நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

அத்தியாயம் 20

பதினைந்தாவது ஃப்ளோர்.

இரவு நேரத்து ஒளி மின்னும் மின்மினிப் பூச்சிகளைப் போல தொலைதூரத்து சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள் மற்றும் இரு சக்கர ஊர்திகளின் விதவிமான நிறம் கொண்ட பிரகாசங்களை, எந்தவித உணர்வும் இல்லாமல் பால்கனியில் நின்று பார்த்து கொண்டிருந்தாள் நேத்ரா.

மனதோ தன்வசமில்லாமல் தறிக்கெட்டு ஓடிக் கொண்டிருந்தது. ‘அவன் உன்னை இழிவுபடுத்தியவன்… அவனுக்காக ஏன் உன் மனம் பதறுகிறது?! வேண்டாமென்று உதறிவிட்டு சென்றவன் தானல்லவா. மீண்டும் உன்னிடம் வந்து நின்று அழைத்தால் சென்றுவிடும் அளவிற்கு நீ பலவீனமானவளா?! உன்மீதுள்ள பழியை முதலில் அவனால் துடைக்க இயலுமா?!’ என தன் மனம் தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை அண்ணார்ந்து பார்த்தபடி அங்குள்ள சாய்நாற்காலியில் சென்றமர்ந்தாள்.

டெல்லியில் அவளுக்காக புக் செய்யப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த நேத்ரா, சங்கருக்கும் நிகிலனுக்கும் அங்கே தனதறைக்கு அருகிலேயே இருந்த அறையை புக் செய்து தங்க வைத்தாள்.

அறையினுள்ளே வந்ததில் இருந்து மௌனமாக நடமாடும் நேத்ராவை வினோதமாகப் பார்த்தவர்கள், ‘ம்ஹூம்.. இவள இப்டியே விட்டா சரிபட்டு வர மாட்டா.. என்னா பண்ணலாம்..?!’ என யோசித்தபடியே, 

“டேய் சங்கர்! ரொம்ப போரடிக்குது மச்சி! வாடா அப்டியே ஊரைச் சுத்திட்டு வரலாம்.” என வெளியே செல்ல அழைத்த நிகிலனை நிமிர்ந்து பார்த்தவளோ,

“யாரும் எங்கேயும் போகக்கூடாது. வந்த வேலைய மட்டும் பாத்துட்டு கிளம்பலாம்.” என கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு கூறிய நேத்ராவிடம்,

“ஏன்…. வெளிய போனா அந்த சந்துரு உன்னை ஏதும் பண்ணிடுவானோன்ற பயமா?” என நேத்ராவின் ரோஷத்தைத் தூண்டும்விதமாக ஜமுனா நக்கலாகக் கேட்க,

நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்து வந்தவள் அங்கிருந்த பஞ்சுத் தலையணையை எடுத்து ஜமுனா மீது எறிந்தவாறே, “எவனப் பாத்தும் எனக்கு பயமில்ல. புரியுதா?! டூ மினிட்ஸ். ரெடியாகிட்டு வந்துடுறேன்.” எனக் கூறிவிட்டு பாத்ரூம் நோக்கி சென்றுவிட்டாள் நேத்ரா.

ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கியவாறே, “மச்சான்ஸ்.. செம்ம சான்ஸ். எப்டியாவது ரெண்டு பேரையும் தனியா மாட்டி விடணும். புரிஞ்சுதோ?!” என இரகசியக்குரலில் கூறியவளிடம் ‘சரி’ என ஆமோதித்தபடி தலையசைத்து விட்டு வெளியே செல்ல தயாராக ஆரம்பித்தனர்.

வாடகைக் கார் ஒன்றைப் பிடித்துக் கொண்டு டெல்லியை இரவின் ஒளியில் சுற்றிப் பார்த்தனர். வானளந்து நிற்கும் இந்தியா கேட்டை மின்னொளியின் அலங்காரத்தில் பார்த்து மெய்சிலிர்த்துப் போயினர்.

அங்குள்ளக் கோயில் ஒன்றிற்கு சென்று ஆதிசக்தியாகக் காட்சியளிக்கும் அந்த திரிபுரசுந்தரியை வணங்கிவிட்டு அங்குள்ள கோயில் படியில் வந்தமர்ந்தனர்.

“ஹூம்.. இதுவே எங்க ஊரா இருந்தா அழகா ஒரு சிதறுத் தேங்கா பிரசாதமா கிடைச்சுருக்கும். இங்க ஒன்னுமில்ல.” என தங்களது ஊரின் நினைவில் சங்கர் புலம்ப,

அதுவரை அமைதியாக இருந்த நேத்ராவிற்கு சந்துருவுடன் இணைந்து கோயில்களுக்கு சென்றது காலநேரம் பாராமல் நினைவில் வந்து வாட்டியது. 

வெள்ளிச்சலங்கைகள் துள்ளிக் குலுங்க, இளம்பச்சைநிறத் தாவணியை எடுத்து இடுப்பில் சொருகியபடி, ‘பொண்ணு வளையல்’ எனப்படும் பொன்னிற வளையல்கள் ஒன்றோடொன்று உரசிச் சிணுங்க, 

 “அய்யோ… இந்த மணி எனக்கு எட்டவே மாட்டேங்குது. நா..னும்.. எவ்..வி..எவ்..வி பாக்குறேன்.. ஷ்ஷப்பா.. முடியல” என துள்ளித் துள்ளிக் குதித்து சோர்ந்தவாறு இடுப்பில் கைவைத்துக் கொண்டு சற்று நொடிகள் மூச்சை சீர்செய்து விட்டு மீண்டும் முயன்றவளைப் புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தவன்,

நிதானமாக எழுந்து வந்து துள்ளும் அவளது இடையின் கீழ் இருக்கைகளால் கட்டியணைத்து மேலேத் தூக்கி, “இப்போ அடி.” என முத்துப் பற்கள் தெரிய சிரித்தான் சந்துரு.

சற்றும் எதிர்பாராமல் தன்னைத் தொட்டுத் தூக்கிய சந்துருவின் செயலில் மெய்மறந்து இன்ப அதிர்ச்சியுடன் கீழேக் குனிந்து மயக்கும் விழிகளால் தன் மணாளனை ரசித்துக் கொண்டிருந்த நேத்ராவிடம்,

“ஓய்… இப்டியே நிக்குறதுக்கு எனக்கும் ஆசை தான். அங்கப் பாரு.. பூசாரி உன்னையும் என்னையும் ஒரு மாதிரி பாக்குறாரு. சீக்கிரம் மணிய அடிச்சுட்டு இறங்கும்மா. என்னால என்னை ரொம்ப நேரம்லாம் கன்ட்ரோல் பண்ண முடியாது நீ இப்படிலாம் பாத்துட்டிருந்தா..” என செல்லமாக கெஞ்சியவனை நாணத்துடன் பார்த்து சிரித்தபடி, தனக்கருகில் எட்டியிருந்த மணியை ஆசை தீர அடித்துவிட்டு,

“அய்யோ.. நான் அடிச்சுட்டேன். கீழ இறக்கிவிடுங்க.” என அழகாக வெட்கி சிவந்த முகத்தை மறைக்க முயன்று தர்மசங்கடமாக நெளிந்தபடி நேத்ரா கூறியதும், குறுஞ்சிரிப்புடன் அவளைக் கீழே இறக்காமல் கோயிலுக்கு வெளியே தூக்கியபடியே சென்றான் சந்துரு.

“ஓய் படவா! என்னப் பண்றீங்க?! கீழ இறக்கிவிடுங்க. யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க?” என சிணுங்கியவளை சிறிதும் சட்டை செய்யாமல் பழனிக்கருகில் இருந்த குறுமலை உச்சியில் பிள்ளையார் கோயிலின் வெளியே தனது காதல் லீலைகளை நடத்திக் கொண்டிருந்தான்.

ஆள்நடமாட்டம் குறைவாக இருந்த அவ்விடத்தின் வேப்ப மர நிழலில் அவளைத் தூக்கிக் கொண்டு சென்றதும் மெல்ல அவளைக் கீழிறக்கினான் தன் முகத்தை அவளது முன்பக்க தேகத்தில் சற்று நெருங்கி நின்று அழுத்தியவாறு.

சந்துருவின் செதுக்கிய உதடுகள் அவளது உந்துசுழியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேறிக் கொண்டே அழுத்தியபடி நேத்ராவின் உணர்ச்சிகளை சீண்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

இறுதியாக தரையில் கால் வைத்து கீழிறங்கிய நேத்ராவின் கண்கள் முழுவதுமாக மூடினாலும் விழித்திரையினுள்ளே ‘அடுத்து என்ன?!’ என்றத் தேடலுடன் அலைப்புறுவதை கண்ட சந்துருவிற்கு இன்னும் இன்னும் அவளைக் கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஆவலாக இருந்தது.

தன்னை மறந்து நின்றிருந்தவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து, “நீ எப்பவும் எனக்கு மட்டும் தான் சொந்தம் நித்து. உன்னை என்னால யாருக்காகவும், எதுக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.” என தன் மனம் திறந்துக் கூறியவனின் திடமான தோள்வளைவில் முகம் புதைத்தவாறு,

“என்னாலயும் உங்களத் தவிர வேற யாரையும் என் மனசாற நினைக்க முடியாது சந்துரு.” என நாணத்துடன் மெல்லியக் குரலில் கூறிவிட்டு அவனை ஆரத்தழுவி அணைத்துக் கொண்டாள் நேத்ரா.

தன் மார்பின் குறுக்கே தலைப் பதித்த நேத்ராவின் உச்சந்தலையில் தனது இதழை அழுந்தப் பதித்து முத்தமிட்டவனும் நேத்ராவை வாகாக அணைத்துக் கொண்ட காட்சி, ஏனோ அப்போது தான் நிகழ்ந்தது போன்ற இன்ப அலைகளை நேத்ராவின் மனதில் ஏற்படுத்தி சஞ்சலத்தை உருவாக்கியது.

அந்நினைவுகள் தந்த ரணத்தில் கண்ணில் நீர் வழிய, ‘எல்லாமே பொய்.. எதுவும் உண்மையில்ல..’ என தன் மனதைக் கல்லாய் மாற்ற முயன்றபடி இறுகிப் போய் அமர்ந்திருந்தவளைக் கண்டு சற்று கவலையாக இருந்தது அவளது நண்பர்களுக்கு.

அம்மூவருக்கும் லண்டனில் அவர்களனைவரும் கிளம்புவதற்கு முன்பு ரத்னா, நேத்ராவைப் பற்றி கூறியது தான் நினைவிற்கு அடிக்கொரு தரம் வந்து கொண்டிருந்தது.

“இங்கப் பாருங்க ஃப்ரண்ட்ஸ்.. நேத்ரா பிடிவாதம் பிடிக்கிற குழந்தை மாதிரி. ஏதாவது ஒரு விஷயத்தை உடும்பு மாதிரி பிடிச்சுக்கிட்டு அது தான் சரின்னு கண்மூடித்தனமா இருப்பா. அதுக்கு காரணம் அவளுக்கு நடந்த சில சம்பவங்கள்.. ஆனா அதையே நினைச்சுட்டிருந்தா அவ வாழ்க்கை நிச்சயமா வீணாப் போயிடும். எப்படியாவது சந்துருவையும் நேத்ராவையும் மீட் பண்ண வைங்க. அப்போதா ஏதாவது ஒரு மேஜிக் நடக்கும்.” என நேத்ராவின் கடந்த கால கசப்பான சம்பவங்களைக் கூறி உதவிக் கோரியிருந்தாள் ரத்னா.

நேத்ராவின் ரணங்களை புரிந்து கொண்டவர்களுக்கோ முதலில் சந்துரு மீது கோபம் தான் வந்தது என்றாலும் இன்றைய நடப்பு வரை அவனிடம் தெரிந்திருந்த மாற்றங்களை ரத்னாவின் மூலம் அறிந்து கொண்ட பின் சந்துரு மீது கருணை பிறந்தது.

ஆம்.. நேத்ராவைப் பிரிந்து வந்த கணத்திலிருந்து எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூட சந்துருவிற்கு விருப்பம் வரவில்லை. எங்கு பார்த்தாலும் அவளது பிம்பமே தெரிய, தனக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு நத்தை போல தன்னையே சுருக்கிக் கொண்டு நடமாடினான்.

அப்போதும் நேத்ரா தங்கியிருந்த உயர்ரக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கியிருந்த சந்துருவை தாங்கள் வெளியேக் கிளம்புவதற்காக வெளிவந்தபோது அம்மூவரும் கண்டு கொண்டனர்.

நேத்ரா அறியாமல் சந்துருவின் அறைக்கு வந்த சங்கரும் நிகிலனும் தங்களது ஆதரவை அவனிடம் தெரிவித்து, அவனது மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டனர்.

ஹோட்டலை விட்டு கிளம்பியதில் இருந்து அவர்களை பின்தொடர்ந்து வந்த சந்துரு கடைசியில் கோவிலுக்குள் நுழைவதைக் கண்டதும் நேத்ராவைப் போல கடந்த கால நினைவுகளை அசைபோட்டவாறு நேத்ரா அமர்ந்திருந்தத் தூணிற்கு பின்னால் சென்று உட்கார்ந்து கொண்டான்.

அப்போது…..

“ஹேய்ய்ய்.. அங்கப் பாருடி… நம்ம சந்துரு மாதிரி தெரியுதுல்ல..” என உரக்கக் கத்திய அழகியொருத்தியின் கூச்சலில் கவனம் சிதறித் திரும்பிப் பார்த்தாள் நேத்ரா.

சந்துருவை நோக்கி வேகமாக ஓடிவந்தவர்களோ, அவனைக் கும்பலாக சூழ்ந்து கொண்டு, “ஹாய் பேபி.. என்ன.. ரொம்ப நாளா ஆளயே காணோமே.. எப்ப இந்தியா வந்த?! சொல்லிருந்தா நாங்கள்லாம் சிட்டா பறந்து வந்துருப்போம்ல?!” எனக் கொஞ்சியவாறு அவனைத் தொட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

முடிந்தவரை அமைதியுடன் அவர்களது கைகளைத் தன்மேல் படவிடாமல் தவிர்த்தவனுக்கு ஒருக்கட்டத்தில் பொறுமை என்பது கரை கடந்து சென்றிருந்தது.

“வில் யூ ஸ்டாப் இட்?! உங்களுக்கெல்லாம் இங்கிதம்ன்னா என்னன்னே தெரியாதா?! ஒருத்தர் கிட்ட பேசும்போது அவுங்களோட அனுமதி இருந்தா தான் தொடணும். யூஸ்லெஸ் ஃபூல்ஸ்..” எனக் காட்டுக் கத்து கத்தியவனை ஏளனமாகப் பார்த்தவாறு,

“என்ன சந்துரு?! இப்போ புளிக்கிற இந்தக் கனியத் தான் இதுக்கு முன்னாடி வண்டா சுத்தி சுத்தி வந்த நீ.. அதெல்லாம் மறந்து போச்சா?!” என அப்பெண் கூறியதும் ஒரு கூடை நெருப்பை அள்ளித் தன்மீது தெளித்தாற் போல ‘விலுக்’ என நிமிர்ந்து அமர்ந்தாள் நேத்ரா.

‘என்ன…. நான் நேசித்தது ஒருக் காமுகனையா?!’ என்ற நினைப்பே அவளை மேலும் மேலும் வருத்தியது. தன்னைப் பற்றிய அத்தனை உண்மையும் நேத்ரா அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவனோ,

“ஆமா.. இதுக்கு முன்னாடி கண்டதே காட்சி. கொண்டதே கோலம்ன்னு தான் நான் இருந்தேன். ஆனா இப்போ அப்படி இல்ல. என் லைஃப்ல என் வொய்ஃப்க்கு மட்டும் தான் இனிமே எல்லா உரிமையும் உண்டு.” என கூறிக் கொண்டிருக்கும்போதே, 

அலட்சியமாகத் தன்னைத் தொட முயன்ற ஒருப் பெண்ணின் கையை பட்டென தட்டி விட்டவன், “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நான் ஏற்கனவே சூடு வாங்கிட்டேன். நீங்களும் என் மூலமா சூடு வாங்கணும்ன்னா என்மேல கைய வைங்க.” என இறுகியக்குரலில் எச்சரித்தவனை மிரண்டு போய் பார்த்திருந்தனர் அப்பெண்கள்.

ஏனெனில் சந்துரு பெண்களிடம் பேசும் தோரணையே வேறு. ஆனால் இப்போது அவன் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டதும், சற்று நொடிகள் என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தவர்கள் மெல்ல அங்கிருந்து நகல ஆரம்பித்தபோது தூணிற்கு இந்தப் பக்கம் நேத்ராவைக் கண்டனர்.

தங்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படத்தில் இருப்பதைப் போலவே கணகச்சிதமாகப் பொருந்தியவளிடம் வந்து, “ஓ… நீ தான் நேத்ராவா?!” எனக் குரோதத்துடன் கேட்டதும் சந்துரு விறைத்து நிமிர்ந்தான்.

அவர்களனைவரையும் துச்சமாக பார்த்த நேத்ராவோ, “ஆமா. நான் தான் நேத்ரா.” என்று மட்டும் கூறிவிட்டு நிமிர்ந்தமர்ந்தாள்.

தங்களுக்கு வந்த தகவல்படி ‘நேத்ரா என்பவள் பயந்த சுபாவம் கொண்டவள். அவளை எளிதில் வென்று, துரத்தி விட முடியும்’ என்பதே. ‘ஆனால் இவளோ நெஞ்சை நிமிர்த்தி பார்க்கிறாளே?!’ என்றக் குழப்பத்தில் சற்றுத் தடுமாறிப் போன சமயம்,

“ஏ மச்சி! டெல்லில சில டொக்கு ஃபிகருங்களும் இருக்கும் போல.. ச்சீச்சீ.. ஒரே வாமிட்டா வருதுடா.” என நிகிலன் அப்பெண்களைப் பார்த்தவாறே ஜாடைப் பேச,

“அய்யய்யோ நண்பா! வாமிட் வருதா?! நான் என்ன பண்ணுவேன்?! எங்க உன்னைக் கூட்டிட்டு போவேன்?! அ..ஆ.. ஆபத்துக்கு பாவமில்ல. இந்தா நிக்குதுங்களே. வெறும் இன்னர மட்டும் போட்டுக்கிட்டு. இதுங்க மேல வாமிட் எடு மச்சா. கரெக்ட்டா இருக்கும்.” என பதறுவது போலக் கலாய்த்தான் சங்கர்.

“ஏய்.. யார்க்கிட்ட வந்து என்ன பேச்சு பேசுறீங்க?! இருங்கடா ஈவ்டீசிங்ன்னு உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து முட்டிக்குமுட்டி தட்ட சொல்றேன்.” என அப்பெண்கள் மிரட்டவும் கோரஸாக சிரிக்க ஆரம்பித்தனர் நிகிலன், சங்கர் மற்றும் ஜமுனா ஆகிய மூவரும்.

“ஓ… கம்ப்ளைன்ட் கொடுக்கணுமா? ஒன்னும் பிரச்சனையில்ல. ஜம்மு.. உங்கப்பா நம்பரக் கொடும்மா. பாப்பாக்கு கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.” என சங்கர் கிண்டலடிக்கும் தோரணையில் கூறவும்,

“எதுக்குப்பா வீண் அலைச்சல்?! உங்கப் பேர எல்லாம் சொல்லுங்க. நானே எங்கப்பாக்கிட்ட சிபாரிசு பண்றேன். நான் சொன்னா உடனே ஆக்ஷன் எடுப்பாரு எங்கப்பா..” என தனது மொபைலை கையிலெடுத்து அவர்களது தொடர்பு எண்களைக் கேட்கவும்,

“ஓய்.. என்ன.. எங்களையே மிரட்டுறீங்களா?! உங்கப்பா என்ன கமிஷனரா… இல்ல.. மில்ட்ரி கர்னலா.?! பெருசா வந்துட்டாங்க சீன் போடுறதுக்கு.” எனக் கூறி தனது கூந்தலை சிலுப்பியவாறே நக்கலடித்தாள் அக்கூட்டத்திலேயே வளர்த்தியாக இருந்த ஒரு பெண்.

“அய்யோ..அம்மணி! கரெக்ட்டா சொல்லிட்டாங்களே ஜம்மு.. ஆமா இவுங்கப்பா டெல்லி கமிஷனர். ரவீந்தர்ன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா தங்கச்சி?!” எனக் கூறிக் கொண்டே ஜமுனாவின் குடும்பப் புகைப்படத்தை எடுத்துக் காட்ட, அதைக் கண்டு சற்று பின்வாங்கினர் அப்பெண்கள்.

தோற்றுவிட்டு ஓடும்போதிலும் ஊளையிடும் ஓநாய்களைப் போல, “ஏய்.. சந்துரு எங்கக்கூட எவ்ளோ நெருக்கமா இருந்தாரு தெரியுமா?! உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் தான்டி எங்களையெல்லாம் ஏறெடுத்துக் கூட பாக்காம போறாரு. பாக்குறோம். இன்னும் எத்தனை நாளைக்கு உன் முந்தானைல முடிஞ்சு வச்சுக்குறன்னு.” என விஷத்தைக் கக்குவது போல பேசியவளை ஓங்கி அறைந்திருந்தான் சந்துரு.

சந்துரு அங்கு வந்து அவ்வாறு செய்வான் என எதிர்பார்க்காத அனைவரும் ஸ்தம்பித்து நின்ற வேளை, நேத்ராவின் கைப்பிடித்து தரதரதவென இழுத்துக் கொண்டு சந்நிதானக் கூடத்தின் நடுவே கூட்டி வந்து நிறுத்தியவன், 

அனைவர் முன்னிலையிலும் அங்கே கொட்டி வைக்கப்பட்டிருந்த குங்குமத்தை எடுத்து நேத்ராவின் உச்சி வகிட்டில் அழுத்தமாக வைத்து திலகமிட்டு தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.

சந்துரு அவ்வாறு நடந்து கொள்வான் என எதிர்பார்க்காத அவளது நண்பர்கள் மற்றும் அந்த குதர்க்க கும்பலுடன் சேர்த்து மற்றொரு பக்கத்தில் நின்றிருந்த ஜீவன்களும் பேரதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *