வா!! என் கலாப காத(வ)லா…

This entry is part 22 of 25 in the series வா!! என் கலாப காத(வ)லா

வா!! என் கலாப காத(வ)லா

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

வா!! என் கலாப காத(வ)லா…

23

வா!! என் கலாப காத வ லா…
ஜியா ஜானவி ❤️
கௌதம் ரகோத்தமனிடம் திருமண பத்திரிக்கைகளை கண்ணபிரான் கொஞ்சம் கொடுத்திருக்க, அவனுக்கோ அனைவரையும் அழைக்க பிடிக்கவே இல்லை. ஆனால் யசோதரா தான் வற்புறுத்தி, அன்று நக்கல் பார்வை பார்த்தவர்கள், கேலி பேசியவர்கள் என்றும் ஒருவரையும் விடாது அனைவருக்கும் பத்திரிக்கை வைக்கச் சொன்னாள்.
“நீங்க அவங்க முன்னால கெத்தாக என் கழுத்தில் தாலி கட்டணும்.. நாம இருவரும் ஜோடியாக அவங்க முன்ன கை கோர்த்து வலம் வர வேணும்! அவங்களுக்கு கண்ணு மூக்கு வாய்னு நவ துவாரங்களிலும் புகை வரணும்!” கண்டிஷனாக சொல்லிவிட சிரித்துக் கொண்டே தலையை ஆட்டி விட்டு வந்திருந்தான்.
அதைப்போல் “சூரிய பிரகாஷ் சாருக்கு நானும் அப்பாவும் நேரில் அவர் வீட்டிற்கு போய் பத்திரிக்கை வைத்து விட்டு வருகிறோம்! நீங்க எப்ப பார்த்தாலும் அவர் கூட சண்டை பிடிக்கிறிங்க.. ஆனால் அவர் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காரு தெரியுமா? நான் கண்டிப்பா போய் பத்திரிக்கை வைப்பேன். இதுல நீங்க தலையிட கூடாது!” என்று பிடிவாதத்துடன் நின்றவளை “யுவர் விஷ்!!” என்ற வார்த்தையோடு கடந்து விட்டான்.
சஞ்சய்க்கு பத்திரிகை வைக்கும் போது நடந்தவற்றை ஒன்றுகூட மூச்சு விடவில்லை கௌதமினிடம் யசோ.. ஒருவேளை சொல்லி இருந்தால் இவள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டிருக்குமோ??
கமிஷனர் தியாகராஜன் அறையில்தான் இருந்தான் கௌதம் ரகோத்தமன் அவரிடம் பத்திரிகையின் நீட்டிக் கொண்டு! எப்போது போல முகத்தில் சந்தோஷ புன்னகையுடன் வாங்கிக்கொண்டு “கங்கிராட்ஸ் மேன்!! கடைசியா நீயும் மாட்டிக்கிட்ட போல!!” என்றவரின் கண்கள் பெண்ணின் பெயரை பார்த்து அவனை கேள்வியோடு பார்த்தது.
அவனோ வெட்கச்சிரிப்போடு ஆமாம் என்று தலையசைத்தான்.
“எப்படி மேன் இப்படி எல்லாம்?? காதல் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி சும்மா கெத்தா டெரர் பீசா சுத்திட்டு இருக்கீங்க.. இதுல விழுந்ததற்கு அப்புறம் அப்படியே
லவ்வர் பாய் மாதிரி மாறிடுறிங்களேடா!” என்று எஸ்பியையும் தன் மனதில் வைத்து இவர் பேசினார்.
அவனும் அதற்கும் வெட்கப் புன்னகையை தந்து கொண்டிருக்க “வாவ் மேன்!! இப்படியெல்லாம் கௌதம் ரகோத்தமனை பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த பொண்ணு உன் வாழ்வுல வந்தது நீ செய்த அதிர்ஷ்டம்னு நினைக்கிறேன்! பத்திரமா பாத்துக்கோ அவளை!!” என்று அவர் வாழ்த்தி கொண்டிருந்த அந்த தருணத்தில்தான் அவனது போன் அலறியது.
