வா!! என் கலாப காத(வ)லா…

This entry is part 24 of 25 in the series வா!! என் கலாப காத(வ)லா

வா!! என் கலாப காத(வ)லா

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

25

வா!! என் கலாப காத வ லா…
ஜியா ஜானவி ❤️
கௌதம் ரகோத்தமன் வெட்ஸ் யசோதரா!!
அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பதாகையை தான் விழிகள் எடுக்காமல் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணாபிரான்!!
விடிந்தால் செல்ல மகள் திருமணம்! அதுவும் அவளின் மனம் கவர்ந்த கௌதம் ரகோத்தமனோடு!!
அவ்வளவு சந்தோஷம் கூடவே மன நிம்மதி!! இக்காலத்தில் பெண்ணை பெற்று வளர்த்து நல்லபடியாக கல்யாணம் செய்வதெல்லாம் பெரிய சாதனைதான்.. அந்த சாதனை வழியில் தான் எத்தனை குள்ளநரிகள்!! எத்தனை வெறி நாய்கள்!! அவற்றிடம் இருந்து அந்தப் பெண்ணை போற்றிப் பாதுகாப்பது என்பது பெற்றோர்களால் மட்டுமே முடிந்த சாதனை!!
தன் வீட்டில் செல்ல மகளாக இளவரசியாக கோலிச்ச தனது மகள் இன்று கௌதமின் மனைவியாக அவன் வீட்டு மஹாராணி ஆகப் போகிறாள் என்ற எண்ணமே அவருக்கு மனதில் நிம்மதியையும் கர்வத்தையும் கொடுத்தது.
மண்ணில் மறைந்து மனைவியை விட மகளிடமே அதிக பாசத்தையும் நேசத்தையும் இந்நாளில் வைத்தவர் இந்த பாசமிகு தந்தை!! இன்று மணநாளில் மணமகளாய் மாற்றானின் மனைவியாய் போகும் மகளை நினைத்து மனதுக்குள் வருத்தமும் சந்தோசமும் என இரு கண்களிலும் கண்ணீர் வழிந்தது!! பின்பு அதை யாருக்கும் காட்டாமல் துடைத்துக்கொண்டு உள்ளே மற்ற வேலைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று காண சென்றார்.
அனைத்தையும் மாடி பால்கனியில் இருந்து கைகளைக் கட்டியவாறு பார்த்துக் கொண்டிருந்த கௌதம் ரகோத்தமன் வதனத்தில் மெல்லிய புன்னகை. 
அவனது தாய்மாமாவால் அவனது வாழ்க்கை திசை மாறினாலும் இன்று மற்றொரு மாமாவால் அவர் பெற்ற பெண்ணால் தன் வாழ்க்கை மாறிய விதம் கண்டு அவனுக்கே சிரிப்புதான்!! சற்றே வியப்பு தான்!!
கடந்த ஒரு மாதத்தில் நடந்த அனைத்துமே விரைவு ரயிலை விட வேகமாக நடந்தது என்றே கூறலாம்.
முதலில் பொன்னி என்கிற ஷாஷாவின் வழக்கு தனி நீதிமன்றத்திற்கு வந்தது. அதில் முதல் குற்றச்சாட்டாக ஷாஷா மீது பொன்னி வழக்கு தொடுத்திருந்தாள். தன் பெற்றோரை மிரட்டி அடிபணிய வைத்து தன்னை கடத்தி தன் இடத்திற்கு அவள் வந்தது என கடத்தல் வழக்கு.. மிரட்டல் வழக்கு கூடவே ஆள்மாறாட்டம் என பல வழக்குகள்..
