வா!! என் கலாப காத(வ)லா
17
வா!! என் கலாப காத (வ)லா…
ஜியா ஜானவி ❤️
கடும் கோபத்தில் முறைத்துக் கொண்டிருந்த கௌதமை பார்த்து எச்சில் விழுங்கியவாறே அழகாக மடிக்கப்பட்டு டிஷ்யூ பேப்பர் அடங்கிய அந்த பாக்சை நீட்டினாள் யசோதரா!
“உள்ளே கொண்டுபோய் வைங்க!” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் கூறினான்.
“இவளும் இன்னைக்கு நல்லா சொதப்புரோம்.. அதுவும் எல்லார் முன்னாடியும் நல்லா!” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். ஆனால் அவளின் சொதப்பலுக்கு பின்னால் இருப்பவன் அவன் என்பதை மறந்து!!
அறையின் உள்ளே சுவற்றை ஒட்டி இருந்த டேபிளில் அந்த பாக்சை வைத்துவிட்டு இவள் வெளியில் வர, வாசலை அடைத்து நின்றிருந்தவன் அவசரமாக இருபுறமும் திரும்பி திரும்பி பார்த்தான். எதற்கு இவன் அப்படி பார்க்கிறான் என்று அவளது சிறுமூளை பெருமூளையிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க..
கௌதம் அவளது மெல்லிடையை இரு பக்கமும் கைகளால் வளைத்து பிடித்து, சற்றே உயர தூக்கி, அறையின் உள்ளே சென்றவன் தனது இடது காலால் கதவை மூடினான்.
அப்போதுதான் டிஸ்யூ எடுத்துக் கொண்டு வந்த ரோஹித் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் ஸ்தம்பித்து வாய் பேசாது திரும்பி செல்ல நினைத்தவன், “வேண்டாம்!! இங்கேயே நிற்போம்!! யாராவது வந்தால் தப்பாக செய்தி பரவி விடும்!!” என்று நின்று கொண்டான்.
கடைசில என்னையே விளக்கு பிடிக்க வைத்து விட்டாளே என்று மன புலம்பலுடன்!!
அவளின் இடை வளைத்து இறுக்கியவன் கைகளில் மாட்டிக்கொண்டவளோ தன்னை விடுவித்துக் கொள்ள போராட,
“விடுங்க.. விடுங்க.. கொஞ்சமாவது உங்களுக்கு இங்கிதம் இருக்கா? நீங்க பாட்டுக்கு என்னை தூக்கிட்டு வரிங்க.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? இது நான் வேலை பார்க்கும் ஆபீஸ்! என் மானமே போக போகுது உங்களால்!” என்றவள் அவனை விலக்க முயன்று தோற்று தன் தலையில் கை வைத்துக் கொண்டாள், அவனது தோளை ஸ்டார்ட் ஆக வைத்து!!
அவள் பேசப் பேச சிறிதும் அசைந்தான் இல்லை அவன். அவளைத் தூக்கி வந்தவன் அங்கிருந்த பெட்டில் அவளை நிற்க வைத்தான். கதவோரம் சாய்ந்து நின்று புருவங்களை உயர்த்தி சிரித்தான். அவளோ கோபப் பார்வைப் பார்த்தாள்.
அவளது கோபம் மின்னும் கோலி குண்டு கண்களின் அபிநயத்தை பார்த்தவாறு கைகளால் அவளின் கன்னம் உரசி, அவளது இதழ் பிடித்து இழுத்தவன் இறுக்கி அதக்கி கொண்டான் தன் அதரங்களுக்குள். அவனின் இருப்பக்க தோளிலும் தன் கைகளை அழுந்த பதித்து கிடந்தாள் கிறங்கி போய் யசோதரா!!
பின் அவள் முன்னால் இரு கைகளையும் விரித்து சிறிது நேரம் நின்றவன் பின்பு திரும்பி நின்றான்.
என்ன செய்கிறான் இவன் என்று யோசனையாக அவள் பார்க்க..
“நீதான காலையில் நான் ஜீப்பை விட்டு இறங்கும் போது வாய்க்குள் வாட்டர் பால்ஸ் ஒழுகுவதை அறியாமல் சைட் அடித்துக்கொண்டு நின்றாய்! அதுக்குதான் உன்னை ப்ளான் செய்து தனியாக கூட்டிட்டு வந்தேன். இப்போ இங்க நீ நானு மட்டும் தான்!! உன் இஷ்டம் போல நல்லா சைட் அடிக்கலாம் இந்த ரகோத்தமனை!!” என்றான்.
ஒரு கையை பாக்கெட்டில் விட்டபடி அருகில் இருந்த சுவற்றில் சற்றே சாய்ந்து நின்றிருந்தான் அவன்.
‘அடப்பாவி!! இதுக்கு தான் தனியா கூட்டிட்டு வந்தியா? உன் அக்கப்போருக்கு அளவே இல்லடா ரகோத்தமா!!’ என்று இவள் நம்ப முடியாமல் அவனைப் விழி விரிய பார்க்க.. அவளின் பார்வையை உணர்ந்தவன் சிரிப்பை அவன் கற்றை மீசைக்குள் அடக்கினான். மேலும் மீசையை நீவிக்கொண்டே அவளை அங்குலம் அங்குலமாக அளந்தான் பார்வையால்..
“ஆறடி தூரத்தில் நின்று கொண்டு ஆளையே விழுங்கிற மாதிரி பாக்குறதை பாரு! பாரு.. பாரு..” என்று பேசிக்கொண்டே இருந்தவளுக்கு திடீரென்று மண்டையில் மணி அடிக்க அப்போதுதான் உணர்ந்தாள் அவனின் இந்த நெருக்கத்தை.. உரிமையை.. அதைவிட அவனது காதலை..
உணர்ந்து கொண்டானா என் உணர்வுகளை?
புரிந்து கொண்டானா என் நேசத்தை?
கண்டு கொண்டானா என் காதலை??
தெளிந்து வந்தானா என் அன்பை கண்டு?
என்று கண்கள் குளம் கட்ட.. பார்வைகள் மறைக்க.. அவனைத்தான் பார்த்து இருந்தாள் விழி அகலாமல் பாவை அவள்!!
அவளின் உணர்வுகளை புரிந்தவனாக ஒற்றைக்கை மட்டும் அவள் புறம் நீட்டி விரல்களால் வா வென்று அழைக்க அடுத்த நிமிடம் மெத்தையில் இருந்து குதித்து அவனை நோக்கி ஓடினாள்.
அவன் நீட்டிய கைகளை பற்றியவளை இழுத்து இறுக்க அணைத்து இதழ் ரசம் பருகினான் மூச்சு முட்ட.. முட்ட..
அவனது வலது கரமோ அவளின் இடையை இறுக்க.. வலதுக் கரமோ அவளின் பின்னங்கழுத்தை அழுத்தி பிடித்திருந்தது அவனுக்கு வாகாக!!
யசோதரா கொஞ்சம் கொஞ்சமாய் அவனிடம் தொலைந்துக் கொண்டிருந்தாள். அவனின் சூடான மூச்சுக் காற்று.. பின்னங்கழுத்தின் பிடி.. இடை வருடிக் கொண்டிருக்கும் விரல்கள்.. அதை விட அவன் முரட்டு இதழ்கள் அவள் இதழ்களிடம் பேசும் அந்தரங்க மொழிகள்.. இப்படியாக அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தான் கோமகன்!!
மெல்ல மெல்ல அவன் பிடியிலிருந்து விலகி நிற்க.. சிவந்து கனிந்த உதடுகளை கண்டவன் போதாதவனாய் மேலும் அவளை திணற வைத்தான் முத்தத்தால் அவளின் ரகோத்தமன்!!
“போதும்! போதும்! விடுங்க யாராவது வந்துடுவாங்க” என்று அவள் சிணுங்க அந்த சிணுங்களில் சிலிர்த்து அடங்கியது அவனின் தேகம்!!
அவனை இழுத்துக்கொண்டு குளியலறையில் சென்றவள் கையில் இருந்த கர்ச்சீபை நனைத்து அவனது யூனிபார்மில் கறைபட்ட இடத்தில் துடைத்து, பின் டிரையர் கொண்டு காய வைக்க.. அதை எல்லாம் ஒரு சிறு சிரிப்புடனும் கண்ணில் மையலுடன் தையலை பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்!!
அவளோ அவளின் மார்புகள் தொடை பகுதியில் இருந்த கறைகளை துடைக்க.. துடைக்க.. அவனுக்கோ உள்ளே பல உணர்வுகளின் எழுச்சி!!
திரும்பவும் கறை இருக்கிறதா என்று அவள் தொட்டு தடவி சோதிக்க..
‘அய்யோ!! இவள் நம்மை ரொம்பவும் சோதிக்கிறாளே!! ஆண் பாவம் பொல்லாததடி ராட்சசி!! போதுமடி சோதித்தது!!’ என்ற அவனின் மனது கூப்பாடு எல்லாம் பெண்ணவளின் காதுகளுக்கு எட்டவே இல்லை!!
அவளோ தன் பணியை செவ்வனே செய்ய அவளிடம் தன்னை முழுதாக ஒப்புக்கொடுத்தாற் போல் ரசனையோடு நின்றிருந்தான் கௌதம்.
பேச்சுகள் அற்ற மௌன பாஷைகளே அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது வெகு நேரங்கள்.
“வாங்க போகலாம்!” என்று அவள் முன்னே நடக்க, சட்டென்று அவள் கையை பற்றி நிறுத்தியவன் “ஈவினிங் வீட்டுக்கு வாடி! உங்கிட்ட நிறைய பேசணும்! இங்கே ஒன்றும் முடியாது!!” என்றவன் அவளை இறுக்க அணைத்து விடுவித்தான்.
“முதலில் நான் போகிறேன். கொஞ்ச நேரம் கழித்து நீ வா!” என்று விடுவிடுவென்று கதவை திறந்து கொண்டு அவன் வெளியே வர, அங்கே நின்றிருந்த ரோஹித்தை பார்த்து நெற்றி சுருக்கினான் கௌதம்.
அவரும் திருதிருவென்று விழித்துக் என்ன சொல்வது என்று படபடத்த நெஞ்சுடன் பயத்துடன் கௌதமை பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ இங்க என்ன பண்ற?” என்று கௌதமின் கூர் வார்த்தைகள் முதுகுத்தண்டு வரை சென்று சில்லிட்டது ரோஹித்துக்கு.
“சார் சார் நான் யசோவோட ப்ரண்ட் தான்! நீங்க ரெண்டு பேரும் உள்ளே போனதை நான் பார்த்தேன். வேற யாராவது பார்த்தால் பிரச்சனையாயிடும் அவளுக்கு இங்க அப்புறம் பேர் கெட்டுப் போய்விடும். அதான் யாரும் வராங்களான்னு நான்..” என்று அவன் திக்கித் திணறி தன்னிலை விளக்கம் கொடுக்க, சுழித்திருந்த அவனது நெற்றி புருவங்கள் சீராக, ரோஹித்தின் முதுகில் தட்டிக் கொடுத்தவன் “அவள் உள்ளே இருக்கா.. நீ கொஞ்ச நேரம் உள்ளே போய் அவளோடு பேசிட்டு இருந்துட்டு. அதுக்கு அப்புறம் அவளோடு வா!” என்று சொன்னவன் இன்டர்வியூ நடக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.
“வணக்கம் மக்களே!! இது குற்றம் கடிதல்.. குற்றங்களை செய்பவர் யாராகினும் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது நம் அனைவரின் திண்ணிய எண்ணம்!! அது போல பல குற்றவாளிகளை தன் அதீத தீரத்தாலும் திறமையாலும் பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்த காவல்துறையின் உயர் அதிகாரி இப்பொழுது நம்மோடு.. திரு கௌதம் ரகோத்தமன் ஏசிபி அவர்கள்!!” என்று கணீரென்று பேச்சோடு ஆரம்பித்தான் சஞ்சய்!!
அதற்குப் பின் அவனது பழைய வழக்குகள் பற்றி சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார்கள். குற்றவாளிகளை எந்தெந்த முறையில் மக்கள் கண்டுபிடிக்க வேண்டும் குறிப்பாக பெண்கள் என்று சில பல யோசனைகளை எல்லாம் கூறிக் கொண்டிருந்தான் கௌதம்.
“பெண்கள் பார்லர் போவது எவ்வளவு முக்கியமோ அதே போல தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொள்வது ரொம்ப முக்கியம்!” என்று கௌதம் கூற கௌதம் மீதான கோபம் சஞ்சயின் மனதில் இருந்து கொண்டுதான் இருந்தது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான அவனை வார..
“நீங்க சொல்றது சரிதான் சார்! ஒருத்தர் ரெண்டு பேருன்னா பரவாயில்லை நாலஞ்சு பேர் சேர்ந்து வந்தால்.. அந்த நேரத்துல என்னதான் தற்காப்பு கலை காத்திருந்தாலும் பொண்ணுங்க மாட்டிக்கிறாங்க!” என்று அவனை மடக்கி விட்ட திருப்தியில் சஞ்சய்!!
“இந்த சினிமாவில காட்டுற மாதிரி எம்பி எம்பி நம்ம வீட்டு பொண்ணுங்க எல்லாம் சண்டை போட மாட்டாங்க.. ஆனாலும் தற்காப்பு கத்துக் கொடுக்கிற இடத்திலேயே சில பல நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பார்கள். அதை பயன்படுத்தினால் கண்டிப்பாக தப்பிக்க முடியும். பொதுவா எல்லோருக்கும் சுண்டுவிரல் பலவீனம். தங்களைத் தாக்க வருபவர்களின் சுண்ணுட விரல்களை பிடித்து பெண்கள் ஒடிக்கும் போது எப்பேர்ப்பட்ட பலவானும் அந்த நேரத்தில் தன்னை மறப்பான். அதே போல அவர்களது மர்ம உறுப்பில் வேகமாக தாக்கிடும் போதும் தங்கள் பலங்களை இழப்பார்கள்.. இதுபோல நிறைய நுணுக்கங்களை தற்காப்புக் கலைஞர் பயன்படுத்துவார்கள். வெறும் கத்துக்குட்டி தான் கத்திகிட்டு கிடக்கணும்.. போதாக்குறைக்கு எங்கள் காவல்துறையால் உண்டாக்கின காவலன் ஆப் இருக்கிறதல்லவா?” என்றான்.
எப்படியும் மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் இவன் பதில் சொல்லி விடுகிறேனே என்று கடைசியில் “உங்க போலீஸ்காரர்களே நிறையபேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.. அவர்களிடம் இருந்து யார் இவர்களை காப்பாற்ற?” என்று இப்பொழுது சமாளி என்று சவால் விட்டான் சஞ்சய் கண்களாலே!!
“இதெல்லாம் எனக்கு ஜுஜுபி!!” என்பது போல அவனை பார்த்தவன் “காக்கி சட்டை போடாத ஒவ்வொரு ஆண்மகனும் போலீஸ்தான்!! காக்கிச் சட்டை போட்டாலும் ஒவ்வொரு போலீசும் ஒரு அண்ணன் தம்பி தந்தை குறைந்தபட்சம் ஒரு அன்னைக்கு மகனாக இருப்பான். அந்த கணநேரத்தில் அதை நினைத்தாலே இம்மாதிரி பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்!! தவறு இடத்தில் இருந்தாலும் தான் நடக்கிறது காவல்துறையை மட்டும் குறை சொல்லி பயனில்லை!!” என்றான்.
“காமுகர்களின் கண்களுக்கு பெண்கள் அந்த நேரத்தில் வெறும் போகப் பொருட்களாக தான் தெரிகிறார்கள்! உயிருள்ள மனுஷியாக கூட பார்ப்பது இல்லை. அதனால்தான் சட்டம் இம்மாதிரியான கேஸ்களில் தற்காப்புக்காக கொலை செய்வதை கூட கொலை இல்லை என்கிறது!” என்று முடித்தான் கௌதம்.
“ஆனால் இதே போல் ஒரு போலீஸ் செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று சுற்றி முற்றி அவனை மாட்டி விடவே பார்த்தான் சஞ்சய்!!
“உண்மைன்னு தெரிஞ்சா யோசிக்கவே மாட்டேன் பட்டுனு எடுத்து சுட்டுடுவேன் அங்கே!” என்று கைகளால் அவனது வயிற்றுக்கு கீழே குறிவைத்து கௌதம் சொன்ன விதத்தில், சஞ்சயின் கைகள் தன்னை அறியாமல் அங்கே சென்று மறைத்தது!!
இப்போது அடக்கப்பட்ட சிரிப்புடன் தன்னைப் பார்க்கும் கௌதமை எதையாவது எடுத்து மண்டையில் போடலாம் என்று வெறியே வந்தது சஞ்சய்க்கு.
“நீங்க சொன்னது வெறும் பேச்சுக்கு மட்டும் தானே ஒழிய.. நிஜமாக எல்லாம் யார் செய்கிறார்கள்? அதுவும் உங்கள் ஆட்கள் என்றாலே அவருக்கு தண்டனை கொடுப்பதற்கு பதிலாக வேறு துறைக்கு தான் ஏமாற்றுகிறீர்கள்?” என்று கேட்டான்.
“நீங்க என்னோட பழைய ஹிஸ்டரியை பார்த்துட்டு வரலைனு நினைக்கிறேன் ஏன்னா நானே ஒரு கமிஷனரை என்கவுண்டரில் போட்டவன்” என்று வணக்கம் கூறி தனது இன்டர்வியூவை முடித்துக் கொண்டான்.
போகும்போது சஞ்சய் மற்றும் மற்றவர்களை அழைத்து “திடீரென ஏன் இங்கே இன்டர்வியூக்கு வந்தேன் உங்களுக்கெல்லாம் குழப்பமாக இருக்கலாம்? எஸ்பி தானே வருவதாக இருந்தது என்று! ஆனா இன்னைக்கு தான் நான் டியூட்டிலேயே ஜாயின் பண்ணி இருக்கேன்! அதை ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் ‘நான் ஜாயின் பண்ணிட்டேன்!’ என்று சொல்ல முடியாது இல்லையா? இந்த இன்டர்வியூ பார்க்கும்போது எல்லோருக்கும் தெரியும்!” என்று அந்த எல்லோருக்கும் அழுத்தத்தைக் கொடுத்தவன் அங்கிருந்து விரைந்தான்.
கௌதம் சொல்லி சென்றது போலவே அவனது இன்டர்வியூ காட்சிகளைப் பார்த்து ஒட்டுமொத்த கோபத்தையும் அருகிலிருந்த மேசை மேல் காட்டியது அந்த உருவம். “இவன் எப்படி? எப்படி திரும்பி வந்தான்? மொத்தமாக இவனின் எல்லா நம்பிக்கையும் மனோ தைரியத்தையும் புதைத்துவிட்டேன் தானே.. இருந்தும் இப்படி எப்படி எப்படி திரும்பி வந்தான்?” என்று அங்கலாய்த்தது. அதிலும் இன்டர்வியூ கொடுக்கும் போது அவன் முகத்தில் இருந்த கம்பீரமும் ஆளுமையும் அந்த உருவத்தை நிலைகுலையச் செய்தது.
ஆஆஆஆஆ என கோபம் கொண்டு பெருங்குரலெடுத்து கத்தியது..
“விடக்கூடாது! விடக்கூடாது அவனை!! அவன் மட்டுமல்ல அவன் கிட்ட இருக்குற ஆதாரத்தையும் சேர்த்து அள்ளி கிட்டு வாங்க” என்று தன் அடியாட்களுக்கு ஆணையிட்டது.
கௌதமை தேடி வந்தவர்களின் குறி யாராக இருக்கும் கௌதமா?? அல்லது அவனின் மனம் கவர்ந்தவளா??
இன்டர்வியூ முடித்து கௌதம் சென்றுவிட்டாலும் அங்கே ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு மாதிரி நின்றான் அவன்!
சஞ்சய் பெரும் கோபத்தில் அவனை ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணியவாறு தன் கேபினுக்குள் நுழைத்து தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினான்.
“டேய் நீ பாட்டுக்கு அவனை பழி வாங்குறேனு என்று குருட்டாம் போக்கில் எதையாவது செஞ்சு அவன் கிட்ட வாங்கிக்காதே! நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவன் அவ்வளவு நல்லவனும் கிடையாது! அதே சமயம் லஞ்சம் வாங்கி சாப்பிடுகிற அளவுக்கு கெட்டவனும் இல்லை! அதனால பார்த்து உஷாரா காய் நகர்த்தும்! அவசரப்பட்டு அவன் மேல கை வைக்காதே!!” என்று அறிவுரை வழங்கினார்.
“சரி!!” என்று போனை விட்டு எறிந்தவன் “அப்படி எல்லாமா உன்னை விட முடியாது கண்டிப்பாக விட முடியாது டா கௌதமா!!” என்று கொந்தளித்தான்.
மதியம் உணவுக்கு பின் மீண்டும் அவர்களின் ‘போகிற போக்கில்’ நிகழ்ச்சிக்காக ரோஹித் அழைத்துக்கொண்டு வெளியில் வந்திருந்தாள் யசோதரா. ஆனால் மனம் சிறிதும் வேலையில் ஒட்டவில்லை அவளின் ரகோத்தமனே ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
அவளை கண்டும் காணாதது போல வர, அருகில் வந்த ரோஹித்தோ இதுவரை பல லொகேஷன்களை காட்டி “இங்கே எடுக்கலாமா?? அங்கே எடுக்கலாமா? என்று கேட்டான். அனைத்துக்கும் தலையை அசைத்துக் கொண்டே வந்தாள். ஆனால் எங்கேயும் அவள் ஷோவை நடத்த காணோம்.
தன் கையில் இருந்த கேமராவை திருப்பி பேக்கில் வைத்தவன், “தாயே நீ நீயாக இல்லை! மொத்தத்தில் இங்கே உன் கவனம் கொஞ்சம் கூட இல்லை! நீ கிளம்பு வீட்டை பார்த்து! நானும் கிளம்புறேன்.. நாளைக்கு பார்க்கலாம்” என்று அவன் கூறி சென்று விட்டான்.
யசோ கள்ள புன்னகையுடன் போகும் அவனை பார்த்து உதடு கடித்து சிரித்தவள் அடுத்த நிமிடம் தனது வண்டியை செலுத்தினாள் ரகோத்தமன் வீட்டை நோக்கி..
மாலை வெயில் சற்று தன் உக்கிரத்தை குறைத்து கொண்டிருந்தாலும் வெம்மையின் தாக்கம் சற்றும் குறையவில்லை. அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாது தன்னவனை காண ஆவலோடு பறந்து கொண்டிருந்தாள் தன் நவயுக குதிரையின் கடிவாளத்தை முடக்கி விட்டபடி..
இன்று முதல் நாள் என்பதால் சற்று
முன்னதாகவே வீடு வந்து இருந்தான் கௌதம். வந்தவனுக்கு வீட்டில் கால் நிலை கொள்ளவே இல்லை பரபர என்றது.
பரதன் தான் அவனுக்கு ஜுப் ஓட்டுக் கொண்டு வந்தது. பின்னாலேயே வந்தவர் அவரது ரூமுக்கு செல்ல இவன் உடையை கூட மாற்றாமல் பரதன் என்று சத்தமாக அழைக்க..
“சொல்லுங்க சார்!!” என்று வந்த நின்றவரை “ஒன் வீக் லீவு எடுத்துட்டு வீட்டுக்கு போயிட்டு வாங்க!” என்றான்.
கடந்த இரண்டு வருடங்களாக இவன் பின்னே நிழலாய் இருப்பவர். இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் இவனோடவே இருந்தவர். கண்களை காதுகளை இறுக்க மூடிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் அனைத்து திட்டுக்களை வாங்கிக் கொண்டு அமைதியாக அவனுடன் பயணித்தவர்.
மீண்டும் இன்று கௌதம் காக்கி சட்டை போட்டு இறங்கிவர பார்த்தவரின் கண்களில் கண்ணீர் வெள்ளம் தான்.
பரதன் மாதிரி நம்பிக்கை விசுவாசம் அன்பு கொண்டவர்கள் கிடைப்பது எல்லாம் அரிது! வரம் போல தான்!! அந்த மட்டில் இவ்வளவு துரோகங்களை ரணங்களை சந்தித்து இருந்தாலும் பரதன் மாதிரி அன்பானவர்கள் அவனை சுற்றி இருப்பது அவன் செய்த பாக்கியமே!!
இன்று மறுத்து ஏதும் சொல்லவில்லை பரதன். சரி என்று அவருக்காக ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்று பத்து நிமிடங்களில் பேக் செய்தவர் “வரேன் சார்!!” என்றவரின் கையில் எண்ணிப் பார்க்காமல் பணத்தை திணித்தான்.
இன்றைக்கு என்ன ஆனது நாம் சாருக்கு என்று ஆச்சரிய அதிர்ச்சியில் பரதன்!!
எப்பொழுதும் வீட்டுக்கு வந்தாலும் ‘யசோ மா!’ என்று அழைக்கும் பரதனின் குரல் கேட்காமல்.. திறந்த வீட்டுக்குள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே “பரதன் அண்ணா!!” என்று இவள் அழைக்க எங்கேயும் நிசப்தமே!!
“எங்க போயிட்டாரு இந்த பரதன் அண்ணா!” என்று கண்களால் துழாவி கொண்டு அவ்வப்போது அவரை அழைத்துக் கொண்டே மெதுவாக மாடி ஏறி கௌதமின் அறையை பார்க்க.. அங்கு கௌதமும் இல்லை.
“ரெண்டு பேரும் எங்க போனாங்க?” என்று யோசித்துக்கொண்டே பால்கனியில் நின்று வெளியில் தோட்டத்தில் இருக்கிறார்களா என்று பார்த்தவளின் இடை வேகமாக இழுக்கப்பட்டு திறந்த மார்போடு நச்சென்று மோதி நின்றது.
வேறு யார் அவளின் ரகோத்தமன் அல்லாது??
விழி விரித்தவளின் தலையை சாய்த்து வெண் சங்கு கழுத்தை கவ்வி முத்தமிட்டான் கௌதம். அவள் கழுத்து வியர்வையின் வாசத்தை முகர்ந்தவன், அதன் ஈரத்தையும் சுவைத்துப் பார்த்தான். மீண்டும் மீண்டும் அவள் கழுத்தில் அழுத்தி அழுத்தி முத்தமிட்டான். தன் நுனி நாக்கை நீட்டி அவள் கழுத்தில் ரங்கோலி கோலமிட.. அவளோ உணர்ச்சிப்பெருக்கில் அவன் கேசத்திற்குள் விரல்களைவிட்டு நெறித்தாள்.
“டேஸ்டி டி!!” என்று அவள் கழுத்தில் மெல்ல கடித்து சுவைத்தான் பழத்துண்டுகள் போல..
அவளோ சிலிர்த்து சிணுங்கி அவனின் கழுத்தை இறுக்கினாள். மெல்ல மெல்ல அவனது கடித்தலும் முத்தமிடுதலும் சுவைத்தலும் நிற்காமல் சென்றுகொண்டே இருந்தது, அவள் கழுத்தில் இருந்து மெல்ல மெல்ல முகத்தை நோக்கி.. அவளின் விரல்களோ அவனது கழுத்திலிருந்து முதுகில் நங்கூரம் இட்டது நகக்கண்கள் அழுந்த பதிய..
அப்போதுதான் கவனித்தாள், அவன் சட்டையோ பனியனோ அணியவில்லை. வெற்று மார்புடனே இருந்தான். முடிகளற்ற அவன் திரண்டு விரிந்த மார்பில் அவள் விழிகள் லயித்து மீண்டன.
அவளின் சூடான உள்ளங்கையை அவனின் நெஞ்சில் அழுந்தப் பதித்து மெதுவாக தேக்கு மர தேகத்தை தடவ… கிறங்கினான் கௌதம் ரகோத்தமன்!!
அவன் மார்பிலிருந்த அவள் கைகள் அவனின் தேகம்தனை விரல்கள் கொண்டு அதன் வலிமையை சோதிக்க.. அவனது உடலில் உஷ்ணம் எக்கு தப்பாக ஏறியது. அதில் கீழ் உதடு மடித்து பற்களால் கடித்து தலையை பின்னால் சாய்த்து கொண்டான் கோமகன்!!
சூடாக தேய்த்தப்படி மேலே கொண்டுச் சென்ற அவளது தளிர் விரல்கள் அவன் பின் கழுத்தில் முற்றுகை இட்டு நின்றது. அதில் தேகம் சிலிர்த்தது ஆணவனுக்கு!!
”தாரா!! கொல்றடி!!” கிறங்கினான் கௌதம்.
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உணர்ச்சிகளை பொங்க வைக்கும் இடங்களில் பின்னங்கழுத்து அதி முக்கியம்!! அதுவும் வெறும் விரல்கள் கொண்டே அவனின் தாபத்தை ஏற்றிக் கொண்டிருந்தாள் யசோதரா!!
ஆணவனின் திறந்துக் கிடந்த வெற்று நெஞ்சில் இதழ் பதித்தாள் வஞ்சி!
“எங்கடி கத்துக்கிட்ட இதெல்லாம் தாரா? கொல்றடி!! “
அவளோ பதிலளிக்காமல் கிளுக்கி சிரித்தாள்.
“சொல்லுடி ராட்சசி!!”
“எங்கேயும் இல்ல..”
“எங்கேயும் இல்லையா? மயக்குறடி தாரா!”
“சொல்லித் தெரிவதில்லை மன்மத கலை ரகோத்தமா” என்று இரு கைகளாலும் அவனின் முகத்தை தடவி மீசையை பிடித்து இழுத்து மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்.
கண்களை விரித்தவன், “வெறும் கலை கற்று என்ன லாபம்?” என்றான்.
“ஏனோ?” என்று அவள் ஒற்றை புருவம் உயர்த்த..
சட்டென அவளை இழுத்து அணைத்து அவள் உதட்டுடன் தன் உதட்டைப் பதித்து முத்தமிட்டு விலகியவன்,
“கலை என்னடி கலை..
இனி காண்பாய்..
ரகோத்தமனின் லீலை..
காதல்-மன்மத லீலை!!
என்றவன் அவள் இதழ்களை கவ்வ, சிலிர்த்துக் கண் மூடினாள் கோதை!! இதழில் ஊறும் அமுதத்தின் தித்திப்பைச் சுவைத்தே விடுவித்தான் வெகு நிதானமாக!! சில்லென்றிருந்த அவளின் அழகான காது மடலை முத்தமிட, அவள் உடல் சிணுங்கி நெளிந்து அவனை தள்ளிவிட்டு கீழே ஓடிச் சென்றாள்.
கௌதமை பார்த்து வவ்வலம் காட்டிப்படி மாடிப்படியில் தடதடவென்று ஓடி மூச்சிரைக்க யசோதரா நிற்க..
“நீ என்கிட்டே ஆட்டம் காட்டுறியா? உன்னை..!!” என்று இரண்டே எட்டில் தாவி வந்து அவள் கையை பிடித்து கௌதம் இழுக்க..
அதேசமயம் அவன் வீட்டு கதவை திறந்துகொண்டு கண்ணபிரான் நுழைய..
என்னவாகி இருக்கும்??
அடுத்த எபியில்..
கொள்ளையிட வருவான்..
