16 -இதயம் இதயம் இடறியதே
22 : இதயம் ❤️
இவள் ஆரம்பத்திலிருந்தே
இம்சை தான்.
தன்னை அடித்த அவளை வதம் செய்யும் கோபம் அவனுக்கு. உனக்கு எல்லாத்துக்கும் இருக்குடி என்று கறுவினான்.
அவனை திசை திருப்பும் நோக்கில் வேகமாக ஓடியதால் அவள் கால் முழுவதும் கண்ணாடி துகள்கள் பதிந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
அவனோ ஒரு ராட்சசன் கோபக்காரன், அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டு வந்து காரில் பொத்தென்று போட்டான்.
உனக்கு இதுக்கு எல்லாம் சேர்த்து லாடம் கட்டறேன் என்று காரை வேகமாக கிளப்பிக் கொண்டு வந்து ஹாஸ்பிடலில்
நிறுத்தினான்.
இதோ அவள் காலில் அடிபட்ட காயங்களுக்கு ஷாலு மருந்தி ட்டுக்கொண்டிருந்தாள்.
இந்த காயம் எப்படி ஆச்சு அவளும் மூச்சு விடவில்லை??
அவனும் மூச்சு விடவில்லை??
ஷாலு இதையெல்லாம் முடித்து கொண்டு போகும் போது அவனை முறைத்துவிட்டு போனாள்.
அவனுக்கு கோபம் தன் மேல் பொதுவில் பெண்கள் மேல்.
அன்று முழுவதும் கோபம் ஸ்ட்ரெஸ் எல்லாம் சேர்ந்து கொண்டதால் என்னவோ தெரியவில்லை வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்தான்
பாரதியோ காலில் கட்டுப்போட்டுக் கொண்டு படுக்கையில் இருக்க ? அவன் நள்ளிரவில் துடிக்க கண்டு மெல்ல அடி எடுத்து வைத்து அவன் அருகில் வந்தாள்.
அவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடிப்பது தெரிந்தது. ஆனால் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் இல்லை அழுத்தகாரன் என்று எண்ணிக்கொண்டாள்.
உனக்கு இப்போ என்ன பண்னு து நான் டாக்டரை கூப்பிடவா என்று அவள் அக்கறையாய் கேட்க??
அவன் துடித்தானே தவிர வாய் திறந்து ஒற்றை வார்த்தை சொல்லவில்லை.
பிடித்து வைத்த பிள்ளையார் என்று எண்ணிக்கொண்டு. இது மாதிரி சமயங்களில் தன் தாத்தாவின் கைவைத்தியம் ஆன அந்த எண்ணெய் அவள் கைவசம் இருந்தது.
அதை எடுத்து இப்படி கொஞ்சம் நேரா பெட்டில் படு அவனை படுக்க வைக்க, முயற்சிக்க அவன் அவளுக்கு ஒத்துழைப்பே செய்யவில்லை.
இந்த எண்ணெய்யை உன் வயிற்றில் தடவினால் தான் கொஞ்சமாவது உன் வயிற்றுவலி குறையும் கொஞ்சம் நேரம் பேசாம இரு.
கிட்ட வந்தே பாத்துக்கோ??.. அந்த வலியிலும் கோபத்தோடு பற்களை நறநறவென்று கடித்தபடி??அவள் தன் வயிற்றில் எண்ணெய் தடவ விடாமல் அவன் தடுக்க??
அவன் இருக்க இருக்க அதிகமான வலியில் துடிப்பது அவளுக்கு தெரிந்தது.
எந்த அனுமதியும் அவனிடம் கேட்காமல் அவன் சட்டையை அவள் மேலே தூக்க
ராட்சசி விடுடி என் சட்டையை என்று முரண்டு பண்ணினான் அவளிடம்.
அந்த முரடன் அவளைத் தள்ளிவிட பார்த்தான்.
ஒன்னு நான் தடவனும் இல்லனா மேரி அக்காவை கூப்பிடுவேன் உனக்கு எது வசதினு சொல்லு
தெரியாத பேயை விட தெரிஞ்ச குட்டிசாத்தான் மேல் என்பதுபோல் அவன் மௌனமாக இருக்க.
அவன் வலி அவனை மேலும் மேலும் வாட்டி எடுக்க??
இப்போது மெல்ல அவன் கண்களிலிருந்து கண்ணீர் துளி அரும்பியது அவன் வலியால் அதிகம் துடிக்கிறான் என்பதை புரிந்து கொண்டவளாய்.
மருத்துவர்கள் செவிலியர் இன்னும் மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு எல்லாம் மனித உடல்கள்… ” ஐ மீன் எதிரே இருப்பவர்களை ஒரு பேஷன்ட் ஆக மட்டும் தான் பார்ப்பார்கள் அது சேவை மனப்பான்மையில் செய்யும் ஒரு புனிதமான செயல்.
அதைத்தான் பாரதியும் செய்துகொண்டிருந்தால்.
கட்டிலில் அவன் அருகில் அமர்ந்து கொண்டு, அந்த எண்ணெய்யை அவன் வயிற்றில் வைத்து மசாஜ் மாதிரி பண்ணி விட்டாள்.
அவனோ அவள் கை கொண்டு தேய்க்க கூச்சத்தால் நெளிந்தான்.
கிட்டத்தட்ட அவள் ஒரு அரை மணி நேரமாக மசாஜ் செய்ய அவன் வயிற்று வலி குறைய ஆரம்பித்திருந்தது.
இரண்டு பாதங்களிலும் எண் ணெய் தடவினால்.
காடு மாதிரி முடி வளர்த்து வச்சிருக்கே எண்ணெய் வைக்க மாட்டியோ?? என்று அங்கே கொஞ்சம் நல்லெண்ணை வைத்தாள்.
அன்று இரவு அவன் சரியாக சாப்பிடாததால் மேலும் அந்த இரவில் அவனுக்கு குடிப்பதற்கு என்று ஜூஸ் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள், அவளால் முடியாத அந்த நிலையிலும்.
வற்புறுத்தி அவனை குடிக்க வைத்தால்.
வலி இப்போ குறைஞ்சு இருக்கா??
உம்மனா மூஞ்சி பதில் சொல்றானா பாரு???
மெல்ல வந்து தன் கட்டிலில் படுத்துக் கொண்டு அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு ஷாலு கொடுத்த மருந்தின் வீரியத்தால் உறக்கம் வந்துவிட்டது.
இங்கே முகிலனோ அவளையே விடியற்காலை வரை பார்த்துக்கொண்டிருந்தான் விடியற்காலையில் உறங்கிப் போனான்.
அன்று ஒரு நாள் மட்டும் அவள் கட்டிலில் படுத்துக்கொண்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்க.
முகிலனின் மாமா சிங்காரம் தான் பாரதியை ஏற இறங்க பார்த்தான் இவளுக்கு எப்படி காயம் வந்தது என்று.
ஏலே மாப்பிள்ளை இந்த குட்டிக்கு என்னலே ஆச்சு?? ஊரை ஏமாற்ற கட்டுப்போட்டு சுத்துதோ நேத்து நல்லா தானே இருந்தா திடீர்னு என்ன ஆச்சு என்றான்??
முகிலன் வாயே திறக்கவில்லை.
அடுத்தடுத்து வந்த நாட்களில் அவனுக்கு உப்பு காரம் எல்லாவற்றையும் குறைத்துவிட்டு,
தாத்தா கடைபிடிக்கும் பத்திய சாப்பாட்டு முறையை அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தால்.
அன்று முகிலன் தன் மாமாவிடம். எனக்கு முழுமையாக குணமாகும் வரைக்கும் இன்னும் ரெண்டு மாசம் இவ என் கூட தான் இருக்கணும் அதற்கான ஏற்பாடு பண்ணுங்க என்றான்.
“இவ எதுக்கு மாப்பிள்ளை ஊருக்கெல்லாம் இதைவிட?? பணத்தை தூக்கி போட்டா நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு வருவாலுங்க.
அவன் தன் மாமாவை முறைக்க??
சரி உன விருப்பம் அப்படினா அதையே செய்யறேன்.
பாரதி கண்ணு நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறது தானே உன் கால் இன்னும் சரியாகல.
இப்போ பரவாயில்லமா என்று வள்ளிக்கன்னுவோடு கூடமாட இருந்து வேலை செய்தால் பாரதி.
சிங்காரம் பாரதியை தங்களோடு அனுப்பிவைக்குமாறு மல்கோத்ராவிடம் மனு போட அவருக்கு கசக்குமா என்ன?
அவருக்கு எப்படியாவது அவளை இந்த ஹாஸ்பிடலில் இருந்து துரத்த வேண்டும்?
அதற்கான வாய்ப்பு வலிய வந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளாமலா விடுவார்??
2 மாசம் என்ன ஆறு மாசம் கூட கிட்ட இருந்து தம்பிய நல்லா பார் த்துக்கட்டும் ?
மல்கோத்ரா இப்படி சீக்கிரம் சரி என்று சொல்வார் என்று சிங்காரம் எண்ணவில்லை ஆனாலும் அவருக்கு சந்தோஷம் தான்.
கடைசியாக மருத்துவமனையை விட்டு போகப் போகிறாள் என்பதால் ஜோஷ் மூலம் அவளை கூட்டு அனுப்பினார் மல்ஹோத்ரா.
பெரிய இடத்தில் இருந்து வலிய வந்து அவங்களே தேடி கூப்பிடுறாங்க??
சூதானமா பொழச்சுக்கோ??? பெருசா ஆகாயக் கோட்டை எல்லாம் கட்டாதே ??
பாலாவுக்கும் வினோவுக்கும் கல்யாணம் முடிவானதும் சொல்லிவிடறேன் கல்யாணத்துக்கு வந்துட்டு போ என்றார் திமிராய்.
தன்னை ஒரேடியாக விரட்ட வேண்டும் என்பதே அவர் எண்ணம் அவளுக்கு தெரியாதா என்ன??
பாலா இப்போது எவ்வளவோ பரவாயில்லை ஆனால் இவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை???
என்னவோ இவர் மகனை வளைத்து போட வந்தது போலவே எப்போதும் அந்தத் திமிர் தனத்திலேயே பேசுவது தான் அவளுக்கு பிடிக்கவில்லை?? இதற்காகவே பாலாவை வளைத்துப் போட வேண்டும் என்ற வெறி வரும் ஆனால் இவளோ அமைதியாகி விடுவாள்
எல்லாவற்றையும் சிவகாமி அம்மாவிற்காக பொறுத்துக் கொண்டாள்.
இதோ இப்போது அவள் சென்னையில் பிரபலமான ஒரு மாளிகையில் இருந்தாள்.
முகிலனின் அப்பா சென்ட்ரல் மினிஸ்டர் என்பதால், போலீஸ் பாதுகாப்போடு இருந்தது அவருக்கான மாளிகை.
முகிலனையும் அவன் மாமாவின் அலபறையையும் தான் தாங்க முடியவில்லை??
சிங்காரம் ஒரு படி மேலே போய் வானவேடிக்கையோடு தாம்தூம் என்று தன் வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையை சரவெடியோடு வரவேற்றார்.
திமிராய் எலே குட்டி? என்று இவள் புறம் ஒரு பார்வை
மாடியில் முகிலன் அறைக்கு பக்கத்திலேயே அவளையும் தங்கள் வைத்தாள் வள்ளிக்கண்ணு.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன அன்னைக்கு அவனுடைய தந்தை வந்து போனார்.
அதன் பிறகு அவர்கள் ராஜ்ஜியம்தான்.
அடிக்கடி இப்படி தண்ணி போட்டுக் கொண்டு சிங்காரம் வரவும் முகத்தை சுளிப்பாள். முகிலனுக்கு ஊற்றி கொடுக்காமல் பார்த்துக் கொண்டாள்.
பத்திய சாப்பாடு தான் அவன் காடை கவுதாரி என்று லிஸ்ட் வைத்தால் அதெல்லாம் ஒரு மாசம் போகட்டும் என்று அவன் வாயையும் சேர்த்து அடைத்தால்.
பெருசா என் வீட்டிலிருந்து கிட்டே நீ எங்களுக்கு ஆர்டர் போடற என்று துள்ளுவான்.
அன்று வள்ளிஅம்மையும் சிங்காரமும் ஊருக்கு சென்றுவிட.
பாரதியும் முகிலனும் மட்டும் தான் அந்த வீட்டில் இருந்தார்கள்.
எப்போதும் போல் அவனுக்கு உணவு மாத்திரை கொடுத்து விட்டு இரவு படுத்துக்கொள்ள தன் அறைக்கு செல்ல.
அவள் போகாமல் தன் அறை கதவை அடைத்தான் முகிலன்.
இப்போ எதுக்கு கதவடைத்த கதவை திற நான் போகனும் என்றாள்??
அவளுக்கு மிக மிக அருகில் வந்து, கணக்கைத் தீர்த்து விட்டு போ என்றான்?
“என்ன கணக்கு என்ன உளறர ??
கன்னத்தில் கொடுத்தியே அதை சொல்றேன் என்றான் தன் கன்னத்தை தடவியபடி?
வழியை விடு முகிலா நான் போகணும்??
வெட்கமே இல்லாம என் வயிற்றில் எண்ணெய்யெல்லாம் தடவிவிட்ட கன்னத்தில் கொடுக்க மாட்டியா என்றான்?? ஒரு மாதிரியாக??
அவன் பேச்சின் அமில தன்மை புரிந்து, உதட்டை அழுந்தக் கடித்தபடி கோபமாய் அவனை உற்றுப் பார்க்க??
ஏய் இப்ப நீ இங்க இருந்து குடுத்துட்டு தான் போக முடியும்??
ஏன் அன்னைக்கு வாங்கி கட்டிக்கிட்டது பத்தலையோ? என்றால் அவளும் திமிராய்?
“ஒரு ஆம்பிள்ளையை அடிச்சுட்டு அதுவும் இந்த முரட்டுக்காளையை அடிச்சிட்டு திமிரா சுத்திகிட்டு இருந்த உனக்கு மூக்கனாம் கயிறு மாட்ட வேண்டாம்?
“அழகா இருக்கோம் என்கிற திமிர் தானே??
அவள் கிட்டே வந்து அவள் மேல் உரசி கொண்டு அவன் நிற்க அவளோ அருவருப்பாய் முகம் சுளிக்க???
அவள் இப்படி செய்யவும் அவன் கோபம் இன்னும் எகிறியது.
முன்ன ஒரு நாள் நடந்ததே
அது மாதிரி தொட்டிடுவேன் என்றான்?? அவளை கோபம் கொள்ளச் செய்ய….??
அவள் தன்னை எரிக்கும் படி பார்த்தாலும் அவளை அலட்சியப்படுத்திவிட்டு.
அப்போ தொடலாம் என்கிறியா என்றான்??
ச்சி சீ… அசிங்கமா பேசாதே??
மான அவமானமே உனக்கு இருக்காதே அதை எல்லா த்தையும் துடைச்சிப்போட்டவ தானே நீ??
இதோ பார் முகிலா இப்படி எல்லாம் பேசி என்கிட்ட வாங்கி கட்டிகாத என்றாள்.
இப்படி உரசிக்கிட்டு நிக்காதே முதல விலகு?
பக்கம்பக்கமா டயலாக் பேசினே?? என்ன பாத்தா அருவருப்பாய் இருக்கோ?
நான் அப்படி சொல்லலை ??
சரி நான் கேட்டதை கொ டுத்துட்டு போ??
போய் உன் ரசகுல்லாகிட்ட கேளு??
இப்படி வாயால பேசிக்கிட்டு இருந்தா எனக்கிட்ட நீ ஒன்னும் மசியமாட்டே?? மதுரைக்காரன் வீரத்தைக் காண்பிக்க வேண் டியதுத்தான் ??
அவள் தோளில் தன் கையை அழுத்தமாய் பதிக்க. தன்
முரட்டு இதழ் கொண்டு அவள் இதழை மூட அவன் குனிய
அவளோ அவனை அருவருப்பாய் பார்க்க அவன் கோபம் பற்றிக் கொண்டது.
அவன் ஒன்றும் முத்தம் கேட்டு அவளிடத்தில் நெருங்கவில்லை அவளை கலவரப் படுத்த வேண்டும் என்று தான் நெருங்கினான். தன் கெத்தை காட்ட வேண்டும் அவனுக்கு.
அவள் இப்படி முகத்தை திருப்பிக்கொள்ள இப்போது அவனுக்கோ அவளிடத்தில் முத்தம் வாங்கியே ஆக வேண்டும் என்ற வெறி வந்தது.
கொடுடி என்றான் உச்ச கோபதில் ??
என்ன ஒரு திமிர் இருக்கனும்??
“இதோ பார் முகிலா நீ நடந்துகிற எதுவும் சரி கிடையாது விலகு என்றால்.
“என்னை அடிச்சதுக்கு உனக்கு இந்த தண்டனை… சொன்னதை கொடுத்துட்டு போ என்றான்??
கொடுக்கலைனா என்னடா பண்ணுவ என்றால் அவளும் திமிராய்??
இருக்க இருக்க அவன் கோபம் எகிறியது பளார் என்று அவள் கன்னத்தில் அறைந்தான்.
அவன் அடிக்க அவளோ அப்படியே சுருண்டு போய் கீழே விழுந்தாள்.
அவள் கீழே விழுந்த போது தான் தன் கோபத்தின் வீரியம் புரிந்தது அவனுக்கு..
கீழே குனிந்து பார்க்க அவள் மயங்கி கிடந்தாள்.. உடம்பு சில்லிட்டது
தண்ணீர் தெளித்து அவளை தட்டி தட்டி பார்க்க அவள் மயக்கம் தெளியவில்லை.அவளை அள்ளிப் போட்டுக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தான்.
அது ஒரு பிரைவேட் கிளினிக் அங்கு இருந்த மருத்துவர் அவனை ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு ரணகளபடுத்தினார்.
ஷாக் அடித்தா இது மாதிரி ஏற்படும் பயப்படத் தேவையில்லை என்று கூறி இன்ஜெக்ஷன் பண்ணி அவளை அனுப்பி வைத்தார்.
மெல்ல பாரதி கண்விழிக்க இவனுக்கு அப்பாடா என்று இருந்தது.
ஏற்கனவே அவள் காலில் அடிபட்டு இருந்ததால் வீட்டிற்குள் வரும் போதும் அவளை தூக்கிக் கொண்டே வந்து மாடியிலுள்ள அவள் அறையில் படுக்கையில் போட்டான்.
அவளோ அவனைப் பார்க்கவே பிடிக்காமல் தலையை கவிழ்த்துக் கொள்ள??
ச்சி… பெரிய ரதினு மனசில் நினைப்பு???
தன் அறைக்கு வந்து
படுக்கையில் விழுந்தான்.
தூக்கம் வரவில்லை.
இவள் திமிரை மொத்தமா
உறுவனும்….
இதயம் இடறும்…
என்றும் அன்புடன் உங்கள்
ஸ்ரீலதா
