நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சோடு கலந்திடு உறவாலே !!!

நெஞ்சம் 13

போதை சிறிது தெளிந்து எழுந்து அமர்ந்த ஆதி மணியை பார்க்க நான்கு என்று காட்டியது. தலையெல்லாம் பாரமாக இருக்க குளியலறையில் புகுந்தவன் வெகுநாள் கழித்து குடித்ததால் வாந்தி எடுத்த  பின்னரே கிறக்கம் ஓரளவு தெளிந்தது. சுத்தப்படுத்தி வெளியே வந்தவன் மெத்தையில் அமர நேற்று நடந்த காட்சிகள் அனைத்தும் படம் போல் விரிய நேற்று இருந்த கோபம் சிறிது மட்டுப்பட்டாலும் அது அவனது மனதை விட்டு அகலாமல் அழுச்சாட்டியம் செய்தது.

மதியின் இடத்தைப் பார்த்தவன் காலியாக இருக்க இவள் எங்கே போனாள்? யோசனையுடன் நின்றவன் மனதில் அபாய ஒலி ஒலிக்க ஓ மை காட் தலையில் கை வைத்தவன் பால்கனி கதவை திறந்து கால்வைத்தவன் பாதத்தில் நீர் பட மழை பெய்ததா?

இன்னும் விடியாததால் பேபி, பேபி… என அழைத்தவாறே கண்களை சுழற்றி முன்னே சென்று சிறு விளக்கொளியில் கண்டது தண்ணீர் முழுவதும் செந்நிறமாய் இருக்க தன்னை மறந்த நிலையில் மயங்கி கிடந்தாள் மதி.

பேபி…. அருகில் ஓடி சரிந்து அமர்ந்தவன் கண்ட காட்சியில் இதயம் தன் துடிப்பினை நிறுத்தியது. அதனைப் பற்றி புரியாமல் இருக்க அவன் ஒன்றும் சிறு பிள்ளை அல்லவே. தன்னவள் நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்ற வெறியும், ஆத்திரமும் எழுந்தாலும் அதற்கான நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்தவன் அவளது இடையூடு கையிட்டு தூக்கிக் கொண்டு அறைக்கு ஓடினான்.

படுக்கையில் கிடத்தி கன்னத்தை தட்ட பதில் எதுவும் இல்லாமல் போக இப்படியே மருத்துவமனை செல்வது உசிதமாகாது என்பதால் அவளது உடைகளை  கலைந்தவன் கவுன் போன்ற இலகுவான உடையை அணிந்தவன் பேட் மாற்றி ட்ரையர் கொண்டு தலையை உலர்த்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

குடும்ப மருத்துவர் தன்னுடைய நெருங்கிய தோழி என்பதால் வரும்போதே அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய சொன்னவன் மருத்துவமனையில் இறங்கி மதியை தூக்கிக்கொண்டு உள்ளே வந்தவனை எதிர்கொண்டாள் அவனது தோழி தன்யா.

தன்யா ப்ளீஸ் பேபிக்கு என்னாச்சு சீக்கிரம் பார் என்றதும் அவளை அவசர பிரிவில் அனுமதிக்க கட்டளை இட்ட தன்யா மதியை பரிசோதனை செய்ய சென்றாள்.

இங்கு ஆதிக்கு ஓவ்வொரு நொடியும் ஒரு யுகமாக கடந்தது. இதற்கிடையில் தன் வீட்டுக்கு சொல்லவும் மறக்கவில்லை. கண்களில் நீர் துளிர்க்க கைகளால் தன் தலையை தாங்கி அமர்ந்திரந்தவனின் தோளை விஷ்வா தொட…

நிமிர்ந்து பார்த்தவன் மச்சி என கதறிவிட்டான்.

இது மருத்துவமனை என்பதையும் தான் ஒரு தொழிலதிபன் என்பதையும் மறந்து கதறி துடித்தவனை கண்டு விஷ்வாவிற்கே அழுகை வந்தது. மச்சி சிஸ்டர்க்கு ஒன்றும் ஆகாது முதுகினை தடவி ஆறுதல் படுத்த அவனோ என்னால் தாண்டா எல்லாம் நான் தான் பாவி என கதறிவிட்டான்.

சதாசிவம் உமாதேவி பதை பதைப்புடன் உள் நுழைந்தவர்கள் ஆதியின் நிலையை கண்டு ஏதும் விபரீதம் நடந்து விட்டதோ என அஞ்சினர். அவளின் உடல்நிலை நேற்றே அவருக்கு தெரியும் என்பதால் சிறிய அளவிலான பிரச்சனை என்றும் பெண்களுக்கு இதெல்லாம் சாதாரணம் என நினைத்தவர் அவனது நிலை கண்டு அஞ்சினார்.

