நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சம் 18


லாரி மோதியதால் மித்திரன் அடித்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டான். ஆள் நடமாட்டம் உள்ள இடம் என்பதால் மக்கள் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்க அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கபட்டான். அவன் மயக்கத்தில் இருந்ததால் அவனைப்பற்றிய விவரங்கள் தெரியாமல் அவனை அனாதை என்று நினைத்தனர்.

ஆழ் மயக்கத்தில் இருந்தாலும் அனாதை என்ற வார்த்தை உயிர் வரை சென்று வலித்தது. ஆக்சிடேண்ட் கேஸ் என்பதால் ட்ரீட்மெண்ட் கொடுக்க மருத்துவர்கள் தயங்கினர். தலைமை மருத்துவருக்கு யாரோ போன் செய்து உடனே மருத்துவம் செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் மருத்துவமனையின் லைசென்ஸ் உடனடியாக பறிக்கப்படும் என்று கூற உடனே ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டது. 

காலிலும், தலையிலும் பலத்த அடி என்பதால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டான். அவனுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனே செய்யபட்டு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காலை உமாவுடன் இணைந்து உணவு தயாரித்தவள் ஆதியை அழைக்க அவனது அறைக்கு சென்றவள் அதிர்ந்து நின்றாள். கையில் மது இருக்க எதிரில் இருந்த சுவரை வெறித்து கொண்டிருந்தான். என்னாச்சு என்றுமே இவ்வாறு இருக்கமாட்டானே இதுவரை குடித்து பார்க்காததால் அத்து என்னாச்சு…. அவனது தோளை தொட அதனை தட்டி விட்டவன் தன் நினைவில் மூழ்க அவனது அருகில் இருந்த போட்டோவை பார்த்தவள் அம்ரு அத்தை என்றவாறே புகைபடத்தை வருடி கொடுத்தவள் நினைவில் தன்னை அன்புடன் பார்த்துக்கொண்டவரின் நினைவில் கண்கள் கலங்கியது. அவளது நினைவானது பின்னோக்கி சென்றது.


மதி ஐந்து வயது வரை ஆதியின் வீட்டின் அருகில்தான் அவளது வீடும் இருந்தது. மதியின் வீடு மிகவும் சிறிய வீடு. தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் தந்தையிடம் தனக்கும் அதைப்போல்  வீடு வேண்டும் என அடம்பிடித்தாள். அவளது பிடிவாதம் தினம் தோறும் தொடர அவளது அன்னையிடம் அடி கூட வாங்கியும் சிறு வயதில் அதனை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை.

ஒரு நாள் கோவிலில் அம்ருதாவை பார்த்து ஆன்டி நான் உங்கள் வீட்டை பார்க்கலாமா? கண்களில் ஆசையுடன் கேட்டவளிடம் மறுக்க மனமில்லாமல் நிச்சயம் அழைத்து செல்வதாக கூற மதிக்கு அத்தனை மகிழ்ச்சி.

தன் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அதனை பகிர்ந்துகொண்டாள். அன்று மாலை தன் தாயுடன் அம்ருதாவின் வீட்டுக்கு சென்றவள் வீட்டினை ரசித்து பார்த்தாள். மாலை பள்ளி முடிந்து வந்த ஆதி புதிதாக ஒரு பெண் இருப்பதை கண்டு யார் என கேட்க பக்கத்து வீட்டு பெண் எனக் கூறி அவளுடன் விளையாடுமாறு கூற விளையாட சொல்ல எப்போதும் தான் மட்டுமே அனைத்தையும் ஒற்றை ஆளாக அனுபவித்தவனால் அவளுடன் பகிர விருப்பமில்லை.

அவளுடன் ஒன்றாமல் சில நாட்கள் இருந்தவனை அவள் வலிய சென்று அவனுடன் தன் நட்பை வளர்த்தாள். அவளுடைய குறும்பு தனமும், சேட்டைகளும் அவனை ஈர்க்க இப்போது எல்லாம் அவளை வெகுவாக எதிர்பார்க்க ஆரம்பித்தான்.

அவள் வராவிட்டாலும் அவனே சென்று தன் வீட்டிற்கு அழைத்து வந்து விளையாட ஆரம்பித்தான். அம்ருதா மிகவும் அன்பாக நடந்து கொண்டார். ஆதியின் அப்பா அடிக்கடி தொழில்முறை பயணமாக வெளிநாடு சென்று விடுவதால் அவ்வளவு பெரிய வீட்டில் தனிமையாக உணர்ந்த ஆதிக்கும் அம்ருதாவிற்கும் இன்றியமையாதவள் ஆகிவிட்டாள் ஷண்மதி.


தனியாக வளர்ந்த பணக்கார குழந்தையை தன் அன்பாலும் குறும்பாலும் ஒவ்வொரு நாளும் அவனை ஈரத்தாள்.  அவனும் ஷமி … ஷமி … என்று அவளை சுற்றி வருவான். தன் அன்னை அப்பாவை அத்தான் என்று அழைப்பதைப் பார்த்து ஏன் அப்படி அழைக்கிறீர்கள் என்று காரணம் கேட்டதற்கு நம் மீது அன்பானவர்களை அப்படி அழைக்க வேண்டும் என்று கோப அவனும் மதியிடம் சென்றவன் இனிமேல் தன்னை அதான் என்று அழைக்குமாறு கூற மழலை மொழி பேசுபவளுக்கு அந்த வார்த்தை வாயில் நுழையாததால் அன்று முதல் அத்துவாகி போனான்.

  ஓரிரு முறை மித்திரன் ஆதியின் வீட்டுக்கு வந்தாலும் அவனால் மதி அளவுக்கு அவனுடன் ஒன்ற முடியவில்லை. தன் தங்கை மீது தன்னை விட அன்பும் அக்கறையும் காட்டும் ஆதியை மித்ரனுக்கு எனோ பிடிக்கவில்லை. மதிக்கு ஐந்து வயதாகும்போது சென்னையில் தொழில் தொடங்கும் வாய்ப்பு சந்திரனுக்கு கிடைக்க சென்னைக்கு சென்றுவிட்டனர்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஆதியும், மதியும்தான். இத்தனை நாட்கள் தன் உடன் இருந்த தோழி தன்னை விட்டு சென்றதால் உணவு, உறக்கம் இன்றி பிடிப்புலும் கவனம் செலுத்த முடியாத ஆதியை தேற்றுவது மிகவும் கடினமாகி போனது. சிறு வயதில் இருந்தே கட்டிடங்களின் மீதான அவனது ஆர்வத்தை கண்டவர்கள் அவனது கவனத்தை அதன் பக்கம் திருப்பி தாங்கள் வெற்றி பெற்றதாக நினைத்து கொண்டிருக்க ஆதியின் மனமோ சீக்கிரம் படித்து முடித்து பெரியவனாகி மதியை தன்னுடன் அழைத்து வந்துவிட வேண்டும் என நினைத்தான்.

நீரில் பூத்த நெருப்பாய் தன்னவள் நினைவு வரும் போது திண்டாடிப் போவான். அனைத்தையும் நினைவு கூர்ந்தவள் தன் அன்பு அத்தையை நினைத்து கண்ணீர் சிந்தினாள்.

தான் ஏன் ஆதியை அத்து என்று அவளை அறியாமல் அழைப்பதன் தாற்பரியம் புரிந்தது. கண்களில் கண்ணீருடன் அத்து என கட்டிக்கொண்டவளை வெற்றுப்பார்வை பார்த்தவன் கண்களில் ஏண்டி என் காதலை புரிந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கம் மனதை அடைக்க அவளது  மடியில் இடையை கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டான்.

இன்று ஆதியின் பெற்றோரின் நினைவு நாள் இத்தனை வருடங்கள் எப்படியாவது தன்னவளை கண்டுபிடித்து தனவளாக்கி கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் செயல்பட்டவன் அவளை அடைந்த பின்னும் அவனது காதலை புரிந்து கொள்ளாமல் அவனை பிரிந்து செல்ல துடிப்பவளை என்ன செய்தால் தகும் என்ற கோபமும் ஆற்றாமையும் வர வெகுநாள் கழித்து மதுவை கையில் எடுத்து அமர்ந்துவிட்டான்.

மதிக்கு தன் அன்பு அத்தையை இழந்த வருத்தம் இருந்தாலும் தன் சிறு வயது நண்பனே காதலனாகவும், கணவனாகவும் வந்ததை நினைத்து நெஞ்சம் விம்ம ஆதியின் தலையை கோதி கொடுத்தாள்.

ஏன் பேபி என்னுடைய காதல் உனக்கு புரியவில்லையா இல்லை என்னுடன் வாழ விருப்பமில்லையா? ஒவ்வொரு முறையும் புரிந்து கொள்வாய் என்று நான் ஏங்கி தவித்ததுதான் மிச்சம் பேபி… இப்போது கூட அந்த ரிஷாவை கல்யாணம் பண்ண சொல்கிறாய் ஆதங்கத்துடன் கேட்டவனின் கேள்விக்கு தன்னிடம் பதில் இருந்தாலும் அவனுக்கு இப்போது தேவை தன் அரவணைப்பு என்பதை உணர்ந்தவள் அவனை தன்னுடன் இறுக்கி கொண்டாள்.

அத்து… சாரி… அத்து உங்களுடைய காதல் எனக்கு புரிந்தாலும் ஏதோ இனம் புரியாத திரை நம் இருவருக்கும் இடையே இருந்து வந்ததது. 

நான் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறேன் தெரியுமா அத்து… சிறு வயதில் இருந்து எனக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் நான் முதலில் தேடுவது என்னுடைய அத்துவை தான். நீங்கள் என்னை கடத்தியதால் தான் எனக்கு உங்களின் காதலை புரிந்து கொள்ள முடியவில்லை. 

ரிஷாவின் தந்தை பேசியதற்கு நீங்கள் எந்தவித எதிர்ப்பும் கூறாததால் ஒருவேளை அவர் கூறியது உண்மை என்று நம்பிவிட்டேன். 

அவனிடம் மன்னிப்பு கேட்டவளை தன்னுடன் அரவணைத்து கொண்டவன் உன்னைத்தவிர எனக்கு எதுவும் முக்கியமில்லை. ஐ லவ் யூ பேபி… என்றவனை அவளும் இறுக அணைத்து முகம் முழுவதும் முதமிட்டவள் தன் மொத்த காதலையும் கண்களில் நிரப்பி ஆதி என்று அழைக்க அந்த அழைப்பு உயிர் வரை சென்று திதித்தது.

தலையில் பலத்த அடி என்பதால் ஒரு மாதம் மருத்துவ மனையில் இருக்க வேண்டிய நிலை உருவாக அனைவரும் இருந்தும் ஆதரவற்ற நிலையில் இருப்பது வெகுவாக வலித்தது. தன் குடும்பத்திடம் கூறினால் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள் என்பதால் சரி ஆனதும் மெதுவாக சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

ஒரு மாதம் கழிந்த நிலையில் உடல் நன்றாக தேறி விட டிஸார்ஜ் ஆனவன் ரிசப்ஷனில் பணம் செலுத்த சென்றவனிடம் ஏற்கானவே கட்டிவிட்டார்கள் என்று கூறவும் யார்? தன்னை இங்கு யாருக்கு தெரியும் என்ற கேள்வி எழ யார் கட்டியது? எனக் கேட்டவனிடம் மிஸ்டர் ஆதித்யா மல்கோத்ரா.

ஆதியின் பெயரை கேட்டவன் அதிர்ச்சியும், ஆச்சர்யத்துடன் அவனுக்கு எப்படி தெரியும் தனக்கு அடிபட்டது என்ற யோசனையில் இறங்கியவனை கலைத்தது ஹவ் ஆர் யூ மை ஸ்வீட் எனிமி… என்ற குரலில் திரும்பியவன் ஆதியை கண்டவுடன் பேச்சை மறந்து நின்றான். 

ஏற்கனவே தன் மேல் குற்ற உணர்வில் இருந்தவன் ஆதியை கண்டதும் அதிகரிக்க இதுவரை தன் ஈகோ பெரிதென்று  வாழ்ந்தவன் ஆதியிடம் தன் மன்னிப்பை வேண்ட ஆதி அவனை அணைத்து கொண்டான்.

ஆதித்யா தன்னை அணைத்தது ஆனந்த அதிர்ச்சியுடன் அவனை பார்க்க நான் ஒன்றும் ராதிகா இல்லை அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… என்றவனின் கேலியில் இவனுக்கு இப்படி கூட பேசத் தெரியுமா? என்றே நினைத்தான்.

ஆதி என்னை மன்னித்து விடு என்னுடைய ஈகோவினால் உன்னை வெறுத்தேன். உன் மேல் இருந்த கோபத்தில் குழந்தைகளுக்கான சத்து மாவில் கலப்படம் செய்ய சொன்னேன்.

ஒரு குழந்தையின் தந்தையாக இருந்து கொண்டு நானே எத்தனை குழந்தைகளின் உயிரை பறிக்க நினைத்தேன். நான் ஒரு கொலைகாரன் என்று புலம்பியவனிடம் நடந்த உண்மைகளை கூறிய பின்னரே அவனது குற்றஉணர்வு அவனை விட்டு நீங்கியது. 

உறவுகள் இல்லாதவர்களுக்குதான் அதனுடைய அருமை புரியும். அதனை உணர்த்தவே அனைத்தையும் செய்தேன் தவிர உன் மேல் எனக்கு கோபம் இல்லை. அதுவும் ஷமி மாதிரி பெண்ணை எனக்கு மனைவியாக கொடுத்த உன் மேல் கோபம் கொள்ள முடியுமா?

ஷமி…. தன் தங்கையை அவ்வாறு அழைப்பது அவளுடைய அத்து மட்டுமே… அத்து…. எஸ் அதே அத்து என்றவனை ஆதி… என கட்டிக்கொண்டான். அத்து தன் தங்கையின் வாழ்வில் எத்தனை முக்கியம் என்பது அவன் அறிந்ததே.

உன்னை கொடு என்னை தருவேன் 

இதுதான் காதலடி

என்னை தந்தே உன்னை பெறுவேன்

காதல் இதுதானே

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *