நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

அத்தியாயம் 29

பைரவ்வின் உடலில் போடப்பட்ட கட்டுகளுடன் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, முகம் வெளுத்துக் களையிழந்த தோற்றத்துடன் மெல்ல தன் நண்பனின் அருகில் வந்தமர்ந்தாள் ரத்னா. மௌனமாக கண்ணீர் விட்டவளின் தோளில் கைவைத்து அழுத்திய வருணை உணர்ச்சியற்ற முகத்துடன் பார்த்தவள் அவனை இடையோடு கட்டிக் கொண்டு அவனது வயிற்றில் முகம் புதைத்து அழலானாள்.

“காம் டவுன் ரதி! நீ இப்டி நெகட்டிவ்வ அழுகுறது பைரவ்வுக்கு நல்லதில்ல. அவன் கூட பேசு. அவனும் நம்மள மாதிரி தான். சொல்லப் போனா இந்த மாதிரி ஸ்டேஜ்ல மனுஷங்கள விட பிராணிகளுக்கு.. அதுலயும் நாய்க்கு காது ரொம்ப நல்லா கேட்கும். அவன நீதான் எழுப்பணும்.” என ரத்னாவிற்கு தைரியமூட்டி விட்டு ஒருப் பெருமூச்சுடன் தனதண்ணனைக் காண சென்று விட்டான் வருண்.

பைரவ்வின் முன்னங்காலில் ஒன்றையெடுத்து தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டு, “டேய் தம்புடு.. நான் அப்பா இறந்தப்போ கூட அவ்வளவா அழலடா. ஏன் தெரியுமா? அவர் உன் ரூபத்துல என்கூட இருக்காருன்ற தைரியம் தான்டா. நீ இல்லைன்னா என்னால சத்தியமா ஒன்னும் பண்ண முடியாது. என்கூட இப்பல்லாம் யாருமே இல்லாத மாதிரி தோணுது. என்கிட்ட வந்துடுறியா?! நான் உனக்கு இன்னும் நிறைய லெக் பீஸ் குடுக்குறேன். இன்னும் நிறைய டைம் ஸ்பென்ட் பண்றேன். கண்ணத் திறந்து பாருடா.. ப்ளீஸ்..” எனக் கெஞ்சியபடி கண்ணீருடன் அழுதவள் திடுக்கிட்டுப் பார்த்தாள் பைரவ்வின் முகத்தை.

ரத்னா தலைகுனிந்து அழுதபோது கண்களை நன்கு திறந்து அவளைப் பார்த்துவிட்டு, அவள் நிமிரும் தருவாயில் படக்கென கண்களை மூடிக் கொண்டது பைரவ். பொதுவாக தான் அனைத்தையும் கவனித்து கொண்டிருப்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக நாய்கள் இருக் காதுகளையும் நிமிடத்திற்கொரு தரம் அசைத்துக் காட்டும்.

அதே வழக்கத்திற்கு தனது இருக்காதுகளையும் ஒருசேர சட்டென அசைத்து தன் எஜமானியின் மாட்டிக் கொண்டது அறியாது அசையாமல் படுத்திருந்தது பைரவ்.

 அந்தக் கள்ளத்தனத்தைக் கண்டுபிடித்து விட்டவளுக்கு அப்போது தான் உயிரே திரும்பி வந்தது போன்ற ஓர் நிம்மதி, ஆசுவாசம் எல்லாம் ஒருங்கே வந்திணைந்து மனதை அமைதியாக்கியது ரத்னாவிற்கு.

“ஏன்டா பொடிப்பயலே! என்கிட்டயே நடிக்கிறியா?! யூ…ராஸ்கல்.. உன்னை இருடி பாத்துக்குறேன்..” என வாய்க்குள்ளேயே முணங்கியவள் அப்போது தான் பைரவ்வின் ரிப்போர்ட்ஸ் அனைத்தையும் பார்வையிடலானாள்.

தான் ஒரு மருத்துவ செவிலியராக இருந்தாலும் தன் நண்பனின் நிலையைக் காணும் சக்தி ரத்னாவிற்கு இருக்கவில்லை. அவனை ஊசி கொண்டு தைக்கும் காட்சியைப் பார்க்கும் தெம்பு கூட இல்லாமல் நிலைகுலைந்து போனாள்.

இப்போது பைரவ் பிழைத்து விட்டான் என புரிந்ததும் அதே சுறுசுறுப்பும் உற்சாகமும் அவளைத் தொற்றிக் கொண்டது. அவனது ரிப்போர்ட்ஸை பார்வையிட்டு விட்டு மருத்துவரை அழைக்கச் சென்றாள் மகிழ்ச்சியுடன்.

மருத்துவரும் வந்து பரிசோதித்து விட்டு, “இது உண்மையிலயே பெரிய விஷயம் தான் ரத்னா. ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சுருக்கான் உங்க ஹீரோ. இனிமே பயப்பட ஒன்னுமில்ல.” எனக் கூறியவரின் காதில் வந்து,

“சார்..சார்..சார்.. அவன் கண்ணேத் திறக்காம நடிக்கிறான். அவன எழுப்புறதுக்காக நான் சொல்றதுக்கெல்லாம் ஆமாம்.. ஓகேன்னு மட்டும் சொல்லுங்க சார்..” எனக் குறும்புடன் ஹஸ்கி வாய்ஸ்ஸில் கெஞ்சி மருத்துவரை ஒப்புக் கொள்ள வைத்து விட்டு,

“சரி தான் டாக்டர். இந்த ட்ரிப்ஸ்ஸெல்லாம் ரிமூவ் பண்ணிடலாம்ல?!” எனக் கூறிக் கொண்டே அவ்வேளையை அவரைக் கொண்டே செய்யவும் வைத்து,

“அச்சச்சோ.. இந்த மாசம் இவனுக்கு போடுற வேக்ஸின் இன்ஜக்ஷன் போடணுமே சார்..” என ஓரக்கண்ணால் பைரவ்வைப் பார்த்துக் கொண்டே கிண்டலாக ரத்னா கூறியதும், தடபுடவென தலையைத் தூக்கி, “லொள்…” எனக் கத்தி தன் மறுப்பைக் கூறி அங்கிருந்து எழ முயன்று முடியாமல் பொத்தென மெத்தையிலேயே விழுந்தது.

முதலில் பைரவ் எழுவதைக் கண்டு நகைத்தாலும், சுகவீனத்தால் அது படும்பாட்டைக் கண்டு தன்மீதேக் கோபம் கொண்டவளாய், “டேய்..டேய்.. ஊசிலாம் ஒன்னும் போடலடா. டேய்ய்ய்…. யப்பா சாமி.. தயவு செஞ்சு அசையாம படுறா. தையல் பிரிஞ்சுடப் போகுது..” என ஆதங்கப்பட்டவாறே தன் நண்பனைக் கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவள் மீது நம்பிக்கையில்லாமல் அப்படி இப்படி அசைந்து கொண்டிருந்த பைரவ்வைத் தன் மடியில் தூக்கி வைத்தவளோ, “ஹப்பாடி… ஒருவழியா நீ பிழைச்சுட்ட. எனக்கு எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமோ?!” என அதன் பிடரி மயிர்களைப் பிடித்து தடவிக் கொடுத்து விளையாட ஆரம்பித்தாள்.

 அந்த நேரத்தில் உள்ளே வந்த வருணுக்கு இவளின் வேலைகளைக் கண்டு பைரவ்வின் மீது பொறாமை தான் வந்தது. “ரதி! அண்ணா கண்ணு முழிச்சுட்டான்.” எனக் கூறியதும், பைரவ்விடம் நூறுக்கட்டளைகள் பிறப்பித்து விட்டு சந்துருவைப் பார்க்க கிளம்பி விட்டாள் ரத்னா.

காரில் போகும் வழியில், “மாமாக்கு இப்போ எப்டி இருக்கு?” என வருத்தத்துடன் கேட்டவளுக்கு, “துருப்பிடிச்ச கத்தியாலக் குத்துனது தான் ரொம்பக் காம்பிளிக்கேட்டடா ஆகிடுச்சு. இல்லைன்னா சீக்கிரமே குணமாகிருப்பான்.” என ரத்னாவைக் காணாது அமைதியுடன் கூறியவனைக் கண்டவளுக்கு தன் தமக்கையிடம் ஒருசில விஷயங்கள் பேச வேண்டும் எனத் தோன்றியது.

நேத்ராவிற்கு போதைமருந்தின் தாக்கம் மட்டுமே என்பதால் மூன்று நாட்களில் குணமடைந்து எழுந்தமர்ந்து விட்டாள். அவள் எழுந்தமர்ந்ததும் அவளது அருகிலேயே இருந்து கவனித்து கொண்ட தேவசேனா நடந்த அனைத்தையும் கூறி, சந்துரு மற்றும் பைரவ்வின் நிலை பற்றி விவரித்தார்.

நேத்ராவிற்கு சந்துருவைப் பற்றிய நினைவுகளே அதிகமாக சூழ்ந்து மனதை ரணமாகத் தாக்கியது. ‘அவரது தேவை உடல் மட்டுமே என நினைத்தேனே.. அன்றிரவு கூடல் கூட சரி தானா என எண்ணுமளவிற்கு அவர் மீது அவநம்பிக்கை வைத்திருந்தேனே.. என்னவர் எனக்காக உயிரை துச்சமாக நினைத்து போராடி இப்போது சாகும் நிலையில் உள்ளாரா?! எனக்கு அவரைப் பார்க்க வேண்டும். இப்போதே பார்க்க வேண்டும்.’ என பரபரப்புடன் எழுந்தளின் உடல் அவளது பேச்சைக் கேட்க மறுத்தது.

அவளை சமாதானப்படுத்த முயன்று தோற்றவர்களாய் வீல்ச்சேரில் அமர வைத்து சந்துருவிடம் அழைத்து சென்றனர். உயிரிருந்தும் சடலமாய் கிடந்தவனைக் கண்டவளுக்கு கண்ணீர் வற்றாத நதிபோல பெருக்கெடுத்து வழிந்த மயமாய் இருந்தது.

“சந்துரு… இந்த பிடிவாதக்காரிக்காக உங்க உயிரக் கொடுத்து தான் உங்க அன்பை நிரூபிக்கணும்ன்னு  இப்டி பண்ணீங்களா?! என்னை விட்டு நீங்க போற முடிவெடுத்தா, நானும் உங்கக் கூட வந்துடுவேன் சந்துரு. இத மட்டும் நியாபகத்துல வச்சுங்குங்க.” என அழுதுகொண்டே கூறியவள், மெல்ல எழ முயன்று அவனருகில் அமர்ந்து சந்துருவின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து, பின் அவனது இதழிலும் கண்ணீர் கலந்த தேனமுத முத்திரையைப் பதித்தாள் நேத்ரா. 

விரைவில் உடல் தேறிய நேத்ரா, அதன்பின் சந்துருவின் அருகிலேயே தவமிருந்தாள். என்றாவது ஒருநாள் கண்விழிக்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் அவனுக்குரிய பணிவிடைகளை மனமாற ஏற்று செய்தாள். அவளது கவனிப்பைக் கண்ட மரகதம் பாட்டி,

“எப்டிப்பட்ட பாவத்தை நீ பண்ணிருக்கன்னு உனக்குத் தெரியுதா காதம்பரி?! இவள விட அந்த நீலிமா உனக்கு உசத்தியா இப்பயும் தெரியுதா என்ன?! சொல்லு. இன்னாருக்கு இன்னார்ன்னு கடவுள் போட்ட முடிச்ச நீயின்னு இல்ல.. வேற யாராலயும் மாத்த முடியாது. முடிஞ்சா உன் பிள்ளைக்காக நீ மாறிக்கோ. இல்லைன்னா விலகிக்கோ.” எனக் காதம்பரியிடம் ஆதங்கப்பட்டு விட்டு அவ்விடத்தை விட்டு நகல முயன்றவரின் திருவடியைப் பற்றி கதறலானார் காதம்பரி.

“என்னை மன்னிச்சிடுங்க அத்தை. என் மகன விட எனக்கு யாரும் முக்கியமில்ல. இவ்ளோ குரூரியா நீலிமா இருப்பான்னு சத்தியமா நான் கனவுலயும் நினைச்சு பாக்கல. சந்துரு கண்ணு முழிச்சிருவான். நான் நம்புறேன் அத்தை.” என விசும்பலுடன் கூறியவரைத் தோள் தட்டி சமாதானப்படுத்தினார் மரகதம். 

அனைவரையும் பதற வைத்து விட்டு நிதானமாக கண்விழித்த சந்துரு முதலில் கண்டது நெற்றி நிறைய குங்குமம் வைத்துக் காத்திருந்த தனது ஆருயிர் மனைவி நேத்ராவின் ஆனந்தக்கண்ணீர் வழிந்த பொன்முகத்தைத் தான். ஆனால் அவன் கேட்டக் கேள்வியில் அனைவருமே ஆச்சர்யத்திற்குள்ளாகினர்.

“பைரவ் பொழச்சுட்டானா?” என்றக் கேள்வியில் தான் நேத்ராவிற்கு பைரவ்வின் நினைவே வந்தது. ‘அய்யோக் கடவுளே! எப்படி அவனை மறந்தேன்?!’ என உள்ளம் பதறியவாறு தன் தமயனைப் பார்த்தவளுக்கு மௌனத்தையே பரிசளித்தான் தயாளன்.

“அவனுக்கும் சந்துரு மாதிரியே தான் கத்திக் குத்து விழுந்துருக்கு. இன்னும் அவன் கண்ணு முழிக்கல..” என வருத்தத்துடன் தயாளன் கூற, அனைவருமே மௌனம் காத்தனர். 

உண்மையில் சந்துருவிற்கு நாய்கள் என்றாலே அலர்ஜி. நேத்ராவை இரயிலில் பைரவ்வுடன் காணும்போதும் அதன்பிறகு தொடர்ந்து பைரவ்வினை அவர்களின் வீட்டில் காணும் போதும் பலமுறை மிகவும் எரிச்சலடைந்திருக்கிறான். 

தன்னை நோக்கி விசுவாசத்துடன் வாலை ஆட்டியவாறே தேடி வந்து சுற்றி சுற்றி வலம் வரும் அவ்வைந்தறிவு ஜீவன் தன்னைக் காப்பதற்காக உயிரை விடவும் சித்தமானதை எண்ணி மனம் கூனிக் குறுகிப் போனான் சந்துரு.

ஒரு வாயில்லா ஜீவன் செய்த தியாகத்தை எண்ணியவன் மனமாற பைரவ் பிழைக்க வேண்டும் என கடவுளை முதன்முறையாக பிரார்த்தித்தான். மாலைப் பொழுதில் சந்துருவைப் பார்க்க மலர்ந்த முகத்துடன் ரத்னா வருவதைக் கண்ட அனைவரும் புரிந்து கொண்டனர் பைரவ் பிழைத்து கொண்டதை.  

சந்துருவை நலம் விசாரித்தவள் பைரவ் பிழைத்துக் கொண்டதை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டாள் ரத்னா. பின் தன் தமக்கையின் தெளிந்த முகத்தைக் கண்கானித்தவள் மெல்ல சிரித்தபடி தலையை இருபுறமும் ஆட்டிக் கொண்டாள்.

‘ம்ஹீம்.. இனி நம்ம சப்போர்ட் மேடம்க்கு தேவையில்ல. ரைட்டு விடு..’ என உள்ளுக்குள் நினைத்தபடி தன்னவனைத் தேடினாள் அதுவரை இல்லாத ஓர் ஏக்கத்துடன்.

‘எங்க…. நம்மாள கண்ணுலயே காணோமே.. கூட தானே வந்தாரு..’ என யோசித்தவள் மருத்துவ வளாகத்தில் வந்து தேடலானாள் ரத்னா. அப்போதும் வருண் ரத்னாவின் கண்களில் சிக்கவேயில்லை. இவையனைத்தையும் கண்டும் காணாமல் நமுட்டு சிரிப்புடன் சுற்றி வந்தனர் மூத்தத் தலைமுறையினர்.

 சிறிது நாட்கள் கழித்து மருத்துவமனை விடுத்து வீடு திரும்பியவர்களை வரவேற்க, முன்கூட்டியே தங்களது வீட்டிற்கு வந்து ஸ்கூட்டியை நிறுத்திய போது “லொள்…லொள்..” என்றக் குரைப்பு சத்தம் கேட்கவும்,

“இது நம்ம பைரவ் வாய்ஸ் இல்லயே. ஆனா அவன் மாதிரியே இருக்கே..” என முணங்கியவாறு சத்தம் வரும் திசையை நோக்கி நடந்து வந்தாள் ரத்னா. அங்கே ஒரு கோல்டன் ரெட்ரைவர் நாயுடன் வருண் நின்று கொண்டிருந்தான்.

வெகுநாட்கள் கழித்து பார்த்த ஆர்வத்தில் தன்னை மறந்து வருணை நோக்கி ஓடி வந்த ரத்னா, அவனருகில் இருந்த நாயைக் கண்டு ஓடி வந்த வேகத்தைக் குறைத்து தயங்கியபடி நடந்து வந்தாள்.

“என்ன இது?! நாயெல்லாம் வளர்க்க போறீங்களா என்ன?” எனக் கிண்டலாக கேட்டவளைக் குறும்புடன் நோக்கியவன், “நாங்க ஒன்னும் உங்களுக்கு கிஃப்ட் பண்ண கொண்டு வரல. என் சகலைக்காக கூட்டிட்டு வந்துருக்கோம்.” என வேண்டுமென்றே எங்கோ பார்த்து கூறினான் வருண்.

‘சகலையா….?!’ என சற்று நிமிடங்கள் யோசித்தவளின் புருவங்கள் உயர, “அடப்பாவி கிராதகா! புரேக்கர் வேலையாடா பாத்து வச்சுருக்க?!” எனக் கடுப்புடன் கூறியவளை வம்பிழுக்கும் எண்ணத்துடன்,

“ஹூம்.. என்னப் பண்றது?! சில தத்திகளுக்கு தான் தங்களோட லவ்வர பத்தி கொஞ்சமும் அக்கறையில்ல. நாய்க்கும் ஜோடி தேவைப்படும். அதுங்களுக்கும் ஜோடிய சேர்க்கணுங்குற அறிவும் இல்லை. நாமாளாவது அந்த நல்லக் காரியத்தை செய்வோமேன்ற ஒரு நல்ல எண்ணம்..” என நக்கலாக பேசி நையாண்டி செய்தவனை ஏகத்திற்கும் முறைத்துப் பார்த்தாள் ரத்னா.

“என்னோட பைரவ் என்னை விட்டு எங்கயும் போக மாட்டான். அவன் என் பைரவ்வாக்கும்..” என மூக்கை விடைத்தவாறு சிறுபிள்ளைப் போல கைகளை இடுப்பில் வைத்து முகம் சுளித்தவளைக் கண்டவனுக்கு கைகளெல்லாம் பரபரத்தது அள்ளி அணைக்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *