வா!! என் கலாப காத(வ)லா
20
வா!! என் கலாப காத வ லா…
ஜியா ஜானவி ❤️
“அவள் காதல் சொன்ன அந்தக் கணம் இளமையின் புது இரத்த வேகத்தில் எனக்குள் சில மாற்றங்கள்! அவை எல்லாம் எனக்கு புது அனுபவமாகவே இருந்தது! முன்னைவிட வழக்கில் வேகத்துடனும் விவேகத்துடனும் இருப்பது போலவே தோன்றியது”
என்றான் கௌதம்.
“வேறு ஒரு பொண்ணை கௌதமுடன் நினைத்து பார்க்கவே எனக்கு விருப்பமில்லை.. இதில் அவள் காதல் சொன்னதால் இவனுக்கு உடம்புல புது ரத்தம் பாய்ந்ததாம்.. அதில் பாய்ந்து பாய்ந்து வேலையை இன்னும் முனைப்போடு செயல்பட்டாராம்!” அவன் சொன்னதைக் கேட்டவுடன், அப்படி ஒரு ஆத்திரம் வந்தது யசோவுக்கு.
“இருக்கும்! இருக்கும்! ஏன் இருக்காது?” என்று முகம் தக்காளி பழம் என்று செவசெவ என கோபத்தில் சிவக்க.. வாடிவாசலில் மூச்சை புசுபுசுவென்று விட்டுக்கொண்டு காத்திருக்கும் ஜல்லிக்கட்டு காளை போலவே கௌதமின் கண்களுக்கு தெரிந்தாள் யசோ.
“ஏய்!! என்னை முழுசா சொல்லு விடுடி!!” என்று அவன் வாயைத் திறந்து சொல்லி முடிப்பதற்குள் சட்டென்று அவன் மீது ஏறி அமர்ந்தவள், “எப்படி? எப்படி? பிளாஷ்பேக் சொல்றேன்னு சொல்லிட்டு அவ கூட நீ பண்ணல லவ்ஸ்.. நீ அடிச்ச சைட்டு.. அப்புறம் குஜாலிஸ் எல்லாம் என்கிட்டேயே சொல்லுவியா நீ?? கொன்னுடுவேண்டா உன்னை!! என்னை என்ன எங்க அப்பா மாதிரி நீ கொடுக்கிற அப்பாவி பெர்பாமன்ஸூக்கு எல்லாம் அமைதியா இருப்பேன்னு நினைச்சியா?”
என்று அவனின் முடியை இறுக்க பிடித்து இரு கைகளாலும் மாவு ஆட்ட தொடங்கினாள்.
என்னதான் பலசாலியாக இருந்தாலும் வீரன் தீரனாக என்றாலும் தன்னவளின் வீர ஆவேசமான தாக்குதலுக்கு முன் எல்லா ஆண்களும் கோழைகள் தான்!!
அது அவர்கள் மீது கொண்ட காதலினாலும் அன்பினாலும் மட்டுமே!!
கௌதம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன!!
வலியோடு கூடிய சுகமான அனுபவமாக அதையும் வாங்கிகொண்டான். அதில் அவனுக்கு தெரிந்ததெல்லாம் தன் மீது அவள் கொண்டிருக்கும் அபரிமிதமான காதல்!! அளவில்லாத அன்பு மட்டுமே!! மெல்லிய சிரிப்புடன் அவளின் இந்த கோபத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.
அவளின் கோபத்தை மட்டுமா ரசித்துக்கொண்டிருந்தான்? அழகு குவியலென தன்னால் முன்னால் இருந்த அந்த குயிலையும் தான் ரசித்துக் கொண்டிருந்தான்.
“ஏய்!! வேணாம் டி!! சொன்னா கேளு!! நீ அடிக்க அடிக்க சேதாரம் எனக்கு இல்ல உனக்கு தான்!! பார்த்துக்கோ!!” என்று அவனின் வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தை இவள் கண்டுகொள்ளவில்லை.