தன்யா ஆதியை தன் அறைக்கு அழைத்து சென்றவள் அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்ததால்தான் ஓவர் ப்ளீடிங் ஆகி உள்ளது. மற்றபடி பயப்பட ஒன்றும் இல்லை. அவங்களை கொஞ்சம் பிரீயா விடு அவங்களுக்கு பிடித்தத்தை செய்ய விடு. அவங்க மனா அழுத்தம் குறையும் என்றவளிடம் நன்றி உரைத்தான்.

எப்போது சென்று பார்க்கலாம் என்ற கேள்வி எழ நார்மல் வார்டுக்கு மாற்றிய உடன் பார்க்கலாம். என்னடா மனைவி மீது அத்தனை காதலா? ம்ம்ம்… என வெட்கத்துடன் தலையாட்டியவனை கண்டு தி கிரேட் பிசினஸ் மக்னேட்டை அழ வைத்திருக்கிறார்கள் என்றால் ஷீ இஸ் மோர் ப்ரீசியஸ் அண்ட் வெரி லக்கி ஆல்சோ என்க

நோ…  நோ… ஐ அம் வெரி லக்கி டூ ஹவ் ஹேர் பெருமையும் கர்வத்துடன் கூறியவனை கண்டு மனம் மகிழ்ந்த தன்யா தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டாள்.

கால்கள் தள்ளாட ஒரு வித பயத்துடன் அறைக்குள் நுழைந்தவன் வாடிய கொடியைப் போல் படுத்து இருந்தவளின் அருகில் சென்றவன் அவளது கைகளை பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தான். உன்னை அப்படி ஒரு நிலையில் பார்க்கவும் என் உயிரே என்னிடம் இல்லை பேபி.. உன்னுடைய அத்துவ ரொம்ப பயமுறித்திட்ட பேபி… தன் கண்ணீரால் கூட தான் செய்த பாவத்தை குறைக்க முடியாது என தோன்றியது.

சாரி… சாரி… பேபி எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் என்னால் வலியை மட்டும் சுமக்கிறாய் என்று புலம்பிகொண்டிருந்தான்.

தன்னவன் கண்ணீர் பட்டோ அல்லது அவன் படும் துயரம் கண்டோ மெல்ல கண் திறந்தவள் அத்து…. மெல்லிய குரலில் அழைக்க…. அம்மெல்லிய குரல் அவனது செவியை தீண்ட திரும்பியவன் பேபி…. சாரிடி…. சாரிடி… மந்திரம் போல் கூறிக்கொண்டே இருந்தான்.

மதிக்கு எதற்கு இப்போது மன்னிப்பு கேட்கிறான் எனப் புரியவில்லை. தான் எங்கே இருக்கிறோம் கண்களை சுழற்ற மருத்துவமனை என அறிந்தவள் தன் கையில் ட்ரிப்ஸ் ஏறுவதை பார்த்து தனக்கு என்ன ஆனது.

நான் ஏன் ஹாஸ்பிட்டல் வந்திருக்கிறோம் என்ற கேள்வியுடன் கணவனை பார்க்க அவனது கண்கள் கண்ணீர் சிந்தியது.

கணவனின் கண்ணீரை காண முடியாமல் மனம் வருந்தியவள் நேற்று ஏதேனும் தவறு நடத்துவிட்டதா? மழை பெய்தது மட்டுமே அவளுக்கு நியாபகம் இருந்தது. ஒருவேளை தான் பேசியதை நினைத்து வருந்துகிறானா?

அத்து அதுவந்து  சாரி நான் நேற்று உங்களை காயப்படுத்துவதற்காக அவ்வாறு பேசவில்லை.அது… என்னை அறியாமல் பேசிவிட்டேன். அதனால் உங்கள் மனம் எவ்வளவு வேதனை கொள்ளும் என்று எனக்கு தெரியும். என்னை திட்டுங்கள் ஆனால் வெறுத்து விடாதீர்கள் அதனை என்னால் தாங்க முடியாது.


திருமணம் முடிந்த நாளில் இருந்து எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவனை பார்த்திருந்தவள்  நேற்றைய அவனது கோபம் அவளை மிகவும் பாதித்தது.

தான் மன்னிக்க முடியாத தவறை செய்ய தன்னவள் தன்னிடம் மன்னிப்பு வேண்டியதை பார்த்தவன் அடுத்த நொடி அவளது இதழை வன்மையாக சிறை பிடித்தான். இந்த தன்னலமற்ற அன்புக்காக எத்தனை முறை வேண்டும் என்றாலும் அடிமை சாசனம் எழுதிகொடுக்கலாம் என்றே தோன்றியது.

ஏற்கனவே சோர்ந்து இருந்ததால் அவனது இதழணைப்பை தாங்க முடியாமல் அவன் மீதே தொய்ந்து சரிந்தவளிடம் சாரி.. பேபி என்றவனிடம் இப்படியே விட்டால் நாள் முழுவதும் இதையே கூறுவான் என்பதால் அவனை இலகுவாக்கும் பொருட்டு என்ன அத்து இன்னைக்கு முழுவதும் சாரி விற்க போகிறீர்களா? 


வதனத்தில் சோர்வு இருந்தாலும் மன்னவன் கண்ணீரை காண பிடிக்காமல் கேலி செய்ய … அதுவும் நம் தொழில்தான் அதை என் மனைவியிடம் கொடுக்கலாம் என்றிருக்கிறேன் நீ என்ன நினைக்கிறாய்?

ஹலோ நான் தி கிரேட் ஆதித்யாவின் மனைவி என் கணவரிடம் கூறினால் உங்களது நிலைமை அய்யோ பாவம் போனால் போகிறது என்று விட்டுவிடுகிறேன் பிழைத்துபோங்கள்… 

உத்தரவு மகாராணி… தங்கள் சித்தம் என் பாக்கியம் இடை வரை குனிந்து கூறியவனை கண்டு சிரிக்க அவனோ அவளது காதைப் பிடித்து திருகினான்.

அத்து வலிக்கிறது…. கெஞ்ச காதின் மடலில் முத்தமிட்டு விலக அவளது உடலோ சிலிர்த்து அடங்கியது. 

உங்களுக்கு என்னை பிடிக்க வில்லையா? பழி வாங்கதான் என்னை திருமணம் முடித்தீர்களா?


கண்களில் கண்ணீர் குளம் கட்ட கேட்டவளிடம் பேபி என் கண்ணை ப்பார் அதில் உன் மீதான காதல் தெரியவில்லையா? கேண்டில் லைட் டின்னர் வைத்து ரோஜா கொடுத்து காதலை சொன்னால்தான் காதலா? என் செய்கை உனக்கு உணர்த்தவில்லையா ?

உங்கள் காதல் புரிந்ததால் தான் கேட்கிறேன். உன் கண்களில் என் மீதான காதல் இருந்த நம்பிக்கையில் தான் இத்தனை நாட்கள் என்னை ஏன் கடத்திநீர்கள் என புரியாவிடினும் உங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

நாம் எங்கே பேபி வாழ்கிறோம் இன்னும் வாழ்கையை ஆரம்பிக்கவே இல்லை. உங்களை யார் தடுத்ததாம்? நீங்கள் சாமியார் போல் இருந்துவிட்டு என்னை குறை கூறுகிறீர்கள். 

நீங்கள் என்று ஆசாமி ஆகி வாழ்ந்து குழந்தை பெற்று எப்பா விடிந்து விடும் வடிவேலு பாணியில் கலாய்க்க


பேபி…. இதே வார்த்தையை நம் அறையில் வைத்து பேசியிருக்க வேண்டும் அப்போது தெரிந்திருக்கும் நான் சாமியாரா? இல்லை ஆசாமியா என்று.

ஒரு இதழ் முத்தத்திற்கே சுருண்டு விழுகிறாய் அத்துவின் அதிரடியை பார்த்தால் அரண்டு விடுவாய் ஒரு டெமோ காட்டவா தன் சட்டை பட்டனை கழற்றியபடி அவளை நோக்கி குனிய 


வாங்க… டாக்டர்…. மதி குரல் கொடுக்க அவசாரமாக விலகி பட்டனை போட்டுவிட்டு திரும்பியவன் வாசலில் யாரும் இல்லாததை கண்டு திரும்பி மதியை பார்க்க கலகலவேனே சத்தமாக சிரித்தவளின் இதழை கடித்து பொய் கூறியதற்கான தண்டனை என்றவனை காதல் பொங்க பார்த்தாள்.

“பெரிய பிசினஸ் மேக்னட்” முத்தம் கொடுக்கவே இப்படி பயம் கொள்கிறீர்கள். இது பப்லிக்டி அதனால் என்ன நான் உங்கள் மனைவி தானே என்றவளை பார்வை பார்த்தவன் ஒன்றும் கூறவில்லை.

ஒருவர் மனதை மற்றவர்  புண்படுத்த விரும்பவில்லை. 


நான் உங்களிடம் ஒன்று கேட்கட்டுமா? அவள் என்ன கேட்க போகிறாள் என்பதை அறிந்தவன் நீ என்னை நம்புகிறாயா? பேபி…

ஆம்… உன் உடல் நிலை முதலில் சரி ஆகட்டும் உன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறுகிறேன்.

குடும்ப உறுப்பினர்கள் வந்து விசாரித்துவிட்டு தன்யாவிடம் நன்றி கூறி அவளை  வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆதி தொழில்கள் அனைத்தையும் விட்டுவிட்டு அவளை உடன் இருந்து பார்த்துக்கொண்டான்.

தாயைப் போல் மடி தாங்கியவனைக் கண்டு காதல் பெருகியது. வெளியில் சிங்கமாய் கர்ஜித்தாலும் வீட்டில் உள்ள பெண் சிங்கத்திடம் அடங்கி போகவே விரும்புகிறான்.

கண்ணோடு கண் சேரும்போது 

வார்த்தைகள்  எங்கே போகும்

கண்ணே உன் முன் வந்தால்

என் நெஞ்சம் குழந்தை ஆகும்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *