நெஞ்சோடு கலந்திடு உறவாலே
நெஞ்சம் 12
ஆதித்யா மித்திரன் தொழில்களை ஒவ்வொன்றாக முடக்க ஆரம்பித்தான். கட்டுமான தொழிலில் டெண்டர்கள் அனைத்தும் ஆதியின் கைவசமே அனைத்தும் போனதால் மித்ரனால் ஆதி மேல் அடி விழுவதை தாங்க முடியவில்லை. ஆதி மீது கட்டுக்கடங்காமல் கோபமும் ஆத்திரமும் எழுந்தது.
பங்கு சந்தையில் அடுத்தடுத்த சரிவுகளை மறைமுகமாக ஏற்படுத்தினான். மகனின் அடுத்தடுத்த சரிவுகளை கண்ட சந்திரன் தனக்கு மிகவும் நம்பிக்கை ஆனவர்களை வைத்து விசாரித்ததில் ஆதிக்கும், மித்ரனுக்கும் உள்ள பனிப்போர் பற்றி அறிந்தவர் மாப்பிள்ளை ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
மித்திரனிடம் இதை பற்றி கேட்க சரியான பதில் அவனிடமிருந்து வராமல் போக ஏற்கனவே இருவருக்கும் இடையே சிறு பிரச்சனை உள்ளது என்று ஊகித்தவர் அடுத்தடுத்த தோல்விகளை தொழில் முறை போட்டியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
சிறிது காலம் மித்திரனை தொழிலில் இருந்து விளக்கி வைக்கும் பொருட்டு வட மாநிலம் பக்கம் அனுப்பி வைத்தார். அவனது சொந்த முயற்சியில் தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்ற கட்டளையுடன்.
எப்போதும் தந்தையின் பாதுகாப்பிளும், அவரது அறிவுரை படி அனைத்தையும் செய்துகொண்டு வந்தவனை தீடிரென தனியாக தொழில் செய்ய சொல்லவும் அந்த கோபம் அனைத்தும் ஆதி மீதே பாய்ந்தது.
அதுவும் இத்தனை வருடங்கள் குடும்பத்துடன் இருந்துவிட்டு பிரிவது என்பது சாத்தியமாற்றதாய் தோன்றிய வெகுவாக மனதை தாக்கியது. ரியாவை பிரிவது மிகப்பெரிய வலியை கொடுத்தது.
இவை அனைத்தையும் சந்திரனின் அலுவலகத்தில் பணி புரியும் தன் உறவினன் ஒருவனின் மூலம் அறிந்த ராதிகா மதி மீது வஞ்சம் கொண்டு அவள் வீட்டிற்கு சென்றவள் சரமாரியான கேள்விகளால் தாக்கினாள்.
ஏண்டி ஓடுகாலி நாயே நீ உடம்பு சுகத்துக்கு ஆசைப்பட்டு ஓடிவந்து குடும்ப மானத்தை வாங்கியது போதாது என்று என் புருஷன் உனக்கும் உன் புருசனுக்கும் என்னடி கெடுதல் செய்தார்.
தொழிலை முடக்கியது மட்டுமில்லாமல் குடும்பத்தையும் பிரித்து விட்டார். நீ மட்டும் உன் புருசனுடன் சேர்ந்து வாழ வேண்டும் நானும் என் பிள்ளையும் பிரிந்து வாழ வேண்டுமா? ஆவேசத்துடன் கத்த மதிக்கு ஒன்றும் புரியவில்லை.
எதற்கு வந்தார்கள் என்ன பேசுகிறார்கள் என்பது புரியாமல் நின்றவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது தனது அண்ணனுக்கும், கணவனுக்கும் ஏதோ பிரச்சினை என்று. தன் அண்ணி இவ்வளவு பேசுவார்களா? அதிர்ச்சியுடன் பார்த்தவள்… கணவனுக்கும் மித்துவுக்கும் என்ன பிரச்சனையாக இருக்க முடியும். தொழில் முறை போட்டியை அண்ணி தவறாக எடுத்துக்கொண்டார்களா?
அண்ணி சாரி இது எதுவும் எனக்கு தெரியாது..என்க உனக்கு தெரியாதா? உன் புருஷன் செய்தது உனக்கு எப்படி தெரியாமல்.இருக்கும் மதி… மதி… என்று உயிராக இருந்தவருக்கு நல்ல பலன் கொடுத்துவிட்டாய் வீராவேசத்துடன் பேசிவிட்டு கிளம்பியவளை கண்டு மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.
எதை பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். ஒருவேளை உமாவோ, சதாசிவம் இருந்திருந்தால் அவர்களிடம் பிரச்சனையை கூறி ஆறுதல் தேடியிருப்பாள் ராதிகாவை இவ்வளவு தூரம் பேசிவிட்டு இருக்க மாட்டார்கள்.
மாதாந்திர பிரச்சனை காரணமாக அவர்களுடன் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. உடல் உபாதையும் அதன் விளைவாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் ஒரு வித மன அழுத்தம் கொடுக்க அத்துடன் ராதிகாவின் “உடல் சுகம்”, “ஓடுகாலி” வார்த்தைகள் மனதை அழுத்த படுக்கையில் சுருண்டு படுத்தவள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வழி அறியாமல் அடக்கி வைத்து இருந்தாள்.
வேலை முடித்து அன்று விரைவாக வீடு வந்தவன் மதியின் காதலை அறிந்ததில் இருந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அம்மகிழ்ச்சியை தன்னவளுடன் பகிர்ந்து கொள்ளவே விரைந்து வீடு வந்து சேர்ந்தது. அறைக்குள் வேகமாக நுழைந்தவன் கட்டிலில் கால்களை குறுக்கி சுருண்டு படுத்திறந்தவளை கண்டவன் எப்போதும் இப்படி இருக்க மாட்டாளே என்ற எண்ணத்துடன் நெற்றியை தொட்டு பார்த்தவனின் ஸ்பரிசத்தில் கண் திறந்தவள் அவனை பார்க்க எப்போதும் கண்கள் மின்ன தன்னை பார்க்கும் கண்களில் வெறுமையை கண்டவன் துணுக்குற்றான்.
அத்தனை நேரம் மனதை அழுத்திய பாரத்தை இறக்கும் வடிகாலாய் அவனை நினைத்தவள் அத்தனை வலியிளும் கேட்டே விட்டாள்.
ஏன்? ஏன்? அத்து அப்படி செய்தீர்கள். எப்படி? எதை? அவள் கூறுவது புரியாமல் பார்க்க மிதுவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? நேரடியாக விசயத்திற்கு வர
என்ன பேபி? என்ன பேசுகிறாய்? அவருக்கும் என்னாகும் என்ன… பிரச்சனை… திக்க… எனக்கு எல்லாம் தெரியும்.
முதலில் என் கேள்விக்கு பதில் கூறுங்கள்.. மித்துவின் தொழிலை ஏன் முடக்கினீர்கள் ? அவனது குடும்பத்தை பிரிப்பதால் உங்களுக்கு என்ன லாபம்? மனைவியின் அடுக்கடுக்கான கேள்விகளில் திகைத்து நின்றான்.
தொழிலில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சாதுர்யமாக முறியடித்து வெற்றி கொள்பவன் சரிபாதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் நின்றிருந்தான். ஒரு விஷயத்தை செய்யும்போது அதன் விளைவுகள் அறிவதில்லை. அதை போல் தான் மித்துவிற்கு பாடம் கற்பிக்க நினைத்தவன் தன்னவளை பற்றி சிந்திக்க மறந்தான்.
தொழிலில் போட்டி இயல்பானது அதனை பெரித்துபடுத்தாதே பேபி…
தொழிலில் போட்டி இயல்பானது ஆனால் ஒருவனை ஊரை விட்டு அனுப்பும் அளவுக்கு போவதை போட்டியாக கருத முடியவில்லையே….
அது… அது… மித்திரனை பற்றி கூறலாம் அதன் மூலம் அண்ணன் தங்கைக்குள் தன்னால் இடைவெளி ஏற்படுவதை விரும்பவில்லை.
உங்களுக்கு மித்துவை முன்னாடியே தெரியுமா? ஒருவேளை அவனை பழிவாங்க என்னை கடத்தி திருமணம் முடித்தீர்களா? இன்றுவரை மனதில் தன்னை ஏன் கடத்தினான்? என்ற கேள்வி எழுந்ததை கேட்டே விட்டாள்.
ஆதியின் நிலைதான் இருதலை கொல்லி நிலையானது. இதற்கு ஆம் என்பதா? இல்லை என்பதா? என குழம்பி நின்றான்.
அவனது குழப்ப நிலையே ஆம் என்ற பதிலை தர அவன் தன்னை காதலிக்கவில்லை இது ஒரு பலி வாங்கும் படலம். இதனை அறியாத தான்தான் காதல் அது இது என பிதற்றி தன்னை நினைத்தே வெறுப்பு எழுந்தது.
பழிவாங்க நினைப்பவன் எப்படி தன் ஆசைகள் விருப்பங்களை கேட்காமலே அறிந்து வைத்திருக்கிறான் தன் பெற்றோரை ஏன் அத்தனை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை மறந்து போனாள்.
அமைதியாக நின்றிருந்தவனை கண்டு மீண்டும் மீண்டும் தன் அண்ணி கூறிய வார்த்தைகளும் , தன் காதல் பொய்த்து போன வலியும் சேர்ந்து தான் என்ன பேசுகிறோம் என்பதை அறியாமலே
குடும்பத்துடன் வாழ்த்திருந்தால் அன்பும், பாசமும், வலியும் வேதனை புரியும் “அனாதை” போல் வாழ்ந்தவற்கு எவ்வாறு புரியும் தன் போக்கில் பேசிக்கொண்டே சென்றவளை “ஷண்மதி” என்ற குரல் அறை எங்கும் அதிர்ந்து ஒலிக்க அந்த குரலில் உடல் தூக்கிபோட நிமிர்ந்து பார்த்தவளின் இதயம் ஒருமுறை நின்று துடித்தது.
கண்களில் சிவப்பேற கனல் கக்கும் விழிகளுடன் நரம்புகள் புடைக்க அசுரனைப்போல் நின்றிருந்தவனைக்கண்டு அச்சமும் படபடப்பும் எழுந்து உடல் நடுங்கியது.
என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? “அனாதை” ஆமாம்டி அனாதைதான் அதற்கு என்ன இப்போது? கண்களில் சீற்றம் பரவ கழுத்தை அழுத்தி பிடித்தபடி கேட்க அத்து… என்ற மெல்லிய முனகல் அவன் செவியை அடையவில்லை அந்த அளவு நிதானம் இழந்திருந்தான்.
கோபம் கோபம் மட்டுமே அவனை ஆண்டு கொண்டிருந்தது. கழுத்தை அழுத்தியதில் கண்கள் மேலேறி ஹக்… என்ற சத்தம் வர ச்சே… என உதறி தள்ளியவன்.
ஆமாம்டி உன் பாசமலர் அண்ணனை பழி வாங்கதான் உன்னை கடத்தினேன். இனி வாழ்நாள் முழுவதும் உன்னுடைய வாழ்வு இந்த அனாதை உடன்தான் நியாபகம் வைத்துக்கொள்.
இன்று ஒரு இரவு தனியாக இருந்து பார் அப்போது தெரியும் என்றவாறே அவளை இழுத்துக்கொண்டு பால்கனி கதவை திறந்தவன் அவளை உதறி தள்ளினான்.
மதி அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். அவள் ஒன்றும் அந்த வார்த்தையை அறிந்து கூறவில்லை . அவளை அறியாமல் வந்துவிட்டது. அவன் அவளை அத்தனை பேசியும் அவளது மனமோ அவனிடம் மானசீகமாக மன்னிப்பை வேண்டியது.
மதி மீது கட்டுக்கடங்காத கோபத்துடன் இருந்தவன் அறையில் நடை பயின்று கொண்டிருந்தான். நீ எப்படி அந்த வார்த்தையை கூறலாம்? மற்றவர் கூறினால் நான் பொறுத்துக்கொள்வேன் ஆனால் நீயே இதனை கூறினால் என்னால் எப்படி தாங்கி கொள்ள முடியும்?
நீ இருக்கும் போது நான் ஏண்டி அனாதை என்னை உன் கணவனாக ஏற்க்கவில்லையா? நேற்று காதலை கூறியது பொய்யா? ஏன்று பலவாறு யோசித்தவன் என்றுமே மதுபானத்தை தொடாதவன் அதுவும் தன்னவள் தன் அருகில் இருக்க அதனை நினைத்து கூட பார்க்காதவன் இன்று மதுவை நாடினான்.
ஒவ்வொரு முறையும் தன்னை அறியாமல் தன்னை காயப்படுத்தி அதனை நினைத்து வர்ந்துபவன் இன்று தெரிந்தே தன்னவளை காய படுத்த போவதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யப்போகிறான்.
பாட்டில் முழுவதையும் ஒரேடியாக சரித்து மெத்தையில் விழுந்தவன் போதை தலைக்கேறி தன்னை மறந்து கிடந்தான். தன் பெற்றோரின் நினைவு எழுந்து தன்னை வதைக்கும் போது மது அருந்துபவன் இன்று மதி கூறிய வார்த்தையை தாங்காமல் குடித்துவிட்டு மயங்கி கிடந்தான்.
பால்கனியின் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவள் மனமோ அத்து… அத்து… என்ற வார்த்தையை மந்திரம் போல் கூறிக்கொண்டிருந்தது. அவளுக்கு கஷ்டம் அல்லது தனிமையில் தைரியம் கொடுப்பது இந்த வார்த்தைதான்.
தன்னை கடத்தியவனை ஏன் அத்து என அழைக்கிறோம் என அவள் இன்றும் அறியவில்லை. எப்போதும் உணர்ச்சி மிகுதியில் அவளை அறியாமல் அழைத்து விடுகிறாள். அவனது நெருக்கமும் செய்கையும் ஏனோ அவளை அறியாமலே அவளது அத்துவின் நினைவை தட்டி எழுப்பியது.
கண்கள் விடாது கண்ணீர் சிந்த கண்களை மூடி அமர்ந்து இருந்தவள் கையில் நீர்துளி பட மேலே நிமிர்ந்து பார்த்தவள் வானத்தில் நட்சத்திரம் இன்றி மழை பெய்ய அறிகுறி தோன்ற கதவை தட்டி பார்ப்போமா என்ற எண்ணம் எழுந்தாலும் இது தனக்கான தண்டனை என கருதி முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள்.
இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்க்க அதனை வெறித்தவாறே அமர்ந்து இருந்தவள் காலையில் இருந்து உண்ணாதது, உடல் உபாதை, ஆதியின் கோபம் அனைத்தும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு இட்டுசென்றது.
மழை பெய்வது கூட அறியாமல் மதுவின் போதையில் மயங்கி கிடந்தவன் அதிகாலையில் கண்டது அதிக உதிரபோக்குடன் மயங்கி கிடந்த மதியைத்தான்.
அடிக்கடி என்னை நீ அணைத்தைதை அறிவேன்
அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன்
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இளமனம் எங்கும் எழுந்தது வலி
காதல் ஒரு கனவு மாளிகை
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே!!!