அடுத்து கௌதம் தொடர்ந்திருந்தான். பொன்னி என்ற பெயரில் ஆள்மாறாட்டம் செய்து தன்னை காதலிப்பது போல் நடித்து நிச்சயம் வரை சென்று, அதன் பின் தன் வீட்டில் இருந்து சில ஆதாரங்களையும் பணத்தையும் திருடுவதற்காக தன் சொந்த மாமனையே கொலை செய்தாள் என்று பிளேட்டை மாற்றிப் போட்டு இருந்தான். என்ன தான் அவர் இவனுக்கு துரோகம் செய்து இருந்தாலும், அடிப்படையில் நல்ல மனிதரே!! அதே நேரம் இவளுக்கெல்லாம் இவள் செய்த தவறுக்கு இம்மாதிரியான தண்டனைகளும் வழக்குகளும் தான் தொடுக்க வேண்டும் என்ற எண்ணம்!!
போதாக்குறைக்கு அந்த அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டு ரகோத்தமன் வீட்டில் ஆதாரங்களை திருட முயன்றதோடு மட்டுமல்லாமல் சோமசுந்தரத்தோடு கூட்டாக இவளும் அந்த தீவிரவாத கும்பலில் ஒருத்தி என்று பெயர் சூட்டப்பட்டாள்.
இவளோ “நோ!! நோ!! இல்லை!! எல்லாம் பொய்!!” கத்தி ஆர்ப்பாட்டம் செய்தும் மறுத்தும் எதுவும் அங்கே செல்லுபடியாகவில்லை. 
கங்காதரன் தன் மகள் தன்னை விட பயங்கரமாக திட்டம் தீட்டி செய்துயிருக்கிறாளே என்று வியப்பு. ஆனாலும் அவளை காப்பாற்ற முடியாத கையறு நிலை தான் அவருக்கு!! அவரின் மனைவிக்கோ மற்றதெல்லாம் கூட ஒத்துக் கொள்ளலாம். அரசியல்வாதி குடும்பத்தில் பிறந்ததால் இவ்வாறு செய்திருக்கிறாள் என்று பொறுத்துப் போக கூட முடிந்தது. ஆனால் அப்பனின் குணத்தை அப்படியே கொண்டு கண்டவன் கூட இவள் கூத்தடித்ததை தெரிந்தது முதல் மொத்தமாக வெறுத்து ஒதுக்கி விட்டார் மகளை.
ஒருவனுக்கு எவ்வளவுதான் சமுதாயத்திலும் காவல்துறையிலும் நீதிமன்றத்திலும் தண்டனைகள் கிடைத்தாலும், அவன் செய்த குற்றத்திற்கு குடும்பத்தாரால் ஒதுக்கப்படும் அந்த வலி பெரியது?! ரணம் கொடியது!! தண்டனையில் ஆகச்சிறந்த தண்டனை!!
 கடந்தவைகளை நினைத்துக்கொண்டு மேக ஊர்தியில் மிதந்துகொண்டிருந்த வெண்ணிலவை தான் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம். 
பெண்கள் எவ்வளவு ஆகச் சிறந்த சக்திகள்!!
ஆக்கவும் அழிக்கவும் அவள் ஒருத்தியால் மட்டுமே!!
பொன்னி என்ற பெயரில் என் வாழ்வில் நுழைந்து என்னையும் என்னை வளர்த்த மாமாவையும் அழித்ததும் ஒரு பெண் தான்!!
நிலை குழைந்த என் வாழ்வை சீராக்கி நிமிர்த்தி இப்போது என்னுள் 
உயிராகி இருப்பவளும் பெண் தான்!!
இந்த பெண்களுக்கு தான் எவ்வளவு பெரிய பலம் மனதளவில்!!
எத்துணை பெரிய சாம்ராஜ்யத்தையும் படைத்த.. பழகி கருவறுத்த வரலாறுகள் எத்தனை!! எத்தனை!!
அத்துணையிலும் அவர்களின் மன பலமும், அறிவார்ந்த நுட்ப செயல்களையும் விட, அந்த காதல்.. பாசம்.. அன்பு அது தான் அவர்களின் ஆயுதம்!!
ஆணவனின் அணுவை பிளந்து உரு தெரியாமல் மாற்றவும் வல்லது.. 
அவனையே உலகம் போற்றும் ஆளாக மாற்றவும் வல்லது!!
அவர்களின் மை விழி என்னும் மந்திரகோலால் ஆடாத ஆணவனும் உண்டோ அவனியில்?!
இவ்வாறாக காவலன் காதலனாக மாறி கவிஞனாக கவி புனைய, அவனின் மொத்த கவியையும் களவாட வந்தாள் கள்ளி அவள்!!
அவள் கௌதமின் யசோதரா!!
“என்ன சார் தனிமையில் இனிமை காண்கிறீர்களா? எல்லாம் நாளைக்கு காலையில் வரைக்கும்தான்! அதுக்கப்புறம் முழுக்க முழுக்க இந்த அல்லி ராணியின் அரசாங்கம் தான்!!” என்று அழகாக சிரித்தவளை தான் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
அழகிய சந்தன நிற மைசூர் சில்க் புடவையில், மாலை நலுங்கு வைத்ததற்கு அடையாளமாக கன்னத்திலும் நெற்றியிலும் குங்கும சந்தன தீற்றல்கள் இருக்க, அதனோடு அவளின் சிரிக்கும் கண்களுமாய்.. சிவந்த அதரங்களுமாய் அழகின் உருவாய் நின்றாள்.
கூடவே நெற்றி சுட்டியிலிருந்து கழுத்து அட்டிகை மாலை, வங்கி, குலுங்கும் வளையல்கள், இடுப்பு ஒட்டியாணம் என்று அவளின் சௌந்தர்ய அழகினை கண்டவனுக்கு இரு கண்கள் போதவில்லை.
“அழகா அம்சமா தேவதை போல இருக்கடி தாரா!” என்று அவளை கண்களால் அளந்தப்படி சொன்னான் அவளின் அழகிய மணவாளன்!!
அதில் வெட்கப் புன்னகையை சிந்தியவள், “நீங்களும் தான் இந்த வேட்டியில் கலக்கலா இருக்கிங்க!” என்றாள் கண்களில் காதலை நிரப்பி..
அந்த காதலில் கட்டுண்டு அவளை கட்டியணைக்க வர, “ம்ஹூம் எல்லாம் நாளைக்கு தானாம்! இன்னைக்கு இத்தூண்டு கூட கிடையாதாம் அமைச்சரே!! சாப்பிட வாங்க!! எல்லோரும் உங்களுக்காக தான் வெயிட்டிங்! உங்கள் சாப்பிட கூப்பிட வந்தா உங்களுக்கு என்னை விருந்தாக்க பார்க்குறிங்க!! ம்ம்ம்!!” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“போடி!! ஒரு கிஸ் கூட தராம நான் வர மாட்டேன். அதுவும் இவ்வளோ அழகா உன்னை பார்த்தில் இருந்து!!”
என்று அவன் முறுக்கிக் கொள்ள..
அவள் தான் அவனை மலை இறக்க வேண்டாயதாயிற்று. ஒன்று என்று ஆரம்பித்தது இன்னும் ஒன்று.. இன்னும் ஒன்று என்று இழுத்து கடைசியில் கண்ணாபிரானே வந்து அழைக்கும் வரை நீடித்தது.
மறுநாள் பிரம்ம முகூர்த்தத்தில் யசோதராவை தன்னின் சரிபாதியாய் ஏற்றுக் கொண்டான் மங்கல நாணனை அவளது சங்கு கழுத்தில் பூட்டி மன்னவன்!!
கௌதமுக்கு பெரிதாக உறவினர்கள் என்று யாருமில்லை. அவன் அப்பா சத்யாவின் ஏதோ ஒன்றிரண்டு ஒன்று விட்ட இரண்டு விட்ட மக்கள் குடும்பத்தோடு மட்டும் வந்திருந்து வாழ்த்தி சென்றனர். அதுவும் அவன் மீது இப்போது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை என்று நிரூபணம் ஆன பிறகு!!
கண்ணபிரான் வெளியில் தான் அவர்களுக்கு உறவினர்கள் அதிகம். அதுவும் பல காலம் தொடர்பிலே இல்லாதவர்கள் எல்லாம் இப்பொழுது தேடித் தேடி கண்டுபிடித்து நேரில் பத்திரிக்கை வைத்து அழைத்து வந்திருந்தார். தன் மகளின் திருமணம் உறவினர்கள் ஆசீர்வாதத்தோடு நடக்க வேண்டுமென்று! ஆனால் உறவினர்களுக்கு உறவினர்களாய்.. நண்பர்கள் நண்பராய் இருந்தனர் கௌதம் மற்றும் யசோதராவின் நண்பர்கள் கூட்டம்..
முதல் நாள் பெண் அழைப்பு மாப்பிள்ளை அழைப்பில் தொடங்கி இதோ இப்போது வரை அவர்களது சேவை தான் அனைவருக்கும்!!
அவளின் நட்புக்கள் கேஷவ் ரோஹித் ரோஷினி.. அட!! சஞ்சய் கூட மனம் மாறி இவர்கள் கல்யாணத்திற்கு தான் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறான்.
காலம் மட்டுமல்ல கௌதமின் செயலினால் வந்த மாற்றமே!! அதுவும் இவர்களது காதல் திருமணத்தை.. காதலை கேட்டு அறிந்தவன் அதே காதலை தேடிக்கொண்டிருந்தான் பார்க்கும் பெண்களிடத்தில்!! கிட்டும்! கிட்டும்!! காதல் கிட்டும்!!
காதல் யாரையும் வஞ்சிப்பதில்லை!!
காதலர்கள் தான் தங்களுக்குள் வஞ்சித்து கொள்கின்றனர்.
அடுத்து மணமகள் வீட்டுக்கு அழைத்து வந்து பால் பழம் கொடுக்க அதற்குப்பின் கௌதம் வீட்டுக்கு அழைத்துச்சென்று விளக்கு ஏற்றி வைத்தனர். சிறுது நேரம் இருந்து விட்டு மீண்டும் மண்டபத்தில் அனைவருக்கும் மதிய விருந்து தடபுடலாக.. சைவம் அசைவம் என்று ரக வாரியாக.. பிரித்து மேய்ந்து கொண்டிருந்தது நண்பர்கள் பட்டாளம்!!
அதன்பின் இவர்களுக்கான இரவுக்கு மணமகன் வீட்டில் தான் பெரும்பாலும் இந்த சடங்கை நடத்துவார்கள் என்று எப்படி கேட்பது என்று கண்ணபிரான் தயங்கி நிற்க.. அந்த தயக்கம் எல்லாம் இந்த பாசமிகு மருமகனிடம் இல்லை! இங்கே மண்டபத்தில் அனைத்தும் முடிந்தவுடன் “வாங்க மாமா வீட்டுக்கு போகலாம்!” என்று அவர் வீட்டுக்கு கூட்டி வந்து விட்டான் சொந்த பந்தங்கள் எல்லாம் ஆவென்று வாயைப் பிளக்க…
“இங்க வேணாம் மாப்பிள! உங்களுக்கான தனிமை கிடைக்காது. வீடு பூரா சொந்தக்காரங்க தான் இருக்காங்க” என்று அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்ல..
“சின்ன வயசில் இருந்து இந்த சொந்தத்துக்காக எவ்வளவு ஏங்கியிருக்கேன் தெரியுமா மாமா? அம்மாவோட அன்பு! அப்பாவோட அதட்டல்! அண்ணன் தம்பியுடன் செல்ல சண்டை! அக்கா தங்கையின் உரிமை சண்டை இப்படி நிறைய.. பெரியப்பா பெரியம்மா அத்தை மாமா சித்தப்பா சித்தி இப்படின்னு கூப்பிடுறத்துக்கு எனக்கு சொந்தங்கள் கிடையாது. இப்போ நம்ம வீடு நிறைய சொந்தங்கள் இருக்காங்க.. இதுவே எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு மாமா.. யாருமே இல்லாத தலைமையில வாழ்க்கையை துவங்குவதை விட இத்தனை சொந்தங்கள் இருக்கையில் அவங்க ஆசீர்வாதத்தோடு அன்போடு கூடவே அவங்க கிண்டல் கேலியோடு எங்க வாழ்க்கையை சந்தோஷமாக துவங்கனும்னு நான் நினைக்கிறேன்” என்றவனின் பேச்சில் நெகிழ்ந்து போனார் கண்ணபிரான்.