“கள்ளா!! கள்ளா!! அது எப்படி உன்னை அடித்தால் சேதாரம் எனக்கு வருமோ? உன்னை எல்லாம்..” என்று மீண்டும் அவன் தலை முடியை பிடிக்க இவள் எத்தனிக்க.. அவனோ பின்னால் நகர்ந்து அவளுக்கு ஆட்டம் காண்பிக்க.. யசோவோ எக்கி எக்கி அவனை பிடிக்க முயல.. அவனோ அசைந்தாடும் அவள் முயல் குட்டிகளை தான் ரசித்துக் கொண்டு இருந்தான்.
முதலில் அவனின் பார்வை மாற்றத்தை யசோ கவனிக்கவே இல்லை. அதன் பிறகு இதழ்களை மடித்து ஒரு மாதிரியாக சிரித்தவனின் பார்வை செல்லும் இடத்தைப் பார்க்க பக்கென்று ஆனது அவளுக்கு!!
சட்டென்று கைகளால் பெருக்கல் குறி இட்டுக்கொள்ள.. அவனோ வெடித்து சிரித்தான். அந்த சிரிப்பின் கள்ளம் அவள் மனதினை அதிர வைத்தது. அதன் பொருளை உணர்ந்த அவள் பெண்மை நாணத்தில் சிவந்தது!!
“அப்பவே சொன்னேன் இல்லையா? சேதாரம் உனக்குதானு!” என்றவன் வார்த்தைகளின்றி பார்வைகளால் என்ன சேதாரம் என்று கூறி மீண்டும் கள்ள புன்னகை சிந்த, அவனின் பார்வை சொன்ன.. சென்ற இடத்தை பார்த்தாள். அவளது அந்த ஒற்றை டவல் அபாய கட்டத்தில் இருந்தது.
“ஐயய்யோ!! ” என்று தனது கைகளை நெஞ்சில் வைத்தபடி அதிர்ந்து சன்னமாய் அலறினாள்.
“ஹா ஹா.. புரிஞ்சிடுச்சாடி என் மக்கு பொண்டாட்டி!!” என்று தன் உள்ளங்கையால் அவளது நெற்றியில் ஒரு தட்டு தட்டினான்.
“பொண்டாட்டி யா?” என்று லஜ்ஜையும் கேள்வியுமாய் அவள்!!
“இதுக்கு அப்புறமும்..” என்று இருவரும் நிலைகளையும் ஆள்காட்டி விரல் கொண்டு சுட்டுக் காட்டியவன், “அதில் உனக்கு சந்தேகமாடி!!” என்று விளக்கமாய் அவன்!!
அவளுள் அவன் வந்து நீண்ட நாட்களாகி விட்டது. அது எப்படி நிகழ்ந்தது இன்று வரை அவளுக்குப் புரியவில்லை. அவனின் ஒரு பார்வையா? ஒரு புன்னகையா? அவனின் அக்கறையா?
எதுவென்னு தெரியவில்லை. ஆனால் வஞ்சியின் நெஞ்சமதனில் அவனின் தஞ்சம்!!
அவளை பார்க்கும் போதெல்லாம் அமிலங்கள் என வெளிவரும் அவனின் கடும் சொற்கள் கூட எல்லாம் அவனின் அன்பாய் அவளின் உள்ளத்தில் தேங்கியிருப்பதை அவனறிய மாட்டான்!!
பல இரவுகள் அவன் நினைவில் அவள் தவிக்கும் அளவுக்கு அவன்மேல் காதல் கொண்டிருக்கிறாள் என்பதை அவனறிய மாட்டான்!!
பல நாட்கள் கற்பனையில் அவனுடன் மோகம் கொண்டு இன்பம் துய்த்திருக்கிறாள் என்பதை அவனறிய மாட்டான்!!
அவனுடனான அவளின் இரவுக் கற்பனைகள் ஒரு சில சமயம் பகலிலும் அவளைப் பின் தொடர்ந்து கற்பனையில் சிரிக்க.. வெட்கம் கொள்ள வைக்கும், தன்னுடைய கிறுக்குத்தனத்தை நினைத்து தலையில் அடித்தும் கொண்டிருக்கிறாள்
என்பதை அவன் அறிய மாட்டான்!!
ஆனாலும் அவை எல்லாம் அவளின் மன கற்பனைகளாகவே இன்றுவரை இருந்திருக்கின்றன. இனிமேல்தான் அவைகள் நிஜமாக.. இனிய நிகழ்வுகளாக மாற வேண்டும்!! மாறும்!!
என்று அவள் மனதில் நினைத்துக் கொண்டிருக்க.. கௌதமோ அவையெல்லாம் நிஜமே என்று தன் ஒற்றை அழைப்பில் காட்டினான்!!
அதைக் கேட்டவுடன் உதடுகள் துடிக்க உதட்டை அழுத்தி பிடித்துக்கொண்டு கண்கள் கலங்க அவனைத்தான் பார்த்தாள். பல நாள் கனவு நினைவாக விட்ட மகிழ்ச்சியில்!! ஆத்மதிருப்தியில்!!
“ம்ப்ச்.. என்னடி!!” என்று அவளது இரு கன்னங்களையும் கைகளால் தாங்கி கட்டை விரல் கொண்டு அவளது கண்ணீரை துடைத்தவனுக்கு ‘ஒன்றும் இல்லை!’ என்று அவள் தலையாட்டினாள் தன் மனதினை மறைத்து.
அவன் அறியாததா அவளின் மனதை?
“ஏன் இதெல்லாம் நடக்கவே நடக்காது வெறும் கற்பனையாகவே போய்விடும் என்று நினைத்து பயந்தியோ?” என்று அழுகையில் சிவந்த அவளது மொழுமொழு மூக்கை பிடித்து அவன் ஆட்டி கேட்க.. முதலில் இல்லை என்றும் பின் ஆமாம் என்றும் அனைத்து பக்கமும் தலையாட்டினாள்.
“எனக்கு தெரியும்! உன்னை பார்க்கும் நேரத்தில் எல்லாம் வார்த்தைகளை நிறைய விட்டிருக்கேன்! நிறைய நேரத்துல உனக்கு அது மன வருத்தத்தையும் வலியையும் கொடுத்திருக்கும். ஆனால் நீ நம்பனும்.. உன்னை நான் பேசும்போது உனக்கு வலித்ததை விட எனக்குத்தான் அதிகம் வலித்தது இங்கே!!” என்று தனது இதயத்தை அவன் தொட்டுக் காட்ட..
மெல்ல குனிந்து அவனது இதயத்தின் மீது இதழ் ஒற்றி எடுத்தாள்.
“நீ கொடுத்த அந்த ஒற்றை முத்தத்தில் என் வலிகளெல்லாம் பறந்து போயிட்டு!! அதே மாதிரி நானும் கொடுத்து உன் வலிகளை போக்க வா?” என்று கேட்டவனை இம்முறை கடித்து வைத்தாள்.
“அந்த வார்த்தைகளை நான் சொன்னதற்கு காரணம் உன்னை என்னிடம் இருந்து பிரித்து வைப்பதற்கே!!” என்றவன், “இப்படி உட்கார்ந்து இருந்தேன்னா நான் எப்படிடி என் ஃப்ளாஷ்பேக்கை சொல்லுவது?” என்று அலுத்துக் கொண்டவனின் பார்வைகள் வேறு கதை பேச.. அவளோ “போ டா!!” என்று அவன் மீது இருந்து இறங்கி ஓட, “இருடி எல்லாத்தையும் இன்னைக்கே பேசி முடிக்கனும். இனி ஒரு முறை பேச எனக்கு பிடிக்காது. அதுவும் உன் அருகாமையில் தான் அந்த வலிகளை தாங்கிக் கொண்டு என்னால் பேச முடியுது தாரா!!” என்றவனின் வலி நிறைந்த வார்த்தைகள் அவளை கட்டி போட, மீண்டும் அவனருகில் அமர்ந்தாள்.
அந்த நாள் என் வாழ்நாளில் வராமலேயே போய் இருக்கலாம் என்றவன் கடந்த காலத்திற்குள் மீண்டும் நுழைந்தான் வலிகளோடு!!
பொன்னி காவிரியின் மறுபெயர்.. அந்தப் பெயர் தமிழ் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்த ஒன்று! ஆனால் நிறைய நேரம் யோசிப்பான் இவளுக்கும் இவள் தோற்றத்திற்கும் இந்த பெயருக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லையே என்று!
சுந்தரத்திடம் அவளை அழைத்து வந்து ஒரு நாள் அறிமுகப்படுத்தினான். அவருக்கும் சரிதான் என்ற நிலைப்பாடு! அதுவும் அவனை விரும்புகிற பெண் அவனது தொழிலையே பார்க்கிறாள் என்றவுடன் மருமகனுக்கு பிடித்தால் சரி என்றதோடு அவரும் ஒத்துக்கொள்ள, வீட்டோடு சிம்பிளாக நடந்தது அவர்களது நிச்சயதார்த்தம்.
கௌதம் அவனின் தாய்மாமா சுந்தர் மற்றும் சில உயர் அதிகாரிகள் உடன் வேலை பார்க்கும் அதிகாரிகள் என்று இவன் பக்கமும்.. பொன்னி அவளது தங்கை தம்பி கூடவே அப்பா அம்மா மட்டுமே வந்து இருந்தனர். மற்ற சொந்தங்கள் எல்லாம் இந்த காதல் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் ஒரேடியாக திருமணத்திற்கு பார்த்துக்கொள்ளலாம் என்றும் வரவில்லை என்று காரணத்தை அடுக்கினாள் பொன்னி.
கௌதம் இதை பெரிதாக எண்ணிக் கொள்ளாமல் சரி என்று விட்டு விட்டான்.
பொன்னி இங்கே காவலர்களுக்கான குடியிருப்பில் தனியாக தான் வசித்து வருகிறாள். கேட்டதற்கு தம்பி தங்கையின் படிப்பு என்றும்.. அங்கு இருப்பது தான் பெற்றோருக்கு வசதிப்படும் என்றும்.. ஆயிரம் காரணங்களை அடுக்கினாள். ஆனால் அதில் ஒன்று கூட இவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பெரும்பாலும் இரவு நேரம் அவளை விட்டுவிட்டு தான் இவன் தன் வீட்டிற்கு வருவான். அப்போதெல்லாம் அவள் கண்களில் தெரியும் அந்த ஒளி அதனோடு கூடிய உடல் மொழியும் அவளிடம் நெருங்க வைப்பதாக தோன்றும். பெரிதாக காதலும் நேசமும் இல்லாததால் கல்யாணத்திற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் அதுதான் வசதி என்று கௌதம் ஒதுங்கி கொண்டான்.
இப்படியாக இவனது நேரம் தன் பெரிய அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுப்பதிலும்.. அப்படியே இவன் வழக்கு கையாண்டாலும் அதில் ஏக்கு போக்காகவே செய்வதும்.. அவ்வப்போது பொன்னி உடனான நேரங்களை செலவிடுவதுமாக இருந்தான். இப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் பொன்னி இவனது வீடு தேடி வந்து விடுவாள்.
அன்று முழுவதும் அங்கேயே அவனோடு பேசி சாப்பிட்டு விட்டு மாலைதான் வீடு செல்வாள். நிறைய நேரங்களில் இவன் வீட்டிலேயே இருக்க மாட்டான்.
அன்று காலை வழக்கம் போல பொன்னி கௌதம் வீட்டிற்கு வர, அப்போதுதான் கௌதமும் சுந்தரும் தங்களது காலை உடற்பயிற்சியும் முடித்துக்கொண்டு கீழே இறங்கினர். இருவரையும் பார்த்து பொதுப்படையாக சிரித்தவள் “மதியம் என்ன செய்ய?” என்றவாறு கௌதமை நெருங்கினாள். அவனும் “உனக்கு என்ன பிடிக்குமா நீயே செய்! எனக்கு இதுல எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் இல்லை. என்றவன், மாமாவை பார்த்து “உங்களுக்கு ஏதாவது பிடிக்கும்னா சொல்லுங்க மாமா?” என்க, அவரும் அவருக்கு பிடித்த அசைவ உணவுகளை கூறினர். பின் ஆட்களை விட்டு வேண்டியவற்றை வாங்கிவர செய்தான். அதுவரை மூவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“அங்கிள்.. உங்களை அவருக்கும் மாமனே சொல்லமுடியாது. அண்ணனும் சொல்லலாம்! அவ்வளோ ஃடப் கொடுக்குறீங்க நீங்க யங்கா!” என்று சொல்லி சிரித்தவளின் தலையில் தட்டினான் கௌதம்.
“அவர் மிலிட்டரி மேன்! எப்பவும் இப்படித்தான் இருப்பார்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனது போன் அழைத்தது.
யார் என்று பார்க்க பரதன் தான் அழைத்திருந்தார். பரதன் அவன் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கும் போதே அவனுக்கு டிரைவராகவும் வலது கையாகவும் இருந்தவர். அவன் மாற்றலாகி வரும் போது தானும் வருகிறேன் என்றவரை ‘அங்கிருந்து எனக்கு தேவையான தகவல்களை கொடுங்க” என்று அங்கேயே வலுக்கட்டாயமாக பணியில் அமர்த்தி விட்டு தான் இவன் வந்தான். ஆனால் பரதன் கூட பேசுவது அவரது மாமாவுக்கு கூட இன்னமும் தெரியாது.
அதனால் ஹலோ என்று சொல்லிக் கொண்டே வெளியில் வந்தவன் “ஏதேனும் அவசரமான விஷயமா பரதன்?” என்று கேட்க, “சார் ரொம்ப அவசரமான விஷயம் சீக்கிரம் வாங்க சார்” என்றவரின் குரலிலேயே அவசரத்தை கண்டு..
“மாமா தெரிஞ்ச பிரண்டு ஒருத்தனுக்கு ஆக்சிடென்ட்! நான் போய் பாத்துட்டு வந்துடுறேன். சமைச்சு நீங்க சாப்பிடுங்க எனக்காக வெயிட் பண்ணாதீங்க” என்றவன், பொன்னியிடம் திரும்பி “மேக்சிமம் நான் ஈவினிங் வர ட்ரை பண்றேன்! அப்படி இல்லேன்னா நீ தனியா போய் விடுவது தானே?” என்று கேட்க..
“நம்ம ஜாப்ல இதெல்லாம் சகஜம்தானே! அதனால எனக்கு ஒரு பிராப்ளம் இல்ல. நான் போய்க்கிறேன் நீங்க பத்திரமா போயிட்டு வாங்க” என்னும் அவளது புரிதலில் மனதில் சந்தோஷத்தோடு பரதன் சொன்ன இடத்திற்கு சென்றான் கௌதம்.
அங்கே அந்த பெரிய பணம் கை மாற்றுவதற்கு அரசியல் புள்ளியோடு புரோக்கர் ரகசியமாக சந்திக்கும் இடம். அதை எப்படியோ அறிந்து பரதனுக்கு தகவல் வந்திருந்தது. அதனாலேயே பரதன் இவனை அழைத்து விவரத்தை கூற, இருவரும் யாருக்கும் தெரியாமல் அந்த இரு கருப்பு ஆடுகளை கையும் களவுமாக பிடிப்பதற்கு தங்களுக்குள் திட்டம் வகுத்து அதே நேரம் அவர்கள் பேசிக் கொள்வதையும் வீடியோ எடுத்து வைத்தனர்.
ரொம்ப நேரம் எல்லாம் நீடிக்கவில்லை அந்த சந்திப்பு வெறும் இருபது நிமிடங்கள் தான்! கூட பத்து நிமிடங்களென.. அரை மணி நேரத்தில் முடித்து அவர்கள் சென்று விட்டனர்.
“சூப்பர் பரதன்.. இந்த ஒரு ஆதாரம் போதும்! அதுவும் இல்லாமல் அந்த பணத்தை இவனுங்க டைரக்டா பெட்டி பெட்டியா எல்லாம் மாற்ற மாட்டானுங்க.. இவர்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது யார் யார் மூலமோ டிரன்சாக்சன் நடக்கும் போல இருக்கு. இந்த இரண்டு பேரில் அந்த புரோக்கர் நம்ம கைக்கு மாட்டினாலே போதும்! எல்லாரையும் மடக்கிடலாம்” என்று பிளான் செய்து அதன் படியே அவனை கண்காணிக்க ஆட்களையும் அனுப்பி வைத்துவிட்டு அவன் வீடு திரும்ப மணி ஏழுக்கு மேல் ஆனது.
அவன் வீட்டுக்குள் வரும் நேரம் அவனது மாமா டிவியில் பழைய ஹிந்தி படத்தில் லயித்திருக்க.. “என்ன மாமா டிவி ஓட ஐக்கியம் ஆயிட்டீங்க போல.. வெளியில் எங்கேயும் நீங்க போகலையா? எப்பொழுது சண்டே ஆனா போவீங்களே?” என்றபடியே அருகில் அமர்ந்தான்.
“உன் பிரெண்டுக்கு இப்போது நல்லா இருக்கா கௌதம்!” என்று கேட்க அப்போது தான் தான் சொன்னா பொய் அவனுக்கு ஞாபகம் வர “பரவால மாமா லைட் ப்ராக்சர் தான்! கைல கால்ல கொஞ்சம் அடி மத்தபடி ஓகேதான்!” என்றவன் “பொன்னி போயிட்டாளா?” என்று கேட்டான்.
“இல்லப்பா மதியானம் சமைச்சு சாப்பிட்டோம். கொஞ்ச நேரம் டிவி பார்த்தால் அப்புறம் தூங்க போறேன் உன் ரூம்குள்ள போயிட்டா.. இன்னும் எழுந்து வரல.. வார நாள் எல்லாம் வேலை செய்றா.. கொஞ்ச நேரமாவது தூங்கட்டும் என்று நானும் அவளை டிஸ்டர்ப் செய்யாமல் ஹாலில் டிவி பாக்க வந்துட்டேன். அதான் வெளியில போகல” என்றார்.
“சரி மாமா! இதோ போய் அவளை பார்க்கிறேன்” என்று அவளை தேடி போக அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். நாலைந்து முறை கூப்பிட்டும் எழவில்லை. அவன் கை வைத்து அசைத்து உலுக்க எழுந்தவள் முதலில் எங்கு இருக்கிறேன் என்று புரியாமல் விழித்து விட்டு அப்புறம் “சாரி! சாரி! நான் சாப்பிட்டதும் தூக்கம் வந்துடுச்சு” என்று அவள் இழுக்க.. “பரவால்ல பொன்னி! என் ரூம் தானே! சரி கிளம்பி வா உனக்கு டைம் ஆகுது. நான் உன்னை வீட்டுல விட்டுட்டு வரணும்” என்றான் சோம்பலாய்.
இவன் ரெப்ரெஷ் செய்து விட்டு கீழே செல்ல, அடுத்து பொன்னியும் வந்தாள். “மாமா நான் பொன்னியை விட்டுட்டு வரேன்” என்றவனிடம்,
“நீ இப்ப தானே வந்த?. இன்னும் சாப்பிட கூட இல்ல! முதல்ல நீ சாப்பிடு” என்று அவர் கோபமாக கூற..
“அச்சோ.. நீங்க மதியானமும் சாப்பிடலையா? முதல்ல சாப்பிடுங்க நான் தனியாக போகிறேன். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை” என்றவளை வம்படியாக மாமாவோடு காரில் அனுப்பி வைத்தான்.
இவன் ஃபாலோ செய்யும் ஆட்கள் அந்த புரோக்கர் பற்றிய தகவல்களை அவ்வப்போது கௌதமுக்கு தெரிவித்துக் கொண்டே இருந்தனர். அதன் பின்வந்த நாட்களில் முற்றும் முழுதாக இந்த கேஸ் பற்றி விவாதிப்பது அதற்கான நடவடிக்கை எடுப்பதுமாக இருந்தனர். யாருமறியாமல் பரதன் வீட்டில்தான் இத்தனையும் நடக்கும்.
வந்தது அந்த நாள்..
“இன்னைக்கு ஒரு ஆபரேஷன் மாமா! நான் நைட் வரது டவுட் தான்! அனேகமா நாளைக்கு மதியம் இல்ல மாலை தான் வர முடியும். நீங்கள் உங்களை பார்த்துபிங்க தானே?” என்ற கேட்டவனின் தலையை கலைத்து, “போடா போக்கிரி!! நான் மிலிட்டரி மேன் டா!” என்றார் கர்வமாக சுந்தர்.
பொன்னியிடமும் கேஸ் விஷயமாக வெளியூர் செல்கிறேன் என்று விட்டு அவன் புறப்பட்டான்.
அந்த புரோக்கருக்கு எந்தெந்த நபர்களிடம் இருந்து எவ்வளவு பணம் வந்தது. அது இப்படி எல்லாம் தான் மறைத்து வைத்திருக்கிறான். அதுமட்டுமல்லாமல் அந்த பணம் அனுப்பிய ஆட்கள் பற்றியும் அவர்களுக்கு மற்றுமொரு கூட்டத்தோடு இருக்கும் தொடர்பு அனைத்தையும் பக்காவாக ஒரு பென் ட்ரைவில் சேவ் செய்து லாக்கெட்டில் தன் கழுத்தில் மாட்டி இருந்தான். கூடவே இந்த அரசியல்வாதியை பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவர் பேசின வீடியோக்கள் ஆடியோக்கள் என்று கனகச்சிதமாக!! ஏனென்றால் அவன் தொழில் செய்வது அனைவருமே முதுகில் குத்தும் துரோகிகள் தான்! என்று யார் எப்படி மாறுவார் என்று சொல்லமுடியாது எல்லாம் ஒரு தற்காப்புக்காக தான் என்று எடுத்து வைத்திருந்தான்.
சரியாக அந்த அரசியல்வாதியை அவன் சந்திக்கும் முன் கௌதமின் ஆட்களால் கடத்தப்பட்டு விடியும்வரை அடியும் உதையும் வாங்கி பின் ஒருவழியாக அனைத்தையும் ஒத்துக்கொண்டான். அப்போதுதான் அவன் கழுத்தில் வித்தியாசமாக கடந்த லாக்கெட்டை பார்த்து கௌதம் அதை பிடுங்க.. அனைத்தும் இப்பொழுது கௌதமின் கைகளில்!!!
இவனை கட்டி வேறொரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு.. அந்த அரசியல்வாதியை கைதி செய்ய வேறு ஒரு காரணத்தை இவர்கள் தயார் செய்தனர். அதாவது லஞ்ச ஊழல் என்று அவனை கௌதம் கைது செய்திட முடியாது. அதனால் தீவிரவாதிகளுடன் தொடர்பு என்று அதை மையப்படுத்தி அவனை கைதி செய்ய அனைத்து உத்தரவையும் வாங்கிக் கொண்டு மறுநாள் காலை விடியும் வேளையில் அந்த அரசியல்வாதிகள் கைது செய்து விட்டனர்.
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அரசியல்வாதி என்று தலைப்புச் செய்தியில் காலையில் சுட சுட செய்தியானார் அவர்!!
“ஆமாம் எல்லாம் சரி!! அந்த தீவிரவாதிகள் எங்கே? அவனைத்தான் ரகோத்தமன் என்கவுண்டர் செய்து விட்டானே!!” என்று ஏற்கனவே வேற கேஸ்களில் தண்டனையில் தப்பியவர்களை பிடித்து வந்து என்கவுண்டர் செய்து விட்டனர்!
பின்னே.. இவன் லஞ்சம் வாங்கினார்! ஊழல் செய்தார்! என்று வழக்கு தொடர்ந்தால்.. நம் ஊரில்தான் அது பல வருடங்களுக்கு மேல் நடக்குமே!! ஏன் இன்னும் அவன் தந்தை மரணம் குறித்து தொடரப்பட்ட வழக்கிற்கே தீர்ப்பு வரவில்லை இன்னும்!! அப்படி இருக்க இது மட்டும் வந்து விடுமா என்ன?
ஆகவே கௌதம் தன் பாணியிலேயே அவனது தண்டனை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்த புரோக்கரின் பென்டிரைவில் இன்னும் யாராலும் சிக்க வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இப்படியாக யோசித்து அவன் சென்று வேலையை சீக்கிரமாக முடிந்துவிட காலை ஒன்பது மணி போல தன் வீட்டிற்கு வந்தான் கௌதம்.
தன்னிடமுள்ள சாவியைக் கொண்டு வீட்டை திறந்தவன் காதுகளில் விழுந்தது பொன்னியின் குரல்!!
“இந்நேரம் எதுக்கு வந்தாள்?” என்று யோசித்துக்கொண்டே தன் அறையை கதவை தள்ள அங்கு கண்ட காட்சியில் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றான்!!
அங்கே தன்னோடு நிச்சயமாகி எதிர்கால மனைவியாக வர இருந்த பொன்னி, அவனின் தாய் மாமனோடு கட்டிலில் சல்லாபித்துக் கொண்டிருந்தாள்!! அதுவும் சந்தோஷக் கூச்சலோடு!!
கொள்ளையிட வருவான்…
