நான் மீட்டிடும் வீணை நீ
வீணை 6
அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே அழுது கொண்டே கீழே இறங்கி வந்தவள் அறைக்குள் செல்ல போக கனகு மிருது உனக்கு சாப்பாடு எடுத்து வைத்து இருக்கிறேன் வாமா,இல்லை கா நீங்க சாப்பிடுங்க
எனக்கு டயர்டா இருக்கு நா தூங்க போறேன் என்று கூறி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
படுக்கையில் படுத்தவளுக்கு தூக்கம் வராமல் மாலையில் இருந்து அவனது குறும்பு முகமும்,பேச்சும் இம்சை செய்ய புரண்டு புரண்டு படுத்தாள்.
அனைத்தையும் விட அவனது கோபம்,அது
அவளை மிகவும் துவள செய்கிறதே.இது வரை அனுபவிக்காத உணர்வு.
எழுந்தவள் தோட்டத்து பக்கம் சென்றாள். உணர்வின்றி மரத்து போனவள் இந்த உணர்வுகளை பிரித்து அறிய முடியாமல் தவித்தாள்.
அவள் அன்னைக்கு பிறகு,சிலரின் பார்வை பரிதாபமாகவும்,சிலரின் பார்வை அலட்சியமாக வும்,சில காமூகர்களின் கேவலமான பார்வைகளும் மட்டுமே பார்த்து வந்தவள் இவனின் நேச பார்வை புரியவில்லை.
மொட்டாக இருக்கும் போதே பறிக்க பட்டு, வாழ்வே பட்டு போனவள் மீண்டும் மலர வேண்டும் என்பது பற்றி யோசிக்க கூட மாட்டதவள்.அவள் யோசிக்க வில்லை என்பதை விட யோசிக்க விடவில்லை இவளின் அண்ணன் குடும்பம்
இப்போது இவன் மீது வரும் உணர்வை மனதார விரும்பினாள்.அச்சோ தப்பூடி அவருக்கு போய் நானா,அவர் மனதில என்ன நினைக்கிறார் என்று தெரியாது.
ஆனால் அவர் பார்வை யில் கள்ளம் இல்லை,இது உடலை தேடும் பார்வை இல்லை உள்ளம் தொடும் பார்வை ஆனால் ஏன்?
மிகவும் குழம்பினாள்.பார்த்த ஒரே நாளில் எப்படி அவருக்கு என்னை பிடிக்கும்(ஏன் நீ பார்த்து ஒரே நாளில் இப்படி என்னை வச்சு செய்யலை,மனசாட்சி கேட்க நீ போ என்று விரட்டி மீண்டும் அதை தொல்லை செய்ய தொடங்கினாள்)
பின் அவர் அழகுக்கும் செல்வக்கிர்க்கும் அவருக்கு நானா?வேண்டாம் இது சரி வராது நாளை அவரிடம் சொல்லி அவரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் (அவன் விட்டா தானே
இன்னும் பசை போட்டு ஒட்டுவான்)
இந்த முடிவு எடுத்த பிறகு தான் அவளுக்க
கொஞ்சம் தெளிவு வந்தது.
இவளின் செய்கை ஒவ்வொன்றையும் மேலே உள்ள பால்கனி யில் இருந்து பார்த்து கொண்டு இருந்தவன்,இறுதியாக அவள் ஒரு முடிவுக்கு வந்தையும் பார்த்தவன் உதட்டில் புன்னகையுடன் நீ வந்தது வேண்டும் என்றால் என் அனுமதி இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நீ போவது என் கையில் தான் பேபி என்று முணுமுணுத்தான்.
அவள் தன்னை இப்படி கூறி விட்டாளே என்று கோபத்தில இருந்தவன் பின் அவளிடம் தன் விருப்பத்தை கூறாமல் இப்படி செய்தால்,நீயும் தான் கொஞ்சம் பொறுமையா இல்லாமல் காஞ்ச மாடு கம்பில் புகுந்த மாறி இப்படி அவளை மிரள வைத்தால் அவளே பாவம் என்று தன்னையே கடுந்தவன் தன் சிகையை கோதி
கொண்டு சிறு புன்னகையுடன் கீழே பார்க்க அவனின் எண்ண நாயகியே நின்றாள்.
அவள் அழுததையும்,பின் ஏதோ புலம்பியதையும்
இறுதியாக தலையை ஆட்டி ஆட்டி ஏதோ முடிவு எடுத்ததையும் பார்த்தவன் தனக்குள் முடிவு எடுத்தவன் உள்ளே செல்ல போக,அவள் இன்னும் பனியில் நிற்பதை பார்த்து ஃபோனில் சத்தம் போடுவது போல் அவள் கவனத்தை திருப்பினான்.
மேலே அவனின் சத்தம் கேட்ட உடனே அவளின் கண்கள் பரபரக்க மேலே பார்த்தவள் சிறிது நேரம் அவனையே பார்த்த படி இருந்தாள
அவனின் பார்வையை திருப்பவும் உள்ளே ஓடி விட்டாள்.அறைக்கு வந்தவளின் மனதில்பரவசம்
படபடப்பு,அவனை பார்த்த மகிழ்ச்சி,ஐய்யோ எனக்கு என்ன ஆச்சு?இவரை பார்த்ததில் இருந்து என்ன இப்படி உணர்கிறேன்.
சிறு பெண்ணின் எந்த சுகத்தையும் அனுபவிக்காத
வள்,காதல் என்ற பெயர் கூட தெரியாதவள் அவினின் மீது தன் உணர்வை நினைத்து பயம் கொண்டாள்.
அவளின ஓட்டம் கண்டு நகைத்கவன் நீண்ட நெடு நாட்கள் பிறகு நிம்மதியாக உறங்க போனான்.
இங்கே இவளின் நிம்மதி போனது. கொட்ட கொட்ட முழித்தவல் எப்போது உறங்கினால் என்றே தெரியாது.
மறுநாள் காலை விடியும் போதே அவனை பார்க்க போகும் ஆவலில் மனம் துள்ளியது.அறிவு பயம் கொண்டது.
விடிந்ததும் கனகு வந்து நயனயை கொடுத்தாள்.
பாய்ந்து வந்தவளை நெஞ்சோடு அணைத்தவாறு பிடித்து கொண்டு மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாட்டு காட்டி கொண்டே வெளியே வந்தாள்.
இருவரும தனி உலகில சென்று விட்டனர்.சிறிது நேரம் கழித்து உணவு ஊட்ட சென்றாள்.உணவு ஊட்டி கொண்டு இருக்கும் போது,மாடியில்ல
இருந்து ஃபோன் பேசி கொண்டே இரங்கியவனை ரசித்து பார்த்தாள.
மெருன் நிற ஃபுல் கை ஷிர்டும்,ஸ்கின் நிற பன்டும்
வலது கையில் பிளாட்டினம் காப்பும்,அலை அலையாக அடங்காமல் நெற்றியில் புரளும் கெசமும்,அடர்ந்த மீசையும்(அய்யோ நம்மையே சைட் அடிக்க வச்சு விடுவாளோ) என்று பார்த்து
கொண்டே நின்றவளை புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க,ஒன்னும் இல்லை என்று தலை ஆட்டி குனிந்து கொண்டாள்.
அருகில் வந்தவன் சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பி வா.
நயனியும் கிளப்பி விடு.வெளியே போக வேண்டும் என்று கூற சரி என்று தலை ஆட்ட,என்ன என்று சீரும் குரலில் கேட்க சரி என்று மிரண்ட குரலில் கூறினாள்.
கிளம்பி வந்தவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.அழகு ஓவியம் ஆனால் தூசி படர்ந்து
இருப்பது போல,கருப்பு பொட்டும், பிளாஸ்டிக் கம்மலும், வளையலும்,கழுத்தில் சிறு கயிறும் என்று பார்கையிலேயே நெஞ்சம் கசிந்தது.
