கானா.. நீ வேற தூது சொல்ல வந்துட்டியோ……?
அப்போ நீ அவன காதலிக்கல……?
உனக்கு என்ன பைத்தியமா பாரதி….?? நான் இருக்கிற அழகுக்கு அவனெல்லாம் என் பக்கத்துல நிக்க கூட தகுதியே இல்லாதவன்….. அந்தக் கருப்பனுக்கு …. என்ன மாதிரி ஒரு அல்ட்ரா மாடர்ன் பிகர் கேக்குதா?… காலேஜில்…. காதலிக்கிறேன் பேர்வழின்னு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்தான் இப்பதான் கொஞ்ச நாளா நான் நிம்மதியா இருக்கேன். சூசைட் பண்றேன்னு டிராமா பண்ணிக்கிட்டு தெரிஞ்சான் அப்படியே செத்து ஓழியாம….
நிறுத்துடி… விட்டா ரொம்பஓவரா பேசிகிட்டு இருக்க…… முகிலன் கருப்பு தான்…. அதுக்கு என்ன… ??? நீ வெள்ளைத்தோலா இருந்துட்டு போ…
உனக்கு மனசுல பெரிய உலக அழகி னு நினைப்போ. அவன் உன்னை ரொம்ப அதிகம் காதலிச்சு இருக்கான் அதனால் தான் சூசைட் வரைக்கும் போயிருக்கான்…. அதில் இருக்கிற அன்பு
தெரியல உனக்கு. பெரிய இவளாட்டம பேச வந்துட்டா….. அழகு
அழகு னு சொல்றியே இதெல்லாம் ஒருநாள் மண்ணுக்கு தான் இரையாகும்.
காதல்னு அவன் உன் பின்னாடி சுத்தினானா ?? இல்லை நீ அவனை உன் பின்னாடி சுத்தவிட்டேனு சொல்லு… நீ அவனை உன் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கிட்டே ??
முகிலன் மினிஸ்டரோட பையன் தெரிஞ்சு தானே அவன் கூட கிளோசாப் பழகினே… அது எதுக்குனு நான் சொல்லவா உன் தம்பிக்கு மெடிக்கல் சீட் கிடைக்கணும்….. அதனால் அவனை உன்பின்னாடி சுத்தவி ட்டு….. காரியம் முடிந்ததும் கழட்டி விட்டுட்ட….
“ஐ நோ எவரிதிங் அபோட் யூ…..??
நீ இப்ப அவனை காதலிக்கறியாங்கறது முக்கியம் இல்லை ஆனா இனி காதலிக்கணும் என்ன பாக்குற……
அவனை நீ மொத்தமா அவாய்ட் பண்ற….???
ஃப்ரெண்ட்ஷிப்லேயே அவாய்ட் என்கிறது ரொம்ப கஷ்டம். நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்மளை விட்டு மொத்தமாக விலகினா நம்மமனசு என்ன பாடுபடும் உனக்கு தெரியாதா?…. உனக்கு உன் குடும்பம்? உன் அம்மா உன் தம்பி நல்லா இருக்கணும்…. அவனப் பத்தி என்னைக்காவது
நினைச்சி பாத்தியா….? உன்ன மாதிரி ஒரு சில பொண்ணுங்களால் தாண்டி பசங்க எல்லாம் பொண்ணுங்கள பார்த்ததாவே அலர்ஜியா நினைக்கிறாங்க.
உன் லக்சர எல்லாம்
கேட்க எனக்கு நேரமில்லை வழியை விடு..
நில்லுடி முகிலன் ஒரு இன்னோசென்ட். அப்பாவியா ஒரு பையன் கிடைச்சா அவன் தலையில் மிளகா அரை பிங்கிலே……. கருப்பா இருந்தா என்னடி அவன் மனசு வெள்ளை அதை பாரு……? . உடனே அவனை நீ காதலினு சொல்லல ஆனா அவன் பிரண்ட்ஷிப்பை மொத்தமா கட் பண்ணாத.
இந்த சமயத்தில் தான் அவனுக்கு உன் அன்பும் ஆதரவும் தேவை.
அவன் மாமா சொன்ன மாதிரி உன் அம்மாவை அவன் கடத்தி வச்சிருந்தபோது உடனே அவனை பார்க்க ஓடிவந்த..இல்ல….. அதே மாதிரி அக்கறையா….. அன்பா அவனைத்தேடி என்னைக்காவது வந்தியா…..? உனக்கு உன்னுடைய வேலை ஆகணும்.
இனி நீ ரெகுலரா முகிலென பார்க்க ஹாஸ்பிடல் வரே…… அங்க வந்து டெய்லி பார் சூசைட் அட்டெம்ப்ட் டால் அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு கிட்டு இருக்காணு ?….
நாளைக்கு உன் அழகுக்கு உன்னை மாதிரியே அழகா ஹேண்ட்சம் ஆ ஒரு பையன் உனக்கு கிடைப்பான் ஆனா அன்பு கிடைக்குமானு தெரியாது……?
ஒருத்தவங்க நம்ப மேல உண்மையான அன்பும் பாசமும் வைத்திருக்கும் போது அவர்களை உதறிட்டு போனா…… அப்படிப்பட்ட அன்பும் நேசமும் உனக்கு யார் மூலமாவும் எங்கேயும் கிடைக்காது….. இதுவும். நியூட்டன் லா தான்….
என்ன பயம் பயமுறுத்த றியா ??
உன்கிட்ட எப்படி டி அவன் மயங்கினான் ஆச்சரியமா இருக்கு. நான் இப்போ
கிளம்புறேன் ஆனா நான் சொன்னத மனசுல வச்சிக்கோ டெய்லி ஹாஸ்பிடலில் வந்தவனை பார்க்கிறே…
இங்கே பாரதி போவதையே பார்த்துக்கொண்டு கோபமாய் நின்றாள் மாயா.
தன்
கேபினுக்கு வந்த பாரதி யை கண்ணில் காதல் ஒழுக பார்த்துக்
கொண்டிருந்தான் பாலா…… தன் உயிரில் கலந்துவிட்ட அவளை தன் இதழ் வழியே புன்னகை சிந்தியவாறு ரசித்துக்கொண்டிருந்தான்….
இது எதுவும் தெரியாத பாரதி சார் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் வந்தேன்….
சாயம் பூசாத அவள் இதழ் வழியே நான் உங்களை காதலிக்கிறேன் பாலா என்று சொன்னால் எப்படி இருக்கும். அவனுக்குள் கோடிகோடி மின்னலாய்….. அந்த சுந்தர வார்த்தை கேட்க ஆசை ஏக்கம் எல்லாம் சேர்ந்து அவன் ஏங்கிக் கிடந்தான்….
சார் சட்டநாதனுடைய நடவடிக்கை எதுவும் சரி இல்லை சார்….. ஃபார்மசியில் மெடிசின் வாங்குறதில் ஊழல் பண்றார் சார். தடைசெய்யப்பட்ட மருந்துகளை கூட…… சட்ட விரோதமா இன்ஃப்ளுயன்ஸ் மூலம் வாங்கியிருக்கார். நீங்க பிரிஸ்கிரைப் பண்ணாத நிறைய மருந்துகளை இந்த ஃபார்மசி பேரில் வாங்கி இல்லீகளா வேற ஹாஸ்பிட்டலுக்கு சப்ளை பண்றார் சார்.
அவர் மட்டும் இதை தனியே செய்யல ஒன்னு ரெண்டு டாக்டர்சும் இதற்கு உடந்தையாக இருக்காங்க…. இது மாதிரி தொடர்ந்து பண்ணிகிட்டு இருக்காங்க….. இது எனக்கு கிடைத்த சில ஆதாரங்கள் சார்.
ஹாஸ்பிட்டலுக்கு மருந்து வாங்குவதில் சீப் சட்டநாதன் தான்.. பாரதி அவன் முன் கொண்டுவந்த ஆதாரங்களை பாலா கண்கள் இடுக்கி பார்த்துக் கொண்டிருந்தான். தடை செய்யப்பட்ட நிறைய மருந்துகளை அவன் வாங்கி இருப்பது ஆதாரபூர்வமாக தெரிந்தது.தரமற்ற சில மருந்துகளை வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இன்டர்காம் வழியே சட்டநாதனை தன்
கேபினுக்கு வரவழைத்தான்.
“மே ஐ கம் இன் சார். உள்ளே நுழைந்த சட்டநாதன் வந்ததும் வறுத்து எடுக்க ஆரம்பித்தான் பாலா….. அவன்முன் பாரதி கொடுத்த… ஆதாரங்களை தூக்கிப் போட்டு அவனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினான் பாலா.
உங்களுக்கு என்ன குறை வச்சாங்க மஸ்டர் சட்டநாதன்…….? பணம் சம்பாதிக்க எத்தனையோ ஃபீல்டு இருக்கு அதெல்லாம் விட்டுட்டு…… இந்த மருத்துவத் தொழிலுக்கு ஏன் வந்தீங்க…..? நீங்க பிரஸ்கிரைப் பண்ணி இருக்கற இந்த மருந்துகளால் எத்தனை உயிர் ஸ்லோ பாய்சனால் பாதிப்படையும்னு உங்களுக்கு தெரியுமா??… குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கனும் உங்களுக்கு . யாரைக் கேட்டு இந்த மருந்துகளை எல்லாம் ஆர்டர் கொடுத்தீங்க….. “சே மேன்….. என்ன வாயில கொழுக்கட்டையா வைச்சி இருக்க என்ன பதில் சொல்லப் போற இதுக்கெல்லாம்…….?? இனி உனக்கு இங்க வேலை கிடையாது.
தன் ஒட்டு மொத்த சாம்ராஜ்யமும் ஒரே நாளில் சுக்கு நூறாகி போனதை தாங்கிக்கொள்ள முடியவில்லை சட்டநாதனால் .. இதற்கெல்லாம் காரணமான பாரதியை அவன் எரித்து விடுவது போல் பார்த்தான்.
அங்க என்ன பார்வை சட்டநாதன்.
யாரோ உங்க கிட்ட தேவையில்லாம என் மேல அபாண்டமா பழி சுமத்திறாங்க சார்…… நம்ம பார்மசிக்கு வந்து மெடிசன்ஸ் எல்லாம் செக் பண்ணுங்க சார்…… இதில் இருக்கிற மாதிரி அப்படி எந்த மெடிசனும் நம்ம மருந்தகத்தில் இல்லை….
போதும் இன்னும் எத்தனை பொய் சொல்லுவீங்க…. சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு போலீஸ் வந்தது. என்ன பாக்கறீங்க… நாதன் ஹாஸ்பிடலில் நிறைய ஊழல் பண்ணி இருக்கீங்க………. அதற்கான ஆதாரம் இதோ இருக்கு…. இது போதும் நீங்கள் கம்பி என்ன னு நினைக்கிறேன்.
உன்ன விட மாட்டேன் டி என் மொத்த வாழ்க்கையும்
அழிச்சிட்ட இல்ல டி .
நீ தாண்டா அப்பாவி மக்களுடைய வாழ்க்கையை அழிக்க இருந்த…..???? பாரதி சரியான நேரத்தில் சரியான தகவல் சொல்லி இருக்கா. இன்ஸ்பெக்டர் சார் ஹாஸ்பிடலுக்கு இவனால் எந்த அவப்பெயரும் வரக்கூடாது ஜோஷ் முறைப்படி வந்து கேஸ் பைல் பண்ணுவாரு.
சட்டநாதனை கைது செய்யும்போது அவன் மிகப் பெரிய கலே பரத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றான். அவர்கள் இருவருக்கும் அப்போது தெரியாது அவனால் தங்கள் வாழ்வில் மிகப் பெரிய புயல் அடிக்க போகிறது என்று.
உக்காரு பாரதி ஏன் நிக்கற…. நீ நல்ல காரியம் பண்ணி இருக்க….. அவனுடைய பணத்தாசையால் அப்பாவி மக்கள் தான் நேரடியா பாதிப்படைந்து இருப்பாங்க. சொல்லிவிட்டு அவளை காதல் வழிய பார்த்தான்…
என் உயிர் வரை உன் பெயரெழுதி விட்டுப் பேசாமல் இருப்பதை பார்.
உன்கிட்ட என் காதலை சொல்லனும் பாரதி எங்கே எப்போதுனு தெரியல பாரதி.
நேத்து நீ என்ன எப்படி தவிக்க விட்டேனு
உனக்கு தெரியுமாடி….
ஏன் டி
என் கனவில் வந்து என்னை இப்படி பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆக்குற…
பாரு
ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்கிறே….
சத்தம்போட்டு என் காதலை சொன்னேன் டி கனவில்….. உன்னை உயிர் உருக கட்டிக்கிட்டேன் டி கனவில் !! அதை இப்போ நெனச்சாலும்…… நெஞ்சில் சாரல் மழை தான்…. காதலுக்கு
இவ்வளவு சக்தி இருக்குன்னு எனக்கு தெரியல டி….. பித்து பிடிச்ச மாதிரி இருக்கு கனவில் ……. உன்னை இழந்திடு வேனோ னு நான் தவிச்ச தவிப்பு இருக்கே….. !!!! அந்த வலி வேதனையை இப்ப நினைச்சாலும்……!!! மனசை ஏதோ போட்டு பிசையுது.
பாரதி நீ எதற்காக வந்தேனு இப்ப வரைக்கும் எனக்கு தெரியாது… ஆனா நீ எனக்காகவே வந்தேனு சொன்னா எப்படி இருக்கும் தெரியுமா!!! நான் நானாகவே இல்ல பாரதி…. உன்னை என் கண்கள் தேடுது பாரதி….. நீ எனக்கானவ எனக்கானவனு இங்க ஒரு குரல் கேட்குது பாரதி!!! என் இதயம் ஏதோ சொல்லுது பாரதி….. ஐஸ்கிரீம் மாதிரி உன் நினைவா நான் உருகி கிட்டு இருக்கேன் பாரதி!!!
என் ஒவ்வொரு அணுவிலும் உனக்கான என் காதலை நான் உணர்ந்திட்டேன்…பாரதி ! “ஐ லவ் யூ “!!!னு நான்
உன்கிட்ட சத்தம்போட்டு சொல்லணும்….பாரதி. அவன் அவன் வசம் இல்லை…. பாரதி என்கின்ற புயல் அவன் இதயத்துக்குள் மையம் கொண்டிருந்தது
அவனுக்கு அப்போது தெரியாது காதல் கை கூடுவதெல்லாம் நம் வசம் இல்லை என்று விதி அவனுக்கு என்ன எழுதப் போகிறது…..?? !!
இதய டாக்டரின் இதயம் லப் டப் டப்……
இதயம் ஒலி தொடரும்….