அதற்குப்பின் கௌதமை யசோதராவின் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு சொந்தங்கள் ஆசீர்வாதத்தோடு தங்கள் வாழ்க்கையை தொடங்கிட தன் அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் யசோதரா!!
அழகு பதுமையென பிங்க் நிற ஜார்ஜெட் புடவையில் மெலிதான ஒப்பனையோடு தலை நிறைய மல்லிகை பூச்சூடி வந்தவளை தான் தாபமும் மோகமும் போட்டி போட பார்த்திருந்தான் காளையவன்!!
கன்னி அவளோ தயங்கி முயங்கி மெல்ல அன்ன நடையிட்டு வந்தாள் அவனிடம். 
“என்னங்க என்னை அப்படி பாக்கறிங்க? முதல் தடவ பார்க்குற மாதிரி!” எனறவன் பார்வையை உணர்ந்து மெல்லிய வெட்க சிரிப்புடன் கேட்டாள் கோதை!!
“இன்னிக்கு நீ அவ்வளோ அழகா இருக்க தாரா” என்று அவள் கன்னத்தை விரல்களால் வருடியப்படி மன்னவன்!!
மெல்ல அவள் மூக்கோடு மூக்கை உரசியபடி தாரா என்னை மாமான்னு கூப்பிடுறியா?” என்று அவன் கேட்க.. புரியாமல் பார்த்தவளை “ப்ளீஸ்டி.. என்னை யாரும் இந்த மாதிரி உறவு சொல்லி கூப்பிட்டது இல்லை? இங்கே உன் உறவுகள் என்னை முறை சொல்லி கூப்பிட்டாலும், என் முதல் உறவான நீ கூப்பிடனும் ஆசையா இருக்கு டி தாரா!!” என்று கேட்டான் கண்களால் இறைஞ்சி..
அவன் சாதாரணமாக கேட்டாலே சரி என்று கூறுபவள், இப்படி கண்களால் இறைஞ்சி வலி நிறைந்த வார்த்தைகளோடு கேட்டபின் மறுக்கவா போகிறாள்?
மாமா.. மாமா.. மாமா.. மாமா.. என்று ஆயிரம் முத்தங்கள் அர்ச்சித்தால் அவனது முகத்தினை..
முத்தங்களுக்கிடையே மாமாவா? இல்லை மாமாவுக்கு இடையினில் முத்தமா? என்று திகைத்து திண்டாடி தான் போனான் இந்த புதிய கணவன், இளம் மனைவியின் காதலில்!!
அதில் சந்தோஷம் அல்ல.. பேரானந்தம் கொண்டான் மாயவன்!! அதை அவனது வழியில் அவளது கன்னத்தில் அழுத்தம் முத்தம் வைக்க.. கன்னங்களோ கன்றிச் சிவந்தது‌. 
கன்றிச் சிவந்த கன்னங்களை கைகளில் தாங்கியவாறு அவனை மிரட்சியாகப் பார்த்தாள் பாவை. அவள் உதடுகள் மெல்ல நடுங்கின. நாக்கை நீட்டி உலர்ந்த உதடுகளைத் தடவி எச்சில் ஈரம் செய்து, உதடுகளை கடித்து மடித்துக் கொள்ள..
“ரிலாக்ஸ் தாரா” மெல்ல கிசுகிசுத்தான் அவள் கையைப் பற்றியவாறு!! அவள் கைகளோ இன்னும் நடுங்கின. அவளின் தளிர் விரல்களை தன் விரல்களுடன் இணைத்து பின்ன, அவளும் தன் நடுக்கத்தை விடுத்து மன்னவன் விரல்களோடு இறுக்கி கொண்டாள்.
“லவ் யூ ஸோ டி!!” என்று கிசுகிசுத்தபடி அவளை அள்ளியவன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மெத்தையில் பூவை அவளை கிடத்தி..
பிறை நெற்றியில் முத்தமிட, அவள் சிலிர்த்து சிணங்கினாள்!!
கூர் மூக்கில் முத்தமிட, அணங்கு அவள் தடுமாறினாள்!!
கனிந்த சிவந்த கன்னங்களில் முத்தமிட, அவள் அழுத்தமாக அவனை இறுக்கினாள்!!
துடிக்கும் செர்ரி உதட்டில் முத்தமிட, அவள் மயங்கினாள்!!
அழுத்தமாய்!! ஆழமாய்!! முத்தமிட்டு.. வேகமாக மூச்சு வாங்க இதழ்களை விடுவித்தவன், மீண்டும் அவள் முகமெங்கும் முத்தமிட்டான் தாபத்தோடு!!
அவனின் இந்த முத்த யுத்தத்தில்
அவள் அவனின் பரந்த மார்பில் தஞ்சமடைந்து இறுக்கிக் கொண்டாள்.
அவனோ மீண்டும் மீண்டும் அவள் முகத்தை நிமிர்த்தி இனிப்பான இதழ்களை கவ்வி கொண்டான் சளைக்காமல்!! அவள் கண்களோ சொக்கி மூடியது.
அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன், அவள் கண்கள் ஆசையாகப் பார்த்து, “ஷல் வீ தாரா?”
என்று கேட்க..
அவளின் சூடான மூச்சுக் காற்று அவன் முகத்தில் வீச..
“மாமா..!!” என்றாள் கிறக்கமாக..
அந்த ஒற்றை வார்த்தை அவனை உசுப்பி விட்டது. மீண்டும் மீண்டும் அவளது இதழ்களில் ரசம் அருந்தி, கழுத்து வளைவில் மெல்ல கடித்து.. வெண்ணிற நெஞ்சில் முகம் புதைத்து, நாபிக் கமலத்தில் வீணை மீட்டி.. அவளது வெட்டிட்டு பிஞ்சு விரல்களை மெல்ல கடித்து முழுதாய் மொத்தமாய் அவளை தனக்குள் விழுங்கினான்.
கூடி கலைத்து தன் நெஞ்சத்தை மஞ்சம் என பாவித்து உறங்கும் வஞ்சியின் பிறை நுதலில் மெல்ல முத்தமிட்டு தாரா என்று அழைத்தான்.
“மாமா..” என்றாள் சோர்வாக!!
“தாரா” அவள் உதடுகளை உரசியபடி மீண்டும் அழைக்க..
“என்ன மாமா?” என்றாள் பாவை!
“பசிக்குது டி” என்றான் கள்ளனாய்!!
“அச்சச்சோ.. நீங்க சாப்பிடலையா மாமா?” கேட்டாள் வெள்ளந்தியாய்!!
“சாப்பிட்டேன்.. ஆனா மறுபடியும் பசிக்குது” என்றான் கள்ள புன்னகையுடன்..
“இங்க ப்ருட்ஸ் தான் இருக்கு மாமா?” என்றாள் பொறுப்புடன்..
“இது வேற பசி டி என் மக்கு பொண்டாட்டி” என்று மூக்கை பிடித்து ஆட்ட..
“ச்சீ!! பேட் பாய் நீங்க மாமா” வெட்கத்தை சிரிப்பில் அவள் காட்ட.‌.
“இந்த பேட் பாய் உன்னை தான் சாப்பிட போறேன்!” என்றவன் செயலில் நிரூபிக்க..
காதல் அங்கே காமமும் மோகமுமாய் ஆட்சி செய்தது!!
கொள்ளையிட வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *