நான் மீட்டிடும் வீணை நீ
வீணை 17
முகம் முழுவதும் குழப்பம் சூழ யோசனையுடன் உடன் வருபவர்கள் உடன் மண்டபத்திற்கு சென்றாள்.
போகும் வழி எங்கும் எனக்கு இவரை பற்றி என்ன தெரியும்.பார்த்து மூன்று நாளில் முதல் நாள் இழுத்து பிடித்து முததம் வைத்து பதற வைத்தார்.ரெண்டாம் நாள் கல்யாணம் என்றார்.என்னை பற்றி முழுதும் தெரியும் என்றார்.
மூன்றாம் நாள் ஊருக்கு போய் அனைவரையும் மிரள வைத்தார்.இப்போ ஊரையே திரள வைது
திருமணம்.மண்டபம் வந்ததும் வெளியே பார்க்க அத்தனை ஆள் உயர போஸ்டர் களை தான் அனைத்திலும இருவரின் படங்க லே..
எப்போது இத்தனையும் நடந்தது என்று இவளுக்கு தெரியவில்லை.இந்த மாமு மாயாவி தான் ஒரே நிமிடத்தில் தன் வாழ்வை இனிமை யாக்கி விட்டாரே.
மனம் மகிழ்சசியில் விம்மியது,உள்ளே சென்றவள் நிமிர்ந்து பார்க்க அங்கே மன்மதனே மயங்கும் அழகில் வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாக இருந்தவனை (எங்க ஹீரோ மன்மதனுக்கே டஃப் கொடுப்பான்)பார்த்து கொண்டே அருகில வந்து அமர்ந்தாள்.
அவளின முகம் தெளிவில்லாமல் இருப்பதை பார்த்து என்ன டா என்ன குழப்பம் என் மித்து
மா கு (வேற ஒன்னும் இல்லை பா ரொம்ப சீக்கிரம் பல்ப் எறிய வச்சு டோம்)
என் கிட்ட எதும் மறைக்கிறியா மாமு?புருவம் சுருக்கி அவளை பார்த்தவன் கண்ணம்மா எதுவா இருந்தாலும் இப்போ இந்த நிமிடதை அனுபவி.
நம் வாழ்வின் ரொம்ப முக்கியமான தருணம் டா இது.
உன் கேள்விக்கு எல்லாம் பதில் இன்று இரவு ஓகே என்று கண் சிமிட்ட முகம் சிவந்து வழக்கம் போல் அவனுக்கு தலை ஆட்டி குனிந்து கொண்டாள்.
அதன் பிறகு அனைத்தும் விரைந்து நடக்க திரு மாங்கல்யம் அவன் கைகளில் வரவும் அதை எடுத்து அவள் முகம் பார்க்க விழிகளில் நீர் நிறைய அவளும் அவன முகம் பார்க்க இதழ் நிறைந்த புன்னகையுடன் தலை அசைத்து அவளிடம் சம்மதம் கேட்க அவளும் தலை ஆட்டி
சம்மதம் சொல்ல அந்த கவிதை யான நிகழ்வு அங்கு நிறைந்து இருந்த அத்தனை டிவி யிலும், கேமரா விலும் அழகாக படம் பிடிக்க பட்டது.
தொழிலில் புலி யாக இருப்பவன், பெண்களை நெருங்க விடாமல நெருப்பாக இருப்பவனின்
இந்த அவ தாரம் கண்டு தொழில் ரீதியாக வந்தவர்கள் ஆச்சர்யமாக பார்க்க, உடன் படித்த பெண்கள் பொறமையோடு பார்த்தனர்.
மிருதுவின் கழுத்தில் அவன் கைகள் உரச கீழே குனிந்து தன் நெஞ்சில் விழுந்த தாலியை பார்த்தவள் கண்களில் இருந்து விழிநீர் அவன் கைகளில் விழ அவள் நெற்றியில் முத்தமிட்டு
தோளோடு அணைத்து கொண்டான்.
கண்ட்ரோல் டா என்று அவளை பார்த்து சிரிக்க அவளும் சிரித்தாள்.அப்போது கூட்டத்தில் ஏதோ சலசலப்பு கேட்க,திரும்பி பார்த்த ஆதி திகைத்து விட்டான்.அங்கு கையில் கன் வைத்து நின்று இருந்த ஒருவன் மிருது வை குறி வைத்து இருந்தான்.
மாமு என்று பயத்தில் நடுங்கி அவன் கரம் பற்ற
நொடியில் சுதாரித்து அவளோடு உருண்டு மேடையின் மறு பக்கம் பாய்ந்து நிற்க அவனின் மெய் காப்பாளர்கள் அவனை சூழ்ந்து நின்று கொண்டனர்.
திடீரெனறு நிகழ்ந்த இந்த அதிர்ச்சியில் மயங்கி அவன் மீதே சரிந்தாள் அவனின் மிருது(எப்பா உனக்கு இந்த பெட்டர்மாக்ஸ் லைட்டை தான் வேணுமா)
அதன் பின் அனைத்தும் நரேன் கைகளில் சென்று விட மிருதுவை அழைத்து கொண்டு மாலை ஏற்பாடு செய்து இருந்த பெரிய ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று விட்டான்.
டாக்டர் வந்து பார்த்து சாதா மயக்கம் என்று சொல்லும் வரை அனைவரையும் ஒரு வழி படுத்தி விட்டான்.
அரை மணி நேரம் கழித்து கண் திறந்தவள்
மாமு மாமு என்று அழைக்க பால்கனி நின்று ஃபோன் பேசி கொண்டு இருந்தவன் ஒருத்தனும தப்பிக்க கூடாது.இன்னும் ஒரு மணி நேரத்தில் யாரு என்று தெரிய வேண்டும் என்று எதிரில் இருந்தவரிடம் கோபத்துடன் பேசி கொண்டு இருந்தவன் குட்டி மா என்று குரல் கொடுக்க நரேன் இது வரை நம்மை கிழித்து எடுத்த குரலா இது எத்தனை மென்மையாக வருது என்று இந்த பக்கம் நினைத்து கொண்டு இருக்க,என்ன உனக்கு வெத்திலை பாக்கு வச்சு சொல்லனுமா என்று உரும சாரி பாஸ் வித் இன் ஒன் ஹவர் ல எல்லா விவரமும் வரணும் இல்லை…இதோ பாஸ் இப்போ ஸ்டார்ட் பண்ணிடுறேன்…என்று வைத்தவன் ஒரே நேரத்தில் பனி யாகவும்,எரிமலை யாகவும் எங்க பாஸ் மட்டும் தான் இருக்க முடியும் (டேய் அவன் உன்னை கழுவி கழுவி ஊத்துறான் டா)
மிருது விடம் செல்ல ஓடி வந்து அவனை கட்டி கொண்டு மாமு உனக்கு ஒன்னும் இல்லை இல்ல என்று அழுது கொண்டே அவன் முகம் முழுதும் முத்தம் வைக்க எனக்கு ஒன்னும் இல்ல டா..இங்க பாரு என்று அவன் பேசுவது எதுவும
அவள் காதில் விழ வில்லை.அவளது முத்த மழையில் சுகமாக திளைத்தவன் அவள் முகம் பற்றி குட்டி மா ஒன்னும் இல்லை டி இங்க பாரு என்று அவள் தோளை பிடித்து நிறுத்த அவனை பார்த்தவள் அவனை கட்டி அணைத்து கொண்டு தேம்பி தேம்பி சிறு குழந்தை போல் அழ இவ சரி பட்டு வர மாட்டா…என்று அவளது கூந்தல் பற்றி இதழில் கவி பாட…அவள் பதட்ட மனதிற்கு அது தேவைப்பட்டது..அழகாக அவனுக்கு ஒத்து லைக்க ஆரம்பித்தாள்.
பூ போல தூக்கி கொண்டு கட்டில் சென்றவன் அவளை படுக்கையில் போட்டு அவனும் அருகில் படுக்க அவனின் முகத்தையே தடவி தடவி பார்த்து கொண்டு இருந்தாள்.என்னடி என்று கேட்க,மாமு அவன் என்னை தானே சுட வந்தான்.நீங்க இப்படி இடையில் வந்துட்டீங்க.
நீங்க இல்லாமல் நான் எப்படி இருப்பேன் இனி இப்படி பண்ணாதே மாமு நான் போனாலும் நீங்க
நம்ம அம்முக்கு இருக்கணும.என்று கூறியவள
இதழை பிதுக்கி பற்களால் கடித்து இழுத்த வன்
என்னை விட்டு போறது அவ்வளவு ஆசை இல்லடி என்று அழுத்தி கடிக்க…
பேசின வாயிக்கு என்று பேசி கொண்டே இதழை கடித்து இழுத்து மூச்சு முட்ட வைத்தான். ம்.. ம்..என்று திணற இப்படி பேசினா இது தான் தண்டனை..
எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு இந்த தண்டனை
மாமு பேசாத டி. என்று எழும்பி போக போனவன் கையை பிடித்து இழுத்து சாரி மாமு எவ்வளவு கஷ்ட பட்டு இந்த நாள் வரைக்கும் உன்னை கொண்டு வந்தேன் என்று எனக்கு தான் தெரியும்…என்று கோபத்துடன் வெளியேறி விட்டான்.
கண்களில் நீருடன் அவன் சென்ற பாதை பார்த்து கொண்டே நின்றாள்…