காரில் முன் பக்க கதவை திறந்து உள்ளே இருக்க சொல்ல,இல்லை பின்னாடி இருக்கேனே என்று மெதுவாக கூற,அவனின் முறைப்பில் முன்னே ஏறி கொண்டாள்.
பின் வந்து காரை எடுத்தவன் ஒன்றும் பேசாமல
ஒரு பெரிய துணி கடை முன்பு நிறுத்த அந்த கடையை ஆ என்று வாயை பிளந்து வேடிக்கை பார்த்தாள்.
பெண்கள் தலததுக்கு வந்தவன் புடவைகளை எடுக்காமல் அள்ளினான்.அதையும் யாருக்கு இவ்வளவு புடவை என்று நினைத்தவாறே நயனி யிடன் விளையாடி கொண்டு பார்த்தாள்.
பின் அவளிடம் வந்தவன் உள்ளாடை பிரிவை காட்டி உன்னோட சைஸ் என்ன என்று கேட்க
திகைத்து விலிதவளை முரைத்தவன் நீயா எடுக்கிரியா,இல்லை அதையும் நானே எடுக்கவா.ஒன்னும் பிரச்சினை இல்லை size கூட தேவை இல்லை நானே….இல்லை வேண்டாம் நானே போறேன்.
அய்யோ இவர் ரொம்ப மோசம் என்ன இப்படி பேசுரார், என்று புலம்பி கொண்டே அங்கே சென்று இவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நின்றாள்.
இவளை….இவ வேலைக்கு ஆக மாட்டா என்று நினைத்தவன் அவள் அருகே சென்று என்ன என்றான் இது எல்லாம் வித்தியாசமா ரொம்ப விலைய இருக்கு.எனக்கு இப்படிலாம் கடையில எடுத்து பழக்கம் இல்லை.
என்னோட அண்ணி எல்லாமே பழசு தான் தருவஙக.இது கூட நான் பார்த்து எடுத்தது இல்லை.அவனிடம் தன் நிலையை எப்படி இயல்பாக கூற முடிந்தது என்பது கூட உணராமல் அவனிடம் தன்னை அறியாமல் நெருங்கினாள்.
அவளின நிலையை நினைத்து கவலை கொண்டான்.அதை அவளுக்கு காட்டாமல் சரி விடு நீ அளவு சொல்லு என்று அவன் மிக சாதாரணமாக கேட்க இவளுக்கு தான் முகம் செவ்வாணமாக சிவந்தது.
இவன் அவள் முகத்தையே பார்க்க அளவை சொன்னாள்.பின் அவனுக்கு பிடித்த மாதிரி அதையும் வாங்கியவன் அவளின கையை ஒரு கையிலும், நயனி யை மறு கையிலும் பிடித்து கொண்டு கடைசி தளம் நகை இருக்கும் தளம்
அங்கேயும் சென்று அவளின் கையிலும் கழுத்திலும் வைத்து வைத்து பார்த்து நகை எடுத்தான்.
பின் மூவரும் காரில் எற அவள் மெதுவாக இது எல்லாம் எனக்கு வேண்டாம் என்றாள்.கண்களில் சிவப்பு எற அவளை பார்த்தவன் எனக்கு வேண்டும்.என் மனைவி இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறினான்.
அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து அவனை பார்க்க இன்னும் இரண்டு நாளில் உனக்கும் எனக்கும் திருமணம் என்றான்.
இல்லை இது வேண்டாம் நடக்காது நான் உங்களுக்கு வேண்டாம் என்று கதறி அழ தொடங்கினாள்.
அவளை மென்மையாக பார்த்தவன் நினைவு பின்னோக்கி அவளை முதலில் கண்ட நாளை நோக்கி சென்றது.
அவளை மீட்பானா? தோர்பானா?……
உங்களின் பொன்னான கருத்துக்களை எதிர்நோக்கி……