போனை எடுத்து அவன் பார்க்க அதில் ரோஹித் பெயரைப் பார்த்ததும் இவன் கட் செய்ய.. மீண்டும் மீண்டும் ரோஹித்திடமிருந்து கால்!!
 கமிஷனரோ “உன் ஆள் கிட்டே இருந்து இல்லை இல்லைல?” என்று கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டார். ஏனென்றால் திவ்யா பாரதியின் சேட்டைகள் அப்படி!!
“இல்லை.. இல்லை சார்! இது அவளோட ஃப்ரண்ட். அவ கூட ஷோ பண்றவன். நீங்க பாத்தீங்களான்னு தெரியல ‘போகிற போக்கில்’ அப்படின்னு ஒரு டாக் ஷோ பண்ணிக்கிட்டு இருக்கா, அதில் இவன்தான் கேமராமேன்! இப்ப எதுக்கு திடீர்னு போன் பண்றான்னு தெரியலையே!” என்று யோசனையோடு அடுத்து வந்த காலை அட்டென் செய்தவன் அதிர்ச்சியில் உறைந்தான்!
அவன் முகம் பார்த்து ஏதோ அசம்பாவிதம் என்று உணர்ந்த கமிஷனர் “என்னாச்சு கௌதம்!!” என்று கேட்க, “ஷோ பண்ணிட்டு இருக்கும்போது யாரோ.. யாரோ.. யசோவை கடத்திட்டாங்கலாம் சார்!!” என்றான் வேதனைக் குரலில்.
“அவளுக்கு ஏற்கனவே திரட் எல்லாம் ஒண்ணுமில்ல சார்! ஆனால் பாண்டிச்சேரில ஒரு தரம் நாலு பேரு அவள துரத்திட்டு போய் தாக்கினாங்க..
அப்ப நான்தான் காப்பாத்தி அவளை இங்கே சென்னையில் கொண்டு வந்து அட்மிட் பண்ணினேன்” என்று யோசனையோடு இருந்தவன் சட்டென்று அவரிடம், “சார் எனக்கு ஒரு ஹெல்ப் தேவை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட அசிஸ்டன்டா இருந்த பொன்னி பத்தின டீடெயில்ஸ் எனக்கு வேணும்” என்றான்.
“அந்தப்பொண்ணு அதுக்கப்புறம் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடுச்சு கௌதம்! இதுவரைக்கும் வேற ஏதும் அந்த பொண்ணு பேர்ல குற்றச்சாட்டோ இல்லை அந்த பொண்ணை பத்தின நியூஸ் எதுவுமே வரல!” என்றவரிடம்.. “எனக்கு டீடைல்ஸ் வாங்கி கொடுங்க சார்!” என்று அவன் விடாப்படியாக கேட்க.. “பத்து நிமிஷம் வெயிட் பண்ணு!” என்று போனில் யாரிடமோ பேசி பொன்னியின் தகவலை எடுத்து வர சொன்னார்.
அந்தப் பத்து நிமிடங்களும் தனலின் மேல் நின்றது போல இருந்தது அவனுக்கு. வந்திருந்த நியூஸ் பொன்னி தற்போது சிதம்பரம் அருகிலுள்ள ஊரில் வேலை செய்வதாக இருந்தது. தன் கல்யாணத்தை தெரிந்துகொண்டு இவள் ஏதும் விளையாடு இருப்பாளோ என்றுதான் அவன் முதலில் யோசித்தது. ஆனால் சேகரிக்கப்பட்ட தகவலோ அவளுக்கு ஓராண்டுக்கு முன் நடந்த ஆக்ஸிடெண்டுக்கு பிறகு அவள் அடங்கி ஒடுங்கி அந்த ஊரில் வேலை செய்கிறாள் என்று தெரியவந்தபோது அவனுக்கு சப்பென்றானது! 
‘இவளை விட்டால் வேறு யார்? அந்த அரசியல்வாதிக்கு பொண்டாட்டி புள்ளை குட்டின்னு யாரும் கிடையாதே?’ என்று யோசித்துக்கொண்டே இருந்தவனிடம் “உனக்கு எப்போது எந்த போர்ஸ் வேணாலும் எனக்கு உடனே கால் செய் கௌதம்!” என்றார் கமிஷனர்.
யசோவின் புகைப்படத்தை அவரிடம் கொடுக்க.. அடுத்த பத்தாவது நிமிடம் சென்னை முழுவதும் அவளின் புகைப்படம் எல்லா ஸ்டேஷன்களுக்கும் பறந்தது காணவில்லை என்ற தகவலோடு!!
ரோஹித் கௌதமை தொடர்புகொண்ட அடுத்த அரை மணி நேரத்திலேயே அவனது அலுவலகத்தில் வந்து நின்றான் கண்ணீரும் கம்பலையுமாக.. கூடவே உடலில் ஒரு பதட்டம் ஓடி அவனை நடுங்க செய்து கொண்டிருந்தது. தன் தோழியை தன்னை முன்னால் கடத்திச் செல்ல கையறு நிலையில் இருந்த தன் நிலையை எண்ணி அவனுக்கு கோபம் வேறு!!
கமிஷனரிடம் தேவையான தகவல்களை கொடுத்துவிட்டு ஆம்புலன்சை விட அதிவேகமாக பறந்து தான் வந்தான், தன் அலுவலகத்தில் இருந்த ரோஹித்திடம் விவரம் கேட்க வேண்டி கௌதம்.
வந்தவன் ஜீப் நிறுத்திவிட்டு வேகமாக “ரோஹித்!! வந்து என்ன நடந்தது முழுசா சொல்லு. ஒரு இடத்தை கூட நீ மிஸ் பண்ண கூடாது. சொல்லு.. சொல்லு! சொல்லு!!” என்று பரபரத்தான்.
“சார் வழக்கம் போல நானும் அவளும் அந்த ‘போகிற போக்கில்’ ஷோவுல பேசுறது எப்பவுமே நட்ட நடு ரோட்டுல தான். பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டம் அதிகமா இருக்கும். அதுல வர்றவங்கள தான் நாங்கள் ரேண்டமா செலக்ட் செய்து பேசுவோம். அவ பேசுவா அத வந்து நான் வீடியோ எடுப்பேன். எங்களோட இந்த சம்பாஷனை எல்லாம் பக்கத்துல இருக்குற எங்க சேனல் வேனிலிருந்து இதையெல்லாம் ரெக்கார்ட் செய்வாங்க. சவுண்ட்.. பேக் ரவுண்ட் வாய்ஸ் இது எல்லாம் கரெக்ட் செய்து ஃபுல்லா ரெக்கார்ட் செய்வாங்க சார்” என்று ரோஹித் முடிக்குமுன், 
“டேய்!!! இதெல்லாம் உன்கிட்ட நான் கேட்டேனா? அவனுங்க எப்படி வந்தானுங்க? எந்த டைரக்ஷன்ல வந்தானுங்க? எந்த வண்டியில் வந்தானுங்க? அதில் எத்தனை பேரு உள்ள இருந்தானுங்க? யார் தூக்கினா? தூக்கினவன்எப்படி இருந்தான்? எந்த டைரக்ஷன்ல போனானுங்க? இதை பத்தி சொல்லித் தொலை டா” என்று கத்தினான்.
“ஆமாம்ல.. அதுதானே ஃபர்ஸ்ட் சொல்லணும்!” என்று தன் தலையில் அடித்து கொண்டவன், “சார் நாங்க ஒரு ஆள் கிட்ட பேசிட்டு அப்படியே அடுத்தது யார் வரான்னு மெதுவா கொஞ்சமா நடந்துக்கிட்டுயிருந்தோம். அந்த சமயம் ரோட்டில் யாருமே இல்லை. ஏதோ ஒன்னு ரெண்டு வண்டி மட்டும் தான் போயிட்டு இருந்தது. திடீர்னு வந்த வண்டி கண்ணிமைக்கும் நேரம் கூட சொல்ல முடியாது சார், அது மாருதி வேன் மாதிரி இருந்தது. கதவை ஓப்பன் பண்ணி உள்ளிருந்து ஒருவன் அவளை இழுத்து உள்ளே போட்டான் கதவை சாத்தி கூட இல்ல.. கார் பறந்துருச்சி சார்!” என்றான் ரோஹித்.
“அந்த வண்டி ஓட நம்பர் ஏதாவது நோட் பண்ணியா இல்லையா?” 
“சார் அதுல வந்து ஃபார் ரிஜிஸ்ட்ரேஷனு போட்டிருந்தது சார்!” என்று ரோஹித் கூற, 
“நீ அப்போது வீடியோ எடுத்து இருப்ப தானே.. அதை கொடு டா!” என்று கேட்க “இருக்கும் சார்.. இருக்கும்! நான் அப்போது அதுல வச்சு போக்கஸ் பண்ணிட்டே தான் வந்தேன்!” என்று அவன் தன்னுடைய கேமராவில் இருந்த அந்த கேசட்டை எடுத்து அவனிடம் கொடுக்க அவசர அவசரமாக அலுவலகத்திற்கு சென்று அதனைப் போட்டுப் பார்த்தால் கௌதம்.
ரோஹித் சொன்னது போல தான் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வண்டி இவர்களிடமிருந்து கடந்து போயிருந்தது.. அவளை கடத்தி கொண்டு!! அதையே உற்று நோக்கியவன் கண்டுகொண்டான் ஒன்றை..
அடுத்த நிமிடம் துரிதமாக தன் வேலையை ஆரம்பித்திருந்தான் கௌதம்.
மெல்லத் தன் கண்களை திறந்து பார்த்தாள் யசோதரா! மெல்ல மெல்ல கலங்கலான பார்வை மாறி அப்போதுதான் ஒரு தெளிவு பிறந்து இருந்தது. ஆனால் கை கால்களை எல்லாம் அசைக்கவே முடியவில்லை. தலை ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு போனது. கை கால்கள் ஏதோ அந்தரத்தில் பறக்கும் உணர்வு. மெதுவாக கையை தூக்கி காற்றில் ஆட்ட அவள் மூளை சொன்னதை கேட்காமல் தன் இஷ்டம் போல ஆடியது அவளது வலது கை.. அவளுக்கு சற்றே சிரிப்பு கூட வந்தது. ‘குடிமகன்களுக்கு கூட இப்படித்தான் இருக்குமோ?’ என்று நினைத்துக் கொண்டாள்.
தன்னைக் கடத்தி வந்து இருப்பது அவளுக்கு நன்றாக புரிந்தது. ஆனால் காரணம்தான் தெரியவில்லை. அன்றும் அந்த ஆதாரத்தை கேட்டு தன்னை தாக்கினார்கள்.. இன்று இப்படி ஒரு சம்பவம்! ஆனாலும் அன்று இருந்த பயம் நடுக்கம் எதுவும் இப்போது இல்லை. ஏனென்றால் இப்போது இவள் கௌதமின் யசோதரா அல்லவா!!
அவ்வளவு பெரிய அறையில் யசோதரா தனித்திருந்தாள். அது வீடு மாதிரி அமைப்பில் இருந்தது, இவளை கடத்தி வந்தவர்கள் யாருமில்லை, இவள் மட்டும் தனியே இருந்தாள். அந்தத் தனிமை அவளின் மனதை மிகவும் வருத்திக் கொண்டிருந்தது. அந்த வருத்தம் கூட அவளை நினைத்து அல்ல.. அவளின் வருங்கால மணாளனை நினைத்தே!! அவனை நினைக்கும் போதே மனதைப் பிசைந்து அவளின் கண்களை கசிய வைத்திருந்தது. கண்ணீரில் நனைந்த கண் இமைகளைச் சிமிட்டி மூக்கை உறிஞ்சி தன் மனதைத் தேற்றிக் கொண்டிருந்தாள். ஆனால் தன்னவனின் பராக்கரமும் வேகமும் விவேகமும் அவள் அறிந்தது! ஆனால் இந்நிலையில் அவன் மனம் உடைந்து விடக்கூடாது என்பதே அவளது ஆகப் பெரும் கவலை!!
இப்படியாக நேரம் சென்றுகொண்டிருக்க..
சடாரென்று கதவை திறந்து கொண்டு ஐந்து ஆட்கள் உள்ளே நுழைந்தனர்.
அவளும் அமைதியாக அமர்ந்திருந்தாளே ஒழிய கத்தி ஆர்ப்பாட்டம் கூச்சல் எல்லாம் போடவே இல்லை. அந்த ஐந்து மலை மாடுகளும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் பார்வை பரிமாற்றத்தை செய்து கொண்டனர். பின்பு அவள் முன்பு நிற்க அவளோ அவர்களின் மேலும் கீழும் பார்த்து “ஏன் இவ்வளவு லேட்டு உங்களையெல்லாம் முன்னாடியே எதிர்பார்த்தேனே?” என்றாள் அலட்சியமாக.
“அவ்வளவு திமிரா உனக்கு? எத்தன பேரு நிற்கிறோம்! உன்னை எது வேணாலும் இங்கே நாங்கள் செய்திடலாம்! உனக்கு எவ்வளவு கொழுப்பு?” என்று ஒருத்தன் உறும.
அடுத்தவனோ “இங்கே உன்னை என்ன பண்ணாலும் கேட்க ஒவ்வொருத்தனும் வரமாட்டார்கள் புரிஞ்சுதா?” என்று மிரட்ட..
அந்த உருட்டல் மிரட்டல் மொழிகளுக்கெல்லாம் சிறிதும் அசைந்து கொடுக்காமல் அவர்களை பார்த்தவள் “என் மேல ஒரு சிறு கீறல்.. என்னது சின்ன கீறல் விழுந்த கூட உங்க உடம்புல உயிர் மிஞ்சாது! ஞாபகம் வைச்சுக்கோங்க?” என்று இவள் மிரட்டினாள்.
அவர்களோ குழப்பத்துடன் அவளைப் பார்க்க.. “நான் யார் தெரியுமா? யாரோட பொண்டாட்டி தெரியுமா? ஏசிபி கௌதம் ரகோத்தமனின் ஆளு!! அவர் யாரு தெரியுமாடா? தெரியுமாடா?” என்று‌ தெலுங்கு பட ஹீரோக்கள் பல எழுந்து நின்று கேட்ட தோனியில் மற்ற அனைவரும் தான் பயந்தனர்.
“என்னடா இந்த பொண்ணு போலீஸ்காரனோட பொண்டாட்டியா? இதை நம்ம கிட்ட சொல்லவே இல்லையே!” என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
“உங்களுக்கு என் வீட்டுக்காரர் பத்தி தெரியாதுல.. அவரை பத்தி சொல்றேன் கேட்டுட்டு அதுக்கு அப்புறம் என் மேல கை வையுங்க.. பார்க்கலாம்!!” என்று சவாலுடன் தொடங்கியவள், கௌதம் பண்ணிய என்கவுண்டரில் ஆரம்பித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அவன் செய்த அதிரடிகள் முதற்கொண்டு.. பெரிய அதிகாரிகளிடம் அவனது செயல்களைக் கூறி.. கடைசியாக கமிஷனர் நெற்றியில் அவனது துப்பாக்கி செலுத்திய குண்டு வரை, அவள் சொல்லி முடிக்க அங்கிருந்த அனைவரும் அவள் உட்கார்ந்து இருந்த நாற்காலி அருகில் குத்தவைத்து உட்கார்ந்து ஆவென வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர் வெகு சுவாரசியமாக!!
அதில் அதில் ஒருத்தன் இவள் கதை சொன்ன விதத்திலா இல்லை கௌதமனின் அட்ராசிட்டியிலா.. ஏதோ ஒன்றில் கவர்ந்து அடிக்கடி கை தட்டி உணர்ச்சிப் பிழம்பானான். கடைசியாக கமிஷனரை ஒரே ஷாட்டில் அவன் கொன்றதை கூற.. அங்கே பலத்த கரகோசம்!!
“அமைதி! அமைதி!!” என்று அவர்களை அமைதிப்படுத்த விட்டு அடுத்து இவளுக்கு தெரிந்த கதைகளையும் சொல்ல ஆரம்பித்தாள். ஏனென்றால் நேரம் செல்ல வேண்டுமே!!
அந்நேரம் கதவை படாரென்று திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஒரு பெண்!!
அதி நாகரீக உடையில் மிளிர்ந்த அவளைப் பார்த்ததும் ஏனோ யசோதராவுக்கு பிடிக்காமல் போனது!
வந்தவள் அவளுக்குக் கீழே அமர்ந்திருந்த அந்த தடியன்களை பார்த்து கோபம் பொங்க “எந்திருங்கடா? அவளை மிரட்டி சொன்னா.. நீங்க என்னடா அவளுக்கு கீழே உட்கார்ந்து சேவகம் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று தன் வார்த்தைகளால் விளாசினாள்.
அதுமட்டுமின்றி யசோதராவை நக்கல் பார்வை பார்த்து “உனக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் அதுக்குள்ள இவனுங்கள எல்லாம் வளச்சி போட்டுட்டியா?” என்று தன் நாவில் கொடுக்கை வைத்து யசோதராவை கொட்டினாள்.
“அதிலும் உனக்கு புருஷனா வரப்போறவனைப் பத்தி கேள்விப்பட்டேன்” என்று நக்கலாக சிரித்தாள்.
அங்கிருந்தே அனல் பார்வையை அவள் மீது ஆழமாக வீசினாள் யசோ. அந்தப் பார்வையின் வீச்சு திமிர் கொண்ட அவளின் மனதைச் சற்றே பயத்தை ஏற்படுத்தியது. சட்டென்று உள்ளே உருவாகிய நெருப்புக் குழம்பு கண்களில் தேக்கி இரண்டே எட்டில் அந்த தடி தாண்டவராயன்களை கடந்து அவளது கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தாள் யசோதரா!!
அடித்தும் அவளது கோபம் தணிந்த பாடில்லை.. சீற்றத்துடன் மூச்சை இழுத்து விட்டாள். ‘அவ்ளோதானா இனி ஒரு‌வார்த்தை பேசின!’ என்பதுபோல பார்வையால் அவளை எரித்து, ஒற்றை விரலை தூக்கி பத்திரம் காட்ட.. அந்த புதியவள் மனதில் ஒரு திகைப்பு ஏற்பட்டது. அந்த திகைப்பு சட்டென வெடித்து கோபமாய் மாறியது. பற்கள் இறுகி கடித்து, கண்களில் எழுந்த அனலுடன் வெறுப்பாய் யசோதராவைப் பார்த்து “எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை நீ அடிப்ப?” என்று அவள் குரல்வளையை நெறிக்க போக..
 சட்டென்று அந்த ஐவரில் எழுந்த ஒருவன், “மேடம் அவங்களை விடுங்க நீ ஏதாவது பண்ணி அவங்க வீட்டுக்காரர் வந்து நம்மள போட்டு தள்ளவா? எதா இருந்தாலும் தள்ளி இருந்தே பேசுங்க!” என்று அவளது கை யசோ மீது படாமல் குறுக்கே நின்று தடுத்தான்.
இப்போது யசோதரா அவள் மீது அலட்சிய நக்கல் பார்வையை வீசினாள் எப்படி என்று!! அந்த புதியவள் மீண்டும் அசிங்கமான வார்த்தைகளை உதிர்க்க எண்ணி வாய் திறக்க, “உஷ்ஷ்!! இனி ஒரு தடவை அசிங்கமா ஒரு வார்த்தை.. ஒரு‌ வார்த்தை வந்தாலும் உன் பல்லு உனக்கு கிடையாது! ஞாபகம் வச்சுக்கோ!!” என்று மிரட்டினாள்.
யார் யாரை கடத்தி வந்தது? யார் யாரை மிரட்டுவது? என்று புரியாமல் குழம்பினாள் அந்த புதியவள். மீண்டும் அதே இருக்கையில் அமர்ந்தாள் சிம்மாசனமென!! அதில் கைகளை வைத்து ராணியின் தோரணையோடு அமர்ந்திருந்தாள்.
ஆனால் அடுத்த பத்தாவது நிமிடம் புதியவள் கைகளை தட்ட இன்னும் நிறைய அடியாட்கள் உள்ளே நுழைய..
“என்ன இவனுங்கள மட்டும் வைச்சி நான் ஸ்கெட்ச் போடுவேன் நினைச்சியா? நீ என்ன தடுத்திட்டா அப்படியே நான் உன்னை விட்டு விடுவேனா? உன்னால எனக்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா? நான் கல்யாணம் பண்ணிக்க போற இருந்த அந்த சஞ்சய் என்னை கட்ட மாட்டானாம். உன்னைத்தான் கட்டுவேன்னு அவங்க அப்பா கிட்ட சண்டை போடுறான் தெரியுமா? அப்படி என்னடி வச்சிருக்க உன்கிட்ட என் கிட்ட இல்லாதது” என்று அவளை பார்த்தாள்.
அவளது கீழ்த்தரமான பேச்சில் முகத்தில் அருவருப்பை காட்டியபடி யசோதரா அமர்ந்திருக்க, புதிதாக வந்த ஆட்களை அவள் மீது ஏவி விட்டால் இந்த புதியவள்.
அந்த அடியாட்கள் அவளை நெருங்கி ஒருத்தன் முடியை பிடித்து இறுக்கமாக இழுக்க, மற்றொருவன் அவள் கன்னத்தில் அறைய, அங்கே பல் பட்டு உதடு கிழிந்து ரத்தம் வந்தது யசோவுக்கு. அதை திருப்தியுடன் பார்த்து சிரித்தாள் அந்த புதியவள்.
“நான் ஷாஷா!! எதிலும் எதற்காகவும் எவரிடமும் தோற்காதவள்! உன்னை இங்க தூக்கிட்டு வந்தாதல ஒரே கல்லுல எனக்கு பல மாங்காய் தெரியுமா?”
“உன்னை வைத்து என்னென்ன திட்டங்களை தீட்டி வைத்து இருக்கேன் தெரியுமா?? என் திட்டத்திற்கு எல்லாம் நீதான் துருப்புச் சீட்டு!” என்று இகழ்ச்சியாக அவள் சிரித்துக் கொண்டிருக்கும் போது யசோதராவின் தலை முடியை இறுக்கமாக பற்றியிருந்தவன் கைகளில் ஒரு துப்பாக்கி குண்டு பாய, அடுத்த நிமிடம் அவன் சுருண்டு விழுந்தான்.
அனைவரும் அதிர்ந்து திரும்பி பார்க்க அங்கே கதவில் சாய்ந்தபடி தன் துப்பாக்கியை நாட் நாட் செவன் போல ஊதி கொண்டு, அந்த புதியவளை பார்த்து “எப்படி இருக்க பொன்னி இல்ல இப்போ உன் பேரு பொன்னி இல்லைல்ல ஷாஷா!” என்று நக்கலாக சிரித்தான் கௌதம் ரகோத்தமன்!!
கொள்ளையிட வருவான்..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *