வா!! என் கலாப காத(வ)லா
24
வா!! என் கலாப காத வ லா…
ஜியா ஜானவி ❤️
“எப்படி இருக்குற பொன்னி? ஹோ.. இப்போ உன் பேரு பொன்னி இல்லைல்ல.. ஷாஷா! ஷாஷா!” என்ற கௌதம் இகழ்ச்சியாக சிரித்தான்.
ஷாஷாவுக்கோ பக் என்றானது. ‘இவன் எப்படி என்னை கண்டுபிடித்தான்? நாம்தான் யாரும் அறியாதபடி திட்டம் தீட்டியிருந்தோமே? அதை செயல்படுத்தி பாதி வெற்றியும் பெற்று விட்டோம். இப்போது துருப்பு சீட்டாக இவள் கையில் இருக்கிறாள் என்று பார்த்தால், அனைத்தையும் ஒரே ஒரு குண்டில் தவிடுபொடி ஆக்கி விட்டானே இவன்!’ என்று ஆங்காரமாக அவனை தான் முறைத்துக் கொண்டிருந்தாள் பொன்னி ச்சச் ஷாஷா..
“வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் உண்டு. ஆனாலும் நீ செமையா தான் கேம் பண்ணியிருக்க. என்னையே நம்ப வைச்சிருக்க இல்ல.. அந்த.. அந்த வகையில் நீ கிரேட் தான்! ஆனால் ஒவ்வொரு தடவையும் நீயே ஜெயிக்க வேண்டும் என்பது நியாயம் இல்லை இல்லையா.. அதுவும் இந்த கௌதம் ரகோத்தமனை எதிர்த்து!” என்று நக்கலாக பேசியவன் கடைசியாக ரௌத்திரமாக முடித்தான்.
“நாட் பேட்!! லேட்டா கண்டுபிடித்தாலும் லேட்டஸ்ட் தகவலோடு தான் வந்து இருக்க.. நான் பொன்னி இல்ல ஷாஷானு கரெக்டா கண்டு பிடிச்சு இருக்கியே!” என்று கௌதமை பார்த்து இகழ்ச்சியாக கூறினாள்.
“ஆமா.. நான் தான் கேம் ப்ளே பண்ணுனேன். அதுவும் உன்னை வீழ்த்த எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? என் முக அமைப்பை உடைய பெண்ணை கண்டுபிடிக்க.. அவள் போலீஸ்ல இருந்தது எனக்கு அதிர்ஷ்டமா இருந்தது. அவளை தூக்கி என் கஸ்டடியில் வைத்து அவங்க அம்மா அப்பா எல்லாம் மிரட்டி உன்னை காதலிக்க மாதிரி நடிச்சு உன்னையும் நம்ப வச்சேன். அப்பப்போ வீட்டுக்குள்ள வந்து எனக்கு தேவையானதை எடுக்க ட்ரை பண்ணேன். ஆனா அது என் கைக்கு கிடைக்கவே இல்லை. அந்த நேரத்தில்தான் ஒரு தடவை உங்க மாமா நான் தேடுறதை பாத்துட்டார். விசாரிச்சார்.. உன்னையே ஏமாத்தின எனக்கு உங்க மாமாவா ஏமாத்தறது எல்லாம் சின்ன வேலை!” என்று எள்ளலாக சிரித்தவள் இப்போது கௌதமை நெருங்கி இருந்தாள்.
“உன் மாமா என் வலையில் விழுகிறாரானு தெரிஞ்சுக்க ரெண்டே ரெண்டு தடவல்.. ஒரே ஒரு முத்தம் தொபுக்கடீர்னு விழுந்துட்டாரு மனுசன்! அந்த அளவு ஏங்கி இருக்காரு போல!!
ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது உங்க மாமா ரொம்பவுமே ஸ்ட்ராங் தான்! அந்த விஷயத்துல!” என்று கண்ணடித்தாள்.
இதைக் கேட்க கேட்க கௌதமுக்கு அப்படி ஒரு அருவருப்பாக இருந்தது. ஆனாலும் அவளை அடிக்க கூட தன் கைவிரல் நுனி கூட அவள மீது படக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தான். அவன் உள்ளமும் உடலும்.. ஊனும் உயிரும்.. அவனின் யசோதராவுக்கே.. கௌதமின் யசோதராவுக்கே!!
இவள்தான் பொன்னி என்று கேட்ட மாத்திரத்தில் அவ்வளவு ஆத்திரம் வந்தது யசோவுக்கு. ஆனால் அதையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு அவளின் முழு திட்டத்தையும் அறிய அமைதியாகக் காத்திருந்தாள். இதற்கு இடையே அந்த ஐந்து தடியன்களையும் பார்த்து தன் ஹீரோவை கண்களால் காட்டி.. ‘எப்படி என்னவர்?’ என்று அவள் கேட்க.. அவர்களோ ‘சூப்பர்!!’ என்று ஷாஷாவுக்கு தெரியாமல் விரல்களால் அபிநயம் பிடித்தனர்.
“கேவலம் உன் உடலை காட்டி என் மாமாவை வளச்சி போட்டது ரொம்ப பெருமையா சொல்ற உனக்கு அந்த விலைமாதுக்கள் எவ்வளவோ மேல்! அவர்கள் வேறு வழியில்லாமல் தன் வயிற்றுப் பாட்டுக்காகவும்.. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழுந்த இடத்திலிருந்து எழ முடியாமலும்.. தன் குடும்பத்தாரால் அந்த இடத்தில் விற்கப்பட்டதாலும் அந்த அசிங்கத்தை செய்றாங்க. ஆனால் நீ? உன் தேவைக்காக அதுவும் அப்பா முறையில் உள்ளவரோடு. ச்சீ.. ச்சீ.. உன்னை எல்லாம் நான் தொட்டாலே எனக்கு பாவம்டி!” என்றான் முகத்தில் அருவருப்பை தேக்கி…
“என்னது?? நீ என்னை தொடுவியா?? ஹா.. ஹா.. ஹா..” என்று சூர்ப்பனகை போல அசுரத்தனமாக சிரித்தாள்.
“அதுக்கெல்லாம் நீ ஆம்பளையா இருக்கனு…” என்று அவள் முடிக்க கூட இல்லை. இம்முறை பலமாக விழுந்தது ஒரு அறை யசோவிடம் இருந்து.
“உன் அகராதியில ஆம்பளனா கட்டில்ல படுத்து உன்னை சுகப்படுத்துறவனா.. அவன் ஆம்பள இல்ல!! உண்மையான ஆண்மைக்கும் ஆம்பளைக்கும் அர்த்தம் தெரியுமா உனக்கு? எங்கேயும் எப்பவும் தன்னை நம்பி வரவளை கைவிடாமல் பாதுகாக்குறவனுக்கு பேர் தான் ஆம்பளை.. ராப்பகலா குடும்பத்துக்காக தன்னோட சுகதுக்கங்களை மறந்து வேலை வேலைனு போடுறாங்களே அவங்கதான் ஆம்பளை.. எங்கேயோ கண்ணுக்கு தெரியாத வெளி நாட்டுல கஷ்டப்பட்டு போன் மூலமாகவும் போட்டோக்கள் மூலமாகவும் தன் மனைவி மக்களோடு வாழ்றாங்களே அவங்கதான் ஆம்பள.. நாட்டுக்காக தன்னுடைய உயிரையும் குடும்பத்தையும் துச்சமாக்கி, எல்லையில அடிக்குற குளிரு வெயில் மழை பாராமல் நாட்டுக்காக உயிர் விடுறாங்க பாத்தியா அவங்க ஆம்பள.. நாட்டுக்குள்ள உன்னை மாதிரி சுத்துற களைகளை வேர் அறுக்குறாங்க பாத்தியா அவங்களும் ஆம்பளை.. நான் செய்ற வேலை தப்பாக இருந்தாலும் மனைவி மக்களை பாதுகாக்கணும் ஒரே காரணத்திற்காக தப்புனாலும் அடிதடி வேலை செய்றாங்க பார்த்தியா..” என்று அந்த தடியன்களை காட்டி “அவங்க கூட ஆம்பளை தான்!!” என்று அவள் கூற கௌதமுக்கு அவளை அக்கணமே இறுக அணைத்து ஆலிங்கனம் செய்து ஆழ்ந்து முத்தமிட ஆசை தோன்றியது. ஆனால் அவன் இருக்கும் இடத்தை பொருத்து கண்களில் காதலை தேக்கியபடி தன்னவளை தான் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அந்த ஐந்து தடியன்களும் மற்றவர்களோடு தங்களையும் அவள் சேர்த்து சொன்னதை நினைத்து புலங்கிதம் அடைந்து தங்கள் மகிழ்ச்சியை கண்ணீர் வழியாக காட்டிக் கொண்டிருந்தனர்.
“இவ்வளவு பெரிய டயலாக் எல்லாம் பேசினா நாங்க அப்படி மாறி விடுவோம்னு நினைச்சியா.. போ போ போய் தண்ணிய குடி!” என்று எகத்தாளமாக சொன்னாள் ஷாஷா..
அவள் சொல்லில் இருந்த நக்கலும் அவள் உடல் மொழியில் தெரிந்த அலட்சியமும் இன்னும் ரௌத்திரமாக மாற்றியது யசோதராவை!!
யசோதராவின் நடவடிக்கைகளை அவதானித்து கொண்டிருந்த கௌதம் எங்கே திரும்பவும் அவளை அடித்து விட போகிறாளோ என்று எண்ணி, “சேத்துல புரளுற ஜீவன்கள் கிட்ட எல்லாம் நீ காருண்யம் பத்தி பேசினா எப்படி புரியாதோ.. அதே மாதிரி தான் இவளும்” என்றான் கௌதம்.
ஷாஷாவோ கௌதம் பேசப்பேச அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளை மேலும் வெறுப்பேற்ற எண்ணியவன் யசோதராவை தன் பக்கம் இழுத்து தன் தோள் வளைவில் வைத்துக்கொண்டு “உனக்கு என்னடி இவ்வளவு கோபம் வருது. என்னை விட நீ டெரரா இருப்ப போலயே.. இந்த குட்டி மூக்கு எப்படி செவக்குது கோவத்துல!” என்று அவள் மூக்கோடு அவன் மூக்கை உரசினான்.
“இந்தக் கன்னம் ரெண்டும் அப்படியே செவ செவ செவ செவன்னு சிவந்து போயிடுச்சு!” என்று அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை இவன் இழைக்க அவளோ “தாடி குத்துங்க தள்ளிப் போங்க!!” என்று அவனை தள்ளி விட்டாள்.
“நீ இப்படி கோபப்பட்டால் கல்யாணத்துக்கு அப்புறம் என் நிலைமை என்னடி?” என்று அவன் நெற்றி முட்டி சிரிக்க..
“உங்களுக்குத்தான் தெரியனும் கோபப்படும் பொண்டாட்டியை எப்படி கூல் படுத்துறதுனு!” அவனது காக்கி சட்டை பட்டனை தன் விரல்களால் திருகியபடி வெட்கத்துடன் அவள் கூற.. அவனும் அவளது காதுக்குள் “நான் இப்பவே ரெடி தாரா!” என்று சரசமாக பேசியவனின் இதழ்கள் அவளது காது மடல்களை லேசாக கவ்வி விட்டு வந்தது.
‘என்னங்கடா நடக்குது இங்கே? நாங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சு டா!” என்று வடிவேல் பாணியில் அந்த பழைய ஐந்து தடியன்களும் புதிதாக வந்த முரட்டு தாண்டவராயன்களும் ஆவென்று வாயைப் பிளந்து ஓசியில் இந்த காதல் காட்சிகளை கண்ணாரக் கண்டு களித்தனர்.
நம் வில்லியோ புசுபுசுவென்று பெரு மூச்சை இழுத்து விட்டு அவர்களை கோபத்துடன் பார்த்தது “ஏன்டா.. உங்களை எதுக்குடா கூட்டிட்டு வந்தேன். இப்படி இவங்க பண்ற அசிங்கத்தை பார்க்க தானா.. அவங்களை..” என்று அவள் வாய் திறக்க அந்த வாய்க்குள் தனது துப்பாக்கியை சொருகினான் கௌதம்.
“எது அசிங்கம்.. ம்ம்ம் எது அசிங்கம்? என் பொண்டாட்டியை நான் கொஞ்சுவது அசிங்கம்னா. அப்பன் மாதிரி பார்க்க வேண்டியவரோட நீ படுத்து ஜல்சா பண்ணியே அதுக்கு பேரு என்ன? எல்லாத்தையும் விட அசிங்கம்!! அவர் எத்தனாவது ஆளுன்னு யாருக்குத் தெரியும்? அவரு அப்புறம் எத்தனை எத்தனை பேரோ? அதுவும் இந்த ரெண்டு வருஷத்துல.. த்தூ” என்று அன்று அவள் காரி உமிழ்ந்ததை போல இன்று கௌதமன் அவளை காரி உமிழ்ந்தான்.
“என்னை பத்தி நீ பேசாத! எனக்கு எது தேவையோ அதை எப்படி நிறைவேற்றிக் கொள்ளனும்னு எனக்கு தெரியும்!” என்று ஷாஷா தன் வாயில் இருந்த துப்பாக்கியை தள்ளிவிட்டு பேச ஆரம்பிக்க “அது தான் எங்களுக்கும் தெரியுமே எப்படினு!!” என்று வாய் பொத்தி சிரித்தாள் யசோதரா.
“ஆமா.. என் கிட்ட இருந்த ஆதாரத்தை எதுக்கு எடுக்க வந்த? அந்த அரசியல்வாதி ஓட தொடுப்பா நீ? அவனுக்கு தான் பொண்டாட்டி புள்ள குட்டி எதுவும் கிடையாதே!” என்று கொக்கி போட்டான் கௌதம்.
“டேய்! டேய்! டேய்!! தப்பா பேசாத டா.. அவர் யார் தெரியுமா? என் தாய்மாமா!” என்றாள் கோபமாக..
“என்னது மாமா வா? அப்போ அவனையும் விட்டு வைத்திருக்க மாட்டியே நீ!! அப்பன் உறவுமுறையில் இருந்தவரையே படுக்கைக்கு கூப்பிட்ட ஆள் நீ! மாமன் முறை உள்ளவனை எல்லாம் விட்டு வைத்திருக்க வா போற?” என்று கௌதம் கேட்ட கேள்வியில் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“சரி அத விடு!! அது போகட்டும்!! இப்ப இதுக்கு என் யசோவை தூக்கிட்டு வந்த? சஞ்சயை காரணம் காட்டி? அதுவும் அவன் அப்பா கிட்டயே உதவி கேட்டு!” என்று அவளின் லீலைகளை இவன் புட்டு புட்டு வைக்க.. இதெல்லாம் எப்படி இவனுக்கு தெரிந்தது என்று பயத்துடன் பார்த்தாள் ஷாஷா.
“எப்படி எனக்கு தெரிஞ்சதுனு யோசிக்கிறியா? நீ கடத்திட்டு வர சொன்னியே..” என்று அந்த ஐந்து தடியன்களை காட்டியவன் “அவனுங்க கடத்தி வந்த கார் நம்பர் பிளேட் மேல ஃபார் ரிஜிஸ்ட்ரேஷனு ஓட்டினானுங்க.. ஆனா மூன் டிவி காரின் பின் பக்க கண்ணாடியில் இருந்த மூன் டிவி ஸிம்பலை மறைக்கலையே.. மண்ட மேல உள்ள கொண்டையை மறந்துட்டியே பாடி சோடா!!” என்று கௌதமனின் நக்கலில் அங்கிருந்த அனைவரையும் வெட்டி போடும் ஆத்திரம் வந்தது இவளுக்கு.
“உன் மேல எக்கச்சக்க கேஸ் பதிவா இருக்கு. அவ்வளவு சீக்கிரம் நீ தப்பிக்க முடியாது. சரி சரி உன் அல்லக்கைகளை எல்லாம் கூட்டிட்டு கிளம்பு!!” என்று கௌதம் கூற, அவளும் அவனை நக்கலாக பார்த்து “இங்க நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாதுனு நான் அடித்துச் சொல்வேன். போதாக்குறைக்கு நான் யார் தெரியுமா? கங்காதரன் ஓட பொண்ணு!! என்னை தான் சஞ்சய்க்கு பொண்ணு பாத்திருக்காங்க. அப்போ தி கிரேட் பிசினஸ்மேன் தீனதயாளனுக்கு வருங்கால மருமகள் நான்!! இப்படி ரெண்டு புளியங்கொம்பா இருக்கிற என் அப்பா வருங்கால மாமனார் தாண்டி உன்னால ஒன்னும் புடுங்க முடியாது” என்று இளக்காரமாக பேசினாள்.
“ஷாஷா நீ இன்னும் எந்த காலத்துல இருக்க? இது சாட்டிலைட் வேர்ல்ட் மா! இப்பவும் உன்னை புடிச்சிட்டு போய் உன் வாயால உண்மையை நீயே சொல்வனு எதிர்பார்த்து வாய்தா மேல் வாய்தா வாங்க நான் என்ன இனா வானா போலீசா.. நான் கௌதம்!! கௌதம் ரகோத்தமன் டி!!” என்று கர்ஜித்தான்.
“இவ்வளவு நேரம் நீ சொன்ன இல்ல ரெண்டு புளியங்கொம்பு!! ஒன்னு உன்னோட வருங்கால மாமனார்.. தீனதயாளன்.. அங்குதான் நின்று நீ பேசினதெல்லாம் கேட்டுட்டு இருக்காரு. கூடவே அவர் மகன் சஞ்சய் வேறு” என்று அவன் கை காட்டிய இடத்தில் கையில் கேமராவோடு இங்கே நடந்தவற்றை அனைத்தையும் அழகாக தனது தீரம் சேனலுக்காக படம் பிடித்துக் கொண்டிருந்த சஞ்சய் அவளை பார்த்து “ஹாய்!!” என்று கையை ஆட்டினான்.
“அப்புறம் இன்னொரு புளியங்கொம்பு சொன்ன இல்ல.. சோ சேட்!! அந்த புளியங்கொம்பு மேல புதுசா நாலஞ்சு பெட்டி கேஸ் போட்டு இப்போது கன்னியாகுமரி பக்கம் தள்ளிட்டு போயிட்டாங்க. எப்படியும் அவர் அங்கிருந்து வரதுக்கு ஒரு மூணு இல்ல நாலு மாசம் ஆகும்! அதுக்குள்ளே… உன்னை..” என்று அவன் சிரித்த அந்த அசுர சிரிப்பில் இதுவரை பயமே தெரியாத ஷாஷாவுக்குள்ளும் நடுங்கியது.
“ரொம்ப நன்றி ஏசிபி சார்!!” என்று தீனதயாளன் கௌதமன் கைகளை பற்றி குலுக்கினார். “நீங்க மட்டும் கரெக்டான நேரத்துல இவள பத்தி என்கிட்ட சொல்லலைன்னா.. நாங்க எப்படிப்பட்ட ஒரு அரக்கி கிட்ட மாட்டி இருப்போம்! என் பையன் வாழ்க்கையை நானே குழிதோண்டி புதைத்து சமாதி ஆக்கியிருப்பேன். ரொம்ப நன்றி நீங்க சொன்ன மாதிரி சில எடிட்டிங் செய்து இந்த வீடியோவை கண்டிப்பா நாங்க ஒளிபரப்புவோம்!” என்று அவர் வாக்கு கொடுத்து செல்ல, “எனக்கு அதுல ஒரு காப்பி இப்பவே வேண்டும்!!” என்றான் காவலனாய்..
ஏனென்றால் அவன் பட்ட ரணங்களும் நம்பிக்கைத் துரோகங்களும் அப்படி!!
அங்கே அவர்களது அந்த வேனியிலேயே வைத்து ஒரு காப்பியை பென்டிரைவில் மாற்றி கௌதமிடம் கொடுக்க, அவன் அதை தனது போனில் போட்டு பார்த்து அனைத்தும் சரி என்ற பின் அவர்களை அனுப்பி வைத்தான்.
இதற்கிடையே அந்த முரட்டு தாண்டவராயன்களிடமிருந்து கத்தியை எடுத்து இவள் அவர்களை தாக்க செல்ல, அந்த ஐந்து தடியன்களும் அவள் கையில் இருந்து ஆயுதத்தை பறித்து, தங்களின் முரட்டு வைத்தியத்தை அவளிடம் காட்ட.. சில பல ரத்தக் காயங்களுமாய் பல உள்குத்துமாய் அடங்கி பயத்துடன் அமர்ந்திருந்தாள் ஷாஷா!!
தியாகராஜனிடம் அவளையும் அவளது கூட்டத்தையும் ஒப்படைத்தான் நல்ல காவலனாக!!
அந்த ஐந்து தடியன்களையும் மன்னித்து அனுப்பிவிட்டான் கௌதம், அவனின் யசோவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நல்ல காதலனாக!!
இப்படியாக இவர்கள் வீட்டுக்கு செல்ல மாலையை இரவு விழுங்கிக் கொண்டிருந்த நேரம்..
கண்ணபிரானுக்கு போன் செய்து நடந்தவற்றை சுருக்கமாக கூறி யசோதரா தற்போது அவனோடு இருப்பதாகவும் இரவு கொண்டு வந்து விடுவதாகவும் கூறி வைத்தான் போனை!!
“குளிச்சிட்டு வா!!” என்று அவளைத் தன் அறையில் விட்டு விட்டு மற்றொரு அறையில் குளித்து விட்டு இவனும் வந்தான். தன் நெற்றி ஈரத்தை இடது கை ஆள்காட்டி விரலால் துடைத்து சுண்டியப்படி யசோவை நெருங்கினான் கௌதம்!! அவனது ஒற்றை வெண்ணிற சட்டையை மட்டும் அவள் அணிந்திருக்க.. அவனது கண்களில் மின்னல் தெறித்தது.
அவன் நெருக்கத்தை அப்போதுதான் முதன் முதலாக உணர்வதைப் போல அவளுக்கு படபடப்பு கூடியது. மெல்லிய சிலிர்ப்புடன் அவளை விழுங்குவது போலப் பார்த்தான். அவன் கண்கள் அகன்று அவளை ஆழியென உள்ளே இழுப்பதை உணர்ந்தவளுக்கு மூச்சு சீரற்ற வர, ஆழமாக மூச்சை இழுத்து சீராக்க முயன்றாள். நெருங்கியவன் அவள் கன்னத்தில் தட்டி, “என்னடி என் சட்டையை போட்டு இருக்க?”
“ஏன் போட்டா என்ன?”
“போடலாம்ம்ம் தான். ஆனா இப்படி நச்சுனு வந்து நின்னா நானும் உன்னை போடலாம் தான்?” என்றவன் தலையில் பரிசாக இரண்டு மூன்று கொட்டுகள் விழுந்தன.
அவளை இறுக்கி அணைத்து கொள்ள அவளுக்கு கால்கள் துவண்டு விடும் போலிருந்தது.
“உங்களுக்கு அவளைப் பார்த்ததும் பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சா? கஷ்டமா இருந்துச்சா?” என்று மெதுவாக கேட்டாள். அவள் மனதின் வலியும் அதில் வெளிப்பட்டது. அதை அவனும் உணராமல் இல்லை.
”என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது?” அவள் விழிகளைப் பார்த்துக் கேட்டான்.
”எனக்கு நிறைய்ய்யய தோணும். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” மெல்லிய குரலில் சிணுங்கலாய் அவள்!!
”இல்லை.. கொஞ்சம் கூட கஷ்டம் இல்லை?” தெளிவாய் அவன்!!
”அப்போ சரி.. ” அவள் நாக்கை குழியில் குழைத்து “பாவம் நீங்க.. ரொம்ப பீல் பண்ணினா கொஞ்சம் உங்க மூடு மாத்தலாம்னு நான் நெனச்சேன். அதான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டீங்களே!!” என்று அவனிடமிருந்து பிரிந்து தனது உடைகளை அவள் எடுக்க..
அவளின் கைகளை பற்றி அவன் சுழற்ற, அவளோ அவன் மேல சரிந்து அவனது தோள்களை அழுத்தி பற்றி நிற்க.. இழுத்து அவளை இறுக அணைத்தான். அவனின் ஈர மார்பில் சாய்ந்து மெதுவாக அவனைக் கட்டிப்பிடித்தாள். அவன் உடலில் இருந்து வந்த ஆணவனின் மணமும் கூடவே சோப்பின் மணமும் அவள் மனதை மயக்கியது. மோகம் கிளர்ந்தது இருவருக்கும். அவனுடன் ஒட்டிக் கொண்டே இருக்க ஏக்கம் பிறந்தது அவளுக்கு.
“கஷ்டம் இல்லன்னு தான் சொன்னேன். வலி இல்லைன்னு சொன்னேனா? அவளை பார்த்த அந்த கணம் எவ்வளவு வலி தெரியுமா? ஆனால் அது எல்லாம் அவள் கன்னத்தில் நீ கொடுத்த அடியில் மறைந்து மாயமாய் போய்ட்டு!” என்றவன் அவனை இன்னும் இறுக்கமாக தழுவி இருந்தாள்.
அந்த அழுத்தமான தழுவல்தான் அவனின் தேவையும். நான் இருக்கிறேன் உனக்கு என்பதாய்!!
மற்றதெல்லாம் வெறும் செயல்களும்.. சொற்களும் தான்!! அதிலெல்லாம் இல்லை மன நிம்மதி!!
அவளின் தழுவலை தொடர்ந்து அவளின் இதழ்களை வன்மையாக கொய்திருந்தான். மிக ஆவேசமான நீண்ட நெடிய முத்தமாக மாறியது. இவ்வளவு தவிப்பான ஒரு முத்தத்தை இதற்கு முன் அவள் அனுபவித்ததில்லை எனும் அளவுக்கு!!
மோகத்தின் உச்ச தவிப்பிலோ..
தாபத்தின் அனத்தல்களோ..
இல்லை அது!
தனக்கு உரிமையானவளிடம் மட்டுமே கிடைக்கும் நிம்மதி!! ஆத்ம திருப்தி!! அது!!
யார் சொன்னது முத்தம் காமத்தில் சேரந்தது என்று?
மனம் அலைபுறும் நேரம் இணையின் இந்த இதழணைப்புக்கு இணையானது ஏதேனும் உண்டா?
ஆழமாய் முத்தமிட்டு பிரிந்தான் கௌதம். அவனுக்கும் மூச்சு வாங்கியது. அவளுக்கோ உடல் லேசாக படபடத்தது. அவள் கன்னங்களை கிண்ணங்களாக தாங்கி முத்தமிட்டு மெல்ல கடித்தான். அவள் இமைகள் மூடி சொக்கி நிற்க..
“மிஸ் யூ டி!! என்று இமைகளில் முத்தமிட்டான்.
அவளின் சங்கு கழுத்தில் முகம் புதைத்து, “மிஸ் யூ டி!!” என்றவன் அங்கேயும் மெல்லிய சத்தத்துடன் அழுத்தி முத்தமிட்டு மெல்லக் கடித்தான்.
பின் நெஞ்சில் முத்தமிட்டான். கூடவே “மிஸ் யூ டி!!” பின் மெல்ல கடித்தான்.
அவளுக்கு புரிந்தது. தான் காணாமல்போன இடைப்பட்ட அந்த நேரத்தில் அவன் தன்னை ரொம்பவும் மிஸ் செய்திருக்கிறான் என்று!! அது தான் இந்த முத்த மழை!! மோக மழை!!
அவனின் முத்தாடல்களும்.. கடித்தல்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன.. இடையிடையே “மிஸ் யூ டி!!” இடை விடாமல்..
கொள்ளையிட வருவான்…
